Monday, April 30, 2012

Greatness of Lakshmi Puja

புராணங்களின்  சில கதைகள்
லஷ்மி விரத மகிமை
சாந்திப்பிரியா 


இது பத்மபுராணத்தில் காணப்படும் ஒரு கதை. இந்தக் கதையையும் சூதக முனிவரே நைமிஷாரண்யா வனத்தில் இருந்த முனிவர்களுக்குக் கூறினார்.
துவாபர யுகத்தில் சௌராஷ்டிரத்தை ஆண்டு வந்த ஒரு மன்னனின் பெயர் பத்ராஸ்வரஸ். அவனுக்கு சூரத்சந்தரிகா எனும் மனைவி இருந்தாள். அவள் மூலம் அந்த மன்னனுக்கு ஏழு மகன்களும், ஒரு பெண்ணும் பிறந்து இருந்தார்கள். அந்த மகளின் பெயர் ஸ்யாமபாலா என்பது. இளம் கன்னியான அவள் நல்ல பண்புகளைக் கொண்டவள். அவள் தனது தோழிகளுடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டு இருப்பாள். அப்படி அவள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ஒருநாள் அரண்மனை வாயிலில் ஒரு வயதான கிழவி வந்து நிற்பதைப் பார்த்து அவள் அருகில் சென்று அவள் எதற்காக வந்துள்ளாள் என்பதைப் பார்க்கலானாள்.
ஒரு மூதாட்டி உருவில் வந்து இருந்தது லஷ்மி தேவியே. அதை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரண்மனைக் காவலன் வந்திருந்த கிழவியை நோக்கி 'நீ யார், எதற்காக இங்கு வந்துள்ளாய்?' என்று கேட்டான். வந்த கிழவியோ தான் அரண்மனையில் உள்ள அரசியைக் காண வந்துள்ளதாகக் கூறினாள். ஆனால் காவலாளியோ அவளை உள்ளே விடத் தயாராக இல்லை. எதற்காக அவள் அரசியைப்  பார்க்க விரும்புகிறாள் என்பதை தெரிவித்தால் அரசியிடம் சென்று அதைக் கூறிவிட்டு அவள் சம்மதித்தால்  உள்ளே விடுவதாகக் கூறினான். ஆகவே அந்த வயதான மூதாட்டி கூறத் துவங்கினாள் '' அப்பனே, என் பெயர் கமலாம்பிகா என்பது. என் கணவர் துவாரகாவில் வசிக்கின்றார். உன்னுடைய அரசியானவள் பூர்வ ஜென்மத்தில் வைஷ்ய குலத்தில் பிறந்து திருமணம் ஆனவளாக இருந்தாள். கணவன் மற்றும் மனைவி  இருவருமே அடிக்கடி சண்டைப் போட்ட வண்ணமே காலத்தை ஓட்டி வந்தார்கள். அப்போது ஒருநாள் அவளது கணவன் அவளை நன்கு அடித்து விரட்டி விட்டான். ஆகவே அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறியவளை நான் வழியில் சந்தித்து தடுத்து நிறுத்தி அவள் மனத் துயரைக் கூறுமாறு கூறினேன் . அவள் தன கதையைக் கூறினால். அந்தக் கதையைக் கேட்டதும்  அவளது துயரம் தீர வேண்டும் எனில்  லஷ்மி தேவிக்கு பூஜை செய்து விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினேன். அவளும் அதை மிகவும் பக்தி சிரத்தையுடன் செய்து வர அவள் வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதன் பின் அவள் பெரும் செல்வந்தர் ஆனாள் . ஆனாலும் அந்தப் பெண்மணி தான் செய்து வந்த விரதத்தை அடிக்கடி செய்து வரலானாள். அதனால் அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியோடு இருந்தது. சில காலம் பொறுத்து அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட யமதர்மராஜாரின் தூதுவர்கள் அவர்கள் இருவரும் திருமணம் ஆனதும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்த காலத்தைக் கணக்கிட்டு அதற்கு தண்டனையாக நரகத்திற்கு இழுத்துச் செல்லத் துவங்கினார்கள். ஆனால் வழியில் லஷ்மி தேவியானவள் தனது பக்தையை யமனின் தூதுவர்கள் இழுத்துக் கொண்டு போனதைக் கண்டு கோபமுற்று அதனது சேனையை அனுப்பி அவர்களை மீட்டு தன்னுடன் தனது இடத்துக்கு அழைத்துச் சென்றாள். அந்த இருவருமே  தற்போது இந்த நாட்டு ராணியாகப் பிறந்து  ஆட்சியில் இருக்கின்றார்கள் . அவள் பூர்வ ஜென்மத்தில் தான் செய்து வந்த விரதத்தை தற்போது மறந்து விட்டாள்  என்பதினால் அது பற்றி அவளுக்கு நினைவு படுத்தவே வந்தேன்'' என்றாள். 
அந்தக் காவலாளியும் அவள் கூறியதை உள்ளே சென்று ராணியிடம் கூற அவள் தான்  ராணியாக இருக்கும் செருக்கில் அதை நம்பாமல் அவளை அடித்துத் துரத்துமாறுக் கூறி விட்டாள். காவலாளியும் அதை மீற முடியாமல் வெளியில் வந்து அந்த மூதாட்டியை அடித்து விரட்டினான். காவலாளி உள்ளே சென்ற சமயத்தில்  அவள் அருகில் இருந்த ஸ்யாமபாலா அவளிடம் இருந்து அவள் கூறிய விரத முறையைக் கற்று அறிந்து கொண்டாள்.


அந்த மூதாட்டி சென்றப் பின் ஸ்யாமபாலா தான் அந்த விரதத்தை அனுஷ்டிக்கத் துவங்கியதும், நான்கே வாரங்களில் தடைப் பட்டு இருந்த அவள் திருமணம் நடந்தேறியது.  ஸ்யாமபாலாவிற்கு அதிருஷ்டத்திற்கு மேல்  அதிருஷ்டம் அடித்து விரைவிலேயே பெரும் செல்வந்தர்கள் ஆனாள். ஆனாள் அதே சமயம் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு ஸ்யாமபாலா சென்ற உடன் அவளுடன் பிறந்த வீட்டில் இருந்த அதிருஷ்டம் விலகத் துவங்க அந்த அரசனின் செல்வமும் அழிந்து, விரைவிலேயே அவர்கள் அரசு திவால் ஆயிற்று. அதனால் அரசனும் அரசியும் பதவியை விட்டு விலக நேரிட்டது. கையில் பணம் இன்றி நடுத் தெருவிற்கு வந்து விட்டார்கள். ஆகவே அவர்கள் ஸ்யாமபாலாவிடம் சென்று தமது நிலையைக் கூற அவள் அவர்களுக்கு ஒரு பெரிய தங்கக் கட்டியைக் கொடுத்தாள் . அதை எடுத்துக் கொண்டு வீடு வந்து அதைப் பிரித்துப் பார்த்தவர்கள் அந்த தங்கக் கட்டி கல்லாக மாறி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள். மீண்டும் தனது பெண்ணிடம் போய் உதவி கேட்கலாம் என எண்ணிய சூரத்சந்தரிகா தனது பெண்ணின் வீட்டிற்கு போய்  சேர்ந்து தனது துயரக் கதையைக் கூறினாள்.  அடுத்த சில மணி நேரத்தில் அவள் லஷ்மி விரதத்தை அனுஷ்டிக்கும் நேரமும் வந்து விட   அங்கு வந்த தன்னுடைய தாயாரையும்  தன்னுடன் வந்து அந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறுக் கூறினாள். அவளது தாயாரோ அந்த விரதத்தின் பாதியிலேயே பசி தாளாமல் உணவை அருந்தி விட்டதினால் விரதம் முடிவு பெறவில்லை. வறுமையும் விலகவில்லை. ஆகவே ஸ்யாமபாலா தனது  தாயான சூரத்சந்தரிகாவை மீண்டும் நிர்பந்தம் செய்து மீண்டும் அதற்க்கு அடுத்த மாதம் வரவிருந்த  விரதத்தை  தன்னுடன் சேர்ந்து அனுஷ்டிக்குமாறுக் கூறினாள். தன் சுய நிலைக்கு வந்த சூரத்சந்தரிகா தனது மகள் கூறியபடி அந்த விரதத்தை செய்து முடித்து விட்டு சில நாட்களில் மீண்டும் தனது வீட்டை அடைந்தாள். அடுத்த நாளே முன்னர் கல்லாக மாறி இருந்த தங்கக் கட்டி மீண்டும் தங்கமாயிற்று. மெல்ல மெல்ல அவர்கள் இழந்த அனைத்து செல்வத்தையும் திரும்பப் பெற்று வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். தவறாமல் மாதாமாதம் லஷ்மி விரதத்தை கடை பிடிப்பதை மறக்கவில்லை.

Stories of Rishies and Saints

  ரிஷி முனிவர்களின்  சில கதைகள்
சாந்திப்பிரியா உத்தர பாரதத்தில் பாடலிபுத்திரம் எனும் நகரில் முன்னொரு காலத்தில் வித்யாசாகரா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களை நன்கு கற்றறிய ஆவல் கொண்டார். ஆகவே அவர் நல்ல ஒரு குருவை தேடி அலைந்தார். பாடலிபுத்திரத்தில் அவர் மனதுக்கு ஏற்ற குரு எவருமே கிடைக்கவில்லை. இடம் இடமாக  தேடி அலைந்து விட்டு தனக்கு ஏற்ற குரு கிடைக்காததினால் மனம் வருந்தி களைப்படைந்தவர் விந்திய மலைசாரல் அருகில் சென்று ஒரு ஓடையில் குளித்து விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தடியில் சென்று உறங்கலானார்.
அந்த மரத்தின் மீது ஒரு பிரும்ம ராக்ஷசன் வாழ்ந்து வந்தது. ஒரு மனிதன் அந்த மரத்தின் அடியில் உறங்குவதைக் கண்ட அந்த பிரும்ம ராக்ஷஷன், அவரை உண்ணுவதற்காக கீழே இறங்கி  வந்ததும்  வித்யாசாகராவின் மார்பில் பூணூல் இருப்பதைக் கண்டது.  ''ஓஹோ..இவர் ஒரு பிராமணர் போல உள்ளதே. இவரை சாப்பிட முடியாது''  என எண்ணிய பிரும்ம ராக்ஷசன் தூங்கிக் கொண்டு இருந்தவரை எழுப்பியது. தூக்கத்தில் இருந்து எழுந்தவர்தன் முன்னால் ஒரு பிரும்ம ராக்ஷசன் அமர்ந்து இருப்பதைக் கண்டு கடவுளை வேண்டிக் கொண்டு தோத்திரம் சொல்லத்  துவங்க , அந்த ராக்ஷசன் அவரிடம் '' ஐயா, நீங்கள் என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம். நானும் ஒரு பிராமணனே. நான் பூர்வ ஜென்மத்தில் செய்துள்ள ஒரு பாவக் காரியத்தினால் பிரும்ம ராக்ஷசனாகப் பிறந்து சாப விமோசனத்தை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றேன். நீங்கள் உங்களுக்கு அனைத்து சாஸ்திரங்களையும் , வேதங்களையும் கற்றுக் கொடுக்க தகுந்த குருவை தேடி அலைவது உங்கள் மன ஓட்டத்தின் மூலம் தெரிகின்றது. ஆகவே உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நான் கற்றுள்ள அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்'' என்றது.  அதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த வித்யாசாகராவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அந்த பிரும்ம ராக்ஷசனும் தான் பூமியில் இருந்தால் அதை கற்பிக்க முடியாது என்பதினால் அவரையும் அந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளுமாறுக் கூற அவரும் அந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.
பிரும்ம ராக்ஷசன் ஒரு கிளையில் அமர்ந்து கொள்ள அதன் கீழ் கிளையில் சிஷ்யனாக வித்யாசாகரா அமர்ந்து கொண்டார். முதலில் அது அவருக்கு பசி மற்றும் உறக்கம் இல்லாமல் இருக்க ஒரு குரு மந்திரத்தை உபதேசித்தது. அதற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து அந்த பிரும்ம ராக்ஷசனும் அவருக்கு தான் கற்று இருந்த சாஸ்திரங்கள் , வேதங்கள், மந்திரங்கள் என அனைத்தையும் கற்றுக் கொடுத்தது.  அது முதலில் கொடுத்து இருந்த குரு மந்திரத்தின் மகிமையினால் ஆச்சர்யமாக ஆறு மாதங்களுக்கு மேலாகியும் வித்யாசாகராவிற்கு பசியோ, உறக்கமோ வரவில்லை. அப்படியே அமர்ந்து கொண்டு பாடங்களைக் கற்றரியத் துவங்கியவர் தன்னை மறந்து அங்கேயே அமர்ந்தவண்ணம் குரு போதனைகளை ஏற்றுக் கொண்டு இருந்தார். அந்த பிரும்ம ராக்ஷசன் கூறியவற்றை அவர் மரத்தின் மீது இருந்த இலைகளைப் பறித்து அவற்றில் கூர் ஆணியினால் செதுக்கிக் கொண்டார். அனைத்தையும் கற்றரிந்தப் பின் அவர் மரத்தின் மீது இருந்து இறங்கி தனது குருவிற்கு வந்தனங்களை தெரிவித்து அதை வணங்கினார். அடுத்தகணம் அந்த பிரும்ம ராக்ஷசனும் மறைந்து விட்டது.
அங்கிருந்துக் கிளம்பிச் சென்றவர் வழியில் அவர் எழுதி வைத்து இருந்த சில இலைகளை தவற விட்டு விட்டார். காட்டை விட்டு  வெளியேறியதும் அவருக்கு பசி மற்றும் உறக்கம் இல்லாமல் இருக்க பிரும்ம ராக்ஷசன் செய்திருந்த மந்திரத்தின் மகிமை மறையலாயிட்று.  இரவு  வந்தது. பசி வயிற்றைக்  வதைக்க அருகில் இருந்த சிவபெருமான் ஆலயம் ஒன்றின் வெளியில் தனது தலைக்கு அந்த இலைகளை ஒரு தலையாணியைப்  போல வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டார்.
படுத்தவர் பசியினால் அப்படியே உறங்கி விட்டார். காலையில் எழுந்திருக்க முடியவில்லை. உடல் நலமின்றி ஆயிட்று. அப்போது அந்த ஆலயத்தின் பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்த மந்தாகினி என்பவள் அவரது நிலையை பார்த்து தவித்துப்  போய் அவரை மற்றவர்கள் உதவியுடன் ஒரு மருத்துவரிடம் காண்பித்து சில நாட்கள் தன் வீட்டிலேயே தங்க வைத்து குணமடைய வைத்தாள். அவர் உடல் நிலை நன்கு ஆனதும் அவர் மீது அன்பு கொண்டவள் அவரை மணக்க  விரும்பினாள்.  அவருக்கும் அவளை மணந்து கொள்ள ஆசையாக இருந்தது.  ஆனால் அந்த காலாத்தில் ஒரு பிராமணர் கீழ் ஜாதியை சேர்ந்தவளை மணக்க முடியாத நிலைமை இருந்தது. அப்படி மணக்க வேண்டும் எனில் முதலில் அவர் ஒரு பிராமணர், அடுத்து வைசியர் மூன்றாவதாக ஷத்ரியர் இனப் பெண்களை மணந்து கொண்டப் பின்னரே வேறு பெண்களை மணக்கலாம் என்பது நீதியாக இருந்தது. ஆகவே மந்தாகினி அதற்கான நீதியைக் கேட்க மன்னனிடம் அவரை அழைத்துச் சென்றாள்.
மன்னனும் வித்யாசாகராவின் அறிவுத் திறமையையும், அவர் பெற்றிருந்த  ஞானத்தின் காரணத்தையும் அறிந்து கொண்டவுடன் அவரை பெரிதும் மதித்தார். அதே நேரத்தில் அவரைக் காப்பாற்றி தன் வீட்டில் வைத்திருந்து குணப்படுத்திய மந்தாகினியையும்   ஏமாற்ற விரும்பவில்லை. ஆகவே அந்தப் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்து வைக்க அவர் தனது மகள், தனது அமைச்சரின் மகள் மற்றும் தமது குலகுருவின் மகள் என மூவரின் சம்மதத்தையும் பெற்று அவர்களை வித்யாசாகருக்கு மணமுடித்து வைத்தப் பின் மந்தாகினிக்கும் கடைசியாக அவரை மணமுடித்துத் தந்தார். இப்படியாக சிக்கலான பிரச்சனையைத் தீர்க்க மன்னனும் அவருடைய சகாக்களும் எடுத்துக் கொண்ட விஷயம் நல்ல விதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த நான்கு மனைவிகளுடன் வாழ்ந்த வித்யாசாகராவுக்கு பிறந்த மகன்களே உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்தன், பத்ரஹரி, வாருச்சி மற்றும் பட்டி போன்றவர்கள். தமது தந்தையும், மன்னனும் மறைந்தப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பத்ரஹரிக்குப் சில காலத்திலேயே விக்ரமாதித்தனை அரசனாக்கிவிட்டு சன்யாசத்தை மேற்கொண்டு விட்டார்.

