Saturday, December 31, 2011

Thiruppaarkadal- Two temples

திருப்பாற்கடல்
சாந்திப்பிரியா


சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அதாவது NH 4 சாலையில் வருவது காவேரிப்பாக்கம் எனும் சிறு ஊர். இது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர், வேலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் அல்லது காஞ்சிபுரம் வழியே வந்தால் அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காவேரிபாக்கத்தை அடைந்தவுடன் அங்கு யாரையாவது கேட்டால் திருப்பாற்கடலுக்கு செல்லும் வழியைக் கூறுவார்கள். பெங்களூரில் இருந்து சென்றால் ராணிபேட்டையைத் தாண்டியவுடன் அந்த சிற்றூர் உள்ள பெயர் பலகையைக் காணலாம். சென்னையில் இருந்து வரும்போது  ராணிபேட்டைக்கு முன்பே வரும்  காவேரிபாக்கத்தை அடைந்தவுடன் இடது புறம் திரும்பிச் செல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து சென்றால் காவேரிபாக்கத்தை அடைந்ததும் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.
திருப்பாற்கடலில் இரண்டு பண்டை கால ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுவானவர் சிவபெருமானின் சிவலிங்கத்தின் ஆவுடையார் மீது நின்ற காட்சியில் இருக்கின்றார். அந்த ஆலயத்தின் பக்கத்திலேயே உள்ள இரண்டாவது ஆலயமான ஆதி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் விஷ்ணு ஆதிசேஷன் மீது படுத்தவாறு காட்சி தருகிறார். சிவன் -விஷ்ணு ஆலயத்தில் ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவம் காணப்படுகின்றது.
இந்த புண்ணியதலத்தில்தான் சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா என மூவரும் தோன்றி ரிஷி முனிவர்களுக்கு தரிசனம் தந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த சப்தரிஷிகளில் நான்கு ரிஷிகள் இங்கு வந்து நான்கு வேதங்களையும் பாடியதினால் இந்த தலத்தின் பெயர் சதுர்வேத மங்களம் என்றும் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது.

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலய மகாத்மியம்
107 வது திவ்ய தேசம் என அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலய மகாத்மியத்தைப் பற்றிக் கூறுகையில் அதற்கு ஒரு கதை கூறுகிறார்கள். ஒருமுறை விஷ்ணு அனந்த சயனத்தில்- சேஷ நாகம் மீது பாற்கடலில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார். அபோது அவர் நாபியில் இருந்து எழுந்த நாபித் தண்டில் பிரும்மா பிறப்பு எடுத்து உலகை சிருஷ்டி செய்யத் துவங்கினார். அவர் பூமிக்குச் சென்று காஞ்சீபுரம் பகுதியில் இருந்த இந்த தலத்தில் ஒரு யாகம் செய்யக் கிளம்பி தனது மனைவியான சரஸ்வதியை அதற்கு உடன் அழைத்தார். ஆனால் சரஸ்வதியோ அவருடன் செல்ல மறுக்கவே, வேறு வழியின்றி பிரும்மா தன்னுடன் காயத்ரி மற்றும் சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்று யாகத்தைத் துவக்கினார். ஆகவே கோபமுற்ற சரஸ்வதி வேகவதி என்ற ஒரு நதியாய் உருவெடுத்து, அந்தப் பகுதியில் பாய்ந்து யாகசாலையே மூழ்கடிக்க வந்தவுடன் பிரும்மா விஷ்ணுவை வேண்டிக் கொண்டார். உடனே சற்றும் தயங்காமல் விஷ்ணுவானவர் அங்கு வந்து நதிக்கு நடுவில் சேஷ நாகத்தின் மீது படுத்து நதியின் ஓட்டத்தை ஒரு அணைப் போலத் தடுத்து நிறுத்தி யாகம் நடந்து முடிய அருள் புரிந்தார். அவரை அந்த கோலத்தில் கண்ட சரஸ்வதி கோபம் தணிந்து திரும்பிச் சென்றாள். ஆகவே திருப்பாற்கடலில் தான் சயனித்து இருந்த அதே கோலத்தில் பூமியில் வந்து திருப்பாற்கடல் காட்சியை இங்கு அருளியதினால்தான் இந்த சேஷ்திரத்தின் பெயரும் திருப்பாற்கடல் என ஆயிற்று. அவருக்கு ஸ்ரீ ரங்கநாதர் என்ற பெயரில் ஆலயமும் அமைந்தது. இந்த ஆலயத்தில் விஷ்ணுவை பாற்கடலில் சயனிக்கும் கோலத்தில் சிலை அமைத்து பூஜிக்கிறார்கள். ஸ்ரீ ரங்கநாதர் தன்னுடன் தாயார் பூதேவி மற்றும் தாயார் ஸ்ரீ தேவியுடன் காட்சி தருகிறார்.
ஒருமுறை சரீர ரோகத்தினால் அவதிப்பட்ட சித்ரகுப்தர் (ஜனன மரண கணக்கு வழக்குகளை வைத்துள்ளவர்) விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரை இந்த ஷேத்திரத்தில் வந்து தன்னை பூஜித்தால் ரோகம் தீரும் என்று கூறினார். ஆகவே சித்ரகுப்தர் இங்கு வந்து விஷ்ணுவை துதித்து ரோக நிவாரணம் அடைந்தார். அதற்கு நன்றிக் கடனாக இங்கு வந்து யார் ஸ்ரீ ரங்கநாதரை பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கு அன்றுவரை இருந்த பாவங்கள் அனைத்தையும் தான் நீக்குவேன் என்றும்  உறுதி தந்தார்.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலய மகாத்மியம்
இந்த ஆலயம் பற்றியும் ஒரு சுவையானக் கதை உள்ளது. 1957 -58 ஆம் ஆண்டுகளில் ஒரு பிரசங்கத்தில் அந்தக் கதையை காஞ்சி பரமாச்சார்யார் அழகாக கூறி உள்ளார். அவர் கூறிய அந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டே இந்தக் கதையை நான் எழுதி உள்ளேன்:

ஒரு காலத்தில் பாலாறு எனக் கூறப்படும் அந்த நதிக் கரையில் ஒரு விஷ்ணு ஆலயமும் கிடையாதாம். இருந்த ஆலயங்கள் அனைத்துமே சிவன் ஆலயங்களாகவே இருந்தன. அப்போது ஒரு விஷ்ணு பக்தர் பல சேத்திரங்களுக்கும் சென்று விஷ்ணுவை தரிசனம் செய்தப் பின் இந்த தலம் உள்ள ஊரின் வழியே வந்தார். அந்த பக்தர் தினமும் நதிகளில் நீராடியப் பின் விஷ்ணுவின் ஆலயத்துக்கு சென்று விஷ்ணுவை தரிசிக்காமல் உணவு அருந்த மாட்டார்.  அப்படி பயணத்தில் இருந்தவர் இந்த ஊரை அடைந்தார். குளித்துவிட்டு அங்கும் இங்கும் விஷ்ணுவின் ஆலயத்தை தேடினார். ஒன்று கூடத் தென்படவில்லை. அப்போது முடிவாக அவர் கண்ணில் பட்ட இந்த ஆலயத்துக்குள் நுழைந்தார். வெளியில் அது விஷ்ணுவின் ஆலயமா, சிவன் ஆலயமா எனத் தெரியாமல் இருந்ததினால் உள்ளே நுழைந்தவர் அடுத்த கணம் போன வேகத்திலேயே ஓடி வந்து விட்டார். ' நான் இன்று என்ன பாவம் செய்தேன், விஷ்ணுவை தரிசிக்க முடியவில்லையே என வருத்தத்தில் அமர்ந்து இருந்த அவரிடம் ஒரு கிழவர் வந்து ''என்ன ஸ்வாமி விஷ்ணுவின் தரிசனம் முடிந்து ஆகாரம் அருந்த உட்கார்ந்து இருக்கின்றீர்களா?'' எனக் கேட்டார். விஷ்ணு பக்தரோ எரிச்சல் அடைந்து  '' ஆகாரமா, விஷ்ணுவின் ஆலயம் இல்லாத இந்த ஊரில் எங்கிருந்து நான் சாப்பிட முடியும்?'' என்று கோபமாகக் கூற அந்தக் கிழவர் கூறினார் ''ஆச்சர்யமாக இருக்கிறது, அதோ தெரிகிறதே, அது விஷ்ணுவின் ஆலயம்தானே''.

அந்த அந்தணரோ அப்போதுதான் அந்த ஆலயத்துக்குள் சென்று விட்டு அது சிவன் கோவில் என்று வெளியே ஓடி வந்து விட்டவர். ஆகவே அவர் கோபமாக மீண்டும் கூறினார் '' ஸ்வாமி என் வயிற்று எரிச்சலை ஏன்  கொட்டிக் கொள்கிறீர்கள்...அது சிவன் கோவில் என்று தெரிந்தும் ஏன் பொய் கூறுகிறீர்கள்''. கிழவரோ, '' சரியான ஆளப்பா  நீங்கள், அது விஷ்ணுவின் ஆலயம்தான் வாருங்கள் காட்டுகிறேன் ''என்றார்.  அந்தனரோ அதை ஒத்துக் கொள்ளவில்லை. கிழவரும் விடவில்லை. '' பந்தயம் கட்டும்....அது விஷ்ணுவின் ஆலயம் என உமக்கு காட்டுகிறேன்...வாரும்'' என்றார். அந்த பண்டிதரும் செல்ல மறுத்தார் .  ஒருவர் மாற்றி ஒருவர் மீது பொய் கூறுகிறார் என்று குற்றம் சுமத்த அவர்கள் சண்டை  வலுத்துக் கொண்டே  போய் பஞ்சாயத்தில் அந்த சண்டை போய் நின்றது. இருவருடைய வாதத்தையும் கேட்டவர்கள்  அந்த ஆலயத்துக்குள் சென்று  யார் பொய் கூறுகிறார்கள் எனப் பார்க்கலாம் என்று அந்த ஆலயத்துக்கு அந்த இருவரையும் அழைத்துக் கொண்டு போனார்கள். உள்ளே போய் பார்த்தால் ஒரு சிவலிங்க  ஆவுடயார் மீது விஷ்ணு நின்று கொண்டிருந்த கோலத்தில் ஆலய மூர்த்தியின் சிலை இருந்தது.  அடடா....மகாவிஷ்ணு அல்லவா இங்கு இருக்கின்றார்...முதலில் என் கண்ணுக்கு ஏன் மாறித் தெரிந்தது  என்று வருந்திய விஷ்ணு பக்தர் அங்கேயே விஷ்ணு  மீது தோத்திரம் பாடினாராம். அதன் பின் அவர்கள் அந்தக் கிழவரைத் தேட அவரைக் காணவில்லை. அப்போதுதான் அனைவரும் புரிந்து கொண்டார்கள் நடந்தது விஷ்ணுவின் நாடகமே என்பதை.  இப்படியாக சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் ஒரே ஆலயத்தில், ஒரே சன்னதியில் இருந்தபடி சிவனும் விஷ்ணுவும் வெவ்வேறானவர்கள்  அல்ல  என்பதைக் காட்டும்  ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் எழுந்தது.

இந்த தலத்தின் மகிமை
இந்த ஆலயங்கள் விஜயநகரத்தை சேர்ந்த கிருஷ்ணதேவராயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகின்றது.

  •  ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் வந்து கருடாழ்வாருக்கு ராகு காலத்தில் தேன்- திருமஞ்சனம் செய்வதினால் சரீர வியாதிகள் விலகும்.
  • ஆஞ்சனேயருக்கு பதினோரு பூஷனிக்காய் மாலையை சாத்துவதின் மூலம் மிருத்யு தோஷங்கள் விலகும்.
  • இங்கு வந்து  எவர் ஒருவர் ஸ்ரீ ரங்கநாதரை பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கு அன்றுவரை இருந்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
  • சிவ-விஷ்ணுவை ஒரு சேர இங்கு வணங்குபவர்கள் ஞானம் பெறுவார்கள், முக்தி கிடைக்கும்.

Sunday, December 25, 2011

Meru Narasimmar

ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்திர
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சமேத
ஸ்ரீ ஆஞ்சநேய ஆலயம்

சாந்திப்பிரியா
நான் சமீபத்தில் பெங்களுர் ரூபன் அக்ரஹாரம் எனும் இடத்தில் இருந்த நரசிம்மர் ஆலயத்துக்கு சென்றேன். ஆலயம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. அதைப் பார்த்தபோதே அது மிகவும்  புராதான ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிந்தது.  ஆலயத்தில் நுழைந்ததுமே மிகப் பெரிய அரச மரத்தின் அடியில் இருந்த நாக தேவதைகளும், ஒரு சக்தி தேவியின் சிலையும் அதை உறுதிப்படுத்தியது.  
தூண் ஆஞ்சநேயர் 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள ஒரு பெரிய ஸ்தம்பத்தில் ஹனுமார் சிலை இருந்தது. அதுவும், நாக தேவதைகளும் அங்கிருந்த மக்களினால் வழிபடப்பட்டு வந்துள்ளன. அதுவே அங்கு இருந்த கிராமத்தின் ஆலயமாக இருந்துள்ளது. ஆனால் இன்று அந்த ஆலயம் ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்திர ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சமேத ஸ்ரீ ஆஞ்சநேய சன்னதி ஆலயமாகி உள்ளது. ஆலயம் பிரதான சாலையை விட்டு சற்று சற்று உள்ளே அமைந்து உள்ளதினால் பலருக்கும் தெரியவில்லை. 
மேரு நரசிம்மரின் இரண்டு தோற்றங்கள் 

இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் என்பதின் காரணம் இங்குள்ள நரசிம்மர் ஆலயத்தில் பீஜாக்ஷர மந்திரங்களினால் ஆராதிக்கப்பட்ட நரசிம்ம மேரு வைக்கப்பட்டு உள்ளது. இந்த மேரு நரசிம்மரும் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். இந்த மேரு நரசிம்மரே ஆலயத்தின் பிரதான தெய்வம். வேறொரு இடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்துள்ள இந்த மேரு நரசிம்மர் இந்த ஆலயத்தில் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாம். இது போன்ற மேரு நரசிம்மர் இந்தியாவில் வேறு எங்குமே கிடையாது என்பது இன்னொரு விசேஷம். அந்த மேரு நரசிம்மரை சுற்றி எட்டு அஷ்ட லஷ்மிகளும் அமர்ந்து உள்ளார்கள். ஐந்து அடுக்கு மேரு வடிவிலான இதில் ஆதி கூர்மா, ஆதி வரஹா, ஆதி வாசுகி, ஆதி மன்தகு போன்ற நான்கும் மேருவை சுமந்தபடி உள்ளதைக் காணலாம். மேருவின் அடியில் சேத்தூர் துவாரா மற்றும் அஸ்தகாகா போன்றவை மேருவை தாங்கி நிற்கின்றன. அவற்றில் நரசிம்ம ஸ்வாமிக்கு தேவையான பீஜாக்ஷரங்கள், அஸ்தாக்ஷரங்கள் மற்றும் துவாதாக்ஷரங்கள் போன்றவை பொறிக்கப்பட்டு உள்ள தாமரை இதழ்கள் காணப்படுகின்றன. அந்த மேருவின் தலைப் பகுதியில் ஸ்ரீகாரா மற்றும் ஓம்காரா இரண்டுமே உள்ளன. நரசிம்மரின் தலை மீது பாம்பு படம் எடுத்து குடை பிடிப்பது போல அமர்ந்து உள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில் மேருவின் முன்பக்கத்தில் மேரு நரசிம்மரின் மந்திர தேவைக்கு ஏற்ப பாம்பின் ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது. (படத்தில் காண்க ) .
நாகதேவதைகளும் ,  அரச  மரமும்
  
ஆலய வளாகத்துக்குள்  நுழைந்ததும் இடதுபுறம் பெரிய அரச  மரத்தின் அடியில் ஒரு சக்தி தேவியின் சிலை உள்ளது. அதைத் தவிர ராகு, கேதுக்கள் உட்பட பல நாக தேவதைகளின் சிலைகள் உள்ளன . அந்த சன்னதியில் இருந்து வெளியில் வந்துடன் நேராக நரசிம்ம ஸ்வாமி உள்ள இடத்தை அடையலாம்.  அந்த சிறிய ஆலயம் அந்த ஆலய வளாகத்துக்கு உள்ளேயே கட்டப்பட்டு உள்ளது.  அதற்குள்  உள்ள மூல சன்னதியில்  லஷ்மி தேவியை மடியில் வைத்துக் கொண்டவாறு நரசிம்மர் காட்சி தருகிறார். அந்த சன்னதிக்கு முன்சன்னதியில் மேரு நரசிம்மர் வைக்கப்பட்டு உள்ளது. அந்த மேரு நரசிம்மரை சுற்றி அஷ்ட லஷ்மிக்கள் உள்ளனர்.  இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை மேரு நரசிம்மரே மூல தெய்வம் ஆகும்.  அந்த மேரு நரசிம்மர் வைக்கப்பட்டு உள்ள சன்னதியில் பெரிய கல் தூணில்  ஹனுமார் சிலை காணப்படுகின்றது. அதையும் அங்கு பிரதானமாக பூஜை செய்கிறார்கள். காரணம் இந்த  ஆலயத்தில் மேரு நரசிம்மரும், லஷ்மி நரசிம்மரும் பிரதிஷ்டை செய்யப்படுவதாற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தே இந்த  ஆஞ்சநேயரே வணங்கப்பட்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட ஹனுமாரின் ஸ்தூபியில் உள்ள  சிலைகள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதிக அளவில் செய்யப்பட்டு இருந்துள்ளன. அவர் காலத்தில்தான் ஆஞ்சநேய  வழிபாடு மிக அதிக அளவில் இருந்துள்ளது என்பது வரலாற்று செய்தி. பெங்களூரில் பல ஆலயங்களில் இப்படிப்பட்ட புராதான கல் தூண் ஹனுமாரைக் காணலாம். ஆனால் அந்த இரண்டு சன்னதிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக, இரண்டு அறைகளைப் போலவே உள்ளதினால் பக்தர்களுக்கு அந்த சன்னதியில் செல்ல அனுமதி இல்லை.  வெளியில் இருந்துதான் அவர்களை தரிசிக்க முடியும். சன்னதிக்கு வெளியில் இருபுறமும் காவலுக்கு ஜெயா-விஜயா எனும்  காவல் தேவதைகளின் சன்னதிகள் உள்ளன. அவர்களைத் தவிர, சைவ ஆலயங்களில் உள்ள பிள்ளையாரைப் போலவே கருதப்படும்  விஸ்வஷேனா என்ற  கடவுளும் ஒரு சன்னதியில் உள்ளார்.  அந்த சன்னதிக்கு நேர் எதிரில் கருடாஷ்வார் சன்னதி உள்ளது. அதில் அவர் நரசிம்மரை வணங்கிய நிலையில்  காணப்படுகிறார்.

வேண்டுகோள் நிறைவேற

இந்த ஆலயத்தில் யார் யாருக்கு என்ன குறை உள்ளதோ அதை தீர்க்க  வேண்டும் என நரசிம்மரை வேண்டிக் கொண்டு தம்மால் முடிந்த அளவு துவரம் பருப்பை (அரை கிலோ /ஒரு கிலோ அல்லது மனதிற்கேற்ப எடையில் ) பாத்திரம் அல்லது பையிலோ வைத்துக் கொண்டு அதை இரு உள்ளங்கையிலும் ஏந்திக் கொண்டு  நரசிம்மரை வணங்கி வேண்டிக் கொண்டப் பின் ஆலயத்தை 48 முறை பிரதர்ஷனம் செய்துவிட்டு  அங்குள்ள பாத்திரத்தில் அதைக் கொட்டி விட வேண்டும். இந்த வேண்டுதலை செய்வாய் கிழமையில் செய்ய வேண்டுமாம். பாத்திரத்தில் போடப்பட்ட துவரம் பருப்பை அவர்கள் அன்னதானத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
விஷ்ணுவானவர் வைசாக மாதம் ஸ்வாதி நட்ஷத்திரத்தில்தான் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவைக் கொன்றதினால் , ஒவ்வொரு மாதமும் ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று சுதர்ஷன நரசிம்ம ஹோமம், ரதரோகன, ரூன விமோச்சனா, ஸ்தோத்திரப் பாதேஸா மற்றும் சத்யநாராயண பூஜை செய்து அன்னதானம் நடைபெறுகின்றது.

ஆலய நேரம்
தினமும்
காலை 6.00 முதல் 9.00 மணிவரை
மாலை 5.30 முதல் 8.00 வரை
செய்வாய் / ஞாயிற்றுக்  கிழமைகளில் 
காலை 5.30 முதல் 12.00 மணிவரை
மாலை 5.30 முதல் 8.00 வரை 

ஆலய சேவை
 
(ஆலய விளம்பரத்தின்படி

 ஆலய அமைப்பு 
 

ஆலயம் செல்லும் வழி

ஆலய விலாசம்
ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்ரா
ரூபென்  அக்ரஹாரா ,

ஹோசூர்  பிரதான சாலை
பெங்களுரு  – 560068

தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி 
ஆபீஸ் /அலுவலகம்  : +91 – 080 – 25732289
பட்டாபி  ராம்  பட்டர்  : +91 – 9480620338
Email : prbhattar@sriharivaikuntakshetra.org
ரங்கா  பட்டர்  : +91 – 9448303538
திம்மராஜு  : +91 - 9481421733
பவானி  ஷங்கர்  : +91 - 9036128884
Email : bshankar@sriharivaikuntakshetra.org

Saturday, December 24, 2011

Devendra's son Jayantha and Narasimhar

 இந்திரனின் மகன் ஜெயந்தா 
மற்றும் நரசிம்மர் மகிமை
சாந்திப்பிரியா
 
தேவேந்திரனின் மகனே ஜெயந்தா என்பவன்.  தேவேந்திரனுக்கு ஜெயந்தா, மிதுசா, நீலம்பரா, ராஸ்ப்பா, சித்திரகுப்தா என்ற  பல மகன்கள் உண்டு. தேவேந்திரனின்  மனைவியான  சாச்சி தேவி என்பவள் மூலம் ஜெயந்தா பிறந்தாலும் அவன் நல்ல குணங்களைக் கொண்டவன் அல்ல. பாவம் சாச்சி தேவியோ நல்ல குணங்களைப் பெற்றவள். ஜெயந்தாவினால் பல கஷ்டங்களை இந்திரன் ஏற்க வேண்டி இருந்தது. 
கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ஜெயந்தா 

ஜெயந்தா  தேவலோகத்தில் கேளிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவன். ரதி ரம்பைகளின் ஆட்டங்களில் மனதை மயக்கிக் கொண்டு நிற்பவன். பெண்களின் விஷயத்தில் தீய எண்ணம் கொண்டவன். தான் தேவேந்திரனின் மகன் என்பதினால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தவன்.  ஜெயந்தா எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒரு கதை  ஆத்யந்த ராமாயணத்தில் உள்ளது.
ஒருமுறை வனவாசத்தில் இருந்த ராமர்-சீதை இருவரும் தமது பரிவாரங்களுடன் சித்ரகுடா எனும் இடத்தில் சென்று  தங்கினார்கள். அப்போது ஒருநாள் ராமபிரான்  களைப்படைந்து சீதாபிராட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தார்.  வெகுநாட்களாகவே சீதையின் அழகில் மயங்கிக் கிடந்த ஜெயந்தா அந்த நேரம் பார்த்து ஒரு காக்கை உருவைக் கொண்டு, சீதை  ராமபிரானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவாறு அமர்ந்து கொண்டு  இருந்த போது அவள் தோளில் வந்து அமர்ந்து கொண்டு அவள் மார்பை தனது அலகால் சீண்டினான். 
 காக்காய் உருவில் வந்த ஜெயந்தா
சீதை தோள் மீது அமர்ந்தான் 
 
ஜெயந்தா காக்காய் பறவைகளை  தன்  ஆதிக்கத்தில் வைத்து இருந்தான். திடீர் என நிகழ்ந்த அந்த சம்பவத்தைப் பார்த்து சீதை பயந்து போய் அலறினாள். அவளுடைய அலறலைக் கேட்டு விழித்து எழுந்த ராமபிரான்  அவள் தோளில் அமர்ந்து இருந்த காக்கை பறந்து செல்வதைக் கண்டு அதன் மீது பிரும்மாஸ்திரத்தை ஏவினார். பிரும்மாஸ்திரம் தன்னைத் துரத்துவதைக் கண்ட ஜெயந்தன் தனது ரத்தத்தில் ஏறிக் கொண்டு உலகம் முழுவதையும் சுற்றி அனைத்து கடவுட்களிடமும் தஞ்சம் அடைந்தான். ஆனால் அவானை யாருமே ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஓடினான்...ஓடினான்...ஓடிக் கொண்டே இருந்தான். பிருமாஸ்திரமும் அவனை விடாமல் துரத்திக் கொண்டு செல்ல அவன் மும்மூர்த்திகளிடம் சென்று சரண் அடைந்தான். ஆனால் அவர்களும்  அவன் செய்த பாபச் செயலை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதினால் வேறு வழி இன்றி, அவன் மீண்டும் வந்து ராமரின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னித்து  விடுமாறு கதறினான். ஆனால்  ராமரோ தான் ஒருமுறை தீமையை அழிக்கும் காரணத்துக்காக  ஏவிய பிரும்மாஸ்திரத்தை  திரும்பப் பெற முடியாது என்பதினால் அந்த பிரும்மாஸ்திரத்தை  அவனுடைய ஒரு கண்ணை குத்தி எடுத்து விட்டு   திரும்ப வருமாறு கூற அவன் தனது வலது கண்ணை இழந்தான். வாய்மொழிக் கதையின்படி அதனால்தான் அது முதல்  தீயதை தமது உருவில் இருந்து செய்த அவனை விட்டு காக்காய் பறவைகள் விலகி அவன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டன, அவை ஒரு கண்ணால் பார்க்கின்றது என்பார்கள். அதனால்தான் அதுமுதல் தீமைகளுக்கும் தண்டனைத் தரும் சனி பகவானின் வாகனமாக காக்காய் மாறியதாம்.

