Tuesday, July 31, 2012

Samba Puranam- 6


பாகம் - 6

உடல் பொலிவை இழந்தாலும் மன திடத்தை இழக்காத ஸாம்பாவும் உடனே மித்திர வானத்துக்குக் கிளம்பிச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பன்னிரண்டு வருடங்கள் தவம் இருந்து வர, சில காலத்துக்குப் பிறகு சூரியன் அவனுக்குக் காட்சி அளித்து அவன் சாப விமோசனம் அடைய வேண்டுமானால் பல்வேறு கடவுளரின் நாமாக்களை ஜபிக்குமாறு கூறினார். அதன்படியே அந்த நாமங்களை உச்சரித்து வந்த ஸாம்பா சூரியன் கூறிய தினத்தன்று சந்திரபாகா நதியில் மூழ்கி ஸ்நானம் செய்து, சாபம் நீங்கி, மீண்டும் பழைய இளமையையும் பொலிவையும் திரும்பப் பெற்றான். அப்போது அவன் முன்னால் தாமரை மீது நின்ற  நிலையில் சூரிய பகவான் காட்சியளித்தார். தாமரை இதழில் நின்ற நிலையில் எழுந்தருளிய சூரியனாரின் சிலையைக் கொண்டு போய் தனக்கு சாப விமோசனம் தந்து தனது பழையப் பொலிவைப் பெற அருள் புரிந்த சூரியனாருக்கு ஒரு ஆலயத்தை எழுப்ப ஏற்பாடுகளை செய்தான். ஆனால் அவன் கொண்டு சென்ற சிலையை வைத்து ஆலயத்தை எழுப்ப அங்கிருந்த பிராமணர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதினால், அவன் மீண்டும் மேகா தேசத்துக்கு சென்று அங்கிருந்து பல அந்தணர்களை அழைத்துக் கொண்டு வந்து ஆலயத்தை நிர்மாணித்தான்'. (தற்போது ஒரிசா மானிலத்தில் கோனார்கில் உள்ள சூரியனின் ஆலயம் ஸாம்பாவினால் கட்டப்பட்ட ஆலயம். தற்போது சந்திரபாகா எனும் நதி இருந்த இடத்தில் ஒரு சிறிய குளமே உள்ளதாகவும், அது புனிதமாகக் கருதப்பட்டு பக்தர்கள் நீராடி சூரிய பகவானை வழிபடும் குளமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள். முதலில் ஸாம்பா ஸ்தாபித்த ஆலயம் சிறிய அளவில் இருந்தது. அந்த காலத்தில் அப்படிப்பட்ட வழிபாட்டுத் தலங்களை ஆலயம் என்றே அழைப்பார்கள். ஆகவே அந்த ஆலயத்தை பின் நாளில் அந்த ஆலயத்தின் மகிமையைக் கேள்விப்பட்ட நரசிம்ம தேவா எனும் மன்னனே பெரிய ஆலயமாக கட்டினார். இந்த செய்தியில் இன்னொரு விசேஷமும் உள்ளது. சூரியனாரின் அருளைப் பெற ஸாம்பா பன்னிரண்டு ஆண்டுகள் தவத்தில் இருந்தான். நரசிம்ம தேவா அதை பன்னிரண்டாவது ஆண்டு ஆகியும் கட்டி முடிக்க முடியாமல் இருந்ததினால் அதற்கான காலக் கெடுவை வைத்து அதை முடிக்க ஆணையிட்டபோது அதை முடித்து வைக்க பன்னிரண்டு வயது சிறுவன் முன் வந்தானாம். அவனை கடவுளே அனுப்பி உள்ளாரோ என நம்பிய மன்னன் அவனுக்கு அனுமதி அளிக்க அந்த சிறுவன் தன கையில் ஒரு கல்லை எடுத்துப் போய் ஆலய உச்சிப் பகுதியில் கட்டிடப் பணி நடைபெற்ற இடத்தில் கொண்டு வைக்க, ஆலய பணிகள் தடங்கல் இன்றி நடைபெறத் துவங்கியனவாம். ஆலயம் முடிந்ததும் அந்த சிறுவன் ஒருநாள் கடல் கரையில் இறந்து கிடந்தானாம். ஆகவே அவன் தனது இனத்தவரைக் காப்பாற்றுவதற்காக ஆலயம் கட்டி முடிந்தவுடன் அதற்கு காணிக்கையாக தன்னை பலியாகத் எடுத்துக் கொள்ளலாம் என்று வேண்டிக் கொண்டதினால் அவன் கடல் அலையில் சிக்கி இறந்திருக்க வேண்டும் என்றே நம்புகிறார்கள். ஆனால் அவன் இறந்து கிடந்ததின் காரணமே யாருக்கும் தெரியவில்லையாம். அது போலவே பன்னிரண்டாம் ஆண்டு முடிந்த தறுவாயில் ஆலயமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.  ஆகா அனைத்திலும் பன்னிரண்டு என்றே உள்ள அவை அனைத்தையுமே அதிசய செய்தியாகவே கூறுகிறார்கள். மேகா தேசத்தில் இருந்து வந்தவர்கள் சூரியனை வழிபாட்டு வந்தப் பிரிவினர். அவர்கள் பிராமணர்களுக்கு இணையானவர்கள். அவர்களே பின் நாளில் சூரிய வழிபாட்டை ஊக்குவித்து வளர்த்தவர்கள். ஸாம்பா கட்டியதாக கூறப்படும்  ஆலயத்தை கருப்பு ஆலயம் என்கிறார்கள் - சாந்திப்பிரியா ).
இப்படியாகக் கதையைக் கூறி முடித்த வசிஷ்டரை பிரகுத்பலா வணங்கி எழுந்தான் என்று சூதக முனிவர் சௌனக முனிவருக்குக் கூறியதும், அவர் கேட்டார் ' சூதக மாமுனிவரே, நீங்கள் கூறியதில் இன்னொரு சிறு பகுதியும் விளக்கபடாமல் உள்ளதே. சிவபெருமானிடம் இருந்து வரம் பெற்ற கிருஷ்ணருக்கு மகனாகப் பிறந்த ஸாம்பா இரண்டு காரியங்களை முடிக்க வந்தவன் . முதலாவது ஸாம்பா மூலம் சூரிய பகவானின் மேன்மை உலகிற்கு வெளிப்பட்டது. இரண்டாவது, கிருஷ்ணர் ஸ்தாபித்த வம்சம், அவர் வழியினாலேயே அழிந்தும் விட வேண்டும் என்று கூறினீர்களே. அப்படி என்றால் இரண்டாவது யாரால் நிகழ்ந்தது, ஸாம்பாவினாலா என்பதையும் விளக்குவீர்களா?' என்று கேட்க சூதகர் அதையும் கூறினார் .
'மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டார்கள். கிருஷ்ணரும் துவாரகைக்கு வந்து விட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் யாதவர்கள் தன்னிலை மறந்து ஆடினார்கள். நித்தம் ஆடலும் பாடலுமாக பொழுதைக் கழித்துக் கொண்டு உல்லாசமாக இருந்தார்கள். தர்ம நெறி அவர்களிடம் காணப்படவில்லை. நெறி தவறி வாழ்ந்து வரத் துவங்கினார்கள். இந்த உலகம் உல்லாசமாக வாழ்வதார்க்கே என்று எண்ணினார்கள். அவற்றை எல்லாம் பார்த்த கிருஷ்ணர் அதனால் கவலைக் கொண்டார். எந்த தர்ம நெறிக்காக தாம் அத்தனை காலம் பாடுபட்டோமோ அத்தனையும் இந்த யாதவர்களினால் வீணாகி வருகிறதே.  அவர்களை வளரவிட்டால் தர்ம நெறியையே அழித்து விடுவார்களே, ஆகவே நம் காலத்திலேயே நாம் ஸ்தாபித்த வம்சமும் அழிந்து போகட்டும் என்று எண்ணலானார். அதற்கு ஏற்றார்போல ஒரு நிகழ்ச்சி முன்னர் நடந்து இருந்தது .
கிருஷ்ணரின் வம்சம் அழியும் காலம் கனிந்து வந்தபோது, கிருஷ்ணருக்கு முன்னொரு சமயம் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. துவாரகாவிற்கு விஸ்வாமித்ரர், வசிஷ்டர், துர்வாசர் போன்ற முனிவர்கள் ரிஷி முனிவர்களுடன் வந்தார்கள். அப்போது யாதவர்கள் ரிஷி முனிவர்களை கேலி செய்தவண்ணம் இருந்தார்கள். அவர்களின் சக்தியை சோதனை செய்ய விரும்பிய ஸாம்பா மற்றும் பிற யாதவர்கள், ஸாம்பாவை ஒரு கர்பிணி போல வேடம் தரிக்க வைத்து ரிஷி முனிவர்களிடம் சென்று இந்த கர்பிணிக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணாக இருக்குமா பெண்ணாக இருக்குமா என்று கேட்டு சிரிக்க அதைக் கேட்ட ரிஷி முனிவர்கள் கோபம் கொண்டு அவன் வயிற்றில் இருந்து வெளியாவதே அவர்கள் வம்சத்தின் அழிவுக்குக்  காரணமாக இருக்கும் என்று அவர்களுக்கு சாபம் கொடுத்தார்கள். அதன் பயனாக போலி வேடம் அணிந்திருந்த ஸாம்பாவின் வயிற்றுப் பகுதியில் இருந்து ஒரு உலக்கை வெளியில் விழ பயந்து போன அவர்கள் அந்த உலக்கையை தூள் தூளாகி கடலில் வீசி விட்டு அங்கிருந்துச் சென்று விட்டார்கள். ஆனால் அந்த துண்டுகள் பின்னர் அந்தக் கடற்கரையில் பெரிய பெரிய கூர்மையான இதழ்களைக் கொண்ட செடியாக வளர்ந்து இருந்தது.
அந்த நினைவு கிருஷ்ணருக்கு ஏற்பட அவர் ஒரு கேளிக்கைக்கு ஏற்பாடு செய்து அதற்கு அனைத்து யாதவர்களையும் அழைத்துக்  கொண்டு   அதே கடற்கரைக்கு அருகில் தங்கினார். அன்று இரவு  யாதவார்கள் நன்கு குடித்துவிட்டு கும்மாளம் போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குள் திடீர் என சண்டை மூண்டு விட்டது. வாய் சண்டை கைகலப்பாக மாறி விட அவர்கள் அடித்துக் கொள்ளத் துவங்கினார்கள். அந்த கடற்கரையில் ஸாம்பாவின் வயிற்றுப் பகுதியில் இருந்து விழுந்திருந்த உலக்கையின் தூளினால் ஏற்பட்டு இருந்த  செடியைப் பெயர்த்து எடுத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ள அனைவரும் படுகாயம் அடைந்து விழுந்து கிடந்தது மடிந்தார்கள். ஆக இப்படியாக யாதவ குலம் அழிவதற்கு ஸாம்பாவே   காரணமாக இருந்து கிருஷ்ணர் சிவபெருமானிடம் இருந்து பெற்று இருந்த வரத்தை முடித்து வைத்தார்'.
அந்தக் கதையா சூதக முனிவர்  கூறி முடித்ததும் அங்கு அமைதி நிலவ, அனைவரும் அவரை வணங்கி விட்டு எழுந்து சென்றார்கள்.

ஸாம்பா புராணம் முற்றியது

Samba Puranam- 5


பாகம் - 5

நாரதர் கூறினார் 'கிருஷ்ணா, இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அதுவரை நீ இதைப்  பற்றி யாரிடமும் பேசாதே. பேசினால் அவர்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள்' என்று கூறி விட்டு சென்றார். சில நாட்கள் சென்றன. கிருஷ்ணர் தனது பதினாறாயிரம் மனைவிகளுடனும் ஜலக்கிரீடை செய்து கொண்டு இருந்தார். அந்த இடம் இறைவதாக மலை என்பதின் அடிவாரத்தில் இருந்தது. பட்ஷிகள் ஆனந்தமாக ரீங்காரம் செய்து கொண்டு இருந்தன. அவருடைய மனைவிகள் அற்ப்புதமான நகைகளை அணிந்து கொண்டு வந்திருந்தார்கள். நீலோத்பலம் மற்றும் தாமரைப் போன்ற மலர்களின் வாசனையும் கமகமவென மூக்கைத் துளைத்தபடி இருந்தன. அனைவரும் மது மயக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் அங்கு வருவதற்கு முன்னர்தான் வேண்டும் என்றே நாரதர் அவர்கள் பருகி இருந்த பானத்தில் மயக்க மதுவைக் கலந்து கொடுக்க ஏற்பாட்டை செய்திருந்தார். அவர்கள் அனைவரும் கிருஷ்ணரை சுற்றி சுற்றியே வந்து கொண்டு தன்னை மறந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் முகங்களில் காமம் வழிந்தோடியது.
அந்த நேரமே சரியான நேரம் என்பதை உணர்ந்து கொண்ட நாரதர் ஓடோடிச் சென்று ஸாம்பாவிடம் அவர் தந்தை அவனை உடனே அந்த இறைவதாக மலை அடிவாரத்துக்கு வரச் சொன்னதாகக் கூறினார். அவனும் அதை அப்படியே நம்பிக் கொண்டு  இறைவதாக மலை அடிவாரத்துக்குச் செல்ல  அங்கு தண்ணீரில் ஜலக் கிரீடை செய்து கொண்டு உடலோடு ஒட்டி நனைந்து இருந்த துணியில் அங்கங்கள் பளீரெனத் தெரியும் வகையில் நின்றிருந்த தனது சின்னத் தாயார்களைப் பார்த்தான். அவன் மனது படபடத்தது. அழகான உருவங்களைக் கண்டவன் மனதில் காம உணர்ச்சி எழுந்தது. அதே சமயம் அவர்களும் அங்கு வந்திருந்த ஸாம்பாவைப் பார்த்து அவன் அழகில் மயங்கி காம உணர்வு அதிகரிக்க  நின்றார்கள்.  தாம் கிருஷ்ணருடன் இருப்பதையும் மறந்துவிட்டு ஸாம்பாவை நோக்கிப் பார்த்தபடி வெட்கம் மறந்து உடல் அழகை வெளிப்படுத்தியபடி நின்றார்கள். சில நிமிடங்கள் கழிந்தன. அனைவரும் ஒன்றுமே கூறாமல் வேறு எங்கோ பார்த்தபடி  நின்றுள்ளதைக் கவனித்த கிருஷ்ணரும் அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த திசையை நோக்கினார்.  ஸாம்பாவும் தனது மனைவிகளும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டு காம விரசத்துடன் நிற்பதைப் பார்த்தார்.  அவ்வளவுதான், அவர் மனம் கொதித்தது. நாரதர் கூறியது உண்மையே  என்று மனம் எண்ண, உடனே அவர் ஸாம்பாவைப் பார்த்து உரத்தக் குரலில் அவனுக்கு சாபமிட்டார். ' தாயைக் கூற மயக்கும் உனது அழகு அவர்களையும் கற்பிழக்கச் செய்து விட்டது. ஆகவே உன் உடல் முழுதும் குஷ்ட நோய் பரவி நீ பார்க்கவே விகாரமாக ஆகக் கடவது'. அடுத்து தனது மனைவிகளைப் பார்த்து அவர்களுக்கு சாபமிட்டார் ' கட்டிய கணவனுக்கே துரோகம் செய்த நீங்கள் நரகத்துக்குச் செல்வீர்கள்'.
அடுத்த நிமிடமே அனைவரும் தம் நிலைக்கு வந்து, அவமானம் தாங்காமல் தங்களுடைய உடலை  கைகளால் மறைத்துக் கொண்டு மறைவிடத்துக்கு ஓடினார்கள். தன நிலைக்கு வந்த ஸாம்பா குரூபியானான். உடல் முழுவதும் குஷ்டரோக நோய் அவனைப் பற்றி இருந்தது. பார்க்கவே விகாரமாக ஆனவன் கண்ணனின் காலடியில் விழுந்து தெரியாமல் நடந்துவிட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்டான். தனக்கு பாப விமோசனம் தருமாறு தந்தையை வேண்டிக் கொள்ள அவரும் அவனை சந்திரபாகா நதிக்கரையில் இருந்த மித்திர வனப் பகுதிக்குச் சென்று சூரியனை வேண்டி தவம் இருந்து சாப விமோசனம் பெறுமாறுக் கூறினார்.
......தொடரும்

