Friday, March 18, 2016

Kaligambal (T)

மிகப் பழமை வாய்ந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேவியின் ஒரு ஆலயம் சென்னையின் நெரிச்சலான ஒரு சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாறு குறித்தோ அல்லது மகிமைக் குறித்தோ பலருக்கும் தெரிந்து இருக்கவில்லை. காளிகாம்பாள் ஆலயம் எனப்படும் இந்த ஆலயத்தின் மூல தேவியான பரப்பிரும்ம சொரூபிணி காளிகாம்பாள் சென்னையின் கடற்கரையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தருளி தற்போது ஆலயம் உள்ள இடத்தில் வந்து அமர்ந்துள்ளாள். ஆலயம் 400 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் அது தவறு ஆலயம் 400 ஆண்டுகளுக்கு உள்ளாகவே எழுப்பப்பட்டதாக இருந்தாலும் அந்த ஆலயத்தின் தேவி 2000 வருடங்களுக்கு முற்பட்டவள் எனக் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஆதி சங்கரர் அந்த தேவியின் உக்ரஹத்தைப் பார்த்துவிட்டு, பின்னாளில் அந்த தேவியை வணங்கி துதிக்க வர உள்ள பக்தர்களுக்கு அவளது கோபம் எந்த விதத்திலும் துன்பத்தைக் கொடுக்கக் கூடாது என்பதற்காக அந்த தேவியின் உக்ரஹத்தைக் குறைக்க அவள் காலடியில் அர்த்த மேரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்து உள்ளார் என்பதே. 1640 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பனியினர் சென்னைக்கு வந்தப் பின்னர்தான் காளிகாம்பாள் ஆலயம் எழுந்துள்ளது எனும்போது 2000 ஆண்டுகளுக்கு முன் ஆதி சங்கரர் எப்படி அவள் கோபத்தைக் குறைக்க யந்திரத்தை பிரதிஷ்டை செய்து இருக்க முடியும்?  இவை அனைத்தையும் அறிந்து கொள்ள மேலே படிக்கவும்.

இந்த ஆலயம் எழுந்த வரலாறு குறித்து காலம் காலமாக வாய்மொழி வழியாக கூறப்பட்டு வரும் கதை அற்புதமானது. முதலில் சென்னைக் கடற்கரையின் ஒரு பகுதியில் இந்த ஆலயத்தின் தேவி தானாகவே தோன்றி மணல் பகுதியில் சிலையாக அமர்ந்து கொண்டாள். அவளை அங்கிருந்தவர்கள் கடல் கன்னி  அதாவது கடலில் இருந்து தோன்றியவள் என அழைத்து அவளை வணங்கத் துவங்கினார்கள். நாளடைவில் கடல் கன்னி என்ற வார்த்தை உச்சரிப்பினால் உருமாறி கடல் காளி என ஆயிற்று. அவள் எங்கிருந்து வந்தாள் என்பதோ அல்லது யார் அவளை அங்கு கொண்டு வைத்தார்கள் என்ற விவரமோ யாருக்கும் தெரியவில்லை. ஒருநாள் எதேற்சையாக சில மீனவர்கள் தண்ணீராலும், வேறு இயற்கை செயல்களினாலும் எந்த சேதமும் அடையாமல் இருந்த அந்த தெய்வத்தின் சிலையை கடற்கறை மணலில் கண்டு ஆச்சர்யம் அடைந்து  அவளை ஒரு பீடத்தின் மீது  வைத்து அது முதல்  அவளை வழிபட்டப் பின்னே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனராம். அந்த தேவி அங்கு எழுந்தருளியது முதல் அவளை வணங்கிவிட்டு மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கு பெரும் அளவிலான மீன்கள் கிடைத்து வருமானமும் அதிகரிக்கத் துவங்கியதாம். ஆகவே அங்கிருந்த மீனவர்கள் அந்த தேவியை காவல் தெய்வமாகவே வழிபடத் துவங்கினார்களாம். ஆனால் அவர்கள் எவருக்குமே அவளே பார்வதி தேவி என்பதோ, தன்னுடைய தெய்வீக சக்திகளை உள்ளடக்கிய அந்த உடலை மாங்காடு செல்லும் முன் பார்வதி தேவியே அங்கு விட்டுவிட்டு சென்று உள்ளாள், அவளே காஞ்சியில் காமாட்சி அம்மனாக அவதரிக்க உள்ளாள்  என்பதோ தெரியாது.  அந்த கதை  இந்தக் கட்டுரையின் பின் பகுதியில் கூறப்பட்டு உள்ளது. அவர்களைத் தவிற அங்கு குடியேறி இருந்த விஸ்வகர்மா எனும் சமூகத்தவர் அந்த தேவியை பீடத்தில் இருந்து எடுத்து சின்ன வழிபாட்டுத் தலம் எழுப்பி (மண்  குடிசையினால் ஆனதா, இல்லை எந்த மாதிரியான வழிபாட்டுத் தலம் எனத் தெரியவில்லை) அதற்குள் அவளை வைத்து அவளை  தமது குல தெய்வமாகவே வழிபட்டு வந்தனர். பொதுவாகவே இந்த சமூகத்தினரே ஆலயங்களில் உள்ள சிலைகளை வடிவமைப்பதிலும் ஆலயங்களைக் கட்டும் பணியிலும்  சிறந்தவர்கள் என்பதான கருத்து உள்ளது என்பதினால் இவர்களை கடவுள் வழி சிற்ப சமூகத்தினர் என்பார்கள்.

ஒருகாலத்தில் சென்னை கடற்கரைப் பகுதிகளில் இருந்த குடியிருப்புப் பகுதிகளில் மீனவர்கள், வாழ்க்கை வசதி குறைந்த மற்றும் கீழ் நிலையில் இருந்த மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கி இருந்த இடங்களை குப்பம் என அழைத்தார்கள். அந்த காலத்தில் ஜாதி மற்றும் சமுதாய வேற்றுமைகள் நிறையவே இருந்தது. அதனால்தான் இந்த நிலை இருந்தது. இந்தியாவுக்கு வந்த கிழக்கிந்திய கம்பனியார் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள தென் பகுதியில் வந்து முதலில் அங்கு கடற்கரை அருகில் இருந்த குப்பங்களை வாங்கத் துவங்கினார்கள். அதன் காரணம் வரும் காலத்தில் தமக்கு வந்து செல்ல கடல் பயணம் எளிதாக இருக்கும் என எண்ணியதுதான். இந்த நிலையில் அன்றைய மெட்ராஸ்சில் பாரி முனையில் இருந்த ஒரு கடற்கரைப் பகுதியில் இருந்த குப்பத்தை வாங்கி தமது அரண்மனையை அமைத்துக் கொண்டனர். அந்தக் கோட்டைப் பகுதிகள் இராணுவப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்ததால், பக்தர்களுக்கு அந்த பகுதிக்குள் இருந்த கடல் காளி அம்மனின் வழிபாட்டுத் ததலத்தில் சென்று வழிபடுவதற்கு சிரமமாக இருந்தது. ஆனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்தக் கோட்டை இருந்தாலும் விஸ்வகர்மா சமூகத்தினர் அங்கு வந்து வழிபடுவது தொடர்ந்தது. அதன் விளைவாக ஆங்கிலேயர்களும் அரண்மனைக்கு பாதுகாப்பு குறைவாயிற்று என்பதை உணர்ந்தார்கள்.

இதனை தடுக்க முடியாமல் இருந்த ஆங்கிலேயர்கள் தாமாகவே முன்வந்து விஸ்வகர்மாக்களிடம் அங்குள்ள கடல் காளியுடன் சேர்த்து அந்த வழிபாட்டுத் தலத்தை அங்கிருந்து அகற்றி விட்டு அதை அவர்கள் வேறு எங்கு வைத்து வழிபட விரும்புகிறீர்களோ அங்கு அமைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவையான அனைத்து செலவையும் தாம் ஏற்பதாக வாக்குறுதி தந்தார்கள். அதைக் கேட்ட விஸ்வகர்மா சமூகத்தினரும் அந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டு 1640 ஆம் ஆண்டு தேவி காளிகாம்பாள் ஆலயத்தை அங்கிருந்து கொண்டு வந்து ஒரு ஆலயத்தை தம்பு செட்டி தெருவில் இப்போது ஆலயம் உள்ள இடத்தில் கட்டினார்களாம். தற்போது ஆலயம் உள்ள இடத்தை எப்படி தேர்வு செய்தார்கள்? அதற்கு முன்னதாகவே தனக்கான  ஆலயம் இன்ன  இடத்தில் அமைந்து இருக்க வேண்டும் என்பதை பல்வேறு விதங்களில் பக்தர்கள் மூலம் தேவி காளிகாம்பாள் அவர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தாளாம். அதனால்தான் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் காளிகாம்பாள் ஆலயம் எழுந்தது. இப்படியாக 400 ஆண்டுகளுக்கு முன்பாக ஆலயம் அமைந்தாலும், அந்த ஆலயத்தின் தேவி  2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கரையில் வழிபடப்பட்டு வந்து இருந்ததாகவும், அதை பெயர்த்து எடுத்து வந்தே 400 ஆண்டுகளுக்கு உள்ளேயே தம்பு செட்டி தெருவில் புதிய ஆலயக் கட்டிடத்தைக் கட்டி  உள்ளார்கள் என்றும் ஆகவே காளிகாம்பாள் ஆலயம் 2000 வருடத்துக்கு முற்பட்டதே என ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். வாய் மொழிக் கதையாக கூறப்பட்டு வரும் ஆன்மீக மகான்களின் கருத்து  என்ன என்றால் கற்பகாம்பாள் எனும் பெயரில்  கடல் காளி என அழைக்கப்பட்ட பார்வதி தேவியானவள், தனக்கு ஏற்பட்டு இருந்த சாபத்தை விலக்கிக் கொள்ள தற்போது ஆலயம் உள்ள இடத்தில் யாருடைய கண்களுக்கும் புலப்படாத வகையில் தவத்தில் இருந்திருக்க வேண்டும். தினமும் காலை விடிவதற்கு முன்பாகவே கடற்கரைக்கு வந்து குளித்து விட்டு சென்று இருக்க வேண்டும். இப்படியாக அவள் கடற்கரையிலும் தம்பு செட்டி தெருவிலும் இருந்திருக்கின்றாள். அவள் அங்கிருந்துக் கிளம்பி மாங்காட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்த நிலையில் அவளது தெய்வீக சக்தியோடு இருந்திருந்த ஜடமான உடல் கடற்கரையில் பூமியில் புதைந்து சிலையாக மாறி இருக்க வேண்டும். தக்க நேரத்தில் கடல் அரிப்பினால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைத்த சக்தி தேவி அந்த சிலையை வெளியே வரச்செய்ய அந்த சிலையையே மீனவர் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தினர் வணங்கி இருக்கின்றார்கள் என்கின்றார்கள். அது மட்டும் அல்ல தேவியானவள் தற்போது ஆலயம் உள்ள தம்பு செட்டி தெருவில் தவத்தில் இருந்திருந்தபோது அங்கு வந்து அவளது தரிசனத்தைப் பெற்ற ஆதி சங்கரர் அவளுடைய உக்ர நிலையைக் கண்டு அவளது கோபத்தை அவளுடைய யந்திர சக்தியில் அடக்கி வைத்து அவளை சாந்த சொரூபிணியாக மாற்றி இருக்க வேண்டும். இதனால்தான் அவளுடைய ஆலயமும் அவள் தவம் இருந்த இடத்தில் வந்திருக்க வேண்டும் என்பதாக கூறுகிறார்கள். பார்வதி தேவி அந்த இரு இடங்களிலும் குறிப்பிட்ட தோற்றத்தில் இருந்தது மனிதர்களின் கண்களுக்கு புலப்படவில்லை.

பல நூற்றாண்டுகளாக வாய்மொழிக் கதையாக கூறப்பட்டு வரும் கதையின்படி மனிதர்களின் கண்களுக்கு புலப்படாத வகையில் நடைபெற்றுக் கொண்டு இருந்த அந்த நாடகத்தில் கடலில் இருந்த தேவதைகள் கடற்கரையில் கடல் கன்னி தனிமையில் இருப்பதைக் கண்டு அவள் கடலுக்குள் இருந்து வெளிவந்து அங்கு தங்கி உள்ள தெய்வீக கடல் கன்னி என நினைத்து அவளை வணங்கி, துதித்து  தம்முடைய பூர்வஜென்ம பாபங்களை விலக்கிக் கொண்டது மட்டும் இல்லாமல் அவளுக்கு பரிவார தேவதைகளாக இருந்து கொண்டு உதவி செய்து வந்தார்கள். இதனால்தான்  பிற்காலத்தில் எழுந்த காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னிமார் என ஆயிற்று. கடல் காளி அங்கிருந்த செய்தி கடலுக்குள் இருந்த மற்றவர்களுக்கும் பரவத் துவங்க நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் யார் கண்களிலும் புலப்படாமல் கடலுக்குள் இருந்து வெளிவந்து கடல் காளி என நம்பப்பட்ட அன்னை காளிகாம்பாளை வழிபட்டு தமது பாபங்களை விலக்கிக் கொண்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை பெற்றார்கள் என்ற செய்தி தேவலோகத்துக்கும் பரவியபோது அங்கிருந்தும் தேவ, தேவதைகள் கடற்கரைக்கு வந்து இரண்டு இடங்களிலும் காட்சி தந்த தேவியை ஆராதித்துச் சென்றார்கள். அவர்களைத் தவிர அங்கு வந்து அந்த தேவியை வருணன், குபேரன், இந்திரன் போன்றவர்களும், மகா ரிஷிகளான புலன்தியர், அகஸ்தியர், வியாசர், பராசரர், விஸ்வகர்மா போன்றவர்களும்  அவ்வப்போது வந்து வணங்குவார்களாம். குபேரன் அங்கு வந்து அவளை வணங்கத் துவங்கிய பின்னரே அவருக்கு அவருக்கு செல்வமும் அதிகரித்தது என்பதும் கதையில் உள்ளது. ஆனால் இவை அனைத்துமே எவருடைய கண்களுக்கும் புலப்படாத நிலையில்தான் நடைபெற்றுக் கொண்டு இருந்தனவாம். ஆனால் இப்படியாக கூறப்பட்டு வரும்  இந்த கதைகள்  எதற்கும் ஆதாரம்  இல்லை,  நம்பிக்கையின் அடிப்படையில்  காலம் காலமாக கூறப்படுகிறது. இத்தலத்தின் மேன்மைக் குறித்து மச்சபுராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஸ்ய புராணங்களில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். 