ஜெயந்தாவைப்  பற்றிய இன்னொரு கதை நரசிம்ம புராணத்தில்  காணப்படுகிறது.
ஒரு காலத்தில் யமுனை மற்றும் கங்கை நதிகளுக்கு இடையே இருந்தது அந்தர்வேதி என்ற இடம். அங்கு நரசிம்மரின் பக்தர் ஒருவர் பெரிய தோட்டத்தை உருவாக்கி இருந்தார். அதில் துளசி செடிகளைக் கொண்ட பிருந்தாவனமும், பிற மலர்களும் பூத்துக் குலுங்கின. அவர் அந்த பூக்களில் சிலவற்றை முதலில் நரசிம்மருக்கு போட்டு அர்ச்சனை செய்தப் பின்னரே மற்ற பூக்களை விற்று ஜீவனம் செய்து வந்தார். அவர் நரசிம்மருக்கு மாலையைத் தொடுக்க சில முக்கிய அற்புதமான பூச்செடிகளை  வளர்த்து இருந்தார். அவற்றை நரசிம்மருக்கு மட்டுமே முதலில் மாலையாகப் போடுவார். அந்த பூக்கள் வேறு எங்குமே கிடைக்காது என்ற அளவு அற்புதமானவை, நல்ல  மணம் கொண்டவை.  ஆகவே அவர் தனது தோட்டத்தில் இருந்து யாரும் பூக்களை திருடி எடுத்துக் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக அந்த தோட்டத்தை சுற்றி  குடிசைப் போன்ற தடுப்புப் பரணை  அமைத்து இருந்தார்.
நரசிம்மரின்  பூஜைக்கு  பூக்களை கொடுக்க அவர் பக்தர் வளர்த்த தோட்டம் 
 
அதற்குள்தான் அவர் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். அந்த தோட்டத்துக்குள் எளிதில் நுழையவே முடியாது. அதற்குள் நுழைய வேண்டுமானால் அந்த குடிசைப் போன்ற தடுப்புப் பரண் வழியே வந்து ஒரே ஒரு கதவின்  மூலமே உள்ளே நுழைய முடியும் என்ற முறையில் அதை உருவாக்கி இருந்ததினால் அந்த தோட்டத்தில் இருந்து யாராலும்  பூக்களை  எளிதில் பறித்துச் செல்ல முடியாது.
ஒரு நாள் அந்த வழியே சென்ற ஜெயந்தா அந்த தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய பூக்களைக் கண்டான். அவற்றை கொண்டு போய் தனது பெண் தோழிகளுக்கு கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த எண்ணினான். அவனோ பெண்களை சுற்றித் திரிந்தவன் . ஆனால் உள்ளே நுழைய முடியாத அளவு காவல் கடுமையாக இருந்ததினால், நாடு இரவில் யாருடைய கண்களிலும் தெரியாத   மாய  பறக்கும் குதிரையில் ஏறி வந்து அந்த தோட்டத்தில் இறங்கி பூக்களை திருடிக்கொண்டு செல்லத் துவங்கினான். 
மாயக் குதிரையில் வந்தான் ஜெயந்தா 

நாட்கள் தொடர்ந்தன. நரசிம்மருக்குப் போடும் பூக்கள் தினமும் குறைவதைக் கண்ட பக்தன் ஒருநாள் இரவு முழுவது கண் விழித்திருந்து நடப்பவற்றைப் பார்த்தான். ஜெயந்தாவை தன்னால் சண்டைப் போட்டு ஜெயிக்க முடியாது என்பதினால் நரசிம்மரையே மனம்  உருகி வேண்ட அவர் அவனது கனவில் தோன்றிக் கூறினார் ' பக்தா கவலைப் படாதே, அந்த பூச் செடிகளை சுற்றி தினமும் எனக்கு போடப்படும் பூக்களை போட்டுவிடு.  நீ பூ பறிக்கச் செலும்போது அவற்றை எடுத்துவிட்டு பூக்களை பறித்து வா . மீண்டும் தோட்டத்தைப் பாதுகாக்க  அந்த அர்ச்சனைப் பூக்களை போட்டு விடு'.
கனவில் நரசிம்மர் கூறியபடி அவனும் மறுநாள், அர்ச்சிக்கப்பட்ட பூக்களை  எடுத்து வந்து தோட்டத்தில் இருந்த செடிகளை சுற்றி  பல இடங்களில் அரண் போலப் போட்டு விட்டான்.  அதை அறியாத ஜெயந்தா அன்று இரவும் வந்து தோட்டத்தில் இறங்கினான். நரசிம்மரின் அர்ச்சனைப்  பூக்கள் போடப்பட்டு இருந்ததை அறியாமல் அந்த  பூக்களை மிதித்தபடி தோட்டத்தில் இறங்கினான். அவ்வளவுதான் அவன் தன் பலம்  அனைத்தையும் இழந்தான் .
 தீமையை அழிக்கும் நரசிம்மர் 
 
கால்கள் வீங்கி நடக்க முடியவில்லை. மாயக் குதிரையோ நரசிம்மரின் அர்ச்சனைப்  பூக்களை மிதி விட்ட அவனை மீண்டும் தன் முதுகில் ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டது.  அவன் குதிரையிடம் கெஞ்சினான். ' எனக்கு மீண்டு தேவலோகம் செல்ல தயவு செய்து வழி கூறுவாயா' எனக் கெஞ்சிக் கேட்க அந்த தேவ குதிரையும், அருகில் இருந்த குருஷேத்திரத்துக்கு சென்று அங்கு பரசுராமர் ஷேத்திரத்தின் நடைபெறும்  பன்னிரண்டு வருட யாகத்தில் சேவை செய்தால் விமோசனம் கிடைக்கும் எனக் கூறி விட்டு  சென்று விட அவன் செய்வதறியாது திகைத்தான்.  பறித்தப் பூக்களை  அப்படியே போட்டு விட்டு தன்னை மன்னித்து விடுமாறு  மனதார அந்த தோட்டத்தின் முதலாளியான  நரசிம்ம ஸ்வாமியின்  பக்தரிடம்  சென்று வேண்டிக் கொண்டு  அவருடைய உதவியைப் பெற்றுக் கொண்டு மெல்ல தட்டுத் தடுமாறி குருஷேத்திரத்தை அடைந்தான். அங்கு பன்னிரண்டு காலம் உணவைக் கூட அருந்தாமல் கடுமையான விரதம் பூண்டு அந்த யாகசாலையை தினமும்  பெருக்கி சுத்தம் செய்தது கொண்டு இருக்க பன்னிரண்டாவது வருட முடிவில் அவன் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்தை அடைந்தான். அதுமுதல் தீய பழக்கங்கள் அவனைவிட்டு மறைந்தன.
அந்த அர்ச்சனை செய்யப்பட்ட பூக்களுக்கு அத்தனை வலிமையா என்பதைக் குறித்து நாரதர் விளக்கியதான ஒரு கதையும் உள்ளது . ஒருமுறை மன்னன் சந்தனு தவறுதலாக அர்ச்சிக்கப்பட்ட நரசிம்மரின் பூக்கள் மீது நடந்து சென்றுவிட்டான். அவ்வளவுதான் அவன் தனது அனைத்து சக்திகளையும் இழந்து விட்டான். அவனால் தன் ரத்தத்தில் கூட ஏற முடியவில்லை. அங்கு இருந்த நாரதரை அது குறித்துக் கேட்க நடந்ததை அறிந்த நாரதர் கூறினார் '' மன்னா, நீ செய்தது வேண்டும் என்றே தெரியாமல் செய்துள்ள தவறுதான். ஆனால் அர்ச்சிக்கப்பட்ட நரசிம்மரின் பூக்களை மிதித்து விட்டதினால் அந்த பாவம் உன்னை சும்மா விடாது. அதற்கு ஒரே வழி, குருஷேத்திரத்துக்கு சென்று அங்கு பரசுராமரின் பர்ணசாலையில் நடைபெறும் யாகசாலையை பன்னிரண்டு வருடம் சுத்தம் செய்து சேவை செய்தால் உன் சாபம் விலகும்'. சந்தனுவும் நாரத முனிவர் கூறியது போல அந்த வேலையை செய்து சாப விமோசனம் பெற்று தான் இழந்த அனைத்தை செல்வத்தையும், சக்தியையும்  மீண்டும் பெற்றுக் கொண்டான். ஆக நரசிம்மர் விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதனால்தான் நரசிம்மர் ஆலயங்களுக்கு செல்லும்போது மிகவும் சுத்தமாகவும், பக்தி பூர்வமாகவும் இருக்க வேண்டுமென்பார்கள்.

Friday, December 23, 2011

Some unknown story from Purana

ஹிரண்யகஷிபுவின் மகன்  பிரஹலாதன்
எப்படி விஷ்ணுவின் பக்தன் ஆனான் ?
சாந்திப்பிரியா

நாம் அனைவருமே ஹிரண்யகஷிபு நரசிம்ம அவதாரம் பெற்ற மகாவிஷ்ணுவினால் கொல்லப்பட்ட கதைதான் பெரும்பாலும் அறிந்து இருபோம். ஆனால் அது ஏன் நடந்தது, ஹிரண்யகஷிபுவிற்கு பிரஹலாதன் மகனாகப் பிறந்தது ஏன் என்பதையோ அவன் எப்படி விஷ்ணுவின் பக்தனாக இருந்தான் என்ற கதையையோ பலருக்கு தெரிந்து  இருக்காது. காரணம் பல புராணங்களில் கூட அந்தக் கதை மாறுபட்டு உள்ளது.
ஒரு ஜென்மத்தில் ஹிரண்யகஷிபுவும், அவனுடைய சகோதரரான ஹிரண்யாஷ்டசகனும் வைகுண்டத்தில் ஜெயா- விஜயா எனும் பெயர்களில் துவாரகாபாலகர்களாக இருந்தவர்கள். அவர்கள் ஒருமுறை பிரும்மாவின் மகன்களை வைகுண்டத்தில் நுழைய விடவில்லை என்பதினால் அவர்கள் மூன்று  யுகங்களில் ஆண்களாக  பூமியில் பிறந்து விஷ்ணுவினால் அல்லது விஷ்ணுவின் ஏதாவது ஒரு அவதாரத்தினால்  மரணம் அடைவார்கள் என  சபிக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் பார்வதியிடம் சென்று அழுதபடி பெண்களான  தமக்கு விடிமோட்ஷம் தருமாறு வேண்டினார்கள். அவளும், அவர்களின் சாபத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும், ஆனால் அவர்கள் மூன்று யுகங்களிலும் சாபத்தைக் களைந்து கொண்டப் பின் மீண்டும் அவர்கள் பெண் துவாரகாபாலகர்களாகி, சக்தி தேவிகளின் காவல் தேவதைகளாக இருப்பார்கள் என வரம் கொடுத்தாள். அதனால்தான் சக்தி தேவியின்  ஆலய சன்னதியின் கருவறையில் ஜெயா-விஜயா என்பவர்கள் காவல் தேவதைகளாக  நிற்கிறார்களாம். பிரும்மாவின் சாபத்தினால் மூன்று அசுரர்களின் அவதாரங்களை மூன்று ஜென்மங்களில் எடுத்த ஜெயாவும் விஜயாவும்,  அவர்களது  கடைசி பிறப்பில்  வராக ரூபத்தில் வந்த விஷ்ணுவினால் கொல்லப்பட்ட ஹிரண்யாஷ்டசகனாக ஒருவளும், பக்த பிரஹலாதனின் தந்தையாக ஹிரண்யகஷிபு  என்றவனாகவும் வந்து  நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணுவினால் கொல்லப்பட்டான். அதன் பின் சாப விமோசனம் பெற்றவர்களை சக்தி தேவியானவள் தனது ஆலய காவல் தேவதைகளாக நியமித்துக் கொண்டாளாம்.
ஹிரண்யகஷிபு பல அறிய  வரங்களையும் , அவனை எளிதில் அழிக்க முடியாத அளவிற்கான வரங்களையும் பிரும்மா மூலம் பெற்று இருந்தவன். அவனால் அனைத்து  தேவர்களும், ரிஷி முனிவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்கள்  . அவனைக் கண்டு அஞ்சி ஓட வேண்டி இருந்தது. அத்தனை வலிமை மிக்கவனாக இருந்தும் தனக்கு இன்னமும் அதிக சக்தி வேண்டும் என்று எண்ணியவன் சிவனை வேண்டிக் கொண்டு ஐம்பது வருட கடும் தவத்தில் அமர்ந்து கொண்டான்.  அந்த தவத்தில் அவன் வெற்றி அடைந்துவிட்டால் அவனே மூலோகங்களின்- தேவலோகம், வைகுண்டம் மற்றும் கைலாயங்களின் அதிபதி ஆகிவிடுவான்.  அவனுக்கு பூரக ஜென்ம சாபமான விஷ்ணுவினால் மரணம் என்பதும் இருக்காது  என்பதினால் அனைத்து தேவர்களும், ரிஷி முனிவர்களும் கவலைக் கொண்டார்கள்.
 அந்தப் பறவையைக் கொல்கிறேன் எனக் 
கோபமாக எழுந்தான் ஹிரண்யகசிபு 

அவனோ தவத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல. கடுமையான விரதம் பூண்டு அன்ன ஆகாரம் இன்றி தவம் இருப்பவன். ஆகவே மேற்கூறிய காரணத்தினால் அவன் தவத்தைக் கலைக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. தேவர்கள் அனைவரும் சென்று   ஏழு உலகிலும் அப்போது இருந்த எவராலும், எதனாலும் மரணம் சம்பவிக்க முடியாது என்ற அழியா வரத்தை ஹிரண்யகஷிபுவிற்கு தந்து இருந்த பிரும்மாவிடம் சென்று தமது கவலையை தெரிவித்தார்கள். அவரும் கவலை அடைந்தார்.  தான் செய்து விட்ட தவறினால் அவன் எளிதில் அழியா வரம் பெற்று விட்டான். என்ன செய்வது எனக் கவலைப்பட்டவர் நாரதரை அழைத்தார். அவரிடம் ஹிரண்யகஷிபுவின் தவத்தைக் கலைக்கவும், அவனைக் கொல்லவும்  ஏதாவது உபாயம் உள்ளதா எனக் கேட்டார். நாரதர் அவரைத் தேற்றினார். கவலைப்பட வேண்டாம் என்றும், அதற்கான உபாயத்தை தான் செய்வதாகவும் கூறி விட்டு சென்றார்.
அதற்கு முன்னரேயே நாரதர் விஷ்ணுவிடம் ஆலோசனை பெற்று இருந்தார்.  அதன்படி வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்க வேண்டும் என்பதினால்   தவத்தின் முடிவில்தான் அவன் தவத்தைக் கலைக்க வேண்டும் என எண்ணிய நாரதர்  , ஹிரண்யகசிபு   நாற்பத்தி ஒன்பது ஆண்டுகளாக அவன்  தவத்தில் இருந்த இடத்தின் அருகில் இருந்த மரத்தில் ஒரு பறவையின் உருவில் சென்று அமர்ந்து கொண்டார். அதன் மீது அமர்ந்து கொண்டு வேண்டும் என்றே, உரத்தக் குரலில் 'ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...'எனக் கத்திக் கொண்டே இருந்தார். சிவபெருமானை துதித்தபடி தவத்தில் அமர்ந்து  நாற்பத்தி ஒன்பது வருடங்களாகி விட்டது. இன்னும் ஒரே ஒரு வருடம்தான்  பாக்கி. அவன் தவத்தினால் மனம் மகிழ்ந்து இருந்த  சிவபெருமான் அவனுக்கு காட்சி தர தன்னை தயார் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரமே அதைத் தடுக்க சரியான நேரம் என்பதை உணர்ந்த நாரதர் அந்த நேரத்தை தேர்ந்து எடுத்து ர் தவத்தில் இருந்தவன் காதுகளில் அந்த ஒலி பெரியதாக சென்று விழும் வகையில் பறவை போல கத்திக் கொண்டு இருக்க அவன் தவம் கலைந்தது. நாற்பத்தி ஒன்பது வருட தவம் செய்தது வீணாயிற்று.  எந்தப் பறவை அப்படி கத்துகிறது என கோபத்துடன் அதை கொல்வதற்காக மரத்தில் அதை தேடியபோது அது பறந்து சென்று விட்டது. 'ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...என்ன நாராசம் இது ...இந்தப் பறவை என் நாற்பத்தி ஒன்பது வருட தவத்தையே கலைத்து விட்டதே' என ஆத்திரத்துடன் அரண்மனைக்கு திரும்பினான்.

