Sunday, October 22, 2017

Kala Bhairavar slokam


ஓம் காலகாலாய வித்மஹே 
காலதீதாய தீமஹி
தன்னோ  கால பைரவப் பிரஸோதயாத் 

Friday, October 20, 2017

Important note

IMPORTANT NOTE / முக்கிய செய்தி 
 ------------------------------------------------------------------

என்  அனுமதி இல்லாமல், என் பெயரையும் குறிப்பிடாமல் சில வலைத்தளங்கள் என்னுடைய கட்டுரைகளை அப்படியே பிரசுரித்து வருகின்றன. அது எனக்கு ஏற்புடையது அல்ல. பிரசுரிப்பவர்கள் கண்டிப்பாக என் பெயரையும் என் வலைதளத்தின் முகவரியை குறிப்பிட வேண்டும். என் வலைத்தள செய்திகள்   இலவசமாக ஆன்மீக மக்களை சென்றடைய வேண்டும் என்பது நோக்கமே தவிர அதை வியாபார ரீதியிலான வேறு எதற்கும் பயன்படுத்த விரும்பவில்லை. எந்த என் முன் அனுமதி இல்லாமல், என் பெயரையும் குறிப்பிடாமல்  என் கட்டுரைகளை பிரசுரிப்பது சட்டப்படி குற்றம் ஆகும். ஆகவே இனி என் அனுமதி இல்லாமல் என் வலை தளத்தில் இருந்து எந்த கட்டுரையையும் பிரசுரிக்கக்  கூடாது.  மீறி பிரசுரித்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்பதைதன் மூலம் தெரிவிக்கின்றேன். 
சாந்திப்பிரியா எனும் ஜெயராமன் 
(e mail: nrj1945@gmail.com)

I notice that some bloggers and websites have published some articles from my blogger even without mentioning my name as author or informing me. This is totally unacceptable to me.  If some one desire to publish my article they must take my consent and publish them along with my name and link of my blogger. Since contents in my  blogger are meant for non commercial use and intent to reach amongst the mass in the world of spirituality, henceforth without my permission no content of my blogger  should be published. When the articles are published it has to carry my name and link of the blogger. If someone publish my articles without my name and link of my blogger, steps as necessary shall be taken
Santhipriya alias Jayaraman
(e mail: nrj1945@gmail.com)

Monday, August 28, 2017

Goddess Seethal Maatha (T)

தென் இந்தியாவில் மாரியம்மனைப் போற்றி வணங்குவதை போல காலரா, அம்மை போன்ற நோய்களை குணப்படுத்துபவள் மற்றும் பஞ்சகாலத்தில் மழையை பொழிய வைக்கும் தேவி என்ற நம்பிக்கையில் வடநாட்டில் ஷீதல் மாதா எனும் தேவியை வணங்கித் துதிக்கின்றார்கள். ஷீதல் என்றால் குளுமையானவள் என்ற அர்த்தம் உண்டு. வடநாட்டில் டெல்லி, மத்திய பிரதேசம், ஒரிஸா, மேற்கு வங்கம் போன்ற இடங்களிலும், நேபாளம் மற்றும் பாகிஸ்தானின் சில இடங்களிலும் கூட ஷீதல் மாதாவை பூஜிக்கிறார்கள். பல்வேறு தோற்றங்களில் உள்ள ஷீதல் மாதாவை மகாமாயீ மற்றும் மஹா அன்னம்மா என்று வடநாட்டில் அழைக்க தென் இந்தியாவிலோ அவளை மாரியம்மன், ரேணுகா, எல்லம்மா, குளிர்ந்த நாயகி, முண்டகண்ணி அம்மன், கெம்பம்மா, தொட்டம்மா, சகஜம்மா மற்றும் கங்கம்மா என்றும் அழைக்கின்றார்கள். பொதுவாகவே இந்த தேவியை பஞ்ச காலங்களில் மழையை பொழிவிப்பவள், அம்மை, காலரா போன்ற கொடிய நோய்களை குணப்படுத்துபவள், கிராமத்தைக் காப்பாற்றுபவள், குழந்தை வரம் தருபவள், தன்னை வேண்டி நிற்கும் பக்தர்களின் குறைகளைக் களைபவள் என்பதாக நம்புகின்றார்கள் என்பதின் காரணமும் அவள் பார்வதி தேவியின் அவதாரம் என்பதுதான்.

நெருப்பின் மீது நடப்பது, உடம்பில் ஆடைக்கு பதில் (நிர்வாணம்) உடலே தெரியாதவாறு முழுமையாக வேப்பிலையை துணிபோல உடலை சுற்றி கட்டிக் கொண்டு கோவிலுக்குள் வலம்
வருவது மற்றும் பொங்கல் படைத்து தானம் செய்வது போன்ற வழிபாட்டு முறைகளை வடநாட்டில் உள்ளவர்கள் கடைபிடிப்பது இல்லை. ஆலயத்தில் சென்று அவளை வணங்கித் துதிக்கின்றார்கள். மேலும் வடநாட்டில் குர்கான் எனும் இடத்தில் உள்ள ஆலயத்தைத் தவிர்த்து ஷீதல் மாதாவிற்கு பெரிய ஆலயங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறிய வழிபாட்டுத் தலங்களே நிறைய காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் வேப்பிலை மரங்களுக்கு அடியே உள்ளன. சிவப்பு வண்ண சேலை மற்றும் பச்சை நிற மேலாடையுடன் காட்சி தரும் இந்த தேவிக்கு நான்கு கைகள் உள்ளன. அதில் ஒரு கையில் முறமும், இன்னோர் கையில் துடைப்பமும் காணப்படுகின்றது. அவளது வழிபாட்டிலும் பூஜையிலும் எலுமிச்சை பழம் மற்றும் வேப்பிலை போன்றவையே பிரதானமான பொருட்களாக உள்ளன. அவளை பார்வதி தேவியின் அவதாரமான துர்கை தேவியின் சிறு அவதாரம் என்றும் நம்பிக்கை உள்ளது.

பொதுவாகவே இந்த தேவியின் அவதாரம் குறித்த செய்திகள் அனைத்துமே வாய்மொழிக் கதைகளாகவும் மற்றும் கிராமியக் கதைகளுமாகவே உள்ளன. ஒரு கிராமியக் கதையின்படி கிரேதா யுகத்தில் வாழ்ந்து வந்த கால்கேயா எனும் அசுரர்களின் பிரிவை சேர்ந்த விருத்தாசுரன் எனும் அரக்கன் உலகெங்கும் இருந்த தேவர்களையும் பிற மக்களையும் தொல்லைபடுத்தி வந்தான். தேவதைகளினால் உலகின் எந்த பகுதிக்கும் பயமின்றி செல்ல முடியவில்லை. அதனால் ஏற்பட்ட பெரும் யுத்தத்தில் விருத்தாசுரனின் படையில் இருந்த கால்கேயா பிரிவினர் தப்பி ஓடி கடலுக்குள் ஒளிந்து கொண்டார்கள். அவர்கள் நாள் முழுவதும் கடலுக்குள் மறைந்து வாழ்ந்திருந்தபடி இருந்து இரவு நேரத்தில் வெளியில் வந்து சாது, சந்யாசிகள், ரிஷி மற்றும் முனிவர்களின் தவங்களைக் கலைத்தும் மக்களை கொடுமைப்படுத்தியும் வந்தார்கள். அவர்களை எதிர்த்து எவராலும் வெற்றி பெற முடியாத நிலையில் சாது, சந்யாசிகள், ரிஷி மற்றும் தேவர்கள் விஷ்ணு பகவானிடம் சென்று தங்களை அந்த அசுரர் கூட்டத்தின் தொல்லைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிய விஷ்ணு பகவான் துர்கா தேவியை பூமியிலே சென்று காத்யானி எனும் ரிஷியின் மகளாக பிறக்குமாறும், அந்த மாற்று உருவில் அசுரர்களையும் அரக்கர்களையும் அழிக்குமாறு கூறினார். துர்கா தேவியும் பூமிக்கு சென்று காத்தயானி எனும் பெயரில் காத்யானி முனிவருக்கு மகளாகப் பிறந்தாள். விரைவில் வளர்ந்ததும் பல்வேறு அசுரர்களையும் அரக்கர்களையும் யுத்தம் செய்து அழித்தாள். அவளுடன் நேரடியாக சண்டையிட்டு வெல்ல முடியாமல் போன கால்கேயா அசுரர்கள் வஞ்சத்தினால் அவளை வீழ்த்தி வெற்றி பெற முடிவு செய்தார்கள். அதற்காக அவர்கள் தமது சக பிரிவை சேர்ந்த ஜ்வராசுரன் எனும் அசுரனின் உதவியை நாடினார்கள்.

கால்கேயாவிற்கு உதவி செய்வதற்காக ஜ்வராசுரன் தன்னுடைய சக்தியை பிரயோகித்து உலகெங்கும் தீராத நோயான சின்ன அம்மை, பெரிய அம்மை மற்றும் காலரா போன்றவற்றை பரப்ப பல மக்கள் மடிந்தார்கள். ஷீதல் மாதாவும் தன்னுடைய சக்தியை பிரயோகித்து சின்ன அம்மை, பெரிய அம்மை மற்றும் காலரா போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு இருந்த மக்களை இறப்பில் இருந்து காப்பாற்றினாள். அதனால் ஆத்திரம் அடைந்த ஜ்வராசுரன் மேலும் பல இடங்களில் அந்த நோயைப் பரப்பத் துவங்க அவனை உடனடியாக அழிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த ஷீதல் மாதா பைரவ தேவரின் உதவியை நாடினாள்.

அசுரன் என்றாலும் ஜ்வராசுரன் பல அரிய வரங்களை பெற்று இருந்தவன். அவனை கருவில் இருந்து வெளிவராத சின்ன ஆண் குழந்தையால் மட்டுமே அழிக்க முடியும் என்பது விதியாக இருந்ததினால் ஷீதல் மாதா பகவான் பைரவரை அதற்கேற்ற உரு எடுத்து வந்து அவனை அழிக்குமாறு கூறினாள். பகவான் பைரவரும் தன்னை படுக் (சிறு பையன்) பைரவராக உருவாக்கிக் கொண்டு பூமிக்கு சென்று ஜ்வராசுரனுடன் யுத்தம் செய்யலானார். யுத்தத்தின் நடுவில் அவனை ஏமாற்ற தான் தோற்றுப் போய் இறந்து விழுந்ததை போல பூமியில் விழுந்தார். ஆகவே இறந்து கிடைத்தவரை எடுத்துக் பார்க்க அவர் அருகில் சென்றதும் பகவான் படுக் பைரவர் திடீரென மாயமாகி புழுதியில் மறைந்தார்.  இறந்து கிடந்தவர் எங்கு மாயமாகி விட்டார் என திடுக்கித்து நின்ற ஜ்வராசுரன் முன்பாக மீண்டும் பகவான் படுக் பைரவர் பயங்கரமான தோற்றத்தில் காட்சி தந்தார். கன்னம் கரிய நிறம், முகத்தில் மூன்று கண்கள், உடலில் நான்கு கைகள், அந்த நான்கு கைகளிலும் திரிசூலம், வாள், கோடாலி மற்றும் துண்டிக்கப்பட்ட ஒரு அசுரனின் தலை என இருக்க கழுத்தில் மனித ஓடுகள் கோர்த்த மாலை தொங்கியது.

