Wednesday, June 29, 2016

Saptha Kanniga (T)

 
பல ஆலயங்களிலும் நாம் சப்த அல்லது அஷ்ட கன்னிகைகள் அதாவது  ஏழு அல்லது எட்டு எனும் அளவில் தெய்வ கன்னிகளின் சிலைகள் இருப்பதைப் பார்த்து இருக்கலாம். ஆலயங்களில் சென்று அங்குள்ள தெய்வங்களை துதித்தப் பின் அங்குள்ள தெய்வ  கன்னிகைகளையும் துதித்துவிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள். அதற்குக் காரணம் அசுரர்களையும், அரக்கர்களையும் அழிப்பதற்கு அவர்களுடன் நடைபெற்ற யுத்தங்களில் தமக்கு உதவுவதற்கு சிவன், பார்வதி, விஷ்ணு போன்ற கடவுட்களே அந்த தேவதைகளை படைத்துள்ளனர் என்று நம்பப்படுவதே. இன்னும் சிலர் அவர்களை பிரும்ம தேவரே படைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்த தேவதைகளை ஆராதிக்க த்யான ஸ்லோகங்கள் உள்ளன. ஆகவே அவர்களை ஆராதித்துத் துதித்தால் நமக்குள்ள எதிரிகள் ஓடி விடுவார்கள். தீமைகள் அண்டாது. பயம் விலகும் என்பது பரவலான நம்பிக்கை.

சப்த கன்னிகைகள் யார்? அந்த கன்னிகைகளை பற்றி தேவி மகாத்மியம், லிங்க புராணம், மத்சைய புராணம், வராக புராணம் போன்ற புராணங்களில் குறிப்புகள் உள்ளன. வராஹ புராணத்தின்படி சப்த கன்னிகைகள் ஏழு பெண் தெய்வங்கள் அல்ல, அவர்கள் அஷ்ட கன்னிகா எனப்படும் எட்டு தெய்வங்கள் என்பதாக தெரிவிக்கின்றது. பொதுவாக உள்ள ஏழு கன்னிகைகள் சாமுண்ட, இந்திராணி, வைசாலி அல்லது வராஹி, வைஷ்ணவி, கெளமாரி, மகேஸ்வரி மற்றும் பிரம்மி என்பவர்களே. எட்டாவது சப்த கன்னி யார் என்றால் அது மஹாலஷ்மி என்று சிலரும், யோகிஸ்வரி என்று சிலரும் கூறுகின்றார்கள். கடகமாலா வழிபாட்டு ஐதீகத்தின்படி ஸ்ரீ வித்யாவின் திரிபுரா நகரின் எட்டு வாயில்களையும், அதாவது நான்கு நுழை வாயில் மற்றும் நான்கு மூலைகளையும் இந்த எட்டு கன்னிகைகளும் காவல் காப்பதாக கூறப்பட்டு உள்ளது. சப்த அல்லது அஷ்ட கன்னிகைகள் யோகினி தேவதைகளின் குழுவில்  உள்ளவர்கள் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். சப்த கன்னிகைகள் தோன்றியது எப்படி? அது குறித்து கூறப்படும் கதைகள் இவை.

சூரபத்மனை அழிக்க அதிசக்தி வாய்ந்த குழந்தையை பிறப்பிக்க நினைத்த சிவபெருமானின் மூன்றாம் கண்ணில் இருந்து தெறித்த கனலில் இருந்து ஆறு பெண் தெய்வங்கள் வெளிவந்தன. அதற்கு முன்னர்தான் சிவபெருமானின் விந்து விழுந்த தடாகத்தில் இருந்து ஆறு குழந்தைகளும் வெளியாயின. அவர்களை அப்போது அங்கு வந்த ஆறு கன்னிகைகள் கவனித்துக் கொண்டனர். அதைக் கண்ட பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குழந்தையாக- முருகனாக - ஆக்கினாள். அந்த ஆறு குழந்தைகளையும் கவனித்துக் கொண்ட கன்னிகைகளை ஏழு குழுவான நட்ஷத்திரக் கூட்டமாக மாற்றினாள். அவர்களை நட்ஷத்திரங்களாக மாற்றிய பின் அவர்களை ஆசிர்வதித்த பார்வதி தேவி அவர்கள் பிற்காலத்தில் சூரபத்மனை அழிக்க முருகப் பெருமான் செய்ய உள்ள யுத்தத்தில் அவருக்கு துணையாகப் இருந்து போரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை
நட்ஷத்திரங்களாக மாற்றியதாக அவர்களிடம் கூறினாள். ஆகவே ஏழு கன்னிகைகளாக பார்வதியினால் ஏற்படுத்தப்பட்டவர்களே சப்தகன்னிகைகள் என்கின்றார்கள்.

இன்னொரு கதையின்படி கார்த்திகேயர் (முருகன்) பிறந்ததும் அவரைக் கொன்று விடுமாறு கூறி ஏழு பெண் தெய்வங்களை இந்திரன் அனுப்பினார். ஆனால் அந்த குழந்தையின் அருகில் வந்த அந்த கன்னிகைகளின் மார்பில் இருந்து பால் சுரக்கத் துவங்கி வெளியில் வழிய அவர்கள் குழந்தை மீது தம்மை அறியாமலேயே பாசம் செலுத்த துவங்கி தாம் கொல்ல வந்த அந்த குழந்தைக்கு பாலூட்டி வளர்த்து அவரை பாதுகாத்தனர். அவர்களே பின்னர் முருகன் புரிந்த போரில் அவருக்கு துணை இருந்த ஏழு கன்னிகைகள் என்கின்றார்கள். 

மூன்றாம் கதையின்படி காஷ்யப  முனிவருக்கு  ஹிரண்யகசிபு மற்றும் ஹிரண்யகாசா எனும் இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரான ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் விஷ்ணு பகவானின் பக்தன். நடைபெற்ற சில நிகழ்ச்சிகளினால் நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணு பகவான் ஹிரண்யகசிபுவைக் கொல்ல வேண்டி இருந்தது. அதற்கு சில காலத்துக்குப் பிறகு பக்த பிரஹலாதன்   துறந்து சன்யாசம் மேற்கொண்டு சென்று விட அவர்கள் வம்சத்தை சேர்ந்த அந்தகாசுரன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். முதலில் அவன் ஒழுக்க சீலனாக இருந்து பல கடவுட்களிடம் இருந்து அறிய வரங்களை பெற்றிருந்தான். அந்த வரத்தின் விளைவாக அவன் யுத்தத்தில் அடிபட்டு அவனது உடலில் இருந்து ரத்தம் வெளிவந்தால், பூமியில் விழும் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனைப் போலவே அதிபலசாலி அசுரனாக உருவெடுக்கும் என்பது விதியாயிற்று. ஆகவே தலைகனம் கொண்டு அலைந்தவன் ஒருமுறை பார்வதி தேவியையே கவர்ந்து செல்ல முயற்சி செய்தான். அவனால் தேவர்கள் கடும் துயரங்களுக்கு உள்ளானார்கள். ஆகவே அவனை இனியும் விட்டு வைத்தால் அது தவறு என்பதை உணர்ந்து கொண்ட சிவபெருமான் அவனுடன் யுத்தம் செய்து அவனை அழிக்கச் சென்றபோது தனது மூன்றாவது கண்ணில் இருந்து பயங்கரமான ஏழு பெண் தெய்வங்களை படைத்தார். அவர்களுக்கு தலைமை ஏற்க யோகீஸ்வரி எனும் தேவதையையும் படைத்தார். அவர்கள் அனைவரும் பைரவக் கடவுளின் தலைமையில் யுத்தபூமிக்கு சென்று தமது கடமையை செய்யுமாறு கூறினார். அவர்கள் வேலை அந்த அசுரனின் உடலில் இருந்து வெளியேறும் ஒரு சொட்டு ரத்தமும் பூமியில் விழாமல் இருக்க வைக்க வைத்து அதை அவர்கள் குடித்து விடவேண்டும் என்பதே. அந்த சப்த கன்னிகைகளும், யோகீஸ்வரியுடன் ஒன்றிணைந்து அந்த அசுரனின் உடலில் இருந்து வெளிவந்த அத்தனை ரத்தத்தையும் ஆகாயத்திலேயே பிடித்து அருந்தி விட்டார்கள். அதனால் அந்த அசுரனை சிவபெருமான் எளிதில் வென்றார். இப்படியாகவே சப்த கன்னிகைகளை எட்டு கன்னிகைகள் அதாவது அஷ்ட கன்னிகைகள் எனவும் அழைத்தார்கள்.

