Tuesday, August 31, 2010

Sri Amritananda Natha Saraswati (Guruji)

தேவிபுர ஸ்ரீ குருஜி

சாந்திப்பிரியா

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ சக்கரம் என்பது மகிமை வாய்ந்த சக்கரம். அதை பூஜித்து வணங்கி வந்தால் வாழ்வில் செல்வம், இன்பம், மற்றும் ஆரோக்கியம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் அதை யந்திரமாக வைத்து தவறான முறையில் பூஜிக்கக் கூடாது. நமக்கு நல்ல பலன் கிடைக்க குருவின் உதவில் இல்லாமல் யந்திர உபயோகம் செய்வதை விட சிறந்ததுதும் சுலபமானதும் என்ன என்றால் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அதை பூஜை அறையில் அரிசி கோலமாகப் போட்டு மஞ்சள் மற்றும் குங்குமத்தினால் ஆன வண்ண பொடிகளைத் தூவி, நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்து ஆராதிக்கலாம்.
ஸ்ரீ சக்கிரம் போடுவது எப்படி?  அது மிகவும் கஷ்டமான கோலம் ஆயிற்றே என யோசிக்க வேண்டாம். அது போடும் முறையை நாம் புரிந்து கொண்டு விட்டால் அதை போடுவது சுலபம்.


டாக்டர் பிரஹலாத சாஸ்த்ரி என்பவர் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். இளம் வயது முதலேயே ஆன்மீக ஈடுபாடு அதிகம் கொண்டவர். அணு ஆராய்ச்சியில் பௌதீகத்தில் பாடம் படித்தவர். மும்பை பல்கலை கழகத்தில் டாக்டரேடு பட்டம் பெற்றவர். டாடா பாண்டமெண்டல் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றியவர். அவர் ஆத்மாவின் உண்மை என்பது என்ன என்பதை அறிய முனைந்தவர். 1977 ஆம் ஆண்டு ஹைதிராபாத்தில் பாலாஜி ஆலயம் சென்றவருக்கு தன்னை அறியாமல் ஏதோ ஆன்மீக உணர்வு ஏற்பட்டது. அன்னை பால திருபுர சுந்தரியிடம் இருந்தே முதல் பாடம் அவருக்குக் கிடைக்க அவர் ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார். அவர் அனகப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீ ஸ்வப்ரகாஷானந்த நாத தீர்த்த அவதூதரிடம் தீட்ஷை பெற்றார். ஜாம்பியா நாட்டுக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் வேலை செய்தார். 1981 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்தார். வந்தவருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம் வர  ஸ்ரீ வித்யா உபாசனை செய்து வரலானார்.
தேவிபுர ஆலயத்தின் தோற்றம்
மெல்ல மெல்ல அவர் பலருக்கும் செய்து வந்த உதவியின் காரணமாக ஒரு குடும்பம் அவருக்கு இலவசமாக நிலம் தந்து ஒரு ஆலயத்தைக் கட்டுமாறு வேண்டிக்கொள்ள அவர் தேவியின்  ஆலயத்தைக் கட்ட முயன்றார். தேவிபுரம் ஆலயம் உள்ள அதே இடத்தின் அருகில் இருந்த ஒரு மழைக் குன்றில் அமர்ந்து த்யானம் செய்து வந்தவர் ஒரு நாள் தன் மீது நான்குபேர் அமர்ந்து கொண்டு தீ மூட்டி ஹோமம் செய்வது போலவும் அது முடிந்ததும் தன்னுடைய மார்பில் ஏதோ ஒரு கனமான பொருள் ஆகாயத்தில் இருந்து வந்து வைத்ததைப் போல இருந்ததை உணர்ந்தார். திடுக்கிட்டு எழுந்தவர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க அங்கு பஞ்சலோகத்திலான ஒரு மேருவின் சிலை இருந்ததைக் கண்டார். அது சுமார் இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதைக் தெரிந்து கொண்டார். அவருக்கு அன்னை காமாஷி பதினாறு வயதான பெண்ணாகவே காட்சி தந்தாள். 
மெல்ல மெல்ல காமாஷி அம்மன், சிவபெருமான் போன்ற இருவருக்கும் ஆலயம் அமைத்தவர் தேவிபுரத்தில் ஸ்ரீ மேரு நிலையத்தை துவக்கினார். சுமார் ஐம்பத்து நாலு அடி உயரமான ஸ்ரீ மேரு ஆலயம் மூன்று அடுக்குகளானது. தேவி கடகமாலா ஸ்தோத்திரத்தில் உள்ளதைப் போல மூன்று தேவிகளின் உருவச் சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தில் ஜாதி பேதம் இன்றி அனைவரும் தாமே ஸ்ரீ சக்கர பூஜை செய்யும் விதத்தில் அனைத்தும் அமைக்கப்பட்டு உள்ளன. ஆலயத்தை ஆகாசத்தில் இருந்து பார்த்தால் ஸ்ரீ சக்கர வடிவிலேயே உள்ளதை காணலாம். அவர் மனைவியான ஸ்ரீமதி அன்னபூர்ணாம்பாவுடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வதித்துக் கொண்டு உள்ள அவர்களை ''குருஜி'' மற்றும் ''குருஜி அம்மா'' என  அன்புடன்  மக்கள் அழைக்கின்றனர்.
அவர் ஸ்ரீ சக்கர கோலம் போடும் முறையை எளிய முறையில் தந்து உள்ளார். அதை மாதிரியாகக் கொண்டு அனைவரும் பூஜை அறைகளில் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ சக்கர கோலம் போட்டு ஆராதிக்கும் முறையில் தமிழில் கோல முறையை தனியாக கீழே தந்து உள்ளேன்.

Pancharama Shetra - Anthra Pradesh

 பஞ்ச லிங்க ஷேத்திரங்கள்
ஆந்திரப் பிரதேசத்தில் ஐந்து சிவ லிங்க ஆலயங்கள்

சாந்திப்பிரியா

ஆந்திரப் பிரதேசத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிக அளவிலான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமானது பஞ்ச லிங்க ஷேத்ர ஆலயங்கள். ஐந்து சிவாலயங்களை உள்ளடக்கியது அந்த ஐந்து ஷேத்ரத்தில் உள்ள ஆலயங்கள். அந்த ஆலயங்களைக் கட்டியவர்கள் இந்திரன், சந்திரன், சூரியன், மஹா விஷ்ணு மற்றும் குமாரசுவாமி என்கிறார்கள். அந்த ஐந்து சிவாலயங்களிலும் உள்ள சிவ லிங்கங்கள் ஒரே ஒரு சிவ லிங்கத்தில் இருந்து வெளிவந்த ஐந்து சிவ லிங்கங்கள் என்று புராணக் கதையைக் கூறுகிறார்கள். அந்த ஐந்து ஆலயங்களும் வந்த பல கதைகள் இவை. 
 அமரேஸ்வரர்  ஆலய சிவ லிங்கம்
தாரகாசுரன் என்ற அசுரன் சிவ பக்தன். அவன் தனது தொண்டையில் சிவ பெருமானிடம் இருந்து பெற்ற ஒரு சிவ லிங்கத்தை அடக்கி வைத்து இருந்ததினால் அவனை எவராலும் வெல்லவோ அடக்கவோ முடியாமல் இருந்தது. ஆகவே அவனை அழிக்க அவதாரம் எடுத்த முருகப் பெருமான் தாரகாசுரனை யுத்தத்தில் வென்று அவன் தொண்டையை நோக்கி ஆயுதத்தை வீச அவன் தொண்டையில் மறைத்து வைத்திருந்த சிவ லிங்கம் வெளியில் விழுந்தது. விழுந்த வேகத்தில் அது ஐந்து துண்டுகளாகச் சிதறி பல்வேறு இடங்களில் விழ அவை பஞ்ச லிங்க ஷேத்திரங்கள் ஆயின. அவை அமராவதி, தஷராமம், பீமாவரம் , பலகோல் மற்றும் சமல்கோட்டா என்ற ஐந்து இடங்கள் ஆகும். அவற்றில் மிகப் பெரியது   சுமார் பதினைந்து அடி உயரமான சிவ லிங்கம் . அது அமராவதியில் உள்ள  அமரேஸ்வரி ஆலயத்தில்  உள்ளது.
இன்னொரு கதை என்ன எனில் கோதாவரி நதிக்கரையில் இருந்த ஜமதக்கனி, அத்ரி , கௌதம , பாரத்வாஜ ,கௌசிக , வசிஷ்ட மற்றும் காஷ்யப  போன்ற ஏழு முனிவர்கள் ஒரு சிவ லிங்கத்தை வணங்கி வந்தனர்.  தினமும் சிவனை பூஜிக்கும்  தன்னால் அந்த முனிவர்களுக்கு தொல்லை  இருக்ககூடாது என நினைத்த  சூரிய பகவானே அந்த சிவலிங்கத்தில் இருந்து ஐந்து சிவ லிங்கங்களை  படைத்து  ஐந்து இடங்களில் வைத்து தான் வணங்கி வந்தாராம். அவையே அந்த ஐந்து ஷேதிரத்திலும் உள்ள பஞ்ச லிங்கங்கள். இன்னொரு கதை என்ன எனில் திருபுர சம்ஹாரத்தில் மூன்று அசுரர்களை அழித்த சிவன் கௌசிக முனிவரின் பிள்ளையான உபமன்யு தான் தினமும் வணங்கும் சிவனாருக்கு அபிஷேகம் செய்ய  தனக்கு தடங்கல் இன்றி  தொடர்ந்து பால் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கேட்டபோது ஒரு  சிவ லிங்கத்தை ஐந்து துண்டுகளாக்கி ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்து அந்த ஷேத்ரங்களில் இருந்த குளங்களில் பாலாற்றை  ஓட வைத்தாராம்.  
இப்படிப்பட்ட அந்த ஐந்து ஆலயங்களைப் பற்றிய செய்திக் கட்டுரை தனியாக  வெளிவரும்.  

Patti Ponnandaal Suga Munivar Preached Parishat

பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய 
சுக  முனிவர் சொன்ன கதை- பாகவதத் துளிகள் 


முன்னுரை:-
 ஸ்ரீ கிருஷ்ணாய நமஹா
ஸ்ரீ வியாச குருப்யை நமஹா
பரமனுக்கும் சுயப் பிரகாசனுக்கும் அனந்த  கோடி  நமஸ்காரங்கள். பரம் பொருளே அனைத்து பிரபஞ்சத்துக்கும் மூல காரணம். அதன் வளர்ச்சியும், ஒடுக்கமும் பஞ்ச பூதங்களின் சேர்கையினால்தான். பிருமாண்டத்தையே சரீரமாகக் கொண்டவன். அவனே விராட்டி புருஷன். அவனுடைய கண் சூரியன். வாய் அக்னி. மனது சந்திரன். முகம் பிராமணன். புஜம் சத்ரியன். தொடை வைஷ்யன். என இந்தப் பிரபஞ்சமே பகாவானின் ஸ்தூல சரீரமாக உள்ளது.
 நாரத முனிவர் வியாசரை  ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றுமாறு கூறினார் 
http://www.maransdog.net/TVG/picture.php
பாகவத கர்நாம்ருத கர்னாம்ருத சரித்திரம் என்ற நூல்  மக்கா முனிவரான வியாசரால் இயற்றப்பட்டு அவருடைய மகன் சுகப் பிரும்ம ரிஷியினால் பிரசாரம் செய்யப்பட்டது.
கல்ப விருஷத்தில் பழுத்தக் கனி இருந்தது. அதை சுகர் என்ற கிளி ஒன்று கொத்தி சுவைத்துக் கொண்டு இருந்தபோது அதை கீழே நழுவ விட்டது. அதுவே சுகப் பிரும்மம். அதற்கு ஈடு எனை கிடையாது. நாரதர் சொல்படி வியாசர் எழுதிய  இந்தப் புராணத்தை ஏழு நாட்களாக பரிஷித் மன்னனுக்கு நைமீஷாரண்யத்தில்  சுகப் பிரும்ம ரிஷி கூறினாராம்.  அதில் இருந்து சில துளிகள் கீழே உள்ளவை. படித்து ஆனந்தம் பெறுங்கள்.