Samba Puranam- 4


பாகம் -4 

பிரும்மாவின் மானசீகப் புதல்வராக இருந்தவர் நாரத முனிவர். அவர் எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி செல்வதுண்டு. கைலாசம், வைகுண்டம், பித்ருலோகம், பூலோகம் , பிரும்ம லோகம், சூர்யா லோகம் என அனைத்து லோகங்களுக்கும் தங்கு தடை இன்றி செல்வார். தேவலோகத்திலும் இருப்பார். பூலோகத்திலும் மன்னர்களுடன் இருப்பார்.
அப்படிப்பட்ட சக்தி பெற்ற நாரத முனிவர் ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க பூலோகத்தில் துவாரகாபுரிக்குச் சென்று இருந்தார். அங்கு ஸாம்பாவும் இருந்தான். ஸாம்பாவிற்கு தான் அதி சுந்தரமாக இருப்பதான எண்ணம் அதிகம் உண்டு. அந்த கர்வத்தினால் அவன் யாரையும் சட்டை செய்ததில்லை. ஆகவே தேவ முனிவரான நாரதர் அரண்மனைக்கு வந்ததும் எளிமையான தோற்றத்தில் இருந்த அவருடைய உருவைக் கேலி செய்தவாறு இருந்தான். கிருஷ்ணரே தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்று நாரதருக்கு அர்க்கியம் கொடுத்து உபச்சரித்து பூஜை செய்தபோதும் , ஸாம்பா அகம்பாவமாக இருந்தபடி தனது இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. நாரத முனிவரைப் பார்த்தும் அவரிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மாறாக அகம்பாவத்துடன் தன் அழகைக் குறித்து பக்கத்தில் நின்று கொண்டு இருந்த மன்னனிடம் எதோ கூறிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட நாரதருக்கு ஒரு பக்கம் வருத்தம் வந்தாலும், அவனது  தந்தையின் எதிரிலேயே பெரியோர் என்ற மரியாதை கூட இல்லாமல் தன்னை அவமானப் படுத்தியது கோபத்தை உண்டாக்கியது. கிருஷ்ணருக்கு எதிரிலேயே அவன் அப்படி நடந்து கொண்டதின் மூலம் அவன் தனக்கு மட்டும் அல்ல கிருஷ்ணருக்கும் அல்லவா அவமானத்தை தேடித் தந்து விட்டான். ஆகவே அவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
நாரதர் அனைவரிடமும் நலம் விசாரித்ததும் கிருஷ்ணரை தனிமையில் அழைத்துச் சென்று பேசத் துவங்கினார். நாரதர் கிருஷ்ணரிடம் கூறினார் 'கிருஷ்ணா, நான் இப்போது கூறப்போவது உனக்கு சரியாக இருக்காது. ஆனாலும்  உனக்கு ஒரு விஷயத்தைக் கூறவே நான் இங்கு வந்தேன். உனக்கு பதினாறாயிரம் மனைவிகள் இருக்கிறார்கள். உன் அழகிற்கு இணையானவர்கள் அவர்கள அல்ல என்றாலும், சுந்தரியானவர்கள் அவர்கள். ஆனால் இத்தனை அதி சுந்தர தோற்றத்தைக் கொண்ட உன்னை மறந்து, ஸாம்பாவுடன் நீ இருக்கும்போது உன்னைப் பார்க்காமல் ஸாம்பாவின் அழகை அல்லவா ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது முறையான செயலாக எனக்குத் தோன்றவில்லையே. அது போகட்டும் என்றால் ஸாம்பாவும் வேண்டும் என்றே அவர்களைக் கவரும் விதமாக, அவர்கள் தனது சிறிய தாயார்கள் என்றும் கருதாமல் வேண்டுமென்றே அவர்கள் எதிரில் சென்று நின்று கொண்டு  இருந்தவண்ணம் தனது அழகை அவர்களுக்கு காட்டிக் கொண்டு நிற்பதும் சரியாகப் படவில்லையே' என்றார். நாரதரின் மனதில் இருந்தது என்ன என்றால் எப்படியாவது கிருஷ்ணரின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி ஸாம்பாவுக்கு பிரச்சனையை உண்டாக்கி விட்டால், அவன் தக்க பாடம் பெறுவான் என்பதே.
நாரதர் கூறியதைக் கேட்ட கிருஷ்ணரும் நாரதர் கூறியதை சற்றும் ஆராய்ந்து பார்க்காமல் உடனே கலக்கம் அடைந்து கூறினார் ' நாரத முனிவரே, நீங்கள் கூறுவது உண்மையா? இதை எப்படி நம்புவது?'.
......தொடரும்


Samba Puranam- 3

பாகம்-3

அதைக் கேட்ட பிருத்பலன் மீண்டும் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார் 'மகரிஷியே , நீங்கள் கூறியது எனது அறிவுக் கண்களை சற்றே திறந்துள்ளது. சூரியன் எனும் ஆதித்தியனின் பெருமை அத்தனை மேன்மையானதா? அப்படி என்றால் அவருக்கு ஆலயம் எங்காவது உள்ளதா ? அந்த விவரம் கூறினால் அங்கு சென்று பிரார்த்திக்க ஆசைப்படுகிறேன்'.
வசிஷ்டர் கூறலானார் ' மன்ன, நீ கேட்பதினால் சூரியனாருக்கு ஆலயம் எழுந்த  ஒரு கதையை விவரமாக கூற ஆசைப்படுகிறேன். அதன் மூலம் உனக்கு சூரியனுக்கு ஆலயம் ஏற்பட்ட விவரத்தையும், அதை ஏற்படுத்தியவரின் விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். இது கதை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்ச்சி.
பூலோகத்தில் முன்னொரு காலத்தில் சந்திரபாகா எனும் இடத்தில் சம்பாபுரம் என்றோர் நகரம் இருந்தது. அதுதான் சூரிய பகவானின் நிரந்தரமான இடமாக இருந்தது. அங்குதான் இந்த உலகின் ஷேமத்திற்காக பன்னிரண்டு ரூபங்களில் சூரியன் வசிக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஸாம்பாவிற்கும் காட்சி தந்து அவனுக்கும் அருள் புரிந்தார். எல்லோரையும் ரஷிக்கிறார். அங்கு சென்று அவரை துதித்தால் நிச்சயம் அவருடைய பூரணமான அனுக்கிரகம் தவறாது கிடைக்கும். விதிப்படி செய்யும் அனைத்து பூஜைகளையும் அவர் நேராக ஏற்றுக் கொள்கிறார்'.
இடையில் இடை மறித்து கேட்டார் பிருத்பலன் ' என்னை மன்னிக்க வேண்டும் மகரிஷியாவர்களே. சூரிய பகவான் ஸாம்பா என்பவருக்கு அருள் புரிந்ததாகக் கூறினீர்கள். அந்த ஸாம்பா என்பவர் யார்? அவருக்கு சூரியன் ஏன் அருள் புரிந்தார்? அதைக் குறித்தும் கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்' என்றதும் வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார்.
' அனைத்தையும் நிச்சயமாகக் கூறுவேன். முதலில் ஸாம்பா பிறந்தக் கதையைக் கேள். கிருஷ்ணர் ஜம்பாவதியை மணந்து கொண்ட கிருஷ்ணபிரான்  தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்படி ஆசைப்பட்டதின் பின்னணியில் அவருடைய அவதாரத்துக்கு  உலக சேவை ஒன்றை நடத்த வேண்டிய  அவசியமும், மற்றும் ஒரு சாபமும் இருந்தது. அதன்படி முதலாவதாக அவருடைய அந்த அவதாரத்தின் மூலம் சூரிய பகவானின் மேன்மை உலகிற்கு வெளிப்பட வேண்டும்.  இரண்டாவது, அவர் ஸ்தாபித்த வம்சம், அவர் வழியினாலேயே அழிந்தும் விட வேண்டும். ஆகவே தனக்கு ஒரு மகன் வேண்டும் என ஆசைப்பட்டவர் வனத்துக்கு சென்று தான் எப்போதும்  ஆலோசனைக் கேட்கும் ஒரு முனிவரை  சந்தித்து தனது ஆசையைத் தெரிவித்தார். அதைக் கேட்ட அந்த முனிவர் கூறினார் ' கண்ணா, நீ ஆயிரம் பூக்களை எடுத்து வந்து அவற்றைத் தூவி  சிவபெருமானை துதித்து தவம் இருந்தால், உனது ஆசை நிறைவேறும். உன் தவம்  ஒரு நாளில் கூட பலிக்கலாம். இல்லை ஆயிரமாயிரம் வருடங்கள் கூட நீ தவமிருக்க வேண்டி இருக்கலாம். ஆகவே நீயே யோசனை செய்து கொள்' என்று கூறி விட்டார்.
அதைக் கேட்டதும் உடனே மன மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்ற கிருஷ்ணர் ஆயிரம் மலர்களை சேகரித்தார். அவற்றை கொண்டு போய் காட்டு மத்தியில் ஒரு சிவ லிங்கத்தை வைத்து அதற்கு அந்தப் பூக்களைப் போட்டு கண்களை மூடிக் கொண்டு தவம் இருக்கலானார். ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. கிருஷ்ணரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தனது மனைவியான உமையுடன் கிருஷ்ணருக்கு காட்சி தந்தார். அவரைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்த கிருஷ்ணர் அவர்களை வணங்கினார். அதைக் கண்ட சிவபெருமான் கிருஷ்ணரிடம் கேட்டார் 'கிருஷ்ணா, நீயே விஷ்ணுவின் அவதாரம். நீயே இன்னும் பல அவதாரங்களை எடுத்து இந்த உலகை ரசிக்க வேண்டியவர். அப்படி இருக்கையில் என்னை வேண்டி தவம் இருந்தது ஏன்?'
அதற்கு கிருஷ்ணர் கூறினார் ' தேவாதி தேவா, நீங்களே பரப்பிரும்மன். இந்த பிரபஞ்சத்தையே சிருஷ்டி செய்தவர். எம்மையும் படைத்தீர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்தீர். அப்படி இருக்கையில் என் தவத்தின் காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்குமா?'.
சிவபெருமான் கூறினார் 'இல்லை, கிருஷ்ணா, உன் தவத்தின் காரணத்தை உன் வாயாலேயே கூறினால்தான் நான் உன் ஆசையை நிறைவேற்ற முடியும்'.
தயங்காமல் கிருஷ்ணர் கேட்டார் ' தேவா....எனக்கு உங்களைப் போலவே ஒரு சிறந்த மகன் பிறக்க வேண்டும். அனைத்திலும் உங்களைப் போலவே உள்ளவன் பிறக்க வேண்டும்' என்று கூறிய பின் மீண்டும் அழுத்தமாக 'உங்களைப் போன்றவனே' என்று கூறினார். அதைக் கேட்ட சிவனும் பார்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பார்த்து புன்னகைத்தார்கள். அதன் பின் கிருஷ்ணர் கேட்ட வரத்தை சிவபெருமானும் அவருக்கு அளித்தார். அதன் காரணமாக ஜம்பாவதிக்கு கிருஷ்ணர் மூலம் அழகான ஒரு ஆண் மகன் பிறந்தான். அறிவாலும் ஆற்றலாலும் சிறந்தவனாக இருந்தான் என்பது மட்டும் அல்ல. அவன் பேரழகானவனாகவும் இருந்தான். சிவபெருமானின் தத்துவம் அழித்தல் என்பதே. ஸாம்பா யாரை, அல்லது எதை அழிக்கப் பிறந்தான்?
......தொடரும்

Samba Puranam- 2


பாகம்-2
நைமிசாரண்யத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யாகத்தில் ரிஷி முனிவர்கள் குமுழி இருந்தார்கள். அப்போது சௌனக முனிவர் சூதரைப் பார்த்துக் கேட்டார், 'சூதக முனிவரே, நீங்கள் இங்கு எமக்கு பல புராணங்களைப் பற்றிக் கூறினீர்கள். அதன் இடையே சில புராணங்களில் உப புராணக் கதைகளையும் கூடக் கூறினீர்கள். ஆனால் கிருஷ்ணருடைய புத்திரனான ஸாம்பாவைப் பற்றிய புராணத்தைக் கூறவில்லையே. அமிருதத்துக்கும் ஒப்பான அந்தக் கதையையும் எமக்கு கூறுவீர்களா?'.
அதைக் கேட்டு புன்னகைத்த சூதக முனிவரும் 'தவப் பெரும் முனிவரே, உங்கள் ஆசை மெத்த சிறப்பானது. ஸாம்பா புராணம் என்பது சகல புராணங்களிலும் விசேஷமானது என்பதின் காரணம் தவறு செய்தவர் யாராகிலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம், அதில் பேதம் கிடையாது என்பதை கண்ணபிரான் மீண்டும் தமது சொந்த மகனுக்கு கொடுத்த தண்டனை தந்ததின் மூலம் விளக்கி உள்ளார். இதில் சூரிய பகவானின் மேன்மையையும் விளக்கி உள்ளார். பல தத்துவ பொருட்கள் நிறைந்தது இந்தப் புராணம் .
இப்படியாகப் பிறந்த சாம்பா புராணம் பற்றி நான் கூறுவதை விட, வசிஷ்ட முனிவர் அதை பிருத்பலன் என்ற மன்னனுக்குக் கூறியதைக் கூறுகிறேன். அனைவரும் கேளுங்கள்.  ஒரு நாள் தனது அனுஷ்டானங்கள் அனைத்தையும் முடித்து விட்டு ஆயாசமாக ஆஸ்ரமத்தில் வசிஷ்ட முனிவர் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் வந்த சூரிய வம்சத்தை சேர்ந்த பிருத்பலன் என்ற மன்னன் அவரை வணங்கிவிட்டுக் கேட்டார் ' மகரிஷி அவர்களே, எனக்கு பல நாட்களாக சில சந்தேகங்கள் உள்ளன . பரப்பிரும்மம், பரப்பிரும்மம் என்கிறார்களே. அது என்ன?. பரப்பிரும்மனிடம் சென்று விட்டால் இறவாமை வந்து விடுமா? ஒருவன் மோட்ஷம் பெறுவதற்கான உபாயம் எது? அவர்கள் அதற்கு எந்த தெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும். தேவர்களில் எந்த தேவர் மேன்மையானவர் ? இவற்றை தாங்கள் எனக்கு விளக்க வேண்டும்'.
அதற்கு வசிஷ்ட முனிவர் விடை தந்தார் ' மன்னா உன் சந்தேகங்கள் தெளிவாக்கப்பட வேண்டியவைகளே. உன் மூலமாவது மற்றவர்கள் உண்மையை புரிந்து கொள்ளட்டும். அனைத்து தேவர்களை விட மேலான தேவர்  யார் என்றால்  எவர் ஒருவர் உதிக்கும்போதே தனது கிரணங்களினால் உலகை இருள் இல்லாத உலகமாக செய்வாரோ, எவர் ஒருவர் அனைவரையும் முகத்தோடு முகமாக நேரில் பார்க்கிறாரோ, விண்ணில் எவர் ஒருவரை அனைவரும் நேராக பார்க்க முடிகின்றதோ, அவரே தேவர்களில் உயர்வான தேவர் ஆவார். அந்த உயர்ந்த தேவர் ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் படைக்கப்பட்டு உள்ளார். உக்கிரஹமான தனது கிரணங்களை உலகெங்கும் வீசியபடி உலா வந்து கொண்டே இருப்பவர் அவர். மூன்று  உலகையும் பிரகாசிக்கச் செய்பவர். நமக்கு வேண்டிய வரத்தை அளிப்பவர். தனது ஒளியையே தானமாகத் தருபவர். அவரே பூதகணங்களுக்கெல்லாம் முன்னவர். அவர்களை ரஷிப்பவர். அவரே பித்ருக்களுக்கு பிதாவாகவும், தேவர்களுக்கு தேவராகவும் உள்ளவர். அவரை ஆதித்யன் என்றும் சூரியன் கூறுவார்கள். யோகிகளும் ஞானிகளும் தமது பூத உடலை துறந்து மேலுலகம் சென்றவுடன் இவரிடம் சென்றே மீண்டும் சுத்தமாகி பிரகாசித்துக் கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட ஆதித்யனையும் படைத்தவரே பரப்பிரும்மம் என்பவர். அவர் நமது கண்களுக்கு புலப்படார்.
பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனைப் பற்றி வேதங்கள் கூறுகின்றன. அவர்களது ரூபங்களையும், கதைகளையும் நம்மால் காதினால் மட்டுமே கேட்க முடியும். ஆனால் இருளை நீக்கி ஒளியைத் தரும் ஆதித்தன் அப்படிப்பட்டவர் அல்ல. அவரை நம் கண்களினாலும் பார்க்க முடியும் என்பதினால்தான் அவரை தேவர்களிலும் மேலான தேவராக கருதுகிறோம். எந்த தேவதையை நம்மால் நேரடியாக பார்க்க முடிகிறதோ அவர்களிடம் நேரடியாக பிரார்த்திப்பது நல்லதல்லவா. ஆகவே உனக்கும் மோட்ஷம் வேண்டும் என்றால் நீயும் அந்த சூரியன் என்றும் கூறப்படும் ஆதித்யனை சேவித்தால் அந்த பாக்கியம் உனக்கும் கிட்டும்' என்றார்.
......தொடரும்