Tuesday, April 24, 2012

Vallakkoattai Murugan Temple

வல்லக்கோட்டை 
முருகன் ஆலயம் 
சாந்திப்பிரியா
(Part of the temple story has been  adapted from the Tamil translated version


சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் வல்லக் கோட்டை முருகன் ஆலயம். இந்த ஆலயத்தைக் கட்டியவர் பகீரதன் என்று நம்புகிறார்கள். அந்த ஆலயத்தை ஒட்டி ஒரு குளமும் உள்ளது. அதை இழந்ததை மீட்டுத் தரும் குளம் என்கிறார்கள். அதாவது தொடர்ந்து ஏதாவது ஒரு கிழமையிலேயே ஏழு வாரங்கள் அதில் குளித்து விட்டு அங்குள்ள முருகனை வேண்டித் துதித்தால் இழந்து போன பொருட்கள், நிலபுலங்கள், பெருமை போன்ற அனைத்துமே மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதற்க்கான காரணத்தை கீழே தரப்பட்டு உள்ள ஆலய வரலாற்றில் படியுங்கள். இந்த ஆலயத்தில் கம்பீரமான தோற்றத்தில் முருகப் பெருமான் தனது மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
இந்த ஆலயம் சென்னையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சீபுரத்தின் அருகில் உள்ளது.
வல்லகோட்டை என்ற இடம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. வல்லக் கோட்டை ஆலயம் சென்னை நகரின் புறப் பகுதியான தாம்பரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீ பெரம்பத்தூரின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீபெரம்பத்தூர்- செங்கல்பட்டு வழித் தடத்தில் உள்ளது. அருணகிரிநாதர் இயற்றியப் பாடல்களில் வல்லக் கோட்டையை கோட்டை நகர் , கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி , மற்றும் கோட்டை என்றெல்லாம் கூறி உள்ளார். அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி இருந்தாலும் அந்த ஆலயத்தை வல்லக்கோட்டை என்றே தற்போது அழைக்கின்றார்கள்.
அந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் முக்கியமாக நிற்கும் நிலையில் வடிவமைகபட்டு உள்ள வள்ளி மற்றும் தெய்வானை சிலைகள் பல்லவ நாட்டுக் கலைவண்ணத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து உள்ளது. சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு பல்லவர்கள் பல இடங்களிலும் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். ஆராய்ச்சியில் கிடைத்த ஆவணங்கள் மூலம் கோட்டை நகரில் உள்ள வல்லம் ஆலயமும் அவற்றில் ஒன்று எனத் தெரிகின்றது.
பழுதடைந்து இருந்த ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு விட்டதினால் அங்கு பக்தர்களும் பெருமளவில் வருகின்றார்கள் என்பதில் இருந்தே அந்த ஆலயம் எந்த அளவு மகிமைப் பெற்று இருந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும் . 'தனி நபர்களின் நன்கொடையினால் மட்டும் அந்த ஆலயத்தை புதுப்பிக்க முடியாது. அதற்கு பெரும் அளவு நன்கொடைகள் வேண்டும்' என்பதினால் கிருபானந்தவாரியார், மயிலை ரத்னகிரி முருகன் அடிமை ஸ்வாமிகள் மற்றும் சுவாமி ராமதாஸ் போன்றவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு அதைப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் செய்தார்கள்.


ஆலய வரலாறு
இலான்சி ராஜ்யத்தின் மன்னனான பகீரதன் என்பவனே அந்த ஆலயத்தை நிர்மாணித்து உள்ளார். ஆனால் அந்த மன்னன் ஆண்ட காலம் என்பது தெரியவில்லை. அவர்தான் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனா என்பதும் தெரியவில்லை. இலான்சி என்பது மிகச் சிறிய ராஜ்ஜியம். அப்படி என்றால் அத்தனை தொலைவில் இருந்து அவர் ஏன் இங்கு வந்து பல்லவர்கள் ஆண்ட பூமியில் ஆலயத்தை நிர்மாணித்து இருக்க வேண்டும்? அதற்கு ஸ்தல புராணத்தில் விடை உள்ளது.
பகீரதன் மிகவும் கர்வம் பிடித்தவன். ரிஷி முனிவர்களை மதித்தது இல்லை. ஒருமுறை நாரதர் அவனிடம் வந்தபோது அவரை உட்காரச் சொல்லாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டானாம். அதனால் நாரத முனிவர் வருத்தம் அடைந்தார். அப்போது எதிர் திசையில் இருந்து கோரன் எனும் அசுரன் பெரும் படையுடன் வந்து கொண்டு இருந்தான். நாரதரைக் கண்ட அவன் எந்த விதமான கர்வமும் இன்றி அவர் அருகில் சென்று அவரை வணங்கினான். ஆகவே அவன் மூலமே பகீரதனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என நாரதர் எண்ணினார்.
 கோரனை  சந்தித்த  நாரதர்  அவனை 
பகீரதன்  மீது  படை எடுக்குமாறுக்  கூறினார்

கோரனிடம் நாரதர் அந்த பெரும் படையுடன் அவன் எங்கு செல்கிறான் எனக் கேட்க அவனும் தான் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய உள்ளதினால் அதற்கு முன் நூறு மன்னர்களை வெல்ல வேண்டி உள்ளது என்றும் அதற்காக அவன் படையுடன் செல்வதாகக் கூற, அதைக் கேட்ட நாரதர் அவனை இலான்சி நாட்டு மன்னன் மீது படையெடுத்து அவனை வென்றப் பின் பின் மற்ற நூறு மன்னர்களையும் வென்று அஸ்வமேத யாகத்தை நடத்துமாறுக் கூற அவனும் நாரதரின் அறிவுரையை ஏற்று பகீரதன் மீது படை எடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள பகீரதனும் நாட்டை விட்டு தப்பிச் சென்று என்ன செய்வது எனப் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். ஒருநாள் வழியில் அவன் நாரத முனியைக் கண்டான். ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த அவமரியாதைக்கு மன்னிப்புக் கோரி அவரை தனக்கு உதவுமாறு வேண்டினான். அப்போது அவனது கர்வமும், ஆணவமும் முற்றிலும் அழிந்து போய் இருந்தது. ஆகவே அவன் மீது கருணைக் கொண்ட நாரதரும் அவனிடம் துர்வாச முனிவரை சந்தித்து அவரிடம் அதற்கு வழி கேட்குமாறுக் கூறி அனுப்பினார்.
அவனும் தயங்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று துர்வாச முனிவரிடம் தான் இழந்த வீடுகளையும் நாட்டையும் திரும்பிப் பெற தனக்கு உதவுமாறுக் கூற அவரோ அவன் இழந்து விட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் எனில் அப்படியே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட திசை வழியே சென்று கொண்டு இருந்தால் ஒரு இடத்தில் முருகன் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரு பட்டரி மரத்தின் கீழ் வாசம் செய்வதைக் காண முடியும் என்றும், அங்கு சென்று வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் விடிவு காலம் பிறக்கும் என்றார். பகீரதனும் அவர் கூறியபடியே அங்கும் இங்கும் சுற்றியப் பின் கோட்டை நகரை அடைந்தார். துர்வாச முனிவர் கூறிய அனைத்து அடையாளங்களும் அங்கு இருந்தன. ஆகவே அவன் முனிவர் கூறியபடியே அங்கு தவம் இருந்து முருகனின் அருளினால் தான் இழந்த அனைத்தையுமே சில காலங்களில் திரும்பப் பெற்றான். அதனால் மனம் மகிழ்ந்து அவன் அந்த இடத்தில் முருகனுக்கு ஆலயம் ஒன்றை அமைத்தான்.

 பகீரதனுக்கு காட்சி அளித்தார் 
 முருகப் பெருமான்

அந்தக் கட்டத்தில்தான் திருபோரூரில் இருந்து திருத்தணிக்கு சென்று கொண்டு இருந்த அருணகிரிநாதர் முருகனின் இருப்பிடமான பட்டரி மரம் இருந்த இடத்தை அடைந்தார். அதன் அருகில் இருந்தக் குளத்தின் அருகில் இருந்த இன்னொரு மரத்தின் அடியில் சென்று உறங்கியவர் 'என்னை மறந்து விட்டாயா அருணகிரி?' என்றக் குரல் கேட்டு எழுந்தார். அந்தக் குரல் மூன்று முறை ஒலித்தது. எழுந்தவர் குரல் கொடுத்தவரைத் தேடினார். அருகில் யாருமே தென்படவில்லை. அப்போது அவர் பட்டரி மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த முருகனைக் கண்டு ஆனந்த கூத்தாடி அவர் மீது ஏழு பாடல்களைப் திருப்புகழ் என்ற பெயரில் பாடினார். வல்லக் கோட்டை ஆலயத்தை கோட ஆண்டவர் ஆலயம் என்று அழைத்தார்கள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் மகாபிஷேகம் நடைபெறுகின்றது. சென்னையில் இருந்தும் அதை சுற்றி உள்ளப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அங்கு வருகிறார்கள். அப்போது அங்கு அன்னதானமும் நடை பெறுகின்றது. தமிழ் புத்தாண்டு, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் விசேஷ பூஜை நடைபெறுகின்றது.