யுத்தம் முடிந்ததும் அவர்கள் வந்த வேலை முடிந்து விட்டதாகக் கூறிய சிவபெருமான் தான் தொடர்ந்த யுத்தம் முடிந்து விட்டதினால் இனி அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்று விடவேண்டும் எனக் கட்டளை இட்டார். கடவுள் பைரவர் தனது அவதாரம் தோன்றக் காரணமான சிவபெருமானின் உடலில் சென்று ஐக்கியமாகி மறைந்து விட்டார். ஆனால் சிவபெருமானின் மூன்றாம் கண்ணின் பொறியில் இருந்து வெளி வந்ததினால் அந்த அஷ்ட கன்னிகைகள் சென்று தங்க இடம் இல்லை என்பதினால், அவர்கள் பார்வதி தேவியிடம் சென்று அடைக்கலம் ஆக அவளும் அவர்களை அப்போது ஸும்பா மற்றும் நிஷும்பா எனும் அரக்கனுடன் சண்டையில் இருந்த சாமுண்டா எனும் காளிதேவிக்கு யுத்தத்தில் துணை இருக்க அனுப்பினாள். யுத்தம் முடிந்து திரும்பிய கன்னிகைகளை தான் வசிக்கும் ஸ்ரீ வித்யாவின் நான்கு மூலைகளையும், நான்கு வாயில்களையும் பாதுகாக்கும் பணியில் அமர்த்திவிட பார்வதி தேவிக்காகவே சேவகம் செய்தபடி தங்க இடமும் அந்த கன்னி தேவதைகளுக்கு கிடைத்தது.

வாமன புராணத்தில் காணப்படும் இன்னொரு கதை இது. ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரமான போர் மூண்டது. ரத்தபிக்ஷா என்ற அசுரன் 21870 தேர்கள் மற்றும் 65610 குதிரைகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படையினரை கொண்டு வந்து யுத்தம் செய்தான். அதைக் கண்டு கோபமுற்ற கௌசிக்கி, காளி மற்றும் மகேஸ்வரி எனும் மூன்று தெய்வங்களும் உலகமே பயத்தினால் உறைந்ததோ எனக் கருதும் அளவுக்கு இடியோசைப் போல பயங்கர கர்ஜனை செய்தனர். அப்போது மகேஸ்வரியின் வாயில் இருந்து அன்னத்தில் அமர்ந்தபடி
ப்ரஹ்மி வெளிவர அவளைத் தொடர்ந்து   மூன்று கண்களைக் கொண்டு காளை மீது அமர்ந்து வந்த ஒரு பெண் தெய்வம், மயிலில் அமர்ந்து கொண்டு கௌமாரி, கருடனில் அமர்ந்து கொண்டு வைஷாலி, பன்றித் தலையைக் கொண்ட நாகத்தின் மீது அமர்ந்து வந்த பயங்கரமான வராஹி, நரசிம்மை மற்றும் சாமுண்டி என ஏழு கன்னிகைகள் வெளி வந்தனர். அவர்களே எட்டு அஷ்ட  கன்னி தேவதைகள் எனப்பட்டவர்கள். அவர்கள் தேவர்களுக்கு உதவுவதற்காக யுத்தத்தில் பங்கேற்றார்கள். ஆனால் பின்னர் உள்ள செய்திகளில் அந்த தேவதைகளைப் பற்றி கூறப்படும் குறிப்புக்கள் வேறாக இருந்தன.

வராக புராணத்தின்படி அந்த எட்டு கன்னிகைகளும் எட்டு குணங்களை பிரதிபலிப்பவர்கள் என்பதாகும். யோகீஸ்வரி ஆசையையும், மஹேஸ்வரி  கோபத்தையும், வைஷ்ணவி கடமையையும்,  ப்ரஹ்
மி கர்வத்தையும், கௌமாரி போலிக் தன்மையையும், இந்திராணி குற்றம் குறை சொல்பவர்களையும்,  சாமுண்டா தீயவற்றையும், வராஹி பொறாமையையும் அடக்கி ஆள்கிறார்கள் என்று கூறுவதின் மூலம் எடுத்துக் காட்டிய தத்துவம் என்ன என்றால் அந்த அஷ்ட அல்லது சப்த கன்னிகைகள் அவர்களை வணங்கித் துதிப்பவர்களிடம் உள்ள தீய குணங்களை அழித்து அவர்களை நல் வழியில் செல்ல வழி வகுக்கின்றார்கள் என்பது ஆகும்.

எது உண்மையோ நமக்குத் தெரியவில்லை, ஆனால் ஏழு அல்லது எட்டு கன்னிகைகளின் சிலைகள் பல ஆலயங்களில், முக்கியமாக தேவி ஆலயங்களில் சாந்தமான ரூபங்களில் ஒரே இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன. நம்பிக்கையின்படி அந்த தேவிகள் ஆலயங்களில் உள்ள அந்தந்த கடவுட்களுக்கு துணைப் புரியவே அங்கு ஸ்தாபிக்கப்பட்டு உள்ளார்கள் எனக் கருதுகிறார்கள். ஆனால் போரில் யுத்த தேவதைகளாக அந்த கன்னிகைகள் கலந்து கொண்ட போது இருந்த அவர்களின் உருவங்கள் சாந்தமான தோற்றத்தில் ஆலயங்களில் உள்ள தோற்றத்துடன் வேறுபட்டு உள்ளன. சப்த கன்னிகைகள் வரிசைகிரமம்  ப்ராஹ்மி, மஹேஸ்வரி,  கௌமாரி,
வைஷ்ணவி, வராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டா என்பது ஆகும். அவை என்ன ? 
 • பயங்கரமான நரி ஒன்றின் மீது அமர்ந்துகொண்டு பத்து கைகளுடன் காட்சி தரும் சாமுண்டா என்பவள் மனிதத் தலைகளைக் (கபாலம்) கொண்ட மாலையை அணிந்து கொண்டு கையில் டமாரம் மற்றும் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருக்கின்றாள்.
   
 • எருமைக் கடா வாகனத்தில் அமர்ந்து கொண்டு உள்ள வாராஹிக்கு மனித உடலும், பன்றியின் தலையும் உள்ளது. வஜ்ராயுதம், வாள் போன்றவற்றை கைகளில் ஏந்தியவள்.
   
 • கருமை நிறத்தவளான இந்திராணியும் கையில் அங்குசம், மற்றும் கதையை ஏந்திக் கொண்டு யானை மீது அமர்ந்துகொண்டு வருபவள். அவளுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் ஆறு கைகள் உள்ளனவாம்.
   
 • வெண்மை நிறமான வைஷாலி அல்லது வைஷ்ணவி எனப்படுபவள் கருடன் மீது அமர்ந்து கொண்டு தனது கைகளில் சங்கு மற்றும் சக்ராயுதத்தை வைத்துக் கொண்டு காணப்படுகிறாள்.
   
 • மகேஸ்வரி அல்லது ருத்ரேஸ்வரி எனப்படுபவள் வெளுத்து காணப்படுபவள். ஆறு கைகளையும், மூன்று கண்களையும் கொண்டவள். அவளும் கைகளில் டமாரம் மற்றும் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருக்கின்றாள்.
   
 • அடுத்தவளான ப்ராஹ்மி  என்பவள் மஞ்சள் நிறத்தவள். அன்னப் பறவை மீது அமர்ந்து வருபவள், அபய முத்திரை காட்டுபவள். நான்கு தலை மற்றும் நான்கு கைகளும் உள்ளவள்.
   
