Tuesday, December 28, 2010

Patti Ponnandaal sonna kuttik kathaigal - Part- 2

சாந்திப்பிரியா 

சூரிய பகவானை நமது வலது நேத்திரம் (கண்) இன்று கூறுவார்கள். அதைப் போலவே போல சந்திர பகவான் நமது இடது நேத்திரமாம். சூரிய பகவானின் சக்தி அபாரமானது. தினமும் எவன் ஒருவன் சூரியனைப் பார்க்காமல் உணவு அருந்துகிரானோ அந்த உணவு சாணியில் உள்ள புழுவிற்கு சமம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது சாணியே  ஒரு கழிவுப் பொருள், அதை சாப்பிடும்  பூச்சிகளை பற்றிக்  கூற வேண்டுமா?  அதனால்தான் அத்தனை கேவலமான பிறவி என்பதைக் கூற சாஸ்திரத்தில் அப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது.  சூரியனை ஆராதித்தால்  ஆரோக்கியம் மட்டும் அல்ல ஞானமும் ஐஸ்வர்யமும்  , நன்மைகளும் கூடும் என்பதே உண்மை. அதற்கு உதாரணமே இந்தக் கதைகள் .
வைசம்பாயனர் என்பவர் ஒரு முனிவர். அவருடைய சிஷ்யரே யாக்கியவால்யகர்.  ஒரு முறை  வைசம்பாயனர் நதியில் குளித்துவிட்டு வந்தபோது கால் தவறி அங்கு அமர்ந்து இருந்த சிறுவன் மீது மோதி விட்டார் . அவர் மோதிய அந்த அதிர்ச்சியில் அந்த சிறுவனும் மடிந்து விட்டான். ஆகவே அவருக்கு பிருமஹத்தி தோஷம் ஒட்டிக் கொண்டுவிட அதைக் கண்ட  யாக்கியவால்யகர் தனது குருவிடம் அந்த பாவத்தை தன்னால் போக்க முடியும் எனக்  கூறி அதை செய்ய அவரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அகம்பாவத்தில் இருந்த வைசம்பாயனர் தன்னை விட தனது சிஷ்யன் பெரிய ஆளாக தன்னை  காட்டிக் கொள்ள விரும்புகின்றார் என்று அவரைப் பற்றி தவறாக புரிந்து  கொண்டு கோபம் கொண்டார். அந்த நாள் வரை தான் கற்றுத் தந்து இருந்த அனைத்து வேத பாடங்களையும் அங்கேயே கக்கிவிட்டு தன்னை விட்டு விலகிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளை இட்டார்.
அதைக் கேட்ட யாக்கியவால்யகர் மனம் வருந்தினாலும், குருவின் ஆணைப்படி அவரிடம் பயின்ற  அனைத்து கல்வியையும் அங்கேயே கக்கி விட்டுச் சென்று ஒரு மலை அடிவாரத்தில் அமர்ந்துகொண்டு சூரியனை ஆராதனை செய்தார். பல வருடங்கள் அவர் செய்த ஆராதனையை  ஏற்றுக் கொண்டு சூரிய பகவானும் அவருக்கு கரை கண்ட வேத சாஸ்திர ஞானத்தைக் கொடுத்தார். அதன் பின் யாக்கியவால்யகர் அவரை எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு பெறும் பாண்டித்தியம் பெற்ற  முனிவராக மாறினார்.
இன்னொரு கதையும் மகாபாரதத்தில் உண்டு. மகாபாரத நிகழ்ச்சிகள்  நடந்து கொண்டு இருந்த வேளை. பாண்டவ சகோதரர்கள் வனவாசம் செய்ய காட்டுக்குள் வந்து விட்டார்கள். அவர்களில் ஒருவனான பீமனின் பசிக்கு எங்கிருந்து உணவை பெறுவது  என அனைவருக்கும் கவலை வந்து விட்டது. அப்போது அவர்கள் கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்று சூரிய பகவானை தியானம் செய்தார்கள். அதைக் கண்டு மகிழ்ந்து போன சூரிய பகவானும் அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு அட்சய பாத்திரம்  ஒன்றை தந்துவிட்டுச் சென்றாராம். அதுவே துரியோதனனால்  ஏவப்பட்ட துர்வாச முனிவரின் வஞ்சக நோக்கத்தையும் முறியடிக்க உதவியாக இருந்தது .

Ponnaandaal patti sonna kuttik kathaigal - 1


சாந்திப்பிரியா 

அன்று  கிருஷ்ணபட்ச  பஞ்சமி . சிவ கைலாயத்தில் அம்மையும் அப்பனும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு விளையாட்டு ஆசை ஏற்பட்டது.  'தினமும் நாம்  அனைவருக்கும்  உணவு தருகின்றோம். ஒரு நாள் கொடுக்காவிடில் என்ன ஆகும். அவை  இன்று பட்டினியால்  கிடக்கட்டும் . நாளை பார்ப்போம்'  என எண்ணியவள் தனது அருகில் சென்று கொண்டு இருந்த சிறிய கருப்பு நிறத்தில் இருந்த எறும்புகளை பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டாள்.   மறுநாள்  அதைத் திறந்து பார்த்தாள். அவை அனைத்தும் அப்போதும் உயிருடன் இருந்தன. அதை விட ஆச்சர்யமாக எல்லாவற்றின் வாயிலும் சிறிது வெள்ளையாக உணவு ஒட்டிக் கொண்டு இருந்தது.   பார்வதிக்கு  ஒரே குழப்பம். அவைகளுக்கு எங்கிருந்து உணவு கிடைத்தது?  தான் தவறு செய்து விட்டோம் எனவும் அனாவசியமாக ஜீவராசிக்கு தொந்தரவு கொடுத்து விட்டோமே என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் தேட தானும் பட்டினி  இருந்து தபஸ் செய்யக் கிளம்பியபோது  எதிரில் பிள்ளையார் வந்து கொண்டு இருந்தார். அவர் வயிறு ஒட்டி உலர்ந்து வாடிப் போய் இருந்தது.  ஒரே நாளில் அவர் இளைத்து இருப்பதைக் பார்த்த பார்வதி கவலைப்பட்டு அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க பிள்ளையார் கூறினார் " அம்மா, நீங்கள் அந்த சிறு எறும்புகளைப் பட்டினி போட்டுவிட்டு எனக்கு மோதகமும் அப்பமும் வயிறு நிறையத் தந்தீர்கள்.  ஆனால் அந்த சிறு ஜீவராசிகள் பட்டினியினால் வாடுவதைப் பொறுக்க முடியாமல் நான் எனக்கு நீங்கள் தந்த உணவை சாப்பிடாமல் அவைகளுக்குக் கொடுத்து விட்டேன்" என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்து போன பார்வதி தனது தவறை உணர்ந்தாள். ஆனாலும் அந்த சம்பவம்  மூலம் இந்த உலகுக்கு ஒரு சேதி கிடைத்ததே என எண்ணி  தனது பிள்ளைக்கு ஒரு ஆசிர்வாதம் தந்தாள். "இன்று இந்த அறிய செயலை நீ செய்ததினால் இன்று முதல், அதாவது ஒவ்வொரு கிருஷ்ணபட்ஷ சதுர்த்தியிலும் தமது சங்கடங்களை விலக்கிக் கொள்ளும் நாளாக பக்தர்கள் உனக்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.  அதுவே சங்கடஹர  சதுர்த்தி என அழைக்கப்படும். அன்று உன்னை பூஜிப்பவர்களுக்கு பெறும் நன்மை உண்டாகும் " ஆகவேதான் அந்த கருப்பு எறும்புகளுக்கு பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.