சுக முனிவர் கதை சொல்ல ஆரம்பித்தார்
படம் நன்றி:-  http://www.maransdog.net/TVG/picture.php

சுக முனிவர் மன்னன் பரிஷித்துக்கு கூறிய கதை
சுக முனிவர் மன்னன் பரிஷித்துக்கு  கூறினார்  '' ஹே ராஜனே ஸ்வயம்பு மனுவின் மூத்த மகன் பிரியவ்ரதன் வம்சத்தைப் பற்றிய கதையைக் இப்போது கூறுகிறேன் கேள். அவன் நாரதரிடம்  உபதேசம் பெற்றவன். உலக வாழ்கையில் இச்சை இல்லாதவன். அச்சரமம் அமைத்து அத்மபோதாவிசாரத்தில் ஆழ்ந்து இருந்தான். ஒரு முறை பிரும்மா அவனைப்  பார்க்க வந்து இருந்தார். அவர் கூறினார்  'அப்பா நாம் எல்லோரும் கடவுளின் கை பொம்மையே. அவன் அட்டுவிக்கும்படி நாம் ஆடியே தீர வேண்டும். மேலும் ஞானம் மற்றும் ஆத்மா , போதம் போன்றவற்றை  சம்சார வாழ்வில் இருந்து கொண்டும்  பெறலாம். அதற்கு மனக் கட்டுப்பாடும் அடக்கமுமே தேவை. கிரஹாச்ரமம் என்பது  எந்த விதத்திலும் குறைவில்லாதது. ஆகவே நீயும் உன் தந்தையின் சொல்படி நடந்து வம்ச விருத்தியை ஏற்படுத்தி உரிய காலத்தில் வைராக்கியம் பெற்று மோட்ஷத்தையும்  அடையலாம்'. அதை கேட்ட பிரியவ்ரதன் பிரும்மாவின் அறிவுரைப்படி தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற  சம்மதித்தார். விஸ்வகர்மாவின் பெண்ணான பர்ஹிஷ்மதியை மணந்து கொண்டு ஊர்ஜச்வதி என்ற ஒரு பெண்ணையும் பத்து பிள்ளைகளையும் பெற்றெடுத்தார். அவர்களில் மூன்றுபேர் பக்தநிஷ்டர்களாக இருந்து விட்டு  முக்தர்கள் ஆனார்கள். மற்றொரு மனைவி மூலம் கிடைத்த மூன்று பிள்ளைகள் மன்வந்த்ரங்களுக்கு அதிபதியானார்கள்.
சூரிய வெளிச்சம் முழுக்க ஒரு பகல் இருக்க , ஒரு இரவு என  இரவு பகல் ஏற்பட அரசன் ஆசைப்பட்டு அதற்காக பகவானை ஆராதித்து தன ரதத்தில் ஏறி மேரு மலையை ஏழு தடவை சுற்றி வந்தார். அந்த ரதம் ஏறியதினால்  ஏற்பட்ட  பள்ளங்கள் ஏழும் சமுத்திரங்களாயின . அவற்றின் இடையிலுள்ள பகுதிகள் ஜம்பூததீபமானது. அதில் ஜம்பூத்வீபம் முக்கியமானது. நாம் சங்கல்பங்கள் எடுத்துக் கொள்ளும்போது 'ஜம்பூத்திவே, பரதகண்டே' எனக் கூறுவது உண்டல்லவா? அதுவே இதுவும். தனது பெண்ணான ஊர்ஜச்வதியை சுக்க்ராச்சாரியாருக்கு மணம்  முடித்தார். அவர்களுக்குப் பிறந்தப் பெண்ணே தேவயானி. பிரியவ்ரதன் இப்படியாக  தனது கடமைகளை செய்து முடித்தப் பின் உலக வாழ்வை துறந்து ஞானம் பெற்று முக்தி அடைந்தான்.
 பன்னிரண்டாம் நூற்றாண்டு சிற்பம்:- அப்சரா
படம் நன்றி :- http://en.wikipedia.org/wiki/Apsara
அடுத்து அவனுடைய மகன் அங்கீதரன்  அரசனானான். சத் புத்திர பாக்கியத்தை வேண்டி மந்திர மனையடியில் தவம் இருந்தபோது பிரும்ம தேவன் அனுப்பிய அப்சரா  எழுப்பிய சலங்கை ஒலியைக்  கேட்டு அவன் தவம் கலைந்தது. அவன் அவளை மோகித்து அவளை மணந்து கொண்டு ஒன்பது பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டான். ஜம்பூததீபத்தை ஒன்பதாகப்  பிரித்து தனது ஒன்பது பிள்ளைகளுக்கும் அதை தந்தான். அதன் பின் அவனுடைய மனைவி பூர்வசித்தி சுவர்க்கத்துக்குச் சென்று விட அவள் பிரிவால் வருந்தியவன் தானும் உலகை துறந்து விட்டான்.

நாபியின்  சரித்திரம்
அங்கீதரனின் முதல் குமரன் நாபி என்பவர். அவர் மேரு பர்வதத்தின் மகளை மணந்து கொண்டார். அவர்களுக்கு பல காலம் குழந்தை பிறக்கவில்லை என்பதினால் பரம புருஷரை பல காலம் ஆராதித்து வந்தான். மகிழ்ச்சியுற்ற பகவான் அவர் முன் பிரசன்னமானார். அங்கிருந்த ரிக் வித்துக்கள் உடனேயே   அவரை நோக்கி ஸ்தோத்திரம்  செய்யத் துவங்கினார்கள்.  அவர்கள் கூறினார்கள் '' பகவானே துளசி  , அருகம்புல் , ஆஷதை போன்ற எளிய பொருட்களைக் கொண்டு உன்னை துதித்தாலும் நீ திருப்தி அடைந்து உள்ளாய்.  பக்தர்களிடம் நீ காட்டும் அன்பை அது காட்டுகின்றது. எங்கள் ஆராதனை சொற்பமானது என்றாலும் உன்னுடைய கருணை அளவில்லாதது.  கொட்டாவி, தும்மல், இருமல், மரணம், துக்கம், தடுக்கி விழுதல் போன்ற எந்த எங்கள் நிலையிலும் உன் நினைவு எங்களிடம் இருந்து மறையாது. உன் நாமத்தை சொல்லிக் கொண்டுதான் இருப்போம். அனைத்தையும் கொடுக்கவல்ல உன்னிடம்  நாங்கள் யாசிப்பது  குபேரனிடம் உமியை யாசிப்பது போல இருக்கும். ஆனாலும் எங்களுடைய எஜமானனான நாபிக்கு சந்தான பாக்கியம் வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை. நாங்கள் இப்படிக் கேட்பதில் குற்றம் இருந்தால் எங்களை மன்னித்து அருள வேண்டும்'' என்றார்கள். அதை  கேட்டு மகிழ்ந்த பகவானும் தானே அவருக்கு  குழந்தையாகப் பிறக்கின்றேன் என உறுதி அளித்தார்.
ரிஷப அவதாரம்.
பகவான் கூறியபடியே அவரும் காளைப்  போல கம்பீரமான தோற்றம் கொண்ட ஆண் மகனாக அவர்களுக்குப் பிறந்தார். அந்தக் குழந்தை பிறந்து பெரியவனானதும், ஆட்சியை ஏற்றான். அவன் ஆட்சியைக் கண்டு பொறாமை கொண்ட இந்திரன் அவன் நாட்டில் மழை பொழிவதை நிறுத்தி விட தனது யோகா சக்தியினால் ரிஷபன் அதை முறியடித்து  விட்டான்.  அதனால் தோற்றுப்  போன இந்திரனே தன்னுடைய பெண்ணான ஜெயந்தியை அவருக்கு மணமுடித்துத் தந்தான். அவர்களுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் முக்கியமானவர் பரத தேசன் என்பவர்.  அவர் ஆண்டது பாரத தேசம்.  மற்ற பிள்ளைகள் சிலர் வேதியர்களாகவும்   வேறு சிலர் பாகவதர்களாகவும் ஆனார்கள்.  ரிஷபனும் வர்ணாஷ்ராமத்தை  அனுஷ்டித்து வந்தான். சம நோக்கு, மற்ற ஜீவன்களிடம் அன்பு காட்டுதல், ராஜ த்வேஷம் இல்லாமை,  மற்றவர் துக்கத்தில் பங்கு கொள்ளுதல் போன்றவற்றை தானும் அனுஷ்டித்து, மற்றவர்களுக்கும் அதை உபதேசித்தார்.  நூற்றுக் கணக்கான யாகங்களை செய்தார். ரிஷிகள் கூடி இருந்த பிரும்மவர்த்த தேசத்தில் தன்னுடைய பிள்ளைகளுக்கு தர்மோபதேசம் செய்தான்.  அவன் செய்த தர்மோபதேசம் பகவானே அவனுக்கு சொன்னது. அதையே  மீண்டும் ரிஷபன்  '' இந்த மானிட ஜென்மம் கிடைப்பதற்கு அரியது. அதை மிருகம் போல வாழ்ந்து வீணடிக்காமல் ஸ்வதர்மம், பாகவதாதனம், தவம் போன்றவற்றை செய்து வளர்க்க வேண்டும். தேகம் அழியக் கூடியது, ஆனால் ஆத்மா மட்டுமே அழிவில்லாதது. பக்தி ஒன்றே என்னை அடையும் சாதனம். ஆகார நியமம், இந்திரிய நிர்ரகம், பிரும்மச்சர்யம், சர்வமும் பிரும்ம மயம் என உணர்தல், பேச்சை அடக்குதல், தானத்தில்  ஈடுபாடு, வேதாந்தத்தை ஆராதித்தல் முதலியன. பிராமணர்கள் எனக்குப் பிரியமானவர்கள். சுயநலம் இல்லாதவர்கள்''  எனக்  கூறினார். 
அதன் பின் பரதனுக்குப் பட்டத்தைக் கட்டி ராஜ்யத்தை விட்டு வெளியேறினார். பித்தனைப் போல பல இடங்களிலும் சுற்றித்  தெரிந்தார். பல சித்திகளைப் பெற்றார். அவரால் ஆகாயத்தில் சஞ்சரிக்க முடிந்தது , மனோ வேகத்தில் செல்ல முடிந்தது, ஒரு சரீரத்தில் இருந்து என்னொரு சரீரத்தில் புகுதல், தூர்தர்சனம், ( வெகு தூரத்தில் உள்ளதைப் பார்த்தல்) , தூரச்ஸ்ரவனம் ( வெகு தூரத்தில் உள்ளவர்களிடமும் இருந்த இடத்தில் இருந்தே பேசுதல்) போன்ற சக்திகளைப் பெற்று இருந்தார்.  ஆனால் அவற்றை அவர் துர்உபயோகம் செய்யாமல் ஆத்மா நிஷ்டையில் இருந்தவாறே  தேக வியாகம் செய்து கொண்டார்.
படம் நன்றி:-  http://www.maransdog.net/TVG/picture.php
ஜட  பரதர்  சரித்திரம்  
 அடுத்து பரதன் ஆட்சிக்கு வந்து  பஞ்சஜநினியை மணந்து ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தார். அவர் அக்னியோத்ரம் போன்ற பல யாகங்களை  பண்ணி பகவானை ஆராதிக்க அவன் பெயரால் இருந்த அஜநாபம் என்றப பெயர் போய்  பாரத தேசம் என ஆயிற்று.  இப்படியாகத்தான் பாரத தேசம் என்ற பெயர் வந்தது. பல்லாண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்தப் பின்  தன்னுடைய பிள்ளைகளிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு கண்டகி நதிக்கரையில் புலஹருடைய ஆசிரமத்துக்குப் போய் தியானத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நதியில் நீராடிவிட்டு நித்ய கர்மானுஷ்டம் செய்து கொண்டு இருக்கையில் கருவுற்ற மான் ஒன்று நீர் பருகிக் கொண்டு இருப்பதைப் பார்த்தார்.  அப்போது எங்கிருந்தோ வந்த சிங்கத்தின் கர்ஜனைக் கேட்ட மான் துள்ளி குதிக்க அதன் வயிற்றில் இருந்த சிசு நீரில் விழுந்தது.  அதை கண்ட ஜடபரதர் தவம் கலைய நீரில் திண்டாடிக் கொண்டு முழுக இருந்த மான் குட்டியை பார்த்தார். நதியில் குதித்து அதை காப்பாற்றி கரை சேர்த்தார்.   நாளுக்கு நாள் அதன் மீது பாசம் வளர்ந்தது. அது அவருடைய நித்ய வழிபாடுகளைக் குறைத்தது.  தவ வாழ்கை இப்படியாகக் குறைய மரணம் வந்தது. சாகும்போது அவர் மானின் நினைவாகவே இருந்ததினால் அவர் அடுத்த ஜன்மத்தில் மானாகப் பிறந்தார். அப்போதுதான் தன் தவறை உணர்ந்து அந்த ஜென்மத்தில் அங்கும் இங்கும் சுற்றித் தெரிந்து உயிர் நீத்தார். அடுத்து அவர் ஆங்கீரச கோத்திரத்தில் பிறந்த பிராமணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார்.  எப்பொழுதும்  பூர்வ ஜென்ம பிறப்பு அவருக்கு நினைவுக்கு வர இந்த ஜென்மத்திலாவது நல்லபடியாக கடை தேற வேண்டும் என நினைத்தவர் பித்தனைப் போலவே சுற்றித் திரிந்தார்.  அவரை ஊர் மக்கள் ஏசினார்கள். விரைவில் பெற்றோரும் கால கதி அடைந்துவிட அவருடைய உடன் பிறந்தோரும் அவரை ஒதுக்கி துரத்தி விட்டனர். வரும் வழியில் சிலர் அவரை மனித பலியாக காளிக்கு கொடுக்க முனைந்தபோது காளியே அவதரித்து அவர்களைக் கொன்று அவரை காப்பற்றி அனுப்பினாள்.
படம் நன்றி:-  http://www.maransdog.net/TVG/picture.php
பக்தி  ஸ்ரமனையோடு  இருந்தவருக்கு ரகுகுணன் என்ற அரசனிடம் பல்லக்கு தூக்கும் வேலை கிடைத்தது.  ஆனால் அவருடைய  பல்லக்கு தூக்கும் ஏற்ற தாழ்வில் மன்னனுக்கு சிரமம் உண்டாக அவர் கோபமுற்று  வார்த்தைகளைக் கொட்டி விட்டார்.  உன்னை தண்டிக்கின்றேன்  எனக் கூறிய மன்னனைப் பார்த்து ' நீ யாரை தண்டிப்பாய்? இந்த உடலையா இல்லை அதனுள் உள்ள ஆத்மாவையா?. உன்னால் என்னுடைய ஆத்மாவை நீ தண்டிக்க முடியாது மன்னா , ஏன் எனில் இன்று நீ அரசன், நான் சேவகன்,  நாளை நான் அரசனாகலாம், நீயும் சேவகனாகலாம்.  இந்த சூழ்நிலையில் தவித்துக் கொண்டு இருக்கும் எனக்கு உன்னுடைய தண்டனை பிசைந்த மாவை மீண்டும் பிசைவதற்கே    ஒப்பானது. ''.அதைக் கேட்ட மன்னன் துணுக்குற்றான். இத்தனை தத்துவம் பேசும் இவர் சாதாரண மனிதரல்ல...பெரிய ஞானியாகவே இருக்க வேண்டும் என நினைத்து தான் தேடிப்போகும் கபிலரே இவர்தானோ என ஐயம் கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரி தனக்கு தத்வோபதேசம் செய்யுமாறு வேண்டினான்.  அதை ஏற்றுக் கொண்ட ஜட பரதர் அந்த மன்னனுக்கு  ஆத்மா ஞான போதனை  செய்தார்.
 ஜட பரதர் மன்னனுக்கு   போதனை  செய்தார்.
படம் நன்றி:-  http://www.maransdog.net/TVG/picture.php
அவர் மன்னனுக்குக் கூறினார் '' மன்னனே இந்த உலகமே சொப்பனம் போன்றது. சொப்பனம் கலைந்து   எழுவது போல இதுவும் நிலை இல்லாதது. நான் என்பது நமது உடல் அல்ல. அதனுள் உள்ள ஆத்மாவே. ஆத்மஞான  ஸ்வரூபியாய், சர்வ வ்யாபகனாய் ஒவ்வொன்றிலும் ஒரே ரீதியில் பரவி  உள்ள பரமாத்மாவே வாசுதேவன் எனப்படுபவர். சத்சங்கத்தினால் அவரிடம் பக்தியும் அதன் மூலம் கிடைக்கும் முக்தியையும் பெறலாம்.  நானும் ஒரு ஜென்மத்தில் அரசனாக இருந்து, மான் ஜென்மம் எடுத்து  மரித்து இப் பிறவியில் பற்றற்றவனாக இருக்கிறேன். சம்சாரம் என்பது ஒரு காடு. அதில் சுற்றித் திரியும் சிங்கம், புலி போன்றவை ஆபத்தானவையே. காட்டில் உள்ள சிங்கம் மற்றும் ஓநாய்கள்  மானைக் கவ்விப் பிடிப்பது போல மனித உடலில் உள்ள இந்திரியங்களும் திருடர்களே.  மனைவி, மக்கள் என்ற பந்தம் மனித உடலைக் கவ்விப் பிடிக்கின்றது. கானல் நீரை  தேடி ஓடுவது போல மனிதன் காமத்தால் ஈர்க்கப்படுகிறான். ஜீவனும் ஒரு  வணிகன்.  பிரவிர்த்தி மார்கத்தில் செய்யும் எந்த காரியமுமே ஒருவரை சம்சார சாகரத்தில் தள்ளி விடும்.  நிவ்ருத்தி மார்கமே ஏகபரத்தில் ஆனந்தத்தை தருவது. ஆகவே அரசனே உன் மனதில் உள்ள ஆசையை விட்டு விடு , இன்திரியங்களை அடக்கு, பக்தி மார்கத்தில் ஈடுபடு, அதுவே பரமானந்தத்தைத் தரும். முக்தி அடைய வழி காட்டும்'' என்றார்.  இப்படியாக  ஜடா பரதரின் புண்ணிய சரித்திரம் முடிவுற்றது''  என சூதர் கூறினார்.