கடல் காளி கடற்கரையில் பார்வதியின் நிழல் அவதாரமாக அவதரித்தபோது அவள் காளியின் உக்ரஹ அம்சத்துடன் இருந்தாள் என்றாலும் அது வெளித் தெரியாமல் அமைதியான உருவிலேயே காணப்பட்டாள். அவளை அங்கிருந்து எடுத்துச் சென்று தம்பு செட்டி தெருவில் இருந்த ஆலயத்தில் அமர்த்தியபோது அவள் காளிகாம்பாள் என அறியப்பட்டாள். கடல் காளி எதனால் காளிகாம்பாள் என அழைக்கப்படலானாள்? காளியின் உக்ரஹ குணத்தோடும், அம்பாளின் அனுக்ரஹ குணத்தோடும் இருந்த கடல்காளியை காளி+அம்பாள் அதாவது காளிகாம்பாள் என அழைக்கலாயினர். அது மட்டும் அல்ல கலியுகத்தில் மக்களின் துயர் துடைக்க வந்த அம்பாள் அதாவது கலியம்பாள் என்ற அர்த்தத்தில் அதை மருவி அவளை காளிகாம்பாள் என அழைத்ததாகவும் கருத்துக்கள் உள்ளன. முதலில் காளி என அழைக்கப்பட்டவள் பின்னர் அவள் காளி அல்ல காளி மற்றும் அம்பாளான காளிகாம்பாள் எனவும் அவளே மும்மூர்த்திகளை படைத்த சக்தி தேவி எனவும், பார்வதியின் அவதாரமே எனவும் அறியப்பட்டாள்.

வாய் வழிக் கதையில் கூறப்படுவது என்ன என்றால் காளிகாம்பாளே தனது ஆலயத்தில் உள்ள சிலைகளை தான் பூமியில் இருந்தபோது இருந்த காட்சியிலேயே வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேவலோகத்தில் இருந்து விச்வகர்மாக்களை மனித உருவில் அனுப்பி வைத்தாள் என்பதாகும். தற்போது ஆலயத்தில் உள்ள தேவியின் சிலை கடற்கரையில் இருந்த அதே சிலையா, இல்லை புதியதாக வடிவமைக்கப்பட்டதா என்பது சரிவரத் தெரியவில்லை. புதியது என்றால் கடற்கரையில் காணப்பட்ட சிலை எங்கு உள்ளது என்பது விளங்காத புதிராக உள்ளது. காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக இந்த ஆலயத்தில் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். இதன் மூலம் காஞ்சி காமாட்சியும் கற்பகாம்பாளும் ஒருவளே என்ற கருத்து வலுப்பெறுகிறது.

காஞ்சீபுரம், திருவானைக்காவல், காளிகாம்பாள் மற்றும் மாங்காட்டு அம்மன் ஆகிய நான்கு தேவிகளும் ஒருவருக்கொருவர் சம்மந்தம் கொண்டவர்கள், நான்கு ஆலயங்களும் தனித் தனி இடங்களில் இருந்தாலும் அந்த நான்கு தேவிகளும் ஒரே மூலக் கதையுடன் சம்மந்தப்பட்ட பார்வதிதேவியின் உருவங்களே என்பதாக ஆன்மீக உலகின் வாய்மொழிக் கதையும் கருத்துக்களாக நிலவுகின்றது. அந்த மூலக் கதை என்ன? அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் சம்மந்தம் கொண்டுள்ளார்கள்?

தக்ஷனின் யாகத்தில் அவமானம் அடைந்து தற்கொலை செய்து கொண்ட பார்வதி தேவியின் உடலை சிவபெருமான் தூக்கிக் கொண்டு சென்றபோது அவர் கோபத்தை தணிக்க விஷ்ணு அவளது உடலை சக்ராயுதத்தால் வெட்டி எரிய பார்வதியின் உடலின் பல பாகங்கள் பல இடங்களிலும் விழுந்தன. அப்படி ஒரு பாகம் விழுந்த ஒரு இடம் காஞ்சீபுரம் ஆகும். அந்த காஞ்சீபுரத்தில் பார்வதிக்கு சக்தி பீடம் அமைய வேண்டும் என எண்ணிய பரமாத்மன் ஏற்கனவே அதற்கான நாடகம் ஒன்றை அரங்கேற்ற அதனை தயார் நிலையில் வைத்து இருந்தார். அப்படி அமைய உள்ள சக்தி பீடத்தில் திரிபுரசுந்தரி தேவியின் அம்சங்களோடு கூடிய அம்மனாக பார்வதி தேவி எழுந்தருள வேண்டும் என்பதை மனதில் கொண்டு ஒன்றுடன் ஒன்றிணைந்த நாடகங்கள் நடந்தேறின.

பார்வதியின் உடலின் ஒரு பாகம் காஞ்சியில் விழுந்ததும், நாடகத்தின் அடுத்த காட்சி தேவலோகத்தில் துவங்கியது. ஒருநாள் விளையாட்டாக பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிவிட உலகமே இருளில் மூழ்கி, அனைத்து சலனங்களும் நின்றன. ஆகவே கோபமுற்ற சிவபெருமானும் பார்வதியை பூலோகத்தில் சென்று பிறவி எடுத்து தன்னைவிட்டு விலகி இருக்கட்டும் என சாபம் தந்தார். ஆனால் பார்வதி தேவி தான் விளையாட்டாக செய்ததை இத்தனை பெரிதாக எடுத்துக் கொண்டு சாபமிட்டுவிட்டாரே என வருந்தி, அவரிடம் மன்னிப்புக் கேட்க அவரும் தான் ஒருமுறை கொடுத்துவிட்ட சாபத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதினால் அவள் பூலோகத்தில் சென்று தவம் இருந்து தன்னை வேண்டி நின்றால் தக்க நேரத்தில் அவளுக்கு காட்சி தந்து மீண்டும் அவளை மணமுடித்துக் கொள்வதாக வாக்குறுதி தந்தார். பார்வதியும் அங்கிருந்து கிளம்பி சென்றாள். சென்ற வழிகளில் அவள் பல்வேறு இடங்களில் தங்கிய பின் முடிவாக மாங்காடு சென்று தான் சிவபெருமானுடன் மீண்டும் இணைய வேண்டும் என வேண்டிக் கொண்டு தவத்தில் இருந்தாள்.

மாங்காட்டி நோக்கிச் சென்ற வழிகளில் அவள் திருவானைக்காவல் மற்றும் சென்னை (குறிப்பு:- *அந்தந்த  இடங்களை தெரிந்து கொள்ளவே இன்றைய காலத்து பெயர்கள் அங்காங்கே தரப்பட்டு உள்ளன. அந்த இடங்களுக்கு பெயர்கள் எதுவும் அப்போது கிடையாது) போன்ற இடங்களில் தங்கி தவம் இருந்தாள். அப்படி அவள் சென்றபோது அவள் மனதில் ஆவேசத்துடன் சென்றதினால் அவள் தங்கி இருந்த இடங்களில் உக்கிரஹ தேவியாக இருக்கும்படி ஆயிற்று. இதனால் ஆதி சங்கரர் பிற்காலத்தில் அவள் தரிசனத்தைப் பெற்றபோது அவளது கோபத்தை அடக்கி சாந்தப்படுத்தினாராம்.  முடிவாக அவள் மாங்காடு சென்று பல காலம் ஊசி முனையில் தவமிருக்க அசிரி ஒன்று அவளை காஞ்சீபுரத்துக்கு சென்று தவம் இருந்தால் அவளுக்கு சிவபெருமான் காட்சி தந்து அவளை மணந்து கொள்வார் என்று கூற பார்வதியும் காஞ்சீபுரத்துக்கு சென்று தவமிருக்க அவளுடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் அவளுக்கு காட்சி தந்து அவளை அங்கேயே மீண்டும் மணந்து கொண்டார். அதன் பின் அவள் அங்கேயே அமைய உள்ள சக்தி பீடத்தில் எழுந்தருள்வாள் என்றும், அவளுக்கு இரு கண்களாக கல்வி அறிவைத் தரும் சரஸ்வதியும், செல்வத்தைத் தரும் லஷ்மி தேவியும் இருக்க, கருணை உள்ளம் கொண்ட காமாட்சி எனும் பெயரில் அவள் இருந்தவாறு அவளிடம் வரும் பக்தர்கள் செல்வம் பெற்று கல்வி அறிவும் பெற அருள் புரிந்து கொண்டு இருப்பாள் என்றும் சிவபெருமான் அருள் புரிந்தார். இப்படியாக காஞ்சீபுரத்தில் சக்தி பீடம்  அமைய வழி பிறந்தது.

சக்தி பீடம் எங்கு அமைய வேண்டும் என முடிவு ஆனதும், பார்வதி அங்கு வரும் முன் அமர்ந்திருந்த  இடங்களில் பூமியில் அவளுடைய தெய்வீக சக்தி புதைந்து இருந்தன என்பதினால் அந்த சக்திகள் புதைந்திருந்த இடங்கள் மேன்மை மிக்க ஆலயங்களாக மாற வேண்டும் என்பதற்கான நிகழ்வுகள் நடைபெறலாயின.

இதன் உள் தத்துவம் என்ன என்றால் தேவி பல்வேறு ரூபங்களில் அமர்ந்திருந்தபோது அவளது தெய்வீக சக்திகள் அந்தந்த இடங்களில் மண்ணில் புதைந்து இருந்தன. ஆனால் தேவியின் தெய்வீக சக்திகள் மனித குல மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே அங்கு ஆலயங்கள் எழ வேண்டும் என்பதான முடிவாயிற்று. அப்படி எழும்பும் ஆலயங்களில் மறைந்து உள்ள தேவியின் தெய்வீக சக்திகள், பக்தர்கள் அங்கு வந்து தேவியை வேண்டி நிற்கையில் அவர்களது வேண்டுகோட்களை அவளிடம் எடுத்துச் செல்லும் கருவியாக  அமைந்து இருக்கும். புராணங்களைப் படித்தோம் எனில்  இவற்றை எல்லாம் வெளிப்படையாகக் கூறாமல், மறைமுகமாக எடுத்துரைக்கும் வகையில், பக்தர்கள் ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள தெய்வீக சக்திகளை உள்ளடக்கிய சன்னதிகளில் வேண்டுகோள் வைத்தால் மட்டுமே வேண்டியது நிறைவேறும் என அறிவுறுத்தி  உள்ளார்கள். ஆனால் இந்த உண்மையான காரணத்தை விவேகம் மிக்க ஆன்மீகவாதிகள் கிரகித்துக் கொண்டு அவற்றை உலகிற்கு தெரியப்படுத்தினார்கள்.

காளிகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, மாங்காடு மற்றும் காஞ்சி அன்னை ஆகிய நான்கு தெய்வங்களும் ஒவ்வொருவருக்கொருவர் சம்மந்தம் கொண்டுள்ளனர் எனும் ஆச்சர்யமான விஷயம் பிரமிப்பூட்டும். ஏன் என் அவை நான்கும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உருவங்களிலும் உள்ளன என்றாலும் பண்டிதர்களின் கூற்றின்படி அவை அனைத்துமே பார்வதி தேவியின் அவதாரமான காமாட்சி அம்மனின் தெய்வீக சக்தியுடன் அமைந்தவை, அவளது கதையுடன் சம்மந்தப்பட்ட வெவேறு கிளைக் கதைகளைக் கொண்டவையே என்பதாகும்.  அது எப்படி உண்மையாகும் ?  தன் கணவரை மீண்டும் அடைய வேண்டும் என பெரும் பயணத்தை மேற்கொண்டு இருந்த பார்வதி தேவி காஞ்சீபுரத்தை அடையும் முன்னால் காளிகாம்பாள், அகிலாண்டேஸ்வரி மற்றும் மாங்காட்டு அம்மன் போன்ற ஆலயங்கள் உள்ள இடத்தில் எல்லாம் மாற்று உருவில் தங்கி இருந்து தவம் செய்துள்ளாள். அவள் அங்கிருந்தெல்லாம் கிளம்பிச் சென்ற போது  அந்தந்த உருவத்துடன் கூடிய அவள் துறந்து விட்டு சென்ற உடல் கல்லாக மாறி பூமிக்குள் புதைந்தன. பல காலம் பொறுத்து பரமாத்மனின் நியதிக்கு உட்பட்டு பல்வேறு உப கதைகளுடன் இணைத்து அந்த சிலைகள் மனிதர்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு ஆலயங்கள் அமைந்தன.
காமாட்சி அம்மன் காஞ்சீபுரத்தில் சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்கு செல்லும் முன்  எங்கெல்லாம் அவள் தங்கி இருந்து தவம் செய்தாளோ அந்த இடங்களில் எல்லாம் தமது பிம்ப தேவிகளாக உக்ரஹமான நிலையுடன் இருந்தவர்கள் சாந்த தேவியாக மாறி விட அந்த இடங்களில் எழும்பிய ஆலயங்களில் கற்பகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, மாங்காட்டு அம்மன் என்ற பெயர்களில் தமது பிம்ப தேவிகள் மூல தேவியாக அமர வழி வகுத்தாள். அதனால்தான் இந்த நான்கு ஆலயங்களிலும் உள்ள பார்வதி தேவியின் அம்ச தேவிகள் பல்வேறு காட்சிகளில் அமைந்து இருந்தாலும் அவை அனைத்துமே காஞ்சியில் தனது நாயகனான சிவபெருமானுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்ட காமாட்சி அம்மனின் அம்சங்களே என்பதற்கு சான்றாக, இந்த நான்கு ஆலயத்தில் மட்டுமே அந்தந்த அம்பாளின் உக்ரஹத்தை தணிக்க ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கர ஆராதனை வித்தையை பயன்படுத்தினார் என பண்டிதர்கள் எடுத்துக் காட்டுவது எந்த கோணத்திலும் தவறில்லை எனத் தெரிகிறது.  இதனால்தான் காஞ்சி காமாட்சி, கற்பகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, மாங்காட்டு அம்மன் ஆகிய நால்வரும் வெவ்வேறு உருவங்களில் காணப்பட்டாலும் கற்பகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, மாங்காட்டு அம்மன் ஆகிய அந்த மூன்று தேவிகளும்  காஞ்சி காமாட்சி அம்பாளே  என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது.

புராணங்களைப் படித்தோம் எனில் பல தெய்வங்கள் தமக்கு ஏற்பட்ட சாபங்களை நிவர்த்தி செய்து கொள்ள பூமியில் பிறப்பு எடுத்து அங்கு வந்து அவரவர்களுக்கு தரப்பட்டு இருந்த விதிப்படி தவமிருந்து சாபங்களை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் பழைய தெய்வீக உடலை அடைந்தார்கள் என்ற கதைகள் உண்டு. அப்படி தெய்வங்கள் பூமிக்கு வந்து மனித உருவிலே தங்கி விட்டு திரும்பச் சென்றபோது பூமியில் எந்த உருவுடன் இருந்தார்களோ அந்த உடலை பூமிக்குள் புதைய வைத்து விட்டே சென்றன. அதே நேரத்தில் அந்த உடலைத் துறந்து சென்றபோது தமது உண்மையான உருவத்தையும், தமது தெய்வீக சக்திகள் சிலவற்றையும் அதற்குள் பதிய வைத்து விட்டே சென்றிருந்தன என்பதினால் பூமிக்குள் புதைந்து கிடந்த உடல்கள் சிதைந்து போகாமல் காலப் போக்கில் கற்களாகி விட்டன. அதனால்தான் கற்களாக மாறிய சிலைகள் தேவ உருவத்துடனேயே அமைந்து இருந்தன. காலப்போக்கில் அவை மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டதும், அவற்றை ஆலயங்களில் ஸ்தாபனம் செய்து மந்திரங்களை ஓதி சக்தியூட்டினார்கள் என்று நம்புகிறார்கள்.  ஆனால் உண்மையில் மந்திரங்கள் தெய்வீக சக்தியை உற்பத்தி ஆக்கித் தருவதில்லை. குறிப்பிட்ட மந்திர ஒலிகள் மூலம் அந்த சிலைகளில் புதைந்து இருக்கும் தெய்வீக சக்திகள் தட்டி எழுப்பப்படுகின்றனவாம். அப்படி தெய்வீக சக்திகளை தட்டி எழுப்பும் சக்தி பெற்ற குறிப்பிட்ட மந்திர ஒலிகளை மனிதர்களால் கேட்க இயலாது, அவற்றின் உள்ளடங்கிய சக்தியை புரிந்து கொள்ளவும் இயலாது.

தம்புசெட்டி தெருவில் அமைந்து உள்ள ஆலயத்தில் உள்ள கற்பகாம்பாளை ஸ்தாபனம் செய்யும் முன் ஒரு மாமரத்தின் அடியில் ஆலய நிர்மாணத்துக்கான பூஜையின் முதல் சடங்குகள் ஆகம விதிமுறைப்படி நடைபெற்றனவாம். எந்த ஒரு ஆலயத்திலும் எந்த மரத்தின் அடியில் முதல் சடங்கு பூஜை நடைபெறுகின்றதோ அந்த மரமே ஆலயத்தின் தல விருஷமாக அமைந்து விடுமாம். மாங்காட்டில் காஞ்சி காமாட்சியின் மூல உருவமான பார்வதி தேவி மாமரத்தின் அடியில்தான் தவம் இருந்துள்ளாள். ஆகவே அவளுடைய அம்சமான காளிகாம்பாளையும் மாமரத்தின் அடியில் வைத்து பூஜையின் முதல் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன என்பதாகக் கூறுகிறார்கள்.

வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. அந்த ஆலயத் தேரை கிண்ணித்தேர் என்று அழைக்கின்றார்கள். ஸ்ரீ சக்ரமே இங்கு உள்ள ஆலயதேரின் சக்கரமாக அமைந்துள்ளது. அதன் மூலம் இந்த ஆலயத்தின் தேவியையே பெண் தெய்வங்களின் முதன்மை தெய்வமாக கருதுகிறார்கள்.

ஆலய அம்மனின் பிராகாரத்தை சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சித்தி புத்தியுடன் வினாயகர், ஸ்ரீ கமடேஸ்வரர், துர்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மா, வீரபத்ர மாகாளி, ஸ்ரீ நாகேந்திரர், காயத்ரி, விஸ்வகர்மா, நடராகஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் மேலும் சில சன்னதிகளும் உள்ளன.

விஸ்வ கர்மா சமூகத்தினர் இந்த ஆலயத்தை எழுப்பியதும், அந்த தேவியை தமது குல தெய்வமாகவே ஏற்றுக் கொண்டார்களாம். திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க என பல்வேறு பிரார்த்தனைகளை முன்வைத்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்கள். பில்லி, சூனியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றில் இருந்து விடுபட இவ்வாலயத்தில் அமைந்திருக்கும் அகோர வீரபத்திரரை பௌர்ணமி அன்று இங்கு வந்து வழிபட்டால் அவற்றின் தீமைகள் உடனே விலகி விடும் என்பது நம்பிக்கை.

மராட்டிய சிங்கமான சத்ரபதி சிவாஜி 1677 ஆம் ஆண்டு அங்கு வந்து காளிகாம்பாளை வணங்கிச் சென்றாராம். அதன் பின்னரே அவர் யுத்தத்தில் வெற்றி பெற்றாராம். அவருக்கு சத்ரபதி என்ற பட்டப் பெயரும் இங்கு வந்து வழிபாடு செய்துவிட்டுச் சென்ற பின்னரே கிடைத்ததாம். பவானி தேவியை தமது குல தெய்வமாகக் கொண்டு இருந்த மராட்டிய மன்னனான சிவாஜி காளிகாம்பாள் மீது அதீத நம்பிக்கை கொண்டு இருந்ததினால் அவளையும் தன்னுடைய குலதெய்வமாகவே  அவர் ஏற்று இருந்தாராம்.

கைகளில் அங்குசம், பாசக் கயிறு, கிளி, தாமரை போன்றவற்றை ஏந்தி அமர்ந்துள்ள நிலையில் காணப்படும் காமாட்சி அம்மனின் அம்சங்களைப் பார்த்தால் லலிதா பரமேஸ்வரி மற்றும் திரிபுரசுந்தரியின் அம்சங்களோடு ஒத்திருப்பதைக் காணலாம். 

Kaligambal (E)


One of the most famous and several centuries year old temple for Goddess Kaligambal,an aspect of Goddess Kamatchi Amman exists in a busy and congested street in heart of Chennai, Tamilnadu. Unfortunately many are unaware of its glory and the historical importance of the deity. Popularly known as Kaligambal Devi Temple, the main deity Kaligambal reportedly manifested in Chennai sea shore some 2000 years back and stayed there for several years before moving into the present temple site. Some are of the opinion that the temple deity is as old as 400 years only, while others dispute the claim to state that though the temple structure is less than 400 years old, the deity enshrined in it is as old as 2000 years. This argument gains strength from the fact that Adi Sankara who lived 2000 years ago reportedly consecrated Artha Meru Yanthra below her leg in order to repress her anger so that the devotees who visit the shrine to pray her will not face her fury. Since the present temple structure has been raised only after 1640 when East India Company(British rulers) reached Chennai then called Madras city, the mute question is how could Sri Adi Sankara have consecrated the Yanthra 2000 years ago? Read the entire story to understand the history.

The history of the temple as narrated by word of mouth folklore goes thus. Several centuries ago an unknown female deity (Present Kaligambal) manifested in the form of a small idol on the seashore in Chennai. Nobody knew how it came there or who placed it at that spot. However since the deity was found on the seashore, people who lived in and around called the deity as Kadal Kanni meaning small girl from Sea. Thereafter when the fishermen found that the small female deity remained unaffected by the sea and even inclement weather they kept her on a raised platform and made it a  practice to enter  into the sea only after offering worship to her. They found that lot of luck befell on them by way of large cache of fishes ever since they commenced worshiping her. Thus in a way she became their guardian deity. They were unaware of the fact that the statue or idol was the iconic body of Goddess Parvathi who was to manifest as Kanchi Kamatchi Amman of Kancheepuram and who left it (the body) there shelved with her divine energies before proceeding to Mangadu for penance. The detailed story on this is narrated in later part of this story. Simultaneously a group of Viswakarmas (the architect of the gods) who lived in and around sea shore too mainly worshiped the deity found on the seashore after constructing a very small shrine (details not known, whether it was thatched hut structure or a mud house) and adapted the deity as their tutelary deity, the reason being Viswakarmas were considered to be architects of divine and scalped and engraved the statues of deities required for temple constructions. Since the present day temple has been ultimately established and maintained by Viswakarmas this version has been considered to be true. 

Those were the days when Tamilnadu then called Madras had three areas near seashore which were predominantly inhabited by fishermen, economically poor and socially lower in status. Those were the days when the division in class and caste were also high in order. Therefore the settlements around seashore were called Kuppams meaning small areas like hamlets. When East India Company decided to entrench in south, they first began purchasing Kuppams near the seashore. The main reason for their decision to buy lands near seashore was meant to ease the transportation of men and material in future. One such prominent Kuppams called Madras Kuppam was located near Parrys Corner and the Britishers first purchased the said land to establish a fort there. Unfortunately the small shrine of Kadal Kanni came within the fort area which came under the purview of Military wing of the rulers (British). Even after the land became the property of the Britishers, the Viswakarmas continued to offer worship to the unknown deity inside the fort area. The Britishers could not prevent the worship. As time passed by twist of tongue of devotees the Kadal Kanni came to be called Kadal Kali meaning the Kali Devi of seashore. 

The Britishers felt that frequent visit by devotees inside Fort area could breach their security and therefore in the year 1640 they decided to get the shrine shifted elsewhere without offending the feelings of Viswakarmas and approached them with an offer to bear the entire cost of shifting the shrine to any other place of their choice. Viswakarmas too had no hesitation in agreeing to the proposal as it would help them keep away from the interference of British Military personnel who were basically anti Hindus. Like shifting the bag and baggage, the Viswakarmas were successful in shifting the shrine to the present temple site in Thambu Chetty Street in heart of Chennai. When a suitable site for temple construction was searched the Goddess reportedly sent signals in several ways to her devotees indicating the place where the temple for her shall have to be established (the place where for some time she remained in penance before proceeding to Mangadu) and hence the present temple site was chosen. Since the temple was established in heart of Chennai before 400 years or so, the origin of the temple came to be disputed though the believers firmly aver that the original shrine established on the bank of sea shore was 2000 years old and that was relocated to Thambu Chetty street and therefore the temple indeed belonged to pre 2000 period. 

The spiritual gurus while commenting on the present temple site opine that who others viewed as Kadal Kali was actually Goddess Parvathi who may have sat in penance for few days on the banks of seashore and disturbed by frequent visits of devathas and others, she may have shifted to the present temple site of Kaligambal, however remaining invisible to humans, and went to  seashore everyday to take bath and returned back before sunrise to escape the attention of onlookers. This is how when the Goddess commenced onward journey to Mangadu for penance, her lifeless body in the form of idol with her divine energy infused in it was left buried in seashore. The Goddess wanted that at appropriate time she decides the sea sand would clear the way to show the idol. It was the same idol which was worshiped by fishermen and Viswakarmas centuries later. When Adi Sankara had the vision of Goddess Parvathi in the form of Kadal Kali in the present temple site he found the Kadal Kali exhibiting fierce energy and remained in ugraha (fierce) form and therefore for the benefit of mankind he converted her fiery form to that of sober one which is the present form of Goddess Kaligambal.Thus the temple for the devi has actually come up in the same site inside city where she remained in tapas,invisible to humans before proceeding to Mangadu.