Sunday, December 5, 2010

Arthanareeswarar

அர்த்தநாரீஸ்வரர்
சாந்திப்பிரியா 
அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி  ஆண் மற்றும் பாதி பெண் உருவில் உள்ள ஈஸ்வரர் என்று அர்த்தம்.  ஒரு முறை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே கருத்து வேற்றுமை தோன்றியது. பார்வதிக்கு ஏற்பட்ட கோபம் என்ன என்றால் சிவனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தம்மையும் வணங்குகையில் முனிவர்கள் மட்டும் சிவபெருமானை வணங்கிவிட்டுச் செல்கிறார்களே, அது தன்னை அவமதிப்பது போல உள்ளது. ஆனாலும் அதைப் பற்றி சிவபெருமான் கவலைப்படுவது இல்லையே என்பதே. அவளுடைய கருத்து என்ன என்றால் உலகில் உள்ள அனைத்து ஜீவா ராசிகளுமே ஆண் -பெண் உறவில் ஏற்பட்டவையே.  பெண்  இன்றி   ஆணால்  மட்டுமா ஜீவராசிகளை படைக்க முடியும்?  ஆக ஆணும் பெண்ணும் சமம் அல்லவா என்பதினால்  ஆணாக உள்ள சிவனை வணங்குபவர்கள், அவருடைய பத்தினியான தன்னையும் வணங்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர் வருபவர்களுக்கு வரம் தர வேண்டும் என கூறினாள்.  அந்தக் கூற்றை ஏற்காத சிவனோ  உலகப் பற்றுதல் இல்லாத முனிவர்கள் மட்டுமே அப்படி செய்கிறார்கள், அவர்கள் கண்களில் சிவத்தை தவிற வேறு எதுவும் தெரிவதில்லை, உலக சக்தியே தான் மட்டுமே என அவர்கள் எண்ணுகையில் தாம் என்ன செய்ய முடியும் எனக் கூறிவிட்டார். அப்போது அங்கு வந்த பிருகு முனிவரும் சிவனை மட்டுமே வணங்கிச் சென்றுவிட அதைக் கண்டு கோபமுற்ற பார்வதி தன்னுடைய  சக்தியை சிவனுக்குக் காட்ட அந்த முனிவரை சதை இல்லாத பிண்டமாக ஆகுமாறு சபித்து விட தன சக்தியைக் காட்ட எண்ணிய சிவன் அந்த முனிவருக்கு தன்  கையில் இருந்த தடியைத் தூக்கிப் போட்டார். அந்த சதை இல்லாத பிண்டமும் அந்தக் கழியை பிடித்துக் கொண்டு நடந்தே சென்றது.
அதைக் கண்டு பார்வதி அவமானம் அடைந்தாள். தானும் சிவனுக்கு நிகராக சக்தி பெற்றவளே,  உலகமே ஆண் பெண்ண உருவரின் அங்கமாக இருக்கையில் சிவன் மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன்  என எண்ணி அது குறித்து பிரும்மாவிடம் யோசனைக் கேட்க அவரோ அவளை சதுரகிரி மலைக்குச் சென்று சிவபெருமானையே துதித்து தவம் இருந்து அவரின் உடலில் தானும் பாதியாக வேண்டும் என வரம் கேட்குமாறு யோசனைக் கூறினார். அப்படி அவள் சிவனின் பாதியாகி விட்டால்  அவர் உண்மையை புரிந்து கொள்வார் எனக் கூற பார்வதியும் அது போலவே சதுரகிரிக்குச் சென்று சிவபெருமானை துதித்து தவம் இருக்க அவர் முன் தோன்றிய சிவனிடம் அவர் உடலில் தானும் பாதியாக வேண்டும் என வேண்டிக்கொள்ள வேறு வழி இன்றி சிவபெருமானும் அவளை தன்  உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டு அங்கேயே சிவ லிங்க வடிவில் அர்த்தநாரீஸ்வரராக அமர்ந்தாராம். அதன் பிறகே அவர் சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டாராம்.  இப்படி ஒரு கதை உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் குறித்து கூறப்படும் இன்னொரு கதை என்ன என்றால் ஒரு முறை தேவலோகத்தில் சிவனும் பார்வதியும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருக்கையில் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பார்வதி மூடி விட்டாள். அதனால் அந்த நேரத்தில் உலகம் இருண்டது. பூமி உலர்ந்தது, ஜீவராசிகள் அழியத் துவங்கின. ஆகவே கோபமுற்ற சிவ பெருமான் பார்வதியை விட்டுப் பிரிந்தார். மீண்டும் தன்னுடன் அவள் இணைய வேண்டும் எனில் அவளை இமயமலையில் சென்று தவம் இருக்குமாறு கூறிவிட்டார். அங்கு பல காலம் தவம் இருந்த பார்வதிக்கு காட்சி தந்த சிவபெருமான் அவளை மீண்டும் காசி நகருக்குச் சென்று அங்கு விஸ்வனாதராக உள்ள தன்னை வேண்டிக் கொண்டு தவம் இருக்குமாறு கூறிவிட்டு மறைந்து விட்டார். பார்வதியும் காசிக்குச் சென்று சிவனை வேண்டி தவம் இருக்க அவளுக்குக் காட்சி தந்த  சிவனும்  மீண்டும் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவம் இருக்குமாறுக் கூறினார். பார்வதியும் சளைக்கவில்லை. தான் அவருடன் இணைவது மட்டும் இல்லாமல் அவருடைய சக்தியின் பாதியாக வேண்டும் என்ற  திடமான  எண்ணத்தில் திருவண்ணாமலைக்கு சென்று இன்னமும் கடுமையாகத் தவம் செய்தாள். அவள் தவத்தை மெச்சிய சிவனும் அங்கேயே அவளுக்குக் காட்சி தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டாராம். அதனால்தான் அவர் அர்த்தநாரீஸ்வரராக ஆனார் என்றும் ஒரு கதை உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் படைப்பு தோன்றியது குறித்து கூறப்படும் கதைகளில் சில  இவை. சிவன் திருவண்ணாமலையில் அல்ல கொங்கு நாட்டில்தான் தவத்தில் இருந்த பார்வதிக்கு தரிசனம் தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றார் என்ற மூன்றாவது கதையும்  உள்ளது. 
திருச்செங்கோட் அர்த்தநாரீஸ்வரர் ஆலய செய்தி 
 அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
அதனால்தான் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு அம்மையப்பன் என்ற பெயரில் அற்புதமான ஒரு ஆலயம் அமைந்து உள்ளது. அர்த்தநாரீஸ்வரருக்கு உலகில் வேறு எங்குமே தனியான ஆலயம் இல்லை, இங்கு மட்டுமே உள்ளது என்பதே அந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.
இங்குள்ள  ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த ஆலயம் உள்ள இடமான திருச்செங்கோடு எழுந்த வரலாறும் சுவையானது.
ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர்
இந்த ஆலயத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர்  மூலவர் திருவுருவம் கற்சிலை இல்லை என்றும் அதுவும் பழனி மலையில் செய்யப்பட்டு உள்ள நவபாஷண  முருகனைப் போன்றே இங்கு சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையதாம் . ஆகவே இங்குள்ள மூலவருக்கு செய்யப்படும் அபிஷேக நீர் மற்றும் மூலவரின் பாதத்தில் இருந்து விழும் சுனை நீர் தீர்த்தம் போன்றவற்றை தொடர்ந்து பருகி வந்தால் மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது. மிகப் பழமையான சிலை என்பதால் தொடர்ந்து அபிஷேகம் செய்து வருவதினால் சிலையின் உருவம் சற்றே மாறி வருகிறதாம். ஆகவேதான் தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது இடது பாதி புடவையுடனும் வலது பாதி வேஷ்டியுடனும் அர்த்தநாரீஸ்வரர் உருவில் அலங்காரம் செய்யப்படுகிறது. 
 ஆலயத்தில் பிரதோஷ்ட  காலத்தில் செய்ய வேண்டிய பிரதர்ஷன முறை
அர்ச்சனையின் போது உச்சரிக்கப்படும் ஸ்தோத்திராவளி எனும் நாமம் எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் ஆராதிக்கப்பட்டு அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். சுமார் 350 ஏக்கர் நிலபரப்பில் கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடிகளை உடைய இத்திருமலை கோவிலானது கோவில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது. இந்தத் தளம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார ஸ்தலமாகும்.
தனது இணையதளத்தில்  இருந்து படங்கள் அனைத்தையும் எடுத்து பிரசுரித்துக் கொள்ள அனுமதித்த    www.arthanareeswarar.com இணையதளத்துக்கு நன்றி.
ஆலயத்தில் உள்ள நாக பள்ளம்
இந்த ஆலயத்தின் மேலும் பல விவரங்களையும், புகைப்படங்கள், பிறச் செய்திகளை படித்து மகிழ கீழ் கண்ட இணையதளத்தில் சென்று பார்க்கவும். http://www.arthanareeswarar.com/Tamil

Saturday, December 4, 2010

Updated Version - Galli Anjineyar Temple, Bangalore

கல்லி ( காற்று ) ஆஞ்சநேய ஆலயம்
சாந்திப்பிரியா

சமீபத்தில் கல்லி ஆஞ்சநேயர ஆலயத்தைப் பற்றிய மேலும் சில விவரங்களும் ஆலய கட்டிட அமைப்பைப்  பற்றியும் கிடைத்த தகவல்கள் இதோ கீழே உள்ளது.
எந்த ஆலயத்திலுமே நுழைந்தால் ஏதாவது ஒரு ஸ்வாமியின்  சிலை கண்களில்  தெரியும் நிலையில் சன்னதி காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆலயத்திலோ சாலையில் அமைந்து உள்ள நுழைவாயில் மூலம் உள்ளே நுழைந்தால் ஹனுமாரின் சன்னதி உள்ள அறையின் பின் பக்க சுவரே காணப்படுகின்றது. வேறு எந்த சுவாமியின் சன்னதியோ அல்லது சிலையோ வாயிலில் தெரிவது இல்லை. 
ஆலயத்தில் சனிக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. பலரும் தத்தம் வேண்டுதலுக்கு ஏற்ப வெற்றிலை மாலை மற்றும் குறிக்கோள்களைக் கொண்ட காகித மாலைகளையும் ஹனுமாருக்குப் படைக்கின்றார்கள்.  ஹனுமார் சுமார் பத்து அடிக்கும் மேல் உயரமாக இருக்கின்றார். ஒரு பெரிய பாறையில் அவர் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. 
ஹனுமார் சன்னதிக்கு எதிரில் இடதுபுறம் காணப்படும் சன்னதியில்  ராமர், சீதை, லஷ்மணர் என அனைவரும்  நின்று கொண்டு இருக்க எப்போதும் போல ஹனுமார் ராமரின் பாதத்தடியில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். அங்குதான் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றன. அது போலவே ஹனுமார் சன்னத்க்கு எதிரில் வலதுபக்கம் காணப்படுவது மிகப் பெரிய அளவிலான வெங்கடாசலபதி. இவற்றை தவிர்த்து அந்த ஆலயத்தில் நுழைந்ததுமே வலதுபுறத்தில் உள்ள சன்னதியில் நவகிரகங்கள் காணப்படுகின்றன. அந்த நவக்கிரஹ  சன்னதிக்குள் ஒரு மூலையில் இருபக்க சுவர்களையும் தொட்டவாறு குறுக்காக குறுக்குவாட்டில் ராகு கேது பகவான்கள்  உள்ளனர் (நவக்கிரஹங்களைத் தவிர  ) . நவக்கிரகங்களில் உள்ள ராகு கேதுவைத் தவிர எதற்காக அந்த தனி  பீடம் அவர்களுக்கு உள்ளது என்பது தெரியவில்லை என்றாலும் பெரும்பாலான பெங்களுர் ஆலயங்களில் நவக்கிரகங்களைத் தவிர ராகு கேதுவிற்கு தனிச் சன்னதிகள் உள்ளதைப் போலவே இங்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கலாம். 
ஆலயத்தின்  வரைபடம்  இது . அதை பெரிய அளவில் காண  படத்தின் மீது கிளிக் செய்யவும்  :-
முன்னர் நான் தந்திருந்த செய்தியின் சாரம் இது.
செப்டம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதியன்று மாலை சுமார் இரண்டு மணி நேரம் திடீரென பெய்த பெரு மழையினால் பெங்களுர் நகரில் பல இடங்களில் தண்ணீர் புகுந்தது. அதில்  மைசூர் செல்லும் சாலையில் உள்ள கல்லி ஆஞ்சேநேயர் ஆலயமும் ஒன்று. கல்லி என்றால் கன்னடத்தில் காற்று எனப் பொருள். அவர் காற்றுப் போல பறந்து வந்து துயர் தீர்ப்பவர்  என்பதினால் கல்லி ஆஞ்சினேயர் என்றும், வாயுவின் புதல்வர் என்பதினாலும் காற்று ஆஞ்சேநேயர் என்கிறார்கள். பெங்களுர் மற்றும் மைசூர் சாலையில் யஸ்வந்தபுரம் நோக்கிச் செல்லும் நெடும் சாலையில் அந்த ஆலயம் உள்ளது.
விஜயநகர மன்னர்கள் கர்நாடகத்தில் உள்ள பகுதிகளை ஆண்டு வந்தபோது மைசூர் செல்லும் பாதையில் உள்ள சென்னப்பட்டினா என்ற ஊரில் பிறந்த யதிராஜா என்பவர் சன்யாசத்தை ஏற்று வியாசராய என்ற பெயர் பெற்று பெரும் முனிவராக வாழ்ந்து வந்தாராம். அவர் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர மன்னனின் ராஜ குருவாக இருந்தவர். அவர் ஹனுமான் உபாசகர்.  அதனால் அவர் கர்நாடகத்தில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆஞ்சேநேயர் ஆலயங்களை பல இடங்களிலும் நிறுவி உள்ளார். அவர் மலைப் பகுதிகளிலும், பாறைகளிலும்  ஹனுமானின் சிலைகளை செதுக்கச் சொல்லி அவற்றை அங்காங்கே பிரதிஷ்டை செய்து இருக்கின்றார் என்கிறார்கள் . அவர் நிறுவி உள்ள ஆலயங்களில் உள்ள அனைத்து ஹனுமாரின் சிலைகளிலும் ஹனுமாரின் கை ஒன்று தூக்கி உள்ளபடியும், வால் வளைந்து வளைந்து தலைக்கு மேல் சென்று சற்று சுருண்டு இருக்கும்.  வாலின் நுனியில் ஒரு மணியும் கட்டப்பட்டு இருக்கும். அதுவே அவர் நிறுவிய ஹனுமான் என்று புரியும் என்று நம்புகிறார்கள். கிருஷ்ணகிரியில் உள்ள  காட்டு வீர ஆஞ்சினேயர் ஆலயத்தில் உள்ள சிலையும் அது போலவே  அமைந்து உள்ளது.
 அதே ஹனுமானின் இன்னொரு பக்கத் தோற்றம் 
முன்னர் இப்போது ஆலயம் உள்ள இடத்தில் ஓடிக்கொண்டு இருந்த   யதுர்முக்தி மற்றும் பஷ்சிமவாகினி என்ற இரண்டு நதிகள் கலந்த இடத்தில் ஆலயத்தை அவர் நிறுவினாராம். ஆலயத்தை அவர் கட்டியது இல்லை, ஹனுமான் சிலைகளை கண்டறிந்து அல்லது சிலை வடிவமைக்கச் சொல்லி அவற்றை பிரதிஷ்டை செய்து அங்காங்கே வழிபாடுகளைத் துவக்கினார் என்கிறார்கள்.
 
