Monday, November 21, 2016

Kabalamma Temple -T

பார்வதி தேவியின் அவதாரமே தேவி கபாலம்மா ஆவார். அந்த தேவிக்கு பெங்களூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபாலு எனும் ஒரு கிராமத்தில் ஆலயம் உள்ளது. கர்நாடகத்தின் ராம்நகர மாவட்டத்தில் கனகபுரா தாலுக்காவில் உள்ளது அந்த கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மலை மீது காணப்படும் ஆலயமே கபாலம்மாவின் மூல ஆலயம் என்பதாக கிராமியக் கதை உள்ளது.

கிராமியக் கதையின்படி கும்பேஸ்வரனை வதம் செய்த பின் தேவி கபாலம்மா இந்த கிராமத்துக்கு வந்து கபாலு மலை மீது ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொண்டாளாம். மலை மீது ஆலயம் இருந்ததினால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மலைமீது ஏறிச் சென்று அந்த ஆலயத்தில் வழிபட முடியாமல் இருந்தது. அந்த ஆலயமோ சுற்றி உள்ள இருபத்தி எட்டு கிராமங்களுக்கும் இருந்த ஒரே ஆலயமாக இருந்தது. ஆகவே இவற்றை மனதில் கொண்ட தேவி கபாலம்மா நந்தி தேவரான பசுவேஸ்வராவிடம் கலந்து ஆலோசனை செய்த பின் தனக்கு மலையின் கீழ் பகுதியில் ஆலயம் அமைத்தால் தான் அங்கு வந்து பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றி அருள் புரிவேன் என சில பக்தர்களின் கனவில் தோன்றிக் கூறியதினால், ஊர் மக்கள் ஒன்று கூடி ஜோதிடர்களின் ஆலோஜனைப்படி தற்போது உள்ள ஆலயத்தை நிறுவியதாக கிராமக் கதை உள்ளது.

தேவி கபாலம்மா யார்? அவளுடைய உருவம் என்ன? இந்த தேவி பார்வதி தேவியின் அம்சமான துர்கை தேவியின் அவதாரம் ஆவாள். அவள் பெண் குதிரை மற்றும் மாடு (இரு மிருகங்களின் கலவையைக் கொண்ட) என்ற இரு மிருகங்கள் கலந்த உருவை கொண்ட மிருகத்தின் மீது அமர்ந்து உள்ளாள். இந்த தேவியின் கதை மிகவும் அற்புதமானது.

கூறப்படும் வாய்மொழிக் கதையின்படி முன் ஒரு காலத்தில் கும்பேஸ்வரன் எனும் ஒரு அசுரன் பூமியை ஆண்டு வந்திருந்தான். அவன் மகிஷாசுரமர்தினி தேவியினால் வதம் செய்யப்பட்ட மகிஷாசுரனின் சகோதரர்களில் ஒருவன் ஆகும். அவன் தனது சகோதரனைப் போலவே மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அனைவரையும் வாட்டி வதைத்தான். தேவலோகத்தில் இருந்தவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. பல கொடுமைகளை செய்து மூவுலகையும் ஆண்டு வந்தவன் ஆட்சியில் ரிஷி முனிவர்களினால் யாகங்களையோ இல்லை வேறு எந்த சடங்குகளையோ செய்ய முடியவில்லை. யாராவது யாகங்கள் அல்லது சடங்குகளை செய்தால் அந்த இடத்தை கும்பேஸ்வரனுடைய ஆட்கள் வந்து அழித்து விடுவார்கள்.

இந்த நிலையில் ஆட்சி செய்து வந்தவனின் ஆட்சியில் எவருக்கும் நிம்மதி இல்லை. மும்மூர்த்திகளிடம் இருந்து அவன் பெற்று இருந்த வரத்தின் சக்தியினால் அவனை எவராலும் வெல்லவோ அல்லது அழிக்கவோ முடியவில்லை. அவனது உயிர் நிலை அவனது தலை பகுதியில் உள்ள கபாலத்தின் உள்ளே இருந்தது. அவனை அழிக்க வேண்டும் எனில் அது ஆண் அல்லது பெண்ணாக இருக்கக் கூடாது. அதே சமயத்தில் அலியும் இல்லாத ஆனால் ஆண் மற்றும் பெண் அம்சங்களைக் கொண்ட பிறவியாக இருக்க வேண்டும். மேலும் அந்த பிறவியின் வாகனம் அதுவரை இல்லாத இரண்டு மிருகங்களின் உருவிலான, குணத்திலான மிருகமாக இருக்க வேண்டும். பறவை மட்டும் அல்ல, உயிரினங்கள் மற்றும் வேறு எந்த பூச்சியும் கூட அவனைக் கொல்ல முடியாது. ஆகவே அவனை அழிக்க என்ன செய்வது எனது தடுமாறிய தேவலோக தேவர்களும் முனிவர்களும் பார்வதி தேவியிடம் சரண் அடைந்து அவனது தொல்லையில் இருந்து தம்மை விடுவித்து அவனைக் கொல்ல வேண்டும் என மன்றாடினார்கள்.