ஆலய நடை திறக்கும் நேரங்கள்
  • காலை 5.30 முதல் 1.00 மணி வரை
  • மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை 
  • விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆலயம் மதியம் மூடப்படுவது இல்லை
ஆலய விலாசம்

EXECUTIVE OFFICER
A/M. SUBRAMANIYA SWAMY TEMPLE
Vallakkottai
Sri Perumbudur Taluk, Kanchipuram- 602 105.
Tamil Nadu, India.
Phone : 04111-272225.
E-mail : vallakkottaimurugan@sancharnet.in

Tuesday, April 17, 2012

Siruvapuri Murugan Temple

சிறுவாபுரி முருகன் ஆலயம்
சாந்திப்பிரியா 


''முருகப் பெருமான் வள்ளி தேவியை திருமணம் செய்து கொண்டப் பின் தம் மனைவியுடன் கிளம்பி தம்முடைய இடத்துக்குச் செல்லத் துவங்கினார். முருகப் பெருமானுக்கு எப்போதுமே சோலைகள் மிகுந்த இடம் மனதுக்கு பிடித்த இடமாக இருக்கும். அவர்  சென்று கொண்டு இருந்த நேரத்தில்  ராமாயண யுத்தம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய ராமபிரானைப் பிரிந்து சீதையானவள் ஒரு வனப்பகுதியில் தனது இரண்டு குழந்தைகளான லவ-குசாவுடன் தங்கி இருந்தாள். அந்த நேரத்தில்தான் பாலக் குமாரராக இருந்த முருகப் பெருமானும் தனது மனைவியான வள்ளியுடன் அதே வனப் பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். அந்த இடமே சிறுவாபுரி என்பது.
ஒருவகையில் பார்த்தால் வள்ளி தேவியும் மகாவிஷ்ணுவின் இரண்டாவது மகள் ஆனவள். அவள் முருகப் பெருமானை மணப்பதற்காக ஒரு வேடனின் மகளாகப் பிறந்து அவரை மணந்து கொண்டவள். ஆகவே முருகனுடன் தனது இளைய மகளான வள்ளி  புகுந்த வீட்டிற்குச் செல்வதைக் காண விரும்பிய மகாவிஷ்ணுவும் அதே இடத்துக்கு வந்திருந்தார். அது போலவேதான் சிவபெருமானும் திருமணம் ஆனப் பின் தம் வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்த தமது மகன் மற்றும் மருமகளை பார்ப்பதற்காக அங்கு வந்து இருந்தார்.
 வள்ளி மற்றும் முருகன் திருமணக் கோலத்தில் 

அங்கு தங்கி இருந்த நேரத்தில்  சிவபெருமானும், விஷ்ணுவும் பேசிக் கொண்டு இருக்கையில் விஷ்ணு கூறினாராம் ' இந்த இடம் நமது பாலகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைய  வேண்டும். அதற்குக் காரணம் ராம அவதாரத்தில் இருந்த நான் (விஷ்ணுவானவர்) என் மகன்களின் வீரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக நானே அனுப்பிய அஸ்வமேத யாக குதிரையை பிடித்து வைத்து இருந்த எனது மகன்களான லவ- குசாவுடன் இதே இடத்தில் போர் புரிய நேரிட்டது. அதில் நான்  வெற்றி பெற முடியாமல் போக சீதை மூலம் லவ குசா யார் என்பதை தாம் அறிந்து கொள்வது போல நாடகம் நடத்தி உலகிற்கு அவர்களை அடையாளம் காட்ட முடிந்தது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இடத்தில் எனது மகளை (வள்ளி) மணந்து கொண்ட முருகனும் (சிவபெருமானின் மகன்) எழுந்தருளி இந்த இடத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்''.
அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் திருமணக் கோலத்துடன் வள்ளியுடன் திரும்பிச் சென்று கொண்டு இருந்த முருகனை சந்தித்து விஷ்ணுவின் ஆசையைக் கூறி, அதை மதிக்கும் விதத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேறியவாறு அவர்களை ரட்ஷித்து வருமாறு கூறி அவருக்கு பல சக்திகளை தம்மிடம் இருந்து தந்தார். தந்தையின் சொல்லை ஏற்று  முருகப் பெருமானும் தமது வாகனங்கள் மற்றும் தன்னுடன் திரும்பிக் கொண்டு இருந்த அனைவருடனும் அங்கேயே சில காலம் தங்கி இருந்தார். அதுவே அங்கு முருகன் ஆலயம் ஏற்படக் காரணம் ஆயிற்று என்பது மட்டும் அல்ல அந்த அன்றைய வனப் பகுதியிலேயே விஷ்ணு மற்றும் சிவனுக்கும் ஆலயங்கள் ஏற்படக் காரணம் ஆயிற்றாம் . இது ஒரு சிலர் கூறும்  கிராமியக் கதை.
சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போர் புரிந்த இடம் என்பதினாலும், பால வயதுக் குமாரன் தீரச் செயலை செய்து வள்ளியை கரம் பிடித்து  வந்து தங்கிய இடம் என்பதினாலும், சிறு இளைஞர்கள் பெருமை சேர்த்த அந்த வனப்பகுதி -சிறுவர்கள் + வாய் + புரி = 'சிருவாய்புரி' - அதாவது அனைவரும் வாயும் பிளக்கும் வண்ணம் தீரமிக்கக் செயலை காட்டிய இடம் என்ற அர்த்தத்தில் 'சிருவாய்புரி' என்ற பெயரில் அமைந்தது. ஆனால் காலப் போக்கில் அது மருவி சிறுவாபுரி என ஆகி விட்டதாம்.
சிறுவாபுரி கிராமத்தில் மூன்று ஆலயங்கள் இருந்தும், லவ-குசர்கள் பெருமை பெற்று இருந்தாலும், அங்கு அமைந்து உள்ள முருகப் பெருமானின் ஆலயமே பெரும் பெருமைப் பெற்ற ஆலயமாக உள்ளது. அதற்குக் காரணம்
- இங்கு அமர்ந்துள்ள முருகப் பெருமான் பல சக்திகளைக் கொண்டவர்
-லவ-குசா இருவரும் சிவபெருமானையும், முருகனையும் இங்கு வழிபாட்டு உள்ளார்கள்.
- வள்ளியுடன் திருமண ஜோடியாக இங்கு வந்து முருகன் தங்கியதினால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடைபெறும்.
- நல்ல தங்கும் இடம் அமையும் (வீடு, நிலபுலங்கள் வாங்குதல்)
-நோய் நொடிகள் விலகும் மற்றும்
-செல்வம் சேரும்
-இது அருணகிரிநாதர் பாடல் பெற்றத் தலம்
இந்த கிராமத்தில் முருகம்மை என்ற பெண்மணி இருந்தாள். அவள் முருக பக்தை. எப்போதும் முருகனையே போற்றி வணங்கி வந்தால்.  அதனால் ஒருநாள் அவள் மீது ஆத்திரம் அடைந்த  அவளுடையக் கணவன் அவளது கையை வெட்டி எறிந்தான். அவள் அழுதுகொண்டே முருகனை வேண்டினாள். அவளது கணவனின் செயலினால் வருத்தம் அடைந்த  முருகன் அவளுக்கு அங்கேயே காட்சி அளிக்க வெட்டப்பட்ட அவளாது கைகள் அப்படியே உடலுடன் இணைந்தது. வெட்டப்பட்ட சுவடே இல்லை. இது உண்மையில் நடந்தக் கதை என்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட முறையில் ஆறுவாரங்கள் முருகனை இங்கு வந்து வணங்கினால்  நினைத்தவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் உள்ள ஒரு விசித்திரம் என்ன என்றால் இங்குள்ள அனைத்து சிலைகளும் - மூலவரைத் தவிர- பச்சை நிறக்  கல்லில் செய்யப்பட்டு உள்ளன.  இந்த ஆலயத்தில் உள்ள  சன்னதிகள்  அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன்  ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள  வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் முருகப் பெருமான்  மற்றும் சண்டிகேஸ்வரர் போன்றவர்களுக்கு உள்ளன. இங்குள்ள கொடி மரத்தின் முன்னால் முருகனின் வாகனமான பெரிய பச்சை வண்ண மயில் உள்ளது   விஷேஷமானக் காட்சியாகும்.


ஆலயம் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிறுவாபுரிக்குச் செல்ல பஸ்கள் உள்ளன, தனி வாகனத்திலும் செல்லலாம். சென்னையில் இருந்து இந்த ஆலயம் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  
ஆலயம் பற்றிய பிற விவரங்களுக்கு
தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி :-
Valayapettai Ra. Krishnan
52, Muthaya Mudali Second Street
Royappettai, Chennai - 600 014 India
Office phone: (91)44-827-2682
Home phone: (91)44-847-4468
Or e-mail to Senthil Adimai Sundram: s_sundaram@vsnl.net

Thandikudi Murugan Temple

தாண்டிக் குடி முருகன் ஆலயம்,
திண்டுக்கல் மாவட்டம்
சாந்திப்பிரியா


தமிழ் நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது தாண்டிக் குடி என்ற மலைப் பகுதி. அந்த மலையை ஜோதி மலை என்கிறார்கள். தேனியின் தாமரைக் குளம் அல்லது ஊட்டி-கொடைக்கானல் எனப்படும் ஊரில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முருகப் பெருமானின் தாண்டிக் குடி ஆலயம் . இல்லை என்றால் திண்டுக்கல் நகரை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல் பெரியகுளம் சாலையில் அமைந்து உள்ள வத்தலக் குண்டு என்ற ஊரில் இருந்தும் செல்ல முடியும். அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மலை மீது உள்ள இந்த ஆலயத்துக்குச் செல்ல நல்ல சாலை வசதி இல்லை என்பதினால் ஜீப் அல்லது பிற வாகனங்களில் இருந்தே அங்கு செல்ல முடியும்.
 
 அகஸ்தியரின் பிரும்ம தண்டத்தில் அஷ்ட நாகங்களினால் 
கட்டப்பட்ட மலைகலை சுமந்தபடி இடும்பன் சென்றான்

முருகப் பெருமான் சூரபத்மனுடன் சண்டைப் போட்டு அவனை வதம் செய்தப் பின் அவனது படையினரையும் அழித்தார். ஆனால் அதில் இடும்பன் மட்டும் தப்பி உயிர் பிழைத்து அகஸ்தியரின் சிஷ்யனாகி விட்டான். ஒருமுறை கைலாயம் சென்ற அகத்திய முனிவருக்கு இரண்டு மலைகள் பரிசாகக் கிடைத்தன. அதை எப்படி எடுத்துப் போவது என அவர் யோசனை செய்து கொண்டு இருந்தார். சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற அந்த இரண்டு மலைகளையும் தானே தூக்கிக் கொண்டு வருவதாக அவருடைய சிஷ்யனான இடும்பன் அகஸ்திய முனிவரிடம் கூறினான். அதைக் கேட்டு மகிழ்ந்த அகஸ்தியரும் அந்த இரண்டு மலைகளையும் அவன் தோளில் ஒரு காவடியைப் போல தூக்கிக் கொண்டு வருமாறு கூறினார். அந்த மலைகளை தோளில் சுமந்து கொள்ள வசதியாக அவற்றை அஷ்ட நாகங்களினால் அகஸ்திய முனிவரின் பிரும்ம தண்டத்தின் இரு முனைகளிலும் கட்டி அதை அவன் தோளின் மீது சுமந்து கொண்டு வருமாறு ஆணையிட்டார். அவர் கொடுத்த சக்தியினால் அவனால் எளிதாக அவற்றை தூக்கிக் கொண்டு முடிந்தது.

 இடும்பன் சென்ற வழியை மறைத்தார் 
சிறுவன் உருவில் இருந்த முருகன்

அதற்கு முன்னால் இடும்பன் தான் முருகப்பெருமானைக் தரிசித்து அவருக்கும் சேவை செய்ய வேண்டும் வேண்டும் என்றும் அதற்கு அகஸ்தியர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருந்திருந்தான். அவரும் அதற்கு தன்னால் ஆனா உதவியை செய்வதாக வாக்களித்து விட்டு இடும்பனுக்கு காட்சி தர வேண்டும் என்று முருகனை வேண்டிக் கொண்டார். அந்த நேரத்தில் தனது பெற்றோர்கள் மீது கோபம் கொண்ட முருகப் பெருமான் பழனிக்குப் போகும் வழியில் தாண்டி மலையில் தங்கி இருந்தார். இடும்பன் மலைகளை சுமந்து கொண்டு செல்வதைக் கண்ட முருகப் பெருமான் இடும்பனுக்கு காட்சி தந்து அவனை தனக்கு சேவகனாக பழனியில் வைத்துக் கொள்ள முடிவு செய்து இருந்தார். ஆனால் அவனை தானே சம்ஹாரம் செய்தால்தான் அவனது அசுர குணம் மறைந்து அவனும் தேவகணமாகி தனக்கு சேவகம் செய்ய முடியும் என்பதினால் வேண்டும் என்றே இடும்பன் முன்னிலையில் ஒரு மிகச் சிறுவன் உருவில் சென்று அவன் செல்லும் வழியில் படுத்துக் கிடந்தவாறு அவனை வம்புச் சண்டைக்கு இழுத்தார். அவன் மலை மீது தான் ஏறி நிற்க அவனால் அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் அவற்றைக் கீழே வைக்க வேண்டி இருந்தது.