காயாது  வயிற்றில் இருந்தக் குழந்தையின் 
நினைவும், மனதும் விஷ்ணுவையே 
நோக்கி ஓடிக்  கொண்டு இருந்தது 

அப்போதுதான் அவன் மனைவியான 'காயாது' என்பவள்  குளித்து விட்டு வந்திருந்தாள். 'என்ன தவம் முடிந்து வரங்களை பெற்றுவிட்டீர்களா' என ஆர்வத்துடன் அரைகுறை ஆடையுடன் இருந்தவள் அவனை வந்து கட்டிக் கொள்ள, அவளை அந்த நிலையில் கண்ட அவனுக்கு காமவெறி தலை தூக்கியது. 'அனைத்தும் குளறுபடியாகிவிட்டது....எதோ ஒரு  பறவை வந்து ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...எனக் கூவிக் கொண்டே என் தவத்தை கலைத்து விட்டது' என ஆத்திரத்துடன் மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கூறிக் கொண்டு அவளுடன் உடலுறவை தொடர்ந்து கொண்டிருக்க   அவனுடைய உயிர் அணுவும் ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...என்ற மந்திரத்தை கிரகித்துக் கொள்ள  அந்த உயிர் அணுவினால்  கர்பமுற்ற 'காயாது' வயிற்றில் இருந்தக் குழந்தையான பிரகலாதனும் விஷ்ணுவின் நாமத்தை ஜெபித்தபடியே இருந்தான்.
 
 தனக்குப் பிறந்தக் குழந்தையே 
தன்னை கொல்ல அவதாரம் எடுத்துள்ளது எனத் 
தெரியாமல் மகிழ்ச்சியுடன் அதை கொஞ்சினான் 

இன்னொரு புராணக் கதையின்படி ஹிரண்யகசிபு தவத்தில் அமரும் முன் அவன் தனது மனைவியான 'காயாது' என்பவளை கர்பவதியாக்கி இருந்தான். அவன் தவத்தில் அமர்ந்து இருந்த நேரத்தில் ஹிரண்யகசிபுவை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திரன் அங்கு வந்து  கர்பமுற்று இருந்த 'காயாது'வை இழுத்துக் கொண்டு போகத் துவங்கியபோது அவள் மயக்கம் அடைந்தாள்.  அப்போது நாரதர் அங்கு  கோபமாக வந்து அவனை வழிமறித்தார்.   'நீ செய்வது உனக்கே சரியாக உள்ளதா இந்திரா, இவளுக்கு பிறக்க உள்ள குழந்தை விஷ்ணுவின் பக்தனாகி, அவன் மூலமே அந்த அசுரனை விஷ்ணு பகவான் அழிக்க உள்ளார் என்பதினால்தான்  இவள் வயிற்றில் இந்தக் குழந்தையை வளரச் செய்துள்ளார். ஒரு பெண்ணை, அதுவும்  ஒரு கர்பிணியை, உன்னுடன் உனக்கு நிகராக சண்டைப் போட்டு தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் உள்ள இவளை நீ  அவமானப் படுத்தியதினால், இந்த பாவச் செயலை செய்த நீ பிரும்மஹத்தி தோஷம் பிடித்து அலைவாய். உடனே அவளை விட்டு விட்டு  இந்த இடத்தை விட்டுச்  செல்' எனக் கோபமாகக் கத்தியப் பின், ஒரு ரிஷி உருவில் தன்னை மாற்றிக் கொண்ட அவர் மயக்கம் அடைந்துக் கிடந்தவளை  தண்ணீர் தெளித்து எழுப்பினார். அதனால்தான் இந்திரன் கௌதம முனிவரின் மனைவியான அஹில்யாவிடம் முறை கேடாக நடந்து சாபம் பெற்ற சம்பவம் நடந்தது. அஹில்யாவின் சாபத்தினால் இந்திரன் உடம்பு முழுவதும் பெண் அங்கங்களாக மாறி அவமானப்பட்டு நாரதர் மூலம் மீண்டும் விமோசனம் பெற்றார்.  மயக்கம் தெளிந்த 'காயாதுவை' ரிஷி உருவத்தில் இருந்த நாரதர் தான் யார் என்பதைக்காட்டிக் கொள்ளாமல், அவளை பத்திரமாக அவள் வீட்டில் கொண்டு சேர்த்தார். போகும் வழி முழுவதும் வேண்டும் என்றே ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...என கூறிக் கொண்டே அவர் சென்றபோது அவள் வயிற்றில் இருந்தக் குழந்தை அந்த மந்திரத்தை தம்மை அறியாமலேயே கிரகித்துக்  கொண்டது. அதன் நினைவெல்லாம் நாரயணராகி விட்டது.  வீடு திரும்பிய 'காயாது'வும் நடந்த நிகழ்ச்சியைப்  பற்றி ஹிரண்யகசிபு வந்தால் கூற வேண்டும், அந்த ரிஷி உருவில் இருந்த நாரதர் உச்சரித்துக் கொண்டு இருந்தது சக்தி வாய்ந்த மந்திரம் என்பதை அறியாமல், அவர் எதோ முணுமுணுத்தார் என எண்ணிக் கொண்டு  அந்த வார்த்தையை நினைவு வைத்திருந்து ஹிரண்ய கஷிபுவிடம் கூற வேண்டும்  என்பதற்காக அவ்வப்போது ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...என தன் மனதில் நினைவுபடுத்திக் கொண்டே கொண்டே இருக்க அவள் வயிற்றுக்குள் வளர்ந்து வந்த  பிரஹலாதனும்  அதை இன்னமும் நன்றாக கிரகித்துக் கொண்டான். அதனால்தான் அவன் விஷ்ணுவின் பக்தன் ஆனான்.

Wednesday, December 21, 2011

Narad Leela

நைமிசாரண்ய நீதிக் கதை
சாந்திப்பிரியா
 
ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் சௌனர் முதலிய மகா முனிவர்கள் கூடி மோட்ஷம் அடைய சரியான வழி எது என்பதைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அமர்ந்து இருந்த சூதக முனிவரை நோக்கி அவர்கள் கேட்டார்கள் ' ஹே பவித்ரமான முனிவரே, புராணங்களிலும், இதிகாசங்களிலும், தர்ம சாஸ்திரத்திலும் பல விதமான நெறி முறைகள் கூறப்பட்டு உள்ளன. மனிதர்களும், ரிஷி முனிவர்களும், ஏன் சன்யாசிகளும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களிலும், கடவுள் பக்தியிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்கள் அனைவருக்குமே இறுதியில் மோட்ஷம் கிடைப்பது இல்லை. சிலருக்கு மட்டுமே அது கிடைக்கின்றது. இந்த கலி காலத்தில் கடவுள் மீது மிக மிக அதிக பக்தி வைத்துக் கொண்டும்,  ஆலய வழிபாட்டை பிரதானமாகக் கொண்டும் இருக்கின்றார்கள். ஊருக்கு ஊர் ஆஸ்ரமங்களும், தெய்வப் பிறவிகளும், மகான்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆலயங்கள் போதாது என்று அங்கெல்லாம் மக்கள் சென்று இறை வழிபாட்டை கடை பிடிக்கிறார்கள். ஆனாலும் கலி காலத்தில் வாழும் மக்கள் அற்பாயுசு உள்ளவர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், வியாதிகளினால் பீடிக்கப்பட்டும் மன அமைதி இன்றியுமே இருக்கிறார்கள். இவற்றைப் பார்க்கும்போது  பகவான் கண்களை மூடிக் கொண்டு இருக்கின்றாரா என மக்கள் நினைக்க மாட்டார்களா?  இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் எங்களுக்கு விளக்குவீர்களா?'' என பௌயமாகக் கேட்டார்கள்.
அவர்கள் அனைவரும் கூறியதைக் கேட்ட  சூதக முனிவர் கூறினார் ' ரிஷி, முனிவர்களே, நீங்கள் கூறிய அனைத்துமே உண்மைதான். ஆனால் அவற்றுக்கு மூல காரணம், நம் மனதில் இருந்து நாம் எதை விலக்கி வைத்து இருக்க வேண்டுமோ அதை விலக்கி வைக்காமல் எத்தனைதான் கடவுள் மீது பக்தி செலுத்தி வந்தாலும், பக்தி என்பது வேறு, ஆஸாபாசங்கள், இச்சைகள் வேறு என நாம் நம்மக்குள் நாமே ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு விட்டதினால்தான் நமக்கு நாம் செலுத்தும் பக்தி முழுமையான பக்தியாக அமைந்து  இருப்பதில்லை. முக்கியமாக பலவிதமான விரும்பத்தகாத உணர்ச்சிகளே மனிதர்களின் மனதில் அலை பாய்ந்து கொண்டும் அவர்களை ஆக்ரமித்திக் கொண்டும்  இருப்பதினால் அவர்கள் எத்தனை விதமான  இறை பக்தியை மேற்கொண்டாலும், அவர்கள் பக்தி முழுமையாக இருப்பது இல்லை. இறை பக்தி செலுத்தும்போது எதை அடக்காவிடிலும் பொருளாசையும், காமத்தையும்  அல்லவா அடக்கிக் கொள்ள வேண்டும். ஆஸாபாசங்கள், இச்சைகள் என நம் மனதை களங்கப்படுத்திக் கொண்டே இருந்து கொண்டு சற்று நேரம் பக்தி செலுத்தி விட்டு  நமக்கு முக்தி வேண்டும், ஆண்டவனின் அருள் வேண்டும்  என எதிர்பார்ப்பது நியாயமில்லையே. ''
அதைக் கேட்டு ''சூதக முனிவரே, நீங்கள் கூறுவது அனைத்தும் சரி. ஒப்புக் கொள்கிறோம். ஆனால் ஆடி-ஓடி ஒய்ந்து விட்டவர்கள் , தினமும் ஆலயங்களுக்கு சென்று வணங்கித் துதித்தபடி, ஆலயங்களில் முழு நேர சேவைகளை செய்தபடி, ஆஸ்ரமங்களில் தன் சேவைகளை தொடர்ந்தபடி  புனிதமான அந்த இடங்களில் தம் வாழ்கையை ஓட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு  குடும்பத்தின் மீதான ஆசைகள் வேண்டுமானால் இருக்கலாம், காமங்கள் போன்ற இச்சைகள் எப்படி இருக்க முடியும் ? அது எப்படி அவர்களுக்குப் பொருந்தும் ? அவர்களுக்கும் ஏன் முக்தி கிடைப்பது ?'' என சிலர் கேட்டபோது, இதை விளக்க நாரத முனிவர் நடத்திய நாடகத்தைக் கூறுகிறேன் கேளுங்கள் என்று கூறி விட்டு நாரத முனிவர் நடத்திய லீலையைக் கூறினார்.
நாரத  முனிவர்  அஸ்த்தைய தேவனுக்கு  
விளக்குகிறார் 
 
ஒரு முறை அஸ்த்தைய தேவன் என்ற மன்னன் நாரத முனிவரை சந்தித்தான். அவன் திருமாலின் பெரும் பக்தன். திருமாலை வேண்டி பல வரங்களை பெற்றவன். நாரதரை சந்தித்தவருக்கு மேற் கூறிய விஷயம் பற்றிய சந்தேகம் எழுந்ததினால் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டார் '' நாரத முனிவரே, எனக்கு ஒரு சந்தேகம். என் நாட்டில் அனைவரும் கடவுள் பக்தி கொண்டு ஆலய வழிபாடுகளை செய்த வண்ணம், சச்சரவின்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். நாட்டில் கொள்ளை இல்லை, கொலை இல்லை, பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள், நீதியும் நேர்மையும் தலை தூக்கி நிற்கின்றன. ஆலயங்களிலும், ஆஸ்ரமங்களிலும்  மக்கள் வெள்ளம் அலை மோதியபடி உள்ளது.  மகான்கள் அங்காங்கே பிரவசனம் செய்து மக்களை ஆன்மீகத்தின்பால் ஈர்த்துக் கொண்டு வருகிறார்கள். நான் மேலும் மேலும் ஆலயங்களைக் கட்டுவதில் மன நிம்மதி பெறுகிறேன். ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம் மனதில் அவ்வப்போது எழுகின்றது. இத்தனை நல்ல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருந்தாலும், என் நாட்டில் கடவுள் மீது மிக மிக அதிக பக்தி வைத்து இருக்கும் மனிதர்கள், ஆலயங்களுக்கு தவறாமல் சென்று வழிபாட்டு பக்திபூர்வமாக உள்ளவர்கள் என அனைவருமே அற்பாயுசு உள்ளவர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், வியாதிகளினால் பீடிக்கப்பட்டும், மன அமைதியை இழந்துமே காணப்படுகிறார்கள். வீடுகளிலும், நாட்டிலும் சுபீட்ஷம் இல்லை, இவற்றை எல்லாம் பார்க்கும்போது நாம் பக்தி எனும் பெயரில் செல்வத்தை விரயம் செய்து, பொன்னான வாழ்கையையும் வீணாக்கிக் கொள்கிறோமோ என  அவ்வப்போது வெறுப்பு ஏற்படுகின்றது. அதன் காரணம் என்ன என எனக்கு விளக்க வேண்டும்.
நாரதர் சிரித்தார்,'' மன்னா நீ கூறுவது சரிதான். நாம் கேட்பதற்கும், பார்ப்பதற்கும், நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் மிக அதிகம். நாம் வெளிப்படையாக தெரிவதை மட்டுமே நம்புகிறோம். எதையும் ஆராய்ந்து பார்ப்பது இல்லை. பக்தி என்பது புனிதமானது. அதை மக்கள் கொச்சைப்படுத்துகிறார்கள். அதனால்தான் பக்தி பெருகுவது போல வெளித் தோற்றம் தந்தாலும், பெருகுவது பக்தி அல்ல, ஆசாபாசங்களும், காமங்களுமே. அது வெளியில் தெரிவது இல்லை. அதனால்தான் எத்தனை ஆலயங்கள் தோன்றினாலும் , கடவுளுக்கு பூஜைகளும், ஹோமங்களும் செய்யப்பட்டாலும், அதில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே நன்மை பெறுவார்கள் என்பது கிடையாது.  கலிகாலத்தில் ஆலயங்களுக்கும், ஆஸ்ரமங்களுக்கும் செல்வது ஒரு  கௌரவமாக கருதப்படுகிறது. அங்கு செல்வதும் அனைவருமே பக்தி பூர்வமாக வணங்குபவர்கள் அல்ல.  பலருக்கு அந்த இடம் ஒரு பொருட்காட்சி சாலையைப் போல அல்லவா உள்ளது.  தாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளாமல் புனிதமான ஆலயங்களில் சென்று இன்னும் பாவங்களை பெருக்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் எத்தனை ஆலயம் தோன்றினாலும் , பூஜைகளும் செய்தாலும், பக்தி மார்க்கம் பெருகினாலும், உண்மையான பக்தி இல்லாதவரை நல்லவை நடைபெறுவதே இல்லை.  உன் நாட்டில் உள்ளவர்கள் காட்டும் இறை பக்தி எத்தகையது என்பதை பார்த்து விட்டு அதற்கான விடையை நீயே தெரிந்து கொள்  என்றவர் மாறு வேடத்தில் மன்னனை அழைத்துக் கொண்டு சில ஆலயங்களுக்கும் ஆஸ்ரமங்களுக்கும் சென்றார்.
மனசு எங்கே போகிறது  பார்த்தாயா ?
 