As per the folklore on the history of the temple, Kaligambal had initially manifested on sea shore as Kadal Kali and when the Devathas from the sea saw her staying in isolated land, they thought that she was a divine Princess from Sea God i.e Kadal Kanni and therefore began offering their services and prayers to beget reward for previous birth virtues. This is perhaps the reason why the Kadal Kannis remain the Parivara Devathas in the temple. When the presence of Kadal Kali spread amongst the inhabitants of the nether world, the message reached devaloga too and therefore the devathas from devaloga began visiting the devi to offer worship to get rid of their curses of various sins they had committed and to beget reward for previous birth virtues. Besides Devathas those who worshiped her on seashore included visitors like Varunan, Guber, Devendra, Rishies like Pulasthiya, Agasthiya, Parasar, Viswakarma etc. The legend has it that God Guber reportedly acquired lot of wealth only after he began worshiping Kaligambal, then known as Kadal Kali. There is no verifiable historical proof for these folklores, nevertheless the belief continued unabated amongst those who reposed faith in her. However all those events were happening invisible to human eyes. As per the Pundits the greatness of the temple and its merit is found in epics like Machcha Puran, Vaamana Puran, Koorma Puran, Linga Puran and Bhavishya Puran. 

When Kadal Kali manifested on sea shore as shadow Goddess of Goddess Kamatchi Amman she was reportedly possessed with the fiery energy of Goddess Kali, though her appearance was benign countenance. After she was shifted from seashore to the heart of the city, she came to be affectionately called Kaligambal. How did she attain the name Kaligambal from that of Kadal Kali? The learned Pundits believe that Kaligambal being shadow deity of Goddess Kamatchi Amman i.e. Devi with aspects of Kali possessing fiery energy + Ambal exhibiting compassion, both combined together came to be called Kali + Ambal i.e. Kaligambal (in Tamil 'anbu' meant love and 'bal' meaning through i.e. Devi’s compassion through love got twisted as Ambal).The version of some other spiritual Gurus has been that since she manifested on earth to save mankind from the miseries of Kali Yug (in the tenth avatar of Vishnu), she was named as Kaligambal i.e ‘Kali kaalaththil kaakka vantha Ambal’ meaning the female deity who manifested in Kali Yug to save the mankind from miseries. Initially called Kali, once seated in the present temple site she began to be addressed as Kaligambal. Only after several centuries later, spiritual gurus identified her to be the aspect of Goddess Parvathi, the one who created divine Trinity.

Word of mouth spread folklore further mention that the statue of Kaligambal enshrined in the temple has been designed and engraved by Vishvakarma of Devaloga who was dispatched to earth in human form by Kamatchi Amman to ensure that the deity resembled the same form of hers as manifested on seashore. It is unclear whether the consecrated statue in the temple is original icon surfaced from the seashore or carved out statue by Viswakarmas while enshrining it during temple construction. Goddess Kaligambal's two arms in her temple are reportedly to that of Goddess Saraswathi and Goddess Lakshmi. Remember that Goddess Kanchi Kamatchi too has Goddess Saraswathi and Goddess Lakshmi as her eyes in the Kanchi temple. This fact thus strengthens the argument that Goddess Kaligambal is one of the aspects of same Goddess Kamatchi Amman of Kancheepuram. 

There is yet another interesting revelation in folklore to the effect that the four deities in Kancheepuram, Tiruvanaikkovil, Chennai Kaligambal and Mangadu are one and the same and are basically interconnected with the common story of Goddess Parvathi (connected to Goddess Kamatchi Amman, an emanation of Goddess Parvathi) though those temples were established in different places with principal deities in different other form. In the spiritual world of belief, the basic story by which they are attached with each other goes thus: 

When fifty one parts of Goddess Parvathi’s body fell in different places in the universe after she committed suicide unable to bear the insult from her father Daksha in the Yagna performed by him, one part of her body fell in Kancheepuram which became a Sakthi Peeda. Paramathman had already scripted series of interconnected dramas in which a Sakthi Peeda would emerge in Kancheepuram and Goddess Parvathi to manifest with aspects  of Tripurasundari, again an emanation from his consort Goddess Parvathi and therefore the first drama in the form of parts of her dead body falling in different parts of universe including the one in Kancheepuram occurred. It did happen several centuries later and Goddess Parvathi manifested as Kamatchi Amman, an aspect of Lalitha Tripurasundari in the Sakthi Peeda but not before few more episodes in the dramas were completed by which glorious temples also emerged with aspects of Kamatchi Amman in the places where Goddess Parvathi had stayed before proceeding to Sakthi Peeda in Kancheepuram.

The next episode in the drama began. One day in a playful mood when Goddess Parvathi covered the eyes of Lord Shiva it resulted in total standstill of the activities in the world and angered by her act, Lord Siva cursed her to born on earth and remain separated from him. Even though she sought pardon, Lord Siva could not take back the curse and advised her to perform penance in earth where at appropriate time he would manifest and marry her. Feeling angry at heart that her innocence was misunderstood and that she has been unnecessarily put to hardship by way of separation, Goddess Parvathi travelled through different lands on earth to identify a suitable place to penance and finally reached Mangadu and remained in penance standing amidst fire seeking reunion with Lord Siva. 

On way to Mangadu she stayed in penance in some of the places that included the present temple sites of Akilandeswari temple in Tiruchy and Kaligambal temple in Chennai (The names of the cities are given only for reference to readers as they were not known in those names when the entire episode occurred). Since she travelled in rage, her fierce energies caused her to manifest as fiery Goddess initially in those temples which were reportedly subdued by Adi Sankara later. They are different stories. After reaching Mangadu, Goddess Parvathi remained in penance for several years. One day she heard a divine voice asking her to proceed to Kancheepuram to continue the penance by way of tapas where her Lord would manifest and marry her.Complying with the advice of the unknown divine voice she proceeded to Kancheepuram and sat in tapas when Lord Siva appeared before the Goddess and married her thus ending her curse. The lord blessed that she would henceforth be known as Kamatchi Amman who will have Goddess Saraswathi, the Goddess of wisdom, and Goddess Lakshmi, Goddess of wealth as her two eyes so that as compassionate Kamatchi Amman she could grant wealth and wisdom to devotees praying her there. With this episode the first part of the drama to establish Sakthi Peeda in Kancheepuram also ended. 

Once the place where the Sakthi Peeda would get established was finalized, the next part of the drama to establish powerful temples in those places where Goddess Parvathi was in tapas before getting married to Lord Siva in Kanjeepuram began. The reason behind such a decision was that the divine energies of Sakthi Devi which had intruded into the lands cannot be left without being recognized. 

Spiritually elaborating the word recognition, it is to create worship centers of Devi in those places where her divine energy had intruded into the land when she had manifested on earth in different forms. Therefore those divine energized lands needed to be converted into divine centers by way of temples where when the devotees go and pray, the power energies of Devi would automatically transmit the prayers of devotees to the Goddess for redressing their grievances. In principle any land that has been stowed with the divine energies of the Goddesses or God when converted into temples, they act as transmission centers of the divine forces. Puranas remained inexpressive in unraveling the hidden divine theories and vital information such as these,  but instead sermoned that those desirous to get the boons from the deities will have to go the specific temple and offer prayer in the sanctum sanctum as the spot has been divine energized. Only the highly enlightened spiritual souls in mankind understood this secret hidden information and revealed it to the mankind. 

One may wonder how the temples of Kaligambal, Akilandeswari, Kamatchi Amman and Mangattu Amman are interrelated with each other and that the Goddesses in them are one and the same aspect of Kanchi Kamatchi Amman. The learned Pundits opines that the deities in them were all emanations of same Goddess Parvathi la Kamatchi Amman because Goddess Parvathi sat in tapas in those places in different forms during her long wayfaring to Kanjeepuram praying for reunion with her Lord Siva. Before moving to the next place, wherever she left the bodies in which she stayed, the body became stones and got buried under land. Several centuries later the statues which remained  buried underground were traced and enshrined on the instructions received by the devotees from divine in many ways. Thus Goddess Parvathi when she stayed in the present temple sites of  Kaligambal, Akilandeswari and Mangattu Amman and left her body became stones in course of time. Centuries later they were traced and temples built for them but connected with several other branch stories of Goddess Parvathi as ordained by Paramathman.

Goddess Kamatchi Amman after getting reunited with her Lord by a grand marriage in Kancheepuram, ensured that the places where she sat in penance for reunion with her lord and where her  body in the form of female deities stayed with her fiery energy, turn into sober form and get enshrined in various temples as deity of her aspect.This is the rationale behind the belief that Kaligambal, Akilandeswari and Mangattu Amman emanates are all aspects of Kanchi Kamatchi Amman gains strength from the fact that only in these four temples in the world, Adi Sankara doused the fiery energy of the Goddesses replacing them with benign countenance by applying Sree chakra Yanthra Vidya in one form or the other. 

If one read Puranas one can find that on account of certain curses the divine forces came to earth in human form in atonement to regain their original divine energized power and form. After getting rid of the effects of the curses they returned back to heaven. The  bodies thus left got buried in the land they stayed. Though the bare bodies buried in earth were left behind by the divine forces as lifeless bodies, they were stowed with hidden divine energies. As time passed, the bodies became stones in natural process but retaining the same images of those divine which left there. Several years later whenever the divine forces decided to get shrines or place of worship established in those sanctified places they stayed, the idols or statues till then remained buried in land were made to surface out, humans made to act as medium of finders based on assumption or other reasons. The hidden divine energies stowed in those idols or statues thus found got automatically restored by the chants of appropriate mantras. Though one may say that the idols or statues are charged with divine energies by chant of mantras, the fact is different. The mantras do not produce fresh divine energies. By chant of mantras the sleeping energies of divine energies hidden in them are only awakened by the hidden chimes and jingles of the adjuration of mantras chanted which remains beyond the powers of humans to hear or understand. 

Initially before Kaligambal was enshrined in the Kaligambal temple in Thambu Chetty street, she was placed (Statue) under a Mango tree and offered Pooja as per the agama rituals of consecration ceremony which is a practice adapted in any temple construction. Wherever the tree under which the prime deity was placed and temple rituals performed, it became the official temple tree subsequently. Since Goddess Parvathi in the form of Kanchi Kamatchi performed penance standing under a Mango tree in Mangadu, in sink with it Goddess Kaligambal,an aspect of Kanchi Kamatchi too was placed under a Mango tree and initial ceremonial rituals performed thus ensuring that the sacred Mango tree becomes the temple tree. 

The Chariot called temple Car is also very special one in this temple and the design cannot be found in any other temple in the world. It is called ‘Kinni Thear’ in Tamil. The specialty of the temple car is that it is fitted Sri Chakra as the wheels indicating that she is the first Goddess in the hierarchy of female Goddesses. 

The small court or closed precincts of the sanctum sanctuorium of the temple houses Arunachaleswara, Murugan with his consort Theivanai, Sidhi Vinayaga, Kamadeswar, Durga, Sandikeswar, Brahma, Veerabadra Maha kali, Nagendrar, Gayathri, Vishwakarma, Nataraja etc. 

Once the Kaligambal temple was established by Vishvakarmas, they adapted her as their tutelary deity (Family deity). Those who face obstacles in getting married, not gaining an issue (child) even after several years of marriage etc come to this temple and offer prayer seeking boon for success in them. Similarly the strong belief of people visiting the shrine has been that those afflicted with the problems of black magic when they  worship Agora Bhairava in this temple on full moon days, the problems would vanish.

Shivaji, the greatest Maratha Warrior worshiped goddess Kaligambal when he visited Chennai in the year 1677. He returned to his kingdom and won a battle. It is interesting to note that he attached the prefix Chathrapathi to his name only after worshiping Kaligambal. Though Shivaji's ‘Ishta devatha’ was Goddess Bhavani, he attached special significance to Kaligambal and adapted her too as his tutelary deity.

One can see Goddess Kamatchi Amman seated in majestic Padmasana posture holding a sugarcane, and parrot on a lotus in her lower arms, while two divine instruments Pasa and Angusa are held in her upper arms. This posture has similarities in all respects to that of Lalitha Parameswari or Tripura Sundari  thus establishing that the Sakthi Peeda has Goddess Parvathi in a new form.