அதே ஹனுமானின் இன்னொரு தோற்றம்
இந்த கல்லி ஆஞ்சேநேயர் ஆலயத்தில் உள்ள ஹனுமானின் சிலை அந்த இடத்தில் நதியில் கிடைத்ததாம். அது எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆகவே அதை தலை கூரை இல்லாத அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தாராம்.  இந்த ஆலயத்தில் உள்ள ஹனுமானின் சிலையில் அவருக்கு மீசை உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். ஹனுமானை எந்த இடத்திலும் இந்த கோலத்தில் பார்ப்பது அரிது. வளைந்து வளைந்து தலைக்கு மேல் செல்லும் அவருடைய  வால் நுனி சுருண்டு சக்கரம் போல உள்ளது. அதில் ஒரு மணியும் கட்டப்பட்டு உள்ளது போல காட்சி தருகின்றது. வெற்றியைக் குறிப்பது போல மேலே  ஏந்தி உள்ள ஒரு கை அபய முத்திரையைக் காட்ட,  மற்றொரு கை தாமரை மலரை ஏந்தி உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ஆஞ்சினேயரை யதுரமுகி ஆஞ்சினேயர் என்றும் கூறுகிறார்கள். அவருடைய முகம் சிந்தூரினால் ( ஆரஞ்சு வண்ணச் சிவப்பு) பூசப்பட்டு உள்ளது. 
ஆலயத்தில் நுழைந்தாலே ஒருவரது மனதில் அமைதி கிட்டும், மனம் சாந்தி அடையும். மேலும் அவரை அந்த ஆலயத்தில் சென்று வேண்டிக் கொண்டால்  நினைத்தது நடக்கும், ஆபத்துக்கள் விலகும், காரிய சித்தி கிடைக்கும் என்கிறார்கள்.

Wednesday, November 24, 2010

Kolak Kalai

 கோலக் கலையும் அதன் சில உண்மைகளும்
சாந்திப்பிரியா

கோலக் கலை என்பது இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தோன்றி உள்ளது என்பது தெரிகின்றது. கோலம் என்பது ஒரு விதத்தில் பார்த்தால் சித்திரக் கலையைப் போன்றதே. இன்றும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் மலைகளிலும், பள்ளங்களிலும், குகைகளிலும் உள்ள பாறைகளைப் பார்க்கையில் அவற்றில் கோலங்கள் போன்ற பல உருவங்கள் உள்ளதைக் காணலாம். ஆகவேதான் கோலக் கலை ஆதி முதலேயே இருந்துள்ளது என்பதை நம்ப வேண்டி உள்ளது.
வாயிலில் கோலங்களைப் போடுவது ஒரு பழக்கமாக இருந்துள்ளது என்றாலும் அதற்கும் சில காரணங்கள் இருந்துள்ளன. துஷ்ட தேவதைகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, தர்ம தேவதைகளை உள்ளே அழைக்க, தூய ஆவிகளை உள்ளே அழைக்க மற்றும் லஷ்மி தேவியை உள்ளே அழைக்க என பல காரணங்களுக்காக பல விதமான கோலங்கள் போடப்பட்டன. அப்படியாக கோலங்களைப் போட்டபோது அதைப் போடும் பெண்கள் சில மந்திரங்களையும் உச்சரித்தவாறே போட்டு வந்தனர் என்பது கிராமியக் கதையாக உள்ளது. அதற்கு மேலும் சென்றால் கோலங்கள் போடுவது புழு பூச்சிகளுக்கு உணவாக இருக்கட்டும் என்பதற்காக எனவும் நம்பிக்கை உள்ளது.
ஆனால் அது பற்றி ஒரு பண்டிதர் கூறிய செய்தி சற்றே சிந்திக்க வைத்தது. நம்முடைய மறைந்து போன வம்சாவளியினர் பல ரூபங்களிலும் பிறப்பு எடுத்து சுற்றித் திரிவார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள பிறப்பு இறப்பு காலம் முடியும்வரை அவரவர் செய்துள்ள நன்மை தீமைகளுக்கு ஏற்ப சில பிறப்புகளை எடுத்து அவர்களுடைய சந்ததியினர் வாழும் இடங்களிலேயே சென்று சுற்றிக் கொண்டு இருப்பார்கள். அப்போது அவர்கள் பறவை, புழு பூச்சிகள் பிறப்பு எடுத்து இருந்தால் அவர்களுக்கு உணவு தரும் வகையில் இருக்கட்டும் என்பதற்காக அரிசி மாவினால் கோலம் போட்டனர். அரிசி மாவை அந்த புழு பூச்சிகள் வந்து தின்னும் போது அவை மனதார நம்மை வாழ்த்தி விட்டுச் செல்லுமாம்.அது மட்டும் இன்றி வீட்டின் வெளியில் சுற்றித் திரியும் ஆவிகள் அந்த அரிசி மாவை தனக்கு போடப்பட்ட உணவாகக் கருதி அந்த வீட்டில் உள்ளவர்களை வாழ்த்தி விட்டுப் போகுமாம்.
பண்டைய காலத்தில் வீட்டின் முன்புறதுக்கு அழகூட்ட என்பதற்கு மட்டும் அல்லாமல், தத்தம் வீடுகளில் நடக்கும் விழாக்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அழகான கோலங்கள் போட்டனர். கோலம் இல்லாத வீட்டில் வீட்டில் எதோ சடங்கு - சிரார்த்தம் போன்றவை- நடைபெறுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தீய ஆவிகள் வீட்டில் நுழைவதை தடுக்க பல பயங்கரமான உருவங்களைக் கொண்ட கோலம் மற்றும் மந்திரங்கள் அடங்கிய கோலம் , நல்ல ஆவிகள் வீட்டில் நுழைய வேண்டும் என்பதற்காக பூக்கோலங்கள், வீட்டிற்கு வந்துள்ள திருஷ்டிகள் விலக வேண்டும் என்பதற்காக சாணி மீது பூ வைத்த கோலம் போன்ற கோலங்களைப் போட்டு தாம் நம்பிக்கையை தெரிவித்து வந்தனர். மொத்தத்தில் கோலங்களைப் பார்த்தாலே அவை மந்திர சக்திகளை உள்ளடக்கிய கோலங்கள் என்பது புரியும். ஆனால் அவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டதினால்தான் அவற்றின் மகிமை நமக்கு தெரியாமல் இருந்துள்ளது.
பொதுவாக கிராமப் புறங்களில் வீடுகளின் சுவர்களிலும், முற்றத்திலும் கீழ் கண்ட முறையில் சில உருவங்கள் கொண்ட கோலங்களைப் போடுவார்கள். அந்த கோலங்கள் வீட்டில் நுழையும் தீய ஆவிகள் பயந்து ஓடவும், திருஷ்டிக்கு எனவும் போடப்பட்டன. வாசலில் அல்லது வாயில் சுவற்றில் ( குடிசை என்பதினால் மண் சுவரே இருந்த இடங்கள்) சாணியால் மெழுகி அந்த கோலங்களை வெள்ளை மாவு ( சுண்ணாம்பு போன்றது ) மற்றும் சிவப்பு நிறப் பொடிகளை ( செம்மண்ணை இடித்து மாவுபோல ஆக்கி) பயன்படுத்திப் போடுவார்களாம்.அதில் சில வகைகளை கீழே காணலாம். இப்படிப்பட்ட கோலங்கள் பெரும்பாலும் ஆந்திரா, கர்னாடகா மற்றும் தென் பகுதி தமிழ்நாட்டுப் உள் பகுதிகளில் காணலாம்.
விடியல் காலையில் கோலம் ஏன் போடுவார்கள், அதுவும் வெள்ளை மாவில்? வெள்ளை மாவு அல்ல , முதலில் அரிசி மாவில்தான் கோலங்களைப் போட்டு வந்தார்கள். அதுவே பின்னர் உபயோகத்தில் மெல்ல மெல்ல வெள்ளை மாவாக ,மாறியது. வெண்மையில்தான் அனைத்து நிறங்களும் கலந்து உள்ளது. விப்ஜியார் என்பார்களே- அதாவது ஏழு நிறங்கள் கொண்ட வண்ணத்தை. அது சுற்றினால் வெண்மையாகத் தெரியும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு நிறம் உண்டு. அப்படிப்பட்ட அனைத்து நிறங்களும் கொண்ட கடவுட்கள் அங்கு சங்கமிக்கும்போது வெண்மையாகி விடுவதினால் வீட்டில் போடும் வெண்மைக் கோலத்தில் அனைத்து கடவுளும் அடங்கி உள்ளதாகவும் அவர்கள் வீட்டில் நுழையும் வாயிலே அந்தக் கோலம் என்ற ஐதீகம் இருந்ததாம்.- கோலங்களில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் மங்கலத்தை எடுத்துக் காட்டின. வெள்ளை நிறம் தெய்வங்களைக் குறித்தது.
புள்ளிகள் வைத்த கோலம்
புள்ளி என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு சித்திரம். ஆகவே ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளே புள்ளியைக் குறிக்கின்றது எனக் கருதியே நம் வீட்டின் வாயிலில் கடவுளே நின்று நம்மைக் காக்கின்றார் என்பதைக் காட்ட புள்ளிக் கோலங்கள் போடப்பட்டன. சில கோலங்களில் புள்ளியை சுற்றி வட்டங்களும் கட்டங்களும் இருக்கும். அவை பல நம்பிக்கைகளைக் காட்டின ?
- வட்டம் பெண் இனத்தையும், புள்ளி ஆண் இனத்தையும் குறித்து (சில லிங்கம் போல) வட்டத்தின் நடிவில் வைத்த புள்ளிக் கோலம் சிவ சக்தியின் ரூபமாய் கருதப்பட்டது.
- கோலத்தின் நடுவில் வைத்த புள்ளி நம்மையும், அதை சுற்றி உள்ள வட்டமும் கட்டமும் நம்மைக் கத்து நிற்கும் கடவுளின் அரணாகுமாம்
- வீட்டில் இருந்து வெளியே செல்லும் நமது சக்திகளை தடுத்து நிறுத்தி அவற்றை இழக்காமல் இருப்பதை காட்டும் சின்னமாம் அது.
- வட்டம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும்
- உன்னை சுற்றியே நாங்கள் உள்ளோம் என தேவதைகள் கூறுவதை பிரதிபலிப்பதுதான் புள்ளி வைத்த கோலத்தில் சுற்றி உள்ள இழைகள்.
-நாக தேவதைகளை வணங்க நவகிரக நாயகர்களை வணங்க என பல புள்ளிக் கோலங்கள் போடப்பட்டு வந்தன.
முக்கோணக் கோலங்கள்
முக்கோணக் கோலம் என்பது ஜாதி பேதம் இன்றி இந்த மண்ணில் அவதரித்த அனைவருமே மேல் உலகை நோக்கியே இறுதியில் செல்கிறோம் என்பதை குறிக்கும் கூர்முனைக் கொண்டது. அது போலவே மேல் உலகில் உள்ளவர்களும் கீழே இறங்கி வந்து அனைத்து இடங்களிலும் பரவி நிற்கின்றோம் என்பதைக் காட்டுகிறது. மஞ்சளும் குங்குமமும் வைத்த வட்ட வடிவமான சின்னம் எரிந்து கொண்டு இருக்கும் விளக்கின் நெருப்பைக் குறிக்கிறதாம். நெருப்பில் விழும் அனைத்தும் பொசுங்கி விடுவது போல கண் திருஷ்டியும் அதில் பொசுங்கி விடுமாம்.
ஸ்வஸ்திக் கோலங்கள்
வெற்றியைத் தரும் சின்னம் ஸ்வஸ்திக் . பண்டை காலங்களில் மன்னர்கள் போர் புரியச் சென்றபோது ஸ்வஸ்திக் கோலங்கள் போடப்பட்டன. பின்னர் அவை அவரவர் வீடுகளில் நடக்கும் விழாக்கள் நல்லபடியாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக போடப்பட்டன. அது மட்டும் அல்லாது தெய்வங்கள் வந்து அமரும் இடமே ஸ்வஸ்திக் எனக் கருதப்பட்டது. ஸ்வஸ் + அஸ்தி + கா என்பதின் வார்த்தையே ஸ்வஸ்திகா . அதாவது சுவாசம் ( ஸ்வாஸ்) நின்று நீ அஸ்தியாகப் ( அஸ்தி) போய் மோட்ஷம் பெற காத்திரு என்பதை நினைவு படுத்துவதே ஸ்வஸ்திகா . ஸ்வஸ்திகாவை பாருங்கள் ஒவ்வொரு பக்கத்தையும் நோக்கி குழாய் போல நீண்டு இருக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தைப் போட்டு அதன் நடுவில் வைக்கப்படும் புள்ளியின் அர்த்தம் என்ன என்றால் நடுப்புள்ளி நம் ஆத்மா. வீட்டில் உள்ளவர்களின் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே அது போடப்பட்டது. மேலும் ஸ்வாதிக் நமக்கு எடுத்துக் காட்டுவது என்ன?
-நான்கு வேதங்கள்
- நான்கு திசைகள்
-நான்கு யுகங்கள்- சத்ய, த்ரேதா , துலாபார, கலி யுக
- நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்) -பிராமண , ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர என்பவை
-நான்கு யோகங்கள்- ஞான, பக்தி, கர்ம, ராஜ
- நான்கு மூலங்கள் - ஆகாயம்,வாயு, நீர் , நிலம்
-வாழ்கையின் நான்கு பருவங்கள்- குழந்தை, பிரும்மச்சாரி, கிரஹஸ்தன், சந்நியாசி (அனைத்தையும் துறந்தவர்)
இதில் மூன்றாவது ஜெயின் மதத்தினர் போடுவது. நான்காவது எந்த திசையை நோக்கி வெளியேறும் பகுதி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் படம்.
.........கோலம் பற்றிய செய்திகள் மேலும் பின்னர் தொடரும் .