Samba Puranam -1

 
பாகம் - 1

ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற புராண காவியங்களில் கதைகளுக்குள் பல உப கதைகள் உள்ளன. நம் நாட்டில் பதினெட்டுக்கும் மேற்பட்ட புராணங்கள் உள்ளன என்றும் அவற்றில் காணப்படும் சில உப புராணங்களைப் படிப்பதின் மூலம் நமது வாழ்க்கையில் மேன்மை அடைய முடியும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. துரதிஷ்டவசமாக சமிஸ்கிருத மொழிகளிலேயே எழுதப்பட்டு உள்ள புராணங்களை தற்கால மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் தமிழில் விரிவாக யாரும் எழுதவில்லை. புராணங்கள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன என்றாலும், அவற்றை அப்படியே தொடர்ந்து வெளியிட்டு வருவதாலும், தற்கால மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் இல்லாததினால் அவை பலரையும் சென்று அடையவில்லை.  தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டு உள்ள சில புத்தகங்களில் உள்ள சொற்கள் பலவற்றிலும் சமிஸ்கிருத வாடை வீசுவதினால் அவற்றை அனைவரும் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆகவே கூடுமானவரை   சுவையான புராணங்களில் காணப்படும் உப புராணங்களை சுருக்கியும், அதே நேரம் அவற்றை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் கொடுக்க நான் முயன்று வருகிறேன். அதில் ஒரு முயற்சியே இந்த சம்பா அல்லது ஸாம்பா புராணமும்.
இந்த புராணம் சூரியனின் பெருமையை எடுத்துக் காட்டுவதும் அவருக்கு அர்பணிக்கப்பட்ட புராணமும் ஆகும். தந்தை கிருஷ்ணரே கொடுத்த ஒரு சாபத்தினால் தனது அழகையும் இளமையையும் இழந்து உடல் முழுவதும் தொழு நோய் ஏற்பட்ட பகவான் கிருஷ்ணரின் மகனான ஸாம்பா ஒரிஸ்ஸா மானிலத்தில், சூரியனாருக்கு ஒரு ஆலயத்தை எழுப்பி அங்கு சூரிய பகவானை வழிபாட்டு , அவர் பெருமையை பறைசாற்ற  சந்திரபாகா என்ற புனித நதியை உருவாக்கி அதில் நீராடி தனது சாபத்தை விலக்கிக்  கொண்டதான கதையே   இந்தப் புராணம் ஆகும். இன்று அந்த நதி மறைந்து விட்டாலும் அதன் நினைவாக ஒரு சிறிய குளம் மட்டுமே உள்ளது. இந்தக் குளத்தில் மக்கள் புனித நீராடி வருகின்றனர்.
இந்தப் புராணத்தை இஷ்யவகு வம்சத்தை சேர்ந்த பிரகுத்பாலா என்ற மன்னனுக்கும், வசிஷ்ட முனிவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களாகவே எழுதி உள்ளார்கள். ஸாம்பா புராணத்தில் கிருஷ்ண பகவானுக்கு ஸாம்பா எப்படி மகனாகப் பிறந்தார், அவருக்கு அந்த கதி ஏற்பட்டதின் காரணம் போன்றவை விலக்கப்பட்டு உள்ளன. விதிப்படி கிருஷ்ணருடைய மகன் ஸாம்பாவின் மூலமே அவர் வம்சமான யாதவ குலம் அழிந்தது என்பது ஒரு உண்மை. இனி ஸாம்பா புராணத்தைப் பார்க்கலாம்.
......தொடரும்

Sunday, July 29, 2012

Sisupala Charitam -6
 
சாந்திப்பிரியா

பாகம்- 6

கண்ணபிரானின் அரண்மனைக்கு சென்ற தூதுவனும் சிசுபாலன் கூறியவற்றை கண்ணனிடம் தெரிவிக்க, அவர் அருகில் நின்றிருந்த விருட்ஷினி மரபிலே வந்த சத்தியகன் என்பவனின் மகனான சாத்தகி என்பவனைப் பார்த்து கண்ணன் கண்களைக் காட்ட சாந்தகி சிசுபாலன் அனுப்பிய தூதுவனிடம் கூறினான், 'நீ கூறிய வார்த்தைகள் சிலேடையாக உள்ளன. பழித்தாலும், புகழ்ந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது பெருந்தன்மை உடையோரின் பண்பு. தருமர் கண்ணனுக்கு செய்த அக்கிர பூஜையைக் கண்டு சிசுபாலன் பொறாமைக் கொள்வதேன்? பொறாமைக் கொள்ளும் மனிதர் பெரியவரா, சிறியவரா? பிறர் பெறும் பெருமைகளைக் கண்டு மனம் மகிழ்வார் பெரியோர்கள் எனப்படுவோர். சிறியோரோ அதைக் கண்டு பொறாமைக் கொள்வார். பொறாமையிலே மனம் புழுங்குவார். பிறர் பிழைகளை புரியும் போது பெரியோர்கள்கள் குருடராய் இருப்பார். அது போல கூறும் பழி மொழியைக் கேட்டு செவிடர்களாக இருப்பார். ஆனால் சிறியோரோ எப்போதுமே பிறர் காரியத்தில் கண் வைத்து இருந்து பிறர் குற்றங்களைக் கண்டு பிடிக்க முயல்வர். பழி மொழியைக் கேட்டு பிற மொழியிலே சாடுவார். பெரியோர்கள் தமது வாயால் தம்முடைய கீர்த்திகளைக் கூறார். பெரியோர்களின் கீர்த்திகளைக் கூறிக் கொண்டாடுவோர் உலகில் பலரும் உளார். ஆனால் சிறியோர் கீர்த்திகளைக் கூற இரண்டாவது புருஷர் உலகில் கிடையாது என்பதினால்தான் சிறியோர் தம்மைத் தானே புகழ்ந்து கொள்கிறார்கள். பெரியோர்கள் கோபத்தை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொண்டு பகைவரை வெல்ல காலத்தையும் நேரத்தையும் பார்த்திருப்பார். சிறியோர்களோ எதையும் ஆழ்ந்து யோசனை செய்யாமல் போர் முரசு கொட்டுவர்.
தூதுவரே, உன் சிசுபாலன் இங்கு உம்மை அனுப்பியது நட்பு கொள்ளவா இல்லை பகையைக் காட்டவா? நட்புக்கு ஆயத்தம் கொண்டவன் போர் முரசு கொட்ட மாட்டான். பகைக்காகா உன்னை அனுப்பினான் என்றால் எரியும் தீபத்தில் போய் தானாக விழும் விட்டல் பூச்சிக்கு சமானமாக இருப்பான் என்றே கருத வேண்டும். தூதுவனாகிய உன் வாயால் அவன் அனுப்பிய நிந்தனைகளையும் சேர்த்து நூறு நிந்தனைக் கணக்கும் முடிவடைந்து விட்டது' என்று கூறினார்.
அதைக் கேட்ட சிசுபாலனின் தூதுவன் கிருஷ்ணரைப் பார்த்துக் கூறினான் 'அறிவில்லாத சிறியோர் நன்மை பயக்கும் செயலை தாமாக அறிந்து கொள்ள மாட்டார். நட்பு மற்றும் பகை இரண்டுக்குள் தக்கது எது என்பதை நீரே அறிந்து கொள்ளும். அறிந்து கொண்டு துணிந்ததை விரைந்து செய்யவும். கடமையை செய்யத் தவறியவர் தருமர். எனதரசன் சிசுபாலன் தக்கவனாக இருந்தும் அக்கிர பூஜையை உமக்கு செய்தவர். அறிவற்ற அந்த செயல் தருமருக்கு பெருமை சேர்க்குமா? எனதரசன், தனக்கெனக் கொடுத்த ருக்மணியை நீர் கவர்ந்து சென்றபோதும் கோபம் பொறுத்தான். சிசுபாலம் உமக்கு கொடுத்த நிந்தனை நூறையும் நீர் பொறுத்தீர் என்று கூறிக் கொள்கிறீர்கள். வேகமான நீரின்பெறுக்குப் போல எந்தன் அரசன் சிசுபாலன் விரைவில் சேனைகளோடு வந்து கொண்டு இருக்கிறான். நீர்பெருக்குக்கு முன்னால் நிற்கும் நீண்ட மரம் போல நின்று சண்டைப் போடாமல் பிரம்பின் கொடி போல பேடியாய் வளைந்து நின்று ஒதுங்கி ஓடாதீர்கள். குழந்தையை காப்பவன் என்று பொருள் தரும் சிசுபாலன் எனும் வார்த்தையின் நாமதேயத்தை மட்டுமே காப்பவன் சிசுபாலன் என்று நினைக்க வேண்டாம். எம் அரசன் தன்னை நாடும் பகைவரையும் காக்கிறான், பிறரையும் காக்கிறான். அது மட்டும் அல்ல எம் அரசன் பொறுமையும் இரக்கமும் பூரணமாக உள்ளவன். பகைவரது குரோதங்களையும் பாரான். ஆகவே நீரும் அவனை சரண் அடைந்து நிலை பெற்று வாழக் கடவது.
கஞ்சன், நரகன், மூரன் முதலிய வஞ்சகர்களைக் கொன்ற மாவீரனான என்னை இந்த சிசுபாலன் எப்படிக் கொல்வான் என ஆணவத்துடன் இருக்காதீர். ஜோதி விட்டெரியும் சூரியனை கேது நட்சத்திரம் விழுங்கவில்லையா? எம்மரசர் மீது போர் செய்ய வரும் அரசர் அவர் முகத்தைப் பார்ப்பதில்லை, மாறாக தன வலிமையினால் தனது பாதத்தைப் பார்க்க வைப்பார் எம் அரசர். போர்க்களம் புகுந்து செல்லும்போது புழுதி சேர்ந்து அழுக்கடையும் அவர் பாதங்களை அந்த அரசர்களின் நாயகிகளின் கண்ணீர் கழுவுகின்றன. அவன் வில் வழியும்போது, அவரை வணங்காத அரசர் குலமே வளையும். சந்திரன் போன்ற தன்மைக் கொண்டவன் என்று எம் மன்னனின் நண்பர்கள். எம் அரசரைப் பார்க்கும் பகைவர்களோ சூரியனைப் போன்ற வெம்மைக் கொண்டவன் என்று பயந்து நடுங்குவர். எமதரசன் சிசுபாலன் அடியில் (பாதத்தில்) முடியை வைத்து வணங்காதவன் முடியில் தன் பாதத்தை பதிக்கும் வல்லவர் எம் மன்னன். இந்திரனையும் வென்ற எம் மன்னனை அதீந்திரன் என்றே அழைக்கிறார்கள். ஆனால் இந்திரனுக்குக் கீழான உம்மை உபேந்திரன் என்பார்கள். சிசுபாலனின் ஆணை தடை இன்றி அனைத்து இடத்துக்கும் செல்கிறது. நீங்கள் பன்றி வடிவெடுத்து பூமியை ஒரு கணமே தாங்கி நின்றீர்கள். ஆனால் எம் மன்னனோ நெடுங்காலம் நின்றிருந்தபடி நீதி வழியில் இப்பூமியைக் காத்து வருகிறான். யாரிடம் வேண்டுமானாலும் சென்று ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். உங்களை அடக்கி உம்மையும் உமது பக்தர்களையும் (சேனைகள்) எம் மன்னன் நிச்சயமாக கொன்று அழிப்பான். உங்களை இழந்தப் பெண்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பவர் இல்லை என்று பரிதவிப்பர். அப்போது எம் அரசர் அந்தக் குழந்தைகளைக் பரிபாலித்து சிசுபாலன் என்ற பெயரின் பொருளையும் உணர்த்துவான். ஆகவே சரணடைந்து வாருங்கள் அல்லது போர்க்களத்தில் வந்து எம்மை சந்தியுங்கள்.' என்று சிசுபலனின் சேதியை கூறி விட்டுச் சென்றான்.
அதைக் கேட்ட பாண்டவ சகோதரர்கள் கோபம் கொண்டார்கள். கொதித்து எழுந்தார்கள். யுத்தத்துக்கு போவோம் என்ற கோஷம் எழுந்தது. கண்ணனின் படைகளும் பொங்கிய கடல்போல வீறு கொண்டு எழுந்து தமது தொடைகளில் அடித்துக் கொண்டு வாயையும் கடித்துக் கொண்டு நரநரவென்ற சப்தத்தை தமது கோபக் கனலாக வெளிப்படுத்தினார்கள். போர் துவங்கியது. இரு படைகளும் பெரும் புயல் போல மோதிக் கொண்டன. யானை, குதிரை என சேனைதாங்கிகளும் ஆரவாரத்தோடும், அச்சம் தரும் வகையிலும் ஒன்றுடன் ஒன்று மோதின. உடைந்தது வெங்கலமோ, இல்லை தாமிரமோ என்று எண்ணும் வகையில் போரின் சப்தம் இருந்தது. 'கண்ணா, வா...வலிமை இருந்தால், பயமில்லை என்றால், வா...விரைந்து என் முன் வந்து போரிடு. இல்லை சரணம், சரணம் என்று கூறி என் பாதத்தில் சரணடை' என்று அகங்காரமாக முழங்கி தேரேறி வந்தான் சிசுபாலன். தாமதிக்கவில்லை ஒரு கணமும் கண்ணபிரான். தேரிலே ஏறினார். நேராக சிசுபாலனை நோக்கிச் செல்லலானார். வில்லை வளைத்து பாணங்களை விடாது மழைப் போல செறிந்தான் சிசுபாலன். கண்ணபிரானும் சீறிச் சென்ற பாணங்களாக நூறு நூறு பாணங்களை தொடர் பெரும் மழைப் போல பொழிய சிசுபாலனும் அவற்றை எல்லாம் அழித்து போரிட்டான். பாணங்கள் மழைப் போல இருதரப்பில் இருந்தும் பொழிந்து கொண்டு இருக்க விண்ணிலும் , மண்ணிலும் நின்று இருவரும் அம்புமாரிப் பொழிந்து போர் செய்தார்கள். நேரம் கழிந்தது. இனியும் தாமதிப்பது நல்லதல்ல, இவனைக் கொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அது தமது தலையாயக் கடமை என நினைத்த கண்ணபிரான், தனது சக்ராயுதத்தை எடுத்து சிசுபாலன் மீது வீசினார். சூரியனே கண்ணனின் கையில் இருந்து வெளிக் கிளம்பியதோ என்பதைப் போல பெரும் ஜோதி ஒளியுடன் சுழன்று சுழன்று பறந்து சென்ற சக்ராயுதம் சிசுபாலனின் சிரசை துண்டித்து விட்டு கண்ணனின் கைகளில் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டது. பகைவர் ஓடோடிச் சென்று ஒளிந்து கொண்டனர். நடந்த அதிசயத்தைக் கண்டு, விண்ணில் இருந்து தேவர்கள் பூமாரிப் பொழிந்தார்கள். 
 