 • அடுத்து வருபவள் கௌமாரி அல்லது கார்த்திகேயினி என்பவள் ஆவாள். ஆறு தலைகளைக் கொண்டவள். பதிமூன்று கண்களைக் கொண்டவள். ஒரு முகத்தில் மூன்று கண்கள், மற்றதில் இரண்டு கண்கள். கையில் பல ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு உள்ளவள் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருவாள்.  
பெங்களூர் சப்த கன்னிகை ஆலயத்தின் சில காட்சிகள்

நாட்டில் சப்த கன்னிகைகளுக்கு பல ஆலயங்கள் உள்ளன. சமீபத்தில் பெங்களூரில் நான் ஒரு சப்த கன்னிகை ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அதன் வரலாற்றுப் பின்னணி சுவையானது. மஹாபாரதப் போர் நடந்து கொண்டு இருந்த கட்டத்தில் யுதிஷ்டர் பல இடங்களுக்கும் சென்றவாறு இருந்தார். அப்போது அவர் குதிரை மீது அமர்ந்து கொண்டு இந்த ஆலயம் உள்ள இடத்தை அடைந்தபோது அவருடைய குதிரை கண் பார்வையை இழந்து விட்டதாம். என்ன செய்வது எனது தெரியாமல் திகைத்து நின்றபோது ஆகாயத்தில் இருந்து ஆசிரி ஒன்று அவரை அங்கேயே சப்த கன்னிகைகளை வேண்டிக் கொண்டு தவம் இருக்குமாறும், அப்படி செய்தால் குதிரை மீண்டும் பார்வையைப் பெறும் என்றும் கூறியது. அவரும் அங்கேயே தவத்தில் இருக்க அதனால் மகிழ்ச்சி அடைந்த சப்த கன்னிகைகள் அவர் முன் காட்சி தந்து குதிரைக்கு கண் பார்வையை மீட்டுத் தந்தார்களாம். அவரும் அவர்களின் நினைவாக அங்கு சிறிய வழிபாட்டுத் தலத்தை அமைத்து வழிபட்டப் பின் சென்று விட்டார். பல ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் அந்த கிராமத்தினர் அங்கு பூமியில் புதைந்து இருந்த சிலையை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்து வழிபட்டார்களாம். நாளடைவில் அங்கு வந்து வழிபட்டவர்களது கோரிக்கைகள் நிறைவேற துவங்கியதினால் மீண்டும் கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு சற்றே பெரிய ஆலயத்தை அமைத்து உள்ளார்கள்.  

சப்த கன்னிகைகளுக்கு மேல்மருவத்தூர் ஆலயத்தில் விசேஷ வழிபாடு உள்ளது. சப்த தேவதைகள் யுத்த தேவதைகள் என்பதினால் அவர்களுடைய படத்தை வீடுகளில் பூஜை அறையில் வைத்து ஆராதிப்பது இல்லை. அதற்கு சில நியமங்கள் தேவை என்பதினால் அவற்றை செய்வதில்லை. சாதனங்களை  செய்பவர்கள் அவர்களை வீடுகளில் வைத்து ஆராதிப்பார்கள். ஆனால் மற்றவர்கள்  சப்த கன்னிகைகளுடைய தியான மந்திரம் கூறலாம் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள்.  

Saptha Kanniga (E)

   (Santhipriya)
One may have seen a group of seven or eight virgin mothers (deities) either seated or in standing posture in most of the temples. They are known as Saptha or Astha Kannigas or Saptha or Astha Mathrikas. In general only seven are seen in most of the temples.  It is believed that if the devotees worship those seven virgin mothers after praying the prime deity in the temple they will be blessed with all good fortunes in life. Reason being those female deities were created by Lord Siva, Goddess Parvathi and Lord Vishnu on different occasions to assist them in the war they waged against demons and asuras. Some suggest  that they were created by Lord Brahma. There are several lyrics and hymns in praise of those virgin female deities and it is believed that if they are chanted properly, the unknown fear lurking in mind and enemies in life will vanish. Further no ill effects can harm them.

Who are the Saptha Kannigas? Epics like Devi Mahatmiyam, Linga Puran and Vaamana Puran has different stories. While Varaha Purana mention the no of seven female deities as eight, all other Agamas and Puranas mention them to be seven in no and not eight maidens. The Saptha Kannigas are Chamunda, Indrani, Vaishali or Varahi, Vaishnavi, Kaumari, Maheswari and Brahmi. The eighth if included is Yogeswari or Mahalakshmi. Pundits say that according to Khadagamala tradition in Sri Vidya practice, the eight corners of the Chakra i.e four entrance doors and four corners, in all eight directions of Tripura in the Meru Chakra is guarded by the eight Kannigas and therefore the no of Kannigas are actually eight. The eight Kannigas are also part of the sixty four Yoginis worshipped in tantric practices. How did they manifest? The following stories tell their origin and manifestation.

In order to vanquish demon Surapadman, Lord Shiva created seven maiden females from the fire spark of his third eye. Simultaneously six children too manifested from the semen of Lord Shiva in a pond. Goddess Parvathi combined all the six children and created Lord Muruga. The seven maidens (Saptha Kannigas) went to the pond and took care of Lord Muruga. Later Goddess Parvathi converted the seven virgin mothers into Pleiades (seven Stars) and blessed them. She revealed to them that she  converted them as Pleiades to ensure that when Lord Muruga waged war against the demon Surapadman, they would join him to assist him in the battle to vanquish the demon. Thus Parvathi reportedly converted seven virgin female deities into Pleiades .

Another lore tells that as soon as Lord Muruga was created, chief of Indira Log
Lord Indira dispatched seven females to kill him. When the virgin mothers went near the child to kill him, their breasts began to lactate milk as though they were his mother. Once their breasts began to lactate, they unknowingly felt attached to the child as if it was their own child. They not only breast fed the child in turns, but also stayed there guarding him till he grew forgetting their mission of killing him. Those seven female deities fought the battle along with Lord Muruga when he waged war against the demons.

The third lore tells different other story. Once sage Kashyaba had two sons called Hiranyaksha and Hiranyakasipu.  Prahalada, was the son of Hiranyakasipu and became a devotee of Lord Vishnu. When Hiranyakasipu opposed him worshiping Lord Vishnu, in the events that followed Hiranyakasipu was killed by the Lord in Narasimma avatar. Soon Baktha Prahalada renounced worldly life and went away when Andakasura, a demon in the clan of Hiranyakasipu took over the reins. Though he was pious initially practicing a long series of austerities and acquired  several boons from the Lords one of which was that every drop of his blood from his body as and when spilled on ground every drop  will become an Asura as strong as he was. Therefore he became invincible and posed terror in the Universe and once went to the extent of even attempting to  kidnap Goddess Parvathi from Kailasa. Therefore Lord Siva decided to annihilate him. In the war that ensued every drop of blood spilled from the body of Andakasura was creating another Asura and Lord Shiva could not vanquish him. Since Andakasura cannot be vanquished as every drop of blood fell on ground was giving him a new lease of life, Lord Shiva created seven ferocious virgin females from the fire sparks of his third eye along with eighth female deity Yogeswari as head to ensure that not a drop of blood from the body of the Asura fell on to the ground during the battle. He also commanded Lord Bhairava to lead all the eight female deities into the battle. Once created, the Saptha Kannigas collected every  drop of blood in mid air before they fell on ground and ensured that not a drop of the blood from the body of the Asura fell on to the ground. As they collected the blood, instantly they drank them. Thus Lord Shiva was able to quickly annihilate the Asura who finally died.

Once the war ended, Lord Shiva asked the Saptha Kannigas and Lord Bhairava to retire back by entering into the Pathal Log. Since Lord Bhairava was incarnation of Lord Shiva himself, he disappeared after merging him into Lord’s body. However the Saptha Kannigas had no place to go and they surrendered to Goddess Parvathi requesting for a place to stay. She promised them that at appropriate time they would get a place to stay permanently in her own abode, but in the meanwhile their services were needed for her incarnation Devi who was fighting the demons Shumbha and Nishumba and sent them there to assist Maha Kali also called Chamunda. This is why the Devi Mahatmaya tells that the Saptha Kannigas were created by male Gods in order to aid the Devi in her battle against the demons Shumbha and Nishumba. After the Saptha Kannigas performed their duties and the time of their incarnation came to an end, they were sent to guard the eight cardinal points of the city Tripura in  Sri Chakra. Thus the Saptha Kannigas in the form of Ashta Kannigas remain seated in the Sri Chakra guarding the eight corners of the entrance.