ஜ்வராசுரன் பார்வதி தேவியின் பக்தன் என்பதினால் பகவான் படுக் பைரவர் அவனை உடனடியாக ஷீதல் மாதாவிடம் சரணடைந்து விடுமாறும், மற்றவர்களை துன்புறுத்தமாட்டேன் என்ற உறுதி மொழி தருமாறும் கூறினார். ஆனாலும் அந்த அசுரன் அந்த கட்டளையை ஏற்க மறுத்ததினால் பகவான் படுக் பைரவர்  திரிசூலத்தை எய்து அவனைக் கொன்றார். இப்படியாக அந்த அசுரனின் மரணம் நிகழ அதற்கு காரணமான காத்யாயனி எனும் பெண் பார்வதி தேவியின் அவதாரமான ஷீதல் மாதா என்பவரே என்று தெரியாத மக்கள் அவளுக்கு நன்றி கூறினார்கள். ஆகவே இனியும் தாமதிக்கலாகாது எனக் கருதிய காத்யாயனி அவர்கள் முன் தன்னுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்தி இனி தன்னை யார் சிரத்தையுடன் வணங்கித் துதிப்பார்களோ அவர்களுக்கு ஏற்படும் நோய் நொடிகளை விலக்குவதுடன் அவர்களை வாழ்வின் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுவேன் என உறுதி அளித்தாள். ஷீதல் மாதாவின் உண்மை அவதாரத்தை உணர்ந்த பின் மக்கள் ஷீதல் மாதாவின் சிலைகளை பல இடங்களிலும் நிறுவி பஞ்ச காலத்தில் மழை பொழிவிக்கவும், நோய்களை விலக்குமாறும் வேண்டிக் கொண்டு அவளை வழிபடலானார்கள். 


ஷீதல் மாதாவின் ஆலயம் எழுந்த கதை
ஷீதல் மாதாவிற்கு ஒரு சிறப்பான ஆலயம் ஹரியானா மாநிலத்தின் குர்கான் கிராமத்தில் உள்ளது. இந்த இடத்தில்தான் மஹாபாரத ஹீரோவான துரோணாச்சார்யா வசித்து வந்ததாக கிராமியக் கதை உள்ளது. அவர் அங்கு தனது மனைவி க்ருபை என்பவருடன் வசித்து வந்தாராம். பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருடம்தோறும் இந்த ஆலயத்துக்கு வருகை தருகின்றார்கள். அம்மனின் அருளை வேண்டிக் கொண்டு தமது குழந்தைகளின் முதல் முடி இறக்கு விழாவை இங்கு கொண்டாடுகின்றார்கள் .

இந்த ஆலயம் குறித்த கதை சுவையானது. ஒரு காலத்தில் காடாக இருந்த இந்த பகுதியில் ஸ்ராவண் எனும் ரிஷியும் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள்செய்யும் சேஷ்டைகளினால்தனது தவம் கலைவதைக் கண்ட ரிஷி ஒருநாள் கோபத்தில் அந்த குழந்தைகளை காட்டுக்குள் சென்று விட்டு விட்டு வந்தார். குழந்தைகள் அங்கும் இங்கும் இடம் தெரியாமல் அலைந்தபோது அந்தப் பகுதியில் வேட்டை ஆடிக் கொண்டு இருந்த ஹஸ்தினாபுரத்தை சேர்ந்த மன்னன் ஷாந்தனு அவர்களைக் கண்டார். அவர்கள் ரிஷியின் குழந்தைகளாக இருக்கும் என நினைத்தவர் தனது அரண்மனைக்கு அவர்களை அழைத்துச் சென்று வளர்த்து வரலானார்.

மன்னன் ஷாந்தனு யார் என்றால் பிதாமகன் எனப்படும் பீஷ்மரின் தந்தை ஆவார். தமது குழந்தைகளைக் காணாமல் காட்டில் சென்று தேடிய ஸ்ராவண் ரிஷி அவர்களை மன்னன் அழைத்துச் சென்று விட்ட விவரத்தைக் கேட்டு அறிந்த பின்னர் அவர்களை அழைத்து வர அரண்மனைக்கு சென்றார். மன்னனும் அவரை வரவேற்று அந்தக் குழந்தைகளில் ஒன்றான க்ருபீ என்பவளை பாரதிவாஜா மஹரிஷியின் மகனான துரோணாச்சாரியாருக்கு மணம் செய்யலாமே என்று யோஜனைக் கூற, அதை அந்த ரிஷியும் ஏற்றுக் கொள்ள, க்ருபீ மற்றும் துரோணாச்சார்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. க்ருபீ யார் என்றால் அவள் பார்வதி தேவியின் ஒரு அவதாரமாக சில கடமைகளை செய்து முடிக்க பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தவள். தக்க நேரத்தில் அவள் அம்மை, காலரா போன்ற கொடிய நோய்களை தீர்ப்பவளாகவும், பஞ்ச காலத்தில் மழை பொழிவிப்பவளாகவும் இருக்கும் தெய்வமான ஷீதல் மாதாவாக தனது சுய ரூபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது விதியாக இருந்தது. ஆகவே அந்த வேளை வரவில்லை என்பதினால் அவள் கடவுளின் அவதாரம் என்பது அவளது தந்தையையும் சேர்த்து எவருக்கும் தெரியாது.

க்ருபீ துரோணாச்சார்யாவை மணந்து கொண்ட நேரத்தில் துரோணாச்சார்யா பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு அதே காட்டுப் பகுதியில் யுத்தப் பயிற்சி அளித்து வந்தார். ஆகவே க்ருபீயும் அங்கு வசித்து வந்தாள். அவள் அங்கிருந்தபோது அம்மை வந்து அவதிப்பட்டுக் கொண்டு இருந்த குழந்தைகளை பாதுகாத்து வைத்தியம் செய்து வந்தாள். அதிசயமாக அவளது கைகளால் அவள் அந்த நோய் வந்த குழந்தைகளை தடவினால் அவர்கள் குணம் அடைந்தார்கள் என்பதினால் அவளுக்கு எதோ சக்தி உள்ளது என்பதாக நம்பிய மக்கள் பல இடங்களிலும் இருந்து அங்கு வந்துஅவளிடம் நிவாரணம் பெற்றுச் சென்றார்கள். அவளை அன்புடன் மாதா என அழைத்தார்கள். ஆனாலும் யாருக்குமே அவள் கடவுளின் அவதாரம் என்பது தெரியாது. காலம் ஓடியது. துரோணாச்சார்யா மறைந்த பின்னர் க்ருபீயும் யார் கண்களிலும் படாமல் மறைந்து விட்டாள் . அவள் எங்கு சென்று விட்டாள் என எவருக்கும் தெரியவில்லை என்பதினால் கிராமத்தினர் அவள் வசித்து வந்த இடத்தில் இந்தக் கல்லில் அமர்ந்து இருப்பாளோ அந்தக் கல்லையே க்ருபீ மாதா என வணங்கினார்கள். அங்கு வந்து அந்தக் கல்லையே க்ருபீ என வணங்கித் துதித்தவர்களின் துயரங்களும் மறையத் துவங்கியதை உணர்ந்தார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு பதார்த்த மற்றும் சிங்ஹா எனும் சகோதரர்கள் வசித்து வந்தார்கள். இருவரும் மிக்க ஒற்றுமையாக இருந்தார்கள். அவர்கள் க்ருபீ வாழ்ந்து வந்திருந்த அதே இடத்தில் இருந்த விளை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். அவர்களிடம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தன. சிங்ஹா தமது ஒய்வு நேரத்தில் பஜனையும் பூஜையும் செய்து வந்தார். பின்னர் ஒருமுறை அந்த சகோதரர்கள் இடையே சச்சரவு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். நிலத்தையும் பங்கு போட்டுக் கொண்டார்கள். அதில் க்ருபீ வாழ்ந்து வந்த நிலப்பகுதி சிங்ஹாவிற்கு கிடைத்தது. அதில்தான் தற்போது உள்ள ஆலயமும் உள்ளது.

சிங்ஹா தொடர்ந்து தனது ஒய்வு நேரத்தில் பூஜை, பஜனை என செய்து வந்தார். ஒருநாள் ஷீதல் மாதா தேவி அவர் கனவில் வந்து அவருக்கு சில விஷேச சக்திகளை தந்துள்ளதாகவும், அவர் நோய்வாய்ப்பட்டு உள்ளவர் எவரையும் தான் அமர்ந்து இருந்த இடத்தில் உள்ள கல் மீது அமர்ந்து கொண்டு அவரது கையால் தொட்டால் அவர்கள் வியாதி குணமாகும் என்றும் கூறிவிட்டு மறைந்து போனாள். அதன் பின் நோய்வாய்பட்டு உள்ளவர் எவர் வந்தாலும் அவர்களை சிங்ஹா ஒருமுறை தொட்டால் அவர்கள் வியாதி மறையத் துவங்கியது.

பல வருடங்கள் கடந்தன. ஒருநாள் சிங்ஹா தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தபோது பூமிக்குள் மறைந்து கிடந்த ஷீதல் மாதாவின் சிலை கிடந்ததைக் கண்டு வெளியில் எடுத்தார். அந்த தேவியின் முகம் தனது கனவில் தோன்றிய அதே தேவியின் உருவத்தில் இருந்ததினால் அதை சிலைக்கு கிடைத்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து தற்காலிக வழிபாட்டுத் தலம் அமைத்தார். பிற்காலத்தில் தற்போது ஆலயம் உள்ள அதே இடத்தில் ஷீதல் மாதாவின் ஆலயம் பெரிய அளவில் கட்டப்பட்டது.

இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பாக முகலாய மன்னர்கள் இந்தியாவில் படை எடுத்தபோது அப்போது க்ருபீ மாதாவின் சிறிய வழிபாட்டுத் தலமாக இருந்த இடம் நாசப்படுத்தப்பட்டு நகை மற்றும் பிற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடிக்க வந்த மன்னன் அந்த சிறிய வழிபாட்டுத் தலத்தில் இருந்த சிலையை யும் எடுத்து அருகில் இருந்த குளத்தில் வீசி எறிந்தான். அதுவே பிற்காலத்தில் சிங்ஹாவினால் கண்டெடுக்கப்பட்ட, க்ருபீ மாதா உருவில் இருந்த
ஷீதல் மாதாவின் சிலை என்பதாக கிராமியக் கதை கூறப்படுகின்றது.

தற்போது உள்ள ஆலயம் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிறிய வழிபாட்டுத் தலம் அங்கு இருந்தது என்று நம்புகின்றார்கள் இந்த ஆலயத்தின் மேன்மைக் குறித்து கூறப்படுவது என்ன என்றால் ஒருமுறை அந்தப் பகுதியில் இருந்த மன்னனின் குழந்தை பக்கவாதத்தினால் பீடிக்கப்பட்டு இருந்தபோது அந்தக் குழந்தையை மண்ணினால் மூடி(உடலை மண்ணால் சேறுபோல பூசி வைப்பது)
இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் வைத்து இருந்ததாகவும் அதன் பின்னர் அந்த குழந்தை பூரணமாக குணம் அடைந்து விட்டதாகவும் கூறுகின்றார்கள். ஆனால் இதற்கான வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை.

இந்த ஆலயத்தின் மேன்மைக் குறித்து இன்னொரு கதையும் உள்ளது. பாரூக் எனப்பட்ட அந்த நாட்டில் (தற்போது ஆலயம் உள்ள பகுதியில் இருந்த ஊர்) ஒரு ஏழை டைலர் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மகள் உண்டு, அவள் மிகவும் அழகாக இருந்ததைக் கேள்விப்பட்ட அடுத்த நாட்டை சேர்ந்த மன்னன் அவளை தனக்கு மணம் முடிக்குமாறு கேட்டார். ஆனால் அதை டைலர் மறுத்து விட அவளை பலவந்தமாக தூக்கிக்கொண்டு செல்ல அந்த மன்னன் முயன்றபோது பாரூக் நாட்டின் மன்னனிடம் சரண் அடைந்த டைலருக்கு உதவ பாரூக் நாட்டு மன்னன் முன்வந்ததும் இல்லாமல் அந்த மன்னனின் சேனையை தடுத்து நிறுத்தக் கிளம்பிச் சென்றபோது தற்போது இந்த ஆலயம் உள்ள இடத்தை அடைந்ததும் அவனது குதிரை மேலும் மேலே செல்ல மறுத்தது. சாதாரணமாக யுத்தத்துக்கு செல்லும் முன்னர் அந்த நாட்டு மன்னர்கள் துர்கை தேவியை வணங்கித் துதித்தப் பின்னர்தான் கிளம்பிச் செல்வார்கள். ஆனால் அன்று அந்த மன்னன் அதை செய்யத் தவறி விட்டதினால் அவனது குதிரை முரண்டு பிடித்தது என்பதை உடனடியாக உணர்ந்து கொண்ட மன்னன் அங்கேயே இறங்கி துர்கா தேவியை பிராத்தித்த பின்னர் அந்த மன்னனை துரத்தி அடித்து விட்டு தான் திரும்பி வந்தப் பின் அங்கேயே ஆலயம் அமைப்பதாக சத்தியம் செய்துவிட்டு கிளம்பினார். யுத்தத்தில் அந்த முகலாய மன்னனை துரத்தி அடித்து விட்டு வெற்றி பெற்று திரும்பியதும் அங்கேயே ஆலயம் அமைத்தாராம். அதுவே தற்போதைய ஆலயம் என்றும் கூறுகின்றார்கள்.