சிசுபால சரிதம் எனும் சிசுபால வதம் முற்றியது

முந்தைய பாகங்கள்

Saturday, July 28, 2012

Sisupala Charitam-5
 
சாந்திப்பிரியா

பாகம்- 5


அதைக் கண்ட சிசுபாலன் அடங்காத கோபம் கொண்டான். அவனால் கண்ணபிரானுக்கு கொடுக்கப்பட்ட பெருமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் அவமானப் படுத்தப்பட்டு விட்டோம் என்று எண்ணினான். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை கன்னபிரானுக்குச் சென்றதை ஏற்க முடியாமல் அவன் உள்ளம் கொதித்தது. முகம் கறுத்தது. வேர்வை தாரையாக உடல் முழுதும் வடிய பூமியே பிளந்ததோ என்பது போன்ற சப்தத்தை தருவது போல தனது தொடையில் ஓங்கி அடித்துக் கொண்டு எழுந்து கனலைக் கக்கும் வார்த்தைகளைக் கொட்டினான்.
'குந்தியின் புதல்வரே, பட்டங்களும் மகுடங்களும் நிலையாகப் பெற்றுள்ள மன்னர்களும், அரசவழி உறவினர்களும் கூடி இருக்க பெரியவர்களின் மதிப்பைப் பெறாதவரான கிருஷ்ணருக்கு அர்க்கிய பூஜை செய்து இங்குள்ளவர்களை அவமதித்து விட்டீர்கள். தேவர்களுக்குக் கொடுக்கும் அவிர்பாகத்தை சேரியிலே உழலும் நாய்க்குத் தரலாமா? கண்ணபிரான் உமக்கு நண்பர் என்பதால் நிலை தவறி விட்டீர்கள். சத்தியம் தவற மாட்டோம் என்று நித்தம் கூறுகின்ற நீங்கள் கரை படிந்தவர் ஆகிவிட்டீர்.கண்ணபிரானுக்கு அக்கிர பூஜை செய்ததின் மூலம் சத்தியத்தை அல்லவா தவற விட்டீர்கள். தருமா புத்திரரே, நீதி இல்லாத உம்மையும் தருமர் என்று கூறுவது இழிவல்லவா? ' என்று கூறி விட்டு அடுத்து விட்டுமரைப் பார்த்து கூறலானார் 'சந்தது குமாரரே , இந்த சபையிலே அர்க்கிய பூஜைக்கு தக்கவர் யார் என்பதை தருமர் அறிந்திடாவிடிலும், நீங்கள் அறிந்திருந்தீர்கள். ஆறு பிரிவினரை அர்க்கிய பூஜைக்கு தகுதியானவர் என்று நீரே கூறினீர். அந்த ஆறு பேரில் கண்ணபிரான் எந்தப் பிரிவில் உள்ளார் என்பதை உம்மால் கூற முடியுமா? ஆனாலும் அவற்றை மீறி நீங்கள் கண்ணபிரானுக்கு அர்க்கிய பூஜையை செய்யுமாறு கூறியதின் நோக்கம் என்னவோ? நீங்கள் அவரை புகழ்ந்து பாடிய துதிகளை என்ன என்று கூறுவது? கபட நாடகமா, இல்லை நீங்கள் அவருக்கு துதி பாடியா? பல காலம் வாழ்பவர்களின் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்தும் தலைமுடி வெண்மை ஆகியுள்ள உமது நரையும் வீண், அறிவும் வீண், மூப்பும் வீண், நல்லுணர்வும் வீண்.
எவ்வளவோ உயர்ந்த அரசர்கள் இங்கு வீற்று இருக்கும் போதும், அவர்கள் மீது உங்கள் கவனம் செல்லாமல் தாழ்ந்த பள்ளத்தை நோக்கி ஓடும் கங்கையைப் போலில்லாத சாக்கடை நதியைப் போல உங்கள் எண்ணம் கீழ் நோக்கிப் போய் விட்டது' என்று கூறிய பின் கண்ணனை நோக்கிக் கூறலானான், 'கண்ணபிரானே, அக்கிர பூஜையை அரச வழி வந்தவரே பெற வேண்டும். நீங்கள் அந்த நிலையில் உள்ளவர் அல்லர். நீர் யார் என்பதை நீரே ஆராய்ந்து பாரும். பலராமருடைய துணை இல்லாமல் உங்களுக்கு எங்கிருந்து வந்தது பலம்? வலிமை உடையவன் என்று பீற்றிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு கிடைத்துள்ள பட்டங்களின் கதி என்ன என்பதைப் பார்த்தீர்களா? சத்தியன் என்ற புகழ் பெற்றது சத்தியபாமாவை மணந்து கொண்டதினால் வந்தப் பெயர். மதுச்சூதனன் என்பது தேனீக்களை விரட்டி விட்டு தேனை எடுத்ததினால் வந்த பெயர். அது மது எனும் அரக்கனை கொன்றதினால் வந்தப் பெயர் அல்ல. சக்கிராயுதமுடையான் என்பது பகைகருக்கு பயந்து ஓடிய சேனைக்கு தலைவனானதினால் கிடைத்தப் பெயர். நிர்குணன் என்ற நாமம் வீரம், வலி மற்றும் குணங்கள் இல்லாத மானிட உடலை உள்ளவருக்கு சூட்டும் நாமம். ஆகவே மூன்று குணங்களிலும் எந்த குணமுமே இல்லாத நிர்குணன் என்ற பெயரைப் பெற்றுள்ள நீர் அக்கிர பூஜையை ஏற்கத் தகுதியானவரா? பூபதி என்ற பெயர் பூமாதேவியான லஷ்மிக்கு கணவராக இருப்பதினால் வந்தப் பெயர். நரகாசுரனை வென்றதினால் நரகவிசயன் என்ற பெயரை நீர் அடையவில்லை. இப்படியாக போலியாக வெவ்வேறு காரணங்களினால் வந்த உங்களுக்குள்ள பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை அனைத்தும் உமது வீரத்தனத்தினால் கிடைத்தப் பெயர்கள் அல்ல என்பது உங்களுக்கே வெட்கமாக இல்லையா?'.
இப்படியாகக் கூறிய பின் அங்கு அமர்ந்திருந்த மற்ற அரசர்களை நோக்கி 'இந்த சபையில் சிங்கம் போல நீங்கள் வீற்று இருக்கையில் ஒரு காட்டு நாயை மதித்து அவிர்பாகம் கொடுப்பது போல கண்ணபிரானுக்கு இந்த தருமா புத்திரர் அர்க்கிய பூஜையை செய்துள்ளார். இதை விட உங்களுக்கெல்லாம் வேறு அவமானம் தேவையா? இந்த கண்ணபிரான் யார்? எருது உருவில் வந்து அரிட்டன் எனும் அரசனைப் பிடித்து வதைத்துக் கொன்ற கொலையாளி. கண்ணபிரான் குழந்தையாக இருந்தபோது பால் குடிக்க அழுததைப் பார்த்து முலை சுரந்து பால் கொடுத்த பூதனை எனும் அரக்கியை பெண் என்றும் பாராமல் முலை சுரந்து பால் கொடுத்த முலைத்தாய் என்றும் பாராமல் மனமிரங்காமல் அவளை வதைத்துக் கொலை செய்தவர். கண்ணனை காப்பதற்காக பசுக்களின் காவலிலே எவலரைப் போல பாதுகாப்பாக வைத்து இருந்த மாமனாகிய கம்சனையும் கொன்றார். வலிமையற்ற சடகாசுரனை அடித்தும், உதைத்தும் வதம் செய்தார். வைரம் போல உறுதியாக இல்லாத மருத மரத்தை இரு பிளவாக முறித்தார். இவை எல்லாம் வீரச் செயல்களா? கேவலம்....கேவலம்'.
இப்படியாக கோபமாக அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட விட்டுமர் எழுந்து அவனுக்கு பதில் கொடுத்தார் ' இந்த சபையிலே நான் செய்த அக்கிர பூஜையிலே பொறாமைக் கொண்டவன் கக்கிய விஷச் சொற்கள் வில்லைக் கூட வளைக்க முடியாதவன் எவன் என்பதையே கட்டுகிறது. அவனுக்கு அடி பணிந்த அனைத்து மன்னர்களின் சிரசிலும் இந்த பாதம், வைக்கப்பட்டது' என்று தனது பாதத்தை சுட்டிக் காட்டி முழங்கினார்.
அதைக் கேட்ட சிசுபாலனின் பக்கத்தை சேர்ந்த அரசர்கள் கோபமுற்றார்கள். துருமன் என்ற மன்ன தேகம் சிவந்து நச்சு மரம் போல எழுந்து நின்றான். உருக்குமிணன் என்பவன் தனது தங்கையான ருக்மணியை கண்ணபிரான் கவர்ந்து சென்றபோது எத்தனைக் கொதித்தானோ, அத்தனைக் கொதிப்புடன் எழுந்து நின்றான். வசு என்பவன் அவரை நோக்கி சென்றபோது தடுக்கி விழுந்தான். இப்படியாக சிசுபாலனை ஆதரித்தவர்கள் கொதிப்பு கொண்டு எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து எழுந்த சிசுபாலனும் படம் எடுத்து ஆடும் நாகம் போல நின்றான். கனல் பறக்க தன்னை ஆதரித்த மன்னர்களைப் பார்த்துக் கூறினான் ' சோரம் போன புத்திரர்களான பாண்டாவரையும், கஞ்சனுடைய ஏவலாளாகிய கண்ணபிரானையும் நீங்கள் இன்னமும் கொல்லாதிருந்தது மெத்த தவறாகும். ஆகவே இந்த கண்ணபிரான் போர்முகத்திலே வந்து என் முகத்தின் எதிரில் ஒரு கணமும் நிற்க மாட்டார். இவரைக் கொல்லுதலும் அறிய காரியமும் அல்ல. இவருக்கு அக்கிர பூஜையை செய்து பெருமை செய்த தருமருக்கும் சேர்த்தே கூறுகிறேன், இவரையும் என்னையும் யுத்த களத்தில் வைத்து பரிட்ஷை செய்து பார்க்கட்டும். எங்களில் வல்லவர் யார் என்பது புரிய வரும்' என்று கூறி விட்டு தருமபுத்திரர் தடுத்தும் கேளாமல் சபையை விட்டு வெளியேறினார்.
பொறுமையும் கருணையும் கொண்ட பாண்டவர்கள் கொடிய நிந்தனைகளை சிசுபாலன் கூறினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டார்கள். அவனை சிறிய தாய் பெற்றப் புதல்வன் எனவும், விருந்தினராய் நம்மை வந்தடைந்தான் என்றும் நினைத்தார்கள். சிசுபாலனோ வேகமான குதிரைகள் இழுக்கும் தேரில் ஏறிக் கொண்டு தெருத் தெருவை போய் யுத்தப் பிரகடனம் செய்தான். சேனைகளை ஆயத்தம் செய்தான் . போர்பறை முழங்க வைத்தான். போருக்குக் கிளம்பிச் செல்ல அவனது யானைப் படைகள் முதலில் செல்லத் துவங்கின.
அப்படி அவன் செய்ததுமே பல அபசகுனங்கள் நிகழ்ந்தன. போருக்குப் போகும் கணவனை வழி அனுப்ப வந்த ஒரு நங்கையின் தலையில் இருந்த வெண்கலப் பாத்திரம் தவறி கீழே விழுந்தது. வீதியில் இருந்தப் பெண்கள் விக்கி விக்கி அழுதார்கள். குதிரையில் ஏறிக் கொண்டிருந்த படைவீரர்களின் குழந்தைகள் வந்து 'நீங்கள் எங்கே போகிறீர்கள் ? என அபசகுனமாகக் கேட்டார்கள். இப்படியே பல அபசகுனங்கள் தோன்றினாலும், அவற்றைத் தெரிந்திராத சிசுபாலன் பழிச் சொற்களைக் கொண்ட- விஷத்தை இனிப்பாக்கித் தருவது போல சிலேடைகளினால் கொண்ட - வார்த்தைகள் அடங்கிய வாசகத்தை கூறி யுத்த பிரகடனத்தை வெளியிட்டு விட்டு வருமாறு தூதுவன் ஒருவனை கண்ணனிடம் அனுப்பி போருக்கு அழைப்பு விடுத்தான்.