ஆலய சன்னதியில் அதிக மக்கள் இல்லை. வந்திருந்தவர்களில் நடுத்தர வயதினர்,  கிழவர்கள்,யுகவதிகள் என பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். எடுப்பாக உடை அணிந்து கொண்டு வந்து சன்னதியில் நின்று இருந்தார்கள். அர்ச்சகர் பூஜை செய்தவாறு இருந்தார். உண்மையான பக்தி கொண்டவர்கள் சன்னதியில் இருந்த கடவுளின் சிலையை பார்த்தபடி கண்களை மூடிக் கொண்டு  ஸ்லோகங்களை கூறிக் கொண்டு இருந்தார்கள்.  கண்களை திறந்தாலோ தெய்வ சிலையைத் தவிர வேறு எங்குமே பார்க்கவில்லை. ஆனால்  ஆண்களில் சிலர் அழகிய பெண்களை நோக்கிக் கொண்டும், இடையிடையே பூஜையை நோக்கியவாறும் இருந்தார்கள். பாதி கவனம் சன்னதிக்குள்ளும், பாதி அழகை ரசிப்பதிலுமே இருந்தது. அதில் ஆச்சர்யம் என்ன என்றால், அப்படி இருநிலை கொண்டு இருந்தவர்களில்  சில வயதானவர்களும் அடக்கம். சில நிமிடங்கள்தான் அத்தனை காட்சிகளும், ஆனால் அதிசயமாக அத்தனை பேரும், அர்ச்சகர் மணியடித்தபடி கல்பூர ஹாரத்தி எடுக்கத் துவங்கியதும்  கனவு கலைந்தது போல தெய்வங்களின் சிலையை பார்த்தவாறு பக்தி பூர்வமாக வேண்டி வணங்கினார்கள். அது முடித்ததும், ஆலயவளாகத்துக்குள் மீண்டும் அவரவர்கள் பார்வை அவ்வப்போது அங்காங்கே  திரும்பியது. மொத்தத்தில் பக்தி கால் பாகம், காம எண்ணங்களும் பிற எண்ணங்களும் அலை பாய்ந்து கொண்டு இருந்தது  மீதி பாகம்.
உண்மையான  பக்தி இல்லாமல் இல்லை. 
அதுவும் சிலரிடம் உள்ளது.
 
பெண்கள் பக்கம் நோக்கினாலோ, அவர்களில் உண்மையான பக்தி கொண்டவர்கள் சன்னதியில் இருந்த கடவுளின் சிலையை விட்டு தனது கண்களை அசைக்கவில்லை. ஆனால் வேறு சிலரோ வைத்த  கண்ணனை நகர்த்தாமல் மற்றப் பெண்கள் அணிந்து இருந்த புடவைகளையும், நகைகளையும் பார்த்தவாறு இருந்தபடி, இடையிடையே கடவுள் சன்னதியை நோக்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் அணிந்து இருந்த உடையோ காம உணர்ச்சியை தூண்டுவதாகவே இருந்தது. அவர்கள் பாவனையோ அழகை வெளிப்படுத்தவே அங்கு வந்தது போல இருந்தது.
வயதானவர்களோ நடுநடுவே எதையோ பேசிக் கொண்டே அவ்வபோபது சன்னதிக்குள் நோக்கியபடி இருந்தார்கள். இந்த காட்சியும் சில நிமிடங்கள்தான் என்றாலும்  அர்ச்சகர் மணியடித்தபடி கல்பூர ஹாரத்தி எடுக்கத் துவங்க அந்த சப்தத்தைக் கேட்டு  கனவு கலைந்தது போல தெய்வங்களின் சிலையை பார்த்தவாறு நின்றபடி பக்தி பூர்வமாக வேண்டி வணங்கினார்கள். அது முடித்ததும், மீண்டும் அவரவர்கள் பார்வை மீண்டும் அவ்வப்போது அங்கும் இங்கும் அலைந்தது. மொத்தத்தில் பக்தி கால் பாகம், காம எண்ணங்களும் பிற எண்ணங்களும் அலை பாய்ந்து கொண்டு இருந்தது  மீதி பாகம்.
நாரதர் சிரித்துக் கொண்டே அந்த சஞ்சலமான இருத்தலை மக்கள் மனதில் ஓடுவது என்ன என்பதையும், அவர்கள் என்ன பேசிக் கொண்டு  இருக்கிறார்கள் என்பதையும்  உனக்குக் காட்டுகிறேன் பார் என்று கூறியபடி அவனை கண்களை மூடிக் கொண்டு அமருமாறு கூறினார். மூடிக் கொண்ட மன்னன் கண்களுக்குள் ஆலயக்  காட்சிகள் தெரிந்தன.
ஒருவன் நினைத்தான் ''ஆஹா, எத்தனை எடுப்பாக அவள் இருக்கிறாள், எனக்கு இப்படி ஒருவள் கிடைத்தால்....''
இன்னொருவன் அவள் அங்க அவயங்களை வெகுவாக ரசித்துக் கொண்டு இருந்தான்.
இன்னொருவன் அங்கிருந்த இரண்டு பெண்களின்- தாயும், மகளையும் - பார்த்து அவர்களின் நடை அழகையும், முக அழகையும் எடைப் போட்டுக் கொண்டு அவர்கள் எண்டு இருப்பார்கள் என எண்ணியவாறு இருந்தான்.
அடுத்து பெண்களின் காட்சி தெரிந்தது:
ஒருவள் தன் தோழியிடம் சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தவளைக் சைகையால் காட்டி கூறிக் கொண்டு இருந்தாள் '' அவள் காதில் உள்ளது எட்டுக் கல் பேஸரியை பார்த்தாயா?''
இன்னொருவள் மனதில் ''ஆஹா...அந்தப் புடவையை எங்கே வாங்கி இருப்பாள்? ''
இன்னொருவள் '' அந்தப் பையனின் டிரஸ் அழகாக இருக்கிறது இல்லை? ''
வயதானவர்கள் காட்சி:
ஒருவள் இன்னொருவளிடம் கூறிக் கொண்டு இருந்தால் 'வரவர என் நாட்டுப் பெண் ஒழுங்காக சமைப்பதே இல்லை. ஊரை சுற்றிக் கொண்டே இருக்கிறாள். தரித்திரம் என் பிராணன் போகிறது  '
இன்னொருவள் ' இந்த மாசம் என்ன செய்வது என்றே தெரியலை. ஏகப்பட்ட செலவு. இதில் ஊருக்கு வேறு பணம் அனுப்பனும்'.
இன்னொருவர் ' பேசாமல் வயதானோர் இல்லத்துக்கு போய் விடு என்று என் மகன் கூறுகிறான். வீட்டில் நிலைமையே சரி இல்லை'.
இப்படியே பல விதமான தேவை அற்ற சம்பாஷணைகள்.
ஆனால் அதே சமயத்தில் பக்தி பூர்வமாக வேண்டிக் கொண்டு இருந்தவர்கள் மனதில் கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தார்கள் ' தெய்வமே, என் பிரச்சனையை நீதான் தீர்த்து வைக்க வேண்டும். உனக்கு உண்டியலில் காசு போடுகிறேன், விரதம் எடுக்கிறேன், நீதான் எனக்கு வழிகாட்ட வேண்டும்' . அவர்கள் மனதை அங்கு முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு இருந்தது கடவுளே.
நாரதர் கூறினார் 'பார்த்தாயா மன்னா, இதைதான் பக்தி என்கிறாயா ?' மன்னன் வெட்கி தலை குனிந்து கொண்டான். அவனால் பதில் தர முடியவில்லை. நாரதர் மீண்டும் கூறினார் ' மன்னா பக்தி என்பது ஆத்மார்த்தமாக வர வேண்டும். மனதில் ஆழமாக இருக்க வேண்டும் . குடும்பஸ்தர்கள் அவரவர் வீட்டில் அவரவர் கடமையை செய்து கொண்டு இருந்தாலும்- கணவனாக மனைவியுடனும், மனைவியாக கணவனிடமும் தந்தையாக குழந்தைகளிடமும், மனிதாபிமான மிக்க மனிதர்களாக சமூகத்திலும் இருக்க வேண்டும். கணவன்-மனைவிக்கு இடையே உருவாகும் காமத்தையும், ஆசைகளையும், ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புக்களையும்  ஆலய சன்னதியிலும் , பூஜைகள் நடைபெறும் இடங்களிலும், யாகசாலைகளிலும் வெளிப்படுத்தலாமா?  ஆலய சன்னதிகள் வீண் பேச்சு பேசுவதற்கான இடம் அல்ல.  அங்கு இறைவன் தியானத்தை தவிர வேறு எதுவுமே இல்லாமல் இருந்தால்தான் அது பக்தி என்பதாகும். வீட்டிலே உள்ள பிரச்சனைகளை ஆலயத்தில் தெய்வத்திடம் கூறாமல் அவரவர் பேசிக் கொண்டு இருந்தால் எப்படி ? அதை வெளியிலேயே பேசிக் கொள்ளலாமே. இப்படியாக புனித இடங்களில் செய்யும் தவறுகளினால் அவர்களுடைய பாபங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றனவே தவிர, குறைவதே இல்லை.கடவுளின் அருள் கிட்டுவதும்  இல்லை. எப்போது இப்படிப்பட்ட காம, ஆசாபாச மற்றும் பிற உணர்வுகளை நம்மால் புனித இடங்களில் கூட அடக்க முடியவில்லையோ, கடவுள் எனக்கு கருணைக் காட்டுவதில்லை என்று அவர்கள் கடவுளை நொந்து என்னப் பயன் ? அவர்களுக்கு முக்திதான் கிடைக்குமா ?
சூதக முனிவர் இந்தக் கதையைக் கூறிவிட்டு கேட்டார் '' இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?'' முனிவர்கள் மௌனம் சாதித்தார்கள். 

--பின் குறிப்பு: - இந்தக் கதை காலத்துக்கு ஏற்ப  சிறிது மாற்றம் 
செய்து தரப்பட்டு உள்ளது . மன்னிக்கவும்   --

Saturday, December 17, 2011

Chennai- Periandavar Temple

திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
சாந்திப்பிரியா

திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 14 கிலோ தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 12 கிலோ தொலைவிலும் உள்ளது திருநிலை பெரியாண்டவர் ஆலயம் . பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்துள்ள ஆலயம் இது. மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த அடர்ந்த காடு போன்ற பகுதியில் உள்ளது திருநிலை கிராமம். இரு குளங்களின் மத்தியில்- கிழக்கு பகுதியில் ஒரு குளமும் தெற்குப் பக்கத்தில் மற்றொரு ஏரியும் உள்ள இடத்தில்தான் சிவபெருமான் வந்து தன்  பாதத்தைப் பதித்து நின்றார் என்பது தல வரலாற்றின் ஒரு செய்தி. மேலும் அங்கு சுயம்புவாகத் தோன்றிய வரை சுற்றி இருபத்தி ஒரு சிவ கணங்கள் மண் உருண்டை உருவில் அவரை வணங்கியபடி உள்ளன. இவை அனைத்தும் இங்கு வந்தக் கதை சுவையானது.
கைலாயத்தில் ஒரு நாள் சிவபெருமான் பார்வதியோடு அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நாரத முனி  அவர்களை வந்து வணங்கினார். வந்தவர் ஏழேழு உலகங்களிலும் -தேவலோகம் முதல், அனைத்து உலகிலும் அதர்மம் பெருகி விட்டது என்றும், தேவர்களும், தேவகணங்களும் அசுர கணங்களின் தொல்லையை தாங்க முடியாமல் தத்தம் இடங்களை விட்டு ஓடி காட்டிலும், பிற இடங்களிலும் மறைந்தவாறு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றும், அதை கட்டுப்படுத்த முடியாமல் திருமால் கஷ்டப்படுவதாகவும், சிவபெருமான் அவருக்கு உதவி அதர்மங்களை ஒழிக்க உதவுமாறு வேண்டிக் கொண்டார்.
 சிவன்  பாதம் 