தாண்டிக்குடி ஆலயம்

அவன் கோபமடைந்து அந்த சிறுவன் யார் என அறியாமல் அவரை அடித்துத் துரத்தச் செல்ல முயல  தற்போது உள்ள இடும்பன் மலை அருகே சென்றதும் அவனுடன் சண்டைப் போட்டு அவனை அங்கேயே வதம் செய்த பின் அவனுக்குக் காட்சி தந்தார். அந்த மலையைத் தாண்டிக் குதித்து முருகன் பழனிக்கு சென்றதினால் அந்த மலைப் பகுதியின் பெயர் அவர் தாண்டிக் குதித்துச் சென்ற இடமாக தாண்டிக் குதி என ஆகி அது பின்னர் மருவி தாண்டிக் குடி என ஆகிவிட்டது.  இப்படியாக அகஸ்தியரின் மூலம் நடைபெற்ற நாடகத்தினால்  அந்த இடம் முருகனின் ஆலயம் ஏற்பட  காரணமாகி விட்டது.

அகஸ்தியர் மலையில் அகஸ்தியருக்கு பூஜை செய்கிறார்கள் 
அதற்கு வெகு காலத்துக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டுகளில் ஒரு முறை தவத் திரு லஹரி ஸ்ரீ லா லா பன்றிமலை ஸ்வாமிகள் அவர்கள் கனவில் முருகனின் தோன்றி தனக்கு தாண்டிக்குடி மலைப் பகுதியில் ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட்டார். அவரும் அங்கு சென்று முருகன் தாண்டிக் குதித்துப் பழனிக்குச் சென்ற இடமான தாண்டி மலைப் பகுதியை அடைந்து அங்கு ஆலயம் அமைக்க சரியான இடத்தை தேடினார். ஒருநாள் அவருக்கும் அனைவருக்கும் அந்த மலை மீது ஒரு ஜோதி ஒளி தெரிந்ததாம். அங்கு சென்று பார்த்தபோது முருகனின் காலடி சுவடும், மயில் வாகனம் போன்ற சித்திரமும் அந்த மலையில் தெரிய அந்த இடத்திலேயே தாண்டிக்குடி ஆலயத்தை அமைக்க முடிவு செய்தாராம். பல பக்தர்களும் கொடுத்த நன்கொடைகளைக் கொண்டு அற்புதமான ஆலயம் அமைந்தது. பழனி மலை ஆலய அமைப்பிலேயே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இந்த ஆலயமும் உள்ளது.

Friday, April 13, 2012

Lord Muruga's Sister Jothi

ஸ்வரூப  வேல்
ஸ்கந்தனின் சகோதரியான ஜோதி


(Read Original Article in English in :-
Swarupa Vel - Skantha 's Sister Jothi - By Dr. Alagappa Alagappan )

Translated Into Tamil by :- சாந்திப்பிரியா)

 
ஜோதி சிவபெருமானின் குடும்பத்தை சேர்ந்தவள். சிவன்-பார்வதிக்கு விநாயகர் மற்றும் முருகன் எப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான் சிவன்-பார்வதி உறவில் வெளிவந்தவளும் ஜோதி என்பவள். சிவன் பார்வதி உறவினால் எழுந்த ஒளியின் ஒரு பக்கத்தில் இருந்து முருகனும், இன்னொரு பக்கத்தில் இருந்து ஜோதியும் வெளி வந்தார்கள். அதனால்தான் ஜோதியை முருகனின் சகோதரி என்கிறார்கள்.
ஒருவருடைய உடலே ஆலயம் போன்றது. அந்த உடலின் வலது மற்றும் இடதுபுற நாசித் துவாரங்களே சிவன் மற்றும் பார்வதி ஆவார்கள். விநாயகப் பெருமானோ முதுகுத் தண்டின் அடியில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். அங்கிருந்துதான் குண்டலினி சக்தி வெளிப்படுகின்றது. அந்த சக்தி ஐந்து சக்கரங்களான அல்லது முருகனின் ஆறு யுத்த வீடுகளான மூலாதாரா, மணிபுரா, அனஹதா, ஸ்வாதிஷ்டானா, விசூதி போன்றவற்றைக் கடந்து மேலே எழும்பி வந்து நெற்றிப் பொட்டில் உள்ள அஜ்ன சக்கராவில் கலக்கும் போது அவளுடைய தாயாரின் சக்தி வெளிப்படுகின்றது. அப்போது அதை தன்னுடைய மகனுக்குக் கொடுத்து அவனுக்குள் அந்த சக்தியை அவள் ஊடுறுவ வைக்கின்றாள். முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு இணையான அந்த ஆறு சக்கரங்களையும் கடந்து செல்லும் ஜோதியானவள் அஜ்ன சக்கராவில்தான் தனது தாயாரை சந்திக்கிறாள் என்பது தாத்பர்யம்.
சிவபெருமானின் நெற்றிப் பொட்டில் இருந்து வெளியான ஆறு ஒளிக்கதிர்களில் இருந்து வெளியானவரே முருகப் பெருமான் என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டு உள்ளது . அதனால்தான் முருகனை சிவபெருமானின் அம்சம் என்றும், அவரைப் போலவே மிக சக்தி வாய்ந்தவர் என்றும் கருதுகிறார்கள். அது போலவே பார்வதியின் நெற்றிப் பொட்டில் இருந்து வெளியான ஒளிக் கதிர்களில் இருந்து வெளியானவளே ஜோதி . அரக்கன் சூரபத்மனை அழிக்கும் வேலையை முருகனுக்குக் கொடுத்தபோது, அவருடைய தாயார் பார்வதியானவள் அவருக்கு அந்த யுத்தத்திற்கு உதவிடும் வகையில், யாருமே அழிக்க முடியாத சக்தி வாய்ந்த வேல் ஒன்றை தன்னிடம் இருந்து வெளி வரச் செய்தது அதை முருகனுக்குத் தந்தாளாம். அது ஒரு ஆயுதம் அல்ல என்றும், அதுவும் பார்வதியிடம் இருந்து வெளிவந்த ஒரு சக்தி வாய்ந்த தெய்வமே* என்றும் தெரிய வருகின்றது.
சமீப காலம் வரை ஜோதியைப் பற்றிய எந்த செய்தியும் இல்லாமல் இருந்தது. ஆனால் 1978 ஆம் ஆண்டில் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை ஸ்வாமிகள் தன்னிடம் (இந்தக் கட்டுரை ஆசிரியரான டாக்டர் . அழகப்பா அழகப்பனிடம்) முருகன் கையில் உள்ளது வெறும் வேல் எனும் ஆயுதம் அல்ல, ஆதிபராசக்தி கொடுத்த ஜோதியே ( ஜோதி எனும் தேவதை) என்று தெரிவித்தாராம். ஆகவே ரூபமில்லாத உருவில் இருந்த ஜோதியை ஆலயங்களில் அதுவரை வழிபட்டார்கள். ஆனால் தற்போது அந்த ஜோதி ஒரு உருவ வழிபாட்டுக்குறிய தெய்வம் என்று தெரிய வந்துள்ளது.
ஸ்கந்தனின் வேல் எனும் ஆயுதமே அந்த ஜோதியானவள் . வேல் என்பது வெறும் உலோகம் அல்ல. அது பராசக்தியினால் சக்தி ஊட்டி அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதம். அந்த சக்திக்குள் உள்ளவளே ஜோதி என்பவள். ஜோதிக்கு பராசக்தியின் அனைத்து ஆற்றல்களும் இருந்தன. அந்த ஆயுதமான வேல் ரத்தினம் போல ஜொலிப்பதினால் அதை இரத்தின வேல் என்று அழைத்தார்கள். ஒருவருக்கு மன இருளையும் அஞ்சாமையையும் அழித்து ஞானத்தைத் தருவதினால் அதை ஞான வேல் என்கிறார்கள். ஞானிகள், ரிஷி முனிவர்கள் விட்டுச் சென்றுள்ள ஞானத்தின் பின்னே அவளே இருக்கின்றாள். ஆகவே ஞானமே எப்போதும் வெற்றி பெறுவதினால் அதை வெற்றி அல்லது வீர வேல் என்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் உள்ளே உள்ள அறியாமையை அழித்து அவர்களுக்குள் நடைபெறும் மனபோராட்டதினை ஒடுக்கி, கடவுளைத் தேடிச் செல்லும் பக்தி மார்கத்தில் செல்ல அவர்காளுக்கு அருள் புரியும் முருகப் பெருமானுக்கு துணையாக ஜோதி நிற்கின்றாள். அந்த வேல் உருவம் அற்றது. நெருப்புப் பொறியில் இருந்து அந்த வேல் வெளி வந்ததினால் அதற்கு அழிவும் இல்லை, அதை வெற்றி கொள்ளவும் முடியாது.
முருகனிடம் இருந்து பிரிக்க முடியாதவள் ஜோதி . ஜோதியை வேல் உருவில் வழிபடாத ஆலயங்களே இல்லை. சரவணன் என்ற ஸ்கந்தனுடன் பிணைந்து இருந்தபடி அவர் சார்பில் அவள் பக்தர்களுக்கு துணை புரிவதினால் அவளை சரவணபயை (சரவணரின் பெண்மை) என்கிறார்கள். அந்த வேலில் காணப்படும் கூறிய முனை அவளது கூர்மையான அறிவைக் குறிக்க தீமைகளை அழிக்கும் துர்கையாக அவளுடைய தாயாரான பராசக்தியிடம் இருந்து பெற்ற சக்தியுடன் அவள் இருப்பதை வேலின் கீழ் பகுதியான அதன் தண்டு பிரதிபலிக்கின்றது.
பழமுதிர்சோலையில் உள்ள அஜ்ன சக்கரத்தை குறிக்கும் ஆறுபடை வீடு ஒன்றில் அவள் காட்சி தருகிறாள். அந்த ஆலயம் மதுரையில் உள்ளது. முக்கியமாக பௌர்ணமி தினங்களில் கிராமங்களில் ஜோதியை ராக்காயி எனும் பெயரில் -ஒரு தலையில் கொழுந்து விட்டு எரியும் தீப்பந்து போன்ற காட்சியில்- அவளை வணங்கித் துதிக்கின்றார்கள். அந்த உருவம் ஜோதியின் அவதாரமான வேலைக் குறிக்கின்றது.
அகஸ்திய முனிவர் இயற்றிய ஷோடஷம் என்ற பக்தி நூல் பார்வதியுடன் முருகனின் ஆயுதமான வேலுக்கு உள்ள உறவை வெளிப்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டு உள்ளது. வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டிலும் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் சதாசிவமான சொககனாதருடன் உள்ள மனோன்மணி இருவரும் ஜோதியுடன் நெற்றிப் பொட்டில் உள்ள அஜ்ன சக்கரத்துடன் ஒன்று சேர இருக்கும்போது கிடைத்த தன்னுடைய அனுபவத்தையே அதில் விளக்கி உள்ளார். நெற்றிப் பொட்டின் நடுவில் உள்ள பொட்டில் இருந்து ஓம் என்ற பிரணவத்துடன் எப்படி ஜோதியானவள் வெளி வந்தால் என்று கூறி உள்ளார். பௌர்ணமியில் பூரணப் பொலிவுடன் ஒரு ஒளி வெள்ளம் போல ஜொலித்தபடி இருக்கும் அவள் எல்லாம் நிறைந்த பரப்பிரும்மமே என்கிறார்.
ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதமான கார்த்திகையில் திருவண்ணாமலையில் சிவபெருமான் தலத்தில் நடைபெறும் தீபத் திருவிழாவில் அங்கு ஏற்றப்படும் ஜோதியை கடவுளாகவே வழிபடுகிறார்கள். அந்த ஜோதியை அருட்பெரும் ஜோதி என்கிறார்கள். நடராசன் என்கின்ற சிவபெருமான் தன் இடக் கையில் ஜோதியை கையில் ஏந்திக் கொண்டவாறு நடனம் ஆடுகிறார். பொன்னம்பலத்தில் , தங்க மேடையில் நடனமாடும் சிவபெருமானுடன் இருக்கின்றாள் ஜோதி .
ஜுவாலை அல்லது ஜோதியில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. ஜோதி என்பது ஆலயங்களில் ஏற்றப்படும் விளக்கு. இறை அருளைக் கொடுப்பதே ஜோதி. நமது பேச்சைக் கட்டுப்படுத்துவதும் அதுவே. அந்த ஜோதி எனும் ஒளியையே நாம் நமது வாழ்வில் ஒளி தருமாறு வேண்டுகிறோம். ஜோதி ஏழு நிலைகளை தாண்டி நிற்பவள் (எழு வண்ணங்களான VIBGIOR என்பது) அவை அனைத்தும் மறைந்தப் பின்னரே அவள் தெரிகிறாள். அந்த ஜோதி ஒளியை அடையாளம் காட்டிய மற்றும் ஒருவர் திரு ராமலிங்க ஸ்வாமிகள் ஆவார் .
தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கன்யாகுமரியாக இருந்தவாறு, சாதுக்கள் சன்யாசிகளுக்கு அறிவை தந்தவள், அவர்களைக் காத்து வந்தவள் . நூற்றுக் கணக்கான வருடங்களாக அவளை ஜ்வால குமாரி என்றும், வடநாட்டில் ஜ்வால முகி என்றும் வணங்கப்பட்டவள். அவள் அறிவை தருபவள் என்பதினால் ஞானாம்பாள் என்றும் குழந்தை தெய்வம் எனும் வகையில் பாலாம்பா என்றும் கூறுவது உண்டு. ஜோதியைப் புகழ்ந்து பாடப்படும் சித்தர்கள் பாடல்கள் பல உண்டு. ஷண்முகனின் பெண்பாலே ஷண்முகி. அவளை கார்த்திகேயே எனவும், குமரி எனவும் அழைப்பது உண்டு.