..............தொடரும்  

முந்தைய பாகங்கள்

Sisupala Chartam-4
 
சாந்திப்பிரியா

பாகம்- 4
கண்ணபிரான் உத்தவருடையக் கருத்தே சரியானக் கருத்து என்று முடிவு செய்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப் போல யாகத்துக்கு செல்ல வேண்டும், அங்கு வரும் சிசுபாலனின் அவதூறுப் பேச்சு அல்லது அவன் வெளிப்படுத்தும் தடித்த வார்த்தைகள் என்பன அவனுடைய தாயாருக்கு கண்ணன் கொடுத்த நூறு என்ற எண்ணிக்கையைத் தாண்டினால் அதுவே அவனைக் கொல்ல முடிவெடுக்கும் தக்க சமயமாக மாறும் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே முதலில் தருமரின் யாகத்துக்குச் செல்லக் கிளம்பினார். வில்லு, தண்டு என அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய படையினர், சாமரம் வீசுவோர், குடைகளைப் பிடிப்போர், அமைச்சர்கள், புரோகிதர்கள், மித்ருக்கள் என அனைவரும் சூழ்ந்து செல்ல கண்ணபிரான் சிங்காரித்து வைக்கப்பட்டு இருந்த சிப்ரபம் என்ற அலங்காரத் தேரில் ஏறிக் கொண்டு தர்மரின் யாகசாலையை நோக்கிச் சென்றபோது வீதி முழுவதும் நிறைந்திருந்த வீடுகளின் உள்ளிருந்தவர்கள் வெளியில் வந்து கண்ணனுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பினார்கள். அற்புதக் கண்ணனை, ஆனந்தமயமான கிருஷ்ணரைக் காண வழி முழுவதும் ஜனங்கள் நிறைந்து நின்றதினால் தேரை மெல்ல மெல்லவே ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது.
மெல்ல மெல்லச் சென்ற தேர் இரவதகமலை என்ற இடத்தை அடைந்தது. அந்த மலையைச் சுற்றி கண்ணுக்கு இனிமையான காட்சிகள், பச்சிலை செடி - கொடிகள், மூங்கில், பனை போன்ற மரங்களும் நிறைந்திருந்தன. மலை அடிவாரத்தில் அங்காங்கே பெரிய பெரிய நிறைந்திருந்தன. எங்கும் பசுமை, எங்கும் பசுமை. பச்சை பசேல் என்ற காட்சி. மனதுக்கு ரம்யமாக இருந்தது. அனைத்தையும் நிதானமாக நின்று கொண்டு பார்த்தார் பரந்தாமன். அங்காங்கே சிங்கமும் , புலியும் சுற்றித் திரிந்தாலும் யாருக்கும் அவை தீங்கிழைக்கவில்லை. மரங்களில் கனிகளும், காய்களும் நிறைந்தே இருந்தன. அங்கு ஒரு பர்ணசாலை அமைத்து அனைவரும் கிருஷ்ணருடன் அங்கு இரவு தங்கினார்கள். கூட வந்திருந்த சேனைகளின் யானைகள் அங்கிருந்த குளத்தில் இருந்து நீரை உறிஞ்சி அனைத்து இடங்களிலும் தண்ணீரை பீச்சி அடித்து விளையாடின. குதிரைகளோ கால் குளம்புகளை கற்கள் மீது வைத்துச் சென்றபோது கிளுகிளு என்ற சப்தத்தை மேளதாளம் போல எழுப்பின. ஒட்டகப் படையின் ஒட்டகங்களோ நீண்டு இருந்த கழுத்தைக் கொண்டு வானளாவி இருந்த மரக்கிளைகளை ஒடித்து இலைகளைத் தின்றன. ஆறுவகைப் பருவக்கால மரங்களும் செடி கொடிகளும் அங்கிருந்தன. சூரியனும் மேற்கடலை நோக்க, திக்கெங்கும் சிவந்து கிடக்க பகல் பொய் இரவும் வந்தது. மறுநாள் காலை சேவல்கள் கொக்கரிக்க அனைவரும் எழுந்து காலைக் கடன்களை முடித்து ஸ்நானம் செய்து தம்மை தயார்படுத்திக் கொண்டு தருமரின் யாகசாலையை நோக்கி செல்லலாயினர்.
நாடுகள், நகரங்களைக் கடந்து அனைவரும் சென்றார்கள் கண்ணபிரான் யமுனை நதியைக் கடந்து நகருக்குள் பிரவேசிக்கிறார் என்பதை கேள்விப்பட்ட தருமாரோ சதுரங்க சேனையோடும், தமது சகோதரர்களுடனும் வந்து கிருஷ்ணரை எதிர்க் கொண்டு அழைத்தார். தருமரைக் கண்ட கண்ணனோ, தேரில் இருந்து இறங்கிச் சென்று, தன்னை விட முதியவர் தர்மர் என்பதினால் அவர் பாதங்களில் விழுந்து அவரை நமஸ்கரித்தார். அவரை எழுப்பிய தருமர் அவரைக் கட்டி அணைத்தார். அதன் பின் தர்மருடைய அனைத்து சகோதரர்களும் கண்ணனை கட்டி அனைத்து தாம் கொண்டு வந்திருந்த தேரில் அவரை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.
இந்திரப்பிரத்த நகரோ இல்லை இந்திரலோகமோ என்று கூற முடியாத அளவு நகர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கண்ணனும் , பாண்டவ சகோதரர்களும் தேரில் இருந்து இறங்கி கோட்டைப் போல அலங்கரித்திருந்த நீண்ட மண்டப வாயிலுக்குள் புகுந்து யாக சாலைக்கு செல்லத் துவங்கினார்கள். யாக சாலையில் நிறைய ஆசனங்கள் போகப்பட்டு இருக்க, இங்கே அமருங்கள், இங்கே அமருங்கள் என ஒவ்வொருவரும் கண்ணனை உபசரித்துக் கூப்பிட, கண்ணனுக்கென அமைத்து இருந்த தனி சிம்மாசனாத்தில் அவரை அமர வைத்தார்கள். தருமருக்கு அடுத்து இருந்த ஆசனம் அது. அங்கு கூடி இருந்த மற்ற அரசர்களும், ஆட்களும் சிறுவர், பெரியவர் என்ற பேதம் இன்றி ஒன்றாகவே பழகினர். அதன் பின் அனைவரும் அமர்ந்தவுடன் தருமர் யாகத்தை துவக்கும் முன் கண்ணனைப் பார்த்துக் கூறலானார்
'யது குலப் பிரபுவே,
உங்கள் வரவு நல்வரவாக இருக்கட்டும். உலகிலே தன்னை விட அனைத்திலும் பலவானை (செல்வத்தில், செருக்கில், பலத்தில், அதிகாரத்தில் என அனைத்திலும்) வேண்டும் என்றே அதிக புகழ் பாடி அவர்கள் மனத்தைக் குளிர வைப்பது பேடித்தனம் ஆகும். அது போலவே போலியாக புகழ் பாடப்படுவதை, அவை அனைத்தும் போலியானவை என்பதை அறிந்து கொள்ளாமல், புகந்துரைகளையும் பலவான்கள் ஏற்றுக் கொள்வது அவர்கள் மூடர்களே என்பதையே எடுத்துக் காட்டும். ஆனால் நீரோ அந்த நிலைக்கு அப்பாற்ப்பட்டவர். உங்களைப் புகழ்ந்து பேசுவோர் அவற்றை பொய்யாகக் கூறியதில்லை. நீரும் அவை அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாலும் உங்கள் மகிமையைக் கூறாமல் என்னால் இருக்க முடியாது.
நாங்கள் வலிமையோடு இன்று இந்த பரத கண்டத்தை ராஜ்ஜியம் செய்து வருகிறோம் என்றால் அதற்கு நீங்களே காரணம். உங்கள் அருளினால் அனைத்து திக்குக்களிலும் சென்று அளவற்ற திரவியமும் தேடிப் பெற்றோம். இந்த யாகம் சிறப்புடன் நடைபெற நாங்கள் தேடி வைத்துள்ள திரவியங்கள அனைத்தையும் ஏற்றுக் கொண்டு யாகமும் சிறப்பாக நடைபெற நீங்களே இங்கு யாகத்தின் பாதுகாவலனாகவும் இருந்தவாறு இந்த யாகத்தையும் எங்களுக்காக செய்ய வேண்டும். வரும் காலத்திலும் இன்று போலவே நானும் எனது சகோதரர்களும் உம சொல்லை மீறாமல் வழி நடந்து வருவோம்'.
அதற்கு பதிலாக கண்ணபிரான் கூறினார் ' தருமபுத்திரரே,
'திக்குகள் அனைத்திலும் சென்று திரவியம் தேடியது என் வலிமையினால் அல்ல. அது உங்கள் பெருமையைக் காட்டுகிறது. இந்த ராயசூய யாகம் செய்வதற்கு உரியவர் யார்? நான் அல்ல. நீரே அதை செய்ய வேண்டும். இந்த யாகத்துக்கு இக்கட்டான வேறு காரியங்கள் நடந்தால் அவற்றை நான் பார்த்துக் கொள்வேன். ஆகவே இந்த யாகத்திலே உமது செயலை யாராவது தடுத்தால் அவர்களது தலையை இந்த சக்ராயுதம் வெட்டி வீழ்த்தும். ஆகவே எந்த பயமும் இல்லாமல் யாகத்தை துவக்கவும்' என்று கூறி முடிக்க யாகமும் துவங்கியது. யாகப் புகை அந்த இடத்தை சூழ்ந்தது. யாகம் முடிந்தப் பின் யாக முறைப்படி முதலில் அங்கிருந்த அனைத்து அந்தணர், புரோகிதர்களுக்கு திரவியங்கள் வழங்கப்பட்டன. அத்தனை ஜனங்களும் கூடி இருந்த இடத்திலும் யாருக்கும் விட்டுப் போகாமல், யாருக்கும் குறைவில்லாமல், அனைவருக்கும் மன மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் தருமர் தனது கையினாலேயே தானப் பொருட்களை அனைவருக்கும் கொடுத்தார். அங்கு ஏழைகள், வசதியானோர் என்ற பேதம் இன்றி அனைவருமே பெற்றவை சரி சமமானதாகவே இருந்தது.
தான தருமங்கள் முடிந்ததும், அடுத்து செய்ய வேண்டிய அக்கிர பூஜைக்குத் தக்கவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அங்கிருந்த விட்டுமர் கூறினார் 'தருமா புத்திரரே, பிறர் கூறாமலேயே அனைத்தயும் நீரே அறிவீர்கள். ஏன் என்றால் நியாயம் என்பதை நீங்கள் அளவில்லாமல் கற்றுக் கொண்டு உள்ளீர்கள். உங்களுக்கு துணையாக கண்ணபிரான் வேறு இங்கு இருக்கிறார். இங்குள்ளவர்களின் ஏற்றத் தாழ்வுகளையும் நன்றே அறிந்துள்ளவர் நீங்கள். ஆகவே அக்கிர பூஜையை ஏற்க்ல்க யார் தகுதியானவர் என்று குழம்பத் தேவையே இல்லை. அக்கிர பூஜையை ஏற்க கூடியவர் யார்? நம் இல்லத்தில் உள்ளவர்கள், பிதா போன்ற பெரியவர்கள், உறவினர்கள், யாக புரோகிதர், மருமக்கள், புவிக்கு அரசர் போன்ற ஆறு பிரிவினரே அக்கிர பூஜையை ஏற்கத் தகுதியானவர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவர்களைத் தவிர குணத்தால் சிறந்தவர்காளையும் இப் பூஜைக்கு தேர்வு செய்யலாம் என்றே முதிமை மிக்க ஞானிகள் கூறுவார்கள்' என்று கூறியவர் மேலும் தொடர்ந்து கூறுகையில் 'மானிட உருவிலே இங்கு வந்து வீற்றுள்ள கண்ணனை மானிடர் என்றே கருதக் கூடாது. அங்கு, இங்கு எனாதபடி அனைத்து உலகிலும் உள்ள அவதாரப் புருஷர் அவர். அவருக்கு இச்சை, அகங்காரம் போன்ற நீச்ச குணங்கள் எதுவுமே இல்லை. நன்மைகள், தீமைகள் அவரைப் பாதிப்பது இல்லை. எங்கும் நிறைந்தவர், எல்லாவற்றையுமே அறிந்தவர் அவர். மாயத் தோற்றத்தைக் கொண்டவர், பழையவர். புதியவர் என்ற பேதத்தைப் பாராதவர். மூன்று குணங்களைக் கொண்டு மூன்று தொழில்களை செய்பவர்- படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார்.
ஆதியிலே நீரை சிருஷ்டித்து, அந்த நீரிலே கர்பத்தை உருவாக்கி, பிரும்மாவைப் படைத்து, அவர் மூலம் இந்த பிரபஞ்சத்தையும் படைத்து, நீரிலே மூழ்கிய பூமியையும் மேலே கொண்டு வந்து , தேவர்களையும், ரிஷி முனிவர்களையும், மற்றோர்களையும் வாட்டி வததித்த ராக்ஷசர்களையும், அசுரர்களையும் நரசிம்மராக, ராமனாக, பரசுராமராக, கிருஷ்ணராக தோன்றி அழித்து அனைவரையும் காத்தவர். அவ்வளவு ஏன், இங்குள்ள சிசுபாலனின் மூன்றாவது நான்காவது கைகளையும், மூன்றாம் கண்ணையும் மறையச் செய்தவர். இப்படியாகப் பல அவதாரங்களில் பல மகிமைகளை செய்துக் காட்டி உள்ளவர் மானிட உருவிலே இங்கு வந்துள்ளார். ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்த அவையில் வீற்று உள்ள கண்ணபிரானே அக்கிர பூஜையின் அர்க்கியத்தை ஏற்கத் தகுதியானவர் என்பது எங்களுடைய எண்ணம்' என்று கூறி முடிக்க விட்டுமர் வார்த்தையைக் கேட்ட தருமாறும் அக்கிர பூஜையை கிருஷ்ணருக்கே செய்தார். விட்டுமர் என்பவர் சந்தனு மகாராஜனின் புதல்வர் ஆவார்.