அவர்கள் கூறியதை பொறுமையுடன் கேட்ட பார்வதி தேவி கோபமுற அது அவள் முகத்தில் பிரதிபலித்தது. அடுத்த கணம் துர்கை போன்ற தோற்றம் கொண்ட ஒரு தெய்வம் பார்வதி தேவியின் உடலில் இருந்து வெளி வந்தது. ஆனால் வெளி வந்தவள் முகத்தில் கருகருவென மீசை மற்றும் ஒரு ஆணுடைய குணமும் இருந்தது. பாதி பெண் குதிரை, மீதி பாதி மாடு என்ற உருவத்தில் இருந்த மிருகத்தின் மீது அந்த தெய்வம் அமர்ந்திருந்தாள். அப்படிப்பட்ட மிருகத்தை அதற்கு முன்னர் எவருமே கண்டது இல்லை. 

இப்படியான உருவில் வெளிவந்த தேவியானவள் அங்கிருந்த சாது சன்யாசிகளிடம் உடனடியாக கும்பேஸ்வரனின் ஆட்சியில் இருந்த வனப் பகுதிக்கு சென்று அவனை அழிக்கும் ஒரு யாகத்தை செய்யத் துவங்குமாறும், அந்த யாக சாலைக்கு தானே காவல் இருப்பதாகவும் கூறினாள். அதைக் கேட்ட ரிஷி முனிவர்கள் மிகவும் மகிழ்சியுற்று கும்பேஸ்வரன் ஆட்சியில் இருந்த வனத்துக்கு சென்று ஒரு பெரிய யாகத்தை செய்யத் துவக்கினார்கள். தனது ஆட்சியில் தன்னிடம் கேட்காமல் யாகம் செய்ய வந்தவர்களை அழிக்க வந்த கும்பேஸ்வரனையும் அவனது சேனையையும் வனத்தின் வாயிலிலேயே தேவி கபாலம்மா தடுத்து நிறுத்த பெரிய யுத்தம் மூண்டது. யுத்தத்தில் கடுமையாக காயம் அடைந்து விழுந்த அசுரன் கும்பேஸ்வரனை தேவி கபாலம்மா கையில் தூக்கி யாகத் தீயில் போட்டாள். அடுத்தகணம் அந்த அசுரனின் தலையும் அதற்குள் இருந்த கபாலமும் வெடித்துச் சிதறியது. இப்படியாக தேவி கபாலம்மாவின் உதவியினால் அழிக்க முடியாமல் இருந்த கும்பேஸ்வரனின் ஆயுளும் முடிந்தது. தேவி கபாலம்மா என அந்த தேவியை அனைவரும் போற்றி துதித்தார்கள். கபாலத்தை வெடிக்க வைத்து அசுரனின் ஆயுளை அழித்த தாயார் என்பதைக் குறிக்கும் வகையில் கபாலம் + அம்மா அதாவது தேவி கபாலம்மா எனப் பெயர் பெற்றாள்.
இந்த ஆலயத்தில் ஒரு மிக பெரிய மாடு உள்ளது. அதன் கொம்பில் எப்போதும் பக்தர்கள் தரும் காணிக்கை (ரூபாய்) மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு உள்ளது. தேவி கபாலம்மாவின் அருளை வேண்டி பிரார்த்திக்கும் பக்தர்கள் முதலில் அந்த மாட்டின் முன் சென்று தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகே அவர்களுக்கு தேவி கபாலம்மாவின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவர்களை அந்த மாடு தாண்டிச் சென்றால் தேவி கபாலம்மாவின் கருணை கிடைத்து விட்டதாக அர்த்தம். வந்த பக்தர்களின் எண்ணம் தவறானதாக இருந்தால் அது அவர்களை மூட்டித் தள்ளுமாம். அதன் அர்த்தம் தேவி கபாலம்மாவின் அருள் அவர்களுக்கு கிடையாது என்பதாகும். தேவி கபாலம்மா அமர்ந்து இருக்கும் மிருகத்தின் முன்புறத்தில் உள்ள பெண் குதிரை, தேவி திருபுரசுந்தரி பண்டாசூரனுடன் யுத்தம் செய்தபோது குதிரைப் படை தளபதியாக இருந்து கொண்டு அவளுக்கு உதவிய தேவி அஸ்வாரூடை அமர்ந்திருக்கும் குதிரையின் அம்சம் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். அதை போல அந்த மிருகத்தின் மீதி பாதியான மாடும் தெய்வம் சிவபெருமானின் வாகனமான தெய்வீக நந்திதேவரின் அம்சம் எனக் கூறுகிறார்கள். 
கபாலா கிராமத்தில் உள்ள கபாலம்மா ஆலயம் 
 