Monday, August 30, 2010

Thirunilai Periyandavar Temple- Kancheepuram, Tamilnadu -35

 ஆலமரத்து அடியில் கேட்ட ஆலயக் கதைகள் - 35
திருநிலை பெரியாண்டவர்  ஆலயம்
சாந்திப்பிரியா

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருகழிக்குன்றத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ தொலைவில் உள்ளதே பெரியாண்டவர் சிவன் ஆலயம். வயல் வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆலயம் எழுந்துள்ளது. அந்த ஆலயத்தின் வரலாறு என்ன?
ஒரு முறை பார்வதி கொடுத்த சாபத்தின் காரணமாக சிவபெருமான் பூமியில் மானிடனாக அவதரிக்க வேண்டி இருந்தது. அவர் பூமிக்கு வந்து தன் நிலை மறந்து அங்கும் இங்குமாக பைத்தியக்காரர் போல அலைந்து திரிந்து கொண்டு இருந்தார். அவர் அந்த நிலையில் இருந்ததினால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் பார்வதியிடம் சென்று அந்த நிலையை மாற்றுமாறு வேண்டிக்கொள்ள அவளும் சுற்றி அலைந்து கொண்டு இருந்த சிவபெருமானின் நிலையைக் கண்டு மனம் வருந்தினாள். ஆனாலும் சாப விமோசனம் குறிப்பிட்ட காலத்தில்தானே நடக்க முடியும். அதற்கேற்ப அவர் இந்த ஆலயம் இருந்த இடத்துக்கு வந்தபோது சாபத்தை தன்னுள் வைத்து இருந்த அவர் கையில் இருந்த சூலாயுதம் கீழே விழ சாப விமோசனம் பெற்ற சிவன் தன் நிலைக்கு வந்தார் . அந்த இடத்திலேயே தான் சிவலிங்கமாக நிலைக் கொள்ள அந்த இடத்தின் பெயர் திருநிலை என ஆயிற்று. சூலாயுதம் விழுந்த இடத்தில் முதலில் ஜோதி வடிவமாகக் காட்சி தந்தார். அதன் பின்னரே லிங்க வடிவம் பெற்று ஸ்வயம்பு லிங்க உருவில் அங்கு அமர்ந்தார். அந்த நிலையை அவர் அடையும் வரை இருபத்தி ஒரு சிவ கணங்களும் அவருக்குப் பாதுகாப்பாக எவர் கண்களிலும் படாமல் மறைந்த நிலையில் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர். அதை குறிக்கும் வகையில்தான் அங்கு இருபத்தி ஒரு சிவலிங்கங்கள் உள்ளனவாம். அவை எப்படி ஏற்பட்டது என்றால் சிவன் கையில் இருந்த சூலாயுதம் கீழே விழுந்தபோது அந்த இடத்தில் இருந்த பூமி மண்ணில் மறைந்தவாறு வந்து கொண்டு இருந்த சிவ கணங்கள் இருபத்தி ஒரு மண்கட்டிகளாக தெறித்து விழ அவை அந்த இருபத்தி ஒரு சிவலிங்கங்களாயின. அது மட்டும் அல்ல அவரைத் தொடர்ந்து அவருக்குக் காவலாக மனித உருவிலேயே நந்தியும் வந்து கொண்டு இருந்தாராம். ஆகவே சிவன் நிலையாக நின்ற இடத்தில் நந்தி தேவரும் அதே மனித உருவில் நின்று விட்டதினால்தான் நந்தி தேவர் நின்ற நிலையில் அந்த ஆலயத்தில் காட்சி தருகிறார். ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் அங்கு சிவபெருமானின் சன்னதிக்குப் பக்கத்தில் பார்வதி தேவி அங்காள பரமேஸ்வரியாக இருந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். அவள் பெயர் அங்கு திருநில்லைநாயகியாம். அமர்ந்த நிலையில் அவள் காட்சி தருகிறாள். பார்வதி எப்படி அங்காள பரமேஸ்வரியாக ஆனாள் என்பது தனியான சுவையானக் கதை. அந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள புனிதக் குளத்தில் குளித்துவிட்டு ஆறு வாரங்கள் பெரியாண்டவர் மற்றும் அங்காள பரமேஸ்வரி சன்னதிக்குச் சென்று பூஜை செய்து வணங்கி வந்தால் நடக்காத காரியங்கள் கூட நடைபெறுமாம். குழந்தைபேறு பெற இங்கு வந்து வணங்குவது விசேஷமாகக் கருதப் படுகின்றது. மேலும் அந்த இடத்துக்கு பல முனிவர்களும் ரிஷிகளும் வந்து சிவனை வணங்கிச் சென்று உள்ளனர். அந்த இருபத்தி ஒன்று சிவ லிங்கங்களும் சிவ பெருமானான மூல லிங்கமான பெரியாண்டவரை அங்கு வணங்கி பூஜிப்பதான இதீகமும் உள்ளது. சிவபெருமான் மனித உருவில் வந்ததினால் அவர் காலடி நேரடியாகப் பட்ட தலம் இது.