Sunday, March 6, 2016

Kshetrabalapuram Ananda Kala Bhairava (T)

மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்துக்கு இடையே, அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் குற்றாலம் எனும் தாலுக்காவில் உள்ளது ஷேத்ரபாலபுரம் எனும் சிற்றூர். இங்குதான் ஆனந்த கால பைரவர் என்ற பெயரில் காலபைரவர் எழுந்தருளி உள்ள மேன்மை வாய்ந்த, பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் உள்ளது. இது அமைந்த காலம் அல்லது அங்கு பைரவர் வழிபாடு துவங்கியதின் காரணம் போன்றவை எவருக்கும் தெரியவில்லை என்றாலும் இந்த ஆலயத்தின் மேன்மை அளவிட முடியாதது. தென் பகுதியில் பைரவருக்கு என எங்குமே தனிக் கோவில் கிடையாது. ஆனால் ஷேத்ரபாலபுரத்தில் மட்டும் பைரவருக்கு தனி ஆலயம் அமைந்து இருந்தது (கடந்த 10-15 ஆண்டுகளில் இன்னும் சில மாநிலங்களில் பைரவருக்கு புதியதாக கட்டப்பட்டு உள்ள தனி ஆலயங்கள் எழுந்துள்ளன). அது குற்றாலம் தாலுக்காவில் அமைந்துள்ள இடமாகும். இங்குள்ள பைரவர் தனது பயங்கரமான தோற்றத்தோடு காட்சி தராமல் அமைதியாக புன்னகை பூத்தவண்ணம் தன்னை நாடி வந்து குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும், நோய் விலக வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளை முன்வைத்து தமக்கு பாவக்காய் அல்லது பூஷணிக்காயில் எண்ணை நிரப்பி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு அருள் புரிகிறார். பல நூற்றாண்டுகளுக்கு இப்படி பாவக்காய் அல்லது பூஷணிக்காயில் எண்ணை நிரப்பி தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த பைரவர் ஆலயத்திலும்  கிடையாது. பல்வேறு இடங்களில் இருந்தும் தொடர்ந்து ஒன்பது வாரம் இந்த ஆலயத்துக்கு தமது வேண்டுகோளுடன் வந்து பாவக்காய் அல்லது பூஷணிக்காயில் எண்ணை  தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதை பல பக்தர்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

முன் ஒரு காலத்தில் வெட்ட வெளியில் (தற்போது ஆலயம் உள்ள இடம்) வீற்று இருந்த பைரவரை கிராம காவல் தெய்வம் என்றே எண்ணி வந்துள்ளார்கள். ஆகவே அந்த ஆலய பைரவரின் மகிமை எவருக்கும் தெரிந்து இருக்கவில்லை. வெகு காலத்துக்குப் பிறகே ஆலய பைரவரின் மகிமை குறித்து அங்கு விஜயம் செய்த அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆன்மீக மகான்கள் மூலம் செய்திகள் வெளி வந்துள்ளன. குக்கிராமத்தில் உள்ள அந்த ஆலயம் மிகச் சிறியது. ஆலயம் சிறிதானாலும் கீர்த்தி பெரியது. அதன் மீது சிமெண்டினால் ஆன தகட்டுக் கூறை போடப்பட்டு காட்சி தருகிறது. இங்கு நடைபெறும் பூஜைகள் ஆகம விதிகளின்படி நடத்தப்படுவதில்லை.

காலபைரவர்
சாதாரணமாக பயங்கரமான தோற்றத்தில் காட்சி தரும் பைரவர் தமது கையில் சூலம், ஒரு கையில் மனிதத் தலை போன்றவற்றைக் கொண்டு தனது வாகனமான நாயுடன் காட்சி தருவார். பயங்கரத் தோற்றத்தில் காணப்படும் சிவபெருமானின் எட்டாவது அம்சத்தில் உள்ள கடவுள் பைரவர் ஆவார். அவர் கையில் உள்ள மனிதத்தலை பைரவரால் வெட்டப்பட்ட பிரும்மாவின் தலை என்பதாக கூறுவார்கள். இன்னும் சிலர் அது தலை அல்ல, மாறாக மனித முகத்தின் ஓடு (கபாலம்) என்றும், காலபைரவரே மனித உயிர்களுக்கு முக்தி தந்து மேலுலகத்துக்கு அனுப்புபவர் என்பதினால் அதைக் குறிக்கும் காட்சி ஆகும் அது என்பார்கள். இன்னும் சில ஆலயங்களில் தலை விரித்த கோலம், பயங்கரமான சிவந்த கண்களைக் கொண்ட முகம், நிர்வாணக் கோலம், கழுத்தில் கபால மாலை, உடலெங்கும் சுற்றித் திரிந்தவண்ணம் உள்ள பாம்புகள், காலுக்கு அடியில் அவருடைய வாகனமான நாய் போன்றவற்றைக் கொண்ட கோலத்திலும் காலபைரவர் காட்சி தருகிறார். ஆனால் அவை அனைத்துக்கும் மாறாக சிரித்த, அமைதியான முகத்துடனும், அவருடைய வாகனமான நாயும் இல்லாமல் நின்ற நிலையில் ஷேத்ரபாலபுரத்தில் உள்ள தனி ஆலயத்தில் மட்டும் காட்சி தருவது அற்புதம். பெரும்பாலும் எந்த ஒரு ஆலயத்திலும் ஆலயத் தூண்களில் அல்லது சன்னதியின் சுவற்றின் பின்புறத்தில் அமைக்கப்பட்டு உள்ள சின்ன அறைப் போன்ற பகுதியில் பைரவரின் சிலைகளும் உருவங்களும் காணப்படும். ஆனால் சக்தி ஆலயங்களில் மட்டும் அவர் தனி மரியாதை பெற்று, கருவறைக்கு வெளியே ஆலயத்தின் வளாகத்துக்குள் தனி சன்னதியில் அவர் ஷேத்திரபாலகர் அதாவது ஆலயக் காவலராக இருந்து கொண்டு பார்வதி தேவிக்கு துணையாக உள்ளார். ஆகவேதான் சில தேவி ஆலயங்களில் ஆலயத்தின் பாதுகாவலராக உள்ள அவரிடம் தேவியின் சன்னதிக் கதவை மூடியபின் அதன் சாவிகளை சம்பிரதாயமாக தந்துவிட்டு, காலை வந்து சம்பிரதாயமாக அவரிடம் இருந்து அந்த சாவிகளை திரும்பப் பெற்றுக் கொண்டு கருவறையை திறப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.  

கால பைரவர் அவதரித்த கதை
கால பைரவரின் அவதாரம் நிகழக் காரணம் பிரும்மா மற்றும் விஷ்ணு இடையே நடைபெற்ற வாக்குவாதமே ஆகும். ஒருமுறை அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில் உலகில் சக்தி வாய்ந்தவர் யார் என்ற கேள்வியை விஷ்ணு பகவான் எழுப்ப அதற்கு பதிலளித்த பிரும்மன் படைப்புத் தொழிலை வைத்துள்ள தானே அனைவரையும் விட உயர்ந்தவர் என்று அகம்பாவத்துடன் கூறினார். ஆனால் அங்கிருந்த நான்கு வேதங்களும் அவர் கூற்று தவறு, அனைவரையும் விட சக்தி வாய்ந்தவர் பெண்ணின் சக்தியுடன் இணைந்துள்ள பரமாத்மன் எனும் சிவபெருமானே ஆவார் என்று எவ்வளவோ கூறியும் பிரும்ம பகவான் அதை உதாசீனப்படுத்தியதும் இல்லாமல் சிவபெருமானைக் குறித்து நிந்தனை செய்யவும் துவங்கினார். அவர்களது சம்பாஷணையை சற்று தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த சிவபெருமான் தன்னைக் குறித்து பிரும்மா அவமரியாதையுடன் பேசியதைக் கேட்டு கொதிப்படைந்து தன் அருகில் இருந்த ருத்ரனை அழைத்து, அகந்தையுடன் பேசிய பிரும்மனின் வாயுடன் கூடிய அந்த தலையை வெட்டி எரியுமாறு ஆணை இட்டார். அதைக் கேட்ட ருத்திரன் உடனே பயங்கரமான உருவம் கொண்ட பைரவராக தன்னை உருமாற்றிக் கொண்டு விரைந்து சென்று சிவபெருமானை பழித்துப் பேசிய பிரும்மனின் அந்த குறிப்பிட்ட தலையை பிய்த்து எறிந்தார். ஆனால் அதை செய்து முடித்ததும், தலையை அறுத்து எறிவது கொலை செய்ததிற்கு சமம் என்பதினால் பைரவரை பிருமஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. தனக்கு இருந்த பல தலைகளில் ஒரு தலையை இழந்த பிரும்மனும் அதிர்ச்சி அடைந்து தனது தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டார். சிவபெருமானும் அவரை மன்னித்தார். ஆனால் அவரது சூட்ஷதாரியின் கட்டளைக்கு ஏற்பவே பைரவர் அதை செய்தாலும் அவர் வேண்டும் என்றே செய்யாத தவறின் விளைவாக பிருமஹத்தி தோஷம் பற்றிக் கொண்ட பைரவரின் தோஷத்தை சிவபெருமானாலும் விலக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தெய்வமேயாக இருந்தாலும் நியதிக்கான தண்டனையை ஏற்க வேண்டும் என்ற விதியை மீற முடியாததினால் அந்த தோஷத்துக்கு பரிகாரம் செய்து கொண்டே அதை விலக்கி கொள்ள வேண்டி இருந்தது. நடந்த அனைத்துமே பரமாத்மனின் நியதிக்கான சில காரணங்களினால் நடைபெற்றுக் கொண்டு இருந்தன.

பிரும்மா தலையை இழந்த கதை

பிரும்மன் படைக்கப்பட்டபோது எத்தனை தலையுடன் இருந்தார் என்பதைக் குறித்து புராணத்திலேயே முரண்பட்ட கதைகள் உள்ளன. ஒரு புராணத்தின்படி படைப்புத் தொழிலை செய்ய முதலில் பிரும்மன் படைக்கப்படபோது அவருக்கு ஒரே ஒரு தலை மட்டுமே இருந்தது. படைப்புத் தொழிலை செய்யத் துவங்கியவர் நான்கு பக்கங்களிலும் திரும்பிப் பார்த்தபடி படைப்பை செய்யத் துவங்க ஒவ்வொரு பக்கத்திலும் அவர் திரும்பியபோது அவருக்கு ஒவ்வொரு தலை முளைத்தது. இப்படியாக நான்கு பக்கத்தைப் பார்த்தவர் நான்கு தலைக் கொண்ட தெய்வமாக உருமாறினார். அந்த நான்கு தலைகளும் நான்கு வேதங்களை உச்சரிக்கத் துவங்கின. ஆகவே பிரும்மனின் நான்கு தலைகளும் நான்கு திசைகளையும், நான்கு வேதங்களையும் பிரதிபலிப்பவனவாக அமைந்தன. ஆகவே பைரவர் துண்டித்தது பிரும்மனின் நான்காவது தலை என்று கருதப்பட்டது.

இன்னொரு கதையின்படி உலகைப் படைக்கத் துவங்கிய பிரும்மா தனக்கு உதவி செய்வதற்காக சத்ரூபா எனும் ஒரு அழகிய பெண்ணையும் படைத்தார். ஆனால் அவரே படைத்த அந்தப் தேவலோகப் பெண்ணின் அழகில் மயங்கிய அவர் அவள் சென்ற இடங்களில் எல்லாம் அவளையே திரும்பிப் பார்த்தபடி இருந்தவாறு அவளது அழகை ரசிக்கலானார். அவருக்கு படைப்புத் தொழிலில் உதவி செய்து கொண்டு இருந்தவள் சில நாட்களிலேயே அவருடைய பார்வையில் காமம் இருந்ததைக் கண்டு பிடித்தாள். ஆகவே அதை தவிர்க்க எண்ணியவள் நான்கு திக்குக்களில் எங்கு சென்று ஓடி ஒளிந்து கொண்டாலும் நான்கு திசைகளிலும் இருந்த முகத்தினால் அவரால் அவளது அழகை ரசிக்க முடிந்தது. அவரது தீய எண்ணத்தினால் பாதிக்கப்பட்டவள் இனி தப்பிச் செல்வதற்கு வேறு திசை இல்லை என்பதினால் அவரது பார்வையில் இருந்து தப்புவதற்காக தேவ லோகத்தை நோக்கி ஓடிச் செல்லத் துவங்க அவரும் தன்னுடைய உண்மையான முதல் முகத்தினால் மேலே பார்க்க அது ஐந்தாம் தலை ஆயிற்று. பயந்து போன சத்ரூபா ஓடிச் சென்று பார்வதி தேவியிடம் சரண் அடைந்து தன்னை பிரும்மாவின் காமப் பார்வையில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினாள். அதைக் கேட்டு கோபமுற்ற பார்வதி தேவியும் பிரும்மனுக்கு சாபம் கொடுத்தாள். 'சத்ரூபாவுக்கு நீ செய்த கொடுமைக்காக உன் ஐந்தாவது தலையை அவமானப்பட்டு நீ இழப்பாய்'. அவள் சாபத்தைக் கேட்டு பயந்து போன பிரும்மாவும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பைக் கேட்டாலும், செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நியதியின் விதியை மீற முடியாததினால் பைரவரின் மூலம் அவரது ஐந்தாவது தலையை இழக்க வேண்டி இருந்தது. அதன் பின் பிரும்மன் நான்கு தலைக் கொண்ட கடவுளாக மாற வேண்டி இருந்தது. ஆமாம், பிரும்மா ஏன் பைரவர் மூலம் பிரும்மன் ஏன் தலையை இழக்க வேண்டி இருந்தது? அதன் காரணம் என்ன?