ஜோதி மந்திரங்கள்
1982 ஆம் ஆண்டில் குமாரி ஹில்டா சார்ல்டன் என்பவர் நியூயார்க் நகரில் உள்ள பிளஷிங் எனும் இடத்தில் உள்ள மகா கணபதி ஆலயத்தில் ஓதப்படும் இந்த மந்திரத்தை நமக்கு அருளினார்கள்:

ஓம் ஜெயா ஜெயா மஹா வீர பகவான் ஸ்ரீ ஸ்கந்தா நமஹா
ஓம் ஜெயா ஜய மஹா ஜோதி சக்தி சரவணபயாயை நமோ நமஹா

ஸ்கந்தன் அவளுக்கு அளித்த உபதேசத்தின்படி பக்தியோடு இதை உச்சரித்தால் நமக்குள் உள்ள சிவ-சக்தி அல்லது யிங்- யாங் எனும் சக்தி உயிர் பெறும் என்றாராம்.
ஸ்கந்தன் அவளுக்குக் கூறினாராம் ''வேல் என்பது முதுகெலும்பைப் போன்றது. மேல் தலையில் குண்டலினி உள்ளது போல அதற்குள் ஜ்யோதி ஒளியாக இருக்கின்றாள். நானே முதுகெலும்பின் கீழ் இருந்து குண்டலினி சக்தி மேல் எழும்பிச் செல்ல வழி காட்டுகிறேன். அப்படி மேல் எழும்பும் குண்டலினி சக்தி மேலே சென்று வெடிக்கும்போது தெய்வமாக ஜோதி அங்கே தோன்றுகிறாள்''.
ஜோதியை முதலில் வேல் ஒன்றை பார்ப்பது போல பார்த்துக் கொண்டு இருக்கும்போது, நமது மனதில் அந்த நினைவு தீவீரம் அடைய, அடைய அவளை நாம் அங்கு ஒளிபோலக் காண முடியும். தெய்வீகத்தையும், அதன் கருணையும் உணரும் வகையிலான நிலைக்கு நம்மை அது அழைத்துச் சென்று விடுவதையும் பார்க்கலாம். அவை அனைத்தையும் நம் உள்ளத்துக்குள்ளே உணரலாம்.

''நானே தலைவன். இந்த செயல்களை முதுகு எலும்பின் மேல் பகுதி வரை நடத்திச் செல்லும் தளபதி.
எவருக்கு விடுதலை வேண்டுமோ அவர்கள் என் சொல்படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
எவர் ஒருவர் படைத் தலைவரின் கட்டளைகளை மீறிச் செல்வாரோ அவர்கள் வெற்றி அடைவது இல்லை.
யுத்த பூமியில் தளபதியின் கட்டளையை மட்டுமே ஏற்று நடக்க வேண்டும்''.

இத்தனை யுகங்களாக செயலற்று இருந்த ஜோதி இனி புத்துயிர் பெற்று புது சக்தி யுகத்தில், கலி உலகில் உள்ள தீமைகளை அழிக்க எழப் போகின்றாள் என்பதை உணர்த்தும், வகையில் இந்த மந்திரங்கள் அமைந்து உள்ளன.

ஓம் ஷ்ரீம் ஆதி பிருமேஸ்வரியை நமஹா
ஓம் ஷ்ரீம் ஹிரீம் கிரீம் க்லீம் ஜுவோதிஸ்வரியாயை நமஹா

முதல் மந்திரம் அவளைப் படைப்பவளாகவும், அடுத்ததில் பிரகாசிக்கும் ஒழி வெள்ளம் சூழ்ந்த, தெய்வீகமும் செல்வமும் தரும் மகாலஷ்மிக்கு இணையானவளாகவும் , உலகையும், கிரஹங்களையும் பிரதிபலிக்கும் புவனேஸ்வரியாகவும் , அழிவில்லா அன்னையான துர்க்கையாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அகஸ்தியரோ, ஜ்யோதியை அற்புதமானவள், ஆனந்தத்தைத் தருபவள் மற்றும் உருவம் அற்றவள் என்றும் வர்ணித்து உள்ளார்.
குண்டலி யோகா மூலம் ஜோதியை ஆராதிக்கலாம். திருமூலர் கூறினார்:-

''வடக்கு தெற்குப் பக்க மக்கள் அவர் பின்னால் அலைந்தவாறு இருந்து கொண்டு நிற்கையில், கிழக்கிலும், மேற்கிலும் உள்ளவர்கள் அவரைத் தேடி அலைய, ஓம் என்ற மூலாதார மந்த்திரத்தைக் கூறி குண்டலினியைத் தட்டி மேல் எழுப்ப எழுப்ப, ஒளியைப் போல நீ தோன்றுகிறாய்''.

ஜோதியை பௌர்ணமியில் மாலை மற்றும் இரவு வேலைகளில் ஆராதிக்கலாம். அவளை சரவணபாவையை அல்லது வேல் உருவில் அனைத்து தினங்களிலும் முருகனுடன் சேர்த்து ஆராதிக்கலாம். அவளை ஆராதிக்க கார்த்திகை தினங்கள் விசேஷமானவை. மே மாதம் வைகாசி நட்ஷத்திரத்தில் தனது நேற்றுப் பொட்டில் இருந்து வெளிவந்தவலை வேலாக்கி பார்வதியானவள் தனது மகன் முருகன் சூரபத்மனுடன் போருக்கு புறப்பட்டபோது கொடுத்த அந்த நாளில் அவளை வழிபடுவது விசேஷம்.

ஜோதி இயக்கம்
வட அமெரிக்க நாட்டில் உள்ள வல்லப கணபதி தேவஸ்தானம் இந்து தத்துவத்தை இந்தியாவிருக்கு வெளியில் பரப்புவதற்கான அவசியத்தையும் அந்த முயற்சிக்குத் தேவையான கடமையும் உணர்ந்ததினால் நியூயார்க் நகரில் ரூபம் அற்று இருந்த ஜோதிக்கு நான்கு சிலைகளை செய்து மற்ற இடங்களில் அவளுக்கு ஆலயம் அமைத்தால் அவர்களுக்கு அதைத் தர தீர்மானித்து இருந்ததின் மூலம் ஜோதி இயக்கத்தின் முதல் வழிபாட்டைத் துவக்கினார்கள்.
1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தி ஏழாம் தேதியன்று ஹூஸ்டன் நகரில் திரு அனந்த ராதஷேஷன் என்பவர் தலைமையில் முதல் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிளஷிங் நகரில் உள்ள கணேஷர் ஆலயத்தில் ஸ்கந்தனுக்கு பக்கத்து சன்னதியில் ஜோதிக்கும் சிறிய ஆலயம் அமைக்கப்பட அங்கும் நிறைய பக்தர்கள் சென்று அவளை வழிபடுகிறார்கள்.
கலிபோர்னியா நகரில் கலபசாஸ் என்ற ஊரில் லாஸ் வெர்ஜீனியாவின் கனான் சாலையில் உள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்திலும் ஜோதிக்கு தனி சன்னதி உள்ளது. அந்த இடத்தையே தன்னுடைய இருப்பிடமாக ஜோதி கொண்டு உள்ளாள். கபில முனிவர் ஜோதியை தனது நெற்றிப் பொட்டில் வைத்தவாறு தவம் செய்கிறாராம். ஜோதியின் மற்றொரு விக்கிரஹத்தை வாஷிங்டனில் உள்ள முருகன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள்.
இந்தியாவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை வீட்டில் ஜோதிக்கும் ஒரு ஆலயம் எழுப்பப்பட உள்ளது. ஆறுபடை வீடான ஆறு சக்கரங்கள் சூழ்ந்து உள்ளபடி உள்ளார் மூலாதார கணபதி. ஆறாவது வீட்டில் வேலாக ஜோதி இருப்பாள். வழிபாட்டு முறையினையும் வழி வகுக்கும் இந்த இடத்தில் தியான மண்டபமும் அமைக்கப்பட உள்ளது.

Two temples


ஸ்ரீ மகாலட்சுமி பத்மாவதி  
ஸ்ரீனிவாசஸ்வாமி ஆலயம்  
தேவாரகரே லேஅவுட்  ,   ISRO  லேஅவுட்,  வசந்தபுரா, பெங்களூரு- 78

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, ஸ்ரீ முத்து மாரியம்மா, 
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ பாவனேஸ்வரி, 
ஸ்ரீ நீதி தேவதே ஆலயம்  
உத்தரஹள்ளி ,   பெங்களூரு 
Monday, April 9, 2012

Palani Murugan - Some unknown facts

பழனி ஆண்டவர் சிலை
விஞ்ஞான சோதனை

(Read Original Article in English in :- 

(Translated Into Tamil by :- சாந்திப்பிரியா  )

தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் 'அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே பழனி மலை'.
தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடி உயரத்தில் உள்ள  பெருமை மிக்க இடமான சிவகிரி மலையில் தண்டாயுதபாணி பழனி ஆண்டாவராக வீற்று உள்ளார்.  புராதான காலத்தின் துவக்கம் முதலே சித்தர்களும், முனிவர்களும் பழனி மலையில் தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் அதிகப் புனிதத் தன்மையை அடைந்தது.  பல மன்னர்களும் கொடையாளிகளும் அந்த ஆலயத்துக்கு பல வகைகளிலும் தங்களுடைய ஆதரவை வழங்கி உள்ளார்கள். தமிழக முன்னணிப் பாடகர்கள் பலர் தண்டாயுதபாணியின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய தமிழ் பாடல்களைப் பாடி உள்ளார்கள். துடித்துக் கொண்டே இருக்கும் தெய்வீக சூழ்நிலையில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகளை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இந்துக்கள் தொடர்ந்து கடைபிடித்தவண்ணம்  இருக்கின்றார்கள். அனுதினமும் அங்கு வரும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களே அதற்கு சாட்சி ஆவார்கள்.
ஆறுபடை வீடுகளில் மணிபூரகம் எனும் மூன்றாவது தெய்வீக நிலையை ஒருவர் எட்டியதும் அந்த நிலையில் இருந்து பரிபூரண ஆன்மீக நிலையினை அவர்கள் அடையத் துவங்கி விடுகின்றனர். மற்ற தெய்வீக நிலைகள் வருமாறு:


புராண காலத்தில் அருணகிரிநாதர் இயற்றிய இந்த பாடல் மூலம் பழனியின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். -''என் தெய்வமே , நீ தெய்வீகத்தில் பஐமை வாய்ந்த காசி, பெனாரஸ் போன்ற இடங்களை விட மிக உயர்ந்த நிலையில் உள்ள இந்தப் புனித மலை மீது அமர்ந்து இருக்கின்றாய்''.  சைவ சித்தாந்தக் கூற்றின்படி ஒருவர்  ஞான உபதேசத்தைப் பெரும் முன்னர் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் ஆன்மாவின் நான்கு பகுதிகளைக் கடக்க வேண்டும். அவை 'கார்யா' எனும் தன்னலமற்ற சேவை, சாதனாக்களை துதிக்கும் 'கிரியா' என்பது, ஒரு குருவின் துணையோடு தியானிக்கும் 'யோகம்', மற்றும் ஆத்மார்த்தமாக தன்னை உணர்ந்து கொள்ளுதலான  'ஞானம்' என்பது.  ஒருவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் எனில், ஒரு முட்டையில் இருந்து புழுவாகி, புழுவில் இருந்து வளர்ச்சி பெற்ற கூட்டுப் புழுவாகி, வளர்ச்சி பெற்ற கூட்டுப் புழுவில் இருந்து கம்பளிப் பூச்சியாகி, கம்பளிப் பூச்சியில் இருந்து வண்ணத்துப் பூச்சியாகி பறப்பதைப் போல படிப்படியாக 'கார்யா', 'கிரியா', 'யோகா' போன்ற நிலைகளைக் கடந்து 'ஞான' நிலையை எட்ட வேண்டும்.  பழனி தண்டாயுதபாணி ஞானத்தை பிரதிபலிக்கின்றார். ஞானமே பேரானந்த மன நிலையான ஞானப் பழம் என்பதை நமக்குத் தரும்.  இளம் பிஞ்சு காயாகி பல்வேறு நிலைகளை கடந்து பழுக்கத் துவங்கி கடைசியாக பழமாவதைப் போலவே பழனி முருகனும் கவர்ச்சிகரமான முகப் பொலிவுடன் இருந்து கொண்டு பக்தர்களுக்கு பல்வேறு காட்சிகளிலும், ரூபங்களிலும் தரிசனம் தந்து கொண்டு அருள் மழையைப் பொழிந்தவாறு இருக்கின்றார். அவர் கொண்டுள்ள ரூபங்களில் சில:-