Goddess Seethal Maatha (E)


Like Mariamman in South, Goddess Seethal Maatha is worshipped  in many parts of north India since the devotees feel that the deity cures many dreaded diseases including small pox and chicken pox besides inducing rain whenever it failed to rain. Goddess Seethal Maatha means the one who is cooler at heart and mind. She is worshiped by many faiths in regions of North India like Delhi, Madhya Pradesh, Orissa, West Bengal, etc besides far countries like Nepal, Bangladesh and even in parts of Pakistan. Goddess Seethal Maatha is referred as Maha Mayee, Maha Annamma etc in north, while in the South she is known as Mariamman, Renuga, Kulirnda Nayagi (cooler Devi), Ellamma, Mundakanniamman, Kempamma, Doddamma, Sugajamma and Gangamma. Though the general belief is that she is the savior of those affected by small pox and Chicken poxes, she is also believed to bestow good health and prosperity to all her devotees, fulfill their desires, guard the villages, ensure rain fall at the time of famine, savior of families, bestow child to childless couples etc as she is reportedly an incarnation of Goddess Parvathi.

Like the rituals performed in South- walking on fire, walking around the temple covering the bare body with bunches of Neem leaves (Margosa tree leaves), and distribution of cooked semi solid lentil as prasad to appease the Goddess seeking her blessings, in northern parts of India no such rituals are being followed except that the devotees perform puja in temples and worship her. Though Goddess Seethal Maatha is worshipped in smaller shrines especially under Neem trees, rarely one can find bigger temples for Seethal Mata in north India like the one in Gurgaon. Clad in Red Saree and Green blouse, Goddess Seethal Maatha is depicted with four hands, one of them carrying broom. Lemon and Neem leaves form main part of the rituals and in the puja performed to her. She is considered to be incarnation of Goddess Durga who is another emanation from Goddess Parvathi.

There are several folklores on the story of Goddess Seethal Maatha. One of the folklore says that once in Kretha Yuga demonic forces like Kaalkeyas who were associate of a cruel Asura called Vrutrasura lived. They  tormented and troubled Devathas to the extent that the Devathas were unable to move anywhere in the Universe. In the fierce war that raged between Devathas and Asuras, Lord Indra killed Vrutrasura, but the Kaalkeyas fled away from the war zone and hid themselves inside the deep sea. They remained inside the sea during the day time and came out at night to trouble and cause sufferings to the saints, sages, Devathas and others. The Devathas could not beat them in any manner. Unable to bear the atrocities committed by the Kaalkeyas, the Devathas and Rishi Munis approached Lord Vishnu and requested him to save them from the tyranny of the Kaalkeyas who were invincible. Lord Vishnu promised to do needful and consoled them. Sometime later at the command of Lord Vishnu, Goddess Durga incarnated on earth as daughter of a sage named Katyayan to destroy the evil demonic forces that were troubling everyone including Devathas in the universe. She was called Kathayani and during her stay on earth, she killed many Asura forces of Kaalkeyas and therefore unable to directly fight with her, Kaalkeyas chose to fight  by cowardice and approached their associate demon Jwarasur to help them.

In order to help Kaalkeyas, demon Jwarasur with his power created dreaded diseases like cholera, dysentery, measles, and smallpox in the region where Kathayani resided and thousands of people began to die. Since Kathayani was also divine in disguise as human, she exercised her divine powers as Seethal Devi (as created by Goddess Parvathi) and relieved the miseries of people who lived around her. Angered over her action, the demon Jwarasur began to spread more and more incurable diseases in many places. People ran to Kathayani and sought her help when she decided to annihilate the demon.

Since Jwarasur was also bestowed with several powerful boons one of which was that he could be killed only by a male not born from womb and who will also be a child, Goddess Goddess Seethal Maatha requested Lord Bhairava to help her annihilate the demon by taking suitable incarnation. Acceding to her request, Lord Bhairava assumed the form of a five year old child Batuk Bhairava and waged a battle with the demon. In order to distract Jwarasur’s attention Lord Batuk Bhairava gave an impression that he fell on the ground as though he has been killed and when the Demon approached him to lift the dead body, Lord Batuk Bhairava magically disappeared into the dust. Jwarasur was shocked to find Lord Batuk Bhairava missing and began to search for his body. He did not realize that Lord Batuk Bhairava was actually manifestation of Lord Bhairava. Suddenly Lord Batuk Bhairava assumed the form of an awful male figure, body in pitch black in color, three-eyes on face and four arms wearing a garland of skull on neck. He held a battle-axe, sword, and trident and demon head in his four hands.

Since Jwarasur was also disciple of Goddess Parvathi he was advised by Lord Batuk Bhairava to surrender with his entire forces to Goddess Seethal Maatha who was in disguise as Kathayani, incarnation of Goddess Parvathi and give up troubling the Devathas. But the demon Jwarasur refused to give up and therefore Lord Batuk Bhairava killed him with his trident to end his menace forever. People were very happy and hailed Kathayani without knowing that she was incarnation of Goddess Parvathi in disguise as Kathayani. Pleased with them, Goddess Seethal Maatha appeared before them in her true form and assured that whoever worshipped and prayed her for any kind of relief, she would rush there to help them. Thereafter the statues and idols of Goddess Seethal Maatha were installed in several villages and people began to offer worship seeking relief from misery, diseases and her grace for rain whenever the rains failed. 


Birth of Goddess Seethal Maatha Temple in Gurgaon:
One of the most famous temple for Goddess Seethal Maatha exists in Gurgaon in the state of Haryana in India. Incidentally as per the folklore, it is believed to be the birth place of Dronacharya, one of Mahabharata heroes. Dronacharya was not only born there, but also lived there with his wife Krupi.   The temple which has been built few centuries ago adjacent to a pond has an interesting story behind it. While hundreds and thousands of devotees throng the temple throughout the year, some of them visit the temple to perform the first hair cutting ceremony of their children,locally called as ‘Mundan Ceremony’ in Hindi.

Several stories revolve around Goddess Seethal Maatha temple in Gurgaon. As per puranic lore once upon a time there lived a great Rishi by name Sharadwan in the thick jungle area of which included the present Gurgaon. He had two children who were very naughty. Since they were disturbing his penance quite often, one day to punish them the Rishi left them in the midst of the forest so that they would not return back home for many days. A day later Shanthanu the King of Kuru Kingdom in Hasthinapur happened to see the children roaming in the forest and immediately realized that the they may have been the children of some Rishi and  took them away to his palace.

King Shanthanu was father of Bhisma who was unparalleled archer and warrior. Rishi Sharadwan while searching for his children came to know that they were living with the King and therefore went there to bring them back when the King suggested that the girl child Krupi could be married to Dronacharya the son of great Maharishi Bharathwaja. Krupi was indeed an incarnation of Goddess Parvathi who was sent to earth to perform certain divine ordained duties and to manifest in true form as Seethal Matha at an appropriate time. She was destined to bless the people as goddess for rain and the one cures the dreaded diseases like Cholera, Small pox and Chicken pox. This was not known to anyone including her father. The wedding was solemnized.


Dronacharya taught martial arts to both Kauravas and Pandavas in the then forest area of Gurgaon. Since Krupi was married to Dronacharya, she had to stay on the banks of the pond at Gurgaon while Dronacharya was training the Kauravas and Pandavas. Krupi spent most of her time looking after the children who were afflicted with disease especially those affected by Small Pox and Chicken Pox and people began to affectionately called her Matha (mother). The disease afflicted children when touched by Krupi began to instantly got cured due to her divine power. As her name spread far and wide, the parents of those children who were affected by such severe diseases thronged to Gurgaon seeking cure from Krupi not knowing who she was but thought she had some divine power within her. After Dronacharya departed from earth, Krupi too disappeared. People were sad to see her missing, but those who came to that place and worshipped Krupi in the form of a stone which was found in the same place where she used to sit they experienced that their sufferings vanished.

Few hundred centuries later two brothers, namely Padarath and Singha lived in the same place of Gurgaon where Krupi stayed and engaged themselves in the agricultural work. They owned thousands of acres of land and cultivated them together. Beyond laboring in the field, in spare time Singha spent most of his time singing Bhajan and performing pujas. Later due to some family dispute both of their families parted their relationship. They divided the land held by them together with equal share. Singha owned the land in which the present temple has come up.

Even after parting the company of Padarath pious minded Singha continued to perform pujas and reciting bhajan. One day Goddess Goddess Seethal Maatha appeared in his dream and graced him with power that if he sat on the stone where she used to sit and touch those afflicted with disease they would be cured of their ailments. With faith in her, daily Singha sat in meditation near the same pond unknowingly worshiping the same stone which was worshipped by the villagers as Krupi. Those who came to Singha were relieved off their diseases by the touch of the magic hand of Singha.

Years passed and one day while he was digging the land in the same spot, he found the idol of Goddess Seethal Maatha lay buried deep inside. Her face resembled the same Devi as seen in his dream and therefore he took it out and consecrated it in a temporary built worship sthal. That temporarily built structure later became the Goddess Seethal Maatha temple.

The folklore further goes with certain stories on the greatness of the temple. Centuries ago invading Mogul rulers used to destroy the temple structures in the invaded lands and looted the ornaments. In one such instance a Mogul King destroyed the centuries old Seethal matha temple that existed there looted the valuables and threw away the Seethal Matha idol into the nearby pond. The same idol is believed to have been dug out by Singha and temple constructed at a much later period.

According to a folk story the Goddess Seethal Maatha worship place was several centuries older even though the present temple was constructed around four to five hundred years back. Once the child of the then local King who was affected with paralysis was brought there and her body kept wrapped with the mud of the temple for ten days. Amazingly the Paralysis was completely cured. But there is no archeological or historical evidence to support the story which is continued to be told as a folk tale.

Yet another legend tells a different story over the construction of the temple. A poor carpenter lived in a placed called Farook Nagar near the present temple spot. He was working in the palace of the ruler and had a beautiful daughter in marriageable age. One of the Mogul emperors in the adjacent state heard of the beauty of the girl and wanted to marry her, but the Carpenter did not agree to the proposal. The emperor threatened to use force to abduct the girl. Afraid of the Mogul emperor, the Carpenter approached the local ruler seeking protection. The ruler decided to save the honor of his citizen and so a war broke out between the Mogul emperor and the ruler of Farook. Before proceeding to the war front, the ruler forgot to pray to Goddess Durga which was the custom of that land. When the ruler proceeded to the War front without paying obeisance to Goddess Durga, his horse refused to move beyond the place where the present temple stood. Realizing his folly, he prayed to Goddess Durga seeking her grace and pledged that he would build a temple on his victorious return. The ruler of Farook won the war and drove back the Mogul emperor. Since he returned victorious he built the temple there.