Thursday, August 26, 2010

Waynad Tirunelli Vishnu Temple- Kerala -34

 ஆலமரத்து அடியில் கேட்ட ஆலயக் கதைகள் - 34
கேரளத்து வயநாடு திருநெல்லி விஷ்ணு ஆலயம்
சாந்திப்பிரியா


 படம் நன்றி : http://www.kisaso.com/tirunelli-temple/
கேரளத்தில் வயநாட்டில் உள்ள மனந்தவாடி எனும் இடத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் உள்ள பிரும்மகிரி மலைப் பகுதியில் பாபநாசினி நீர்வீழ்ச்சி ஓடும் இடத்தில் உள்ளதே திருநெல்லி விஷ்ணு ஆலயம். ஆலயம் ஆயிரத்துக்கும் முற்பட்டது. ஆலயம் முழுமையாக கட்டப்படாமல் இருக்கின்றது என்றாலும் அந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்று உள்ளது. ஆலயம் எவரால் கட்டப்பட்டது என்பது குறித்து விவரங்கள் கிடைக்கவில்லை.
 ஆலயத்தின் ஒரு தோற்றம் 
அநேகமாக ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் அது கட்டப்பட்டு இருக்கலாம் எனவும் இரண்டு மன்னர்களுக்கு இடையே எழுந்த தகராறினால் ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் நின்றுள்ளது எனக் கிராமியக் கதையைக் கூறுகிறார்கள். அதனால்தான் ஆலயத்தின் மேற்கூரை பாதி கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. மேலும் அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனின் ஒரு இளவரசி அங்கு வந்தபோது ஆலயத்தில் பகவானுக்கு அர்ச்சனை செய்ய தண்ணீர்கூட இல்லையே என அந்த ஆலயத்தின் நிலையைக் கண்டு வருந்தி அருகில் இருந்த பிரும்மகிரி மலைப் பகுதியில் இருந்து பாறைகளில் வாய்கால் போல வெட்டி அந்த ஆலயத்துக்கு பூஜைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தாளாம் . அது இன்னமும் உபயோகத்தில் உள்ளது.ஆலயம் வந்த கதை சுவையானது.
 பாபநாசினி நீர்வீழ்ச்சி  
ஒரு காலத்தில் பிரும்மா தனது ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள அனைத்து லோகத்தையும் சுற்றிக் கொண்டு வந்தபோது மழைப் பகுதியில் இருந்த இந்த இடத்துக்கு வந்தாராம். மலையில் காடுகளால் சூழப்பட்டு இருந்த ஒரு இடத்தில் ( தற்போது ஆலயம் உள்ள இடத்தில்) இருந்த ரம்யமான சூழ்நிலை உள்ளதைக் கண்டு   தாம் சாப விமோசனம் பெற அங்கே தவம் இருக்கலாம் என நினைத்து அங்கு இறங்கினாராம். அப்போது அந்த காட்டின் நடுவில் ஒரு நெல்லி மரம் இருக்க அங்கே விஷ்ணுவானவர் அமர்ந்து உள்ளது போல இருக்க, அருகில் சென்றால் அது வைகுண்டம் போலவே   காட்சி தந்ததாம். ஆகவே அவர் மற்ற தேவர்களையும் அங்கு அழைத்து வந்து அந்த இடத்தில் விஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்து அதை வணங்கி வந்தாராம். அருகில் ஓடிய பாபநாசினி தீர்த்தத்தில் அவர் குளித்துவிட்டு விஷ்ணுவிற்கு பூஜை செய்வாராம். அதைக் கண்டு மகிழ்ந்த விஷ்ணுவும் அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் நீரில் குளித்தால் அனைத்து பாபங்களும் விலகும் என்று அருள் செய்ய அந்த நீர்நிலையும் புனிதமாயிற்று. அந்த இடத்தின் அருகில் பத்ம தீர்த்தம் என்ற குளமும் உள்ளது. அதன் நடுவில் உள்ள பாறை ஒன்றில் கால் தடம் உள்ளது. அதை விஷ்ணுவின் கால் தடம் என்றும், அங்கு நின்றபடித்தான் விஷ்ணு பகவான் பிருமாவுக்கு தரிசனம் தந்தார் எனக் கதை ஒன்றும் உள்ளது.  பின்னர் அந்த இடத்தில் விஷ்ணுவிற்கு ஆலயம் அமைந்தது.
பரசுராமர் தனது தந்தையைக் கொன்றவர்களை பழி தீர்த்துக் கொன்றதும் தமது பிருமஹத்தி தோஷத்தைக் களைய அந்த  புனித இடத்தில் வந்து (பாபனாசினியில்)  குளித்துவிட்டு பித்ரு கர்மாவை செய்தாராம். அது போலவே ராமபிரானும் அந்த இடத்தில் வந்து தனது தந்தைக்கு பித்ரு கர்மா செய்தார் எனக் கதை உள்ளது. ஆகவே அந்த இடத்தில் வந்து பித்ருக்களுக்கு கர்மா செய்வது சிறந்தது என்பதினால் பலரும் அங்கு வந்து தமது பித்ருக்களுக்கு கர்மாவை செய்கின்றனர்.
 ஆலய வழியில் காணப்படும் சில சிற்பங்கள் 
இன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் அந்த மலைப் பகுதிக்கு தவமிருக்க வந்த சில முனிவர்கள் குடிக்க நீரும் உண்ண உணவும் கிடைக்காமல் தவித்தபோது அவர்கள் விஷ்ணுவை தமக்கு உதவுமாறு வேண்டினார்கள். அவரும் அவர்களுக்கு அந்த நெல்லி மரம் இருந்த இடத்தையும் நீர் நிலையையும் காட்ட அவர்கள் அந்த பழங்களை உண்டு தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொண்டனர். ஆகவே அந்த மரத்தை திரு நெல்லி அதாவது அருள் புரிந்த நெல்லி என்ற பெயரில் திருநெல்லி எனப் போற்றி அந்த மரத்தின் பக்கத்தில் வசித்து விஷ்ணுவை வழிபட்டனர். அதனால்தான் அந்த இடம் திருநெல்லி என்ற பெயரை அடைந்தது.விஷ்ணுவின் ஆலயமும் அங்கு அமைந்ததாம்.  

Chinthpoorni devi Temple- Himaachal Piradesh - 33

ஆலமரத்து அடியில் கேட்ட ஆலயக் கதைகள் - 33
  ஹிமாச்சலப் பிரதேசத்தில் அற்புத 
சின்னமஸ்தா தேவி  ஆலயம் 

சாந்திப்பிரியா 

 மகாவித்யாவில் வரும் சின்னமஸ்திகா தேவியின் ஆலயமே ஹிமாச்சலப் பிரதேசத்தில் உனா எனும் மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயத்தின் பெயர் சிந்த்பூரணி ஆலயம். அந்த ஆலயம் சக்திபீட ஆலயங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆலயத்தில் உள்ள தேவியை தலை இல்லாத  துர்கா தேவியின் அவதாரமான சின்னமஸ்திகா தேவியாகவே வணங்குகின்றார்கள். அந்த தேவியை முறைப்படி வணங்கித் துதிப்போருக்கு வேண்டியதை அவள் தருவதாக நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் விலகும்  . மன அமைதி கிடைக்கும் , எதிரிகள் மீதான பயம் ஒழியும், வீட்டிலும் தீயவை வராதுஅவளை சித்தி கொண்டால் பல அபூர்வ சக்திகள் கிடைக்குமாம்.
படங்கள் நன்றி:- http://en.wikipedia.org/wiki/File:Jai_Mata_Di...Maa_Chintpurni
தேவர்களை துன்புறுத்தி வந்த நிஷும்பவை  அழிக்கக் கிளம்பிச் சென்ற துர்க்கை  தன்னுள் இருந்து ஒரு பயங்கரமான தேவியை படித்தால். அகோர உருவமும், ஆக்ரோஷமுமான அந்த தேவி அந்த அசுரனை வதம் செய்தப்பின் தன்னுடன் இருந்த  காவல் தேவதைகளின் பசியை  தீர்க்க தன்னுடைய தலையை வெட்டிக் கொண்டு  அதில் இருந்து வெளியான ரத்தத்தை அவர்களுக்குக் கொடுத்தாளாம்.  கொடுமையான  கோலத்தில் இருந்தாலும் தன்னை அண்டி நிற்பவர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தரும் அத்தனை  கருணை மிக்கவளாம் அவள். அப்படிப்பட்ட கோலத்தில் நின்று கொண்டு உள்ள சின்னமஸ்தா தேவி வெட்டப்பட்ட தன் தலையில் இருந்து பீறிட்டு வெளிவந்த ரத்தத்தை மற்றவர்களுக்கும் தரும் கோலம் என்பது தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு அவர்களுக்குத் தேவையானவற்றை அள்ளித் தருதல் என்பதை காட்டும் தாத்பர்யம்.  தட்ஷ யாகத்தில் ஏற்பட்ட சச்சரவினால் ஏற்பட்ட பிரச்சனையில் பார்வதியின் வெட்டப்பட்ட உடலின் இருந்து விழுந்த பாகங்களில் ஒன்றான அவளுடைய பாதம் விழுந்த இடத்திலேயே இந்த ஆலயம் எழுந்துள்ளது .
ஆலயத்தில் தேவியின் சிலை ஒரு உருண்டையான கல்லாகவே உள்ளது. அந்த இடத்தில் ஆலயம் எழக் காரணமானவர் பண்டிட் மாய் தாஸ் எனும் ஒரு சரஸ்வத் பிராமணராம். அவருடைய வம்சாவளியினரே இருபத்தி ஆறு வம்சங்களாக அங்கு பூஜைகளை செய்து வருகின்றனர்.
படங்கள் நன்றி:-  http://www.religiousportal.com/Chintpurni.html
பண்டிட் மாய் தாஸ் துர்கையின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருடைய அளவுக்கு மீறிய பக்தி மார்க்கம் அவர் உடன் பிறந்தோருக்கு பிடிக்கவில்லை என்பதினால் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு நாள் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டு இருந்தவர் ஒரு ஆல மரத்தடியில் இளைப்பாறினார் . சற்றே கண் அயர்ந்தவர் கனவில் ஒரு அழகிய பெண் தோன்றி தானே அங்குள்ள கடவுள் எனவும் தன்னை அங்கேயே இருந்து வழிபடுமாறும் கூறி மறைந்தாள். முழித்து எழுந்ததும் அவர் அதை மறந்து விட்டார்.
படம் நன்றி :-http://en.wikipedia.org/wiki/File:Bengali_Chinnamasta.jpg 
மீண்டும் திரும்பி வந்தபோது அதே மரத்தடியில் அவர்  இளைப்பாற அவருக்கு துர்க்கை  தேவி மீண்டும் சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காட்சி தந்து சின்னமஸ்தா தேவியான தான்தான் அந்த மரத்தடியில் ஒரு உருண்டை வடிவமான கல்லாக தங்கி உள்ளதாகக் கூறி  அதை ஒரு இடத்தில் வைத்து தன்னை  பூஜை செய்தவாறு அங்கேயே இருக்குமாறு கூறினாள். அவள் கூறியபடியே அவரும் அந்தக் கல்லை எடுத்து வைத்து பூஜித்து வந்தார்.  அதன் பின் அங்கு பல அற்புதங்கள் நடந்தன. 
படங்கள் நன்றி:- http://en.wikipedia.org/wiki/File:Jai_Mata_Di...Maa_Chintpurni
மெல்ல மெல்ல அங்கு பெரிய ஆலயமும் சின்னமஸ்தா தேவிக்கு எழுந்தது. காடு மறைந்து மக்கள் குடியேறினர். இன்று அந்த ஆலயம் புகழ்பெற்ற புனிதத் தலமாகி விட்டது. ஆலயத்துக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர், ஜலந்தர் மற்றும்  ரோதக் மாநிலத்தில் இருந்தும் நேரடியாகப் போக பஸ் வசதிகள் உள்ளன. ஆலயத்துக்கு சுமார் ஒரு கிலோ மீடர் தொலைவிலேயே வாகனம் நிறுத்தப்பட்டு விடுகின்றன. அங்கிருந்து நடந்தே படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். அந்த ஆலயத்தின் அருகில்தான் ஆலயத்தை நிறுவிய பண்டிட் மாய் தாஸின் சமாதியும் உள்ளன.