..............தொடரும்  

முந்தைய பாகங்கள்

Sisupala Charitam- 3
 
சாந்திப்பிரியா

பாகம்- 3


அவர்களைப் பார்த்து கிருஷ்ணர் கூறினார் 'மூத்தோர்களே, நான் இப்போது சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எனக்குக் கூறுங்கள். எனக்கு ஒரே நேரத்தில் எனக்கு இரண்டு காரியங்கள் வந்துள்ளன. முதலாவது தேவர்களுக்கு நன்மை பயக்கும் காரியமான சிசுபால வதம். இரண்டாவது தருமருக்கு மதிப்பு அளிக்கும் மித்ர காரியம். இவற்றில் எதை விடுவது, எதை செய்வது என்பதில் குழப்பமாக உள்ளது. தருமபுத்திரர் தனது பலமிக்க பீமன் போன்ற சகோதரர்களை அனைத்து திக்குக்களிலும் அனுப்பி அந்த திக்குக்களில் உள்ள நாட்டு மன்னர்களை அடக்கி வைத்து உள்ளார். ஆகவே அவர் செய்யும் யாகத்துக்கு யாராலும் எந்த விதமான இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதினால் அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றாலும் ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஆகவே அதை மித்ரகாரியம் என்று இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளலாமா?
சிசுபாலனோ எனது தந்தையின் சகோதரியின் மகனாவார். எனக்கு மைத்துனன் என்பதினால் அவன் செய்யும் முறைக் கேடுகளைப் கண்டு கொள்ளாமல் இருப்பது தவறாக அமைந்து விடும். அவனோ ஒருவனுக்கு வந்துள்ள நோய் முற்றிப் போவது போல பகைவர்களை அதிகரித்துக் கொண்டு போய் தன்னை சுற்றி உள்ள அனைவருக்கும் துரோகம் செய்கிறான். பலரும் அவன் செயலால் துக்கமுற்று மனம் பதைபதைத்து என்னிடம் முறையிட்டு உள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எனக்கு யாரேனும் துரோகம் செய்தால் அதைப் பற்றி நான் கவலைப் பட மாட்டேன். ஆனால் பலருக்கும் அவன் துரோகம் செய்து அவர்களை வதைப்பதைக் கேட்கும்போது என் மனம் தவிக்கிறது. இப்படி உள்ள நிலையில் சிசுபால வதம் என்பது தேவ காரியமாக எனக்குத் தோன்றுகிறது. ஆகவே நான் முதலில் எதை செய்வது?, எதை விடுவது என்பதைப் பற்றி உங்கள் கருத்தைக் கூற வேண்டும்' என்று கூறிவிட்டு சிசுபாலம் செய்து வந்ததாக கூறப்படும் அனைத்து தொல்லைகளையும், அக்கிரமங்களையும் விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார்.
அதைக் கேட்ட பலராமர் கூறினார் ' கிருஷ்ணா நீ அனைத்துமே சுருக்கமாக கூறி இருந்தாலும் அதில் பெரிய சூத்திரமே உள்ளடங்கி உள்ளது. தேவ காரியம் மற்றும் மித்ரு காரியம் என்பது லேசானது அல்ல. அது தத்துவார்த்தமான கருத்தைக் கொண்ட வார்த்தை. அநேகம் பேர்களுக்கு அவற்றின் மகத்துவம் புரியாது. ஆனால் அதிலும் நீ எத்தனை கவனமாக இருக்கிறாய் என்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. ஆகவே உன் விருப்பத்துக்கு ஏற்ப என்னுடைய எண்ணத்தை சில வார்த்தைகளில் நானும் கூற விரும்புகிறேன். கிருஷ்ணா, நீ சிசுபாலனை எதற்காக கொல்ல வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைத்தாய். எந்த ஒருவரும் தான் எண்ணியதை துணிவுடன் செய்ய முடியாது என்று எண்ணினால் அப்படிப்பட்ட காரியங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. போருக்குப் புறப்பட்டுப் போகும் முன்னாள் நல்லவை எது, தீயவை எது என்பவை அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்க வேண்டும். அது பற்றி யாரிடமாவது ஆலோசனைக் கேட்டால் அவர்கள் கூறுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும். காரியங்களை அறியாதவர்களின் ஆலோசனைக் கேட்டால் பலன் இருக்காது. அவர்கள் கூறும் அறிவுரைகள் இலக்கு தவறி குறி வைக்கும் அம்பைப் போன்றதாக இருக்கும். அறிவாளர்கள் எண்ணிச் சொல்லிய சொற்களையே ஆழ்ந்து மனதில் கொள்ள வேண்டும். பகைவர்களை சிறியவன், பெரியவன் என்ற பேதத்துடன் பார்க்காமல் அவர்களை வேரோடு பிடுங்கி எறிதல் அவசியம் என்பதை முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் செடி கொடிகள் தழைப்பது போல பகைவர்கள் சிலகாலம் வாடி உள்ளதைப் போல காத்திருந்து மீண்டும் ஒன்று கூடி மேல் எழுந்து வருவார்கள்.
சிசுபாலன் உனக்கு பிதா வழியில் வந்தவனாகவும், மித்ருவாகவும் இருக்கிறான். ஆனால் அவற்றுக்கு இடையில் அவன் பெரும் தீங்கு புரியும் சத்ருவாகவும் இருக்கிறான். ஆகவே வெளிப் பார்வைக்கு ஒரு நல்ல நண்பனாகவும் , மனதுக்குள் ஒரு பகைவனாகவும் இரு வேடம் தரித்திருக்கிறான். ஆகவே அவனை எப்படி நல் வழியில் கொண்டு செல்வது? நண்பனாக எடுத்துரைத்தா அல்லது பகைவனாகப் பார்ப்பதா என்று குழம்பாதே. தீமைகளை தொடர்ந்து செய்து கொண்டு உள்ளவனை நண்பனாகப் பார்ப்பது நல்லதல்ல. மனதாலும், செயலாலும் சிசுபாலன் தீயவன். ஆகவே இதயத்தில் தீமையை பொக்கிஷமாக வைத்து உள்ளவன் மீண்டும் மீண்டும் தீமையே செய்வான். அவன் எப்போதாவது நல்லது செய்வான் என்று எதிர்பார்ப்பது காலத்தை விரயம் செய்வதாகும். உறவாயினும் தீங்கு புரிபவனை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றும், பகைவனானாலும் நன்மைகளை செய்பவனை பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்றும் தர்ம சாஸ்த்திரம் சொல்கிறது.
அவன் உன் வம்சத்தில் உருவானவன் என்பதினால் உனக்கு தீமைகளை செய்யாது இருந்தானா? இல்லை அல்லவா?. அவன் உனக்கும் தீங்கு புரிந்தான், எனக்கும் தீமை புரிந்தான், அனைவருக்கும் தீமைகளையே செய்தான். இன்னமும் தீமையே செய்தும் வருகிறான். அவன் மணக்க விரும்பிய ருக்மணியை நீ மணந்த நாள் முதலே உன் மீது வன்மம் கொண்டுள்ளான். நரகாசுரனை நீ வதம் செய்யச் சென்றபோது, நீ இல்லாத நேரம் பார்த்து துவாரகாபுரியை முற்றுகை இட்டு பெரும் போர் செய்தவன் அல்லவா அவன். என்னுடைய தந்தையார் வாசுதேவருடைய அஸ்வமேத யாகத்தை அழிக்கக் கருதி அவர் வைத்திருந்த குதிரயையும் கவர்ந்தவன் அல்லவா அவன். பொழுது போக்கிற்காக இரவதாக மலை அடிவாரத்துக்கு சென்ற யாதவர்களை கயிற்றினால் கட்டி இழுத்துக் கொண்டு போய் சிறையிலிட்டவன் அல்லவா அவான். வப்புரு என்ற யாதவனின் மனைவியை பலாத்காரம் புரிந்தவன் அல்லவா அவன். இப்படியே எண்ணிலடங்காத தீமைகளை செய்தான். இந்த துரோகி உள்ளவரை யாருக்கும் சுகம் இருக்காது. ஆகவே அவனை கொலை செய்து அனைவரது துயரையும் நீக்குவது உன் கடமைகளில் ஒன்றாகும். ஆகவே சிசுபாலனை வதம் செய்ய சேனைகளோடு செல்வதே நல்லது. செடி தேசத்து விருஷங்களை முறித்துக் கொண்டு முன்னேறும் வகையில் யானைப் படையுடன் செல். சிசுபாலனின் தம்பியான மகிஷ்மதியின் நகரை யாதவப் படையினரை அனுப்பி அவன் வெளியே வராதபடி முற்றுகை இடச் செய். தருமர் செய்யும் யாகத்தை அவரே நடைத்திக் கொள்ள முடியும் என்பதினால் மித்ரு காரியம் என்று எண்ணிக் கொண்டு நீ யாகத்துக்குப் போவதற்கு இப்போது முக்கியத்துவம் தர வேண்டாம். சூரியன் வானிலே ஒளியாய் இருந்து உலகைக் காப்பது போல, தேவேந்திரன் தேவலோகத்தைக் காப்பது போல, நமது பகைவர்களை நாம்தான் அழிக்க வேண்டும்'.
பலராமர் தனது என்னத்தைக் கூறி முடித்தவுடன் அடுத்து உத்தவர் தனது எண்ணத்தைக் கூறலானார். 'கண்ணா, இப்போது உன்னுடைய மூத்தவர் எடுத்துரைத்த எண்ணங்களைத் தவிர நான் மேலும் கூற வார்த்தைகளே இல்லை. அவர் அனைத்தையுமே அழகாக எடுத்துரைத்தார். தர்ம சாஸ்திரங்களை நன்கே அறிந்துள்ள உனக்கு நான் அவற்றைப் பற்றி மேலும் கூறினால் அவை உனக்கு பாலபாடம் புகட்டுவது போல இருக்கும். இருந்தாலும் என்னுடைய எண்ணத்தைக் கூறுகிறேன்.
வெற்றி முதலிய காரிய சித்திகளை அடைய துடிக்கும் மன்னர்கள் மேலான மக்களின் ஆலோசனைகளை முதலில் கேட்க வேண்டும். அவற்றை எல்லாம் மனதில் ஏந்திக் கொண்டு தான் ஒரு தக்க முடிவு எடுக்க வேண்டும். ஆலோசனைகளைக் கைகொள்ளும் அறிவாளர்கள் நன்கு முடிவு எடுப்பார்கள். அவர்களது காரியங்கள் தங்கு தடையின்றி நடந்தவாறு இருக்கும். ஆலோசனைகளைக் கைகொள்ளாமல் முடிவு எடுப்பவர்கள் தாம் எடுத்த காரியத்தை முடிக்க வழி தெரியாமல் குழம்பிப் போய் இடையில் தமது காரியங்களை விட்டு விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் எலியைப் பிடிக்க மலையை உடைத்த கதையில் வருபவர்களைப் போன்றவர்கள். காரியத்திலேயே கண்ணாக இருப்பவர்கள் நித்திரையைப் பாரார், சத்ருக்களையும் பாரார், சரீரத்தின் அலுப்பையும் பாரார், பொழுதையும் பாரார், போஜனத்தையும் பாரார். ஆலோசனையின் முடிவில் துணிவு பெற காரியத்தில் தளர்ச்சி இன்றி முயற்சி செய்ய வேண்டும். முயற்சி இன்றி எந்த காரியமும் வெற்றி பெற முடியாது. முயற்சியிலேதான் செல்வமும், சேனைகளைப் பெரும் பாக்கியமும் உண்டாகிறது. தட்டில் உள்ள சோறு வாயிலே புக நம்முடைய கைதான் நமக்கு கை கொடுக்க வேண்டும்.
ஆகவே நீர் இப்போது சிசுபாலன் மீது போர் தொடுக்கும் முன்னர் ஒற்றர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். உன்னிடத்தில் உள்ள வலிமைகளின் நிலையையும், அவனிடத்தில் உள்ள வலிமைகளின் நிலைமையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பொது நெறியையும் நோக்க வேண்டும். இவற்றை எல்லாம் பார்க்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என போர் தொடுப்பது அறிவான செயலாக இருக்காது.
சிசுபாலன் அற்பமான பகைவன் என்று அவமதிக்கத்தக்கவன் அல்ல. அவனும் போர் தொழிலில் தேர்ச்சி பெற்ற வீரன். துணை வலிமை மிக்க சூரன். கலங்காத நிலையைக் கொண்ட அகங்கார குணத்தைக் கொண்டவன். ஒருவனுக்கு வந்துவிடும் ஷ்யரோகம் என்ற பெரும் வியாதி மருந்து கொடுக்கவில்லை என்றால் அதிகம் வளர்வது போல தீமைகளை வளர விட்டுக் கொள்ளும் அவன் மேலும் பல அரசர்களையும் தன்னுடன் துணைக்கு அழைத்து வரக் கூடியவன். நீங்கள் செல்லும் போராட்டக் களத்திலே பல அரசர்களும் வரக்கூடும். உம்மோடு பகை கொண்டுள்ள அரசர்களும் இந்த நேரத்தில் அவனுக்கு துணையாக வந்து உம்முடன் போர் தொடுப்பார்கள். அது போல உமக்கும் அவனுக்குப் பகையான மன்னர்கள் வந்து உனக்கு துணை புரிவார்கள். தருமனின் யாகத்துக்கு வரும் மன்னர்கள் அனைவருமே உனக்கும் துணையாக நிற்பார்கள் என்று எண்ணி விடாதே. அவர்கள் அனைவரும் தருமனுடன் ஒன்று சேர்ந்து, 'ஐயோ இப்போது இந்த யுத்தத்தைத் துவக்கி எமது யாகத்துக்கு பங்கம் விளைத்து விடாதீர்கள்' என்று உமக்கு நெருக்கடியும் தருவார்கள். வலியவர்களாக இருந்தாலும் சத்ருக்களை மெல்ல மெல்ல மாற்ற முடியும். மித்ரர்கள் மனம் வேறுபட்டால் அது இணைவது கடினம்.
நீங்கள் மித்திர காரியத்தை விட தேவ காரியமான யாகத்துக்கு செல்வதே சிறந்தது என்று எண்ணுவீர்கள். யாகம் முடிந்தப் பின் தமக்குக் கொடுக்கும் யாக அவிரைக் கொடுத்தால் தேவர்களூம் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சத்ருவைக் கொல்லும் போது அத்தனை மகிழ்ச்சியை அடைய முடியாது.
சிசுபாலம் குழந்தையாகப் பிறந்தபோது நான்கு கைகளையும் நெற்றிக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்களுடன் தோன்றினான். அந்தக் குழந்தைஒன் அற்புத வடிவைப் பார்க்கப் பலரும் போய் இருந்தார்கள். அப்போது நீங்களும் அங்கு சென்றீர்கள். அவனது தாயாரோ அவனை தனித் தனியாக அனைவரது மடியிலும் வைத்து எடுத்தாள். உன் மடியிலும் அவனைக் கிடத்திய அடுத்தகணமே அவனுக்கு இருந்த மீதி இரண்டு கைகளும் மூன்றாம் கண்ணும் மறைந்து போயிற்று. அதைக் கண்ட அவனுடைய தாயாரான சாத்துவதி ' மிகையான (அதிகமான) அவயங்கள் எவரால் காணாமல் போயினவோ, அவனாலேயே இவனுக்கு மரணம் நேரும்' என்று கூறியப் பின் அழுது புலம்பி விட்டு, 'அப்பா, இவன் செய்யும் குற்றங்களை மனதில் வைத்திராது அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்று உம்மிடம் கேட்டாள் . நீரும் அதைக் கேட்டு 'சரி அம்மா, இவன் எனக்கு செய்யும் குற்றங்கள் அல்லது நிந்தனைகளை நூறுக்கு வரை நிச்சயமாகப் பொறுத்துக் கொள்வேன். நூறு குற்றங்களுக்கு மேல் அல்லது நூறு நிந்தனைகளுக்கு மேல் அவன் செய்தால்தான், அவனுக்கு என்னால் மரணம் சம்பவிக்கும் என்பதி உறுதியாகக் கூறுகிறேன் ' என்று கூறினீர்கள். அந்த வாக்கை மீறக் கூடாது. வாய்மை தவறாகக் கூடாது. எதற்குமே காலமும் வந்து கைகூட வேண்டும். ஒற்றர் இல்லாத அரசியல் எத்தனை சிறப்பாக இருந்தாலும் அது காரியத்துக்கு உதவாது. சத்ருவோடு சார்ந்தது நிற்கும் ஜனங்களையும் பேதம் செய்து பிரித்து விட ஒற்றர் தேவை. இப்படியாக நீங்கள் உங்கள் படை வலிமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்திரப்பிரத்த நகரிலே அனைத்து அரசர்களும் வந்து கூடுவார்கள். அவர்களில் சத்ருவின் நண்பர்களை ஒற்றர்கள் மூலம் அந்தரமாக்கிக் கொண்டு அவனை பலவீனப்படுத்தி விட வேண்டும். நீங்கள் தர்மரின் யாகத்துக்குச் சென்றால் தருமர் அக்கிர பூஜயையும் (பூஜையில் தரப்படும் முதல் மரியாதை என்பதே அக்கிர பூஜை என்பது) உமக்கே செய்வார். நாங்களும் அங்கு வருவோம். சிசுபாலனும் அங்கு வருவான். உங்களுக்குக் கிடைக்கும் அக்கிர பூஜையை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் உங்களை நிந்திப்பான். வாய்க்கு வந்தபடி கூறுவான். சண்டைக்கும் வருவான். அப்போது அங்கிருக்கும் மன்னர்கள் யாக சபை என்றும் பாராமல் வாய்க்கு வந்தபடி பேசும் இவனுடன் நட்பு கொள்வது கேவலம் என்பதை உணர்ந்து அவனை விட்டு விலகுவார்கள். அப்போது நீர் காட்டும் வீரத்தனத்தால் விளக்கிலே வந்து விழும் விட்டில் பூச்சிப் போல அவன் வந்து உங்கள் வலையில் விழுந்து மரணம் அடைவான். அதுவரை பொறுத்திருந்து மித்ரகாரியத்தின் மூலம் தேவகாரியத்தை வெற்றியோடு செய்து முடிக்க வேண்டும் ' என்று தனது கருத்தைக் கூறினார். மூவரும் அதன் பின் ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக் கொண்டப் பின் அவரவர் வீடுகளுக்கு கிளம்பிச் சென்றார்கள்.

..............தொடரும்  

முந்தைய பாகங்கள்

Sisupala Charitham -2


 
சாந்திப்பிரியா

பாகம்- 2

முன்னொரு காலத்தில் பூ உலகில் பாரத கண்டம் என்றொரு பூமி இருந்தது. அங்கு வாசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக நாராயண பகவானான கிருஷ்ணர் பிறந்தார். அதன் பிறகு சில காலம் பொறுத்து வாசுதேவரின் சகோதரியான சாத்துவதி என்பவருக்கும் தமகோஷன் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார் சிசுபாலன் என்பவர்.  முந்தைய ஜென்மத்தில் ராவணனாக பிறந்து இருந்து ராமரால் வதம் செய்யப்பட்டவர் சிசுபாலன். அவருக்கு பூர்வ ஜென்மத்தில் மறுபிறப்பிலும் ராமரின் ஒரு அவதாரத்தினால் மரணம் கிட்டும் என்ற விதி இருந்தது. பிறந்த குழந்தை பெரியவனாகி சிசுபாலன்  எனப் பெயர் கொண்டு சேதி எனும் ஒரு நாட்டின் மன்னரானார்.
அப்போது ஒரு முறை நாரதரை தேவலோகத்துக்கு அழைத்த இந்திரன் அவரிடம் கூறினார் ' ஸ்வாமி, வர வர சேதி நாட்டை ஆண்டு வரும் சிசுபாலனின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. தேவர்களை துன்புறுத்துகிறான்.  பிறரையும் துன்புறுத்துகிறான். அவனுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஆகவே அவரை அடக்க வேண்டும், அல்லது அவரை கொல்ல வேண்டும் என்றால் அது கிருஷ்ணரால் மட்டுமே முடியும் என்று ராஜ பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆகவே தயவு செய்து நீங்கள் துவாரகாபுரிக்குச் சென்று, கிருஷ்ணரை சந்தித்து அவரிடம் சிசுபாலம் செய்திடும் அட்டகாசங்களைக் எடுத்துக் கூறி, அவரிடம் சிசுபாலனை வதம் செய்ய வேண்டும் என்று என் சார்ப்பில் கேட்டுக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்.
அதைக் கேட்ட நாரதரும் அதி விரைவாக பூலோகம் நோக்கிச் சென்றார்.
அவர் பூலோகம் நோக்கிச் சென்றபோது சூரியனே பூலோகத்தில் இறங்கிச் செல்வதைப் போன்ற ஒளி காணப்பட்டது. கண்ணபிரானும் வருவது சூரியனாரோ என்றே  எண்ணிக் கொண்டு அமர்ந்து இருந்தார்.  ஆனால் தன்னை நோக்கி ஒளிப் போல வந்தது நாரத முனிவர் என்பதைக் கண்டதும் எழுந்து சென்று அவரை வரவேற்ற கண்ணபிரான் அவருக்கு அர்க்கியம் கொடுத்து உபச்சரித்தப் பின் நாரதரிடம்  'மாமுனிவரே, உமது வரவு நல்வரவாக இருக்கட்டும்.  தாங்கள் வந்த காரியத்தை கூறுவீர்களா' என்று கேட்டார். அர்க்கியம் கொடுப்பது என்றால் வந்துள்ளவரை கௌரவிக்கும் வகையில் அவர் கையில் நீரை கையில் ஊற்றி அவரை வணங்கி வரவேற்பதான ஐதீகம்.  அதைக் கேட்ட  நாரதர் கூறினார் 'கண்ணா, நீரே மூன்று  உலகிற்கும் காவலர். முனிவர்களுக்கு கிருபை செய்பவர். நல்லோரைக் காத்து தீயோரை அழிக்கப் பத்து அவதாரங்களை எடுத்தவர். பன்றி  அவதாரம் எடுத்து கடலில் மூழ்கிய பூமியை மேலே தூக்கி வந்தவர். நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்தவர். ராமவதாரத்தில் ராவணனை வதம் செய்தவர். அந்த ராவணனே தற்போது சிசுபாலன் என்ற பிறப்பு எடுத்து வந்து சேதி எனும் நாட்டின் அதிபதியாக இருக்கிறார். அவர் தேவர்களுக்கும், அரசர்களுக்கும் சொல்லொணாத்  துன்பங்களைத் தந்து வருகிறார். முன் பிறப்பில்தான் துஷ்டனாக இருந்தான் என்றால் இந்தப் பிறப்பில் அதை விட அதிக துஷ்டனாக இருக்கிறான். அவனால் பூமியில் உள்ளவர்களுக்கு நிம்மதி இல்லை என்பதினால் அவனது கொட்டத்தை அடக்கி அவனை தாங்கள் வதம் செய்ய வேண்டும் என்று இந்திரன் விடுத்துள்ள வேண்டுகோளை நான் கொண்டு வந்துள்ளேன்' என்று கூறினார். மேலும் இந்திரன் அவரிடம் கூறிய, சிசுபாலனின் அக்கிரச் செயல்களை விஸ்தாரமாக எடுத்துரைத்தார். அதைக் கேட்ட கண்ணபிரானும் அவருக்கு ஆறுதல் கூறி தாம் அந்த வேலையை செய்து முடிப்பதாக உத்திரவாதம் தந்து அவரை அனுப்பினார்.
அவர் சென்றதும்  சிசுபாலனின் அட்டகாசங்களை எண்ணிப் பார்த்து வருத்தம் அடைந்தார் கிருஷ்ணர்.   அவனுக்கு புத்தி சொல்லித் திருத்துவது நடக்காத காரியம் என்பதை புரிந்து கொண்டார்.  ஆகவே அவனை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதையும் உணர்ந்தார்.  ஆகவே அவனை வதம் செய்ய என்ன செய்யலாம், எந்த மாதிரியான சேனைகளோடு யுத்தத்துக்கு செல்வது என்றெல்லாம் யோசனை செய்து பார்த்தார். அவருடைய வருத்தம் என்ன என்றால் என்ன இருந்தாலும் சிசுபாலன் அவருடைய  தந்தையின் சகோதரியின் மகன் அல்லவா.  அதே சமயத்தில் தருமர்  செய்ய இருந்த  ராஜசூய யாகத்திற்கு கிருஷ்ணர் கட்டாயம் வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்து இருந்தார். ராய சூயம் என்பது ராஜாக்களினால் அதாவது மன்னர்களினால் மட்டுமே செய்யப்படும் ஒரு விசேஷமான யாகம் ஆகும்.
அதனால் கிருஷ்ணருக்கு மனதில் சஞ்சலம்  ஏற்பட்டது 'ஒரே நேரத்தில் இரண்டு காரியங்கள் வந்துள்ளன. முதலாவது காரியம்  தேவர்களுக்கு நன்மை பயக்கும் காரியமான சிசுபால வதம். அது தேவ காரியம். இரண்டாவது காரியம்  நண்பருக்கு மதிப்பு அளிக்கும் மித்ர காரியம்.  இவற்றில் எதை விடுவது, எதை செய்வது? இரண்டுமே முக்கியமானவை ஆகும். ஆனால் ஒரே நேரத்தில் வந்துள்ள இரண்டையும் எப்படி எதிர்கொள்வது? கடமை எது? காரியம் எது?  ' ஆகவே ஒரு முடிவுக்கு வர முடியாமல் மனம் குழம்பியபோது தனது சகோதரர் பலராமரையும் உத்தவ முனிவரையும் வரவழைத்தார். உத்தவர்  என்பவர் வாசுதேவருடைய  இளைய சகோதரராகிய தேவபாகன் என்பவருடைய புதல்வர்.  வியாழ பகவானின் சீடர். மெத்தப் படித்தவர். கிருஷ்ணருக்கு  ஒன்றுவிட்ட சகோதரர் முறை ஆகும்.  அவர்கள் இருவரும் வந்தப் பின்  இருவரையும் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தனக்கு வந்துள்ள இக்காட்டான நிலைமையையும்,  அதனால் தனக்கு ஏற்பட்டு உள்ள சஞ்சலத்தையும் எடுத்துக் கூறி அவர்களது கருத்தைக்  கேட்டார்.
.....தொடரும்