Saturday, August 5, 2017

Nagachandreswar (T)

நாக தக்ஷக் எனும் தெய்வீகப் பாம்பு தலைவர் பிரபஞ்சத்தில் உள்ள எட்டு முக்கியமான பாம்புகளில் ஒன்றாகும்.  இந்த நாகத்தைக் குறித்த செய்தி மஹாபாரதத்தில் உள்ளது. நாக தக்ஷக்கைத் தவிற  மற்ற ஏழு தெய்வீகப் பாம்புகள் நாகராஜா எனப்படும் நந்தா, உபனந்தா, சங்கரா, வாசுகி, மனசா, அனாவடப்டா எனும் ஆனந்தா மற்றும் உட்பாலகா என்பவை ஆகும். அர்ஜுனனின் பேரனான ஜனமேயா எனும் மன்னன் பாம்புகளின் இனத்தையே அழிப்பதற்காக மத்திய பிரதேசத்தில் பாம்பு இனங்கள் வசித்து வந்த கண்ட்வா எனும் இடத்தில் இருந்த வனத்தை எரித்தபோது அங்கிருந்து தப்பிய நாக மன்னன் தக்ஷக் என்பவர்  தக்ஷசீலா எனும் இடத்தில் நகரத்தை அமைத்துக் கொண்டு அதை ஆண்டு வந்தார். இவர் இஷ்வாகு குலத்தை சேர்ந்தவர். பூர்வ ஜென்ம சாபத்தின் விளைவாக பாம்பாக பிறவி எடுத்து இருந்தார்.

ஒரு கிராம நாடோடிக் கதையின்படி நாக தக்ஷக் உஜ்ஜனியில் உள்ள மஹா காளேஸ்வர ஆலயத்தின் மேல் பகுதியில் உள்ள அறையில் தனிமையில் தவத்தில் அமர்ந்து உள்ளாராம். அந்த அறையில் நாக தக்ஷக் உடலின் மீது அமர்ந்து உள்ள சிவபெருமான் மற்றும் பார்வதியின் தரிசனத்தைப் பெற வருடத்துக்கு ஒரு முறை, அதாவது நாக பஞ்சமி தினத்தன்று மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அந்த அறை திறந்து விடப்படுகின்றது. அந்த நாடோடிக் கதையின்படி வருடத்தின் அனைத்து நாட்களிலும் தன் மீது பார்வதி தேவியுடன் அமர்ந்து உள்ள சிவபெருமானை வேண்டியபடி அந்த அறையில் நாக தக்ஷக் தனிமையில் தவத்தில் அமர்ந்து உள்ளதாகவும், ஆகவே அதற்கு இடையூறு செய்யக் கூடாது என்பதினால் வருடம் முழுவதும் அந்த அறை மூடி வைக்கப்பட்டு உள்ளது எனக் கூறுகின்றார்கள். ஆனால் கடவுளின் ஆணைப்படி நாக பஞ்சமி தினத்தன்று மட்டும் அனைத்து தேவலோகவாசிகள் மற்றும் பிற கடவுட்கள் முன்னிலையில் மானிடர்கள் கண்களுக்கு புலப்படாமல் அங்கு உள்ள அந்த நாகம் சிவபெருமானுக்கு கோடி அர்ச்சனை செய்வதாகவும், அப்போது பக்தர்கள் அதை தரிசனம் செய்ய அந்த அறை திறக்கப்படுகின்றது என்பதும்  ஐதீகம். இப்படியாக அங்கு வசிக்கும் நாக தக்ஷக்கின் கதை என்ன? 

மஹாபாரதம் நிகழ்ந்த காலகட்டத்தில் அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பரீக்ஷித் என்பவர் பூமியை ஆண்டு வந்தார். அவர் ஒருநாள் வனத்துக்கு வேட்டை ஆடச் சென்று இருந்தபோது தன்னை அறியாமல் தன்னுடன் வந்து கொண்டு இருந்த படையினரை விட்டு விலகி வனத்துக்குள் சென்று விட்ட பின் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் திண்டாடினார். வழி தெரியாமல் வனத்தில் சுற்றித் திரிந்தவருக்கு பசி எடுத்தது, தாகமும் சேர்ந்து கொள்ள ஏதேற்சையாக தவத்தில் அமர்ந்து இருந்த ஒரு ரிஷியை பார்க்க நேரிட்டது. அவர் அருகில் சென்று தாகத்துக்கு நீரும் பசிக்கு உணவும் கேட்டபடி  அவரை எழுப்ப முயல அந்த ரிஷியோ தன்னை மறந்த தவ நிலையில் இருந்ததால் எழுந்திருக்கவில்லை. கோபமுற்ற பரீக்ஷித் அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பை எடுத்து அவர் மீது போட கண்களை திறந்த ரிஷி அடுத்த ஏழாவது நாள் பரீக்ஷித் பாம்பு கடித்து இறக்க வேண்டி வரும் என சாபம் தந்தார். தன் தவறை உணர்ந்த மன்னனும் தான் கோபத்தில் செய்துவிட்ட தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்க, அந்த ரிஷியும் அவர் மீது கருணை கொண்டு ஏழாவது நாள் பாம்பு கடித்து அதன் விஷம் அவன் உடலில் முழுமையாக ஏறும் முன் தன்வந்தரி பகவான் அங்கு வந்து அவருக்கு ஆசி கூறினால் அவர் பிழைத்து விடுவார் என அந்த சாபத்தை மாற்றி அமைத்தார்.

அவ்வளவுதான் மன்னன் பரீக்ஷித் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக பகவான் தன்வந்திரியை வேண்டி தவத்தில் அமர்ந்தார். அடுத்த எட்டு நாட்களும் தேவலோகத்தினருக்கு வைத்தியம் செய்யும் பகவான் தன்வந்தரி  தனது அரண்மனையில் தன்னுடன் வந்து தங்கி இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டிக் கொள்ள, மன்னனின் தவத்தினால் மனம் மகிழ்ந்து போன தன்வந்தரி பகவானும் உடனே கிளம்பி அவர் அரண்மனையை நோக்கி வரலானார். பகவான் தன்வந்தரி மன்னனைக் காப்பாற்ற வந்து கொண்டு இருக்கும் செய்தியை கேட்ட நாக  தக்ஷக் கவலையில் ஆழ்ந்தார். அதன் காரணம் கடவுளின் ஆணைப்படி அவர்தான் மன்னன் பரீக்ஷித்தை கடித்து மரணம் அடைய வைக்க வேண்டும். ஆகவே எப்படியாவது பகவான் தன்வந்தரியை மன்னனுடைய அரண்மனைக்கு செல்லாமல் தடுத்து விட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்.

மன்னனின் அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டு இருந்த பகவான் தன்வந்தரி மத்திய பிரதேசத்தின் மண்டசூர் ஜில்லா அருகில் தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கி இருந்த நாக தக்ஷக்கின் இருப்பிடத்துக்கு அருகில் வந்ததும் களைப்பு அடைந்து அங்கு இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அதுதான் தக்க சமயம் என்பதை உணர்ந்த நாக தக்ஷக் தனது சக்தியை பிரயோகித்து அவர் முதுகில் கடுமையான அரிப்பை ஏற்பட வைத்தார். அதே சமயம் தன்னை ஒரு சின்ன கட்டையாக உருமாற்றிக் கொண்டு அந்த மரத்தின் மீது இருந்து பகவான் தன்வந்தரி அருகில் விழுந்தார். தனது முதுகில் ஏற்பட்ட தாங்க முடியாத அரிப்பை போக்கிக் கொள்ள அந்தக் கட்டையை எடுத்து தன் முதுகில் பகவான் தன்வந்தரி சொரிந்து கொள்ள, அவர் உடலைத் தொட்ட நாக மன்னன் மீண்டும் தன் பழைய உருவை எடுத்துக் கொண்டு தனது சக்தியை பயன்படுத்தி பகவான் தன்வந்தரியை அந்த மரத்திலேயே தற்காலிகமாக சிறை வைத்தார். தனக்கு இடப்பட்டு இருந்த கடமையை - மன்னன் பரீக்ஷித்தைக் கொல்வது-  செய்தபின் பகவான் தன்வந்தரியை வந்து விடுவிக்கலாம் என முடிவு செய்துவிட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.

மும்மூர்த்திகள் எவர் ஒருவருக்கு சில கடமைகளை செய்ய கட்டளை கொடுப்பார்களோ அப்போது அவர்களுக்கு சில விஷேச சக்திகளையும் தருவார்கள். அந்த சக்திகளை உபயோகிப்பவர்களால் மட்டுமே அதை விலக்கவும் முடியும். அதே சமயம் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அந்த சக்திகளும் தானாகவே வலுவிழந்து விலகி விடும், அல்லது அதை மும்மூர்த்திகளில் ஒருவரே விலக்க  முடியும் என்பது தெய்வ நியதியாக இருந்தது.

மன்னன் பரிக்ஷித்துக்கு தரப்பட்டு இருந்த சாப காலத்தின் ஏழாவது நாளும் வந்தது. பகவான் தன்வந்தரியும் வந்து சேராததினால் கவலைக்கு கொண்ட மன்னனும் தன்னை பாம்பு கடிக்காமல் இருக்க ஒரு அறைக்குள் சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டார். அந்த அறையில் ஒரு இடம் கூட திறந்து வைக்கப்படாமல் அனைத்து இடமும் மூடி வைக்கப்பட்டு இருந்ததினால் எந்த பாம்பும் அறைக்குள் நுழைய முடியாது. சாப்பாடு கூட சிறு துவாரம் வழியே தரப்பட்டது. சாப்பாடு தந்த பின் அதை மீண்டும் அடைத்து விடுவார்கள். ஆகவே நாக தக்ஷக் தன்னை சிறு எறும்பாக மாற்றி வைத்துக் கொண்டு சாப்பாட்டு தட்டின் அடியில் அமர்ந்து கொண்டு அறைக்குள் நுழைந்தார். மீண்டும் தன் பழைய உருவை எடுத்துக் கொண்டு மன்னனைக் கொத்திக் கொன்ற பின் உள்ளே செல்லும்போது எடுத்த அதே உருவத்தில் வெளியில் வந்து சென்று விட்டார். தம் இருப்பிடத்துக்கு வந்தப் பின் பகவான் தன்வந்தரியையும் விடுதலை  செய்து அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

தனது தந்தை ஒரு பாம்பினால் மரணம் அடைந்து விட்டதைக் கேள்விப்பட்ட ஜனமேயான் ஆத்திரம் அடைந்து பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் அழிக்க முடிவு செய்து நாகங்களின் அழிவிற்கு ஒரு யாகத்தை துவங்கினான். உலகில் இருந்த பாம்புகள் யாகத் தீயில் வந்து விழுந்து மரணம் அடையத் துவங்கின. இன்னும் சில நாகங்கள் மட்டுமே உயிருடன் இருந்தன என்பதினால் யாகத்தை தொடர்ந்து செய்யலானார் .
Photo Courtesy:-
By Unknown - http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/bce_299_200/mahabharata/ganeshwrites/ganeshwrites.html, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=9754912
அடுத்து நாக தக்ஷக்கின் மரணம் அடைய வேண்டிய வேளை வந்தது. பாம்புத் தலைவர்களில் முக்கியமான பாம்பான வாசுகி யாகத்தின் தன்மையைக் கண்டு கவலைக் கொண்டு நாக தக்ஷக்கனையும் பிற பாம்புகளையும் பாதுகாக்க தனது சகோதரியின் மகனான ஆஸ்தீக் எனும் நாகத்திடம் உதவி கேட்டது. நாகங்களின் இனத்தில் ஆஸ்தீக் பெரிய பாண்டித்தியம்  பெற்ற நாகம் ஆகும். வாசுகியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆஸ்தீக்கும் யாகம் நடைபெற்ற இடத்துக்கு ஒரு பிராமணன் உருவில் சென்றது. யாகத்தின் பெருமையை விளக்கும் வகையில் இனிய கானத்தை பாடத் துவங்கியது.