The Vaamana Purana has its own tale. According to Vaamana Purana once a war erupted between the demi God and Goddesses on one side and a demon called Rathabiksha opposing them on the other side. Rathabiksha brought along with him 28170 chariots and 65610 horses in addition to over one laks foot soldiers to fight the war. Three of the deities Goddess Kaushika, Goddess Kali and Goddess Maheswari became furious and like a ferocious lion when they roared  the sound  was like a huge thunderbolt that instilled fear in the minds of those fighting the war. As they roared few female deities came out from the mouth of Goddess Maheswari. They were three eyed Goddess Brahmmi sitting on the back of a swan, another female deity with three eyes sitting on the back of a Buffalo, Kaumari seated on a Peacock, Vaishali seated on an Eagle, Varahi with half body of a pig as her head seated on a Serpent, Narasimmai and Chamundi. They were said to be the eight Kannigas who fought the war on behalf of the Devas.  


The Varaha Purana also tells that the eight Kannigas represented eight mental qualities such as Yogeswari representing desire; Maheswari represents anger. Vaishnavi represents courteousness, Brahmani the pride, Kaumari the illusion, Indrani carping, Chamunda evil tendencies and Varahi represents jealousy. By remaining the controller of those qualities, they actually destroy the bad qualities from the mind and hearts of those who worship them.

One is not sure of the factual position of the Saptha Kannigas though in most of the Sakthi temples one can see a row of seven or in some eight mother deities enshrined in separate sanctum and worshipped. They have been enshrined in those temples to stand guard to the temple deity there. The appearance of the Saptha Kannigas who took part in the battle was altogether in different posture compared to the calm posture seen in the temples where they have been enshrined. The line of the Sapta Kannigas begins with Brahmmi, Maheswari, Kaumari, Vaishnavi,Varahi, Indrani and Chamunda. In some one may also see Yogeswari as eighth deity. Lord Kala Bhairava too appears at the end of the Saptha Mathrikas in some temples.

 • Seated on a wild Fox, Chamunda appears with ten hands wearing garland of skulls, holding Drum called Damaru and Trisul (Trident) in hand.
   
 • Seated on a black buffalo, Varahi has half human body and a boar head. She is seen holding fearful weapons like mace and swords in hand.
   
 • Thousand eyed Indrani is shown seated on an elephant with Angusa and mace in her hands. She has six hands and her complexion is dark in colour.

 • Vaishali or Vaishnavi has a Conch and a revolving wheel called Chakra in her hands. She is seen seated on the back of an eagle.
   
 • Next is Maheswari also called Ruthreshwari by some, whitish in complexion. She has Trisul, drum and an axe in her hands. She is also shown with three eyes and six hands.
   
 • Seated on a swan or a goose, yellow complexioned Brahmmi display abaya mudran in one of her four hands. She has four heads and several weapons in hand.
   
 • Next is Kaumari also called Karthekeyini, yellow in complexion, displaying abaya mudra and holding several weapons in her hands. She rides on a Peacock. She has six faces and thirteen eyes. Five heads with two eyes each, while the sixth has three eyes.  
 Some scenes from Saptha Kanniga Temple, Bangalore 

Plenty of temples dedicated to Saptha Kannigas exist in several parts of the country. Recently I visited one of them in Bangaluru which have an interesting legend behind it. According to a folklore, during the Mahabharata war, once Yudhishtra was passing by the side of this temple site and suddenly his horse lost the vision. Some unknown voice said that if he stayed there and prayed the Saptha Mathas, his horse would regain the sight. Accordingly he stayed there for some time and penanced praying unknown goddess to give back vision to his blind horse. Pleased with his tapas, one day the Saptha Kannigas appeared before him and not only blessed him, but also restored the vision of the horse. Before he departed from there, he constructed a small shrine for them and went away. Several thousand years later someone dug out the idols from the ground below the temple site and constructed a small place of worship. It was a village then. Those who came and prayed the Saptha mathas got their problems solved to their satisfaction. Few hundred years later as more and more people praying there were bestowed with good fortunes, the villagers joined together and raised a regular temple for the worship of the Saptha Mathas.

In Memaruvathoor Adi Parasakthi temple the Saptha Kannigas have separate shrine for worship as they are considered to be on higher divine plane. The Saptha Kannigas are war goddesses and therefore the pundits opine that their pictures are not displayed in the pooja rooms and worshipped as certain strict rituals need to be followed. The sadhanathviks (to attain Siddha powers) however worship them at home. There are hymns for worship of Saptha Kannigas.

Sunday, June 19, 2016

Lepakshi Temple (T)

 வீரபத்திரஸ்வாமி சன்னதி 

சிவபெருமானின் தீக்கனலில் இருந்து படைக்கப்பட்ட வீரபத்திரஸ்வாமி ஆலயம் உள்ளது. அதையே லிபாக்ஷி ஆலயம் என அழைக்கின்றார்கள். வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி இந்த ஆலயம் 450 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்பட்டாலும், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மாபெரும் முனிவரான அகஸ்திய முனிவரால் வீரபத்திரஸ்வாமிக்கு அமைக்கப்பட்ட ஆலயம் என்றும், தமது யோக சக்தியினால் அந்த முனிவர் சிவலிங்கத்தை தோற்றுவித்து அதை வீரபத்திரஸ்வாமியாக  இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்ற புராணக் கதையும் உள்ளது. 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த ஆலயம் இன்று  முற்றிலும் சேதம் அடைந்த நிலையில்  உள்ளது . 
  
இந்த ஆலயம் சில புராணக் கதைகளை தன்னுள் அடக்கிக் கொண்டு உள்ளது. அதில் ஒன்று தெய்வீகப் பறவை ஜடாயுவின் இறுதி சடங்குகளை ராமபிரான் இங்கு செய்தது, மற்றும் அகஸ்திய முனிவரே இந்த ஆலயத்தை முதலில் நிறுவினார் எனும் புராணக் கதை ஆகும். மூன்றாவது விஜயநகர மன்னனின் கருவூலப் பொருளாளர் சம்மந்தப்பட்ட வரலாற்று செய்தி ஆகும்.

லிபாக்ஷி ஆலயம் குறித்த முதலாவது தகவல் ஸ்கந்த புராணத்தில் காணப்படும் 'லிபாக்ஷயா பாபநாசநா' எனும் பகுதியில் இருந்து தெரிய வந்தது. சிவபெருமானின் மகிமைகளை எடுத்துரைக்கும் பல ஸ்தல
புராணங்களில் ஒன்றில் மாமுனிவர் அகஸ்தியர்  தென் பகுதிகளில் விந்திய மலையின் அடிப்பகுதியில் உள்ள சிவன் ஆலயங்களை தரிசிக்க வந்தபோது, இந்த ஆலயம் உள்ள மலைப் பகுதியில் ஒரு குகையில் தங்கி இருந்தார் என்றும் தனது தவ வலிமையினால் சிவலிங்கம் ஒன்றை தோற்றுவித்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு உள்ளார் என்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. அவர் சிறியதாக எழுப்பிய  வழிபாட்டுத் தலமே  பின்னர் பெரிய அளவிலான ஆலயமாக விஜயநரக அரசரின் பொருளாளராக இருந்த ஒருவரால் மன்னனின் அனுமதி பெறாமலேயே   கட்டப்படப்பட்டது  என்பதாக கூறுகிறார்கள்.  
 