சுற்றி உள்ள 28 கிராமங்களுக்கும் இந்த ஒரு ஆலயமே வழிபாட்டுத் தலமாக உள்ளதாகவும் இந்த தேவியை தூய்மையான மனதோடு பிரார்த்தனை செய்பவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகவும் கூறுகிறார்கள். கபாலு மலை மீதுள்ள ஆலயத்தைக் காட்டியது யார் என்பதோ அதன் வரலாறோ தெரியவில்லை. ஆனால் அது 1026 முதல் 1343 ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஹோய்சாலா மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்பது ஒரு கூற்றாக உள்ளது. அதை போல தேவி கபாலம்மாவுக்கு பெங்களூரில் உள்ள உத்தரஹள்ளியில் ஒரு ஆலயம் உள்ளது. அது கட்டப்பட்ட விவரமும் சரிவர தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த பண்டிதரோ தேவி கபாலம்மா அங்கு வந்து தங்கி தமது பக்தர்களுக்கு அருள் புரிவதாக என்னிடம் கூறினார். 
:The address of the temple is:
Shree Kabalamma Temple,
Kabalu,
Kabalu Post,
Sathnoor Hobli,
Kanakapura Taluk,
Ramanagara District,
Pin - 562126.

Kabalamma Temple -E

There is a temple for Goddess Kabalamma, an incarnate of Goddess Parvathi in a village nearly seventy kilometers from Bangaluru. The name of the village is Kabalu in Kanakapura Taluk, Ramanagara district in Karnataka. This temple according to the folklore is for Goddess Kabalamma whose original temple exists atop a hill in Kabala hills in the same area as is believed.

As per one of the folklores, after annihilating demon Kumbeswara, Goddess Kabalamma rested in the the hill peak in a small temple in Kabalu. Since Goddess Kabalamma temple was on the hill top and one will have to trek it to reach the temple which was difficult for the elderly people in and around the surrounding villages, the Goddess after consulting divine bull Basaveshwara, decided to stay in a temple if constructed   below the plains   in the same village and continue to grant her graceful blessings to the devotees who sincerely pray her. She indicated her desire in the dreams of some of her devotees who after consulting the astrologers constructed
another temple  for Goddess Kabalamma which is the present temple in Kabalu so goes the lore.

Who is Goddess Kabalamma and what are her features? Goddess Kabalamma is incarnation of Goddess Parvathi emanated through Goddess Durga. She has a big Mustache though the Goddess is female and seen  seated on an animal which is a mixture of a Mare (Female Horse) and a Bull which is the aspect of Divine bull Nandi Deva, also  called Basaweswara. There is an interesting lore behind it.

As per the lore, once upon a time there lived a Demon called Kumbeswara, who was one of the brothers of Demon Mahishasura who was earlier slain by Goddess Durga. Demon Kumbeswara, cruel in all aspects like his brother ruled the world committing several atrocities and tormenting everyone including demi and semi gods even in Deva loga besides terrorizing humans in universe. The saints and sages were a troubled lot because of his atrocities and they could not perform any yagna or rituals in peace as any such things done anywhere would be prevented and Yagnasala (place where the rituals are performed) destroyed by the forces of Demon Kumbeswara whenever and whenever anyone attempted to perform them.

Even as his atrocities continued, the atrocities of Demon Kumbeswara could not be contained by any one. No power on earth could annihilate or even win over the demon because of the extraordinary boons that he had received earlier from the divine Trinities which had given him invincible powers. His life spot lay hidden inside the skull and as per the boons that he had received, he could be killed only if he is put into the fire by some divine force riding  a peculiar animal which should be an amalgamation of two animals.  Further the divine force should be neither male nor female and not even transgender, but consisting of male and female features. Even animals or birds can not kill him. The worried demi and semi gods rushed to Goddess Parvathi and after narrating their ordeal at the hands of the Demon, they sought her intervention and save them by annihilating the demon.

Patiently hearing the agony of everyone, Goddess Parvathi became furious which was reflected on her face. All of a sudden a fierce looking Goddess similar to Goddess Durga, but with well developed Mustache on her face came out from the body of Goddess Parvathi. The ferocious looking divine was seen sitting on an animal which had the face of a Mare (female horse) and body of a bull like Nandi Deva, the like of the animal which was never seen before.