பழனியில் குடி கொண்டுள்ள அந்த தெய்வம் உலகின் பல இடங்களில் இருந்தும் பக்தர்களை தன்பால் இழுக்கின்றது. பழமையில் ஊறிப்போன முஸ்லிம் மதத்தினர் கூட இங்கு வந்து அவரை வணங்குகிறார்கள். முருகனை பழனி பாட்ஷா என அன்புடன் கூறி அவரை வணங்குகிறார்கள். ஆத்ம ஞானம் பெற அங்கு வரும் பக்தர்களுக்கு ஒளி  வெள்ளத்தைக் காட்டியபடி பழனி ஆண்டவர் அவர்களை வழி நடத்திச் செல்கிறார். தண்டாயுதபாணி ஆலயம் தனி மகத்துவம் பெற்றது. மற்ற ஆலயங்களுடன் அதை ஒப்பிடும்போது அவற்றில் இருந்து இது வேறுபட்டு உள்ளது நன்கு தெரியும்.
முதலாவதாக அந்த ஆலயத்தில் உள்ள பிரதான தெய்வத்தை மூலவர் என்று அழைக்கின்றார்கள். சாதாரணமாக இந்து ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் சிலைகளை கருங்கல் பாறைகளில் செய்வார்கள். அதற்குக் காரணம் அவற்றில் இயற்கையாக அமைந்து உள்ள அதி இழுவிசை சக்தியே. மேலும் கருங்கல் பாறைகள் பெரும் பலம் மிக்கவை . அது மட்டும் அல்லாமல் இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற அனைத்துப் பொருட்களும் அதற்குள் உள்ளன. ஆனால் அப்படி இல்லாமல் பழனி ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது.  சமஸ்கிருதத்தில் 'நவ' என்பதற்கு இரண்டு அர்த்தங்கள்  உள்ளன. 'நவ' என்றால் 'புதியது' அல்லது 'ஒன்பது' என்ற அர்த்தங்கள் உள்ளன. அது போலவே 'பாஷணம்'  என்றால் 'விஷம்' அல்லது  'தாதுப் பொருட்கள்' என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன.  பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான 'போகர்'  என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள். அங்குள்ள மூலவரின் சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால் செய்து உள்ளார். அந்த ஒன்பது நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களும் ஒன்றாகியபோது உடைக்க இயலாத பலம் மிக்க பொருளாக மாறியதும் அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருத்துவத் தன்மைக் கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமித்து இருப்பதில் இருந்தே சித்த முனிவரான போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமல்ல , தொலைதூர கண்ணோட்டத்துடன் பின்னர் வர உள்ள காலத்து முருக பக்தர்களின் உடல் நலனில் பெருமளவு அக்கறை கொண்டு இருந்தவர் என்றும், அவர்  மிக உயர்வான தெய்வீக நிலையில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த முனிவருடைய சித்தர் பரம்பரை பற்றியும் இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. சித்தர்களின் தலைவராகக் கருதப்படுபவர் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவரே. அவருடைய ஏழு சிஷ்யர்களில் 'திருமூலர்' என்பவர் உண்டு. அந்த திருமூலருக்கு 'கலங்கி கஞ்சமலையான்' என்ற சிஷ்யர் இருந்தார். அந்த கலங்கி கஞ்ச மலையானுக்கு ஆறு சிஷ்யர்கள் இருந்தார்கள். அந்த ஆறு சிஷ்யர்களில் ஒருவரே 'போகரும்'' ஆவார். இப்படியான சிஷ்ய பரம்பரைக் காட்டும் பட்டியல் கீழே உள்ளது.
போகரைப் பற்றிய அனைத்து செய்திகளும் திருமூலர் எழுதி உள்ள திருமந்திரம் என்ற நூலில் உள்ளன. திருமூலர் சைவ சித்தாந்திற்கு  ஒரு தூணைப் போன்றவர். அவரே சைவ சித்தாந்திகளுக்கு தெய்வீக மார்கத்தில் இணைந்து , ஆத்மா ஞானத்தைப் பெற்று இறைவன் பாதத்தில் இணைந்து விடும் வழிமுறைகளை காட்டியவர். நவபாஷணப் பொருட்களில் கலவையைக் கொண்டு தயாரித்த முருகன் சிலையை வடிவமைப்பதிலும் போகர் வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டு உள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் காணப்படும் முருகன் சிலைகள் அழகிய இளைஞரைப் போல தோற்றம் உள்ளதாகவும், கிழக்கு நோக்கிப் பார்த்தவாறும் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் பழனியில் உள்ள முருகனின் சிலையோ மெல்லியதாகவும், மொட்டைத் தலையுடனும், காவி உடை அணிந்தபடியும், சாமியார் கோலத்திலும் கையில் தன்டாயுதத்தை ஏந்திக் கொண்டு தெற்கு நோக்கிப் பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளது.  'நானே முதிர்ச்சி உள்ள அறிவுப் பழம் ' என்பதை பறை சாற்றிக் கொண்டு நிற்பது  போல அமைந்து உள்ளது.

அங்கு வரும் பக்தர்கள் பக்தி பெருக மூலவருக்கு செய்யும்  அபிஷேகங்களினால் அந்த சிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாகும். கிருத்திகை தினங்களில் சுமார் அறுநூறு முதல் எழுநூறு அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. அத்தனை அபிஷேகம் செய்தும் அவற்றினால் எந்தவிதமான பாதிப்பும் அடையாமல், அந்த நவபாஷண சிலை எப்படி அப்படியே உள்ளது என்பதைக் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அந்த சிலையின் அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்கு கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில் தற்போது இல்லை என்பது தெரியவரும். பக்தர்கள் உபயோகித்து இருந்த சில அபிஷேகப் பொருட்களினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தொடைப் பகுதியில் முட்டிக்கு கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தெரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது  போலவும், எலும்புகள் தேய்ந்து போன நோயாளிகளின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவிற்கு அந்த சிலை பழுது அடைந்துள்ளது.  உடலின் பல பாகங்களில் சிறு சிறு பள்ளங்கள் போன்றவை தோன்றி உள்ளன. அந்த சிலை சொரசொரப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல காட்சி அளிக்கின்றது.  கூர்மையான பொருள் போல சில பகுதிகளில் எதோ நீட்டிக் கொண்டு உள்ளது . அந்த சிலையின் கால்கள் பலவீனமாகி  விட்டதினால் சிலையின்  கனத்தைத் தாங்க முடியாமல் எந்த நேரமும் அந்த சிலையின் கால்கள் உடைந்து விடுமோ என்று கூட ஒரு கால கட்டத்தில் பயந்தார்கள்.
அந்த நிலை முற்றிக் கொண்டே போகத் துவங்கியதும், பல பக்தர்களும் மக்களும் அந்த சிலையின் உருவத்தை கண்டு அஞ்சி தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்களை அனுப்பினார்கள். அதனால் கவலையுற்ற தமிழக அரசும் 1983 -84 ஆம் ஆண்டுகளில் பழனியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த சிலை மேலும் பழுதாகி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்மானித்து பல யோசனைகளைப் பரிசோதித்தது. அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு கட்டதில் யோசனை செய்யப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டப்  பின் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தப் பின் முதலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த அதே சிலையை அது முன்னர் இருந்த இடத்திலேயே வாய்க்க வேண்டும்.  ஆனால் அதற்குப் பதிலாக பழுதடைந்த  சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான சிலையை செய்து அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதான முன் உதாரணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் எந்த ஆலயத்திலும் நடைபெற்றது இல்லை.
கற்பாறைகளில் செய்யப்பட்ட சிலைகளைக் கூட  ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்டபோது தற்காலிகமாக அதே ஆலயத்தில் எங்காவது ஒரு பகுதியில் கொண்டு போய் வைத்து இருந்து , ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனங்கள் செய்தப் பின் (வெண்ணையில் சில மூலிகைகளை கலந்து பசைப் போல தயாரித்து அந்த சிலை முழுவதையும் பூசுவதே அந்த நிகழ்ச்சி) முதலில் இருந்த இடத்திலேயே சிலையை கொண்டு போய் வைத்து விட்டு அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து விடுவார்கள். ஆனால் மூலவர் சிலையையே மாற்றி அமைத்து உள்ளதான சரித்திரமே எந்த ஆலயங்களிலும் கிடையாது.
பழனியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் வடிவமோ இன்னும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டு விசேஷமான கலவையில் தயாரிக்கப்பட்டு வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினரின் உடல் நலத்தை மனதில் கொண்டு தெய்வாம்சம் கொண்ட 'போகரால்' செய்யப்பட்டு உள்ளது. அதை தயாரித்த விதமோ, அல்லது அந்த மூலிகைகளின் கலவையின் அளவோ எவருக்கும் தெரியாது. முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசைப் போல செய்து அதை அந்த சிலை மீது பூசி  வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது வேறு ஒரு மருத்துவக் குணம் கொண்டப் பசையாக மாறி வியாதிகளை தீர்க்கும் முறையில் மாறி விடுவதினால் அந்த சிலை மீது ஊற்றப்படும்  தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட  நோயும் விலகுகின்றன என மக்கள் கருதினார்கள். அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் உள்ளது என ஆலயம் வெளியிட்டு உள்ள புத்தகக் குறிப்பில் காணப்படுகின்றது.