ஆலயத்தில் பிரம்மாண்டமாக காணப்படும் எழுதலை
நாகத்தின் அடியில் சிவலிங்கம் மற்றும் சற்று தள்ளி
நந்தியின் சிலை

கூர்ம சைலம் அதாவது ஆமையின் முதுகு எனப் பொருள் தரும்  பெயரில் அமைந்துள்ள மலையின் உட்புறத்தில் உள்ள பாறையில் பல தூண்களையும், மேற்கூறைகளையும் அமைத்து அற்புதமான சித்திரங்களை அவற்றில் செதுக்கி ஆலயம் அமைத்து உள்ளார்கள். ஏழு தலைகளை கொண்ட காட்சியில் காணப்படும் நாகராஜா எனப்படும் பெரிய பாம்பு மூன்று அடுக்குகளாக தன்னை சுற்றிக் கொண்டு அமர்ந்திருக்க அதன் அடியில் சிவலிங்கம் உள்ளது. சற்றே தள்ளி 15 அடி உயரமும், 27 அடி அகலமுமான நந்தி வாகன சிலையும் காணப்படுகின்றது.  அதே ஆலயத்தில் பாதி கட்டி முடித்த நிலையில் ஒரு கல்யாண மண்டபமும் காணப்படுகின்றது. வீரபத்திரர் சன்னதிக்கு வெளியில் உள்ள மேற்கூறையில் காணப்படும் வாத்திய குழுவினரின் அற்புதமான சித்திர வேலைப்பாட்டுடனான ஓவியங்கள் கண்களைக் கவர்பவை ஆகும். இந்த ஆலயத்தில் பல தூண்கள் மேற்கூறையை தாங்கியபடி இருக்கும் வகையில் அமைந்து இருக்க அந்த தூண்களில் ஒன்று பூமியில் இருந்து சுமார் இரண்டு சென்டிமீட்டர் அளவிற்கான இடைவெளியுடன் காணப்படுகின்றது. அது அந்தரத்தில் தொங்குவது போல உள்ளது மிகப் பெரிய அதிசயம் ஆகும். அதன் அடியில் ஏதாவது துணி அல்லது காகிதத் தாளை நுழைத்து எதிர்புறத்தின் வழியே எடுக்க முடியும். இவ்வளவு அற்புதமான நிலையில் ஆலய அமைப்புக்கள் காணப்பட்டாலும், வல்லுனர்களின் கூற்றின்படி அந்த ஆலயம்  எந்தவிதமான மூல அமைப்பின் அடிப்படையிலும் கட்டப்படாமல் அவசர கதியில் ஏனோதானோ எனக் கட்டப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதினால் அடுத்து ஆட்சிக்கு வந்த மன்னர்களால் அந்த ஆலய அமைப்பை சீர்படுத்தி முடிக்க முடியவில்லை. அதன் காரணம் கட்டடத்தின் பொறியியல் அமைப்பு அவர்கள் எவருக்கும் விளங்கவில்லை என்பதே.  இனி ஆலய வரலாற்றைப் பார்ப்போம். 

அந்தரத்தில் தொங்கும் தூண் 
லிபாக்ஷி ஆலயத்தில் உள்ள தொங்கும் துணை பற்றிய செய்தியில் சில முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. இதைக் குறித்து கருத்து தெரிவிக்கும் பொறியியல் நிபுணர்கள், அனைத்து தூண்களும் பூமியை தொட்டவாறு இருக்கையில் இந்த தூண் மட்டும் ஏன் தனியாக தொங்கும் நிலையில் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு சரியான காரணம் கிடையாது. ஒருவேளை சில நேரங்களில் பூமி அதிர்வுகள் நிகழ்ந்திருந்தபோது அந்த குறிப்பிட்ட தூணின் அடியில் உள்ள பூமி வெடித்து சற்றே கீழே  இறங்கி இருக்க வாய்ப்பு நிறையவே உண்டு. அதனால் அந்த தூணின் அடிப்பகுதி பூமியில் இருந்து விலகி இருக்கலாம். இந்த ஆலய வளாகம் முழுவதுமே ஒரே பாறையில் செதுக்கப்பட்டு உள்ளத்தினாலும், வேறு எந்த ஒரு பகுதியும் தனியாக செய்யப்பட்டு அதை ஆலயவளாகத்துடன் இணைத்து  வைக்காமல் மலையின் உள்ளே ஒரே பாறையில் ஆலயத்தையும், அதில் உள்ள தூண்களையும் செதுக்கி உள்ளார்கள் என்பதினால் இந்த தொங்கும் தூண் மேல் கூறை பகுதியின் ஒரு அங்கமே என்றும்  அதில் இருந்து விலகி கீழே விழ வாய்ப்பில்லை என்கின்றார்கள். இந்த தொங்கும் தூணை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆட்டிப் பார்த்தபோது, மொத்த வளாகமே சற்றே ஆடியதினால் அந்த ஆலயம் இடிந்து விழக் கூடாது என பயந்துபோய் மேற்கொண்டு அந்த தூணை பற்றிய ஆராய்ச்சியை தொடராமல் அவற்றை அப்படியே விட்டு விட்டார்கள். 
 
பல்லாயிரக்கணக்கான ஆண்டுக்கு முன் இங்கு வந்து மலைக்க குகையில் தங்கி இருந்த அகஸ்திய முனிவர்  தவ வலிமையினால்  சிவலிங்கத்தை தோற்றுவித்து  அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டுவிட்டுச் சென்ற  வெகு காலத்துக்குப் பிறகு விஜயநகர மன்னர் ஒருவரின் அரசவையில் பொருளாளராக இருந்த விரூபனா என்பவர் அரசருக்கே தெரியாமல் நாட்டை விட்டு வெகு தொலைவில் உள்ள இந்த ஆலய வளாகத்தை பிரும்மாண்ட முறையில் கட்டி முடிக்க முயற்சி செய்துள்ளார் என்றாலும் அதில் அவர் முழுவதும் வெற்றி பெறவில்லை. அவருக்கு கண்பார்வை போன பின் ஆலயம் பாதியிலேயே அரைகுறையாக கட்டப்பட்ட நிலையிலேயே நின்றுவிட்டது.

விஜயநரக அரசரின் பொருளாளராக இருந்தவர் விரூபான என்பவர். பல வருடங்களாகவே விரூபனாவிற்கு சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. ஆனால் அரசாங்கத்தில் வேலை செய்து வந்த அவரால் அவருடைய வருமானத்தில் இருந்து மிச்சப்படுத்தும் பணத்தைக் கொண்டு ஒரு ஆலயத்தைக் கட்ட முடியாது என்பது நன்கு தெரியும். ஆகவே ஒருமுறை மன்னர் வெளிநாட்டின் மீது படையெடுத்து சென்று இருந்தபோது, அவர் திரும்பி வருவதற்கு பல காலம் பிடிக்கும் என்பதை அறிந்து கொண்ட விரூபனா, ஆலயம் அமைக்க அதுவே தக்க தருமணம் என முடிவு செய்து ஆலயத்தைக் கட்டுவதற்கான பெருமளவு பணத்தை அரசாங்க கஜானாவில் இருந்து ரகசியமாக திருடி  அந்த பணத்தில் ஆலய நிர்மாணத்தைத் துவக்கினார். அதனால் விரைவில் கஜானா காலி ஆயிற்று. மன்னனுக்கு அவை எதுவுமே தெரியாது.

 சுவற்றில் காணப்படும்  ரத்தக்கறை 
  கட்டி முடிக்காமல் வைக்கப்பட்டு
 உள்ள கல்யாண மண்டபம் 

வெளியூருக்கு சென்று இருந்த மன்னன் திரும்பி வந்தான். அரசாங்க கஜானா காலியாகி இருந்ததைக் கண்டு திடுக்கிட்டு அதன் காரணத்தைக் கேட்டறிந்தான். தன்னிடம் அனுமதியும் பெறாமல் அரசாங்க பணத்தையும் திருடி  அமைத்தான் என்பதைக் கேட்டு கடும் கோபமுற்ற மன்னன் தமது படைவீரர்களை அழைத்து உடனடியாக லிபாக்ஷிக்கு கிளம்பிச் சென்று விரூபனாவை கைது செய்து அவனது கண்களை பிடுங்கி எறிந்து அவனை குருடனாக்கி விடுமாறு ஆணையிட்டான். படைவீரர்களும் விரூபனாவை கைது செய்ய ஆலய வளாகத்தை நோக்கிச் சென்றார்கள். அந்த செய்தி விரூபனாவின் காதுகளையும் எட்டிவிட்டது. தூரத்தில் இருந்தே படைவீரர்கள் வந்து கொண்டு இருந்ததை பார்த்து விட்ட விரூபனா நடக்க உள்ள கொடுமையை எண்ணிப்பார்த்தார். அந்தக் கொடுமையை அவர்கள் மூலம் ஏற்க விரும்பாமல் அங்கிருந்த பாறை சுவற்றில் தனது கண்களை மோதி தானே தன்னை குருடனாக்கிக் கொண்டார். இன்றும் அவர் கண்களை குருடாக்கிக் கொண்டதாக கூறப்படும் சுவற்றில் ரத்த சுவடுகள் போன்ற  தடம் காணப்படுகின்றது. வரலாற்று மகத்துவம் வாய்ந்த அந்த சுவடுகள் அழிந்து விடாமல் இருக்க அதை விஞ்ஞானபூர்வமான முறையில் பாதுகாத்து வைத்து உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியினால்தான் அந்த கிராமத்தின் பெயர் லீப பாக்ஷி அதாவது லிபாக்ஷி என ஆயிற்றாம். லிபாக்ஷி என்றால் கண்களை இழந்த இடம் என்ற பொருளாம்.