முந்தைய பாகங்கள்

Sisupala Charitam-1


 
சாந்திப்பிரியா

சமிஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ள ரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம், நைடதம், மற்றும் கிராதர்ஜீனியம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச காவியம் என்று கூறுவார்கள். அவற்றில் சிசுபால சரிதம் என்பது எட்டாம் நூற்றாண்டில் மகா எனும் கவிஞரினால் இயற்றப்பட்டுள்ளது. இது மகாபாரதத்தில் வரும் ஒரு கதை ஆகும் .  மகா என்பவர் முன்னர் குஜராத்தின் பகுதியில் இருந்த ஆனால் தற்போது ராஜஸ்தான் மானிலத்தில் உள்ள பகுதியை ஆண்டு வந்த வர்மாலதா என்ற மன்னனின் அரசவைக் கவிஞராக இருந்தவர். அவர் இழற்றிய இந்த சிசுபால வதம் அல்லது சிசுபால சரிதம் எனப்படும் இந்த நூல் 20 காண்டங்களைக் கொண்டு 1800 செய்யுள்களாக இயற்றப்பட்டு உள்ளது. அவர் இயற்றி உள்ள இந்த பாடலில் உள்ள வார்த்தைகள்  முன் பின் இருவழியிலும் ஒத்த அதாவது ஒரே எழுத்துக் கோப்பைக் கொண்டுள்ள செய்யுளாக எழுதப்பட்டு உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த பாடல்.


सकारनानारकासकायसाददसायका ।
रसाहवावाहसारनादवाददवादना ॥ 
 

மொத்தம் பதினாறு அட்ஷரங்களைக்  கொண்டு  உள்ள இந்த செய்யுளின் (பாடல்) இரண்டு வரிகளையும் எட்டு ஏட்டு அட்ஷரங்களாக நான்கு வரிகளில் அவற்றை பிரித்து எழுதுங்கள்.
இப்போது வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள். இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேல் இருந்து கீழ் என எப்படி படித்தாலும்  ஒரே வார்த்தை வருவதைப் போல உள்ளதை "கத ப்ரத்யாகதம்" என்கிறார்கள்.  மாக  எனும் அந்த கவிஞன்  ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தை என்றில்லாமல் ஒரு  ஒரு பெரிய வாக்கியத்தையே  இப்படி  செய்துள்ளார் என்பது இந்த காவியத்தின் சிறப்பாகும்.
சிசுபாலன் என்பவர் சேதி எனும் ஒரு நாட்டை ஆண்டவர். இந்த நாடு மகாபாரத காலத்தில் இருந்தது. சிசுபாலனை ராவணனின் மறு பிறவி என்பார்கள். சிசுபாலனைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், வில்லிபுத்தூர் பாரதம், மற்றும் பாகவதங்களிலும் உள்ளன. மேலும் சிசுபாலன் பகவான் கிருஷ்ணரின் தந்தையின் சகோதரியின் மகன். கிருஷ்ணர், சிசுபாலனின் தாயாருக்கு கொடுத்த வாக்கின்படி சிசுபாலன் செய்த நூறு தவறுகளை பொறுத்திருந்து பார்த்தப் பின், கிருஷ்ணர் குறிப்பிட்டு இருந்த எல்லைகளைக் கடந்தபோது, அதாவது 100 பிழைகளை மீறிய போது, எல்லா அரசர்களின் முன்னிலையில் சிசுபாலனை தனியாக போருக்கு அழைத்து அவரை கிருஷ்ணர் தனது சக்கராயுதத்தால் கொல்கிறார். இந்த சரித்திரம் படிக்க மட்டும் அல்ல  மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. ஒருவர் தனது பந்த பாசம் மற்றும் உறவுகளையும் மீறி உலகத்தின் நன்மைக்காக தனது கடமையை செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் காவியமாக உள்ளது. இனி அந்தக் கதையைப் படியுங்கள். 
........தொடரும் 

Wednesday, July 25, 2012

Clarification

சிறு விளக்கம்
சாந்திப்பிரியா 

நான் துலா புராணத்தை எழுதியபோது ஒருமுறை என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியையும்  அதற்கான விளக்கத்தையும் கீழே தந்துள்ளேன். 

கேள்வி:- ஒருவர் இறந்தப் பின் அவருடைய ஆத்மா மட்டுமே மேல் உலகம் செல்லும். அவர்களுடைய உடல் பூமியில் புதைக்கப்படுகிறது அல்லது எரித்து விடப்படுகிறது எனும் போது, யம லோகத்தில் அவர் கைகளை வெட்டினார்கள், அவர் உடலை நாய்கள் தின்றது,  யமதர்மராஜர் தர்மலனை ஸ்யாமா மற்றும் சபள என்ற வெறி நாய்கள் கடித்துக் குதறுமாறு ஆணை இட்டார், அவரை கொதிக்கும் எண்ணையில் போட்டார்கள் என்றெல்லாம் கூறப்படுவது அபத்தமாக உள்ளதே.
பதில்:- கேள்வி நியாயமானதுதான். ஆனால் உண்மை நிலை வேறானது. ஒருவர் இறந்தப் பின் அவர்களது ஆத்மா மட்டுமே யம லோகத்துக்கு செல்கிறது என்பதும் உண்மையே. ஆனால் பதிமூன்று ஜென்ம காலத்துக்கு பிறவி எடுக்கும் அந்த  ஆத்மா  மேல் உலகிற்கு சென்றதும், முதலில் அந்த ஆத்மாவிற்கு அதன் சுய உருவத்தையும், அதன் உணர்வுகளையும், அது பூமியில் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில்  கொடுக்கிறார்கள்.  அதாவது பூமியில் இருந்த உருவத்தின் அதே எண்ணங்களுடன் உருவங்களுடனான  ஒரு மாய உருவிலான உடலில் புக வைக்கிறார்கள். அப்படிப்பட்ட மாய உடல்கள் இந்த காரணத்திற்காகவே  யம லோகத்தில் கோடிக் கணக்கில் உள்ளன. அந்த மாய உடல்கள் பூமிக்கு வர இயலாது. காரணம் அது ஜடப் பொருளால் ஆனது அல்ல. ஆனால் அதைப் போன்ற தோற்றத்தை தரும் மாய உடல்கள் அவை.  மாய உடலில் புகுந்து கொண்டு விட்ட  ஆத்மாவிற்கு அந்த நிமிடம் முதல் ஆத்மா என்ற  நினைவு இருக்காது.  தன்னை பூமியில் இருந்த மனிதனாகவே நினைத்துக் கொள்ளும். ஆகவே அந்த ஆத்மாவின் சொந்தக்காரனுக்கு அவனவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைகளைத் தரும்போது அவை அந்த வேதனைகளை அனுபவிக்கும். அந்த மாய உருவத்தின் உடலுக்கு இழைக்கப்படும் அனைத்து கொடுமைகளும்,  செயல்களும் அந்த மாய உருவ உடலில் உள்ள ஆத்மாவின் எண்ணங்களைத் தாக்கும். அப்போது உண்மையில் தான் பூமியில் உள்ள உடலில் உள்ளது போலவே நினைத்துக் கொண்டுள்ள அந்த மாய உடலில் உள்ள ஆத்மா அந்தக்   கொடுமைகளைக் கண்டு  அலறித் துடிக்கும். இந்த நிலை அதற்கு மறு பிறப்பு தரப்படும் வரை நீடிக்கும்.

மாய உடலில் உள்ள ஆத்மாக்கள் தம்மை 
மனிதனாகவே நினைத்துக் கொள்ளும்  

தான் பூமியில் இருந்த உடலுடனேயே உள்ளதாக நினைத்துக் கொண்டுள்ள ஆத்மாக்களின் நினைவலைகளில் அந்த நிகழ்வுகள் ஆழமாகப் பதியும். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் உள்ளே கோடிக்கணக்கான கம்பியூட்டர் போன்ற நினைவு துணுக்குகள் (Memory Chips) அலை வடிவில் உள்ளன. அவை அந்த ஆத்மாக்களின்  தனிப்பட்ட நினைவலைகள்.  அவற்றை அந்த ஆத்மாவிடம் இருந்து பிரிக்க முடியாது. அதை பிரித்து விட்டால் அது ஆத்மாவல்ல. அழிந்துபோன ஆத்மா ஆகிவிடும்.   மாய உருவிலான உடலுக்கு தரப்படும் தண்டனைகள் உண்மையில் உள்ள உடலுக்கு தரப்படும் தண்டனையைப் போலவே உள்ளதினால்  அதன் எண்ணங்களில் நெகிழ்ச்சியும், துன்ப வேதனைகளும் பதியும்.  அதற்காகவே இது செய்யப்படுகிறது. ஆகவே யம லோகத்தில் அவர் கைகளை வெட்டினார்கள், அவர் உடலை நாய்கள் தின்றது,  யமதர்மராஜர் தர்மலனை ஸ்யாமா மற்றும் சபள என்ற வெறி நாய்கள் கடித்துக் குதறுமாறு ஆணை இட்டார், அவரை கொதிக்கும் எண்ணையில் போட்டார்கள் என்று கூறப்படும் அனைத்தும் உண்மையாக நடைபெறும் நிகழ்ச்சிகள். இந்த செய்தியில் மாறுதல் ஒன்றுதான்- தண்டனைகளைப்  பெறுவது  தமது எண்ணங்களுடன் உள்ள ஆத்மாக்களின்  மாய உடல்கள்.  இதில் அபத்தம் எதுவுமே இல்லை

கேள்வி:- இது போன்ற புராணங்களில் அவர்கள் ஏழாயிரம் மனைவிகளை மணந்து கொண்டார்கள். பத்தாயிரம் வருடம் தவம் செய்தார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறதே. அப்படி என்றால் மனிதர்கள் பத்தாயிரம் ஆண்டுகளாக வசித்து இருக்க முடியுமா? ஏழு அல்லது எட்டாயிரம் மனைவிகளுடன் வாழ்ந்து இருக்க முடியுமா? அதுவும் அபத்தமாகவே உள்ளதே.
பதில்:- இதில் அபத்தம் எதுவுமே இல்லை. மனிதர்கள் தாராளாமாக பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். நீங்கள் படித்து இருப்பீர்கள். இந்த யுகம் பிரும்மாவினால் படைக்கப்பட்டபோது அதை நான்கு யுகங்களாகப் பிரித்தார். மனிதர்கள் தோன்றியதையும் யுகங்களையும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி  பால் தரும் பிராணிகளான மம்மல்கள்  என்பவை 85 மில்லியன் வருடங்களுக்கு முன் இருந்துள்ளன என்றும், மனிதர்கள் எதோ ஒரு ரூபத்தில் 2.50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து இருந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.  நம்மில் யாருக்காவது  ஆராய்ச்சியாளர்களின் கூற்றான  பூமியின் வயது  4,540,000,000,000  (4.54 பில்லியன் ) ஆண்டுகள் என்பதை நம்ப முடிகிறதா? 
இதைக் கண்டு பிடித்து உள்ள ஆராய்சியாளர்களினால் அந்த காலத்தில் யார் எப்படி எத்தனை வருடங்கள் இருந்துள்ளார்கள் என்ற கணக்குகளை இதுவரை  கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால்தான் புராணங்களில் கூறப்படும் சத்ய யுகத்தில் வாழ்ந்திருந்தவர்களின் சராசரி வாழ்கையின் (வயது) அளவு 100,000 வருடங்கள், திரேதா யுகத்தில் இருந்தவர்களின் சராசரி வாழ்கையின் (வயது) அளவு 10,000 வருட காலங்கள், துவாபர யுகத்தில் 1000 ஆண்டுகள் மற்றும் கலி  யுகத்தில்  100 ஆண்டுகள்  என்பதை ஆராய்ச்சியாளர்களால் கூட ஆதாரபூர்வமாக மறுக்க முடியவில்லை. இந்த வயதுக் கணக்குகள் புராணங்களில் உள்ளன.
கடந்த நூறு அல்லது இருநூறு ஆண்டுகளில் இருந்த நமது ராஜா மகாராஜாக்களின் வாழ்க்கையைப்  பார்த்தால் அவர்களில் சிலர் நூற்றுக்கணக்கான மனைவிகளை  மணந்து கொண்டு  இருந்த வரலாறு உள்ளது.  ஆகவே மனித இனம் முன்னேறிய காலத்திலேயே இந்த நிலை உள்ளதைக் காணும்போது  2,50,000 ஆண்டுகளுக்கு முன்னர் லட்ஷ வருடங்கள் வரை வாழ்ந்திருந்ததாக கூறப்படும் தேவ மனிதர்களுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் இருந்திருந்ததில் ஆச்சர்யம் என்ன உள்ளது?