Wednesday, November 3, 2010

Random Thoughts

சாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை
சாந்திப்பிரியா
நாம் பூஜை அறையில் மாட்டும் சாமி படத்தின் மீது பூ வைக்கின்றோம். அவற்றை தலைப் பகுதியில் பிரேமுகுப் பின்னால் சொருகி வைப்பதினால் நாளடைவில் அந்த இடத்தில் கறை ஆகி சுவர் அழுக்காகி விடும். பூக்களை வைக்காத நாட்களில் அந்த இடம் கருப்பாகத் தெரியும். ஆகவே சுவற்றை அசுத்தப்படுத்தாமல் இருக்க நான் பூஜை அறையில் உள்ள சாமிகளின் பிரேமின் தலைப் பகுதியில் ஒரு அங்குலம் நீளமும் அறை அங்குல அகலமுமான கெட்டியான (சிறிது தடிமனான ) வண்ண அட்டையின் ஒரு பக்கத்தில் சிறு ஓட்டை போட்டு (பஞ்ச் மிஷினினால்) பெவிகால் போட்டு ஒட்டி வைத்தேன். அட்டையை இப்போது அந்த அட்டையின் ஒட்டையில்தான் பூவை சொருகி வைக்கின்றோம். சுவர் கறை படுவது இல்லை. நாம் எந்த வீட்டுக்கு குடி சென்றாலும் சுவர்  அழுக்கு ஆகாது. பிரேமின் வண்ணத்துக்கு ஏற்ப அட்டையை வாடர் கலர் செய்து விட்டால் பிரேமுடன் அது ஒன்றி இருக்கும்.  அச்சிங்கமாகவும் தெரியாது.  கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 


Saturday, October 30, 2010

Ponnandal Ramanathan writes-1

பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய 
தெய்வீகத்தில் நான் படித்த மற்றும் 
கேட்ட செய்திகள் சில -  பாகம் 1

(1) சத்குருனாதரின் காடாஷம் ஒருவர் மீது இருக்குமானால் அந்த அதிருஷ்டக்காரனின் வாழ்கை ஓடம் சலனமில்லாமல் அமைதியாக , நிம்மதியாக, பயமில்லாமல் சென்று கொண்டு இருக்க அந்த குருநாதனே ஓடத்தை ஏற்றிக் கரை சேர்ப்பார் என்பது சத்தியமான வாக்கு.
-----------------------------
(2) சாதுக்களின் தரிசனம், அவர்கள் மீது நாம் வைக்கும் பக்தி மற்றும் தியானமுமே நமக்கு பல புண்ணிய பலன்களையும், புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனையும் தருகின்றது.


--------------------------
(3) சத்சங்கம் கிடைப்பது அரிது. கிடைத்தாலும் அதில் கலந்து கொள்ள எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது, மனமும் வராது . ராவணன் சிறந்த சிவ பக்தன். ஆனால் அவனுக்கு சத்சங்கங்களில் கலந்து கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லை.
--------------------------
(4) ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணை கடாஷம் எல்லை அற்றது. ஒரு பாபமும் செய்யாத சீதையை தன் மனைவி என்ற உரிமையில் உலக நியதியை எடுத்துக் காட்டும் பொறுப்பில் அக்னியில் புடம் போட்டு ஏற்றுக் கொண்டவர். ஆனால் அவரே தன் கால் ஸ்பரிசத்தினால் அகலிகையின் தோஷத்தைப் போக்கி கெளதம முனிவருடன் சேர்த்து வைத்தார்.
------------------------
(5) நாம் செய்யும் குற்றத்திற்கு பாவ மன்னிப்புப் பெறலாம். ஆனால் நாம் செய்த குற்றத்தை பகவானிடம் கூறிவிட்டு அதற்கான தண்டனையை இந்த ஜென்மத்திலேயே பெறுவதே சிறந்தது. நம் மனசாட்சி சொல்கின்றபடி நமக்கு நாமே தண்டனை விதித்துக் கொள்ளலாம். இதற்கு எடுத்துக் காட்டாக குமரி பட்டர் காதலி உள்ளது. அவர் புத்த மதத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவர்களில் ஒருவரைப்போல தன்னை காட்டிக் கொண்டு ஏமாற்றி அதில் கலந்து கொண்டார். அதற்கு தண்டனையாக உமியின் நடுவில் அமர்ந்து கொண்டு அதில் நெருப்பை மூட்டி தன்னைத் தானே கருக்கிக் கொண்டார்.
------------------------

(6) திரௌபதியின் பதிவிருத்தா தர்மம் தூய்மையானது. அது  தெரியாமல் அவளை ஐந்து கணவன்களின் மனைவி எனக் கேவலமாகப் பேசுபவர்கள் மூடர்களே. உண்மையில் அவளுடைய ஐந்து கணவர்களும் தெய்வாம்சம் பொருந்தியவர்களே. திரௌபதியும் கார்ப வாசம் செய்யாமல் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்களே. அவளும் பத்ரகாளியின் அம்சமே. ஒரு பதியுடன் மனைவி என்ற பெயரில் மட்டும் உலகிற்காக வாழ்ந்து முடிந்ததும் அடுத்த பதியின் இருப்பிடம் போவதற்கு முன்னால் திரௌபதி தன்னை ஸ்புடம் போட்டு அக்னியில் இறங்கி எழுந்து வருவாளாம்.
--------------------------
(7) பக்தர்களுக்கு பகவானிடமும், பகவானுக்கு பக்தர்களிடமும் பற்றுதல் இருப்பது அசாதாரணமானது. அதற்கு உதாரணம் ஸ்ரீ கிருஷ்ணனே. ராதைக்கும் கிருஷ்ணனுக்கும் அலாதி பிரேமை உண்டல்லவா, அது போல அவருக்கு கோபிகைகளிடமும் பிரேமை இருந்தது. பிருந்தாவன லீலை, ராசா லீலை, ஜலகிரிடை போன்ற அனைத்தையுமே கிருஷ்ணர் தமது பத்தாவது வயதுக்குள் செய்து காட்டிவிட்டார். பதினோராவது வயதில் கம்ச வதத்தையும் செய்து காட்டினார். ஆனால் அதனால் அவற்றினால் எந்த களங்கமும் ஏற்படவில்லை என்பதற்குக் காரணம் அனைத்தும் நாடகமே, அந்த கோபிகைகள் வேறு யாருமல்ல. ரிஷிகளே, ஆமாம் ராமாவதாரத்தில் ஆரண்ய காண்டத்தில் உள்ள அந்த ரிஷிகளே கோபிகைகளாக பிறந்திருன்தனர்.
---------------------------

(8) ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்த அடுத்த சில மணிகளிலேயே அதற்கு எதிரான நிலை. ராஜ்ய பரிபாலனம், சுகபோகத்தை அனுபவிக்க வேண்டியவருக்கு பதினான்கு வருட வனவாசம். ஆனால் அந்த இரண்டு நிலையிலும் ராமர் மிகவும் நிர்சவனமாக, அமைதியாக இருந்தாராம். காரணம் அவர் மனதில் ஏற்பட்டு இருந்த சங்கல்பம். ராமர் மனதில் தோன்றியதாம் 'இன்று நான் பட்டாபிஷேகம் செய்து கொண்டால் என்னுடன் சீதையும், லஷ்மணரும் மட்டும்தானே இருப்பார்கள். ஆனால் நான் எடுத்துள்ள இந்த என் அவதாரத்தை பூர்த்தி செய்துவிட்டு வந்தால் என் விழாவில் அனைத்து சகோதரர்கள், என்னையே தன்னுடையவராக நினைக்கும் ஹனுமான், சுக்ரீவன், ஜாம்பவான் என அனைவரும் இருப்பார்கள் அல்லவா. ஆகவே இந்த வனவாசம் நடந்தேற வேண்டும். என் அவதாரம் புரிந்து கொள்ளப் பட வேண்டும் ' .
------------------------
(9) ராமபிரான் கடலில் அணைக்கட்டி கடலைக் கடக்கும் முன் சிவனை ஆராதித்து பிரார்த்தனை செய்து கொண்டதானது புராண வரலாறு. சிவனும் ராமரும் இணை பிரியாதவர்கள். கடலைத் தாண்டிச் சென்ற வானரங்களை 'ஜெய் பரமேஸ்வரா' எனக் கூறிக் கொண்டு கடலைத் தாண்டிச் செல்லுமாறு ராமர் கட்டளை தந்தாராம். அதனால்தான் ராமர் சிவனை வழிபட்ட அந்த பூமியின் பெயரும் ராமர் + ஈஸ்வரன் என இருவரின் பெயரையும் இணைத்துக் கொண்டு ராமேஸ்வரம் ஆயிற்று.
---------------------
(10) ஒரு மனித உயிர் தனது மனைவி, கணவன், குழந்தை, தாய் தந்தை என அன்பு காட்டுவது எதன் மேல் என்பது தெரியுமா - அவர்களின் சரீரத்தின் மீதா, ஆத்மாவின் மீதா- ? ஆத்மாக்களே மற்ற ஆத்மாவுடன் ஐக்கியமாகி அன்பை வெளிப்படுத்துகிறது என்பதற்கு உதாரணம், நாம் அன்பு கொண்டவர்கள் இறந்து போனப்பின் அவர்களின் உடலை நெருங்கவே, அதைப் பார்கவே ஒரு பயம் ஏற்படுகிறது அல்லவா ? அது மட்டும் அல்லாது அந்த உடலை எரிக்கவும் செய்கிறோம். நம் அன்பானது அந்த உடலின் மீது என்றால் எத்தனை நாற்றம் அடித்தாலும் அதை வைத்துக் கொண்டு இருக்காமல் அதை எரித்து அழித்து விடுவது ஏன்?
-----------------------
(11) அனுமாருக்கு மட்டும் செந்தூரம் ஏன் பூசுகிறார்கள் ? அதற்கான பதில்  ராமாயணத்தில் உள்ளது. சீதாபிராட்டியைத் தேடி இலங்கை அடைந்த ஹனுமார் அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார். முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்தப் பின் அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார். 'அம்மா நெற்றியில் ஏன் செந்தூரம் உள்ளது ' எனக் கேட்க அவள் கூறினாளாம், 'மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும்தான் எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே செந்தூரத்தை இட்டுக் கொண்டேன். ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும். அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே அதை இட்டுக் கொண்டேன் ' என்றாளாம். அதைக் கேட்ட  ஹனுமார் புல்லரித்துப் போய் ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும் என்ற மனதோடு ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை இட்டுக் கொண்டாராம். அதனால்தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோமாம்.
---------------------------------
(12) பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டபோது அவர் கழுத்தை நீல நிறமாக்கி தனது தன்மையை அந்த விஷம் காட்டியது. தனது கையில் அந்த விஷத்தை எடுத்துக் கொண்டு சிவபெருமான் விழுங்கியபோது அதே விஷத்தின் சில துளிகள் பூமியிலே சிந்தியது. அதுவே கொடிய விஷமுடைய ஜீவன்களையும், விஷ மூலிகைகளையும் பாம்பு, தேள் போன்றவற்றையும் படைத்தது.
---------------------------