Tuesday, August 24, 2010

Patti Ponnandaal ezhuthiya Gaya Yathra - Part- 2

பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய 

காசி மகத்துவத்தைத் தொடர்வது .....காயா  மகத்துவம் 
 
கங்கையில் காரியங்களை முடித்துக் கொண்டப் பிறகு நாம் கிளம்பிச் செல்ல வேண்டியது காயாவுக்கு. காயா நகரம் பீகாரில் உள்ளது.  வாரணாசியில் இருந்து ஒரு நாள் பயணம் . காயாவை அடைந்ததும் அங்கு ஓடும் பால்குனி நதியில் சென்று குளிக்க வேண்டும். அங்கு குளித்தப் பின்னர் அருகில் உள்ள ஸ்ரீ காதரன் எனும் விஷ்ணுவின் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு விஷ்ணு நம்முடைய சடங்குகளை ஏற்றுக் கொண்டு இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களையும் பெற்றோர்களையும் கரையேற்றி பரமபதம் தந்தருள காத்துக் கொண்டு இருக்கின்றார். ஆகவே நாம் இங்கு செய்ய இருப்பது அதற்கான சடங்குகளையே. ஸ்ரீ காதரன் ஆலயத்தில் உள்ள பெரிய ஹாலில் பண்டிதர்களை வைத்துக் கொண்டு சங்கல்பம் எடுத்துக் கொண்டு, தர்பண காரியங்களை செய்தவுடன் நாம் அங்கு செய்து தயாராக வைத்துள்ள சாதத்தை எடுத்து பிண்டங்களாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் .
படங்கள்  நன்றி  :- http://en.wikipedia.org/wiki/File:Vishnupadh_Temple.jpg
இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களின் பெயர்களை, தாய் தந்தையரின் பெயர்களை, உற்றார் , உறவினருக்கும் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு, நாம் வளர்த்த பிராணிகளுக்கு என ஒவ்வொருவரின் பெயரையும் கூறி  அந்த பிண்டங்களை போட்டு ''அதை நீங்கள்தான் ஏற்றுக் கொண்டு அவர்களை நீங்களே கரை சேர்க்க வேண்டும்'' என பிராத்தனை செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீ காதரப் பெருமாளும் நம் பிராத்தனைகளை மற்றும் நாம் சமர்பிக்கும் பிண்டங்களையும் நேரிலே தோன்றி தானே ஏற்றுக் கொண்டு நிச்சயமாக கரை சேர்ப்பேன் எனக் கூறுவது போல தன் பாதத்தைக் காட்டியவண்ணம்  அங்கே நிற்கின்றார். காலை பன்னிரண்டு மணிவரை அந்த இடம் அபார கர்மா செய்யும் இடம் போலவே காட்சி தரும். அதை நாம் செய்ததும் இறந்து போன நம் பந்துக்கள் அனைவரும் அந்த இடத்துக்கு வந்து விஷ்ணுவை வணங்க அவர் அவர்களை பரமபதத்துக்கு அனுப்பி கரை சேர்ப்பதாக தாத்பர்யம் உண்டு.
 விஷ்ணு பாதம் 
படங்கள்  நன்றி  :-http://www.templenet.com/Ganga/gaya01.html
அந்த காரியங்களை நாம் செய்து முடித்ததும் நாம் தங்கி உள்ள இடத்துக்கு வந்து அங்கு சாஸ்திர முறைப்படி தயாராக செய்து வைக்கப்பட்டு உள்ள சாப்பாட்டை இரண்டு பிராமணர்களுக்குப் போட்டு தானமும்  தந்து அவர்களை திருப்பதிப்படுத்தி அவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த காரியம் முடிந்தப் பிறகு பண்டிதருடன் நாம் அருகில் உள்ள அஷயவடம் என அழைக்கப்படும் ஆல  மரத்தின் அடியில் செல்ல வேண்டும். அதை அடைய சில படிகள் ஏறிப் போக வேண்டும். அங்குதான் நாம் நமக்கு ஆத்ம பலம் தரும் ஒரு முக்கியமான காரியத்தை இறுதியாக செய்து முடிக்க வேண்டி உள்ளது. அங்கு சென்று அந்த மரத்தடியில் நின்றவாறு, '' நான் என் மனம் , வாக்கு, சரீரம் என அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வேன் '' என சங்கல்பம் செய்து கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின் அதற்கு முன்னோடியாக நமக்கு மிகவும் பிடித்த கறிகாய் வகையில் ஒன்றையும், பழத்தில் ஒன்றையும் இனி ஆயுசு உள்ளவரை என் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என சங்கல்பம் செய்து கொண்டு வர வேண்டும். அதற்குப் பிறகு நம் ஆயுசு உள்ளவரை அவைகளை சாப்பிடவே கூடாது. நாம் செய்யும் ஸ்ரார்தங்களிலும் அவற்றை சேர்க்கக் கூடாது.
 இதற்கு  பரிபூரண வைராக்கியம் தேவை. அதன் பின் நாம் தங்கி உள்ள இடத்துக்குச் சென்று குளித்துவிட்டு நல்ல உடை உடுத்திக் கொள்ள வேண்டும். மாலை மீண்டும் ஸ்ரீ காதாரன் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். நாம் காலையில் தர்ப்பணம் செய்த போது இருந்த நிலைக்கும் , மாலையில் அங்குள்ள நிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல காணப்படும். நாம் தர்ப்பணம் செய்த அதே மகா விஷ்ணுவின் பாதத்துக்கு மாலையில் சந்தனக் காப்பு சாத்தி அனைவரும் ஒன்று சேர்ந்து விஷ்ணு சஹஸ்ரனாமத்தை  சொல்ல வேண்டும். அந்த சூழ்நிலை மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும்.
இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்கள் இந்த இடத்தில் வந்து தங்கி இருந்தபோதுதான் கனவில் ஜோதிஸ்வரூபமாக பகவான் தோன்றி அவர்களுக்கு புத்திரப் பேறு உண்டாகும் என ஆசிர்வதிக்க அவர்கள் கதாதரன் என்றே முதலில் இராமகிருஷ்ண பரமஹம்சருக்குப் பெயரிட்டனர். இப்படியாக நாம் கயாவுக்கு  சென்று நம்முடைய தாயாதிகளை கரை ஏற்றிய பின் மீண்டும் வாரனாசிக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சாரதா தேவியை தரிசிக்க வேண்டும். முடிவாக சிரத்தையோடு நாம் ஸ்ரீ கங்கா மாதா பூஜை , ஸ்ரீ விசாலாட்ஷி, அன்னபூர்நேஸ்வரி சமேத ஸ்ரீ காசி விஸ்வனாதருக்குகான தம்பதி பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். வாரனாசிக்குச் சென்று கங்கை கரையில் மந்திரோபதேசத்துடன் பூஜையை ஆரம்பித்து மஞ்சள், குங்குமம், வளையல், கருகமணி, காசோலை, புஷ்பம், பழம் இத்யாதி, இத்யாதி போன்றவற்றை கங்கைக்கு சமர்பிக்க வேண்டும். அதன் பின் கங்கைக்கு பூஜை செய்து, புஷ்பம் போட்டு, நியவேத்தியம் படைக்க வேண்டும். அதன் பின் கற்பூர ஆரத்தி காட்டி கங்கை நீரை தலையில் புரோத்ஷனம் செய்து கொண்டு சிறிது வாயில் ஊற்றிக் கொண்டு அந்த நீரை பருக வேண்டும். அது முடிந்ததும் புரோகிதருக்கு மனதார தட்சணை தந்து அவர் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு அங்குள்ள மணிகர்ணிகா என்ற க்ஹாட்டிற்குச் சென்று  சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
அவை முடிந்தப் பிறகு துந்தி கணபதியை மனம், வாக்கு, காயம் உட்பட நன்றியோடு நமஸ்கரித்து தேங்காய் உடைத்து வணங்க வேண்டும். ஸ்ரீ விசாலாட்ஷி, அன்னபூரணி மற்றும் காசி விஸ்வநாதரை பரிபூர்ணமாக சரணடைந்து, மனதில் வேண்டிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்து ஷோடோபசாரம் செய்து முன் சொன்னபடியே மந்திரோபதேசத்துடன் பூஜையை ஆரம்பித்து மஞ்சள், குங்குமம், வளையல், கருகமணி, காசோலை, புஷ்பம், பழம் இத்யாதி, இத்யாதி போன்றவற்றை அவர்களுக்கு சமர்பித்து, மேலும் புடவை, வேஷ்டி, இரண்டு குண்டுகள் கொண்ட திருமாங்கல்யம், காலுக்கு கொலுசு போன்ற நம்மால் முடிந்த ஆபரணங்களை வைத்து அவர்களை வலம்  வந்து நமஸ்கரித்து அவர்களுடைய அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதைத் தவிர நமக்கு வேண்டியவர்களுக்காகவும் நம்மால் முடிந்ததை தனியாகக் கொடுக்கலாம். நான் என்னுடைய தந்தையின் நினைவாக ஒரு சால்வை சமர்ப்பித்து திருப்தி அடைந்தேன்.
வெளியில் வந்து கடைகளில் தாரா பாத்திரம். பீடம். சொம்பு , அம்மனுக்குக் கட்டும் பாவாடை போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். ஊருக்குத் திரும்பியதும் நல்ல நாள் பார்த்து நம் வீட்டில் தம்பதி பூஜை செய்து நாம் வாங்கி வந்துள்ள சொம்பு , கங்கை நீர், கால பைரவர் கயிறு, போன்றவற்றை பூஜையில் வைத்து பிராமணர்களுக்கு போஜனம் கொடுத்து  முடித்தப் பின்னரே அவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். இதுவே சரியான முறை.
 ராமேஸ்வரர் ஆலயம் 
அடுத்து எத்தனை விரைவாக செல்ல முடியுமோ அத்தனை விரைவாக ராமேஸ்வரத்துக்கு யாத்திரை செல்ல வேண்டும். யாத்திரைக்கு முடிந்த அளவு கங்கை நீரை எடுத்துச் செல்ல வேண்டும். ராமேஸ்வரத்தில்தான் ராமபிரான் ஹனுமாரினால் எடுத்து வரப்பட்ட மற்றும், சீதையினால் பிடித்து வைக்கப்பட்ட சிவலிங்கங்களுக்குப் பூஜை செய்து தமது பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொண்டாராம். அங்குள்ள கடல் மண்ணில் லிங்கம் மற்றும் ராம கோதண்ட வில்லையும் வரைந்துவிட்டு சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும். சேதுவில் உள்ள அதிசயம் அங்குள்ள இடத்தில் உள்ள கடலில் அலைகள் எழுவதில்லை. அமைதியாகவே உள்ளது. மேலும் ராமேஸ்வரத்தின் அருகில் உள்ள ராமநாதபுரத்தில் ராமர் கடலிலேயே நவக்கிரஹங்களை வழிபட்டதாகவும் அதன் பின்னரே சமுத்திர ராஜனை தனக்கு வழி விடுமாறு கேட்டு இலங்கைக்கு சென்றதாக புராணக் கதை உள்ளது.
  அந்த இடத்துக்கும் சென்று நாம் தரிசனம் செய்ய வேண்டும். பிறகு அங்கு ஸ்நானம் செய்துவிட்டு ஸ்ரீ ராமநாத ஸ்வாமி ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள ஒன்பது குளங்களில் ( கிணறில்) உள்ள நீரில் குளித்துவிட்டு சுவாமிய தரிசிக்க வேண்டும். நாம் கொண்டு வந்துள்ள கங்கை நீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை ஆராதனைகளை செய்து முடித்தப் பின்னர்தான் காசி யாத்திரை பரிபூரணமாக நிறைவு பெற்றதாகக் கருத முடியும். அது மட்டும் அல்ல இலங்கையில் இருந்து வந்த ராமபிரான் அங்குள்ள கடல் அருகில் குதித்து இறங்கிய இடத்தில் உள்ள ராமர் பாதத்தையும்  தரிசித்தப் பின்னரே கிளம்ப வேண்டும்.
ஓம் தத் சத்
சுபம் 

Monday, August 23, 2010

Marudeeswarar Temple, Tiruvanmiyoor, Chennai (24)

தெரிந்த ஆலயம்...பலருக்கும் அறிந்திடாத வரலாறு - 24
சென்னை திருவான்மியூர்
மருதீஸ்வரர்  ஆலயம்