ஆலய வரலாற்றின் இரண்டாவது கதை தெய்வீகப் பறவை ஜடாயு குறித்தது. ராவணன் அன்னை சீதா தேவியை கவர்ந்து கொண்டு அவளை இலங்கைக்கு கொண்டு சென்றபோது அவன் தெய்வீகப் பறவையான ஜடாயுவின் ஆட்சியில் இருந்த வனப் பகுதி மூலமே செல்ல வேண்டி இருந்தது.  அதனால் அந்த காட்சியைப் பார்க்க நேரிட்ட தெய்வீகப் பறவை  ஜடாயு அன்னை சீதா தேவியை  பிடித்துக் கொண்டு சென்ற ராவணனை தடுக்க முயல இருவருக்கும் பெரும் சண்டை மூண்டது.  ராவணன் எளிதில் இலங்கைக்கு செல்ல முடியாமல் தவித்தான். ஆனால் இருவருக்கும் இடையே பயங்கரமான யுத்தம் நடந்து கொண்டு இருந்தாலும், பல அறிய வரங்களினால் பல அபார சக்திகளை பெற்று இருந்த ராவணனை வெற்றி கொண்டு சீதா தேவியை
தெய்வீகப் பறவை ஜடாயுவினால் மீட்க முடியவில்லை. சண்டையில் தெய்வீகப் பறவை ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தி அதை படுகாயப்படுத்த அந்த பறவையும் பூமியிலே விழுந்தது. தற்போது லீபாக்ஷி ஆலயம் உள்ள இடத்தில் அது விழுந்து மரணம் அடைய அதற்கு இறுதி சடங்குகளை ராமபிரானும் லக்ஷ்மணரும் செய்தார்கள். குற்றுயிராகக் கிடந்த பறவையைப் பார்த்த ராமபிரான் ஓடி வந்து 'எழுந்திரு பறவையே, எழுந்து நில்' எனக் கூவியதினால் இந்த இடத்துக்கு தெய்வீகப் பறவையின் நினைவாக 'எழுந்திரு பக்ஷியே' என தெலுங்கு மொழியில் பொருள்படும் விதத்தில் அமைந்த 'லீ, பக்க்ஷி, லீ'  எனும் பெயர் அமைய அதுவே லிபாக்ஷி என மறுவியதாக கிராமியக் கதை உள்ளது.  


தெய்வீகப் பறவையான ஜடாயுவிற்கு லீபாக்ஷியைத் தவிற தென் இந்திய பகுதியில் உள்ள வேறு இரண்டு ஆலயங்கள் உள்ள இடத்திலும் இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளதாக அந்தந்த ஆலயங்களின் கதை உள்ளது. தெய்வீகப் பறவையின் மரணம் குறித்தான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அமைந்த அந்த மூன்றும் திவ்ய தேசத்தில் ஒன்பதாக கூறப்படும் திருப்புல்லபூதங்குடி  ஆலயம்,  திவ்ய தேசத்தில் காணப்படும் திருப்பூக்குழி விஜயராகவாப் பெருமான் ஆலயம் மற்றும் லீபாக்ஷி ஆலயம் என்பன. அவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.  இந்த மூன்றையும் தவிர்த்து தெய்வீகப் பறவை ஜடாயுவுக்கு ராமபிரான் தில தர்ப்பண பூமி மற்றும் ராமேஸ்வரத்தில் ஸ்ரார்தமும் தர்ப்பணமும் செய்துள்ளார். இவை அனைத்துக்குமான காரணம் முடிவுரையில் கூறப்பட்டு உள்ளது*****

லீபாக்ஷியைத் தவிற
தெய்வீகப் பறவையான ஜடாயுவிற்கு இறுதி சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படும் வேறு இரண்டு ஆலயங்களில் முதலாவதான திருப்புல்லபூதங்குடி  ஆலயம் குறித்து  பார்ப்போம். இந்த ஆலயம் சுவாமிமலை மற்றும் கும்பகோணத்துக்கு இடைப்பகுதியில் அமைந்து உள்ளது. இதில் உள்ள ராமபிரான் மற்ற ஆலயங்களில் உள்ளதை போல நின்ற மற்றும் அமர்ந்த நிலையில் காட்சி தராமல் படுத்த நிலையில் அதாவது அனந்தசயன கோலத்தில் காட்சி தருகின்றாராம்.  அதன் காரணம் பகவான் விஷ்ணு தானே தன்னை தான் அப்போது அவதரித்திருந்த ராமபிரான் உருவில் தரிசிக்க நினைத்ததேயாகும் என்பதான ஒரு நம்பிக்கையும், தெய்வீகப் பறவைக்கு இறுதி சடங்குகள் செய்து முடித்தப் பின் களைப்பினால் அப்படியே சற்று நேரம் அங்கு பூமியிலே படுத்து அவர் உறங்கினார் என்பதினால் இந்தக் காட்சி அமைந்து உள்ளது என்ற நம்பிக்கையும் உள்ளன. 

இந்த ஆலய வரலாற்று கதையின்படி தெய்வீகப் பறவை ஜடாயுவின் கட்டுப்பாட்டில் இருந்த அதே வனப்பகுதியில்தான் ராமபிரான் வனவாசத்தின்போது தங்கி இருந்தாராம். தெய்வீகப் பறவை ஜடாயு புல எனும் பறவை இனத்தை சார்ந்தது, அவற்றின் உயிர் நிலைகள் உடலைத் தவிர அவற்றின் சிறகுகளில் இருக்கும் என்ற உண்மையை தெரிந்து கொண்ட ராவணன் அதன் சிறகுகளை முதலில் வெட்டி வீழ்த்தினான். சீதா தேவியை ராவணன் கடத்திக் கொண்டு சென்றபோது அதை தடுக்க ராவணனுடன் சண்டை போட்டு படுகாயம் அடைந்து கீழே விழுந்திருந்த தெய்வீகப் பறவையின் முனகல் குரலைக் கேட்டு ராமபிரான் அங்கே ஓடி வர, மரணத்தின் தருவாயில் இருந்த தெய்வீகப் பறவை ஜடாயு அவரிடம் நடந்தவற்றைக் கூறி தனக்கு அவரே இறுதி  காரியங்களை செய்து தகனம் செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ள அதை ராமபிரானும் ஏற்றுக் கொண்டாராம். அவர் வனவாசத்தில் இருந்தபோது  மரணம் அடைந்து விட்ட அவருடைய தந்தைக்கு இறுதிக்கு காரியங்களை செய்ய முடியவில்லை என்பதால் அது அவருடைய மனதில் ஆறாத துயரமாக இருந்தது. ஆகவே அந்த மனக்குறையை நீக்கிக் கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ராமபிரான் நினைத்தாராம்.  தெய்வீகப் பறவை ஜடாயுவுக்கு இறுதிக்கு காரியங்கள் நடைபெற்ற அந்த இடமே திருப்புல்லபூதங்குடி எனும் ஆலயம் என அந்த ஆலயத்தின் தல  வரலாறு கூறுகின்றது.  எதனால் ராமபிரான் அந்தப் பறவையின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இறுதிக்கு காரியங்களை செய்தார் என்பது பின் குறிப்பில் இடம் பெற்று உள்ளது*****.

அதை போலவே தெய்வீகப் பறவை ஜடாயுவிற்கு இறுதி காரியம் நடைபெற்றதாக கூறப்படும் இன்னொரு ஆலயம் திருப்பூக்குழி விஜயராகவாப் பெருமான் ஆலயம் என்பதாகும். இது காஞ்சீபுரம் மற்றும் வேலூருக்கு இடையே உள்ளது. இதன் தல வரலாற்றுக்  கதையும் திருப்புல்லபூதங்குடி ஆலயத்தின் அதே கதையைப் போலவே உள்ளது.