அதைக் கேட்ட சிவபெருமான் வருத்தம் அடைந்தார். கோபத்தில் அவர் உடலில் வியர்வை வழிந்தது . உடனே  அந்த வியர்வை துளிகளில் இருந்து தனது சக்திகளைக் கொண்ட இருபத்தி ஒரு சிவகணங்களை உருவாக்கினார். சிவபெருமானினால் தோற்றுவிக்கப்பட்ட சிவகணங்கள் சிவன் மற்றும் பார்வதியை வணங்கி நின்று, தாம் என்ன செய்ய வண்டும் என அவரைக் கேட்டு பணிந்து நின்றன. சிவபெருமானும் அவர்களை உடனே அனைத்து உலகங்களுக்கும் சென்று அதர்மங்களை அழித்து விட்டு வருமாறு கூற அந்த சிவகணங்களும் உடனேயே அனைத்து இடங்களுக்கும் சென்று அதர்மங்களை அழித்தப் பின் சிவபெருமானை சென்று தாம் முடித்து விட்ட வேலையைப் பற்றிக் கூறாமல் பூலோகத்துக்கு சென்றுவிட்டன. அந்த சிவகணங்களுக்கு பூலோக மனிதர்களின் பக்திமுறை பிடித்து இருந்ததினால் இன்னும் சில நாட்கள் பூலோகத்தில் தங்கிவிடலாம் என அங்கு வந்தார்கள். அதே நேரத்தில், தமக்கு இட்ட பணியை முடித்து விட்டதாக சிவபெருமானிடம் சென்று கூற வேண்டும் என அவைகளுக்கு தோன்றவில்லை. அந்த சிவபெருமானின் பூதகணங்களுக்கு பூமியில் இன்னமும் சில வேலைகள் மீதம் இருந்தன என்பதினால் அந்த இருபத்தி ஒரு கணங்களும் பூலோகத்துக்கு சென்று அங்கு ஒரு வனப் பகுதியில் வாழத் துவங்கின.  அசுரர்களால் அவதிப்பட்ட தேவர்களும், தெய்வ கணங்களும் அசுரகணங்கள் அழிந்துடன் தத்தம் இடங்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள். 
தேவலோகத்தில் அமைதி திரும்பியதும், நாரதரின் அறிவுரையை ஏற்று தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் அசுரர்களை அழித்த சிவ கணங்களுக்கும் நன்றி தெரிவிக்க அவர்களை தேடிய போது, சிவ கணங்கள் அங்கு இல்லை. ஆகவே அவர்களை தேவர்கள் உடனே சிவபெருமானின் தர்பாருக்கு வருமாறு செய்தி அனுப்ப சிவகணங்களும் அங்கு வந்து சிவனை வணங்கினார்கள். தான் கொடுத்த வேலையை முடித்ததும்  வந்து தமக்கு சேதியை அந்த சிவகணங்கள் சொல்லவில்லை என்பதினால் கோபமுற்ற சிவபெருமானும் தாமதமாக அங்கு வந்து சேர்ந்த சிவ கணங்களை இனி பூமியிலே சென்று  மண்ணாக கிடைக்குமாறு சபித்தார். தாம் செய்துவிட்ட தவற்றுக்கு மனிப்புக் கோரிய சிவகணங்கள் அவரிடம் தம்மை மன்னித்து மீண்டும் சிவகணங்களாக மாற அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்கள். சிவபெருமானும் அவர்களை பூமியிலே சென்று மண்ணாகக் கிடந்தால் தான் தக்க சமயத்தில் வந்து அவர்களை ஆசிர்வதித்து மீண்டும் சிவகணங்களாக மாற்றுவதாக உறுதி கூறினார். சிவ கணங்களும் வருத்தத்துடன் பூமிக்கு சென்று விட்டன.
 அங்காள பரமேஸ்வரியாக பார்வதி 
காலம் ஓடியது. மீண்டும் அசுரர்களின் தொல்லை துவங்கியதும் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று அவர்களை அழித்து தம்மைக் காக்குமாறு வேண்டினார்கள். அந்த அசுரர்களில் சுந்தரபத்மன் என்பவன் ஒருவன். அவன் முன்னர் சிவபெருமானிடம் பெற்று இருந்த வரத்தின்படி சிவபெருமான் பூமியிலே மனித அவதாரம் பெற்று சிவன் பாதி- உமை பாதியாக வந்தால் மட்டுமே, அவரால் அவனை அழிக்க முடியும். இப்படியான வினோத  வரம் பெற்று இருந்தவன் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பல வகையில் தொல்லை கொடுத்து வந்தான். ஆகவே சிவபெருமான் மனித உருவெடுத்து அவனை அழிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த நாரத முனிவர் நடத்திய நாடகத்தினால் ஒரு  சம்பவம் நடந்தது.
ஒருநாள் கைலாயத்தில் பார்வதி கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தாள். அதைக் கவனிக்காத சிவபெருமான் அங்கு சென்று அவளிடம் 'உடனே புறப்படு, அசுரர்களை அழிக்க வேண்டிய நேரம் நமக்கு வந்து விட்டது ' என்று அழைத்தார். ஆனால் தியானத்தில் இருந்த பார்வதி அவர் கூறியதைக் கேட்கவில்லை. அதைப் புரிந்து கொள்ளாத கோபமுற்ற சிவபெருமான் தன்னை அவள் அவமதித்துவிட்டால் என நினைத்து, அவளை  பூமியிலே சென்று மனிதப் பிறவி எடுத்து வாழுமாறு சாபம் இட்டார். அவர் கோபமாகக் கூறியது பார்வதியின் காதுகளில் விழ அவளும் அவரை பூமியிலே சென்று மனிதப் பிறவி எடுத்து தன்னுடன் பாதியாக இணையுமாறு திருப்பி சாபமிட சிவபெருமான் அடுத்த வினாடி மனிதனாக மாறி பூலோகம் செல்ல வேண்டியதாகி விட்டது .
பல இடங்களிலும் சுற்றித் திரிந்தவண்ணம் இருந்த அவருடைய இயக்கம் நின்றுவிட மூன்று உலகிலும் இயக்கங்கள் தடைபெறலாயின .உலகமே அழிந்துவிடும் அளவுக்கு நிலைமை செல்லத் துவங்கியது. தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். யாராலும் சிவனைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. இந்நிலையைக் கண்டு பார்வதி அச்சமுற்றாள். என்ன செய்வது எனப் புரியாமல் சற்றும் தயங்காமல் தனது பெண் சக்தியை உள்ளடக்கிய சூலாயுதத்தை வீசி பூமியில் எறிந்தாள். அது விழும் இடத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் ஒளிக் கதிர்களால் சிவனார் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து சேருவார் என்பது அவளுக்கு தெரியும். அதுவும்  பிரகாசமாய் சென்று பூமியில் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த வேகத்தில் அந்த இடத்து பூமியில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழுந்தன.   அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக உருமாறி அங்கேயே சுற்றி அலைந்தவாறு சிவபெருமானின் வருகைக்காக காத்து நின்றன. 
 இருபத்தி ஒரு சிவகணங்கள் சுற்றி நிற்க 
சிவலிங்க வடிவில் சிவபெருமான் 
எங்கேயோ இருந்த சூவன் அந்த சூலாயுத ஒளியைக் கண்டு ஓடோடி வந்து அங்கு தனது பாதத்தைப் பதித்து நிலையாக நின்றார். பார்வதியும் ஓடோடி வந்து அவரை வணங்கி நிற்க மண் உருண்டை வடிவில் அங்கு இருந்த சிவ கணங்களும் தமது உருவைப் பெற்று சிவபெருமானை சுற்றி நின்றவாறு அவரை வணங்கி நின்றார்கள். வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தனது பாதத்தை அங்கு பதித்து நிலையாக நின்ற அந்த இடத்தின் பெயர் திரு+ நிலை = திருநிலை என ஆயிற்று. பெரிய மனிதராக உலகெங்கும் சுற்றி விட்டு இங்கு வந்த சிவபெருமான் பெரிய ஆண்டவர் என்ற பெயரில் பெரியாண்டவராக ஆனார். அங்கு வந்து தன்னை  வழிபட்டு வேண்டுபவர்கள் இருபத்தி ஒரு மண் உருண்டையை வைத்தே தனக்கு பூஜிக்க வேண்டும் என அவர் கூறி அந்த இடத்தில் சாப விமோசனம் பெற்ற சிவகணங்களுக்கும் பெருமை சேர்த்தார். பார்வதியும் சிவனுடன் ஐக்கியமாக, அந்த உருவில் இருந்த சிவபெருமானும் அங்கிருந்து சென்று சுந்தரபத்மனையும் அசுரர்களையும் அழித்து தேவர்களைக் காத்து அருளினார்.
பின்னர் வெகு காலத்துக்குப் பின்னர் அங்கு பெரியாண்டவருக்கு ஆலயம் எழும்பியது. அதில் அண்டத்துக்கும் அன்னையான பார்வதி பார்வதி அங்காள பரமேஸ்வரி ரூபத்தில் வந்து அமர்ந்தாள். ஆலயத்தில் நீண்ட சதுரத்தில் இருபத்தி ஒரு சிவகணங்கலான லிங்கங்கள் சூழ ஒரு பெரியாண்டவரான சிவலிங்கம் உள்ளது காணுவதற்கு அறிய காட்சியாகும்.
இந்த ஆலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி இறைவனை வணங்கி நெய் திபம் ஏற்றினால் குழந்தைகள் இல்லாத எந்த ஒரு  தம்பதியும் குழந்தை பேறு பெருவார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது. அது போல சாப விமோசனங்கள் பெறவும் இங்கு வந்து வேண்டுதல் செய்கிறார்கள்.

ஆலய விலாசம் மற்றும் தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி
Periyandavar Temple
Thirunilai Village, Oragadam post,
Chengalpat Taluk.
Near Thirukkalukundram,
Kanchipuram District,
Pin 603 109
Cell No: 98427 40957
E Mail: egaseeelan28@gmail.com


CONTACT
Mr. G. Egaseelan,
Aalaya Parambarai Nirvagi,
(Temple Trustee)

Thursday, December 15, 2011

Land of Snakes

நாகங்கள் ஆண்ட பூமி  - காஷ்மீரின்
பந்தேர்வாஹ்  மலைப் பள்ளத்தாக்குப் பகுதி
சாந்திப்பிரியா
 வாசுகி மற்றும் சீமாட் வாஹன் நாகங்கள் 
 
நீங்கள் நாகங்கள் (பாம்புகள்) ஆண்டுள்ளதான   பூமி  பற்றி  கேள்விப்பட்டு உள்ளீர்களா? இல்லை என்றால் காஷ்மீரத்தில் உள்ள பந்தேர்வாஹ் எனும் மலைப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு  செல்லவும். அதுவே நாகங்கள் ஒரு காலத்தில் ஆண்டு வந்த  என்கிறார்கள்.
பந்தேர்வாஹ் என்பது ஜம்மு மற்றும் காஷ்மீரத்தின் பல மொழி பேசும் பல மத மக்கள் ஒற்றுமையாக வாழும் இடம். இமய மலை அடிவாரத்தில் உள்ள இந்த பள்ளத்தாக்கு அற்புதமான இயற்கை அழகுகளைக்  கொண்ட பூமி. அங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கு மக்கள் பேசும் மொழியான  பந்தேர்வாஹ் என்பது  ஹிமாச்சலப் பிரதேச மொழியுடன் ஒத்து உள்ளது . ஆனால் பந்தேர்வாஹ் மொழியின் சில சொற்களை பந்தேர்வாஹ் பகுதி மக்களால் மட்டுமே உச்சரிக்க முடியுமாம்.
பந்தேர்வாஹ் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி இருந்த இந்த பகுதியைப் பற்றிய புராணக் கதை இது. இதை 'நாகோன் கா பூமி' என ஹிந்தியில் அழைக்கின்றார்கள். அதன் அர்த்தம் 'நாகங்களின் பூமி'  என்பது. முன்னொரு காலத்தில் இந்த இடம்  முழுவதுமே நீரால் மூழ்கிக் கிடந்தது. அங்கு பல நாகங்கள் வசித்து வந்தன. காஷ்யப முனிவரும்  அப்போது அங்கு (காஷ்மீரில்) வசித்துக் கொண்டு இருந்தார். சில விசித்திர காரணங்களினால் அவருக்கு மனித ரூபன்களைத் தவிர வேறு இன பிராணிகளும் குழந்தைகளாகப் பிறந்தன. அவர் பிரஜாபதியின் பதிமூன்று பெண்களை மணந்து கொண்டு இருந்தவர். அவருடைய இரண்டு மனைவிகளான கத்ரு மற்றும் வினிதா என்பவர்கள் மூலம் அவர் நாகங்களையும் கருடன் மற்றும் அருணாவை பெற்று எடுத்தார்.
 ஆலயம் 