சாந்திப்பிரியா
 
படம் நன்றி:- http://en.wikipedia.org/wiki/Marundeeswarar_Temple

சென்னையில் உள்ள திருவான்மியூர் எனும் இடத்தில் உள்ளது மற்றுமொரு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம். அதை மருதீஸ்வரர் ஆலயம் எனக் கூறுகிறார்கள். மூலவர் பால்வண்ணனாதர்  எனும் பெயரைப் பெற்ற  ஒன்றரை அடி உயரமான சிவன். வடிவம் சிவ லிங்கம். இந்த ஆலயம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த இடத்தில்தான் சிவ பெருமான்  வாதாபிக்குச் சென்று திரும்பிய அகஸ்திய முனிவரின் வயிற்றுக்  கோளாறுக்கும்  சூரியன் மற்றும் சந்திரனுக்கு அவர்களது  குருபத்தினி தோஷத்துக்கும் குணப்படுத்தியதான ஐதீகம்  உள்ளது. மேலும் மருதீஸ்வரர்  இங்குதான் அகஸ்தியருக்கு மூலிகை வைத்தியம் பற்றி கற்றுக் கொடுத்தாராம். ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் இந்த ஆலயத்தில் அகஸ்தியர், சூரியன் மற்றும் சந்திரன் வந்து சிவ பெருமானை பூஜிக்கின்றனர் என்பது ஒரு நம்பிக்கை.  ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்  தானாகவே தோன்றி உள்ளது. அது வெள்ளை நிறத்தில் தலையில் சிறு குழி  உள்ள நிலையில் காட்சி தருகின்றது. அதன் காரணம் என்ன என்றால், தினமும் காமதேனுப் பசு அங்கு வந்து சிவ லிங்கத்தின் மீது தனது மடியில் இருந்து பாலை சுரந்துவிட்டுச் சென்றதினால்தான் பள்ளம் ஏற்பட்டுள்ளது என புராணக் கதை கூறுகின்றது. ஆலயத்தில் நவகிரஹா நாயகர்களான சந்திரனும் சூரியனாருமே  சிவபெருமானை வணங்கும் கோலத்துடன் இருப்பதினால் நவகிரகங்களுக்கு சன்னதி இங்கு இல்லை.
படம் நன்றி:- http://en.wikipedia.org/wiki/Marundeeswarar_Temple
ஆலயம் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது எனவும் கல் வெட்டுகள் மூலம் செய்திகள் கிடைத்துள்ளனவாம். ஆலயத்துக்குள் 108 சிவ லிங்கங்களும்  ஐந்து பூதங்களையும் குறிக்கும் வகையில் ஐந்து பெரிய சிவ லிங்கங்களும் உள்ளன.  இந்த ஆலயத்தின் விசேஷம் பற்றி கூறப்படும் கதைகள் என்ன எனில்,  இந்த ஆலயத்தில் வால்மீகி முனிவர் வந்து தவத்தில் இருந்துள்ளார்,  மார்கண்டேயர் வந்து பூஜை செய்து உள்ளார், திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் போன்றவர்களும் இங்கு வந்து வணங்கி உள்ளனர், இந்திரனும் இங்கு வந்து சிவனை வணங்கி ஒரு சாபத்தின் விமோசனம் பெற்றார் , பாரத்துவாச முனிவர் வந்துள்ளார், ஹனுமான் இங்குள்ள ஒரு சிவ லிங்கத்திற்குப் பூஜை செய்துள்ளார் போன்றவை அடங்கும்.
 வேறு ஒரு ஆலயத்தின் அற்புதமான சிவ லிங்கம் 
ஆலய விருஷம் வன்னி மரம். ஒரு காலத்தில் ஆலயத்தை சுற்றி ஐந்து குளங்கள் இருந்தன என்றும் அவற்றில் ஒன்றைத் தவற மற்ற  அனைத்தும்  அழிந்து விட்டன எனவும் கூறுகிறார்கள்.

Someshwarar Temple, Hulimavu, Bangalore

சோழ மன்னர்கள் கட்டிய 
சோமேஸ்வரர் எனும் சிவன் ஆலயம்
சாந்திப்பிரியா

 முன்  காலத்தில்  இருந்த  ஆலயத்  தோற்றம் 
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக  உள்ளதே சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ள ஒருசிறிய  சிவன் ஆலயம். ஆலயம் உள்ள இடம் பெங்களூர் நகரின் ஒரு கோடியில் உள்ள ஹுலிமாவு எனும் பகுதியில் உள்ள சோமேஸ்வரர் என்ற சிவன் ஆலயம். ஆலயம்.  சுமார் இருநூறுக்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டு உள்ளது அந்த ஆலயம் .  அந்த காலத்தில் சோழ மன்னர்கள் இந்தப் பகுதியில் சில முக்கியமான சிவன் ஆலயங்களைக் கட்டி உள்ளனர். அவற்றில் பஞ்சலிங்க சிவன் ஆலயம் (ஹுலிமாவு அருகில் உள்ள  பேகூர் பகுதியில் உள்ளது) , இந்த சோமேஸ்வரர் ஆலயம் போன்றவை உண்டு.  ஒரு காலத்தில் ஹுலிமாவு  என்பது ஒரு கிராமமாக இருந்தது. ஆகவே அங்கு  நிறைய நிலங்கள் காடுகளைப் போலவே இருந்துள்ளன. சரியான சாலைகள் கூடக் கிடையாது. ஆனால் அது புண்ணிய பூமியாகவே இருந்து இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக சிறப்பு வாய்ந்த ராமர் ஆலயம், ஹனுமான் ஆலயம் போன்றவையும் இருந்துள்ளன.
 ஆலயத்தின் தோற்றம் 
இந்த ஆலயத்தின் பின்னணி விவரம் கிடைக்கவில்லை என்றாலும் சோழ மன்னர்கள் கட்டிய ஆலயம் என்பதற்கு மட்டுமே ஆதாரங்கள் உள்ளன. ஆலயத்தில் சிவ  லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்துள்ளது. காலப் போக்கில் அந்த இடத்தில் இருந்த சிவ லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கு கட்டிடம் கட்ட கிராமத்து மக்கள் சிலர் விரும்பினாலும் சிவ லிங்கத்தை எடுக்க  முடியவில்லையாம். 
 ஆலயத்து சிவலிங்கம் ( சோமேஷ்வர் )
ஆலய பண்டிதரின் கூற்றின்படி சிவ லிங்கம் சுமார் பத்து அல்லது பதினைந்து அடி ஆழமாக புதைந்து இருக்கும் என்கின்றார். அதற்குள் அதைக் கேள்விப்பட்ட சிலர் அங்கு வந்து  அந்த ஆலயத்தின் நிர்மாணப் பொறுப்பை தம் கையில் வைத்துக் கொண்டனர். மெல்ல மெல்ல அந்த ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 1990 ஆம் ஆண்டு முதல் அந்த ஆலயத்தை நிர்வாகித்து வருபவர் அந்த ஆலயவளாகளத்திலேயே தங்கி உள்ள திரு பிரகாஷ் பாரத்வாஜ் என்ற பண்டிதர் ஆவார். அவர் அந்த ஆலயத்தின் மகிமைகள் சிலவற்றை குறித்து தன் நினைவலையில் இருந்து நம்மிடம் கூறினார்.
 ஆலயத்தில் ஆலய பண்டிதர் திரு பிரகாஷ் பாரத்வாஜ் 
ஒரு முறை ஒரு வியாபாரி தொழிலில் பெரும்  நஷ்டத்தை   சந்தித்தார். அதை சரிக்கட்டுவது நடக்ககூடிய காரியமல்ல என நினைத்தவர் மனம் வருந்தியவாறே அந்த ஆலயம் வழியே நடந்து கொண்டு இருந்தபோது ஆலயத்தின் அருகில் வந்தும்  உள்ளே செல்லாமல் நினைத்தாராம் ' எனக்கு தொழில் நல்லபடியாகி விட்டால் ஆலயத்துக்கு ஏதாவது கைம்மாறு செய்வேன்.'  அடுத்து சில நாட்களிலேயே அவர் நஷ்டத்தில் இருந்த தொழில் ஸ்திரப்பட்டது. அவர் தாமாகவே ஆலயத்தில் வந்து அந்த பண்டிதரை சந்தித்து தன்னுடைய அனுபவத்தைக் கூறிவிட்டு சிவன் தலைக்கு மேல் தண்ணீர் விழுந்தபடி இருக்கும்  பாத்திரத்தை  அமைத்தாராம். அதுவே இன்றும் உள்ளது.
இன்னொரு வழக்கறிஞ்சருக்கு ஏற்பட்ட அனுபவம் இது.  ஒருவர் நல்ல வழக்கறிஞ்சர் வேலையில் ஒரு இடத்தில் இருந்தார். ( நினைவு இல்லை . எதோ கம்பனி என நினைகின்றார்) . அவர் வந்து பண்டிதரிடம் தனக்கு தொழில் ரீதியாக ஒரு பிரச்சனை  உள்ளதாகவும் அது நல்லபடி முடிய என்ன செய்யலாம் எனவும் கேட்க திரு திரு பிரகாஷ் அவரிடம் திங்கள் கிழமையில் வந்து சோமவார பூஜை செய்து வேண்டிக் கொள்ளுமாறு கூறி இருந்தார். ஆனால் அவர் தன்னைப் பற்றிய முழு விவரமும் தெரிவிக்கவில்லை. பண்டிதர் கூறியது போல அவர்  பக்தியோடு திங்கள் கிழமைகளில் வந்து பூஜை செய்து விட்டுப் போனார். ஆறு அல்லது ஏழு வாரம் ஆயிற்று. ஒன்றும் நடக்கவில்லை. பண்டிதரிடம் மீண்டும் அவர் என்ன சாமி ஒன்றுமே ஆகவில்லையே எனக் கேட்டுள்ளார். அவர் ஆறுதல் கூறினாராம், ' பகவான் கைவிடமாட்டார். நம்பிக்கையுடன் இன்னும் சில வாரங்கள் செய்யுங்கள் ' என்றார். அந்த வழக்கறிஞ்சரும் மேலும் இரு வாரங்கள் செய்துவிட்டு  இன்னும் ஒன்றும் ஆகவில்லை சாமி என குறையாகக் கூறி விட்டுச் சென்று  உள்ளார். சென்றவர் ஆலய வாயிலில் ஒரு நாகத்தைப் பார்த்து உள்ளார். அது வாழும் நாகம். இன்றும் அந்த ஆலயத்தை பாதுகாக்கும் நாகமாம். ஆனால் அது அவருக்குத் தெரியாது.  தவறுதலாக தன்னுடைய தலைக்கு அணியும் ஹெல்மட்டை அந்த ஆலயத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டார். ஆலயத்தை மூடும் நேரம் வந்தது. பண்டிதர் யாரோ ஒருவர் ஹெல்மட்டை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே எனக் கருதி அதை பத்திரமாக வைத்துவிட்டு ஆலயத்தை மூடச் சென்றபோது அந்த வழக்கறிஞ்சரும் அதை எடுத்துக் கொள்ள அப்போது வந்தார் . அவர் ஆலயத்துக்கு ஹெல்மட்டை எடுத்துக் கொள்ள திரும்பி வரும் வழியில்  அவர் கையை விட்டுப் போய் இருந்த வழக்கறிஞ்சர்  வேலை மீண்டும் அவருக்கு கிடைத்து விட்டது என்று அவருக்கு ஒரு தொலைபேசி செய்தி வந்துள்ளது. ஆலயத்தில் வந்தவர் பண்டிதரிடம் வந்து அழுதே விட்டார். நடந்தவற்றைக்  கூறியப் பின்னர்தான் அந்த நாகம் ஆலயத்தைக் காத்து வரும் வாழும் பாம்பு என்பதையும், அவருக்கு அது காட்சி அளித்து அந்த வேலை கிடைக்க ஆசிர்வாதம் செய்து உள்ளது  என்பதும் வழக்கறிஞ்சருக்குப்  புரிந்தது. 

 ஆலயத்தின் விழாவில் ஸ்வாமிகள் 
அந்த நாகம் எங்குள்ளது?  எவருக்கும் தெரியாதாம். ஆனால் முன்னர் அங்கு அடிக்கடி கர்பக் கிரகத்துக்குள் பண்டிதர்கள் அமர்ந்து ருத்ரம் ஓதிக்கொண்டு இருக்க பிரதோஷகால பூஜைகள் நடைபெறுமாம். அப்படி நடந்து வந்த பூஜையில் ஒரு நாள் எங்கிருந்தோ எவருக்கும் தெரியாமல் வந்த அந்த நாகமும், இரண்டு பூரான்களும் திரு பிரகாஷ் அவர்கள் முதுகில் ஏறி சிவலிங்கத்தின்  பின்னால் சென்று உள்ளது.  பூஜை செய்து கொண்டு இருந்தவர் தன் முதுகில் எவரோ ஏறி சென்றது போல உள்ளதே என்பதை  கவனித்து விட்டு பார்த்தபோதுதான் அவை  அந்த நாகமும் பூரானும் என்பது தெரிந்ததும் பயந்து போய் பூஜையில் இருந்து வெளியில்  ஓடி  வந்துவிட்டார்.  ஆனால் சிறிது நேரத்தில் அந்த பாம்பு கர்பக்கிரகத்தில் இருந்த சிறு துவாரத்தின் மூலம் வெளியில் சென்று விட்டதாம்.  அதன் பிறகு  அதே  பாம்பு அந்த ஆலயத்தில் சுற்றுவதை அவர் பார்த்து உள்ளாராம்.  வேறு சிலரும் அதைப் பார்த்து உள்ளனராம். அது ஆலயத்தைப் பாதுகாக்கும் நாகமே அது என்று நம்புகிறார்கள். ஆலயம் சிறிய அளவில் இருந்தாலும் இவற்றைக் கேட்கும்போது  பக்தியினால் நம் இதயம் படபடக்கின்றது.