அந்த இனிய இசையை  கேட்டுக் கொண்டு இருந்த ஜனமேயன் தனது மனதின் குழப்பம் அகன்றதை உணர்ந்தான். மனமும் தெளிவாயிற்று. அதுவரை அத்தனை இனிய, அர்த்தமுள்ள கானத்தை அவன் கேட்டதே இல்லை. நேராக ஆஸ்தீக்கிடம் சென்று அவரை வணங்கித் துதித்தப் பின் அவருக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் தான் தருவதாக சத்திய வாக்கு கொடுக்க, ஆஸ்தீக்கும் அந்த மன்னன் ஜனமேயான் உடனடியாக யாகத்தை நிறுத்துவதும் அல்லாமல், யாகத் தீயில் மரணம் அடைந்த பாம்புகளுக்கு உயிர் தருமாறும்  வேண்டுகோள் விடுத்தார். அதைக் கேட்டு திடுக்கிட்ட ஜனமேயன் அந்த வேண்டுகோளைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் தருவதாக ஆஸ்தீக்கிடம் எத்தனைக் கேட்டும் அதை ஏற்காத ஆஸ்தீக் 'இந்த பிரபஞ்சத்தில் பிரம்மனால் பலவிதமான உயிரினங்கள் சில காரணங்களுக்காக படைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அழிக்கும் உரிமை படைப்பவருக்கு மட்டுமே உண்டு. தனி மனித க்ரோதத்தின் அடிப்படையில் அந்த காரியத்தை செய்ய ஜனமேயனுக்கு எந்த உரிமையும் கிடையாது' என விளக்கிக் கூறிய ஆஸ்தீக், தனது வேண்டுகோளை மன்னன் ஏற்காததினால் கோபமுற்று எழுந்து செல்லத் துவங்கினார். வேறு வழி இன்றி அவர் கேட்ட வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனமேயன் யாகத்தையும் நிறுத்தி, அதில் விழுந்து மரணம் அடைந்து இருந்த பாம்புகளுக்கு
ம்  மீண்டும் உயிர்பிச்சை தரும் யாகத்தையும் செய்து அவற்றை உயிர் பிழைக்க வைத்தார். அதை போல தனது விஷேச  சக்தியை மீண்டும் நாக தக்ஷக் பயன்படுத்தி அகாலத்தில் உழன்று கொண்டு இருந்த பரிக்ஷித்தின் ஆத்மா சொர்கலோகம் செல்ல ஏற்பாடு செய்தார். பரிக்ஷித்தின் ஆத்மாவுக்கு எத்தனை காலம் உயிர் வாழ வேண்டும் என்ற விதி இருந்ததோ அதற்கு மேலாக அதன் உயிரை நீட்டிக்க முடியாது என்பதினால் இந்த ஏற்பாட்டை செய்தார்.

தன்னால் பாம்புகள் இனத்துக்கே பெரிய தீமை விளைந்து விட்டதே என்பதினால் மனம் வருந்திய நாக தக்ஷக் மனா அமைதி பெற சிவபெருமானை வேண்டி வருடத்துக்கு ஒரு கோடி நாம ஜெபம் என ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். அதைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமானும் நாகத்தின் முன் தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க நாக தக்ஷக்கும் ' தனக்கு இறவாமை வரம் வேண்டும் எனவும், அதன் காரணம் தனது உடலையே என்றும் சிவபெருமான் அவருடைய படுக்கையாக பயன்படுத்திக் கொண்டு தன மீது அமர்ந்து இருக்க வேண்டும்'  என்ற கோரிக்கை வைக்க அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமானும் அந்த வரத்தை நாக தக்ஷத்துக்கு அருளினார். அது மட்டும் அல்ல தான் நாகபஞ்சமி தினத்தன்று நாக தக்ஷத்துக்கு காட்சி தந்து வரம் தந்ததினால், அதே இடத்தில் ஓவ்வொரு நாக பஞ்சாமிக்கும் அந்த நாகம் தனக்கு கோடி நாம அர்ச்சனை செய்தால் அதை தான் மனதார ஏற்பேன் எனவும், தானும் பார்வதி தேவியும் அந்த நாகத்தின் மீது அமர்ந்து இருக்கும் அந்தக் காட்சியுடன் இருக்கும் அந்த நாகத்தின் பெயர் நாகசந்தரேஸ்வர் என்றாக இருக்கும் எனவும் கூறினார்.

இதனால்தான் நாக பஞ்சமி தினத்தன்று லட்ஷக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து நாக தக்ஷக்கின் மீது அமர்ந்துள்ள சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கிச் செல்கின்றார்கள். அன்று அங்கு சென்று நாகசந்தரேஸ்வரரை தரிசனம் செய்தால் அவர்களது குடும்பத்தில் உள்ள எந்த ஒருவருக்கும் எத்தனை சர்ப்ப தோஷம் இருந்தாலும் அத்தனையும் அப்போதே விலகி விடும் என்பதாக ஐதீகம் உள்ளது.

இந்த நாகசந்தரேஸ்வரர் ஆலயத்தில் காணப்படும் சிலை 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது எனக் கூறுகிறார்கள். நேபாளத்தை ஆண்டு வந்த மன்னர் ஒருவரே கடவுளின் ஆணைப்படி அதை மஹாகாளீஸ்வரர் ஆலயத்தின் மேல் மாடியில் கொண்டு வந்து ஸ்தாபித்ததாகவும் கூறுகின்றார்கள். இந்த உருவில் வடிவமைத்த சிலை- நாகத்தின் உடல் மீது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி அமர்ந்துள்ள காட்சி - உலகில் வேறு எங்குமே கிடையாது. ஒரு நாகத்தின் மீது படுத்த நிலையில் விஷ்ணு பகவான் மட்டுமே காணப்படுவார், ஆனால் இங்கோ சிவபெருமான் அதே காட்சியில் காணப்படுகின்றார் என்பது அதிசயம் ஆகும். தன் உடல் மீது அமர்ந்துள்ள சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தலைப்பு பகுதியின் மீது தனது பத்து தலைகளையும் குடை போல பிடித்த காட்சியில் நாக தக்ஷக் காணப்படுகின்றார்.

உஜ்ஜயினியை ஆண்ட போஜ ராஜன் எனும் மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான் நாகசந்தரேஸ்வரர் ஆலயத்தை நிறுவுமாறு கட்டளைகொடுத்ததாகவும், ஆகவே அந்த போஜ ராஜனே இந்த ஆலயத்தை 1050 AD காலகட்டத்தில் நிறுவியதாகவும், 1732 ஆம் ஆண்டு குவாலியரில் ஆட்சி செய்த ரானோஜி சிந்தியா எனும் மன்னரே சீரழிந்துக் கிடந்த மஹாகாளீஸ்வரர் ஆலயத்தை பின்னர் புனரமைத்ததாகவும் கூறுகின்றார்கள்.

அதை போலவே உலகில் இருந்த நாகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமது சந்ததியினரைக் காப்பாற்றிய நாக மன்னன் தக்ஷக்கிற்கு, அவர் எங்கு தங்கி இருந்து, எங்கு பகவான் தன்வந்ரியை சிறை வைத்து இருந்தாரோ அதே இடத்தில் ஒரு ஆலயம் அமைத்து வழிபாட்டு வந்தனவாம். அதுவே பிற்காலத்தில் மாண்டசூரில் தற்போது நாக தக்ஷக்கின் ஆலயம் உள்ள இடத்தில் நாகம் தக்ஷக் எனும் பெயரில் அமைந்த ஆலயமாயிற்றாம். உலகில் நாக தக்ஷக்கிற்கு உள்ள ஒரே ஆலயம் இது மட்டுமே என்கின்றார்கள். இந்த ஆலயத்தை உள்ளூர் மக்கள் 'தக்காஜி ஆலயம்' என்றும், 'தக்தேஸ்வரர் ஆலயம்' என்றும் கூறுகின்றார்கள். இந்த ஆலயத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் நாக தக்ஷேஸ்வரர் காட்சி தருகின்றார்.  தன்வந்தரி பகவான் சிறை வைக்கப்பட்ட அதே மரமே அதன் அருகில் உள்ள மரம் என்பதாகவும் கூறுகின்றார்கள். அந்த ஆலயத்தின் சில காட்சிகள் கீழே உள்ளவை: 

Nagachandreswar (E)

Nag Thakshak is one of the eight most important Serpents in the clan of Divine Serpents and has reference in epic Mahabharata. The other seven Divine Serpents are - Nanda also called Nagaraja, Upananda, Sagara, Vasuki, Manasa, Anantha also called Anavatapta and Utpalaka. Nag Thakshak reportedly ruled Thakshasila a new Kingdom which he created after the episode of burning of Khandava Forest by Janameya occurred. As per Shrimad Bhagavatam Nag Thakshak belonged to Ikshavaku dynasty and born as Serpent due to a curse he had inherited in his previous birth.

According to one of the folklores, Nag Thakshak stays in penance on the top story of the Mahakaleshwar temple in Ujjain which is opened only once in a year on Nag Panchami day to allow devotees offer prayers to Lord Shiva and Parvathi Devi seated on the coiled bed of Nag Thakshak in that room. It is believed that Nag Thakshak in the name of Nagchandreswar is present there in invisible form and perform one crore mantra Pooja throughout the day to Lord Shiva. On the day of every Nag Panchami, in the presence of celestials, Gods and others from Devaloga, Nag Thakshak performs Pooja to Lord Shiva and  Parvathi devi while on rest of the days divine Nag Thakshak remains seated in penance, chanting one crore japa which Lord Shiva and Parvathi  accept in silence. What is the story of how Nag Thakshak came and settled here? 

During the era of Mahabharata there lived a King by name Parikshit who was the son of Abimanyu who in turn was Arjuna's son. King Parikshit incurred a curse when in arrogance he threw a snake to awaken a meditating Rishi who did not open his eyes when the King who lost his way disconnected from his army  was roaming in the forest. Unable to control his thirst and hunger he tried to awaken the meditating Rishi seeking water and food. When the Rishi did not open the eyes, infuriated King caught hold of a dead snake and threw it on the Rishi. Angered by the insane act, the Rishi cursed the King that he would on the seventh day die of a snake bite. However when the King realized his folly and sought pardon from the Rishi, the curse was softened to the effect that if on the seventh day a snake bit King Parikshit and before the poison  spread on his body, if Lord Danvanthri could present himself on that spot and bless the King, then King Parikshit would not die.

King Parikshit wasted no time and sat in tapas praying to Lord Danvanthri to come and stay in his palace till 8th day when the effect of the curse would vanish. Lord Danvanthri an incarnation of Lord Vishnu is physician for the celestials in Devaloga and it is believed that whoever sincerely pray to him  seeking relief even from incurable diseases, they would be blessed accordingly. Responding to the sincere prayer of the King, Lord Danvanthri began to travel to the Palace of King Parikshit. When Nag Thakshak came to know of it, he was worried because he was destined to bite and end the life of the King and therefore decided to somehow prevent Lord Danvanthri from reaching the palace of King Parikshit.

When Lord Danvanthri reached somewhere near Mandsaur village in Madhya Pradesh he rested for a while under a tree where Nag Thakshak with his wife was waiting for the seventh day to enter the palace of King Parikshit to kill him. Realizing that it was the opportune time, Nag Thakshak with his divine power caused severe itching on the back of Lord Danvanthri. Simultaneously he also took the form of a small log of wood and fell from the tree near Lord Danvanthri. Unable to bear the brunt of the itching, Lord Danvanthri took the thin stick fell before him- Nag Thakshak in disguise as wooden log- and scratched his back. The moment the body of Lord Danvanthri was touched by Nag Thakshak in disguise as wooden log, again with his  extraordinary power  Nag Thakshak temporarily imprisoned Lord Danvanthri inside the tree and decided to release him after he accomplished his task of killing King Parikshit.