இந்த மூன்று ஆலயங்களும் அருகருகில் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று பல கிலோமீட்டர் அளவுக்கு தள்ளி அமைந்து உள்ளன என்பதினால் தெய்வீகப் பறவை ஜடாயுவிற்கு எப்படி அந்த மூன்று  இடங்களிலும் தகனம் நடந்து இருக்க முடியும், இது முரண்பாடில்லையா என்ற கேள்வி எழலாம்.  ஆகவே அவற்றை விளக்கும் விதமாக சில விவரங்களை முடிவில் கொடுத்து உள்ளேன்*****.
-----------------------------
***** 

இந்த சர்ச்சை குறித்து நான் 2012 ஆம் ஆண்டிலேயே சில பண்டிதர்களுடன் விவாதித்தேன். அப்போது பல செய்திகளைக் கேட்டு வியந்தேன். ஆகவே மீண்டும் அவற்றின் அடிப்படையில் தெய்வீக பறவையான ஜடாயுவின் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரே கதையையே தல வரலாறாக கொண்டுள்ள ஆலயங்களின் மீதான சந்தேகத்தை நீக்க  சில விளக்கத்தை அளிக்கின்றேன்.

திருப்புல்லபூதங்குடி  ஆலயம் மற்றும் திருப்பூக்குழி விஜயராகவாப் பெருமான் ஆலயம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று சுமார் 150 கல் இடைவெளியில் அமைந்துள்ளன. அதை போலவே லிபாக்ஷி ஆலயமும் இந்த இரண்டு ஆலயங்களில் இருந்து 300 கிலோ தொலைவில் அமைந்து உள்ளது. இவை அனைத்துமே உண்மை ஆகும்.

தெய்வீக பறவை ஜடாயுவின் மரணத்துடன் சம்மந்தப்பட்டுள்ள ராமபிரான் குறித்த விவரங்கள் பல புராணங்களிலும் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட புராணங்கள் எழுதப்பட்டு உள்ள காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அந்த காலத்தில் தெய்வீக அவதாரங்களும் மற்றவர்களும், தேவலோகத்தில் இருந்து பூமிக்கும், பூமியில் இருந்து தேவலோகத்துக்கு சில நொடிகளில்  சென்று விட்டு திரும்ப வந்துவிட முடியும்  என்ற உண்மை நிலை இருந்தது. இவற்றை புராணங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். தற்கால  மனிதர்களின் உயரத்தைப் போல அவர்களுடைய உயரங்கள் ஆறடி அல்லது ஏழு அடியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பத்து கைகளையும், மூன்று முதல் பத்து முகங்களையும் கொண்டு இருந்தவர்களின் உருவம் தற்காலத்தைய  சராசரி மனித உடலளவா இருந்திருக்கும்? சஞ்சீவ மலையையே பெயர்த்து தான் கையில் ஏந்திக் கொண்டு சென்ற பகவான்  ஹனுமான், பூமியில் இருந்து ஆகாயம் அளவுக்கு விஸ்வரூப தரிசனம் தந்த கிருஷ்ண பகவான், தன் கையில் கைலாய மலையையே தூக்கி வைத்துக் கொண்ட ராவணன், சிவபெருமானின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களினால் பூமி ஒரு பக்கம்  சரிந்தபோது அதை சமன் செய்ய எதிர்புறத்தில் இருந்த இன்னொரு மூலைக்கு சென்று நின்று கொண்டு அதை சமனாக்கிய அகஸ்திய முனிவர் போன்றவர்கள் சாதாரண உருவிலா இருந்திருக்க முடியும்? ஒரே நொடியில் பல மைல் தூரத்தை ஒரே காலடி வைத்து செல்ல முடிந்தவர்கள் அவர்கள் எனும்போது அவர்களின் உருவ அமைப்பை புரிந்து கொள்ளலாம்.  

அந்த காலகட்டத்தில் இந்திய பூமியின் பகுதிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா குஜராத் மற்றும்  உத்தரபிரதேசம் என பல துண்டுகளாக இல்லாமல் அனைத்துமே ஒன்று சேர்ந்த ஒரே பகுதியான பூமியாக அடர்ந்த காடுகளால் இணைக்கப்பட்டு இருந்துள்ளன. தற்காலத்தில் ஒன்றுடன் ஒன்று சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்னை மற்றும் பெங்களூருக்கு செல்ல குறைந்தது ஆறு மணி நேரம் பிடிக்கின்றது. ஆகவே தற்காலத்தில் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களை அடைய ஆறு மணி நேரம் பிடிக்கும் நிலையில் அன்றைய  அசுர உருவில் இருந்தவர்களால் சில அடிகள் நடந்தே சென்னையில் ஒரு மூலையில் இருந்து பெங்களூரின் இன்னொரு மூலைக்கு செல்ல முடிந்தது. ஆகவே தூரம் என்பது ஒரு பொருட்டாகவே இருந்தது இல்லை. ராவணன் சீதா தேவியை கவர்ந்து கொண்டு வான் வழியே சென்றபோது பல மைல்  சுற்றளவு கொண்ட அந்த இடங்கள் அனைத்துமே தெய்வீகப் பறவை ஜடாயுவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அப்போது
வானத்தில் நடைபெற்ற யுத்தத்தில் ராவணன் தெய்வீகப் பறவை ஜடாயுவைக் கொன்று போட்டபோது பூதாகாரமாக இருந்த அந்தப் பறவையின் உடலின் பல பாகங்களும், அதன்  ரத்தமும் சில இடங்களில் விழுந்தன. அந்த பாகங்கள் விழுந்த இடங்கள் பிற்காலத்தில் புனித இடங்களாக அமைய அவற்றில் இந்த மூன்று ஆலயங்களும் எழுந்தன.


மரணம் அடையும் தருவாயில் இருந்த தெய்வீகப் பறவை ராமபிரானிடம்  தனக்கு இறுதி சடங்குகளை அவரே செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டதும், அதை உடனடியாக ராமபிரான் ஏற்றுக் கொண்டார் என்றாலும்  அவர் மனதில் ஒரு குழப்பம். 'மூத்த மகனாக இருந்தும் எனது தந்தைக்கே இறுதி காரியங்களை செய்யவில்லை. அப்படி இருக்கும்போது என்னுடன் எந்த நிலையிலும் ரத்த சம்மந்தமே இல்லாத இந்த பறவைக்கு எந்த உறவு நிலையில் இருந்து கொண்டு நான் இறுதி காரியத்தை செய்வது? இறக்கும் தருவாயில் வாக்கு கொடுத்து விட்டதினால் அதை மீறவும் முடியாது. மேலும் ஒருவருடைய மனைவி உயிருடன் இருக்கையில் இப்படிப்பட்ட காரியங்களை மனைவி பக்கத்தில் இல்லாமல் செய்ய இயலாது. அது தர்மத்தை மீறிய செயலாகிவிடும். கொடுத்த வாக்கை மீறினால் அதுவும் தர்ம நெறியை மீறியதாகிவிடும். இந்த பறவை இறந்த இடம் எதுவாக இருக்கும்? அதன் ஆத்மா எங்கு சென்று இருக்கும்? ஆகவே இறுதி காரியங்களை எங்கு செய்வது, எப்படி செய்வது? பரமேஸ்வரா என்னை ஏன் இன்று இப்படிப்பட்ட தர்ம சங்கடமான நிலையில் வைத்துவிட்டாய்' என்று சிவபெருமானை வேண்டிக் கொண்டு அமர்ந்திருந்தவருக்கு  மேற்கொண்டு என்ன செய்வது என மனதில் ஒன்றுமே தோன்றவில்லை. கண்களை மூடிக்கொண்டு அந்த குழப்பத்துக்கான விடை தேடி  அமர்ந்திருந்தபோது வானத்தில் இருந்து ஒரு ஆசிரி குரல் கொடுத்தது. 

 
'ராமா, இதற்கு ஏன் இத்தனை குழம்புகின்றாய் ? இந்த குழப்பம் தற்காலிகமானதே. உயிரை துறக்கும் தறுவாயில்  இருந்த இந்த பறவைக்கு நீ கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது என வருந்தாதே. நீ விதி வசத்தினால் உன் தந்தையை நேரில் சந்திக்காமல் பதினான்கு வருடங்கள் வனவாசத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்துள்ளது. எந்த ஒருவரும் ஏதாவது ஒரு விதியின் காரணத்தினால் தனது பெற்றோர்களையோ அல்லது மனைவியிடமிருந்தோ  விட்டு பன்னிரண்டு வருடங்கள் விலகி அவர்களது முகத்தைக் கூடப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சமயங்களில்  இப்படிப்பட்ட இறுதிக் காரிய நியமங்களை செய்ய வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டு விட்டால், அப்போது வேறு யாரையாவது தனது நிழல் பெற்றோர்களாகவோ அல்லது நிழல் மனைவியாகியாகவோ தற்காலிகமாக சங்கல்பம் செய்து கொண்டு நியமங்களை  செய்யலாம் என்கின்றது தெய்வலோக  தர்ம நெறி. அத்தகைய நியமங்களை செய்யாமல் விட்டால் அதுதான் தர்மத்தை மீறிய செயல் ஆகும்.  