(13) ரகுகுல திலகரான ராமபிரான் தினமும் அரண்மனைக்குச் சென்று தனது தாயார் மற்றும் தந்தையை பார்த்து சேவித்து விட்டு வருவது பழக்கம். அப்போது அவர் தான் அணிந்து செல்லும் பாதரக்ஷையை அரண்மனையின் வாயிலிலேயே விட்டு விட்டுச் செல்வார். போகுமுன் அதைப் பார்த்துக் கருணையோடுக் கூறுவாராம் ' என்ன செய்வது, உன்னை காலில் அணிந்தபடி உள்ளே போகக்கூடாது அல்லவா...ஆகவே இங்கேயே எனக்காகக் காத்திரு ' ராமர் அந்த பாதரட்ஷைக்குக் அன்று காட்டிய கருணையே ராமர் வனவாசத்துக்கு சென்றபோது பதினான்கு வருடங்கள் அந்த பாதரட்ஷையை அரசவை சிம்மாசனத்தில் அமர வைத்தது. ராமனின் கருணையே கருணை.
--------------------------
(14) நாம் இறைவனின் நினைவாக நெற்றியில் வீபுதி இட்டுக் கொள்கின்றோமே, அதற்கு அப்படிப்பட்ட பெருமை வந்ததின் பல காரணங்களில் ஒன்று என்ன தெரியுமா? இதோ, இதைப் படியுங்கள். கண்ணன் சிறுவனாக இருந்தபோது துருதுருவென இருந்ததினால் கண் திருஷ்டி பட்டுவிடும் என பயந்த கோபிகைகள் அவரை தொக்கிக் கொண்டு மாட்டுத் தொழுவத்தில் போய் அங்குள்ள பசுவின் பாதத்தினால் பூமியை சுரண்டி அந்த மண்ணை எடுத்து அவர் உடல் முழுவதும் பூசுவார்கள். அதன் பின் பசுவின் மூத்திரத்தை அவர் மீது தெளிப்பார்கள். கடைசியாக பசுவின் சாணியை எடுத்து அவர் நெற்றியில் திருஷ்டிப் பொட்டு போல வைப்பார்கள். அதனால்தான் கண்ணனின் நெற்றியில் அமர்ந்த பசுமாட்டு சாணத்தைப் பொசுக்கி நமது நெற்றியில் இட்டுக் கொள்ளும் வீபுதியை தயாரிக்கிறார்கள்.
----------------------------
(15) வேதம் மற்றும் புராணங்களுக்கு வித்தியாசம் என்ன? வேதத்தின் உபதேசங்கள் மன்னனின் கட்டளைப் போல. அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. நம்முடைய இஷ்டப்படி அதை மாற்ற முடியாது. அதன் கட்டளைகளுக்கு கீழ் படிந்தே தீர வேண்டும். அதை செய்தால் பலன் உண்டு. இல்லாவிடில் கெடுதி நிச்சயம். ஆனால் புராணகள் அப்படி அல்ல. அவை நமக்கு படிப்பினையைத் தரும் வேத புத்தகம் போல. நண்பனைப் போல அது உபதேசிக்கும். நன்மைகளை செய்து பலரும் பயன் அடைந்ததையும், தீமைகள் செய்தவர்களுக்கு கிடைக்கும் கெடுதல்களை பற்றி விளக்கிக் கூறும்.  நம்மை வேதம் பயமுறுத்தும், புராணம் வழி காட்டும்.
-----------------------------
(17) நாம் செய்யும் உணவை நைவித்தியம் செய்தப் பின் சிறிது காக்கைக்குப்  போட்டப் பின்னால்தான் நாம் சாப்பிட வேண்டும் என்பது சாஸ்திரம். அதற்கான காரணம் , காகம் தான் உண்ண வரும்போது தனது கூட்டத்தை கூவி அழைத்துக் கொண்டே வருகின்றது. காக்கைகளை நம் முன்னோர்களாகவே கருத வேண்டும். காரணம் அது யம தர்மராஜனின் ஆசனம். நம் முன்னோர்கள் முதலில் போவது யமதர்மராஜரிடமே. அங்கிருந்துதான் கணக்கு வழக்குப் பார்த்து அவரவர் விதிக்கேற்ப  அவர்கள் போகுமிடம் முடிவு செய்யபடுகின்றது. ஆகவே உணவு விஷயத்தில் காக்கையை மதிக்க வேண்டியது  அவசியம்.
அது போல இரவில் நாம் உணவு அருந்தியப் பின் மீதியை தெருவில் உள்ள நாய்க்குப் போட வேண்டும்.  நாய்க்கு போடப்படும் உணவை மற்றவர்களை தின்ன விடாது அது  துரத்தும். காக்கைக்கு நேர்மாறான செயல். ஆனால் அது கால பைரவரின் வாகனம்.  எப்படி நாம் காலபைரவரை நாம் வணங்கித் துதித்தால் தீய சக்திகள் நம்மை நெருங்காமல் அவர் நம்மைக் கப்பாற்றுகிராரோ அதுபோலத்தான் நாயும் அந்நியர்கள் நம்மை நெருங்க விடாமல் நம்மைக் காக்கும் பிராணி. ஆகவே உணவு விஷயத்தில் நாயிற்கும் நாம் மதிப்புத் தந்து உணவு போட வேண்டும்.
-----------------------
(18) தியானம் ஒன்றே இறைவனை அடையும் ஒரே வழி. உலகப் பொருட்களில் ஆசை, பந்தம் , பாசம் இவற்றை நீக்கியவனே இறைவனைக் காண்கிறான். நீரில் மூழ்கியதை நீரில் மூழ்கித்தான் எடுக்க வேண்டும்.  இறைவருள் பெறவும், நமக்குள் நமக்குத் தெரியாமல் மறைந்திருப்பவனைக் காணவும் நாம் நமக்குள்தான்  முழுகி - ஆத்மா தியானம் செய்து , அதை காண வேண்டும்.
---------------------
(19)  ஒரு முறை பாரதியார் கடற்கரையில் உலாவிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு குள்ளமான சாமியார் ஒரு சாக்கு நிறைய குப்பைக் கூளங்கள், காகிதங்கள், டப்பா போன்றவற்றை எடுத்துக் கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அங்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அவரிடம் வேகமாகச் சென்ற பாரதியார் அவரை தடுத்து  நிறுத்தி  ' ஏனப்பா, குள்ளசாமி , இந்த வேண்டாத குப்பைகளை ஏன் தூக்கிக் கொண்டு அலைகின்றாய், அதைத் தூக்கி எறிவதுதானே ?' எனக் கேட்டார். குள்ளசாமி  கூறினாராம், ' பாரதி, இந்த சாக்குப் பையில் உள்ள குப்பைகளை நான் சமுத்திரத்தில் எறிந்து விடத் தயாராக உள்ளேன். ஆனால் எனக்கு நீ ஒன்று சொல்... இந்தக் குப்பைகளை விட அதிகமாக  காமக் குரோத விருப்பு விருப்புக்களை மனதில்  சுமந்து கொண்டு சுமக்க முடியாமல் மனிதர்கள், ஏன் நீயும்தானே இருக்கிறாய். அனைத்து குப்பைகளையும் நான் சுமப்பதைப் போல நீங்களும் அல்லவா  சுமந்து கொண்டு அலைகிறீர்கள்.  அதை எங்கே கொண்டு கொட்டப் போகிறாய்?'  குள்ளசாமி கேட்ட கேள்விக்கு விடை தர முடியாத பாரதி பேச முடியாமல் வாய் அடைத்து நின்றாராம். அந்தக் குள்ளசாமிதான்  ஸ்ரீ ஞானானந்தராம் .
-----------------------------
(20)  நாம் கழுத்தில் அணிவதை ஹாரம் என்கிறோம். கழுத்தைச் சுற்றி உள்ள அது வட்டமாக உள்ளது. அதனால்தான் நாம் இறைவனின் சன்னதியை சுற்றி வருவதற்கும் ஒரு  பிரானின் ( தெய்வம்)  ஹாரத்தை அதாவது  பிராகாரத்தை  அமைத்து உள்ளார்கள்.
---------------------
(21)  இறுமாப்பை அடக்க வேண்டும் என்பது நியதி. அதற்கு உதாரணக் கதை ஒன்று உள்ளது. ஒரு முறை ஒரு எறும்பு சிவனை துதித்து தபம் செய்ய சிவனும் அதன் முன் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' எனக் கேட்டாராம். அதற்கு   எறும்பு ' நான் கடித்ததும் இறந்து விடவேண்டும்' என்று கேட்க சிவனும் வரம் தந்தார். அடுத்த கணமே அது அந்த வரத்தை சோதனை செய்து பார்க்க சிவனையே கடித்ததாம். உடனே சிவனும் அதை அடித்துக் கொன்றாராம். யமலோகம் சென்ற எறும்பு சிவனிடம் கோபமுற்றுக் கூறியதாம்  ' என்னை ஏமாற்றி விட்டீர்கள். கடித்தால் இறந்து விடவேண்டும் என்றால் உங்களைக் கடித்த என்னை அல்லவா இறக்க வைத்து விட்டீர்கள். இது நியாயமா?' சிவன் கூறினாராம் ' நான் நியாயமாகத்தானே வரம் தந்தேன். நீ கடித்தால் நீயா அல்லது நீ கடித்தவர்  இறக்க வேண்டும் என்றா வரம் கேட்டாய் ? நான் கடித்தால் இறக்க வேண்டும் என்றாய் , நீ கேட்ட  வரம் உனக்கே எதிராக இருந்தால்  நான் என்ன செய்வது? அது முதல்தான் எறும்பு கடித்தால் அதை அடித்துக் கொல்வது உலக வழக்கமாகிவிட்டது.
------------------------
(22)  உள்ளத்தால்  ஒன்றை பழக்கிக் கொண்டு விட்டால் அதை தவிர்ப்பது கடினம்.  காரணம் அது இல்லாவிடில் நம் உடல் வேறு எதையும் ஏற்க மறுக்கிறது. உணவுப் பொருட்கள் முதல், சுக போகங்கள் சொந்த பந்தங்கள் என அனைத்துக்கும் அது பொருந்தும்.  இந்த உடலுக்கு இது தேவை என்பதை அந்த உடலுக்குள் உள்ள மனதே தீர்மானிக்கின்றது. ஆக மனதையே  உடலின் சுகத்திற்கேற்ப   நடக்கப் பழக்கி விட்டோம்.  அதனால்தான் தக்ஷ யாகத்தில் அவமானப்பட்டபோது  , இனி மனத்தால் மட்டும்  அல்ல இந்த உடலாலும் தன் தகப்பனுக்கு தான் பிறந்தவள் அல்ல என்பதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மனதையும் உடலையும் அழிக்க தீயில் குதித்து மரணம் அடைந்து அடுத்த ஜென்மத்திலும் பரமேஸ்வரியாகவே பிறந்து சிவபெருமானை மணந்து கொண்டாள்.
------------------------
(23)  ஒரு சித்தர் பாடல் உண்டு. அது என்ன என்றால் ''நந்தவனத்தில் ஒரு ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதைக் கூத்தாடிக் கூத்தாடி போட்டு உடைத்தாண்டி''  இதன்  அர்த்தம் என்ன தெரியுமா?
ஆண்டி என்பது ஜீவன். பிரும்மாவை வேண்டித் தவம் இருந்து தோண்டி என்ற உடலை தாயின் கர்பத்தில் வைத்து ( நாலாம் மாதம் ஸ்திரமாகும் கர்ப்பம், அடுத்த ஆறு  மாதத்தில் கர்பத்தில் இருந்து வெளிவரும்) நாலாறு மாதம்  (4+6 என்பது) என்ற பத்து மாதம் கர்பத்தில் தாங்கி உலகிற்கு வந்தான். வந்த பிறவியை மறந்து லோக மாயையில் முழுகி சுகபோகங்களில் ஆடிப்பாடி இருந்தவாறு உலகிற்கு வந்த இந்தப் பானை வீண் என்பதைக் காட்டி உடைத்து ( மரணம்) விடுகிறான்.