கால பைரவர் அவதார தத்துவம்

உயர்நிலை ஆன்மீக போதனா வழிமுறைகளில் கூறப்படுவது என்ன என்றால் இந்த பிரபஞ்சம் பரமாத்மனால் படைக்கப்பட்டபோது முதலில் படைக்கப்பட்ட மும் மூர்த்திகளினால் அவர்களுடைய துணைக் கடவுட்கள், உப கடவுட்கள், நிழல் கடவுட்கள் என பலரும் பல்வேறு காரிய காரணங்களுக்காக பிரபஞ்சத்தில் படைக்கப்பட வேண்டி இருந்தது. அவர்கள் மூலம் பல்வேறு நாடகங்களை நடத்திக் காட்டி பூமியில் உள்ள மனிதர்களுக்கு ஆன்மீக போதனைகளை செய்ய வேண்டி இருந்தது. அந்த நாடகம் ஒவ்வொன்றிலும் சக்தி மற்றும் சிவபெருமானின் பாத்திரங்கள் முக்கியமானவையாக இருந்தன. அவற்றில் பங்கேற்க உள்ள பார்வதி தேவி மானிட உருவில் பல்வேறு இடங்களில், பல்வேறு அவதாரங்களாகவும் எழுந்தருள வேண்டி இருந்தது. பூமியில் பல இடங்களிலும் எழும்ப இருந்த ஆலயங்களில் அவள் தெய்வ உருவில் இருக்க வேண்டி இருந்தது. அதில் பலவற்றில் அவள் தனிமையில் இருக்க வேண்டி இருக்கும். அவள் தெய்வமே என்றாலும் அவளுக்கு துணை தேவையாக இருக்கும். அதற்கு சிவபெருமான் தன்னுடைய நிழல் உருவை படைத்து அவள் ஆலயங்கள் உள்ள இடங்களில் தங்க வைக்க வேண்டும். அவர் படைக்க உள்ள அவரது சக்தியினால் எழுந்தருள உள்ள அந்த நிழல் உருவம் தனித் தன்மைக் கொண்டதாக, ஏதாவது ஒரு பயங்கரமான தோற்றத்தில் இருந்தவாறு, அவளுக்கு துணையாக பாதுகாவலனாக அந்த ஆலயங்களில் இருக்க வேண்டும். இறந்தவர்களின் ஆத்மாவுக்கு முக்தி தரும் தொழிலை செய்து வரும் சிவபெருமானின் அவதாரமாக அவரே அமைக்க உள்ள நிழல் உருவம் அந்த வேலையை தன்னிடம் எடுத்துக் கொண்டு சிவபெருமானின் வேலை பளுவை குறைக்க வேண்டும். இப்படியாக அந்த நிழல் உருவம் காசிக்கு பாதுகாவலராக இருந்து கொண்டு ஆத்மாக்களுக்கு முக்தி தரும் தொழிலை செய்து கொண்டு, எங்கெல்லாம் பார்வதி தேவியின் ஆலயம் அமையுமோ, அந்த ஆலயங்களில் பார்வதி தேவி சென்று வசிக்கும்போது அவளுக்கு காவலாக அங்கே இன்னொரு சன்னதியில் பாதுகாவலராக தங்கி இருக்க வேண்டும். இவற்றை மனதில் கொண்டே அனைத்துக் கடவுட்களுக்கும் மேலான சிவபெருமான் பைரவர் மற்றும் கால பைரவர் என்ற இரு நிழல் உருவங்களைப் படைத்தார்.

பரபிரும்மனின் நியதிப்படி பூமியிலே நடக்க உள்ள நாடகத்தில் பிரும்மா தன்னுடைய பல தலைகளில் ஒன்றை இழக்க வேண்டி இருக்கும். அந்தத் தலையும் பிரும்மனால் படைக்கப்பட்ட அவருடைய நிழல் உருவமேயாகும். நடக்க உள்ள நாடகத்தில் பிரும்மாவின் நிழல் உருவமான அந்த தலையும் சிவபெருமானின் நிழல் உருவால் மட்டுமே வெட்டி எறியப்பட வேண்டும். ஏன் எனில் சிவபெருமானால் படைக்கப்பட உள்ள அந்த நிழல் உருவமே ஆத்மாக்களுக்கு முக்தி தரும் உருவமாக பூமியிலே காசியில் இருக்கும். பூமியிலே நடக்க உள்ள நாடகத்தில் பூமியிலே வெட்டி எறியப்பட இருந்த தலை, பூமியிலே மரணம் அடையும் மனித ஆத்மாக்கள் முக்தி பெற்று தேவலோகத்துக்கு திரும்பச் செல்வதைப் போல முக்தி பெற்று தேவலோகம் செல்ல வேண்டும். ஆகவே பூமியில் முக்தி தருபவரே அந்த நாடகத்தின் நாயகராக இருக்க வேண்டும். அதே சமயம் காசியின் மகத்துவமும் உலகுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அதற்கும் அந்த சிவபெருமானின் நிழல் உருவத்தின் பாத்திரம் அவசியமானது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே பைரவ அவதாரம் நிகழ்ந்தது.

பைரவர் தோஷம் விலகிய கதை
இனி மூலக் கதைக்கு வருவோம். பிரும்மாவின் தலையைக் கிள்ளி எறிந்ததினால் பைரவருக்கு பிரும்மஹத்தி தோஷம் தொற்றிக் கொண்டது. அவர் கையில் வைத்திருந்த சூலமும் உடனடியாக மறைந்து போனது. பிரும்மாவின் ஐந்தாவது தலையும் ஒரு கபாலமாக உருமாறி அவர் கையில் ஒட்டிக் கொண்டது. பிரும்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை துண்டித்ததினால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை தொலைக்க என்ன செய்வது என பைரவர் சிவபெருமானிடம் கேட்க அவரும் 'அவருக்கு (பைரவருக்கு) ஏற்பட்டுள்ள தோஷம் நான்கு வேதங்களையும் படைத்த பிரும்மாவின் தலையை வெட்டி எரிந்ததால் வந்தது என்பதினால் அந்த பாவம் விலக வேண்டும் என்றால் அந்த தலையின் கபாலத்தை கையில் ஏந்தியவண்ணம் பைரவர் உலகெங்கும் சுற்றி பிட்சை பெற்றுக் கொண்டு காசியை அடைந்து அந்த பாபத்தைத் தொலைத்துக் கொள்ள வேண்டும். பைரவர் காசியை அடைந்ததும் அந்த தோஷமும் விலகும்' என சிவபெருமான் பைரவரிடம் கூறினார். சிவபெருமான் பைரவருக்கு அவ்வாறு கூறிய உடனேயே மற்றொரு பயங்கர முகத்தைக் கொண்ட இரத்தம் கக்கிக் கொண்டு இருந்த பெண் அங்கு தோன்ற 'பைரவர் காசியை அடையும்வரை அவரை அவள் பயமுறுத்திக் கொண்டே துரத்திச் சென்ற வண்ணம் இருக்குமாறும் பைரவர் காசியை அடைந்ததும் அவரை பயமுறுத்திக் கொண்டு சென்றப் பெண்ணும் மறைந்து விடவேண்டும், அவளுக்கு காசியில் நுழைய அதிகாரம் இல்லை' என்றும் கூறினார். பைரவரும் கபாலத்துடன் ஓடத் துவங்க அந்தப் பெண்ணும் அவரை துரத்தியவண்ணம் சென்று கொண்டு இருந்தபோது காசியில் நுழைந்த பைரவர் கையில் இருந்த கபாலம் கீழே விழுந்து உடைய, அவரைத் துரத்திக் கொண்டு சென்ற பெண்ணும் மறைந்து போனாள். இப்படியாக காசியில் பைரவருடைய தோஷமும் விலகியது. அதன் பின் காசியில் காசி விஸ்வனாதராக சிவபெருமானும், அவர் மனைவியாக விசாலட்ஷி எனும் பெயரில் பார்வதியும் அங்கு எழுந்தருளினார்கள். இவ்விதமாக காசியும் புனிதத் தன்மையின் மேலான இடத்தைப் பெற்றதும், காசிக்கு வந்து இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு இறுதிக் காரியங்களை செய்ததும், இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு அங்கே சிவபெருமான் முக்தி தரத் துவங்கினார். பின்னர் தனது அந்த வேலையை தனது நிழல் ரூபமான பைரவருக்குத் தந்துவிட்டு காசிக்கு தலைமை காவல் தெய்வமாகவும் பைரவரை நியமித்தார்.

ஷேத்ரபாலபுர ஆலய வரலாறு

ஷேத்ரபாலபுர ஆலய பைரவரின் கதை மற்ற புராணங்களில் காணப்படும் கதையில் இருந்து மாறுபட்டு உள்ளது. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த ஆலயத்தின் கதை புராணங்களில் காணப்படும் கால பைரவர் கதையின் தொடர்ச்சி எனலாம். கால பைரவரின் பிரும்மஹத்தி தோஷம் காசியில் விலகியதாக கூறப்பட்டாலும், அது முற்றிலுமாக அங்கே விலகவில்லை. காசியில் ஒரு பாதியும், இன்னொரு பாதி ஷேத்ரபாலபுரத்திலும்தான் விலகின என்பதாக இந்த ஆலய வரலாறு கூறுகிறது.

இந்த ஆலய வரலாற்றின்படி பிரும்மாவின் தலையைக் கிள்ளி எறிந்தவுடன் பிரும்மாவின் ஐந்தாவது தலை ஒரு கபாலமாக உருமாறி அவர் கையில் ஒட்டிக் கொண்டது. அதை தன் கையில் இருந்து விடுவித்துக் கொள்ள 'என்ன செய்வது' என பைரவர் சிவபெருமானிடம் கேட்க அவரும் 'அவருக்கு ஏற்பட்டுள்ள பிருமஹத்தி தோஷம் ஒரு பிராமணரைக் கொன்றதினால் (பிரும்மாவை) ஏற்பட்டுள்ளது என்றும், அந்த தோஷமானது தானாகவே செய்யாத குற்றத்துக்கு ஏற்பட்டது என்றாலும் கூட அந்த பாவத்தை விலக்கிக் கொள்ள அந்த தலையின் கபாலத்தை கையில் ஏந்தியவண்ணம் பைரவர் உலகெங்கும் சுற்றி பிட்சை பெற்றுக் கொண்டு காசியை அடைந்து அந்த பாபத்தைத் தொலைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சில காரணங்களினால் ஏற்பட்டவை. பைரவரின் கையில் ஒட்டிக் கொண்டுள்ள கபாலம் எந்த பூமியில் விழுமோ அந்த இடத்தில் அவருடைய தோஷத்தின் முதல் பகுதி விலகும். தாம் தனது மனைவியுடன் அங்கு எழுந்தருளி, மரணம் அடைந்து போன ஆத்மாக்களுக்கு அங்கு இறுதிக் கடன்கள் செய்யப்பட்டு முடிந்தவுடன் அவற்றுக்கு தாம் முக்தி தர உள்ளதாகவும், ஆகவே அந்த இடம் மேன்மையான, மிகப் பெரிய புனிதத் தன்மை வாய்ந்த வழிபாட்டுத் தலமாகி பெருமை பெறும். ஆனால் மீதம் உள்ள தோஷத்தை விலக்கிக் கொள்ள எந்த இடத்தில் கபாலம் விழுந்ததோ அந்த இடத்தில் இருந்து பைரவர் மீண்டும் தனது பயணத்தை துவக்கி மனித ரத்தத்தை பிட்ஷையாக பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ரத்தத்தை தனது கமண்டலத்தில் நிரப்பிக் கொண்டே செல்ல, எந்த இடத்தில் அந்த கமண்டலம் ரத்தத்தினால் நிரப்பி விடுமோ அங்கு அவருடைய பிருமஹத்தி தோஷம் முற்றிலும் விலகிவிடும். இதற்காக வழியில் வினாயகப் பெருமானும் அவருக்கு வழிகாட்டி உதவுவார்' என்று கூறினார்.

சிவபெருமான் பைரவருக்கு அவ்வாறு கூறிய உடனேயே பயங்கர முகத்துடன் இரத்தம் கக்கிக் கொண்டு இருந்த தோற்றத்தில் ஒரு பெண் அங்கு தோன்றினாள். அவளும் பைரவர் காசியை அடையும்வரை அவரை பயமுறுத்திக் கொண்டே துரத்திச் சென்ற வண்ணம் இருக்க கபாலம் காசியில் விழுந்தது. அவரை துரத்திக் கொண்டு சென்றப் பெண்ணும் மறைந்து விட பைரவரின் முதல் பகுதி தோஷமும் விலகியது. காசியில் சிவபெருமானும் பார்வதி தேவியும் விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி என்ற பெயரில் எழுந்தருள காசிக்கு தலைமை காவல் தெய்வமாக பைரவர் நியமிக்கப்பட்டார். காசியும் மேன்மையான, மிகப் பெரிய புனிதத் தன்மை கொண்ட வழிபாட்டுத் தலமாக உருமாறியது.

அதைத் தொடர்ந்து பைரவரும் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு ரத்த பிட்ஷை எடுத்தபடி அங்கிருந்து மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு ரத்த பிட்ஷை எடுத்து வரலானார். பல்வேறு இடங்களுக்கும் சென்று ரத்த பிட்ஷை எடுத்து வந்தாலும் கமண்டலத்தில் ஒரு சொட்டு ரத்தம் கூட கிடைக்கவில்லை என்பதினால் வருத்தம் அடைந்தவர் தென் பகுதியில் இருந்த திருவாலஞ்சுழி எனும் இடத்தை அடைந்ததும் அங்கு ஸ்வேத வினாயகராக எழுந்தருளிக் கொண்டு இருந்த விநாயகரை சந்தித்தார். அவரை வணங்கி அவரிடம் தன்னுடைய தோஷம் விலக எங்கு செல்ல வேண்டும் என்று ஆலோசனைக் கேட்டபோது, வினாயகரும் அவரிடம் அவர் கையில் இருந்த சூலத்தை மேற்குப் பக்கமாக வீசி எறிந்த பின் அந்த சூலம் எங்கு சென்று விழுமோ அங்கு சென்று தவமிருந்து விஷ்ணுவை வேண்டிக் கொண்டால் கமண்டலத்தில் ரத்தம் நிறைய அவர் அருள் புரிவார் என்று கூற பைரவரும் தனது சூலத்தை மேற்கு திசையில் வீசி எறிந்தார்.