மனைவி காத்ரு மூலம் பிறந்தவர்கள் வாசுகி நாகம், சேஷ நாகம் மற்றும் மஹேல் நாகம் மற்றும் பத்ரா எனும் பதேர்காலி என்ற பெண் போன்றவர்கள் . மனைவி வனிதாவுக்கு பிறந்தவர்கள் கருடன் மற்றும் அவருடைய சகோதரர்கள். இரு மனைவிகளின் பிள்ளைகளும் விரோதம் பாராட்டினார்கள்.  கருடனும் அவர் சகோதரர்களும் நாகங்களை அழிக்க முயற்சித்தார்கள்.அந்த சமயத்தில் அங்கு வந்த காஷ்யப முனிவர் அந்த நீர் முழுவதையும் அங்கிருந்து வெளியேற்றுமாறு நாகங்களுக்கு ஆணையிட்டார். அப்போது அந்த பூமியை ஆண்டு வந்தது நாக (பாம்புகள் )  மன்னர்களே. அங்கிருந்த ஏரியில் மூழ்கிக் கிடந்த  'ஜல்லோட்பாவா' என்ற பறக்கும் நாகம் (டிராகன்) அங்கிருந்த நாகங்களை  கொன்று தின்றபடி  அவற்றை அழிக்கத் துவங்கியது. இதையெல்லாம் கண்டு  மனம் வருந்திய நாகங்கள் அங்கிருந்து கிளம்பி பிற இடங்களுக்கு செல்லத் துவங்கின. அவை சென்ற ஒரு இடமே 'பந்தேர்வாஹ்' மற்றும் 'க்ரிஸ்த்வார்' என்ற மலைப் பள்ளத்தாக்குப் பகுதிகள்.
அவர்கள் செல்லும் முன்னரே நாகங்களின் சகோதரியான பதேர்காலி பந்தேர்வாஹிற்குப் போய் அங்கேயே தங்கி தனக்கு ஒரு ராஜ்யத்தை அமைத்துக் கொண்டு தானே அந்த ராஜ்யத்தின் பட்டத்து ராணியாகி விட்டாள். அங்கு சென்றதும் தனது சகோதரர்களான நாகங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களையும் தான் அரசாண்ட பகுதிக்கு வரவழைத்து தனது  ராஜ்யத்தை மூன்றாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பிரிவாக ஆள்வதற்குக் கொடுத்தாள். பந்தேர்வாஹின் நீரு எனும் நதியின் இடது புறத்தில் உள்ள 'மயோன் பந்தேர்வாஹ்' என்ற பகுதியை வாசுகி நாகம் பெற்றுக் கொள்ள அந்த நாகத்தை உள்ளூரில் இருந்தவர்கள்  பாஸாக்  நாகம் என அழைத்தார்கள். அந்தப் பகுதியின் வலது பக்கத்தில் இருந்த இடம் சேஷ நாகத்தின் ஆளுமைக்கு வர அந்த நாகத்தை  ஸபார் நாகம் என்ற பெயரில்  அழைத்தார்கள். 'பள்லேஸ்சா மற்றும் மர்மெட்' எனும் பகுதிகளை தொட்டபடி இருந்த பகுதிக்கு மகேல் நாகம் அதிபதியாயிற்று. இவை வாசுகி புராணத்தில் காணப்படும் செய்திகள் . இப்படியாக வாசுகி நாகம் பந்தேர்வாஹின் முதல் மன்னனாக ஆக, அவருடைய சகோதரி பத்ரா முதல் பட்டத்து ராணியாக இருந்தாள்.
 ஆலயத்தின் உள்ளே 

அந்த நாகங்களின் ஆலயங்கள் அந்தந்த இடங்களில் அமைக்கப்பட, நாக ஆதிக்கமும் ராஜாங்கமும்  துவங்கியது. தற்போது அந்த நாகங்களை அங்குள்ள மக்கள் தமது குல தேவதையாக வணங்குகிறார்கள். சில காலம் பொறுத்து  தனது சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் பத்ரா அங்கிருந்து கிளம்பிச் சென்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 'வடிபுரா' எனும் பகுதியில் வாழத் துவங்கினாள். அவளுக்கும் அங்கு 'பைன்' எனும் மரக்காட்டில் ஆலயம் அமைந்து உள்ளது. அவளை காஷ்மீர் பண்டிதர்கள் தமது குல தெய்வமாக வழிபடுகின்றார்கள். வருடத்திற்கு ஒரு முறை அவள் நினைவாக விழாவைக் கொண்டாடுகிறார்கள். வாசுகி புராணத்தின் ஸ்லோகம் 303 -304 லில் எழுதப்பட்டு உள்ளது என்ன என்றால் ''எவன் ஒருவன் தேவலோக மனிதர்கள், ரிஷி முனிவர்கள், மற்றும் நாக தேவதைகள் உள்ள இந்த இடத்துக்கு வந்து இந்த தேவியை வழிபடுவார்களோ, அவர்களுக்கு கயாவில் குளித்த புண்ணியம் கிடைக்கும்''.
நாகங்களின் சகோதரியான பத்ரா அங்கிருந்து செல்ல வேண்டியதின் காரணம் குறித்து வரலாற்றுக் கதை இல்லை. ஆனால் வாய் மொழிக் கதையே உள்ளது. கருடாவிற்கு பயந்து தன்னுடைய சகோதரியுடன் பந்தேர்வாஹ் பகுதிக்கு வந்து தங்கிய நாகங்களை தேடி கருடா வந்து வாசுகி மறைந்து கொண்டு இருந்த ஏரியின் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றத் துவங்கியது. அநேகமாக அந்த ஏரி வற்றிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.  வாசுகியும் பிடிபட்டு விடும் என்ற நிலைமை தோன்றி இருந்தபோது   வாசுகியின் சகோதரி மலை மீது இருந்த தன் நாட்டில் இருந்து நீரை வெளியேற்றி அந்த ஏரியை நிரப்பி வாசுகியைக் காப்பாற்ற  முயலவில்லை. பேசாமல் இருந்து விட்டாள். அதே நேற்றத்தில் சரஸ்வதியை வாசுகி வேண்டிக் கொள்ள சரஸ்வதி தேவி தன் அருகில் இருந்த ஏரியில் இருந்து தண்ணீரை அந்த ஏரிக்கு திருப்பி விட, மீண்டும் வாசுகி மறைந்து இருந்த ஏரியில் நீர் நிரம்பத் துவங்க வாசுகியைப் பிடிக்க முடியாமல் கருடா அங்கிருந்து சென்று விட்டது. ஆகவே சகோதரர்- சகோதரிகளுக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு அவள் வெளியேற வேண்டியதாயிற்று.  வாசுகியை சிவபெருமானும் மற்ற கடவுட்களும் பெரிய அளவில் புகழ்ந்து   உள்ளார்கள்.
ஆலய விழாவின் ஒரு காட்சி
தீ மூட்டி அதை சுற்றி ஓடுவார்கள் 

பிற காலத்தில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் வாசுகியை குல தெய்வமாக  ஏற்றுக் கொண்டு இருந்தாலும், அவளுக்கு வழிபாடுகளில் பிரதான இடத்தை தராமல், அவளுக்கு உறு துணையாக இருந்த 'சீமாட் வாஹன்' என்ற நாகத்துக்கே அதிக முக்கியத்துவம் தந்து உள்ளதினால் அதன்  சிலை வாசுகியின் சிலைக்கு பக்கத்தில் காணப்படுகின்றது. அதனால் வாசுகிக்கு கிடைக்க வேண்டிய தனித்துவ முக்கியத்துவம் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான  காரணம் தெரியவில்லை. அதே நேரத்தில்  வாசுகி ஆலயங்களில் அதனுடைய சகோதரியான பட்ராவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அவளை அங்குள்ள மக்கள்  யாருமே வணங்குவதில்லை.
 ஆலய விழாவின் ஒரு காட்சி 
தீ மூட்டி அதை சுற்றி ஓடுவார்கள் 

காலம் கடந்தது. நாகங்களின் ஆட்சியையும் முடிவுக்கு வந்து மனிதர்கள் ஆட்சி செய்யத் துவங்கினார்கள். கடைசி நாக மன்னன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த நேரத்தில் அங்கு வந்த பாண்டவ சகோதரர்கள்,  வித்தியாசமான அஸ்வமேத யாகத்தை நடத்தினார்கள். அதற்கு சாதாரண குதிரைகளை விட வித்தியாசமான குதிரையை தேடினார்கள்.  அப்போது அங்கு ஆட்சியில் இருந்த ஜோப் நாத் எனும் மன்னனிடம் அதிசய குதிரை உள்ளதைக் கேள்விப்பட்டு அதை யாகத்துக்கு தருமாறு கேட்டார்கள்.  ஆனால் அவன் அதை தர மறுக்கவே அவர்கள் அவன் மீது போர் தொடுத்து அவனைக் கொன்று விட்டார்கள் . ஆகவே அவனுக்குப் பின்னர் யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது குறித்து தெரியாமல் போய்விட்டது. அந்த காலகட்டத்தைப் பற்றி  எழுதப்பட்ட அல்லது வாய்மொழிச் செய்திகளோ எதுவுமே இல்லை. வெகு காலத்துக்குப் பிறகு  தாகூர் மற்றும் ரானா போன்றவர்கள் ஆட்சியில் வந்தார்கள். நாக ஆட்சி மறைந்தது.

---------------------------
நன்றி:  இந்த கட்டுரை கீழ் குறிப்பிடப்பட்டு உள்ள புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டு உள்ளது.
History of Bhaderwah Courtsey : Book by Sh. Swami Raj Sharma M.A. (Gold Medalist), LLB, IAS (Retd.) From Rainda Bhaderwah
"A concise history of Jammu, Kashmir and Ladakh upto 1947 A.D and Essay on the Philosophy of History". available at - 66-B/D, Gandhi Nagar Jammu and Modern Printing Press Vasuki Vihar Bhaderwah

அதில் உள்ள சாரத்தை வெளியிட்டுக் கொள்ள அன்புடன் அனுமதி கொடுத்த  www.mybhaderwah.com  இணையதளத்திற்கு நன்றி.

Acknowledgement with thanks : I sincerely thank   www.mybhaderwah.com site which gave me permission to make out an article based on the contents of the above mentioned  abridged book published by their site.

Wednesday, December 14, 2011

Aprameya Swami Temple

அப்ரமேய ஸ்வாமி 
மற்றும்  
நவநீத கிருஷ்ணன் ஆலயம்

சாந்திப்பிரியா
 
 அப்ரமேயர் 
 
கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் உள்ள இன்னொரு புகழ் பெற்ற ஆலயமே நவநீத கிருஷ்ணன் மற்றும்  அப்ரமேய ஸ்வாமி ஆலயம். இந்த ஆலயம் பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள தொட்டமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது . தேசிய நெடுஞ் சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது இடது பக்கம் மாலூரைத் தாண்டி அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் செல்லும் சாலையில்தான் நாடி நரசிம்மர் ஆலயமும்  உள்ளது.
ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத  அப்ரமேயர் 
 
அப்ரமேயர் ஆலயம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இல்லை இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆலயத்தின் கட்டிட அமைப்பைப் பார்க்கும் போது இந்த ஆலயம் நிச்சயமாக 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் அதாவது  980 ஆம் ஆண்டுகளில் இங்கு நந்த தீபம் ஏற்றும் சேவைகள் நடைபெற்று உள்ளவைக்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.  இதை வைஷ்ணவ பக்தர்கள் வைஷ்ணவ திவ்ய ஷேத்திரம் என்று போற்றிப் புகழ்கிறார்கள். ஆலயம் பெரும் பாறாங்கல் பாறையினால் கட்டப்பட்டு உள்ளது.
அந்த ஆலயத்துக்கு நான் சென்று இருந்தபோது ஆலயம் மூட இன்னும் பத்து நிமிடமே இருந்தது. ஆகவே அவசரம் அவசரமாக ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டு ஆயாசமாக அங்கு இருந்த ஒரு பண்டிதரிடம் இந்த ஆலயத்தின் விவரத்தைக் கேட்டறிந்தேன். இந்த ஆலய மகிமை குறித்து கூறப்படும் ஒரு கதையில் ஒரு காலத்தில் தெற்கு அயோத்தியா மற்றும் சதுர் வேத மங்களபுரா என அழைக்கப்பட்ட இந்த தென் இந்தியப் பகுதியில் ராம பிரான் வந்து  தங்கி இருந்தார் எனவும், அப்போது அவர் யாகங்களும், ஹோமங்களும் செய்து இங்கு அப்ரமேயரை வணங்கித் துதித்தார் என்றும் கூறுகிறார்கள்.
அவர் கூறிய ஆலய வரலாற்றுப் பெருமைக்கு இடையே ''இந்த ஆலயத்தில் அப்ரமேயர், ராமர் மற்றும் கிருஷ்ணர் போன்ற மூவருமே உள்ளனரே, அனைவருமே விஷ்ணுவின் அவதாரம்தானே, அப்படி என்றால் விஷ்ணுவே விஷ்ணுவை, வணங்கி வந்தாரா என்ற ஒரு யதார்த்தமான கேள்வியை நான் அங்கிருந்த ஒரு பண்டிதரிடம் கேட்டபோது அவர் கூறிய  கருத்து  உள்ளது போலவே தோன்றியது. அவர் தனது கருத்தாக இவ்வாறாக கூறினார் ''மூவருக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ளது என்பதின் காரணம் ராமபிரான் மனித உருவில் இங்கு வந்து வாழ்ந்த போது, விஷ்ணுவான அப்ரமேயரை வழிபட வேண்டி வந்தது. முதலில் இங்கு ராமபிரானுக்கு சன்னதி கிடையாது. அப்ரமேயருக்கு  ஆலயம் தோன்றிய வெகு காலத்துக்குப் பிறகே சன்னதி அமைத்து இருக்க வேண்டும்.  இந்த ஊரின் அருகில் உள்ள மேல்கோட்டை எனும் இடத்தில் உள்ள யோக நரசிம்மர் ஆலயத்தில் உள்ள சிலையை கிருஷ்ண பகவான் ஸ்தாபித்ததாகவும், விஷ்ணுவை அங்கு பிரும்மா வந்து வழிப்பட்டதாகவும் சில புராணக் கதைகள் உள்ளன. மேலும் அங்கு அவரை உற்சவ மூர்த்தியாக ராமபிரானின் பிள்ளையான குசா (லவ-குசா சகோதரர்கள் )  வழிபட்டபோது அந்த உற்சவ மூர்த்தி ராமபிரியா என்று அழைக்கப்பட்டு இருந்ததாகவும் ஆகவே அந்த செய்தியை  இந்த ஆலயத்துடன் சம்மந்தப்படுத்திப் பார்த்தால், இங்குள்ள அப்ரமேயரையும் ராமப்பிரியா என்றும் கூறுவதினால் ஒரு வேளை இந்த அப்ப்ரமேயர் சிலையைக் கூட கிருஷ்ணரே ஸ்தாபனம் செய்து இருக்கலாம் என்றும், தன்னை ஸ்தாபித்த கிருஷ்ணனுக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்பதற்காக நவநீத கிருஷ்ணனுக்கும் வியாச முனிவர் மூலம் இங்கு சன்னதி அமைக்க விஷ்ணுவே ஏற்பாடு செய்து இருக்கலாம் எனவும் நம்ப இடம் உள்ளது. ஒரு புராணக் கதையின்படி கிருதேய யுகத்தில் விஜயபாலா என்ற மன்னன் விஷ்ணுவை அப்ரமேய வடிவில் பூஜித்து வந்துள்ளதாகவும், த்ரேதா யுகத்தில் கான்வ முனிவர் அப்ரமேயரை  வழிபட்டுளதாகவும், புலவர் கபிலரே அப்ரமேயரின் பெருமையைப் பரப்பி வந்துள்ளார் என்பதாகவும் சில கதைகள் உள்ளன. இங்கு ராமானுஜர் வந்து வழிபாட்டு சேவை செய்து உள்ளார்.''
ஆக இங்கு பல ரிஷி முனிவர் இருந்துள்ளார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகின்றது. ஆகவே வியாசர் இங்கு நவநீத கிருஷ்ணரை ஸ்தாபனம் செய்து இருக்கலாம். இதற்குக் காரணம் ஆலயம் கட்டப்பட்டு உள்ள காலத்தைத் தவிர, இந்த ஆலயம் எதற்காக ,யாரால் கட்டப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை . ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் இந்த ஆலயம் விரிவாக்கப்பட்டுள்ளது என்று சரித்திரக் குறிப்புக்கள் இங்கு கிடைத்து உள்ளதாம். நாமும் அப்ரமேயர் ஆலாய சுவற்றின் வெளிப்புறத்தில் (அப்ரமேயர் மற்றும் தாயார் சன்னதிக்கு செல்லும் இடைப் பகுதி பிராகாரத்தில்) கல் பாறைகளை உற்றுப் பார்த்தால் பல செய்திகளை செதுக்கி இருப்பது தெரியும். அவை என்ன மொழியில் உள்ளது என்று நமக்கு புரியாது. சரித்திர வல்லுனர்களே அதைப் பற்றிக் கூற முடியும். இந்த ஆலயத்தின் புராணக் கதையை குறித்து கூறப்படும் அனைத்துமே வாய்மொழிக் கதைகளாகவே வந்துள்ளன. பிரும்மாண்ட  புராணத்தில் ஷேத்திர மகாத்மியம் எனும் பாகத்தில் அப்ரமேயரின் பெருமைகளைப் பற்றி குறிப்பிடப் பட்டு உள்ளதாம்.
 அப்ரமேயர் விஷ்ணு பகவான். ராமரும் விஷ்ணுவின் அவதாரமே என்றாலும் கூட அவர் மனித ரூபத்தில் பிறவி எடுத்து இருந்ததினால் விஷ்ணுவான அப்ரமேயரை வணங்கித் துதிக்க வேண்டி இருந்தது.
அரவிந்தவல்லித் தாயார் 
 