Thursday, October 28, 2010

Salanpur Hanuman Temple- Gujarat

குஜராத் சலன்பூர் ஆஞ்சனேய  ஆலயம்
சாந்திப்பிரியா

சாமிநாராயணன் சம்பிரதாயத்தினர் நிறுவி உள்ள அற்புதமான ஒரு ஹனுமான் ஆலயம் குஜராத் மாநிலத்தின் சாலன்பூர் என்ற சிறு நகரில் உள்ளது. அந்த சிறு நகரம் அகமதாபாத்தில் இருந்து சுமார் அறுபது மைல் தொலைவில் உள்ளது. அதைவிட சிறந்தது, ராஜ்கோட் அல்லது பவனகருக்கு சென்று அங்கிருந்து சுமார் ஒன்றரை மணி நேர டாச்சி அல்லது பஸ்சில் பயணம் செய்து போதத் ( Botad ) எனும் இடத்தை அடைய வேண்டும். அங்கிருந்து ஆட்டோ பிடித்து ஆலயத்துக்கு செல்லக் கூறினால் சுமார் முப்பது நிமிட நேரத்தில் அந்த ஆலயத்துக்கு சென்று விடலாம். அந்த ஆலயத்தின் மகிமை என்ன என்றால் பேய் , பிசாசு பிடித்தவர்கள் அங்கு சென்று அங்குள்ள ஹனுமாரை வணங்கினால் அவை ஓடி விடும் என்பதே. அவரைப் பொதுவாக துன்பங்களைக் களையும் ஹனுமார் என அழைக்கின்றனர்.
முன்னூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனப்படும் அந்த ஆலயத்தை நிறுவியவர் 1850 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட கோபால்நாத் ஸ்வாமிகள் என்பவரே. அவர் மிமிம்சா மற்றும் வேதாந்தங்களை நன்கு கற்றறிந்தவர். பலரது வாழ்விலும் ஏற்படும் இன்னல்களைக் களைய அவர் ஆன்மீக பாடங்களைப் போதித்தவர். கொடிய மிருகங்களான புலி, சிங்கம், பாம்பு போன்றவற்றை அவர் தன்னுடைய செய்கையாலேயே அடக்கி விடுவாராம். அத்தனை சக்தி பெற்றவர். அஷ்டாங்க யோகாவில் புலமை வாய்ந்தவர். மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர். சாமிநாராயணன் சம்பிரதாயத்தின் தலைவரான சாமிநாராயண சுவாமி அவர்கள் தான் மறையும் முன்னால் அங்கு ஆலயத்தை நிறுவுமாறு கோபால்நாத் சுவாமியிடம் கட்டளை இட்டாராம்.
 அனுமாருக்கு  ஆரத்தி எடுக்கப் படும் காட்சி
அதை ஏற்ற கோபால்நாத் சுவாமி ஒரு ஆஞ்சிநேய ஆலயத்தை நிறுவினார் . அவர் வைத்த ஆஞ்சேநேயர் உருவத்தை தன் கையில் இருந்த கைத்தடியினால் தொட்டபோது அந்த உருவம் உயிர் பெற்று அசைந்ததாம். அந்த ஆலயத்தில் ஒரு புனிதமான கிணறு உள்ளது. அந்த கிணற்று நீரை நாம் மீது தெளித்துக் கொண்டாலே நம்மைவிட்டு பயம் விலகும் என்கிறார்கள். அந்த குளத்தில்தான் ஆஞ்சேநேயர் மூழ்கிக் கிடந்தார் என்றும் அதை வெளியே எடுத்தே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது எனவும் நம்புகிறார்கள். அந்த ஹனுமான் உக்ரஹமான முகத்துடன் ஒரு பெண் அரக்கியின் மீது நின்றபடி காட்சி தருகிறார். அவர் படைத்த ஹனுமார் உக்ரஹமானவர். அதைக் கண்டாலே பேய், பிசாசுகள் ஓடிவிடுமாம். கோபால்நாத் ஸ்வாமிகள் மறைந்தப் பின் அவருடைய சக்தி வாய்ந்த கைத்தடி அங்கு வைக்கப்பட்டு உள்ளது.
அந்த ஆலயத்துக்கு பேய் பிசாசுகள் பிடித்தவர்கள் வந்து அமர அந்த ஆலயத்து பூசாரி சில மந்திரங்களை ஓதுகிறார். அந்தக் கைத்தடியினால் அவர்களைத் தொடுகிறார். அதன் பின் அவர்களை அந்த ஆலயத்தில் பிரதர்ஷணம் செய்யுமாறு கூறுகிறார். சிலரது தலை முடியை பிடித்துக் கொண்டு கர்ஜனை செய்வது போல மந்திரம் ஓதுவார். தலையை உலுக்குகிறார். அதன் பின் அவர்களைப் பிடித்துள்ள பேய் , பிசாசுகள் ஓடி விடுமாம். இந்தியாவின் பல இடங்களிலும் இருந்து பேய், பிசாசுகள் பிடித்தவர்கள் வந்து குணம் அடைந்து செல்கின்றனராம். முக்கியமாக சனிக்கிழமைகளில் அங்கு செல்வது விசேஷமாகக் கருதப்படுகின்றது. 
அந்த ஆலயத்தில் தினமும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்து மதிய உணவை இலவசமாக அருந்துகிறார்கள். சனிக்கிழமைகளில் அந்த எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகமாக இருக்குமாம்.
ஆலய விலாசம் :
Kothari swami
Shree Kashta Bhanjan HAnumanji MAndir
Salangpur
Talkuka : Barvala
District : Ahmedabad
Pin:- 382451
India
Tel No :- (0271) 241250 / 241202
email id :- manishshheth@gmail.com

Tuesday, October 26, 2010

Badrachalam Raamar Temple

பத்ராசலம் ராமர் ஆலயம்
சாந்திப்பிரியா

ஆந்திரப் பிரதேசத்தில் கம்மம் நகரின் அருகில் உள்ளது பத்ராசலம். அங்குள்ள ராமர் ஆலயம் மிகவும் பிரபலமானது. முன்னொரு காலத்தில் அந்த இடத்தில் இருந்த மலை உச்சியில் பத்ரா என்ற முனிவர் தவம் செய்து வந்தார். அவர் ராமரின் பக்தர். அவர் ராமபிரான் தனது தலை மீது வந்து அமர வேண்டும் என வேண்டிக் கொண்டு தவம் இருந்தார். அப்போது ராமன் சிதை மீட்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இருந்த நேரம். திரும்பி வரும்போது உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவேன் என ராமர் கூறினார். ஆனால் அதை நிறைவேற்றும் முன் ராமர் மற்றொரு அவதாரமான மகா விஷ்ணு அவதாரத்தை எடுக்க வேண்டி வந்தது. ஆகவே அந்த முனிவரின் ஆசையை அப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பின்னர் மகாவிஷ்ணு அவதாரத்தில் இருந்த ராமர் அங்கு வந்து அந்த முனிவருக்கு சீதா சமேத ராமபிரானாக காட்சி தந்தார் . அதனால்தான் அங்குள்ள ராமர் சிலையின் கையில் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் உள்ளது.
ஆனால் அந்த ஆலயம் வந்தது எப்படி? ராமரும் சிதை மற்றும் தனது தம்பி லஷ்மணருடன் அங்கு இருந்து மறைந்தனர். அப்போது அவர் தம்மை சிலையாக அங்கு விட்டுச் சென்று இருந்தார். வெகு காலத்துக்குப் பின்னால் ராமர் ஒரு பெண்ணின் கனவில் தோன்றி தாம் அந்த மலை உச்சியில் ஒரு இடத்தில் புதைந்து உள்ளதாகக் கூறினார். ஆகவே அந்தப் பெண்மணியும் அந்த சிலையை தேடிச்சென்றால். அவள் தனக்கு கனவு வந்த இடத்தை அடைந்தபோது அங்கு ஒரு மண் புத்ரே இருப்பதைக் கண்டால். ஆனால் ராமர் கூறி இருந்ததினால் அங்கு ஓடிக் கொண்டு இருந்த கோதாவரி நதியில் இருந்து நீர் எடுத்து வந்து குடம் குடமாக அந்தப் புற்றின் மீது ஊற்றி அதைக் கரைக்க அந்த சிலை புதைந்து இருந்ததைக் கண்டு வெளியில் எடுத்து அங்கேயே சிறு மண்டபம் எழுப்பி பூஜிக்கத் துவங்கினாள்.
 
நீண்ட காலத்துக்குப் பின் தானா ஷா என்ற முஸ்லிம் மன்னனின் தாசில்தாரராக அந்தப் பகுதியில் இருந்த ராமருடைய பக்தரான ராமதாஸ் அந்த சிலையைக் கண்டு வியந்தார். அவர் மக்களிடத்தில் இருந்து பணம் வசூலித்து அந்த சிலையை வைத்து ராமருக்கு ஆலயம் எழுப்பத் துவங்கினார். ஆனால் பணம் போதவில்லை. ஆகவே அவர் தான் வசூலித்து இருந்த வரிப்பணத்தை அந்த ஆலயம் கட்ட பயன்படுத்தினார். அதைக் கேட்டு கோபமுற்ற மன்னன் அவரை கோல்கொண்டா சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தினான். ராமதாஸ் ராமரையே தன்னை அந்த சங்கடத்தில் இருந்து விடுவிக்குமாறு வேண்டினார். ஆகவே ராமரும் லஷ்மணரும் ஒரு மனித உருவில் வந்து மன்னனிடம் ராமதாஸ் எடுத்துக் கொண்ட பணத்தை திருப்பி விட்டுச் சென்றனர். அதற்கான ரசீதை ராமதாஸிடம் தந்துவிட்டுச் சென்றனர். நடந்த அனைத்து  உண்மைகளைகளையும் பின்னர்  அறிந்து கொண்ட மன்னன் ராமதாசை விடுவித்தான். தானே அந்தக் கோவிலைக் கட்ட நன்கொடை தந்தான்.