ஒரு சாரரின் கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருட்களில் லட்சக்கணக்கான  சில கிருமிகள் உள்ளன என்றும், அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதினால் அதைப் பருகும் மக்களின் உடலில் உள்ள தீய அணுக்கள் மடிந்து வியாதிகள் வெளியேறுகின்றன என நம்பினார்கள். அந்த அபிஷேகப் பொருட்கள் பலநாட்கள் பத்திரமாக வைக்கப்பட்டு சித்த மருந்துகளாக பயன்  படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தானோ என்னவோ பழனி மலை அடிவாரங்களிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பல சித்த மருத்துவசாலைகள் பரவி உள்ளன என்பது வியப்பை அளிக்கும் செய்தியாக இருக்கவில்லை. பழனி தண்டாயுதபாணியே முதல் மருத்துவராக விளங்குவதினால் அந்த மூலவர் சிலையை மாற்றி அமைக்கலாம் என்ற யோசனையை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அந்த சிலை மேலும் பழுதடைந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அதற்கான வாழிமுறைகளை கண்டறிய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நியமித்தது. நல்ல கல்விமானும், பெரும் தெய்வ பக்தி மிகுந்தவருமான நீதிபதி சதாசிவம் அந்தக் குழுவின் தலைவராக  நியமிக்கப்பட்டார். அவர் ஐந்து உப குழுக்களை ஏற்படுத்தி பல்வேறு வழிகளையும் ஆராய்ந்தது பார்த்து அந்தப் பிரச்னைக்கு தீர்வு தரக் கூடிய வகையில் கருத்துக்களைத் தருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்தக் குழுக்களில் இருந்தவர்கள்:-
  • பெரிய மடங்களின் மடாதிபதிகள், சமயத் தலைவர்கள்
  • புகழ் பெற்ற ஸ்தபதிகள்
  • ஆகமங்களில் சிறந்து விளங்கியவர்கள்
  • பூசாரிகள் மற்றும் பண்டாரங்கள்
  • விஞ்ஞானிகள்
நானும் ஒரு விஞ்ஞானி என்பதினால் அந்த உப குழுவில் இருந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்று இருந்தேன். அந்த மூலவரின் சிலை எந்தப் பொருளினால் செய்யப்பட்டு உள்ளது என்பதைக் கண்டறியும் வேலை எங்களுக்கு தரப்பட்டு இருந்தது.  நாங்கள் உண்மையைக் கண்டறியும் குழுவில் இருந்ததினால் மூலவரின் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதை இன்னமும் என் வாழ்நாளில் கிடைத்த பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன். நாங்கள் அந்த சிலையின் அருகில் சென்று அதை ஆராய்ந்து பார்த்தோம். சிலையின் முகமோ எந்த விதமான சேதமும் அடையாமல் புத்தம் புதிய சிலையைப் போலவே காணப்பட்டதைக் கண்டு வியந்தோம். பூதக் கண்ணாடியைக் கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்றப் பொருள் போலவே தெரிந்தது. அடுத்து கழுத்துப் பகுதிகளையும் அதற்கு கீழே இருந்த உடல் பகுதிகளையும் ஆராய்ந்தபோது சிலையின் உடல் பாகத்தின்  நிலையைக் கண்டு திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் இருக்க உடலின் சில பாகங்கள் நீண்டு கூர்மையான பொருட்களைப் போல நீண்டு இருந்தது.  இரண்டு கால்களும் ஒரு மெல்லியக் குச்சி ஒரு பீடத்தில் நின்று உள்ளதைப் போல காணப்பட்டது. பலம் இழந்து போய் இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் அந்த சிலை விழுந்து விடக் கூடிய அபாய நிலையில் இருந்தது .
மூலவரின் முகமோ புத்தம் புதிதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டதுபோல அந்த சிலை பழுதடைந்து இருந்தது  அபிஷேகத்தினால் இருக்க முடியாது என்பது தெரிய வந்தது. அபிஷேகத்தினால் சிலை சிதைந்து உள்ளது என்பது உண்மை என்றால் முகம் மட்டும் எந்த மாறுதலும் அடையாமல் இருக்க, உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்றக் கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்து சிலை பழுதடிந்துள்ளது என்றக் கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது.
அடுத்த செய்தி, கர்பக் கிரகத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பண்டாரங்களுக்கும்  பழனியில் இருந்த சித்த வைத்தியர்களுக்கும் இடையே இருந்த தொடர்புப் பற்றியது. அவர்களிடையே இருந்திருந்த தொடர்ப்பினால் சில விஷமிகள் அவ்வப்ப்போது அந்த சிலையின் உடலை சிறிது சுரண்டி அதில் கிடைத்தப் பொருட்களை சித்த வைத்தியர்களுக்குக் கொடுத்து இருக்கலாம், அதைக் கொண்டு அவர்கள் சில மருந்துகளை தயாரித்து இருக்கலாம் என்பதினால்தான் சிலை பழுதடைந்து உள்ளது எனப் பரவலாக கூறப்பட்டது. ஏன் எனில் பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீர் எனப் பெரும் புகழ் பெற்றன. அந்த சிலை எதோ ஒரு வகையிலான கருங்கல்லினால் செய்யப்பட்டு உள்ளது போல தோற்றம் தந்தாலும் அதை விஞ்ஞான பூர்வமாக எங்களால் நிரூபிக்க முடியவில்லை என்பதின் காரணம் அந்த சிலையில் இருந்து விழுந்த எந்தப் பொடித் தூள்களுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த சீலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீர் அந்த சிலையின் மீதுள்ள நவபாஷண  பொருள் மீது ஏறி வருவதினால் ரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாக மாறி விடுகின்றது எனவும், அந்த நீரைப் பயன்படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனைகளை தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் நல்ல சந்தனத்தை பசையைப் போல அரைத்து அதை அந்த சிலையின் மீது பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலையின் மீதே இருக்குமாறு விட்டு வைத்து விட்டு மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம். அணுத்தூள்களை  சோதனை செய்யும் கருவியான 'பேர்க்கின் எல்மார் ௭௦௭' எனும் மிக நீளமான கருவியை திரவப் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் நிலையில் துல்லியமாக நிலை நிறுத்தி விட்டு அந்த சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் ஏதும் சந்தனத்துடன் கலந்து வருகின்றதா  என ஆராய்ந்து பார்த்தோம். என்ன ஆச்சர்யம். சிலை மீது இருந்து எடுத்த சந்தனப் பசையில் எந்தப் பொடிகளுமே கலந்து வரவில்லை என்றாலும், அந்த சந்தனப் பசை மருத்துவ குணம் கொண்டப் பசையாக மாறி இருந்ததைக் கண்டோம். பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து ஆராய்ந்தபோதும், ஒரே மாதிரியான முடிவையே தொடர்ந்து காட்டிக்  கொண்டு இருந்தது. ஆகவே இரவு முழுவதும் சிலை மீது நாங்கள் பூசி வைத்து இருந்த சந்தனப் பசை என்ன ரசாயன மாற்றம் அடைந்து இருந்தது என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு உணர்த்திய உண்மை என்ன என்றால், எந்த நவீன விஞ்ஞானக் கருவிகள் மூலமும் தெய்வீகத் தன்மைக் கொண்டப் பொருட்களை ஆராய முடியாது என்பதே.
அதன் பின் நாங்கள் எங்களுடைய அறிக்கையை தயாரித்து தலைமை செயலாளருக்கு அனுப்பினோம். அவரும் அவற்றுக்கு தேவையான மேற் குறிப்புக்களுடன் அதை அரசாங்கத்திடம் சமர்பித்தார். அந்த சிலையின் உருவ பாதுகாப்பைக் கருதி அந்த சிலைக்கு பயன்படுத்தி வந்த அபிஷேகப் பொருட்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து அதன்படித்தான் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தோம்.
அந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இன்னொரு வதந்தியும் நிலவிக் கொண்டு இருந்ததைக் கண்டோம். அந்த செய்தி என்ன என்றால்  சித்த முனிவரான போகர் பழனியில் தான் செய்து வைத்து இருந்த சிலையைப் போலவே  மூன்று சிலைகளை செய்ததாகவும், அவற்றில் இரண்டு சிலைகளை  பூமியில் எங்கேயோ மறைத்து வைத்து உள்ளதாகவும், தக்க சமயத்தில் தெய்வீகப் பிறவி ஒருவர் அதைக் கண்டுபிடித்து வெளியில் எடுத்து அந்நாள்வரை பயன்படுத்தி பழுதடைந்து உள்ள  சிலையை மாற்றி அமைப்பார் என்பதே.  இதன் மூலம் தெரிய வந்தது என்ன என்றால் இறைவன் நம்மிடம் கொடுத்து உள்ள பொருட்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் பல நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களால் இறைவனது படைப்புக்களை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. ''மனித குலத்துக்கு தான்  செய்து உள்ள சேவை, புராதான காலமாக வந்துள்ள  நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்பதே.
முருகனுடைய சிலையில் இருந்து  எந்தப்  பொருள் ரசாயன  மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீனக் கருவியினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற உண்மையை  பெரும்தன்மையுடன் ஒரு விஞ்ஞானி வெளிப்படுத்தி உள்ளார். கவிஞர் கண்ணதாசன்  எழுதிய ஒரு பாடல் இந்த தருமணத்தில்  நினைவில் நிற்கின்றது  '' சூனியத்தில் இருந்துகொண்டு, இந்த அகண்டத்தையே ஆண்டு கொண்டு, நம் கற்பனைகளுக்கு அப்பால் உள்ளவரே கடவுள். அவர் யார் , எப்படி இருப்பார் என்பதை புரிந்து கொண்டு யார் ஒருவர் அவரை உளமார உணர்கிறார்களோ அவர்களுக்கு அவர் காட்சி அளிப்பார்''

Friday, April 6, 2012

Sree Seetha kalyaanap paththirigai- Ammankudi aalayam

அம்மன்குடி ஸ்ரீ லஷ்மி நாராயணாப் பெருமாள்
சன்னதியில் எழுந்தருளி உள்ள
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின்
ஸ்ரீ ராமநவமி-- ஸ்ரீ சீதா கல்யாணம் 

சாந்திப்பிரியா

இன்றைக்கு எனக்கு கும்பகோணம் வட்டம் அம்மன்குடி ஸ்ரீ லஷ்மி நாராயணாப் பெருமாள் சன்னதியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஸ்ரீ ராமநவமி-- ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்சவப் பத்திரிகை வந்துள்ளது.
பல பக்தர்களுக்கு இந்த விவரம் கிடைக்காது என்பதினால் இதனை  அனைவரும் தெரிந்து கொண்டு இந்த புண்ணிய விழாவில்  பங்கேற்கலாம் என்பதற்காக  எனக்கு வந்த பத்திரிகையை அப்படியே வெளியிட்டு உள்ளேன். இதை ஒரு  தெய்வ சேவையாகவே கருதி இந்த   புண்ணியக் காரியத்திற்காக என்னால் ஆன இந்த சிறிய சேவையை செய்ய நினைத்து மஹோத்சவப் பத்திரிகையை அப்படியே வெளியிட்டு உள்ளேன்.  மற்றபடி இந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டு உள்ள விவரங்களுக்கோ அல்லது  காணிக்கைகளுக்கோ நான் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்கவில்லை. இதை நான் வெளியிட்டு உள்ளது  தெய்வ சேவை எனக் கருதிதான்.  மற்றபடி அது விளம்பர அல்லது வியாபார நோக்கத்திற்காக செய்யப்பட்டது அல்ல என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் இந்த முன்னுரையை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 
Thursday, April 5, 2012

Unforgettable incident

மறக்க முடியாத சில 
விசித்திர அனுபவங்கள் 
(உண்மை சம்பவம்)
 
சாந்திப்பிரியா

அது 2003 அல்லது 2004 ஆம் வருடம் இருக்கும் என்று நினைக்கின்றேன். நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்த தேவாஸ் எனும் இடத்தில் இருந்தோம் (இந்தூர் மற்றும் போபாலுக்கு இடையிலான ஊர்) . நான் அரசாங்கப் பணியில் இருந்ததினால் நாங்கள் அலுவலகத்தின் காலனியில்  தனி பங்களாவில் வீடு இருந்தது. வீடு  ஒதுக்குப் புறமாக இருந்ததினால் பக்கத்தில் பள்ளிக்கூடமும்  அதன் பெரிய விளையாட்டு மைதானமும் இருந்தது.  ரம்யமான சூழ்நிலை. அந்த வீட்டை இன்றும் மறக்கவே முடியாத  இயற்கை காட்சி. எங்கள்  பங்களாவை சுற்றி  நான்கு பக்கமும் பெரிய தோட்டம். பெரிய பெரிய கொய்யா, மாமரம், சபோடா என பலப் பழங்கள் மற்றும் பூத்துக் குலுங்கும் பலவிதமான  மலர் செடிகள்  என இருந்தன. அவற்றைத் தவிர நிறைய காய் கறிகள் மற்றும் சோளமும் போட்டு இருந்தோம்.  அவ்வப்போது சிறுவர்கள் வந்து  வேலிகள் மீது ஏறி பழங்களைப் பறிக்க முயலுவார்கள். அவர்கள் தொந்தரவு போதாது என்று  மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஊரின் அருகில் இருந்த கிராமத்து காட்டில் இருந்து  பத்து அல்லது பதினைந்து குரங்குகள் வழி தவறி  காலனிக்கு வந்து  எங்கள் இரண்டு மூன்று பங்களாக்களில் இருந்த தோட்டத்தை சூறையாடி வீட்டுச் செல்லும். அது முக்கியமாக சோளம் விளையும் காலத்தில் நடக்கும்.  சிறுவர்களைத் துரத்தலாம், ஆனால் குரங்குகளை துரத்த முடியுமா? அதுவும் ராக்ஷஸ அளவில் இருந்தக் குரங்குகள். பயந்து கொண்டு கதவை திறக்காமல் அவை செய்யும் சேட்டைகளை பார்த்துக் கொண்டு இருப்போம்.  ஐந்து அல்லது ஆறு  குரங்குகள் எங்கள் வீட்டின் முன்புற தோட்டத்து மூலையில் இருந்த சப்போட்டா பழங்களை பறித்து தின்றவாறு அந்த மரத்தின் அடியில் அமர்ந்து இருக்கும்.  இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. குரங்குகள் ஹனுமானின் அவதாரம் எனக் கருதுவதினால் மக்கள் அவாற்றை அடிக்க மாட்டார்கள். பயமுறுத்தித் துரத்துவார்கள். 
ஒரு நாள் விடியற்காலை நான் எப்போதும் போல தோட்டத்தில் பூக்களைப் பறிக்கச் சென்றபோது ஒரு பெரிய குரங்கு சப்போட்டா மரத்தடியில் மலர் செடிகளுக்குப் பின்னல் அமர்ந்து கொண்டு இருந்தது தெரிந்தது. அன்று அம்மாவாசை. வாராந்திர விடுமுறையும். ஆகவே அந்தப் பக்கம் செல்வதை தவிர்த்தேன். சரி அது தானாக சென்று விடும் என நினைத்தோம்.  அதனுடன் வரும் பட்டாளம் அன்று காணப்படவில்லை.  ஒரு வேலை அது வழிதவறி வந்துவிட்டதோ என்று நினைத்தோம்.  ஒரு மணி நேரம் ஆயிற்று, இரண்டு மணி நேரம்  ஆயிற்று. குரங்கு அவ்வப்போது சற்று எழுந்து அங்கும் இங்கும் பார்த்தது. மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.  இப்படியாக காலை பத்து மணி ஆனதும் மீண்டும் வாயிலில் சென்று பார்த்தபோது அதன் பின் அது அசைவதாகத் தெரியவில்லை. படுத்துக் கிடந்தது. ஓ...அது அங்கேயே தூங்கத் துவங்கி விட்டது போலும் என எண்ணிக் கொண்டு  தூரத்தில் நின்று கொண்டு அதை துரத்த அதன் பக்கத்தில் சப்தம் வரும் வகையில்  கல்லை வீசி எறிந்தேன். அப்போதும் அது அசையவில்லை. காலையில் தோட்டக்காரன் வந்ததும் அவனும் தூர இருந்து கத்திப் பார்த்தான், கல்லைவிட்டு எறிந்தான். ஆனாலும் அது அசையவில்லை. ஆகவே அவன் ஒரு பெரிய  துரட்டைக் கொண்டு வந்து (பூ, பழங்களைப் பறிக்க உதவும் பெரிய மூங்கில் கம்பு ) தூரத்தில் இருந்து அதை சீண்டிப் பார்த்தான். அப்போதும் அது அசையவில்லை. ஆகவே நாங்கள் இருவரும் அதன் அருகில் சென்று படுத்துக் கிடந்த குரங்கைப் பார்த்தோம். அது கண்களை மூடியபடி இறந்து கிடந்தது போல இருந்தது.  காலனியின் துப்புரவு செய்பவர்களை அழைத்து அதைப் பார்க்கக் கூற அவர்கள் அது இறந்து விட்டது என்பதை உறுதி செய்தார்கள். அடுத்து என்ன செய்வது என கவலை அடைந்தோம். நடந்தது நல்லதா கேட்டதா எனத் தெரியாமல் மனம் அமைதி இல்லாமல் தவிக்க உடனே நான்  என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு பண்டிதரிடம் சென்று  அது பற்றிக் கேட்டோம். அவரோ அது நல்ல சகுனமே என்றும், மூதையார் நம் வீட்டில் வந்து மரணம் அடைந்து உள்ளார் என்பதே அதன் அர்த்தம் என்றும்,  அவர்கள் நம்மைக் காப்பற்றி வருகிறார்கள் என்று அர்த்தம் என்று கூறினார். ஆனால் அதை உரிய முறையில்  அடக்கம் செய்யுமாறு கூறினார். 
அடுத்தக் கவலை, அதை எப்படி எடுத்துப் போவது? எங்களிடம் நான்கு சக்கர வாகனம் கிடையாது. ஆகவே அதை எப்படி எடுத்துக் கொண்டு போவது?  எடுத்துக் கொண்டு பொய் எப்படி அடக்கம் செய்வது?  குரங்கு மரணம் அடைந்ததோ எங்கள் வீட்டுத் தோட்டத்தில்.  பொது இடம் அல்ல.  எங்கள் அலுவலகத்து தொழிலாளிகளும், அந்த ஊர் மக்களும்  அதிக கடவுள் ஈடுபாடு கொண்டவர்கள். அதுவும் ஹனுமார் பக்தி அங்கெல்லாம் அதிகம்.  காலனியிலோ அடிக்கடி தொழிலாளிகள் ஏதாவது  விழாக்களையும், பஜனைகளையும் செய்து கொண்டு இருப்பார்கள்.  நாங்கள் எதையாவது செய்யப் போய் அதை பெரிது படுத்தி விடுவார்கள் என பயந்தோம்.  ஏற்கனவே ஒரு முறை  தொழிலாளிகளின் வீடுகளின் பின்புற வழியில் காடாய் மண்டி இருந்த  செடிகளை வெட்டி காலனியை சுத்தப்படுத்தப் போன வேலை ஆட்கள் துளசி செடிகளை வெட்டிவிட்டார்கள் என பெரிய ரகளையே செய்து விட்டார்கள். ஆகவே என்ன செய்வது என முழித்தபோது பணம் கொடுத்தால் அதை துப்புரவு  தொழிலாளிகள் மரியாதையுடன் எடுத்துப் போய் திவசம் செய்து அடக்கம் செய்து விடுவார்கள் என்று காலனி மேற்பார்வையாளர்  கூறினார். ஆகவே நாங்களும் அதற்கான பணத்தை  அவர்களிடம் கொடுக்க அவர்கள் ஒரு இறந்து போன மனிதருக்கு செய்ய வேண்டிய முறையில் அந்தக் குரங்கை பாடை கட்டி, அதன் மீது வேட்டியைக் கட்டி, சிவப்பு நிறத் துணியை போர்த்தி மணி அடித்துக் கொண்டும், சங்கை ஊதிக் கொண்டும் போய்  சுடுகாட்டில் தகனம் செய்து விட்டு வந்தார்கள். பல நாட்கள் நாங்கள் அந்த நிகழ்ச்சியால் மனம் சஞ்சலம் அடைந்து இருந்தோம். சிலர்  மூதையார் உங்கள் வீட்டில் குரங்காய் வந்து மரணம் அடைந்து இருக்கின்றார், ஆகவே  அது நன்மைக்கே என்றார்கள்.  சிலர் ஹனுமாரின் தூதுவரே அங்கு வந்து  தாம் மரணம் அடைய வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்து மரணம் அடைந்து  உள்ளார் என்றாகள். 