Patti ponnandaal ezhuthiya Kaasi Yathra - Part-1

பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய 
 காசி மகாத்மியம்  - பாகம்-1 

முன்னுரை 
காசியில் அமர்ந்து இருக்கும் துந்தி கணபதிக்கு என் தோப்புக்கார நமஸ்காரங்கள். என்னுள் இருக்கும் பரப் பிரும்மம் என்னை எழுத இயக்க வைத்து பூரணமாக எழுத வைக்கட்டும்.
காசி என்றால் பிரகாசம் அதாவது ஞானம் என்று பொருள்.  இதுவே  காசியின் பலன். காசிக்குப் போனால் ஞானம் ஏற்படும், ஞானத்தை அடைவதையே முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ?
காசியில் அமர்ந்து இருக்கும் அன்னபூரணி, காசி விசாலாட்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி அங்கு வருபவர்களுக்கு பிரகாசம் என்கின்ற ஞானத்தைத் தந்து அங்கு வந்து மரணம் அடைபவர்களுக்கு அந்த கடைசி மூச்சோடு அவர்கள் செவிகளில் தாரக மந்திரமான ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்து அவர்களையும் அதை உச்சரிக்கச் செய்து அவர்களுக்கு முக்தி தருகின்றார். ஒவ்வொரு இரவும் இரண்டாம் ஜாமத்தில் அன்று இறந்தவர்களின் சாம்பலை தன் உடலில் பூசிக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக இதீகம் உண்டு. பகவானே தன் உடலில் பூசிக்கொள்வது தன் சாம்பலை என்பது இறந்தவர்களுக்கு கிடைக்கும் பெருமை அல்லவா? காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது பொது நம்பிக்கை. அப்படிப்பட்ட புனித காசி யாத்திரையை ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது செய்ய வேண்டும். முதலில் ஒருவன் தான் அடையும் பலனைப் பார்த்தோம். அடுத்து நாம் அங்கு சென்று செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்கலாம் ?

காசி  ஆலய  தரிசனமும் , முன்னோர்களுக்கு 
செய்ய வேண்டிய  பிண்ட  தர்பணங்களும் 
காசிக்குப்  போய் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் நம் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்கள் மூலம் அவர்களது ஆத்மாக்கள் நல்ல கதி அடையும். அங்கு சென்றதும் முதலில் நாம் செய்வது கங்காஸ்நானம். அதை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து மூன்று பிடி மண்ணை யாசகமாகப் பெற்று முதல் அடியை பூமியாகவும், இரண்டாவதை விண்ணுலகிலும் அளக்கும்போது அந்த பாதத்திற்கு பிரும்மா அபிஷேகம் செய்த தண்ணீரே ஆகாச கங்கை என்ற கங்கை நதி ஆயிற்று. அந்த கங்கையைத்தான் இஷ்ஷவாகு வம்சத்து ஸ்ரீ ராமபிரானின் முன்னோரான பகீரதன் என்ற அரசன் பூமிக்கு கொண்டு வந்தானாம். ஆனால் அந்த கங்கையின் வேகத்தை தணிக்க பரம்மசிவனை தியானித்து தபமிருக்க அவர் அதை தன்னுடைய ஜடையில் தாங்கி அதை ஆறு பிரிவாகப் பிரித்து, ஆறு நதியாக பூமிக்கு அனுப்பினாராம். அதே சமயம் பகீரனும் தன்னுடைய முன்னோர்களின் சாபத்தைப் போக்கி அவர்களது ஆத்மா முக்தி அடையவே அந்த கங்கை நதியை கொண்டு வந்தார். ஆகவே அது ஒரு ஜீவ நதி. கங்கை, கங்கை என நாம் வாயாரச் சொன்னாலேயே நமது பாபங்கள் விலகும், புண்ணியம் கிடைக்கும். மனதில் உண்மையான தூய எண்ணத்துடன் கங்கா தேவியை நாம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக அவள் நமக்கு நாம் வேண்டியதை நடத்திக் கொடுப்பாள். எது என் சொந்த அனுபவம் கூட. அதற்க்கு உதாரணம் சரீர செயல்பாடுகள் குறைந்துள்ள என்னையும் அழைத்துக் கொண்டு அனைத்தையும் நல்லபடி நடத்திக் கொடுத்து உள்ளாள் என்பதே உண்மை.
அன்னபூரணியின் மகிமையை கூற முடியாது. ஈரேழு பதினாறு லோகங்களையும்  படைத்து ஈ எறும்பில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அன்றாடம் உணவு அளிப்பவள் அன்னபூரணி . அங்குள்ள விசாலாட்ஷிக்கு தென்னாட்டு மக்களினால் உணவு படைக்கப்படுகின்றது. இனி யாத்திரையை தொடரலாம்.
 காசி யாத்திரை என்பது உண்மையில் எப்படி செய்யப்பட வேண்டியது? நம்முடைய முன்னோர்கள் முதலில் தமது குருநாதர்களையும், தமது இஷ்ட தெய்வங்களையும் பிரார்த்தனை செய்து கொண்டப்பின்தான் காசி பிரயாணத்தை துவக்குவார்கள். அவர்கள் முதலில் ஸ்ரீ ராமேஸ்வரத்துக்கே செல்வார்கள். அங்கு சென்று ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ராமனாதஸ்வாமியை தரிசனம் செய்தப்பின் சேதுக்கரை என்ற இடத்து கடல் மண்ணை சிறிது எடுத்துக் கொண்டு காசி யாத்திரை செய்வார்கள். வாரணாசியை அடைவதற்கு முன்னாலேயே வரும் அலஹாபாத்தில் முதலில் இறங்க வேண்டும். அங்குள்ள நதிக்கரைக்குச் சென்று படகில் ஏறி சிறியது தூரத்தில் தென்படும் மண் திட்டில் இறங்க வேண்டும். அந்த இடமே கங்கை- சரஸ்வதி மற்றும் யமுனை என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமாகும். அந்த இடத்தை கூர்ந்து கவனித்தால் கங்கையின் நிறம் தெளிவாகவும், யமுனையின் நிறம் நீலமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் சரஸ்வதி நதியோ அந்தவாகிநியாக -அதாவது நமது கண்ணுக்குள் புலப்படாமல் உள்ளிருந்தே அந்த இரண்டு நதிகளுடனும் ஒன்றாகக் கலந்து கொள்கிறாளாம். அந்த இடத்துக்கு செல்லும் தம்பதியினர் தமது முடியில் இருந்து ஒரு அங்குல தலைமுடியை வெட்டி அந்த நதியில் எறிவது சம்பிரதாயம். அதன் பின்னரே அந்த நதியில் இறங்கிக் குளிக்க வேண்டும். அங்கிருந்தே கெட்டியாக மூடிய ஒரு பாத்திரத்தில் கங்கை நீரைக் கொண்டு வர வேண்டும். சற்று ஏமார்ந்தால் அங்கு நம்முடன் வரும் புரோகிதர்கள் சிறிது தங்க நகைகளை தானம் செய்ய வேண்டும் என்பார்கள். அதை நம்பக்கூடாது. அப்படியெல்லாம் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.
அங்கிருந்து திரும்பி வரும் வழியில் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டு வரும் ஆஞ்சிநேயரை தரிசிக்க வேண்டும். நாங்கள் காசிக்கு சென்றபோது இரவில் வேணி மாதவன் ஆலயத்துக்குச் சென்றோம். அங்கு பகவானுக்கு அடிக்கப்படும் தாரை என்ற ஜாலரா வாத்தியத்தை அடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அலஹாபத்தில் உள்ளவர் வேணி மாதவன். அவரே காசியில் காசி மாதவன் எனப்படுகிறார். சேதுவிலோ சேது மாதவன் என்ற பெயரில் உள்ளார்.
அடுத்து வாரனாசிக்குப் பயணம் செய்ய வேண்டும். அங்கு உள்ள கங்கா பாகீரதி என்பவளை- அதாவது கங்கை நதியை- பார்க்கும்போதே மனதி ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அங்கு ஹனுமான் காட், ஹரிச்சந்திராகாட் என்ற குளியல் படித் துறைகள் உண்டு. ஒவ்வொரு படியாக இறங்கும்போதே பகவானின் நாமத்தை மனதில் உச்சரித்தபடி இறங்குவதே புண்ணியமானது. கடைசி படியில் நின்றுகொண்டு நம் காலடியின் கீழே நம்மை நோக்கி ஓடிக் வருவது போல உள்ள  கங்கா மாதாவை தலை மீது நம் கரத்தைத் தூக்கி வணங்க வேண்டும். ''ஜகன் மாதா இத்தனை தூரம் என்னை அழைத்து வந்து உன்னை தரிசனம் செய்ய வைக்கின்றாயே, உனக்கு கோடி கோடி வந்தனம் அம்மா'' என மனதார நம்முடைய வணக்கத்தை முதலில் அவளுக்கு செலுத்த வேண்டும். அதன் பின் அதே படியில் அமர்ந்து கொண்டு அவள் நீரை எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும்.
 அடுத்து நாம் அங்கு வரமுடியாமல் இருக்கும் பந்துக்கள், சிநேகிதர்கள், ஏன் நம் வீட்டில் வளரும் இஷ்ட பிராணிகளையும் நினைத்துக் கொண்டு அனைவருடைய ஷேமத்திற்காகவும்  ஸ்நானம் செய்ய வேண்டும். அதனால் அவர்களுக்கும் நல்ல பலன் போய் சேரும். அப்படிப்பட்ட பரோபகாரம் மனித நேயத்தின் சிறந்த  உதாரணம். அது மட்டும் அல்ல ஸ்நானம் செய்யும்போது கடவுட்களை, நம் குருமார்கள் , சன்யாசிகள்  என பெரியவர்கள் என அனைவரையும்  மனதில் வணங்கியவாறு ஸ்நானம் செய்ய வேண்டும். அதன்பின் நமது உடையை பிழிந்து கொண்டு உடுத்திக் கொண்டு நம்மால் முடிந்த அளவு கங்கை நீரை எடுத்துக் கொண்டு காசி விஸ்வநாதர் சன்னதிக்கு செல்ல  வேண்டும். 
 வாரணாசியில் சிவ லிங்கம் 