அந்த சூலம் விழுந்த இடமே ஷேத்ரபாலபுரம் ஆகும். அது அடர்ந்த காட்டுச் மரங்களாலும், செடி கொடிகளினாலும் மூடப்பட்ட இடமாக இருந்தாலும், சூலம் விழுந்த இடம் அங்கிருந்த ஒரு குளத்தின் அருகில் இருந்த திறந்தவெளி இடமாக இருந்தது. பைரவரும் அந்த இடத்துக்கு சென்று தவத்தில் அமர்ந்து கொண்டு விஷ்ணு பகவானை வேண்டிக் கொள்ள, விஷ்ணுவும் அவர் முன் தோன்றி அவரது தோஷம் விலகட்டும் என்பதற்காக தன் கை விரலில் இருந்து ஒரு சொட்டு ரத்தத்தை அந்த கமண்டலத்தில் சொட்ட, கமண்டலம் ரத்தத்தினால் நிறைந்தது. விஷ்ணு அவருக்கு அளித்த ரத்த பிட்ஷையினால் கமண்டலம் நிறைய, பைரவரின் பிரும்மஹத்தி தோஷம் முற்றிலும் விலகியது. பைரவர் எந்த இடத்தில் நின்று கொண்டு சாப விமோசனத்தைப் பெற்றாரோ அந்த இடமே ஷேத்திரபாலபுரம் என ஆகியது. அடுத்தகணம் விஷ்ணு மறைந்து விட்டார்.

தோஷம் விலகிய பைரவரும் அங்கிருந்த ஒரு தாடகத்தில் குளித்தவுடன் அந்த தாடகத்தில் மறைந்திருந்த சூலமும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டது. அந்த தாடகத்தின் பெயரும் சூலதீர்த்தம் என்றாகியது. பைரவரின் உருவமும் அவர் மூல உருவமான பயங்கரத் தோற்றத்தில் இல்லாமல் அமைதியான, புன்னகைப் பூத்த முகமாக அமைந்தது. தாடகத்தில் குளித்தப் பின் பைரவர் வெளியில் வந்ததும் அங்கு ஒரு சிறுவன் உருவில் வினாயகர் தோன்றினார். வினாயகரும் தனது தந்தையின் நிழல் உருவமான பைரவரை வணங்கினார். அது மட்டும் அல்லாமல் இனி அந்த இடம் காசியைவிட மேன்மையான இடமாக விளங்கும் என்றும், அங்கும் பைரவரை துதிக்கும் ஆத்மாக்கள் முக்தி பெறும் என்றும், எந்த ஒரு தோஷங்களினாலும் பீடிக்கப்பட்டவர்கள் அங்கு வந்து பைரவரை வணங்கித் துதித்தால் தோஷங்கள் அனைத்தும் முற்றிலுமாக விலகும் என்றும் கூறினார். ஆகவே பால உருவில் வினாயகர் அவதரித்த அந்த இடம் ஷேத்திரபாலபுரம் எனப் பெயர் பெற்றது.

இந்த ஆலயத்தை சுற்றி சூல தீர்த்தம், காவேரி தீர்த்தம், கணேஷ தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் ஸ்கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை இந்த தலத்தில் வந்து பிரும்மா, இந்திரன், நவகிரகங்கள், தேவலோகத்தில் மென்மையான ரிஷி முனிவர்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்ததான கதை உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தின் மேன்மை வெளித் தெரியாமல் இருந்ததின் காரணம் ஆலயம் ஒதுக்குபுறமான கிராமத்தில் அமைந்து இருந்ததேயாகும். அது மட்டும் அல்ல, அங்கு செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயத்தின் மேன்மை மெல்ல மெல்ல வாய்மொழிக் கதையாக கிராம மக்கள் மூலம் வெளி உலகுக்குத் தெரியலாயிற்று.

இவை அனைத்தும் நடைபெற்ற இடம் ஷேத்ரபாலபுரம் என்பதாகும். இங்குள்ள ஆலயத்தில் பைரவர் ஆனந்த கால பைரவர் எனும் பெயரில் எழுந்தருளி உள்ளார். நின்ற நிலையில், அமைதியாக புன்சிரிப்புடன் காட்சி தரும் அவரது கைகளில் கபாலம், மத்தளம், பாசக் கயிறு மற்றும் சூலம் போன்றவை காணப்படுகின்றன. ஆனால் அவருடைய வாகனமான நாய் காணப்படவில்லை. இவரையே ஷேத்ரபாலகர் என்று அழைக்கின்றார்கள். சாதாரணமாக உக்கிரஹ சொரூபமாக காட்சி தரும் பைரவர் இங்கு அமைதியானவராக காட்சி தருகிறார். தென் நாட்டிலேயே கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயமே பைரவருக்கு மட்டுமே மூல தெய்வமாகக் கொண்டு கட்டப்பட்டு ஆலயம் ஆகும். இங்கு ஸ்வேத வினாயகரும், நந்தியும் உள்ளார்கள். ஆலய வளாகத்துக்குள் ஒரு கிணறும் உள்ளது.

இந்த ஆலயத்தின் மகத்துவம் என்ன என்றால் சாதாரணமாக விளக்கு ஏற்றி வழிபடப்படும் எலுமிச்சை காய், மண் மற்றும் உலோகங்களில் செய்யப்பட்ட விளக்கில் எண்ணை ஊற்றி வழிபடாமல் இங்குள்ள பைரவருக்கு பாவக்காயில் எண்ணை ஊற்றி விளக்கு ஏற்றி அவரை வழிபடுவதுதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படி பாவக்காய் மற்றும் பூஷணிக்காயில் எண்ணை ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது இந்த ஆலயத்தில் இருந்துதான் துவங்கி உள்ளதாகக் கூறுகிறார்கள்.

பாவக்காயில் எண்ணை ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுவத்தின் தத்துவம் என்ன? ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கசப்பான காலம் உண்டு. அதன் காரணம் பூர்வ ஜென்ம வினைப் பயன் மற்றும் முன்னோர்கள் செய்த பாபங்களின் தொடர்வதுதான். ஏன், அவரவர்களே செய்த பாவங்களும் துன்பங்களைத் தரும். கரடு முரணான நம் வாழ்கையை பிரதிபலித்து அதன் துன்ப காலத்தை எடுத்துக் காட்டுவதே கசப்புத் தன்மையை கொண்ட பாவக்காய். அதில் எண்ணை ஊற்றி வழிபடுகையில் ஒளி தரும் விளக்கைப் போல பைரவரை வழிபட்டால் வாழ்விலும் ஒளி ஏற்படும். இங்குள்ள ஆலயத்தில் பாவக்காய் பொரியல், உணவு செய்து அவற்றை நேவித்தியம் செய்தபின் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். நமது வாழ்க்கையில் ஏற்படும் ஊழ்வினையினால் ஏற்படும் தீமைகள் விலக வேண்டும் எனில் பைரவரை வேண்டித் துதிப்பதே சிறந்தது ஆகும். அவரே அனைத்து பூர்வ ஜென்ம பாபங்களையும் அழித்து முக்தி தரும் பரமாத்மன் எனும் சிவபெருமானின் நிழல் ரூப தெய்வம் ஆகும். அவருக்கு பாவக்காயில் எண்ணை ஊற்றி துதிக்கையில் இருளைப் போன்ற வாழ்வின் துன்பப் பகுதியை அழித்து வெளிச்சம் தருவதைப் போல இன்பத்தை அளிப்பார். ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து காயத்ரி பிரவ மந்திரத்தை ஜெபிக்கையில் அவரவருக்கு உண்டான கிரக தோஷங்கள் விலகுகின்றன என்பது நம்பிக்கை ஆகும். அந்தந்த கிரஹங்களுக்கு உரிய பிராண தேவதை மற்றும் உபசக்தி தேவதைகளின் பெயர்கள் கீழே தரப்பட்டு உள்ளன.
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தொல்லைகளை களைந்து கொள்ள அவரவர்கள் எந்த பூக்களையும், பொருட்களையும் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும், அன்று என்ன பிரசாதம் விநியோகிக்க வேண்டும் என்பதை ஆலய வளாகத்துக்குள் எழுதி வைத்து உள்ளார்கள். அது கீழே தரப்பட்டு உள்ளது.

Kshetrabalapuram Ananda Kala Bhairava (E)Some decades ago independent shrines for God Bhairava were not there in south except the one in Kshetrabalapuram a small hamlet in Kuttalam Taluk, situated eight km from Mayiladuthurai on way to Kumbakonam. A small, but divinely glorious shrine for God Bhairava in the name of Ananda Kala Bhairava exists. None knows the origin of this centuries old shrine or who initially commenced God Bhairava worship there, but the divinity of  God Bhairava in this  glorious shrine cannot be  disputed. At one period of time  in south there were no independent God Bhairava temple except the one in Kshetrabalapuram (However in recent decades some temples have been constructed specially for God Bhairava in some other states).  Contrary to fearsome looking God Bhairava, placid, ever smiling God Bhairava manifest in the temple bestowing boons to devotees removing hurdles in their life, cure personal ailments, settle family disputes, and beget children  when they offer worship and pray by lighting up oil filled  Bitter guard or Pumpkin lamps, a very unique feature one can see only here even though the practice of lighting up the oil lamp with Bitter Guard or Pumpkin has spread to other Bhairava Temples elsewhere.  People come even from long distances or outstation to offer prayer for nine weeks continuously and light up oil lamp on Bitter guard at the end of which they get their prayer fulfilled, so claim the devotees. 

Initially the historical importance of this shrine, God Ananda Kala Bhairava remained unknown even to the villagers who traditionally considered him in the shrine to be one of the Village deities as it was situated in open space without any temple structure. The greatness of God Bhairava enshrined and the historical importance of the shrine were realized only few decades ago by the spiritual leaders, learned Pundits and other scholars who visited there and today it has turned out to be one of the most sacred site for God Bhairava in south. The sanctum in the shrine is very small and entire shrine roof top is covered with cement sheets. The puja performed is also non agama in nature and temple is managed by the local villagers. 

God Kala Bhairava
World over God Bhairava can be seen depicted in fearsome form with Trisul and a human head hanging in hand, accompanied by a Dog which is his carrier vehicle (Vahana). He is said to be one of the eighth fierce manifestations of God Shiva. The human head or skull hanging in his hand is believed to be that of the severed head of God Brahma. The scholars also state that it is not a head and instead a skull that explain the philosophy that one’s’ soul is finally liberated (Mukthi) at the hands of God Kala Bhairava. In some of the temples he is also depicted with frowning, angry eyes, with tiger's teeth and flaming hair, naked with garlands of skulls and a coiled snake around his neck. Contrary to such postures in several temples, in the shrine at Kshetrabalapuram, God Kala Bhairava can be seen standing alone without accompanied by carrier vehicle Dog, placid, smiling, and with four hands. As stated earlier there are no exclusive shrines for God Bhairava in south except the one in Kshetrabalapuram and in most of the temples one can see his image carved out on pillars or carved out stone idols (Statues) kept in a small open chamber behind God Shiva’s sanctum walls. However in Sakthi temples (Parvathi) God Kala Bhairava enjoys special status, being guardian deity as dispatched by God Siva to guard his wife Parvathi. God Kala Bhairava’s  small shrine or sanctum in Devi temples can be seen kept outside the sanctum of Devi. In some of the temples God Kala Bhairava is known as Kshetrapalaka (not Kshetrabalaka) or guardian deity for the temple and therefore the keys of the temple sanctum doors are ceremonially submitted to him (God Kala Bhairava) at temple closing time and received back from him at opening time. 

Manifestation of God Bhairava
The birth of God Bhairava is connected to a conversation between God Brahma and God Vishnu in Devaloga. Once in Devaloga when God Brahma and God Vishnu were discussing as to who amongst them was supreme, with arrogance God Brahma opined that he being the creator of the Universe was supreme than other including God Siva. God Brahma further advised God Vishnu that henceforth he commence worshiping him as he was Supreme even as the four Vedas standing there disputed his claim and expressed that only God Shiva was the Supreme as he was Paramathman combined with feminine power Sakthi.  Brahma however ignored Veda’s opinion and further in an act of offending the feelings of God Siva who was listening to the conversation standing by a side, he (God Brahma) began to speak disparagingly about God Shiva who in reality was Supreme as Parabriman and who created the Universe. God Siva could not tolerate the fallacy and misbehavior of God Brahma anymore and in fit of anger asked his shadow God Rudra standing there to remove the very head of God Brahma which disparagingly spoke ill of him (God Siva). On orders of God Siva, immediately God Rudra took the form of ferocious God Bhairava and plucked out the particular head of God Brahma which spoke ill of God Siva thus unknowingly getting attracted with Brahmahathi Dosha for the sin committed, the act of plucking out the head of anyone tantamount to killing. Once God Brahma  lost one of the heads, realizing his mistake and fearing further humiliation from the hands of God Bhairava he (God Brahma) sought pardon from God Siva who accepted it grace but at the same time God Siva could not remove the Brahmahathi Dosha befell on God Bhairava, who of course unhesitatingly carried out only the orders of him (Supreme)  and once the Dosha was incurred by anyone, irrespective of their status, it could only be absolved by undertaking  penance. The entire events were getting unfolded as ordained to a drama staged by Parabriman himself for certain reasons. 