Monday, July 23, 2012

Thula Puranam -20

துலா புராணம்- 20

காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியாபாகம்- 21

காவேரி கிளம்பியபோது தேவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் சாரணர், கிங்கர்கள், பித்ருக்கள், மகாத்மாக்கள் போன்ற அனைவரும் வானத்தில் குமுழி இருந்து பத்து திக்குக்களையும் பிரகாசப்படுத்திக் கொண்டு காவேரியின் பிரவாஹத்தைப் பாத்துக் கொண்டு நின்றார்கள். அப்ஸரைகள் ஆகாயத்தில் ஆடினார்கள். இந்திரனும் தேவர்களும் புஷ்பமாறி பொழிந்தார்கள். தேவ கணங்களால் துதிக்கப்பட்ட பிரும்மா, விஷ்ணு, மகேஸ்வரர் என அனைவரும் அங்கு வந்து காவேரியை வாழ்த்தினார்கள். இங்ஙனம் வரம் பெற்றவளும், மும்மூர்த்திகளின் வடிவமானவளும், ஜ்யோதி ஸ்வரூபவானவளுமான காவேரி சந்தோஷமாக வேதாரண்யத்துக்கு சென்று அங்கு அவள் சமுத்ரராஜனுடன் கலந்த வைபவத்துக்கும்  சென்று அந்த விவாஹத்தை சிறப்பாக நடத்தி வைக்க அங்கு சமுத்ரராஜனுடன் திருமணம் செய்து கொண்ட காவேரியை பிரும்மா கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அந்த உற்சவமும் வெகு சிறப்பாக நடந்தேறியது. அந்த வைபவத்தில் அவர்களை ஆசிர்வதித்த மகாவிஷ்ணு 'பத்தாண்டு என் கதையைக் கேட்டால் கிடைக்கும் புண்ணியத்தை உன் சரித்திரத்தைக் கேட்பவர்கள் பெறுவார்கள்' என்று வரம் தந்தார்.

 காவேரிக்கு அருள் புரியும் மும்மூர்த்திகள் 

இப்படியாக காவேரி மகாத்மியத்தைக் கூறி முடித்ததும் அரிச்சந்திரன் அகஸ்திய முனிவரை பத்தாயிரம் ஸ்வர்ண புஷ்பங்களாலும், திவ்ய தூப தீபங்களாலும் பூஜித்தார். அதன் பின் தானும் தனது பரிவாரங்களையும் சைனியங்களையும் அழைத்துக் கொண்டு காவேரி ஸ்னானம் செய்து விட்டு ஸ்ரீ ரங்கநாதரையும் பூஜித்து விட்டு வந்து அஸ்வமேத யாகத்தை செய்து முடிக்க வேண்டுமே என்பதாற்காக உடனடியாக காவேரி ஸ்னானம் செய்யக் கிளம்பிச் சென்றார்.
காவேரி ஆற்றில் ஸ்னானம் செய்யும் பக்தர்கள்  
 துலா காவிரிப் புராணம் முடிவுற்றதுமுந்தைய பாகங்கள் 


Sunday, July 22, 2012

Thula Puranam - 19

துலா புராணம்- 19

காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியாபாகம்- 20

அகஸ்தியர் ஸ்நானம் செய்து விட்டு பெரும் காற்றும் மழையுமாக இருக்கிறதே என்று பயந்து கொண்டு ஓடோடி வந்தார். வந்தவர் கமண்டலம் கவிழ்ந்து இருந்ததைக் கண்டார். 'ஐயோ, காவேரி எங்கு போய் விட்டாள்' என்று அங்கும் இங்கும் தேடி அலைந்தப் பின் ஆஸ்ரமத்திற்கு சென்று தமது சிஷ்யர்களிடம் 'காவேரி எங்கே' என்று கேட்டார். அவர்களும் பயந்து போய் 'குருவே, நாங்களும் ஸ்நானம் செய்யச் சென்றபோது பெரும் காற்று அடித்ததே என்று ஓடி வந்தோம். வந்து பார்த்தால் கமண்டலம் கவிழ்ந்து இருந்தது. பெரும் நதியே அந்த இடத்தில் காணப்பட்டது' என்று கூறினார்கள். அகஸ்தியருக்கு துக்கம் தாங்க முடியவில்லை. தன்னிடம் காவேரியை ஒப்படைத்து இருந்த பிரும்மா கேட்டால் என்ன சொல்வேன் என்று அழுதபடி அந்த நதி பிறந்து இருந்த இடத்த்குக்குச் சென்று 'காவேரி, காவேரி' எனக் கதறினார் .
காவேரி நீ எங்கு சென்றுவிட்டாய் எனக் கதறிய  
அகஸ்திய முனிவர் முன் நதியில் இருந்து தோன்றினாள்  காவேரி 

உடனே காவேரியும் அந்த நதியில் இருந்து வெளி வந்து தன் சுய உருவைக் காட்டினாள் . அகஸ்த்தியர் கேட்டார் 'ஜகன்மாதா, நீ எங்கு சென்று விட்டாய்? மந்தஹாசமுள்ளவளே , மூன்று குணங்களிலும் சிறந்தவளே, அழகானவளே, லஷ்மிக்குத் தோழியானவளே , ஸ்ரீபதியின் சக்தி வடிவமானவளே, நீ எங்கு சென்று விட்டாய். என் மீது உனக்கு என்ன கோபம். எனது முன்னிலையில் நீ சென்று இருக்கலாம் அல்லவா ?' என்றெல்லாம் கூறி அவளை அஞ்சலி செய்தார்.
அதற்கு காவேரி கூறினாள் ' யோகீந்த்திரா, உமது ஆக்ஞயை ஏற்றுக் கொண்டல்லவா நான் இந்த மலையில் இருந்து ஏற்கனவே முடிவானபடி கிளம்பிச் சென்றேன். சஹஸ்ய மலையில் இருந்துதான் நான் விஷ்ணுவின் அவதாரமான தத்தாத்திரேயரின் பாத சரணங்களை தொட்டுக் கொண்டு கிளம்ப வேண்டும் என்று பிரும்மாவும் விஷ்ணுவும் கூற நீங்களும் அதை ஆமோத்தித்தீர்கள் அல்லவா. அதனால்தான் உங்களையும் நினைத்துக் கொண்டுதான் பிரும்மகிரியில் இருந்துக் கிளம்பினேன். புண்ணிய காலத்தில் கிளம்ப வேண்டும், அதற்க்கு நேரமாகி விட்டது என்பதினால் நீங்கள் இல்லாவிடிலும், உங்கள் நினைவை என் இதயத்தில் வைத்துக் கொண்டு அல்லவா கிளம்பினேன். என்னுடன் அந்த புண்ணிய காலத்தில் புறப்பட்டு வர பல புண்ணிய தீர்த்தங்களும் அங்கு காத்துக் கிடந்தார்கள். ஆகவே வேறு வழி இன்றி கால தாமதத்தை தவிர்ப்பதற்காக உடனே துலா மாதத்தில் நான் கிளம்ப வேண்டியதாயிற்று. மகா பாபிகளாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும் எனது மகாத்மியத்தை சொல்பவர்களும், கேட்பவர்களும் விஷ்ணு பதத்தை அடையட்டும் என்று வேண்டிக் கொண்டுதான் இங்கிருந்துக் கிளம்பினேன். யோகின், விஷ்ணுவின் ஆணையை ஏற்று அவர் பாத ஜலத்துடன் கிளம்பும்போது சர்வ துக்கங்கள் நீங்கவும், சர்வ பாபங்கள் அகலவும், சர்வ தோஷங்கள் நீங்கவும் என்ன தக்ஷிண கங்கை என்று போற்றி அனைவரும் என்னுள் ஸ்நானம் செய்து பூரண கதி அடைய வேண்டும் என்றுதான் நதியாகக் கிளம்பினேன். என் நதியில் ஒரு நாள் ஸ்நானம் செய்ததாலும் அனைத்து பாபங்களும் விலகும். நெல்லி மரமாகிய பகவானின் பாதாத்திற்கு பிரும்மா ஆகாச கங்கை எனப்படும் மாபெரும் புண்ணிய தீர்த்தமான வீராச தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த அபிஷேக நீரும் கலந்து வந்துள்ளதால் என் நதிக் கரையில் பிரும்மனை நாடி பிண்டத்தைத் தந்தால் கயாவில் சிரார்த்தம் செய்தப் பலனை பித்ருக்களுக்குத் தரும் என்றெல்லாம் சங்கல்ப்பம் செய்து கொண்டுதான் உடனடியாக கிளம்பினேன். நான் உள்ளவரை லோகம் உங்களையும் நினைவில் வைத்து இருக்கும். நான் தென் திசைக்கு வந்ததின் காரணம் நீர் அல்லவா. ஆகவே என்னால் உங்களுக்கும் பெருமை வரட்டும் என்று வேண்டிக் கொண்டே கிளம்பினேன். நாம் எதற்காக இங்கு வந்தோமோ அது நடந்து முடிந்து விட்டது. ஆகவே இனி நீங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டாள்.
இப்படியாக காவேரி கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அகஸ்த்தியர் கூறினார் 'ஓ, தேவி, நடந்தது எல்லாமே நல்லதற்குத்தான். உன்னிடம் நான் வைத்து இருந்த அன்பினால்தான் நான் உன்னைப் பிரிந்து விட்டது போல உணர்ந்தேன். ஜகதாம்பிகே, நீ உன் எண்ணப்படி உலகத்தைக் காக்கக் கிளம்பிச் செல். நானும் அதற்கு ததாஸ்து கூறுகிறேன். ஹரிபாத தீர்த்தம், சங்கம தீர்த்தம் என்று உன்னை அனைவரும் புகழ் பாடுவார்கள். உன்னில் ஒரு முறை ஸ்னானம் செய்தாலும் அநேக பாபங்கள் அகலட்டும். நெல்லி மரமாகிய பகவானுக்கு பிரும்மா விராஜ தீர்த்ததினால் அபிஷேகம் செய்தார் என்பதினால் அந்த ஆகாய கங்கை நீருக்குப் புனிதமானது இந்த லோகத்தில் வேறு ஏது இருக்க முடியும்? உன் கரைகளில் பித்ரு சிரார்த்தம் செய்தால் கயாவில் பத்தாயிரம் சிரார்த்தம் செய்ததற்கான பலன் உண்டாகட்டும். ஓ, காவேரி சகல புண்ணிய தீர்த்தங்களிலும் புனிதமானவளாக நீ இருப்பாய். நினைத்த இஷ்டங்களை நிறைவேற்றித் தருபவளாக நீ இருப்பாய். விவேகமானவளே , இப்போதே நீ தென் திசையை நோக்கிச் சென்று தட்ஷின கங்கை என்ற பெயரைக் கொள்வாயாக. நான் அனைத்து ரிஷி முனிவர்களுடன் உன் கரைகளில் வாசம் புரிவேன். அவ்வபோது நாராயணரும் எங்களுடன் வந்து உரையாடுவார். அத்தனை புனிதமான கரையில் வந்து வணங்கும் பக்தர்கள் வந்து பித்ரு தர்ப்பணம் செய்தாலும் அவர்களது பித்ருக்கள் தோஷ நிவாரணம் அடைவார்கள். வைகுண்டத்துக்கு செல்வார்கள். அதற்குக் காரணம் தத்தாத்திரேயர் தனது கைகளினால் உன் தலையை வருடி ஆசிர்வாதம் செய்ததினாலும், நாராயணனின் அவதாரமாகவே உள்ள அவருடைய பாதங்களை தொட்டுவிட்டு நீ பிரவாகித்துக் கொண்டு இருப்பதினால் உன்னுள் வசிக்கும் கடவுள்களின் சக்தி அமோகமானது. ஆகவே தென் நாட்டவருக்கு தர்மத்தையும், கீர்த்தியையும் அளிக்க உடனே கிளம்பிச் செல்'.

தேவலோக  ரிஷி முனிவர்கள் காவேரியில் ஸ்னானம்  செய்து தமது 
சக்தியின் ஒரு பகுதியை அதில் விட்டார்கள் 

இப்படியாக தனது கணவரின் அனுமதியோடும், பிற தெய்வங்களின் ஆசிகளுடனும் சகாய மலையில் இருந்து ஜோவென்று சப்தமிட்டபடி பெரும் பிரவாகத்துடன் காவேரி கிளம்பிச் செல்ல வானம் முழுவதும் நிறைந்து இருந்த தெய்வங்களும், தேவர்களும், ரிஷி முனிவர்களும், அனைத்து கணங்களும் ததாஸ்த்து....ததாஸ்து என்ற கோஷத்தை எழுப்பியவாறு காவேரி நதியில் ஸ்னானம் செய்தப் பின் 'இது உனக்காகட்டும்' என்று தமது சக்தியின் ஒரு பாகத்தை அதில் விட்டப் பின் காவேரியை வழி அனுப்பி வைத்தார்கள்.
இப்படியாக கோடிக்கணக்கான தெய்வங்கள், தேவர்கள், கணங்கள் மற்றும் ரிஷி முனிவர்களின் ஆசிகளைப் பெற்ற காவேரி நதிக்க எண்ணிலா சக்தி பெருகியது. அவள் கிளம்பியதும் தேவ முனிகள், ரிஷிகள் என அனைவரும் அவளை ஆசிர்வதித்தார்கள். தேவதைகள் கூறினார்கள் ' ஆஹா. என்ன அற்புதமாக காவேரி காட்சி தருகிறாள். இவ்வளது பிரவாஹம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதது. அதை சர்வ வல்லமைப் படைத்த மகாதேவன் மட்டுமே அறிவார். நாம் எல்லோரும் அதிருஷ்டசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த காவேரி ஜலத்தில் பிராமணர்கள் நமக்கு தர்ப்பணம் செய்வார்கள். அரசர்கள் இதன் நதிக் கரையில் யாகங்கள் செய்து நம்மை ஆராதிப்பார்கள். உலக நன்மைக்காக பிரும்மாவினால் படைக்கப்பட்டவள் இவள்' . ரிஷி முனிவர்கள் கூறினார்கள் 'கலியை அகற்ற வல்லவலான காவேரியை பகவான் அல்லவா இந்த லோகத்துக்கு அனுப்பி உள்ளார். இந்த தீர்த்தம் பாலவனங்களை சோலைவனங்களாக அல்லவா ஆக்கும். இனி இதில் ஸ்நானம் செய்துவிட்டு நாம் யம பயமின்றி இருக்கலாம். இவள் பூமிக்கு சிறந்த ஆபரணம். காவேரி ஜெய ஜெய ....காவேரி ஜெய ஜெய ' என்று வாழ்த்துப் பாடியாப்பின் அதில் உடனேயே ஸ்நானம் செய்யத் தொடங்கினார்கள் . 
 
மைசூரில் உள்ள காவேரி நதியில் காவேரித் தாய் 

அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த பிரும்மா கூறினார் ' காவேரி உன் தீர்த்தத்தில் வசிப்பவர்கள் துர்புத்தி அடைந்தவர்கள் ஆனாலும், பாபிகளானாலும் அவர்கள் நற்கதியையே அடைவார்கள். வேதத்தைக் கற்காத பிராமணர்களும் உன்னிடம் வந்து ஸ்நானம் செய்யும்போது அவர்கள் வேதம் பயின்ற பலனைத் தர உள்ளாய். வாசுதேவனை துளசிதளத்தினால் நூறாண்டு பூஜை செய்தால் என்னப் பலன் கிடைக்குமோ அத்தனைப் பலன் உன்னுள் ஸ்நானம் செய்பவர்களுக்கு கிடைக்க உள்ளது. உன் நதியில் வந்து ஸ்நானம் செய்தப் பின் அன்னதானம் செய்பவன் கோடி ஆண்டு புண்ணியத்தைப் பெறுவான். உன் மகிமையை நூறாண்டு ஆனாலும் கூறி முடிக்க முடியாத அளவு மேன்மைக் கொண்டவள் நீ. ஸ்ரீரங்கன் சன்னதியில் காவேரி ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் அகலும். துலா மாதத்தில் உன்னில் ஸ்நானம் செய்தால் நூறு பிறவிகள் செல்வந்தனாகப் பிறப்பான். குருஷேத்திரத்திலும் கயாவிலும்  கோடி சிரார்த்தம் செய்ததின் பலன் இங்கு உன் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு ஒரே ஒரு முறை தர்ப்பணம் செய்பவனுக்குக் கிடைக்கும்' என்று கூறி அவளை ஆசிர்வதித்து அனுப்ப ஓ..ஓ.... என்ற ஓசையுடன் பிரவாகித்துக் கொண்டு சென்றவள் சமுத்திரராஜனுடன் கலந்தாள்.
.....தொடரும்


முந்தைய பாகங்கள்