It was divine principle that whoever is assigned specific duty by the Trinities, they are also vested with special powers which can only be nullified after expiry of the time period for which the power will remain or the act can be reversed only by the one who used it or by any one of the Trinities.

Came the seventh day and there in the Palace, King Parikshit locked himself in a room tightly closed from all sides and none were allowed to enter inside. Not even a gap was left open. Even food was thoroughly checked and given through a small gap which was also sealed after food is given  so that no serpent could enter inside. Nag Thakshak took the form of a small ant and sat under the food carrier to enter into the room where King Parikshit was hiding. Once entered inside the room in the form of a small ant he regained his original form of Serpent and bit the King to death. After Nag Thakshak killed the King Parikshit, he escaped from there similarly, went back to Mandsaur village in Madhya Pradesh to stay with his family and released imprisoned Lord Danvanthri. He also sought pardon for his act and explained him the reason.

Death of his father by a snake angered Parikshit’s son Janameya who in vengeance began Naga Yagna in order to kill entire snakes in the universe. He began performing  Nag Yagna and burnt Khandava forest completely where hundreds and thousands of snakes resided.  As the Naga Yagna commenced and proceeded, many snakes in the universe were pulled into the yagna fire and burnt to death leaving only few more to die. Janameya decided to continue the Yagna till the entire clan of serpents were burnt to death.

Photo Courtesy:-
By Unknown - http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/bce_299_200/mahabharata/ganeshwrites/ganeshwrites.html, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=9754912

Next to die in Yagna fire was Nag Thakshak and his family who were getting slowly absorbed by the powers of mantras chanted in the yagna. Vasuki, one  other important Kings of snakes which remained alive till then was very much upset. In order to save the remaining serpents along with Nag Thakshak she sought the help of her sister’s son named Aasteek, who was also a great scholar in the Nag clan and requested him to ensure that the Yagna of Janameya did not succeed fully. Aasteek agreed to help and went to the Yagna site in disguise of a Brahmin priest and began chanting hymns in praise of the Yagna.

Unaware of who the priest was, Janameya felt relieved of his mental tension as he heard the melodious hymns which he had never heard before, and went near Aasteek, offered him respects, praised him severely for the wonderful recital which relieved his mental tension and promised to fulfill any wish that Aasteek may ask. Relaxed Aasteek requested for the stoppage of the Yagna and to bring back the burnt snakes to life again. Janameya was stunned as he never expected it and which if agreed would completely wreck his vow and therefore  requested Aasteek to seek fulfilment of any other wish other than the one he had asked, but Aasteek pointed out that the act of the Yagna was borne out of personal vengeance and was not meant for the benefit of the universe since the creatures of all types have been created by Lord Brahma for specific reasons and Janameya had no authority to banish  the creations without consent from the Lord of creation. Moreover Janameya was trying to shield the sinner Parikshit who insulted one of the greatest Rishies who was meditating for universal welfare. Janameya argued for some time justifying his action and tried to convince, but since Aasteek was firm in his demand and refused to accept any other offer from Janameya, he had no other option but to stop the Yagna, lest Janameya would have inherited curse of Aasteek in disguise of a Brahmin priest. Bowing to the demand of Aasteek, Janameya stopped the Yagna and brought back to life all those snakes which had so far burnt in the fire. Naga Thakshak thus got his life saved. After the burnt snakes got back their life, at the request of Janameya,  exercising his extraordinary power
Naga Thakshak sent the wandering soul of dead King Parikshit to heaven since he had no power to give back the life of the King who was destined to die as ordained by the creator in the manner he died.
Nag King Thakshak too felt sorry that he had to be an instrument to torment trouble for his clan by killing King Parikshit and therefore repenting his act he went to the present site near Mahakal Mandir in Ujjain, which was then a huge forest then, sat in penance for one thousand years chanting one crore japa every year and sought Lord Shiva’s grace. Pleased with the tapas when Lord Shiva appeared before Thakshak and sought to know of his wish, the Snake King requested that the Lord should grant him immortality and to accept him as his bed in the same place. Lord who appeared before Thakshak on Shivrathri day which was also the day of Nagapanchami, granted him his wish, further saying that henceforth Lord would remain there  along with his consort Parvathi devi and on every Nag Panchami accept the crore manthra Pooja offered by Nag Thakshak. Nag Thakshak was thereafter conferred the name of Nagachandreswar and believed to be present in the temple.

This is why on the day of Nagapanchami lakhs of devotees throng the temple and offer prayers seeking the grace of Lord Shiva and his consort Parvathi in the hope that the devaloga Pooja is being virtually done by the divine Nag Thakshak and offer of prayers on that day will relieve all sorts of Sarpa Dosha if any incurred by their ancestors or family members.

The amazing statue of Nagachandreswar belonging to 11th century was found by a King in Nepal and brought from there and enshrined above Mahakaleshwar temple which has three tier Gopura. In the universe only  in Ujjain 
Nagachandreswar temple  Lord Shiva and his consort Parvathi devi are seen seated on the coiled body of divine Nag Thakshak whose ten hoods rest as shade above their head. Only other Lord Vishnu rests on the coiled body of divine Nag Adi Shesha another clan of serpent Gods. This is a rarest of rare scene one witness here.

It is generally believed by historians that King Parmar (folklore refers the king as Bhoj Raja) in whose dream the Lord appeared and directed him to build the temple enshrining the statue of Nagachandreswar, might have built this temple in around 1050 AD and sometime in 1732 King of Gwalior Shri Ranoji Scindia renovated the then damaged shrine. Therefore the gates of Nagachandreswar Temple are opened only on Nagapanchami.

The surviving serpents in the universe built a small temple in honour of Nag Thakshak in the very same place near Mandsaur in Madhya Pradesh where Nag Thakshak was staying with his wife before proceeding to kill the King Parikshit and imprisoned Lord Danvanthri. It was later built into a temple on earth for Nag Thakshak by the locals. This is the only temple in the universe that exist for divine snake Nag Thakshak. The temple is in the village called ‘Dasnaval’ near Khandwa in Madhya Pradesh. Locals call the name of the temple as ‘Thakaji Mandir’ or ‘Thaksheshwar Mandir’ which has the statue of Nag Thakshak along with his wife and son. The tree where Lord Danvanthri was reportedly imprisoned is also seen there.The photos from temple site:-

Wednesday, July 12, 2017

Munneeswaram Temple (T)

{மேலே உள்ள சிவலிங்கம் போர்துகீசியரால் 1595 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஆலய இடிபாடுகளின் இடையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு வெளிசுவற்றில் 1900 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதையும், ஆலய இடிபாடுகளையும் ஆராய்ந்து பார்த்ததில் 1505 ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரே இந்த ஆலயம் இருந்துள்ளது என்பதை உறுதிபடுத்துகின்றது. 
Photo Courtesy:- By flickr Ed – http://www.flickr.com/photos/plonker/3864975820/, CC BY-SA 2.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=8715666}
 

இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரு காலத்தில் ஒரே பகுதியாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீலங்காவிலும் பல புகழ் பெற்ற சைவ ஆலயங்கள் இருந்துள்ளன. ஒரு விதத்தில் ஸ்ரீலங்காவை சைவ பூமி என்று கூறினாலும் கூட சரியாகவே இருக்கும். அதற்குக் காரணம் சக்தி வாய்ந்த பல சிவாலயங்களும், முருகன் ஆலயங்களும் அந்த நாட்டில் உண்டு. ஸ்ரீலங்காவில் உள்ள புகழ் மிக்க பல ஆலயங்கள் ராமாயணக் காலத்துடன் சம்மந்தப்பட்ட இடமாகும். ஸ்ரீலங்காவை ஆண்ட சிவபக்தனான ராவணன் பல சிவாலயங்களில் சென்று வணங்கி பூஜித்து உள்ளார்  என்பதினால் அங்கு சிவாலயங்கள் பெருமளவில் இருந்துள்ளன என்பதாக  நாடோடி நம்பிக்கைக் கதைகள் உண்டு. இலங்கையில் ஐந்து மகிமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. அவற்றை 'பஞ்ச ஈஸ்வரங்கள்' என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஐந்து சிவ ஆலயங்கள் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் மற்றும் தொண்டீஸ்வரம் என்று கூறப்படுகின்றது.

போர்த்துகீசியர் ஸ்ரீலங்கா மீது படையெடுத்து அதை ஆக்ரமித்துக் கொண்டபோது அங்கிருந்த ஆலயங்களை உடைத்து, அழித்து நாசம் செய்தபின் அந்த ஆலயங்களில் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றார்கள். வரலாற்று முக்கியமும், சரித்திர முக்கியத்துவமும் வாய்ந்த, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு இருந்த ஆலயங்களையும் விட்டு வைக்காமல் அவற்றை சரி செய்யவே முடியாத வகையில் அழித்து விட்டுச் சென்றார்கள். முன்னேஸ்வரம் ஆலயத்தையும் அவர்கள் இரண்டு முறை இடித்துவிட்டு அதை கிருஸ்துவ தேவாலயங்கள் நிறுவ கொடுத்தார்கள். அதை  ஒரு கிருஸ்துவ தொழுகை நடத்தும் இடமாக்கினார்கள் என்றாலும், பின்னர் கிருஸ்துவ  தேவாலயத்தை ஹிந்து சமயத்தினர் இடித்து விட்டு மீண்டும் ஆலயத்தை சீரமைத்தார்கள். 

போர்துகீசியரைத் தொடர்ந்து ஸ்ரீலங்காவைக் கைப்பற்றிய பறங்கியர் எனும் ஐரோப்பியர்களும் (டட்ச்) பல இந்து ஆலயங்களை குறிவைத்து இடித்து அழித்தார்கள். ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டன, ஆலயங்களின் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ஆகவே எப்போது எல்லாம் வெளிநாட்டினரின் ஆதிக்கம் துவங்கியதோ அப்போதெல்லாம் உள்ளூர் பக்தர்கள் விரைவாக செயல்பட்டு பல ஆலயங்களில் இருந்த மூல விக்ரகங்களையும் சிலைகளையும் எடுத்து அங்காங்கே காடுகளிலும், குளங்களிலும் ஆலய கிணறுகளிலும் மறைத்து வைத்து விட்டார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபோது பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல ஆலய விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு அதே ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூற்றின்படி ஸ்ரீலங்கா ஒரு காலத்தில் மிகப் பெரிய பூமியாக இருந்தது என்றும், ஆனால் காலப்போக்கில் அங்கு ஏற்பட்ட மூன்று கடல் கொந்தளிப்பில் தற்போது உள்ள இலங்கையின் அளவை விட இரண்டில் மூன்று மடங்கு அளவிலான பூமி நீரில் மூழ்கி அழிந்து விட்டதாகக் கூறுகிறார்கள்.  அழிந்து விட்ட அந்த பெரும் பகுதிகளே ராவணன் ஆண்டு வந்த இலங்கை என்றும், அவன் ராஜ்யத்திற்குப் போகும் முன்னால் தற்போது கடலில் முழுகிவிட்டதாக கூறப்படும் பகுதிகள் வழியேதான் செல்ல வேண்டி இருந்ததாகவும், இந்தப் பகுதிகளில் நிறைய ஆலயங்கள் முக்கியமாக பஞ்ச சிவாலயங்கள் இருந்துள்ளது என்றும் நம்புகின்றார்கள். ஆனால் அந்த ஐந்து ஆலயங்களும் 
இயற்கையின் சீற்றத்தில் இருந்து தப்பி கடலுக்குள் மூழ்கி அழியாமல் இருந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அந்த கால கட்டத்தில் சீதையை கடத்திக் கொண்டு ராவணன் இலங்கைக்குச் சென்றதும் அங்கு சென்று ராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டு  வந்த ராமபிரான் அந்த வெற்றி கிடைக்க அருள் புரிந்த சிவபெருமானுக்கு நன்றி கூற  முன்னேஸ்வரம் ஆலயத்திலும் வந்து வழிபட்டதாக காலம் காலமாக நம்பப்பட்டு வரும் கதையும் இந்த நாட்டில் உள்ளது. யுத்தத்திற்கு செல்லும் முன்னர் ஆலயத்தில் வந்து சிவபெருமானை பூஜித்த ராமபிரானுக்கு யுத்தத்தில் வெற்றி பெற சிவபெருமான் அருள் புரிந்தார் என்பதினால் சிவபெருமானுக்கு தனது நன்றியை செலுத்த யுத்தம் முடிந்த பின் ராமபிரான்  அங்கு மீண்டும் வந்து பூஜை செய்தார் என உள்ளூர் நம்பிக்கை உள்ளது. ராவணன் சிவ பக்தன் என்பதினால் இலங்கையில் உள்ள மகிமை வாய்ந்த ஐந்து சிவாலயங்களும் அவரால் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 
 
இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சவக்கச்சேரி எனும் இடத்தில் உள்ள முன்னேஸ்வரம் ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் என்று கூறப்பட்டாலும், கர்ண பரம்பரைக் கதைகளை நோக்கும் போதும், ராமாயண காலத்துடன் இணைத்துப் பேசப்பட்டதில் இருந்தும் இந்த ஆலயம் எழுந்த காலத்தைக் கணக்கிட்டுக் கூற முடியாது என்று கூறுவதே உண்மையாக இருக்கும். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருந்த உள்நாட்டு யுத்தத்தினால் ஆலயம் சற்றே சேதம் அடைந்து இருந்தாலும், அந்த சேதங்கள் ஆலய கட்டிடங்களுக்கு ஏற்பட்டதே அன்றி அந்த ஆலயத்தின் மகத்துவத்திற்கோ அல்லது மகிமைக்கோ அல்ல. அந்த ஆலயம் மகத்தானது. சக்தி வாய்ந்த சுயம்பு லிங்கம் தோன்றிய ஆலயம் ஆகும். போர்த்துகீசியர்கள்  மற்றும் டட்ச் (பறங்கியர் எனப்பட்டவர்கள்) நாட்டவர்கள் ஸ்ரீலங்காவில் நாசப்படுத்தி இருந்த பல இந்து ஆலயங்கள்  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டன.

இந்த ஆலய மகிமையை குறித்து முதன் முதலில் நைமிசாரண்யா வனத்தில் அமர்ந்து கொண்டு இருந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பல்வேறு புராண மகிமைகளைக் கூறி வந்திருந்த ஸூதக  முனிவரே  கூறியதாக நம்புகின்றார்கள். 
ஸூதக முனிவர் கூறிய விரிவானக் கதையை நான் சுருக்கி எழுதி உள்ளேன். காரணம் ஸூதக முனிவர் ராமாயணத்தை விரிவாக எடுத்து உரைத்தார். ராமாயணத்தைப் பலரும் படித்ததுதான். ஆகவே அவர் கூறிய ராமாயணக் கதையை மீண்டும் விவரமாக எழுதாமல் சுருக்கமாக விளக்கி விட்டு அவர் கூறிய சிவாலயத்தின் மையக் கதையை மட்டும் எழுதுகிறேன். ஸூதகர் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நைமிசாரண்யத்தில் கூறிய முன்னேஸ்வரம் ஆலயக் கதை இது.   ஸூதகர்  கூறினார்:
 
''இந்த ஆலயம் ராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும். சீதையை ராவணன் கடத்திச் சென்றதும் ராமபிரான் அவளைத் தேடி அலைந்தார். அவருக்கு பலரும் உதவினார்கள். அதில் ஜடாயு உயிர் இழந்தார். சீதையைக் கண்டு பிடிக்க ஹனுமார் உதவினார். சுக்ரீவன் தனது படையினருடன் ராமபிரானுக்கு உதவினார். அதில் சுக்ரீவருடைய சகோதரரும் பலசாலியான வாலியும் மடிய நேர்ந்தது. அவர்கள் அனைவரின் உதவியினாலும் இலங்கை மீது படையெடுத்த ராமபிரான் ராவணனையும் அவர் கூட்டத்தினரையும் கொன்று சீதையை மீட்டு வந்தார். இப்படியாக பலரையும், முக்கியமாக சிவபக்தரும், பெரிய பண்டிதரான ராவணனைக் கொன்றதில் அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

ஆகவே பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து  கொள்ள ராமபிரான் பல ஆலயங்களுக்கும் சென்று சிவபெருமானை துதித்து வழிபட வேண்டி இருந்தது. மேலும் யுத்தத்திற்கு செல்லும் முன்னால் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்பிய ராமபிரான் இலங்கைக்கு வந்து முன்னேஸ்வர ஆலயம் இருந்த இடத்தில் சிவபெருமானை வணங்கித் துதித்து அவரது அருளையும் ஆசியையும் வேண்டினார். முன்னேஸ்வரம் ஆலயம் அப்போது கட்டப்பட்டு இருந்திருக்கவில்லை. வெட்டவெளியில் அந்த இடத்தில் சிறிய சிவலிங்கம் இருந்தது.  ராமபிரான் பகவான் விஷ்ணுவின் ஒரு அவதாரம், அவர் அந்த அவதாரத்தை எடுத்து பூமியிலே சில காரியங்களை செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது  என்பதினால் ராமபிரான் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவருக்கு அங்கே காட்சி தந்து  ராவணனுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு பல வகைகளிலும் சக்தி கொடுத்து அருள் புரிந்தார்.

சிவபெருமான் கொடுத்த அருளினால் மன அமைதி பெற்ற ராமபிரானும் யுத்தம் செய்து சீதையை மீட்டுக் கொண்டு ஊருக்கு திரும்பும் வழியில் இருந்த பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டுக் கொண்டே மீண்டும் முன்னர் அவர் வணங்கிய முன்னீஸ்வர ஆலய இடத்தையும் வந்தடைந்தார். அங்கு அவர் பூஜித்து விட்டுச் சென்ற சிவலிங்கத்தைக் காணவில்லை என்றாலும் ராமபிரான் முன்னேஸ்வரம் ஆலயம் இருந்த பூமிக்கு வந்த உடனேயே பிரும்மஹத்தி தோஷத்தின் ஒரு பகுதி மறைந்து விட்டதை உணர்ந்து அதிசயித்தார்.  என்னே சிவபெருமானின் மகிமை என வியந்தார். ஆகவே எந்த இடத்தில் அவர் முன்னர் பூஜித்துவிட்டு சிவபெருமானின் அருளை பெற்றுக் கொண்டு சென்றாரோ, அதே இடத்தில் மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவபெருமானை பூஜித்து வணங்கினார். அவர் முன் காட்சி தந்த சிவபெருமானும் ராமபிரானின் பிரும்மஹத்தி தோஷத்தின் ஒரு பகுதியே அங்கு விலகி உள்ளதாகவும், மீதம் உள்ள தோஷத்தைக் களைந்து கொள்ள ராமபிரான் நான்கு திசைகளிலும் சிவலிங்கங்களை ஸ்தாபித்து தன்னை வழிபட வேண்டும் என்றும், அப்போதுதான் பிரும்மஹத்தி தோஷத்தின் பாபம் முழுமையாக விலகும் என்றும் கூறினார். அதன் காரணம் என்ன என்றால் ராவணனுடன் ராமபிரான் யுத்தம் செய்தபோது ராமபிரானை நான்கு புறமும் ராவணனின் சேனைகள் சூழ்ந்து கொண்டு தாக்கியவண்ணம் இருந்தது. ஆகவே ராமபிரான் நான்கு திசைகளிலும் இருந்தவர்கள் மீது அம்பெய்து பலரையும் கொன்றார் என்பதினால் நான்குபுறங்களிலும் ஏற்பட்டு இருந்த பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள நான்கு திசைகளிலும் சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவபெருமானை வணங்கி துதிக்க வேண்டி இருந்தது. அப்படி செய்யாவிடில் எந்த திசையில் அவர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடவில்லையோ அந்த திசையிலான தோஷம் அவரை விட்டு விலகாது என்பது விதியாக இருந்தது.

அதை ஏற்றுக் கொண்டு நான்கு திசைகளிலும் சிவலிங்கங்களை ஸ்தாபனம்  செய்தபின்  முன்னீஸ்வரத்தை வந்தடைந்த ராமபிரான் அங்கேயே மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை மீண்டும் ஸ்தாபித்து சிவபெருமானை பூஜித்து வணங்கினார். அவர் முன் தோன்றிய சிவபெருமானும் ராமபிரானை மீண்டும் ஆசிர்வதித்து விட்டு மறைந்தார். ராமபிரான் மண்ணினால் ஸ்தாபனம் செய்த சிவலிங்கம் இருந்த அந்த இடத்தில் பல காலத்துக்கு முன்னரே சிவபெருமான் ஒரு சிவலிங்க உருவில் எழுந்தருளி இருந்தார். அது ராமர் முன்னர் பூஜை செய்த இடத்தின் அடியில் புதைந்து கிடந்தது.  யுத்தத்திற்கு போகும் முன் அங்கிருந்த ஸ்வயம்பு சிவலிங்கத்திற்கு ராமபிரான் தன்னை அறியாமலேயே பூஜை செய்தபோது அந்த சிவலிங்கத்தில் இருந்து சிபவபெருமான் வெளிவந்து ராமருக்கு காட்சி கொடுத்ததினால் அந்த சிவலிங்கம் ஜீவன் பெற்ற லிங்கமாயிற்று. இந்த ஆலயத்தில் வடிவாம்பிகை சமேதராக முன்னேஸ்வர ஈசன் எழுந்தருளி பக்தர்களை ஆசிர்வதிக்கின்றாள்.

ரிஷி முனிவர்கள் ஆர்வத்துடன்
ஸூதக முனிவர் கூறிய கதையை கேட்டவாறு அமர்ந்து இருந்தார்கள். ஸூதகர் தொடர்ந்து கூறும் முன் ஆர்வத்தினால் சில முனிவர்கள் அவரிடம் கேட்டார்கள். '' ஸ்வாமி அவள் (வடிவாம்பிகை) எப்படி இங்கு எழுந்தருளினார் என்ற கதையையும் எமக்கு விளக்கிக் கூற வேண்டும் " சூதகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக சிரித்துக் கொண்டே கதையைத் தொடரத் துவங்கினார்.