Tirumangalakudi Temple

திருமங்கலக்குடி ஆலயம் 
(சூரியனார் ஆலயத்துக்குச் செல்லும் முன் 
கண்டிப்பாக  வழிபடவேண்டிய  ஆலயம்)

சாந்திப்பிரியா
இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து இரண்டு கிலோ தொலைவிலும் உள்ளது.  அங்கிருந்து சூரியனார்  ஆலயம் ஒரு  கிலோ தொலைவில் உள்ளது.  இது  ஒரு முக்கியமான ஆலயம். அதன் பெயர் பிராணதீஸ்வரர் ஆலயம். நவகிரஹ தரிசனம் செய்யப் போகின்றவர்கள் சூரியனார் ஆலயம் செல்லும் முன்னால் முதலில் பிராணதீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னரே சூரியனார் ஆலயம் செல்ல வேண்டும். இல்லை என்றால் அதற்குப் பலன் இல்லை என்கிறார்கள். திருமங்கலக்குடி கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோ தொலைவில் உள்ளது. அந்த ஆலயத்தை மங்களாம்பிகை ஆலயம் என்றும் கூறுகிறார்கள் அந்த ஆலயம் வந்த வரலாறு சுவையானது.
பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த குலோத்துங்க சோழ மன்னன் அந்த இடத்தின் மன்னனாக இருந்தபோது அவருடைய அமைச்சரான அலைவாணர் என்பவர் மன்னனிடம் கூறாமல் அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தி திருமங்கலக்குடியில் ஒரு சிவன் ஆலயத்தைக் காட்டினார். அதைக் கேள்விப்பட்ட மன்னன் கோபமடைந்து அவர் தலையை வெட்டி எரியுமாறுக் கூறினார். அதன்படி அமைச்சரின் தலையை வெட்டினார்கள். அவர் மனைவி அந்த ஆலயத்தில் இருந்த மங்கலாம்பிகையிடம் சென்று' உனக்காகத்தானே என் கணவர் இந்த ஆலயத்தைக் காட்டினார். ஆகவே அவர் என்ன பாவம் செய்துவிட்டார்? அவருக்கு நீதான் மீண்டும் உயிர் பிச்சை தர வேண்டும் என வேண்டினாள். அதைக் கேட்டப்  பார்வதி சிவபெருமானிடம் அந்த பக்தருக்கு மீண்டும் உயிர் தர வேண்டும் என வேண்டினாள். அவரும் அவருக்கு மீண்டும் உயிர் பிச்சை தந்தார். வெட்டப்பட்ட தலை உடலோடு சேர அந்த அமைச்சர் மீண்டும் உயிர் பெற்றார். ஆகவே இறந்தவருக்கு பிராணம் தந்த தலமான அதை பிராணதீஸ்வரர் என்று அழைத்தனர். மேலும்  மாங்கல்ய பாக்கியம் கிடைத்த இடமான அதை திருமாங்கல்யம் தந்தவள் என்ற அர்த்தத்தில் திருமாங்கல்யக்குடி எனவும் அழைக்கலாயினர் .ஆலயத்தில்  உள்ள  சிவலிங்கம்  ஸ்வயம்பு  என்கிறார்கள் .
ஆலயத்தின் மகிமை என்ன என்றால், சூரியனார் ஆலயம் செல்லும் முன் அந்த ஆலயத்துக்கே முதலில் சென்று பிரார்த்தனையை தொடர வேண்டும். முக்கியமாக முதலில் ஆலயத்தில் உள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்க வேண்டும். ( அந்த கோள் தீர்த்த விநாயகர் கதை என்ன? அது பின்னர்) . அதன் பின் ஆலய மண்டபத்தில் உள்ள நடராஜப் பெருமானை வணங்கிவிட்டு அங்கேயே உள்ள காசி விசாலாட்சியையும் வணங்க வேண்டும். அதன் பிறகு அதே மண்டபத்தில் உள்ள சூரியநாரை வணங்கிவிட்டு அவர் எதிரிலேயே அவரைப் பார்த்தபடி உள்ள குருவையும் வணங்க வேண்டும்.  அவர்களை வணங்கியப்பின் அப்பிரதர்ஷணமாகச்  சென்று ( மற்ற  ஆலயங்களில் செய்வதைப் போல வலது புறத்தில் இருந்து சுற்றாமல் இடது புறத்தில் இருந்து சுற்ற ஆரம்பிக்க வேண்டும். இதுவே முக்கியமாக கவனிக்க வேண்டிய  ஒன்று ).  சனீஸ்வரன், புதன், அங்காரகன், சந்திரன், கேது, சுக்கிரன் மற்றும் ராகுவை என்ற இப்படிப்பட்ட வரிசையில் அந்தந்த சன்னதியில் ஆனந்கிவிட்டு கடைசியாக சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். அதை முடித்தப்பின் மீண்டும் பிரதர்ஷணமாக- வலதுபுறத்தில்   திரும்பி மீண்டும் கோள் தீர்த்த விநாயகரை வந்து வழிபட்டப் பின்னரே அந்த ஆலய தரிசனம் நிறைவு பெறும்.
எந்த முறையில் பிராத்தனை செய்ய  பிரதர்ஷணமாகச் செல்ல வேண்டும் என்பதைக் காட்ட அந்த ஆலயத்தில் வழிகாட்டும் பலகை அங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. அது முடிந்தப் பின்னர்தான் அங்கிருந்துக் கிளம்பி சூரியனார் ஆலயம் சென்று அவரை வழிபட வேண்டும். இல்லை எனில் சூரியனை வழிபட்ட பலன் கிடையாதாம். 

Thiruneelakkudi Temple

திருநீலக்குடி சிவன் ஆலயம்
சாந்திப்பிரியா

திருநீலக்குடி என்கின்ற பெருமை வாய்ந்த இடம் கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு உள்ள திருநீலக்குடி என்கின்ற ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஆடுதுறைக்கு பஸ்சிலோ ரயிலிலோ சென்று விட்டால் அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள ஆலயத்தை அடையலாம். ஆலயத்தில் இரண்டு நுழை வாயில்கள் உள்ளன. இரண்டு நுழை வாயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. சன்னதியில் இறைவன் மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஆலயத்தில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தபீஷ்டப்பிரதாயினி . அவள் தவக் கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணக்கோலத்தில் உள்ள இன்னொரு அம்மனின் பெயர் அனுபமஸ்திரி என்பதாகும். இங்குள்ள வில்வ மரத்தில் உள்ள இலையின் ஒரு தளம் ஐந்து இலைகள் கொண்டது என்பது விசேஷம். ஆலயத்தில் வந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணம் விரைவில் நடைபெறும், வியாதிகள் தீரும், ஆயுள் விருத்தி ஆகும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. ஆலயம் வந்த வரலாறும் சுவையானது.
மிருகண்டு என்கின்ற முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க ,சிவனை இறைவனை வழிபட்டு வந்தார். அவர் பக்தியை மெச்சிய சிவனும் அவர் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் ''- நல்ல குணங்களைக் கொண்ட மகனா இல்லை தூய உள்ளம் கொண்டவனையா'' எனக் கேட்க முனிவரும் தனக்கு நல்ல குணம் உடைய மகனே வேண்டும் என்றார். ஆகவே அவருக்கு நல்ல குணமுடைய மகன் பிறப்பான் எனவும், ஆனால் அவன் வயது பதினாறு வருடமே எனவும் கூறி அவருக்கு புத்திர பாக்கியம் தந்துவிட்டு மறைந்தார். பிறந்த குழந்தைக்கு மார்கண்டேயர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். சிவபெருமானின் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது ஆயிட்று . இனி தனக்கு ஆயுள் முடிய உள்ளது என்பதை பெற்றோர் மூலம் அறிந்து கொண்டவர், தன்னுடைய ஆயுள் முடியக் கூடாது என எண்ணினார். . அதற்கு ஒரே வழி மீண்டும் சிவபெருமானை வேண்டுவதே என எண்ணிய மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக சென்று அங்கிருந்த சிவ பெருமானை தரிசித்து வேண்டி வந்தார். அப்போதுதான் அவர் திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். அங்கு வந்து கடுமையாக விரதம் அனுஷ்டித்து சிவபெருமானை தியானிக்க சிவனார் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மார்க்கண்டேயர் தன்னுடைய ஆயுளை நீடிக்க வேண்டும் என வேண்டினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமானும் மார்க்கண்டேயார் அந்த தலத்தில் என்றுமே பதினாறு வயதுடைய இளைஞ்சனாகவே இருக்கட்டும் என வரம் அளித்தார். மார்க்கண்டேயரும் அங்கேயே தங்கி சிவனை வழிபட்டு வந்தார். 
சதுரகிரி  மலை  சிவ  லிங்கம் 
அதன் பின் அமிர்தம் கிடைக்க பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க பார்வதி தேவி அவரின் கழுத்தை எண்ணைப் போட்டு தடவி விட விஷம் அவர் கழுத்தில் தங்கியது. உள்ளே இறங்கவில்லை. ஆகவேதான் அங்குள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார். அந்த தளத்தில் பிரும்மா, வசிஷ்டர் போன்றவர்கள் வந்து சிவனை வழிபாட்டு உள்ளனராம். ஆலயத்தின் அருகில் நான்கு புனித தீர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தில் அதிசயம் என்ன என்றால் அங்குள்ள நீலகண்டேஸ்வரர் ஆலகால விஷத்தை உண்டதினால் அவர் தொண்டையில் தங்கி இருந்த அந்த விஷத்தன்மையைக் குறைக்க நல்லெண்ணை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள். அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எண்ணை அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணையையும் லிங்கத்தினால் உறிஞ்சப்பட்டு விடுகிறது. தொடரும் அதிசயம் என்ன என்றால், எத்தனை எண்ணை ஊற்றி அபிஷேகம் செய்தலும், அதை துணியினால் துடைப்பது இல்லை, தண்ணீர் ஊற்றி அலம்புவது இல்லை. ஊற்றப்படும் எண்ணையும் கீழே வழிவதே இல்லை. லிங்கமே அதை உறிஞ்சி விடுகிறது. மறுநாள் சென்று பார்த்தால் எண்ணெ ஊற்றிய அடையாளமே தெரியாமல் லிங்கம் உலர்ந்து காணப்படும். அபிஷேகம் செய்யப்படும் எண்ணை அனைத்தும் எங்கு சென்று மறைகின்றது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தாலும் சிவலிங்கம் வழுவழுப்பாக இருப்பதற்கு மாற்றாக சொர சொரப்பாகவே உள்ளது. அங்குள்ள லிங்கத்துக்கு அபிஷேகம் செய்த எண்ணையை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