 உள்ளே நுழைந்தால் கீரைப் பாத்தி வைத்தது போல நூற்றுக் கணக்கான  பல சிவ லிங்கங்கள் இருக்கும்.   சுவாமிக்கு நம் கையினாலேயே பால், தேன். வீபுதி என அனைத்தையும் படைத்து தொட்டு பூஜிக்கலாம்.  கங்கை ஜலத்தை விட்டு, பூக்களை  தூவி, அர்ச்சனை செய்து ஷோடோஷோபாரத்தோடு  பூஜையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது. அங்குள்ள பண்டிதர்களையே சப்த ரிஷிகளாக பாவித்து நடத்தப்படும் பூஜையில் அவர்கள் விடாமல் காட்டும் தீப ஜோதி தெய்வீகமானது. ஆனால் அந்த பண்டிதர்களில் பலர் நாம் வெளியில் வந்ததும் நம்மிடம் இருந்து பணத்தைக் கறக்கும் மோகத்தில் மாறிவிடுகிறார்கள்  என்பது வருத்தம் அளிக்கின்றது.
 அடுத்து நுழைய வேண்டியது அன்னபூர்நேஸ்வரி அம்மனின் ஆலயம். மூலஸ்தானத்தில் உள்ளவள் விக்ரஹம் பெரிய அளவில் உள்ளது.  அன்னபூர்நேஸ்வரியின் கையில் உள்ள கரண்டியால் உணவு தர  அதை திருஓடு ஏந்திய கையில் பிட்சையாக  பரமசிவன்  வாங்கிக்கொள்வது  அற்புதமான காட்சியாகும். அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனதில் தோன்றும்.  விஸ்வநாதர் சன்னதிக்கு எதிரில் லட்டுவிலான தேர் செய்து வைத்து இருப்பார்கள்.  அர்த்த ஜாம பூஜையின்போது பள்ளத்தில் உள்ள சிவனை மேலே கொண்டு வந்து ஒரு கட்டிலில் சயனிக்க வைப்பார்கள்.  ஸ்ரீ விசாலாட்ஷி அம்மனை தரிசனம் செய்தபின் கரையில் உள்ள வராஹி அம்மனையும் தரிசனம் செய்த பின் செல்ல வேண்டும்.  வராஹி ஆலயத்தின் அமைப்பு எப்படி உள்ளது என்பதைக் கூற முடியவில்லை. அவளை தளத்தில் உள்ள துவாரத்தின் வழியேதான் தரிசிக்க முடியும்.  அன்னை வீராவேசமாக, உக்ரஹமான  முகத்தோடு, உயரமாகவும், பெருத்தும் உள்ள நிலையில் காட்சி தருகிறாள். எங்களுடன் வந்தவரில் ஒருவருடைய மூக்குக் கண்ணாடி உள்ளே விழுந்து விட்டது. அதை வெளியே எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
அடுத்து கேதார்நாத் சன்னதிக்கு செல்வோம். தீபாவளியன்று அங்கு சென்றால் இந்த இடத்தில்உள்ள நீரில்தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.  அங்குள்ள லிங்கம் பெரிய பாறை உருவில் உள்ளது. மேலே பாத்திரத்தில் வைக்கப்பட்டு உள்ள நீர் லிங்கத்தின்  மீது விழுந்து கொண்டே உள்ளது. அதை சுற்றிலும் பல லிங்கங்கள்  உள்ளன.  எங்கு திரும்பினாலும் லிங்கன்களே உள்ளன. காசி முழுவதும் லிங்கங்கள்.
அங்கு தரிசனம் முடிந்ததும் போக வேண்டியது கால பைரவர் ஆலயம். அங்குள்ள பைரவர் நாய் உருவில்தான் உள்ளது போல காணப்படுகிறார். கால பைரவர் சாதாரண தெய்வம் அல்ல. அவர் நம்மைக் காக்கும் தெய்வம்.  நினைத்தக் காரியத்தை நடத்தித் தருபவர். அவர் பெருமையைக் கூற இயலாது. அவர் அருளுடன் நம்மை கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்ற சன்னதியில் கறுப்புக் கயிறு தருவார்கள்.  அந்த கயிற்றை நிறைய வாங்கி வந்து நம் பந்துக்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது புண்ணியமான காரியம். அது போல அங்கு விற்கப்படும் கங்கை நீர் சொம்பையும் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியக் காரியம். வெளியில் வந்தப் பின் பிர்லா ஆலயம், காசி ராஜாவின் அரண்மனை போன்றவற்றை கண்டு களிக்கலாம்.  
இப்படியாக காசி ஆலய தரிசனம் செய்தப் பின் நாம் செய்ய வேண்டியவை மற்ற சடங்குகள். முதலில் நாம் செய்ய வேண்டிய சடங்கு மகா சங்கல்பத்துடன் ஆரம்பிக்கும். அங்கு அதை செய்ய நிறைய பண்டிதர்கள் உண்டு. நாம் நம்முடைய முன்னோர்களின் பெயர், கோத்திரம், நட்சத்திரம், ராசி போன்றவற்றைக் கூறி அனைத்து குடும்பத்தினருடைய பெயர், ராசி நட்ஷத்திரன்களைக் கூறி பிராமணர்களை நமஸ்கரித்தப் பின்  பக்தி பூர்வத்துடன்  சிரித்தையுடனும்  அவர்கள் கூறும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
'' முதலில் நாம் நம்முடைய தாய் வயிற்றில் ஜனித்து, அவள் வயிற்றில் உள்ள அந்த நேரத்தில் அவளுக்கு சொல்ல முடியாத அவஸ்தைகளை  தந்து அவளின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, அவள் ரத்தத்தில் உருவாகும் அவளுடைய பாலையே பருகி,   இரவு பகல் தூக்கமில்லாமல் அவளை அவஸ்தை படுத்தி வந்தாலும் நாம் இன்று இத்தனை பெரிய மனிதராக ஆளாவதற்கு அவள் ஆற்றிய பங்கை நினைத்தால் அதற்கு எத்தனை கைமாறும் செய்ய முடியாது என்பதினால் திரும்பத் திரும்ப அவளிடம்  மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இந்த உறுதிப் பிரமாணம் எடுக்கின்றேன்.'' என்று கூறி அவளை நினைத்தவாரே  பிராமணரை நமஸ்கரிக்க வேண்டும்.

அடுத்து '' உலகில் உள்ள பாவ காரியங்களை சொல்லி நான் தெரிந்தோ தெரியாமலோ அவற்றில் எதையாவது செய்து இருந்தால் அதற்காக  கோடி கோடியான அளவு  மன்னிப்புக் கோருகிறேன்''   எனக் கூறி நமஸ்கரிக்க வேண்டும்.  அதை செய்தப் பின் பிராமணர்களை நமஸ்கரித்து அவர்கள்  மனம் குளிர தட்ஷனை தர வேண்டும்.
அடுத்து நாம் செய்ய வேண்டியது  நாம் தங்கி உள்ள இடத்துக்கு வந்து  பிராமணர்களை வைத்து ஹோமம் செய்து  வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு தட்ஷனை செய்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக்  கொள்ள வேண்டும். இதை முக்கியமாக தாய் தகப்பன்கள் இல்லாதவர்கள் செய்ய வேண்டும். அங்குள்ள தெருவுகளில் பெரியதும் சிறியதுமான பசுக்கள் உலாவிக்கொண்டே இருக்கும். அவை தெய்வங்களின் அவதாரங்கள், அந்த புண்ணிய பூமியில் அதற்காகவே பிறந்து உள்ளன  என்பதினால் அவற்றை தொட்டு வணங்கலாம்.
அடுத்து காசியிலுள்ள அனைத்து கட்டங்களிலும் ( க்ஹாட் என்பது) நாம் பித்ருக்களின் தர்பணத்தை செய்ய வேண்டும்.  இறந்தவர்களின் ஆத்மா திருப்பதி அடைய பிண்டங்களை படைக்க வேண்டும்.  ஒரு படகில் ஏறி  நதியில் சென்று அதிலேயே எடுத்துச் செல்லும் அடுப்பில் சாதம் சமைத்து  அதைக் கொண்டு பிண்டம் படைத்து சடங்குகளை ஒவ்வொரு க்ஹாட்டிலும் செய்து முடிக்க வேண்டும் . அப்படி செய்வதே முன்னோர்களின் பழக்கம். அதுவே சிறந்தது . ஒவ்வொரு க்ஹாட்டிலும்  சடங்கு முடிந்துடன் கங்கை நீரிலயே அந்த பத்திரங்களைக் கழுவி மீண்டும் அடுத்த க்ஹாட்டில் புதியதாக சாதம் சமைத்து பிண்டம் போட வேண்டும்.  இப்படியாக அனைத்து க்ஹாட்டிலும் நாம் பிண்ட தர்ப்பணம் செய்து முடித்ததும்  பிதுர் காரியங்கள் நிறைவு பெறுகின்றது.  அங்கிருந்து அடுத்து நாம் செல்ல வேண்டியது காயா மற்றும் ராமேஸ்வரத்துக்கு . அங்கு இன்னும் சில பித்ரு காரியங்களை செய்தால்தான் நம்முடைய காசி யாத்திரையின் பலன் நிறைவு பெரும். அது இரண்டாம் பாகத்தில் வருகிறது.....................தொடரும் 

Vadapalani Murugan Temple- Chennai - (23)

தெரிந்த ஆலயம்...பலருக்கும் அறிந்திடாத வரலாறு- 23

சென்னை வடபழனி முருகன்  ஆலயம்
சாந்திப்பிரியா 
 படம் நன்றி:- http://www.egctraders.com/Vadapalani_Murugan_Temple.htm

சுமார் நூற்றி ஐம்பது அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் அண்ணாஸ்வாமி நாயகர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முருக பக்தர். அவர் தினமும் முருக பூஜை செய்த பின்னரே தனது கடமைகளைத் துவக்குவாராம். அவர் கனவில் ஒருமுறை முருகன் தோன்றி தன்னை திருத்தணிக்கு வந்து வணங்குமாறு கூற அவரும் திருத்தணியில் இருந்த சுப்பிரமணியர் ஆலயத்துக்குச் சென்று அவரை வணங்கினார். அப்போது அவர் தன்னை மறந்து அமர்ந்து இருந்தார். அவர் அங்கு அமர்ந்து இருப்பதை கவனிக்காத குருக்கள் அவரை ஆலயத்துக்குள் வைத்து பூட்டிவிட்டுச் சென்றார். சற்று நேரம் பொறுத்து தன் நிலைக்கு வந்த அண்ணாஸ்வாமிகள் தான் தனிமையில் உள்ளே இருந்ததை உணர்ந்தார். ஆகவே முருகனிடம் தனக்கு வாசன சித்தி தருமாறு வேண்டிக் கொண்டு தன் நாக்கை அறுத்துக் கொண்டாராம். வாசன சித்தியை வேண்டுபவர்கள் தமது நாக்கை அறுத்துக் கொண்டே காணிக்கை செலுத்துவார்கள். வாசன சித்தி பெற்றால் அவர்கள் கூறுவது நடக்கும் என்ற நிலை ஏற்படும் . அதே நேரத்தில் குருக்களுக்கு தான் எவரையோ ஆலயத்தில் வைத்துப் பூட்டிவிட்டதான நினைப்பு வர ஆலயத்துக்கு மீண்டும் சென்று கதவை திறந்து பார்த்தார். அங்கு நாக்கு அறுந்த நிலையில் இருந்த அண்ணாஸ்வாமியை கண்டுபிடித்து அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை செய்தார்.
விரைவில் அண்ணாஸ்வாமியின் அறுந்த நாக்கும் வளர்ந்ததாம். அவர் சென்னைக்கு வந்து வடபழனியில் தங்கினார். இடையில் ஒருமுறை அவர் பழனிக்குச் சென்று இருந்தார். அங்கு முருகனை தரிசித்தவாறு இருந்தபோது ஒரு கடையில் அழகிய முருகன் படத்தைப் பார்த்தார். அதை வாங்க பணம் இல்லை. அன்று இரவு அந்த கடைகாரர் கனவில் முருகன் தோன்றி அண்ணாஸ்வாமியின் அடையாளங்களைக் கூறி மறுநாள் அதை அண்ணாஸ்வாமிக்கு இலவசமாகத் அந்தப் படத்தைத் தருமாறு கூறினார். அதே நேரம் அண்ணாஸ்வாமி கனவிலும் முருகன் தோன்றி மறுநாள் அந்த கடைக்குச் சென்று அந்த படத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். கனவில் கிடைத்த ஆணையை ஏற்று மறுநாள் அந்த கடைக்கு அண்ணாஸ்வாமி செல்ல இருவரும் தத்தம் கனவினைப் பற்றி கூறிக் கொண்டப் பின்னர் அந்த படத்தை கடைக்காரர் அண்ணாஸ்வாமிக்குத் தந்தார். அதை எடுத்து வந்தவர் தனது வீட்டில் அதை வைத்து அதற்கு பூஜைகளை செய்து வந்தார். சில நாட்களில் தன் வீட்டில் ஒரு அறையில் வண்ணமயமான முருகன் படத்தை வரையச் செய்து அந்த வீட்டையே ஆலயம் போல மாற்றி அந்த படத்தை வணங்கியவாறு குறி சொல்ல ஆரம்பிக்க அவர் கூறியது பலவும் நடந்ததினால் பலர் அவரிடம் வரத் துவங்கினார்கள். காலப்போக்கில் அவரிடம் இரண்டு சிஷ்யர்களும் சேர்ந்தனர்.
 ஆலயமும் அதன் அருகில் உள்ள தெப்பக் குளமும் 
அவர்களில் ஒருவரான ரத்னவேல் செட்டியார் என்பவர் அண்ணாஸ்வாமியின் மறைவுக்குப் பின்னர் அவருடைய இடத்தில் அமர்ந்தார். அவரே தற்சமயம் ஆலயத்தில் உள்ள முருகன் சிலையை ஒரு சிற்பியை வரவழைத்து பழனியில் உள்ள முருகனைப் போலவே உருவாக்கியவர். அவருக்குப் பின்னர் வந்த பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவரே, பல வகைகளில் உழைத்து பணம் சேர்த்து மிகச் சிறிய அளவில் இருந்த அந்த ஆலயத்தை பெரிய ஆலயமாக மாற்றி அமைத்தார்
 ஆலயத்துக்கு  பக்தர்கள் காவடி எடுத்துச் செல்லும் காட்சி 
இன்று சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு உள்ள வடபழனி ஆலயம் பழனி ஆலயத்தைப் போலவே புகழ் பெற்று விளங்குகின்றது. ஆலயத்தில் உள்ள முருகன் சிலைக்கூட பழனி முருகரைப் போலவே உள்ளது. ஆலயத்தில் எந்த நாளிலும் கூட்டம் நிரம்பியே வழிகின்றது. சென்னையில் புகழ் பெற்றது மட்டும் அல்ல, மிகவும் முக்கியமான ஆலயம் இது. ஆண்டுதோறும் சுமார் ஐயாயிரம் ஜோடிகள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார்கள்.