''கல்ப காலத்தில் இந்த ஆலயம் உள்ள தலத்தில் செம்படவன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் தினமும் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பெரிய ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு வந்து அதை விற்று ஜீவனம் செய்து வந்தான். இப்படியாக வாழ்வை ஓட்டிக் கொண்டு இருந்த செம்படவன் ஒருநாள் மீன் பிடிக்கச் சென்றபோது சற்று தொலைவில் ஆற்றின் கரையில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்டான். அவர்கள் உடலே பளபளத்தது. அந்த இரண்டு சிறுவர்களுமே அழகாக இருந்தார்கள். இத்தனை ஏழ்மை நிலையில் உள்ள இந்த ஊர் மக்கள் மத்தியில் இப்படி அழகான சிறுவர்களா? நமக்குத் தெரிந்த வகையில் அப்படி எந்த சிறுவர்களும் இந்த ஊரில் உள்ளதாகத் தெரியவில்லையே, அவர்கள் யாராக இருக்கும் என எண்ணியவாறு அவர்கள் யார் என்பதைக் கேட்ட அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவன் அவர்கள் அருகில் வருவதைக் கண்ட சிறுவர்களோ அவன் எதிரிலேயே மாயமாக மறைந்து விட்டார்கள். செம்படவன் குழம்பினான். தான் கண்டது கனவா, கானல் நீரைப் போன்றதா? உண்மை என்றால் அவர்கள் எப்படி மறைந்து விட்டார்கள்?! ஒரு வேளை  பேய், பிசாசு ஏதாவது இருக்குமோ?!! அவனுக்கு விடைக் கிடைக்கவில்லை. குழப்பத்துடன் வீட்டிற்குச் சென்றவன் தன் மனைவியிடமும் நடந்தவற்றைக் கூறினான்.
மறுநாள் நடந்த சம்பவத்தை மறந்து விட்டு மீண்டும் அவன் மீன் பிடிக்கச் சென்ற போது முதல் தினம் நடந்த அதே நிகழ்ச்சி தொடர்ந்தது. அவர்களின் அருகில் அவன் சென்றால் அவர்கள் மறைந்து விடுவார்கள். இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் அதே விளையாட்டு தொடர்ந்ததினால் இனி அவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என ஆவலுற்றான். அவர்கள் ஏன் தன்னைக் கண்டு ஓடி ஒளிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களை ஏதாவது உபாயம் செய்தே பிடிக்க வேண்டும் என எண்ணியவன் ஒரு நாள் அவர்களைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன் ஒரு மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்தான். இரவு நேரம் நெருங்கியது. வெகு நேரம் பொறுத்து அந்த சிறுவர்களும் அங்கு விளையாட வந்தார்கள் மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த செம்படவன் ஓடிப் போய் அவர்களைப் பிடித்து விட்டான். அந்த சிறுவனோ அவனைத் தள்ளி விட்டு தப்பி ஓடி ஆற்று நீரில் குதித்துவிட்டு மறைந்தும் போய் விட்டான். ஆனால் அதிசயமாக செம்படவன் கையில் சிக்கிக் கொண்ட சிறுமியோ அடுத்த நிமிடமே ஒரு சிலையாகி விட்டாள்.

அந்த சிலையை எடுத்துக் கொண்டு வீடு சென்றான். மறுநாள் அது குறித்து யாரையாவது கேட்கலாம் என எண்ணி இருந்தான். அன்று இரவில் தூங்கிக் கொண்டு இருந்தவன் கனவில் தோன்றிய பார்வதி தேவி தானே அந்தப் பெண் சிலை என்றும் தன்னை வணங்கி வழிபட்டால் நாட்டில் நிலவி வரும் குழப்பங்கள் தீரும் என்றும் கூறினாள் .

அதைக் கண்டு அதிர்ந்து போன செம்படவனும் காலையில் எழுந்ததும் ஊருக்குள் சென்று அந்த நிகழ்ச்சியை அனைவரிடமும் கூறினான். அந்த சிலையை எங்கு வைப்பது எனக் குழம்பினான். கட்டுத் தீயைப் போலப் பரவிய அந்த செய்தி மன்னனின் காதிலும் சென்று விழுந்தது. ஏற்க்கனவே பல பிரச்சனைகள் இருந்த குழப்பமான நிலையில் இது என்ன புதிய குழப்பம் என எண்ணிய மன்னன் செம்படவனை அந்த சிலையை எடுத்துக் கொண்டு தனது அரண்மனைக்கு வருமாறு ஆணையிட்டான்.

ஸூதகர் கதையைத் தொடர்ந்து கூறினார் ''அரண்மனைக்கு வந்த செம்படவன் கூறியதைக் கேட்ட மன்னனால் அதை நம்பவே முடியவில்லை. இப்படியும் இருக்குமா என வியப்பு அடைந்தான். ஆகவே செம்படவன் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை சோதனை செய்து பார்க்க விரும்பியவன் அந்த சிலையை அரண்மனைக்கு எடுத்து வரச் சொல்லி அதை அங்கேயே வைத்து விட்டுச் செல்லுமாறும் நான்கு நாட்கள் பொறுத்து அதை எடுத்துச் செல்லுமாறும் ஆணையிட்டார்.

பின்னர் இரண்டே நாளில் அதைப் போலவே நூறு சிலைகளை செய்யச் சொல்லி அதன் இடையே அந்த உண்மையான சிலையையும் வைத்து செம்படவனை அழைத்து அதில் அவனுக்கு கிடைத்த உண்மையான சிலை எது என்பதைக் கண்டு பிடித்து கூறுமாறு ஆணையிட்டான். அப்படி செம்படவன் உண்மையான சிலையைக் கண்டு பிடித்து விட்டால் மட்டுமே அவனை தான் நம்புவேன் என்றும், இல்லை என்றால் தெய்வீகத்தை கொச்சைப்படுத்துவதைப் போல பொய்யை கூறி வதந்தியைப் பரப்பியவனை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்து விடுவேன் என்றும் அறிவித்தான்.

மறுநாள் அந்த செம்படவன் அரண்மனைக்குச் சென்று எது உண்மையான சிலை என்பதைக் கண்டு பிடித்துக் காட்ட வேண்டும். இல்லை என்றால் சிறைவாசம் நிச்சயம் என்ற நிலை. பயத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தவன் கனவில் மீண்டும் தேவி பிரசன்னமாகி அவனை தைரியப்படுத்தினாள். அவன் அரண்மனைக்குச் சென்று சிலைகளைப் பார்க்கும்போது அந்த சிலைகளில் எந்த சிலையின் வலது கால் அசையுமோ அதுவே உண்மையான தன் சிலை என்று கூறினாள்.

மறுநாள் அரண்மனையில் சபை கூடியது. நிறைய மக்கள் அங்கு வந்து கூடி இருந்தார்கள். அந்த சிலைகளில் உண்மையான சிலை எது என்பதை எளிதில் கண்டு பிடிக்க இயலாத அளவு அனைத்து சிலைகளுமே ஒன்று போலவே இருந்தன. செம்படவனும் வந்து அந்த சிலைகளை பார்த்தான். மனதார தேவியை வணங்கினான். சிலைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் ஒரு சிலையின் வலது கால் ஆடியது. ஓடிச் சென்று அதை எடுத்தவன் அதுவே தனக்குக் கிடைத்த சிலை என்று மன்னனிடம் காட்டினான். அதன் அடியில் மன்னன் ஒரு அடையாளக் குறி செய்து வைத்து இருந்ததினால் அவன் கண்டு பிடித்ததே சரியான சிலை என்பதை உணர்ந்த அனைவரும் பிரமித்தார்கள். மன்னன் மீண்டும் மீண்டும் பல முறை சிலைகளை ஒன்றாக்கி வைத்து விட்டு உண்மையான சிலையை அடையாளம் காட்டுமாறு கூறினாலும் ஒவ்வொரு முறையும் தனது வலது காலை அவன் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு காட்டிய தேவியின் திருவிளையாடலினால் எத்தனை முறை மாற்றி மாற்றி வைத்தாலும் செம்படவன் அந்த உண்மையான சிலையை கண்டு பிடித்து எடுத்தான்.

அதைக் கண்டு மகிழ்ந்து போன மன்னனும் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்க முடிவு செய்து அதை அரண்மனையிலேயே வைத்துக் கொண்டு அந்த செம்படவனுக்கு நிறைய பொருள் கொடுத்து அனுப்பினான். அடுத்து ராஜ குருக்களின் ஆலோசனைப்படி நல்ல நாளும், நேரமும் பார்த்து அந்த சிலையை புனித சடங்கு செய்து பூஜித்து ராஜ உபசாரத்துடன் தற்போது இந்த ஆலயம் உள்ள இடத்தில் சென்று அங்கிருந்த லிங்கேஸ்வரருடன் சேர்த்து பிரதிஷ்டை செய்தார். இன்றும் கர்பக்கிரகத்தில் உள்ள தேவியின் சிலை செம்படவனுக்குக் கிடைத்த அதே சிலை என்கிறார்கள்.

இப்படியாக அந்த  ஆலயத்தின் ஈசனின் பெயர் முன்னைனாதப் பெருமான் எனவும் அவருடன் உள்ள தேவிக்குப் பெயர் வடிவாம்பிகா தேவி என்ற பெயரும் வந்தது. சிவபெருமான் ஏற்கனவே அதே  பூமியில் சிவலிங்க உருவில் பூமிக்கு அடியில் மறைந்து இருந்தபோது தன்னை அறியாமலேயே ராமபிரானும் சிவபெருமானுக்கு அங்கு பூஜை செய்திருந்தார் என்பதினால் இது இராமாயண காலத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும்.  அதை போலவே ராமாயணத்தை  எழுதிய வியாச முனிவரும்
அங்குள்ள ஆலயத்தில் வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்து வணங்கி உள்ளார். பித்ருக்களுக்கு அங்கு நேர்த்திக் கடன்களை செய்தால் அவை நிச்சயம் நிறைவேறும். பாப விமோசனமும் செய்து கொள்ளலாம். நல வாழ்வு பெறவும், அடுத்தப் பிறவியில் நல்ல பிறவி கிடைக்கவும் அங்குள்ள ஈசனை வணங்கினால் போதும்.  நிச்சயம் அது கிடைக்கும்'' என்று மாமுனிவரான ஸூதகர் கூறி முடித்ததும் அனைத்து முனிவர்களும் கலைந்து சென்றார்கள்.

ஒருகாலத்தில் ஸ்ரீலங்காவை அரசாண்ட விஜயன் என்பவர் சீரழிந்த அந்த ஆலயத்தை சீரமைத்தார். 17 ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்த வைஷ்ணவ பிரிவை சார்ந்த ராஜ சின்ஹம் எனும் அரசர் ஆலய சீரமைப்பிற்கு உதவ தனது நாட்டில் இருந்து சிற்பிகளை அனுப்பி வைத்தார். தக்ஷிண கைலாயம் எனும் நூலில் இந்த ஆலயம் குறித்த மேன்மை விளக்கப்பட்டு உள்ளது என பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஆலயத்தில் மூன்று பிராகாரங்கள் உள்ளன. அவை- உள் வீதி, ராஜ வீதி மற்றும் மாட வீதி எனும் பெயரில் அமைந்து உள்ளன. கொலம்போவில் (Colombo) இருந்து 82 கல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

இந்துக்களை பொறுத்தவரை முன்னீஸ்வரம் ஆலயம் சிவபெருமானின் ஆலயம் என்பதாகும். ஆனால் அங்குள்ள சிங்கள புத்த மதத்தினரோ அந்த ஆலயம் காளி தேவியின் ஆலயம் என்பதாக கூறுகின்றார்கள். ஒருகாலத்தில் இலங்கையில் இருந்த பட்டினி எனும் பெண் தேவதை, காளிதேவியை சந்தித்து, மனிதர்களை உண்ணும் பழக்கத்தை விட்டு விடுமாறு வேண்டிக் கொள்ள காளி  தேவியும் மனிதர்களை உண்பதை நிறுத்திவிட்டு முன்னீஸ்வரம் ஆலயத்தில் வந்து குடியேறியதான கிராமியக் கதை ஒன்றைக் கூறுகின்றார்கள். 


இந்த ஆலயத்தை குளக்கோட்டன் எனும் மன்னனும், ராஜ சின்ஹம் எனும் மன்னனும் சீரமைத்ததாகவும் சிலர் நம்பிக்கை கொண்டு உள்ளார்கள். அவர்கள் இருவரும் தோல் சம்மந்தப்பட்ட நோயினால் அவதிப்பட்டபோது இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்ட பின் ஆலயக் குளத்தில் குளித்ததும் அவர்கள் தோல் வியாதி விலகியதினால் அவர்கள் அந்த நன்றிக்கு கடனை செலுத்த ஆலய சீரமைப்புக்கு உதவினார்கள் என்ற கிராமியக் கதையும் உள்ளது. ஆனால் எதற்குமே எழுதி வைக்கப்பட்டு உள்ள வரலாற்று செய்திகள் இல்லை, வாய் மொழி வார்த்தைகள் மூலமே அனைத்தும் கூறப்பட்டு வருகின்றது என்பதினால் ஆலய வரலாற்றைப் பற்றி எழுதப்பட்டு உள்ள சிங்கள மற்றும் தமிழ் பக்தர்களின் கருத்துக்கள் முரண்பட்டு உள்ளன.