God Brahma loses one of his heads 
There are contradictions in Puranas on no of heads God Brahma initially possessed. According to one version in Puranas, initially God Brahma was created with only one head and as he began the act of creation and turned towards each of the four directions, new heads sprouted, one each facing each direction thus totaling to four heads. Each one of the heads began reciting one of the four Vedas. Thus Brahma's four heads represented the four directions like South, North, West and East  and the four Vedas namely Rig, Yajur, Sama and Atharva.  When God Bhairava cut off the fourth head of God Brahma, he was left with only three heads. 

As per another version in Puranas, God Brahma while engaged in the process of creation, he himself created a woman named Shatrupa. Once she was out, he was attracted towards her beauty and began gazing her in whichever direction she went. While helping him in the process of creation she noticed that his attention was slowly turning to be sensual in nature. From one point of time he began expressing the feelings of his lust in open to her and since he had four heads facing each direction, she could not escape from his sensual eyes in any direction. Embarrassed by the act which intruded her privacy, when Shatrupa in order to escape his attention ran towards devaloga above, even then God Brahma did  not turn off his attention on her and quickly sprouted another head above four heads to see above thus possessing  five heads in all. Shatrupa ran to Goddess Parvathi and pleaded with her to save her from God Brahma. Seeing the plight of Shatrupa, furious Goddess Parvathi blocked the path of God Brahma who began following Shatrupa and cursed him that he would lose his head of shame  that embarrassed and agonized Shatrupa, in an act of humiliation in Boologa. Only then God Brahma realized his mistake and sought her pardon, but could not escape the fairness of justice even though he was divine. When God Bhairava plucked out was the fifth head of God Brahma he was (God Brahma)  left with only four heads. Now the next curious question is why did God Brahma lose one of the heads at the hands of God Bhairava? 

Emanation of God Bhairava- Philosophy and concept 
In the highest level of spiritual pedagogy, it is stated that when the Universe was created by Paramathman, lots of Gods and Gods along with Semi and Demi Gods were also destined to be created by the respective three Supreme Trios for performing certain acts in divine inspired dramas to be enacted in Universe for the welfare of mankind and to effectively spread the message of spiritual doctrine. In each of the drama to be enacted, the roles of Shiva-Sakthi were to be crucial and most importantly Goddess Parvathi’s manifestation in different forms and in different places on earth sometimes even as human was essential. Therefore each of the three deities have to create hundreds and thousands of shadow incarnations of theirs in different forms like Semi and Demi Gods and spirits having different nature for participating in the particular drama getting enacted. Goddess Parvathi was destined not only to incarnate or manifest in different places, in different forms of divine but also has to settle in shrines or temples established on earth when she would have to remain alone in isolated places. Though divine she too needed protection from other jealous divine elements and a guardian deity was therefore necessary to guard her in the shrines. In order to meet this purpose God Siva had to create a special shadow incarnation from his radiance exclusively to give her protection. Also he being liberator (the one who gives Mukthi) of souls, part of the duty needed to be transferred to his shadow incarnation to offload his burden. The shadow incarnation shall then on begin to perform the duty properly on  behalf God Siva. Thus the shadow incarnation to be created shall be independent in form and perform twin duties like guardian deity of sacred  place Kasi where he would accord liberation to the departed souls  and secondly to remain guardian deity in the temples of Goddess Parvathi to give protection to her. With these in mind, God Siva the Supreme, created from his radiance God Bhairava also called Kala Bhairava for performing the twin duties. 

Similarly God Brahma was destined to lose one of the heads on earth after enacting a drama and the head to be lost, again creation of God Brahma himself, needed to be liberated after performing its task. Since God Kala Bhairava had to perform the duty of liberating the souls on earth, the head of God Brahma, after completion of its duty on earth too needed to be liberated and sent back to devaloga. In this process, the glory of Varanasi (Kasi), where Siva-Sakthi manifested too needed to be revealed. Thus by  various acts of divine drama, the importance of God Bhairava needed to be revealed to the universe.

God Bhairava sheds Brahmahathi Dosha
Coming back to the main story, once God Bhairava got affiliated with Brahmahaththi Dosha, the severed head of God Brahma turned into a skull and got attached to one of his fingers and failed to get released from hand. Unable to get the skull released from fingers, God Bhairava sought counsel from God Siva. God Siva told him that by the act of chopping off the head of God Brahma who was creator of all four Vedas, he had been affiliated with Brahmahaththi Dosha which would only go away when the skull gets released from his hand. Therefore in order to get rid of the sin and be absolved from the Dosha he (God Bhairava) has to roam around the universe with the skull stuck to the fingers, seeking alms till he reached Kashi in the form of Bhikshatana, a mendicant. Once he (God Bhairava) entered Kashi, he would be absolved of the Brahmahaththi Dosha. As God Shiva finished, a fierce looking maiden appeared before God Bhairava. God Shiva instructed the maiden to frighten and relentlessly chase God Bhairava everywhere until he reached the holy city of Kashi. Thereafter she may go away from there as she cannot enter the holy city of Kashi. As per the instructions of God Shiva, the journey of God Bhairava began seeking alms with the skull of God Brahma stuck in hand, and as chased by the frightening maiden. On entering Kashi the skull got released from the fingers and fell down. The maiden who chased him also disappeared. Thus the Brahmahaththi Dosha of God Bhairava sank into the nether-world, freeing him from the dosha to attain the status of the guardian deity of Kasi where Kasi Vishwanath and his spouse Parvathi too manifest to give liberation (Moksha) to the souls for whom final rites and rituals were done there. 

History and story of the Kshetrabalapuram temple
What is the history of Kshetrabalapuram? The story of Ananda Kala Bhairava temple in Kshetrabalapuram is far different from the other puranic stories on God Kala Bhairava. It is actually an extension of the basic Puranic stories. The Brahmahathi Dosha of God Bhairava for severing the head of God Brahma did not fully end in Kasi as everyone believed, but actually he was absolved from the Dosha completely in Kshetrabalapuram. Thus only the first part of God Bhairava’s Dosha got released in Kasi while the other part got released in Kshetrabalapuram to complete it. Read the interesting historical story connected with this shrine in Kshetrabalapuram. 

As per the temple history, after God Brahma’s head was severed it instantly turned into a skull and got stuck to the fingers of God Bhairava. When God Bhairava sought guidance from God Siva to get rid of the skull, saddened God Siva informed him that he (God Bhairava) has been afflicted with Brahmahathi Dosha on account of killing a Brahmin (God Brahma) even though the sin was not intentionally committed by him (God Bhairava) directly, but was carried out on his (God Siva) orders. The event was destined for certain cause and therefore in order to get rid of the dosha he (God Bhairava) has to roam around the universe carrying the skull seeking alms in the form of Bhikshatana, a mendicant till the skull fall in some place on earth where he (God Bhairava) would be partly absolved of the Brahmahathi Dosha (first stage of Brahmahathi Dosha) and the fearsome maiden following him would also vanish. The earth where the skull fell would also become sanctified.

In order to get rid of the remaining part of the Brahmahathi Dosha, from the place where the skull fell he (God Bhairava) should further continue his travel around the Universe, now seeking blood as Biksha and collect it in his Kamandal (small water pot held in hand). Once the Kamandal gets fully filled with blood, then the Brahmahathi Dosha would be wiped off completely. On way his son (God Vinayaga) would meet him to guide him to find the right place where his Kamandal would get filled with blood so that he could manifest there in placid form much different to his original fearsome form, portraying satva guna. 

As per the command of his Lord, God Bhairava, emanation from God Siva began to travel and got rid of the first stage of Brahmahathi Dosha in Kasi when the skull fell there. Kasi too became sanctified with the manifestation of God Siva and Goddess Parvathi as Kasi Vishwanatha and his spouse Visalakshi. God Bhairava was made the guardian deity of Kasi  in the name of God Kala Bhairava. 

With his power, God Bhairava converted  part of his power as Kala Bhairava and left it temporarily in  Kasi to  come back and retake it after getting rid of the remaining part of his Brahmahathi Dosha. God Bhairava continued to travel seeking Blood as Biksha but nowhere he got even a single drop of blood as Biksha. Dejected God Bhairava reached a place called Thiruvalanchuzhi in south where he met God Siva’s son God Vinayaga manifested there in the form of Swetha Vinayaga, and offered worship to him and sought his guidance to find the final destination where his Kamandal can be fully filled with blood. Swetha Vinayaka  advised God Bhairava to throw his Trisul on the eastern side and reach the place where the Trisul fell, sit in penance and pray God Vishnu seeking Kamandalful of blood as Biksha. God Bhairava complied with the advice of Swetha Vinayaga and threw his Trisul on eastern side which went and fell in the present place of his (God Bhairava) temple in Kshetrabalapuram. 

When God Bhairava reached Kshetrabalapuram, he found it to be an isolated place surrounded by dense trees and wild plants. However the place where the Trisul fell was open spaced near a natural water tank. He sat in penance and prayed Lord Vishnu who appeared before him and put a drop of blood from his finger into his Kamandal. In the next moment the Kamandal got fully filled with blood thereby ending the Brahmahathi Dosha incurred by God Bhairava for plucking the head of God Brahma. God Vishnu then disappeared. 

Once rid of dosha, God Bhairava took bath in the nearby water tank and not only his Trisul struck on earth flew back and rejoined him but his appearance too became placid and smiling without original form of fearsome look. Thus the water tank came to be called as Soola Theertham (Sacred Water tank of Trisul). As soon as he came out of the water tank, God Vinayaga too appeared at the bank of the water tank in the form of a lad and took blessings from God Bhairava since God Bhairava now freed of all doshas was indeed emanation of his father God Siva. This place therefore came to be called as Shethra Balapuram meaning the place where God Vinayaga appeared as a boy. God Vinayaga proclaimed that henceforth the place would be no less to the greatness of Kasi, but in fact a bit higher than it as God Bhairava, the guardian deity of Kasi to liberate the souls by destroying the effects of sins, himself got rid of the sins completely in Kshetrabalapuram. 

There are some water tanks surrounding this temple. They are known as Kaveri Theertham, Ganesha Theertham, Chakra Theertham, Skanda Theertham and Soola Theertham. Slowly as the place gained highest level of sanctity, divine forces like Brahma, Demi and Semi Gods like Devendra, Navagrahas along with other Deva ganas, greatest Rishies and Saints too came and offered worship to God Bhairava here. Centuries ago the greatness of this place where God Bhairava manifest as Ananda Kala Bhairava remained unknown to many, reason being it was in a remote and isolated village not accessible easily. But as time passed, the greatness of the place kept on passing to people by word of mouth stories and a small shrine was established by the villagers. 

God Bhairava manifest as Ananda Kala Bhairava in Kshetrabalapuram temple and is in standing posture holding Kabala, Trisul, Pasam called Noose and Drum in four hands to grant boons to those who worship and pray him with sincerity. Kala Bhairava is known as Kshetrabalakar (Boy of the place) here. Normally God Bhairava is God of Ugra Swaroopa (angry in nature), but  in this place where he got rid of his Brahmahathi dosha, he is placid, sober and remain in a happy state of mood. The temple is a small shine facing west. One could also see Swetha Vinayakar in the temple. Nandi faces Kala Bhairava. But Dog, the carrier vehicle of Bhairava is not found there. There is also a well inside the compound. 

Another unique practice of lighting oil lamps in Bitter guard and Pumpkin is seen here. The lighting up of oil lamps made of terracotta, metal, porcelain and cut pieces of lemon and to keep them before the altar are common and began thousands of years ago and are continued to this day. But the origin of lighting up lamps filled with oil in the Bitter guard and Pumpkin commenced only in this shrine in Kshetrabalapuram before ages and now spread to many parts of the world where Bhairava temple exists. 

The logic behind lighting up lamps made of Bitter guard has been that the life of everyone on earth is filled with sorrow and miseries similar to the taste of Bitter guard. The Bitter guard reflects the life of humans on earth. The cause of miseries may be many, some of which are due to the curse incurred for the sins committed by their forefathers or committed by their own. Even if they have been committed unknowingly, it continues to haunt the families for generations thereby causing unknown fear haunting their mind. In order to get rid of such fear psychosis and obstacles in life  besides lighting lamp in Bitter guard with prayers, food items made out of Bitter guard is also distributed to the devotees as Prasad  which is unique and cannot be seen in other temple. To get relieved of the effects of sin one has to unconditionally surrender to the divine and  God Kala Bhairava is the best answer for it since he is not only punisher of sinners, but also compassionate enough to free one from the effects of sin when surrendered to him unconditionally as he is an emanation from God Siva otherwise called Paramathman, the one who created the universe and destroyer as well. If God Kala Bhairava is prayed by lighting up lamp filled with oil in Bitter guard he (God Bhairava) will remove the darkness from their life and brighten up their life to enable all around happiness prevail  in the family. 

Each of the graha dosha’s are wiped out by God Bhairava’s grace if one pray him here particularly on Sundays by chanting particular Bhairava Gayathri Sloka which consists of separate mantras for Bhairava and Gayathri relevant to each of the graha. The Prana Devatha and Upasakthi Devatha to be prayed are indicated below.

For getting rid of the problems one face and remedies by way of praying with specific flower and other item and distribution of Prasad as displaced in the temple is reproduced below for the benefit of the devotees visiting there.