Wednesday, October 20, 2010

Kol Theerththa Vinaayagar

கோள் தீர்த்த விநாயகர் கதை
சாந்திப்பிரியா

நவகிரக ஆலயங்களில் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் ஆலயம் செல்லும் முன் திருமங்கலக்குடி என்ற ஆலயத்துக்கே முதலில் சென்று பிரார்த்தனையை தொடர வேண்டும் என்பது ஒரு விதி. அந்த ஆலயத்தில் முக்கியமாக முதலில் ஆலயத்தில் உள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்க வேண்டும். அந்த கோள் தீர்த்த விநாயகர் யார் ? அவர் கதை இது.
முன்னொரு காலத்தில் பல ரிஷி முனிவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஹிமய மலையின் ஒரு மலைப் பிரதேசத்தில் தவத்தில் இருந்தார்கள். அவர்களில் கால முனிவர் என்பவரும் ஒருவர். அவர் கடந்த காலம், தற்காலம் மற்றும் வரும் காலத்தை பற்றி ஜோதிடம் கூறக் கூடிய தன்மை கொண்டவர். அப்போது அந்த முனிவர்களில் ஒருவர் அனைவரது வரும் காலத்தையும் தெரிவிக்கும் அவருடைய வரும் காலத்தைப் பற்றிக் நினைத்துப் பார்த்தது உண்டா எனக் கேட்டார். அதனால் அந்த கால முனிவர் வரும் காலத்தில் தன்னுடைய நிலை என்ன என பார்த்தார். அதைப் பார்த்தவர் துணுக்குற்றார். காரணம் அவர் பூர்வ ஜென்மத்தில் தவளையின் கால்களை சமைத்து உண்டு இருந்ததினால் அந்த தவளையின் மீது பரிதாபப்பட்ட பிரும்மா இந்தப் பிறவியின் கடைசி காலத்தில் அவர் தொழு நோயாளியாக வேண்டும் என சாபம் கொடுத்து இருந்ததே. அதை தெரிந்து கொண்டவர் மனம் ஒடிந்து போனார். ஆனால் அந்த முனிவர்களில் நல்ல விவேகியான ஒருவர் அவரை அது குறித்து கவலைக் கொள்ளாமல் தெற்குப் பக்கம் சென்று நவக்கிரகங்களின் வழிபாட்டை மேற்கொண்டால் அந்த சாபத்தில் இருந்து அவர் மீளலாம் என கூறினார். அந்த அறிவுரையை கேட்டு கால முனிவர் தென் நாட்டிற்கு வந்து திருமங்கலக்குடி உள்ள இடத்துக்கு வந்து நவகோள்களை வேண்டிக் கொண்டு தவம் இருந்தார். அவர் தவத்தை மெச்சிய கோள்கள் அவர்முன் தோன்றி அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க அவர் தன் நிலையை கூறினார். அவர் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சாப விமோசனம் தருவதாக அவர்கள் வாக்கு தர அதைக் கேட்ட பிரும்மா கோபம் அடைந்தார். அவர் நவக்கிரகங்கள் பூமியில் தனித்தனியாக பிறந்து தொழு நோயால் அவதிப் படவேண்டும் என அவர்களுக்கு சாபமிட்டார். அவர்கள் பிரும்மாவிடம் தம்மை மன்னித்துவிடுமாறுக் கேட்க அவரும் அவர்களை பூமிக்குச் சென்று அர்காவனம் எனும் இடத்தில் காவேரி நதிக்கரையில் எழுபத்தி எட்டு திங்கள் கிழமை விரதம் இருந்து மங்களாம்பிகை ( பார்வதி) சமேத பிரணவர்தரை ( சிவன்) வேண்டிக்கொண்டு சாப விமோசனம் பெறுமாறு கூறினார். அவர்களும் அந்த இடத்துக்குச் சென்று தொழு நோயாளியாயினர். அவர்க்குள் அங்கிருந்த அகஸ்திய முனிவரின் அறிவுரையைக்கு ஏற்ப அவர்கள் செய்யும் தவத்துக்கு இடையூறு இல்லாமல் வேண்டுகோள் நிறைவேற கோலங்களை தீர்க்கும் ஒரு விநாயகரை உருவாக்கி வைத்து முதலில் அவரை வணங்கிவிட்டே தமது விரதத்தை செய்து வந்தனர். விநாயகரும் அவர்களின் தவங்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தான் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார். கால முனிவரும் அவர்களுடன் சேர்ந்து அந்த இடத்தில் தவம் இருக்க அனைவரது சாபங்களும் எந்த விதமான தடங்கல்களும் இல்லாமல் நடந்து முடிய சிவ -பார்வதி அவர்கள் முன் தோன்றி சாப விமோசனம் தந்தனர். அதன் பின் அவர்களை அந்த இடங்களிலேயே குடி கொண்டு பக்தர்களுக்கு நவகிரக தொல்லைகளினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குன்மாறு கூறினார்கள். அந்த ஒன்பது கிரகங்களும் அதை ஏற்று அந்த இடத்தை சுற்றி பல இடங்களில் இடம் பிடித்துக் கொண்டு அமர்ந்தனர். அவர்களுக்கு தலைவரான சூரியனார் தன்னை வந்து வேண்டும் பக்தர்களை முதலில் கோள் தீர்த்த விநாயகரை தொழுத பின்னரே தன்னிடம் வர வேண்டும் எனக் கட்டளை இட்டார். அந்த வினாயகரே கோள் தீர்த்த விநாயகர் என்ற உருவில் திருமங்கலக்குடி ஆலயத்தில் மங்களாம்பிகை சமேத பிரணவர்தருடன் எழுந்தருளி இருக்கின்றார்.

Monday, October 18, 2010

More Temples in Penang

பெனாங் நகரில் அற்புத  ஆலயங்கள்  

சாந்திப்பிரியா

மலேசியா மற்றும் பெனாங்கில் சீன மற்றும் மலாசியா, தாய் நாட்டு மக்கள் வணங்கும் அற்புத ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் உயிருடன் உலவும் பாம்புகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு சென்று அவற்றை பூஜித்து வணங்குகிறார்கள். அது மட்டும் அல்ல சூதாட்டங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வாழ்கையில் வளம் பெறவும் செல்வம் கிடைக்கவும் குபேரனை இன்னொரு பெயரில் அந்த ஆலயங்களில் வணங்குகிறார்கள். பறக்கும் பாம்புகள் அல்லது பறக்கும் விலங்கையும் வணங்கித் துதிக்கும் ஆலயங்களும் அவற்றின் புனிதக் கிணறுகளும் உள்ளன. அவற்றை எல்லாம் படித்து மகிழ  கீழுள்ள தளத்தில் கிளிக் செய்யவும்.     

Sreekoormam - Temple for Vishnu

ஸ்ரீ கூர்மானந்தா எனும் விஷ்ணு ஆலயம் 

சாந்திப்பிரியா
ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளத்தில்  இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ கூர்மானந்தா என்ற விஷ்ணுவின் ஆலயம். அந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணு ஆமையின் உருவில் காட்சி தருகின்றார். அவர் எடுத்த தசாவதாரத்தில் கூர்ம அவதாரம் முக்கியமானது. அமிருதத்தைக்எடுக்க சமுத்திரத்தை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதைக் கடைய தேவர்கள் பயன்படுத்திய மந்தாரா என்ற மலை சமுத்திரத்தில் முழுக இருந்தபோது விஷ்ணு ஆமை உருவில் சமுத்திரத்தின் அடியில் சென்று அந்த மலையை தன் முதுகின் மீது தாங்கி நிற்கும் வகையில் நூறு யோசனை தூர அளவு பெரிய ஆமையானார்.
விஷ்ணு  மந்தார மலையை தன் முதுகின் மீது சுமந்த காட்சி  
 அந்த அவதாரத்தைக் குறிக்கும் வகையில் விஷ்ணு  ஆமை வடிவில் இங்கு எழுந்து உள்ளார். மேலும் அத்தனைப் பெரிய மலையைத் தாங்கி நின்றது போல தன்னை அங்கு வந்து வணங்கி நிற்கும் அனைவரது அத்தனை கஷ்டங்களையும் தாம் சுமந்து கொண்டு அவர்களைக் காப்பேன் என்பதை விளக்கும் தத்துவமாம் அந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணுவின் அவதாரம். 
 
கர்பக் கிரகத்தில் ஆமை வடிவில் உள்ள விஷ்ணுவின் சிலை 

கர்பக் கிரகத்துக்கு முன்னால் உள்ள நுழை வாயிலில் மகாலஷ்மி உருவம்
ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் உள்ள அந்த ஆலயம் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. இந்தியாவிலேயே இந்த ஒரு ஆலயத்தில்தான் விஷ்ணு ஆமையின் உருவில் காட்சி தருகிறார். ஸ்ரீகூர்மத்தில் உள்ள அந்த ஆலயத்துக்குச் செல்ல ஸ்ரீகாகுளத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவு பயணம் செல்ல நல்ல பாதை உள்ளது. பஸ் மற்றும் டாக்ஸி வசதிகள் உள்ளன. ஹைதிராபாத் ,விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்ரீகாகுளம் செல்ல ரயில் மற்றும் பஸ் வசதிகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் இருந்து  ஸ்ரீகாகுளம் சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
 ஆலயத்தில் மூலவர் உள்ள அறையின்  தோற்றம்
ஆலயத்தின் வரலாற்றைப் பற்றி கூறப்படும் கதை இது. கலிங்க தேச மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது அங்கு மாதவாச்சாரியா மற்றும் ஆனந்த தீர்த்தா என்ற மகான்களின் சீடராக இருந்தவர் நரஹரி தீர்த்தா என்பவர்.அவர் பூர்ண ப்ரஜன்னா என்ற மற்றொரு சுவாமிகளிடம் இருந்து தீஷை பெற்றபோது அவரை கலிங்க தேசத்தில் இருந்த கஜபதி நாட்டுக்குச் சென்று மன்னன் பதவியை ஏற்று ராமரின் பெருமையைப் பரப்புமாறு கூறினார். அதை ஏற்ற நரஹரி தீர்த்தாவும் அந்தப் பதவியை ஏற்று ராமபிரானின் பெருமையை அனைத்து இடங்களிலும் பரப்பி வந்தார். அந்த நேரத்தில் ஒருநாள் அவருக்கு கனவில் விஷ்ணு தோன்றி தான் துங்கபத்திரை நதியில் முழுகி உள்ளதாகவும் தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்து வழிபடுமாறும் கூறினார். அவரும் அதன்படி இப்போது ஆலயம் உள்ள இடத்தின் அருகில் ஓடிக்கொண்டு இருந்த நதியில் முழுகிக் கிடந்த விஷ்ணுவின் சிலையை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்தார். 
இன்னொரு கதை என்ன என்றால் அந்த ஆலயம் உள்ள இடத்தில்தான்  விஷ்ணுவானவர் ஸ்வேதமகிபதி  என்ற மன்னனுக்கு காட்சி தந்தார். அந்த மன்னன் இறந்தப் பின் அவருடைய எலும்புகளை அங்குள்ள குளத்தில்தான் வீசினார்கள். அவை அனைத்தும் ஆமைகளாக மாறி விட்டனவாம். ஆகவே அந்தக் குளத்தை புனிதமாகக் கருதி அந்த குளத்தில் எவரையும் குளிக்க அனுமதிப்பது  இல்லை. 
அந்தக் குளம் வந்த வரலாறு பற்றியும் ஒரு கதை உள்ளது. அந்த இடத்தின் அருகில் இருந்த இடத்தை ஆண்டு வந்த சுதா என்ற ஒரு மன்னன் ஒரு நாள் காமம் கொண்டு தனது மனைவியிடம் செல்ல அவள் தான்  விஷ்ணுவை வேண்டி விரதத்தில் உள்ளதால் அன்று தன்னால் இன்பம் தர இயலாது எனக் கூறியும் அவன் அதைக் கேட்காமல் அவளிடம் நெருங்க  தன்னுடைய பக்தியின் விரதம் கலையக் கூடாது என எண்ணிய  ஸ்ரீ கூர்மானந்தா ( விஷ்ணு ) அவர்களுக்கு இடையே வம்சதாரா எனும் நதியை ஓடவிட்டார். அதனால் மனம் நொந்து போன மன்னன் அந்த நதிக் கரையிலேயே விஷ்ணுவை வேண்டித் தவம் இருக்க விஷ்ணு அவருக்கு ஆமை வடிவில் - கூர்மாவதாரக் காட்சியில்- தரிசனம் தந்து தமது சக்கரத்தை ஏவி பூமியில் ஒரு குளத்தை ஏற்படுத்தினார் . அதுவே அந்த ஆலயத்தின் புனித ஷேத்திரமாயிற்று. 
அந்த  குளத்தில் ஒருநாள் குளிக்க வந்த ஒரு ஆதிவாசி தம்பதியினருக்கு விஷ்ணு அங்கு ஆமை வடிவில் காட்சி தர அவனே அந்த குளத்தில் முழுகுக் கிடந்த விஷ்ணுவை வெளியில் எடுத்து சிறு வழிபாட்டுத் தளம் அமைத்தான். அதை மன்னன் சுதா பெரிய ஆலயமாக மாற்றி அமைத்தாராம்.  இந்த ஆலயம் பற்றிய மகிமையை வியாச முனிவர் பிரம்மானந்தா மற்றும் பத்மா புராணங்களில் எழுதி உள்ளதாகக் கூறுகிறார்கள்.