இந்த ஆலயம் இரண்டு அடுக்கு ஆலயங்களாக உள்ளது. ஆலயத்தில் நுழைந்த உடன் எதிரில் தெரிவது அப்ரமேயர் ஆலயம் . அற்புதமான உருவ அமைப்பில் சாலிக்கிராம கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ள மூலவர் தனது கைகளில் சங்கு மற்றும் சக்கராத்தை ஏந்தியும் மீதி உள்ள இரண்டு கைகளை இரண்டு முத்திரைகளைக் காட்டியவாறும் நின்றுள்ள கோலத்தில் காட்சி தருகிறார். ஆனால் அவரைப் போன்ற வடிவமைப்பில் உள்ள உத்சவ மூர்த்தியிலோ அப்ரமேயர் தனது இரண்டு மனைவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார்.அவர் கொடுக்கும் அருள் அளவில்லாதது என்பதையே அப்ரமேய என்ற வார்த்தையின் அர்த்தம்.
அந்த ஆலய சன்னதியை விட்டு வெளியில் வந்து இடது புறமாக பிராகாரத்தில் பின்புறம் சென்றால் சில படிக்கட்டியில் ஏறிச் சென்று அரவிந்தவல்லித் தாயாரை தரிசிக்க வேண்டும். இங்குள்ள தாயாரைப் பற்றியும்  உள்ள சிறு செய்தி என்ன என்றால், இந்த ஆலயத்தின் வடமேற்குப் பக்கத்தில் இருந்த விஷ்ணு தீர்த்தம் என்ற குளத்தில்தான் தாயார் தோன்றினாராம். அதற்குக் காரணம் ஒரு சாபவிமோசனம் பெறவே இங்கு தாயார் வந்து எழுந்தருள வேண்டி இருந்திருக்கலாம். சாதாரணமாக எங்கேயாவது தெய்வங்கள் தோன்றியதாக இருந்தால் அது சாப விமோசனம் பெறுவதற்காக , எவருடைய வேண்டுகோளையாவது ஏற்று அங்கு காட்சி தந்து ஆலயம் எழுப்பக் காரணம் ஆவது , அல்லது அந்த இடங்களில் பல காலத்துக்கு முன்பே ஆலயங்கள் இருந்து அழிக்கப் பட்டு இருந்திருக்கும். அது பின்னர் தெரிய வந்து அந்தந்த தெய்வங்களுக்கு ஆலயம் எழுந்திருக்கும் போன்ற பல காரணங்கள் பல புராணக் கதைகளில் சொல்லப்பட்டு உள்ளன . ஆகவே விஷ்ணு தீர்த்தத்தில் தாயாரின் சிலை கிடைத்து இருந்ததினால் அவர் அங்கு அவர் தோன்றியதான  ஐதீகம் இருந்திருக்கலாம். அதனால்தான் தாயாரும் அப்ரமேயரான விஷ்ணுவின் பின்புற சன்னதியில் நின்றவாறு உள்ளார்.
நவநீத கிருஷ்ணர் 

அங்கிருந்தே அதே பிராகாரத்தில் சென்றால் எதிர் மூலைப் பகுதியில் உள்ள நவநீத கிருஷ்ணரை தரிசிக்கலாம். இங்கு கிருஷ்ண தவழும் நிலைக்கான தோற்றத்தில், ஒரு குழந்தைப் போலக் காட்சி தருகிறார். குழைந்தப் பேறு அற்றவர்கள் இங்குள்ள சன்னதியில் அவருக்கு அர்ச்சனை செய்து குழந்தைப் பிறந்தால் தொட்டில் போடுவதாக வேண்டிக் கொண்டு செல்வார்கள். குழந்தை பிறக்க வேண்டும் என  வேண்டிக் கொண்டு இங்கு வந்து சிறு மரக்கட்டையிலான தொட்டிலைக் கட்டுகிறார்கள். இங்குள்ள கிருஷ்ணரின் அழகில் மயங்கி கீர்த்தனை இயற்றினாராம் புரந்தரதாசர். உண்மையில் அந்த கிருஷ்ணரைப் பார்த்தால் மிக அழகான குழந்தை வடிவில் காணப்படுகின்றார், அந்த வடிவம் நம் கண்களிலேயே  நிற்கின்றது.
அந்த பிராகாரத்திலேய தொடர்ந்து நடந்து வந்தால் ராமபிரான் சீதை மற்றும் லஷ்மணரோடு இருப்பதைக் காணலாம். சீதையுடன்  ராமபிரான் அமர்ந்து இருக்க லஷ்மணர் கை கூப்பி அவர்களை வணங்கி நிற்க ஹனுமார் கீழே அமர்ந்து அவர்களை கும்பிட்டவாறு உள்ளார். அப்ரமேயர் ஆலயத்துக்கு செல்பவர்கள் ராமர் சன்னதியையும் தரிசிக்காமல் வந்தால் அது நல்ல பலனைத் தராது, காரணம் விஷ்ணுவை தரிசித்து வணங்கிய ராமரும் விஷ்ணுவின் அவதாரம் என்பதினால் ராம அவதாரத்தில் இருக்கும் தன்னையும் வழிபட வேண்டும் என விஷ்ணு விரும்புவாராம். அந்த சன்னதிக்கு அடுத்து உள்ள சன்னதியில் வேணுகோபல ஸ்வாமி சங்கையும், சக்கரத்தையும் கையில் ஏந்திக் கொண்டு, இடது கையில் புல்லாங்குழலை வைத்தவாறு காட்சி தருகிறார். அடுத்த சன்னதியில் சுதர்ஷன நரசிம்மரும் காட்சி தருகிறார்.ஒரு விசித்திரமான உண்மை என்ன என்றால், இந்தப் பகுதியை சுற்றி உள்ள ஆலயங்கள் பெரும்பாலானவை நரசிம்மரின் பல அவதாரங்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களாக உள்ளன. ஆகவேதான் விஷ்ணு அவதாரங்களை காட்டும் இந்த பகுதியே வைஷ்ணவ தலம் என்று பெருமைப்படுவதில் என்ன குறைக் காண முடியும்.
இந்த ஆலயம் உள்ள மாலூரைக் குறித்தும் ஒரு அற்புதமான கதை உள்ளது. முன்னொரு காலத்தில் இங்கு ஒரு பெரிய நதி ஓடிக் கொண்டு இருந்ததாகவும், இந்தப் பகுதியை ஆண்டு வந்த தமிழ் மன்னனை ஒரு யுத்தத்தில்  தோற்கடித்த பகை மன்னன் அவனைக் கொள்ளாமல் கை கால்களை மட்டும் வெட்டி முடமாக்கி விட்டு சென்றுவிட்டானாம். ஆனால் அந்த மன்னன் பெரும் கடவுள் பக்தி கொண்டவன். ஆகவே அவன் மனம் தளராமல் இங்கு பகவான் பாசுரங்களை துதித்தவாறு அந்த நதிக் கரையிலேயே கிடக்க அதிசயமாக அவன் கைகால்கள் மீண்டும் முளைத்தனவாம். ஆகவே  தானியங்கள் முளை விழுந்து வளர்ந்து செடியாவதைப் போல  மீண்டும் அவயங்கள் முளைக்கக் காரணமான அந்த ஊரை முளை வந்த   ஊர் எனக் கூறி முளையூர், முலயூராகி, முளையூர் பேச்சு வாக்கில் மலயூராகி, மாலூராகி உள்ளது.
மிகப் பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டு உள்ள ஆலயத்தின் நுழை வாயிலின் வெளியில் சுமார் முப்பது அடி உயர துஜஸ்தம்பம் காணப்படுகின்றது. ஆலயம் காலை எட்டு முதல் பன்னிரண்டு வரை திறந்துள்ளது என்றாலும் அநேகமாக பன்னிரண்டரை வரை சன்னதிகள் திறந்தே உள்ளன. மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு திறக்கும் ஆலயம் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு மூடப்பட்டு விடுகின்றது. 


ஆலய விலாசம்:
APRAMEYA AND NAVANEETHA KRISHNA TEMPLE,
Channapatna Taluk,
Dodda Mallur,
Bangalore District,
Pin :571501
Telephone: Sri Embar Venu :   09448077348

Tuesday, December 13, 2011

Nadi Narasimmar, Doddamallur

நாடி நரசிம்ஹர்
சாந்திப்பிரியா

நாடி நரசிம்மர் 
 
கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் ஒன்று புகழ் பெற்ற நாடி நரசிம்மர் ஆலயம். பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள   தொட்டாமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். தேசிய நெடுஞ்சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது  இடது பக்கம் அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். அதன் எதிரில்  சாலையைத் தாண்டி எதிர்புறத்தில் உள்ள சாலையில் சென்றால்  சிறு ரயில் பாதையைக் கடந்து செல்ல வேண்டி வரும். சாலை நன்றாக இல்லை. மிகக் குறுகியதாகவே  உள்ளது. அதில் சென்று கொண்டு இருந்தால்  ஒரு இடத்தில்  ஆலய பெயர் பலகையைக் காணலாம். அங்கு வலது பக்கத்தில் திரும்பி அந்தப் பாதையில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
 
தனது பக்தனான பிரஹலாதனிடம்  அவன் தந்தை ஹிரன்யகசிபூ கடவுளைக் காட்டு என ஏளனம் பேசி விஷ்ணுவை அவமானப்படுத்தும் விதமாக அவர் இருப்பதாக பிரஹலாதன் கூறிய தூணை காலால் உதைக்க, அதில் இருந்து நரசிம்மர் உருவை எடுத்து வெளிவந்த விஷ்ணு ஹிரன்யகசிபூவை அழித்தார். சிங்க முகத்தைக் கொண்ட விஷ்ணுவே நரசிம்ம அவதாரத்தில் உள்ளவர் என புராணங்கள் கூறுகின்றன. அவருக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன. அவரை மனதார வேண்டித் துதித்தால் நாம் கேட்டதை தருவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.     
 
நரசிம்மர் ஹிரன்யகசிபூவை கொன்ற காட்சி 
 
அப்படிப்பட்ட நரசிம்மருக்கு இங்கு அமைக்கப்பட்டு உள்ள நாடி நரசிம்மர் ஆலயம் சிறியதுதான் என்றாலும் கீர்த்தி அதிகம்.  ஆலயம் 1200 வருடத்திற்கு முந்தையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கன்னடத்தில் நாடி என்றால் நதி என்று பொருள். இந்த ஆலயம் முன்பு அங்கிருந்த கான்வா எனும் நதிக்கரையின் பக்கத்தில் இருந்ததினால் இந்த பெயர் வந்துள்ளது. இங்குதான் கான்வா முனிவர் வந்து தவத்தில் இருந்தார். அப்போது நரசிம்மர்  அவர் கனவில் வந்து தனக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூற  அவரும் இந்த ஆலயத்தை நிறுவினாராம். ஆலயத்தில் வந்து வேண்டுபவர்கள் உரிக்காத தேங்காயைக் கட்டிவிட்டு 48 முறை சன்னதியை சுற்றி பிரதர்ஷனமாக வலம் வந்து  வேண்டுதலை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அங்கு வந்து அந்த தேங்காயை எடுத்துக் கொண்டு போய் வீட்டில் இனிப்பு செய்து உண்ணுவார்கள்.  அவர் சன்னதியை 48 முறை சுற்றியோ அல்லது மூல மந்திரத்தை 108 முறையோ கூறினால் வேண்டியது  நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது. 
ஆலய தோற்றம்  

சன்னதியில் நரசிம்மர் தனது மனைவி லஷ்மி தேவியுடன்  காட்சி  தருகிறார். ஆலயத்துக்குள் விநாயகர் சன்னதி, பிரஹலாதர், ஹனுமார், ஹயகிரீவர் போன்றவர்களின் சிலைகளும் உள்ளன .
 
ஆலயத்தின் வெளிப்புறத்தில் நாக தேவதைகளை வணங்கும் விதமாக நாக சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. 
ஆலயம் செல்லும் வழித் தரைப்படம்