இந்தப்  பறவை  உனக்கு உதவி செய்ய முயலுகையில் உயிரை விட்டது என்பதினால் அதை உன் குடும்ப உறவாகவே நினைத்துக் கொண்டு அதற்கான காரியங்களை செய். எந்த ஒருவர் இன்னொருவருக்காக தான் உயிரை தியாகம் செய்வாரோ அவர்கள் பூர்வ ஜென்மத்தில் ரத்த சம்மந்தம் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள் என்பதே தெய்வ நியதியாகும். இல்லை என்றால் இன்னொருவருக்காக தன்னுயிர் தரும் மனநிலை வராது. இந்தப் பறவையும் நீயும் பூர்வ ஜென்மத்தில் தொடர்ப்பு கொண்டு இருந்தவர்கள். ஆகவே மனக் குழப்பம் அடைய தேவை இல்லை. நீ யார்? இந்த நேரத்தில் நீ விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமனாக அவதரித்து உள்ளாய்.  இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது விஷ்ணு பகவானே உலகை ரட்ஷிப்பவராகவும், மோட்ஷத்தை தருபவராகவும் இருக்க படைக்கப்பட்டார். அதை இந்த தெய்வீகப் பறவை புரிந்து கொண்டு விட்டதினால்தான் உன்னிடம் தனக்கு இறுதி சடங்குகளை  செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்தது. ஆகவே தயங்காமல் அதற்கு இறுதி சடங்குகளை  செய்து மோட்ஷத்திற்கு அனுப்பி வை. 

உன் தந்தைக்கு இறுதிக் காரியம் செய்யவில்லை என்பதினால் இதை உன் பெரிய தந்தையாக சங்கல்பம் எடுத்துக் கொண்டு அதற்கான காரியங்களை செய்யலாம். புல்லா இனத்தை சேர்ந்த  பறவையின் உயிர் நிலை உடலைத் தவிர அதன் சிறகுகளிலும்  படர்ந்து இருக்கும். இந்தப் பறவையின் ஆத்மாவும் அதன் வெட்டப்பட்ட  சிறகுகளில் படர்ந்திருக்கும். ஆகவே இந்தப் பறவையின் இரண்டு  சிறகுகளும் உடலும் விழுந்த இடங்கள் அனைத்திலும் நீ இறுதி சடங்குகளை  செய்ய வேண்டும். மனைவி இல்லையே என வருந்தாதே. நீயோ விஷ்ணுவின் ஒரு அவதாரம். சீதா தேவி மற்றும் பூதேவி இருவருமே லஷ்மி தேவியின் அவதாரங்கள். லஷ்மி தேவியோ விஷ்ணு பகவானின் மனைவி. ஆகவே நீ இறுதி காரியத்தை செய்யும்போது சீதையின் உருவாக நிழல் உருவில் பூதேவி அங்கு வந்து நின்று கொள்வது மட்டும் அல்லது  சடங்குகள் முடியும்வரை உன்னை தொடர்வாள். ஆகவே நீ கவலை கொள்ளாது தெய்வீகப் பறவையான ஜடாயுவின் உயிர் நிலைகள் விழுந்த மூன்று இடங்களிலும் இறுதி சடங்கை செய்துவிட்டு அதன் உடல் விழுந்த பகுதியில் தகனமும் செய்து விடு. அதன் பின் உன்னுடைய மனைவி மீட்கப்பட்டு உன்னோடு சேர்ந்தவுடன் அவளை அழைத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் தர்ப்பணம் செய்ய உகந்ததாகக் கருதப்படும் பூமி மற்றும் எந்த கடல் கரையில் உன்னால் மணலில் லிங்கம் அமைக்க முடிகிறதோ அங்கும் சிரார்த்தம் செய்து விட்டால் பித்தரு கடன்களை சரிவர செய்யாத உன் தோஷங்களும் அகன்று விடும், உன் தந்தையும், பெரிய தந்தையாக நீ சங்கப்பம் செய்து கொண்டு இறுதி காரியம் செய்யும் இந்தப் பறவையும் சொர்கத்தை அடைந்து விடும். இப்படியாகக் கூறிவிட்டு குரலை நிறுத்திக் கொண்டு விட்டது. அதைக் கேட்ட ராமபிரான் மனதில் தெளிவு ஏற்பட்டது. இனி தான் கொடுத்த வாக்கை மீறக் கூடாது என முடிவு செய்தார்.
 
ஆகவே தெய்வீகப் பறவை ஜடாயுவின் கட்டுப்பாட்டில் இருந்த பல மைல் அளவு படர்ந்திருந்த அந்த அடர்ந்த காட்டில் மூன்று இடங்களிலும் தெய்வீகப் பறவை ஜடாயுவின் இறுதி சடங்குகளை ராமபிரானும் லஷ்மணரும் செய்தார்கள். எந்தெந்த இடத்தில் எல்லாம் அந்தப் பறவையின் உடல் பாகங்கள் கிடந்தனவோ அந்த இடங்களுக்கெல்லாம் லக்ஷ்மணருடன் சேர்ந்து சில நொடிகளில் நடந்தே சென்ற ராமபிரான்  அதே இடத்தில் இறுதி சடங்கின் 13 நாட்களுக்கான  நியமனங்களை துவக்கி அந்தந்த பாகங்களை ஆங்காங்கே இருந்த பூமியிலே வைத்து எரித்தார். அதன் இறுதி காரியங்களை செய்யும்போது இறந்து கிடந்த அந்தப் பறவையை ராமபிரான் தனது கையில் எடுத்துக் கொண்டு சென்றார்.  சில இடத்தில் அந்த தெய்வீகப் பறவையை தன் மடி மீது வைத்துக் கொண்டு சடங்குகளை செய்தார். இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள் >திருப்புல்லபூதங்குடி ஆலயம்,திருப்பூக்குழி விஜயராகவாப் பெருமான் ஆலயம் மற்றும் லிபாக்ஷி ஆலயம் அமைந்துள்ள இடங்கள் ஆகும். இப்படியாக தெய்வீகப் பறவை ஜடாயுவின் உடலின் பாகங்கள் விழுந்த, இறுதி காரியங்கள் நடைபெற்ற இடங்கள் புனித பூமியாகி விட அவற்றின் மீது பிற்காலத்தில் இந்த மூன்று ஆலயங்களும்எழுந்தன. அவை அனைத்துமே தெய்வீகப் பறவை ஜடாயுவின் மரணத்தை தத்தம் ஆலய வரலாறாக கொண்டவையாக அமைந்து இருந்தன. 


சீதா தேவி மீட்கப்பட்டு ராமபிரானுடன் சேர்ந்த உடன், பின் நாளில் ஆசிரி கூறியபடி  இரண்டு இடங்களில் தனது தந்தைக்கும், தெய்வீகப் பறவை ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்து மன அமைதி அடைந்தார். அந்த இரண்டு இடங்களும் கூத்தனூருக்கு அருகில் உள்ள தில தர்ப்பண பூமி மற்றும் ராமேஸ்வரம் என்பதை பின்னாளில் ராமபிரான் புரிந்து கொண்டதினால்தான் அங்கு மரணம் அடைந்த இரு ஆத்மாக்களுக்கு தர்ப்பணமும் ஸ்ரார்த்தமும் செய்தாராம்.

இவற்றை நன்கு புரிந்து கொண்டால் ஒரே கதையை உள்ளடக்கிய ஆலயங்கள் பல்வேறு இடங்களில் எப்படி அமைய முடியும் என்ற சந்தேகத்துக்கு வலுவே இல்லை  என்பதும் தெய்வீகப் பறவை ஜடாயுவின் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள லிபாக்ஷி ஆலய தல வரலாறும் சரியானதே என்பதும் தெரிய வரும்.