உண்மையான படம் அல்ல. குரங்கு இறந்து கிடந்த நிலையைக் 
காட்டும்  அதைப் போன்றப்  படம் இது.   
 
நாங்கள் இருந்த ஊரில் இருந்து சென்னைக்கு  செல்ல வேண்டும் என்றால் போபாலுக்குச் சென்று ரயிலைப் பிடிக்க வேண்டும். அங்கு சென்று ரயில் பிடித்தாலும் சென்னை செல்ல மூன்றாவது  நாள் ஆகி விடும். இந்தூரில் இருந்தும் வாரம் ஒரு முறை மட்டுமே சென்னைக்குச் செல்ல ரயில் உண்டு.  ஆகவே வாகன வசதிகள் அதிகம் இல்லாததினால், நான் என்னுடைய தாயார் மற்றும் தந்தை இருவரும் இறந்தபோது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் இரண்டு நாட்கள் பிறகே செல்ல முடிந்தது.  ஆகவே அவர்களே  ஒரு குரங்கின் உருவில் வந்து என் வீட்டில் இறந்து தமக்கு இறுதிக் காரியம்  செய்ய வைத்துக் கொண்டு உள்ளார்கள் என்றும் அதன் மூலம் எங்கள் மீது அவர்களுக்கு இருந்த அன்பைக் காட்டிய  சம்பவம் அது என்று ஒருவர் கூறினார். அதை நம்புவதை விட வேறு வழி இல்லை என்பதினால் அனைத்தும் நன்மைக்கே என அதை ஏற்றுக் கொண்டு மனம் சாந்தி அடைந்தோம்.  அதன் பின் எங்களுக்கு வாழ்கையில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படவில்லை. மிக நல்ல முறையில் பணியில் இருந்து ஒய்வு பெற்று பெங்களூருக்கு வந்து தங்கத் துவங்கி விட்டோம். 
இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் அந்தக் காலனியில்   இருபத்தி ஐந்து  வருட காலத்தில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம்- குரங்கு யாருடைய வீட்டிலாவது சென்று இறந்தான  சரித்திரமே அதுவரைக் கிடையாது. அந்த சம்பவம் எங்கள் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான அனுபவமாகவே இருந்தது.  அதற்க்கு முன்னரும் எங்களுடைய வாழ்க்கையில் யாருக்குமே நடந்திராத,  அனைத்திலும் நாங்களே முதல் பலி ஆடுகளான கதையாக பல விசித்திர நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தன  என்பது ஏன் என்பதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அவை பல விசித்திர அனுபவங்கள். மறக்க வேண்டியவை. ஆனால் அதற்குப் பிறகு நடந்தது  அனைத்துமே  நல்லதற்காகவே நடக்கின்றது என்பதை பின்னர் புரிந்து கொண்டோம். 


இந்த சம்பவத்தை இத்தனை ஆண்டுகள் பொறுத்து  இன்று ஏன் எழுதினேன் என்றால், இன்றும்  ஒரு விசித்திர நிகழ்ச்சியைப் பார்த்தோம்.  நாங்கள் தற்போது உள்ள வீட்டின் பக்கத்து இடம் ஒரு ஆலயம். அதன் பக்கத்தில்  பெரிய வெற்று (காலி) மைதானம் உள்ளது .  இன்று காலை சுமார் பத்து மணி இருக்கும்.  அந்த காலி இடத்தில் பண்டிதர் சிறு சிதைப் போல கட்டைகளை அடுக்கிக் கொண்டு இருந்தார். வெள்ளித் துணியும், நெய், மஞ்சள், குங்குமம் போன்றவை இருந்தன.   அதைப் பார்த்த எங்களுக்கு வினோதமாக இருந்தது. எதற்காக சுடுகாட்டில் வைக்கப்படும் சிதைப் போல அங்கு அதை வைக்கின்றார் என்பதை பார்த்துக் கொண்டே இருந்தோம். சற்று நேரத்தில் அங்கு வந்த ஒருவர் ஒரு பெரிய நாகப்பாம்பை கொண்டு வந்து தந்தவுடன், பண்டிதர் அந்த சிதையில் அந்தப் பாம்பை வைத்து எப்படி இறந்தவரை தகனம் செய்வார்களோ அப்படியே அதன் மீது துணிகளை போட்டு, கட்டைகளை அடுக்கி, வெள்ளைத் துணியைப் போர்த்தி, மஞ்சள், குங்குமத்தைக் கொட்டி, கற்பூரத்தை போட்டு கொளுத்தி கட்டைகளாய் எறிய விட்டு அதை தகனம் செய்தார். அந்தப் பாம்பு சுமார் மூன்று அடி நீளம் இருக்கும். ஏறிய விடும் முன் கட்டை மீது சுத்தமான நெய்யை ஊற்றினார்.  அந்தப் பண்டிதரே அனைத்துக் காரியத்தையும் செய்தப் பின் குளிக்கச் சென்றார். எந்தப் பாம்பு ஆனாலும் அடித்து எரிந்து விடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட மரியாதையுடன் நாகப் பாம்பை தகனம் செய்வதை முதன் முறையாக எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பார்த்தோம்?  கடந்த ஆறு ஆண்டில் பெங்களூரில்  நாங்கள் பார்த்த  இந்த முதல் சம்பவமும்  எங்களுக்கு ஒரு விசித்திரமான அனுபவமாகவே இருந்தது. அதை மாடியில் இருந்து புகைப்படம் எடுத்தேன். சரியாக வரவில்லை. இருந்தாலும் அதை பிரசுரித்து  உள்ளேன். இதைப்  போல  தகனத்தை  யாராவது பார்த்து இருக்கின்றீர்களா?Monday, April 2, 2012

Tirupparamkundram Temple, Madurai

திருப்பரங்குன்ற வரலாறு 
 
(தமிழ் பொழிபெயர்ப்பு  :   சாந்திப்பிரியா)

(Read the Original Article in English in :


மதுரை ரயில் நிலையத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். சுப்பிரமணியர் தான் தங்குவதற்கு புனித இடமாக தேர்ந்து எடுத்துக் கொண்ட ஆறு இடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் மகத்துவம் என்ன என்றால் இங்குதான் அவர் இந்திரனின் மகளான தெய்வயானையை மணந்து கொண்டார். பராசர முனிவரின் ஆறு புதல்வர்களும் ஒரு சாபத்தின் விளைவாக சரவணா பொய்கை நதியில் மீனாகப் பிறந்து இருந்தார்கள். அவர்கள் சாப விமோசனம் பெற வேண்டும் என்றால் சுப்பிரமணியரிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறப்பட்டு இருந்தார்கள். அவருடைய தரிசனம் கிடைத்ததும் அவர்கள் சாப விமோசனம் பெறுவார்கள் என்றும் அதனால் அவர் அசுரனான சூரபத்மனை அழித்தப் பிறகு திருப்பரங்குன்றத்துக்கு வருவார் எனத் தெரிந்ததும் அவருடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்து அவர்கள் அங்கு காத்துக் கிடந்தார்கள்.
தம்முடைய  கடமையான சூரபத்ம சம்ஹாரத்தை திருச்செந்தூரில் முடித்துக் கொண்டப் பிறகு அவனால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு இருந்த தேவர்களை விடுவித்து விட்டு அவர்களுடன் சேர்ந்து சுப்பிரமணியர் திருப்பரங்குன்றத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் அங்கு வந்து சேர்ந்ததும் பராசர முனிவரின்  மைந்தர்கள் அவரை அன்புடன் வரவேற்றார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் அங்கு தங்க முடிவு செய்ததுடன் விஸ்வகர்மாவை அழைத்து தனக்கும் தன்னுடன் வந்துள்ள தேவர்களுக்கும் தங்குவதற்குத் தேவையான அற்புதமான இடத்தை கட்டுமாறு ஆணையிட்டார். அது மட்டும் அல்ல அந்த இடத்தை சுற்றி நல்ல சாலைகளையும் அமைக்குமாறுக் கூறினார். 

தங்களை சூறை ஆடிய சூரபத்மனை சுப்பிரமணியர் அழித்ததின் நன்றிக் கடனாக அவருக்கு தனது மகளான தேவசேனாவை திருமணன் செய்து கொடுக்க இந்திரன் ஆசைப்பட்டார். அங்கு கூடி இருந்த பிரும்மா மற்றும் விஷ்ணு போன்றவர்களிடம்  அதை அவர் தெரிவிக்க அவர்களும் அதை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அது குறித்து அவர்கள் சுப்ரமணியரிடம் கூறியவுடன் அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே இந்திரன் தனது மனைவி இந்திரியாணி மற்றும் மகள் தேவசேனாவை அழைத்து வருமாறு தூதுவர் ஒருவரை அனுப்பினார். திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த திருமணத்திற்கு சிவனும் பார்வதியும் வந்து சுப்ரமணியருக்கு வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்கள். அது முதல் அந்த இடம் புகழ்பெற்ற தலமாயிற்று.
அதற்கு முன்னர் சுப்பிரமணியர் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும்  சுந்தரவல்லியும் தங்களுக்கு சுப்பிரமணியருடன் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டு சரவணா பொய்கைக்கு வந்து தவம் இருந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அமிருதவல்லியிடம்  ''நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன்' என்றார். அது போலவே இளையவளான சுந்தரவல்லிக்கும் காட்சி தந்தார். அவளும் சிவ முனி என்ற முனிவரின் மகளாகப் பிறந்து நம்பி என்ற வேடனால் வளர்க்கப்பட்டு சுப்ரமணியரை மணந்து கொண்டார்.

அமிருதவல்லி ஒரு சிறிய பெண்ணாக வடிவெடுத்து மேரு மலையில் இருந்த இந்திரனிடம் சென்று 'நான் மகா விஷ்ணுவின் மகள் ஆவேன். ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் உங்களிடம் தந்து உள்ளார் என்பதினால் இங்கு வந்தேன் என்றாள். அதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் யானை ஐராவதரை வரவழைத்து அந்தக் குழந்தையைப் பாதுகாக்குமாறுக் கூறினார். அந்த யானையும் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவளை எடுத்து வளர்த்தார். அதனால்தான்  யானையினால் வளர்க்கப்பட்ட அவள் தெய்வ யானை  என்றப  பெயரைப் பெற்றாள். அவளுக்கு திருமண வயது ஆயிற்று. சூரபத்மனை அழித்துவிட்டு சுப்பிரமணியர் திரும்பியதும் அவருடன் அவளுக்கும் திருமணம் ஆயிற்று.