Once the divine with above features 
appeared, she asked the assembled saints and sages to go and start an yagna to annihilate the demon in the territory of demon Kumbeswara and assured them that she would guard the site till the yagna was completed. Happy sages agreed and began a yagna in one of the jungles under the territory of the demon. Hearing the news of the yagna, the demon Kumbeswara rushed there along with his army to destroy the site, but he could not enter the site as he had to face the ferocious army of the newly created divine who was standing at the entrance of the forest. In the fierce fight that ensued, the demon was severely injured and lifted by the divine force and thrown into the yagna fire. Instantly his skull exploded into pieces and he died. Thus the demon was annihilated by the new divine force. Since the divine killed the invincible demon by ensuring that the skull which hid the life of the demon exploded, she was named as Kabalamma. The word Kabala denotes human skull and amma the mother. 
There is a bull in the temple which according to the villagers has been staying there since very long time. The Bull is considered to be the aspect of Lord Basaveshwara. There is a peculiar custom practiced here. It is believed that the blessing from the Bull is considered to be very auspicious and  Goddess Kabalamma will grant the wishes only after the prayer is offered to the Basaweswara in the form of Bull sitting there.  For this purpose those seeking favour from the Goddess Kabalamma are required to lay flat on the ground in front of the Bull and the Bull will cross over those lying in front of it. If the Bull crossed over, it is viewed that their prayer will be accepted and desire will be fulfilled by Goddess Kabalamma.  Sometimes the Bull refuses to cross over and attempt to hit the devotee by his horn indicating that their intention is not good and the Goddess is unwilling to accept the prayer. The divine Bull is always seen carrying a bundle of currency notes on its horns which is the offering from the devotees seeking favour from the Lord.  In the animal vehicle on which the devi is seated, the Mare (Female horse) is considered to be the aspect of the horse of Goddess Ashwarooda, the female deity who along with her strong horse force helped Goddess Tripurasundari to annihilate the demon Bandasura. The Bull is considered to be the carrier vehicle of Lord Shiva, the Nandi Deva. 
 Kabalamma Temple in village Kabalu
The importance of the temple can be gauged by the fact that  it is the only shrine of nearly 28 villages in the surrounding region. According to the villagers the goddess is very powerful and is believed to fulfill all their wishes when sincere prayer is offered. However the story of who built the Goddess Kabalamma temple on the hill top is not known. Some  believe that the temple may have been built during the rule of Hoysala Kings who ruled during the period 1026- 1343. Similarly there is a temple in Uththarahalli in Bangalore where a temple for Goddess Kabalamma exists. The legend of the temple is not available though the pundit there told me that Goddess Kabalamma often come and stay there blessing her devotees.

:The address of the temple is:
Shree Kabalamma Temple,
Kabalu,
Kabalu Post,
Sathnoor Hobli,
Kanakapura Taluk,
Ramanagara District,
Pin - 562126.

Sunday, November 13, 2016

Maharishi Pathanjali (T)

தெய்வீக நாகமான ஆதிசேஷனே மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்தார் என்பது நம்பிக்கை. பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த  தெய்வீக நாகமான ஆதிசேஷன் பூமியிலே பகவான் சிவபெருமான் ஆட இருந்த நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்ததாராம். யோகக்கலையில் மகரிஷி பதஞ்சலிக்கு நிகர் எவரும்  இல்லை என்ற அளவில் அதில் நிபுணத்துவம் பெற்ற மகரிஷி, அதை அனைவரும் எளிய முறையில் புரிந்து கொண்டு கடைபிடிக்கும் வகையில் இருக்குமாறு யோகக் கலையை அமைத்து இருந்தார். அவர் வாழ்ந்த காலம் கி.மூ 500 முதல் கி. மூ 200 வரை இருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். யோகக் கலையைத் தவிர சமிஸ்கிருத இலக்கணம் (ஆத்மா, உயிர்) மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கலையிலும் ஆய்வுக் கட்டுரைகளை தந்து இருக்கின்றார். அவர் பிறப்பு குறித்தோ அவருடைய பெற்றோர் குறித்தோ எந்த விவரமும் எவருக்கும் தெரியவில்லை. அவரைக் குறித்த அனைத்துமே வம்சவம்சமாக வாய் மொழி மூலம் பரவிய செய்திகளாகவே உள்ளது. அவர் வானத்தில் இருந்து ஒரு யோகினியின் கையில் குதித்து மனித உருவை அடைந்தார் என்பதாக ஒரு பழமைக் கதை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அவரைப் பற்றிக் கூறப்படும் பல செய்திகள் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று மாறுபட்டதாக உள்ளது. 
 
பதஞ்சலி மகரிஷி பூமிக்கு மனித உருவில் வந்ததாகக் கூறப்படும் கதையில் ஒன்று   இது. ஒரு காலத்தில் பகவான் மஹாவிஷ்ணு கடலில் தெய்வ நாகமான ஆதிசேஷனின் உடம்பின் மீது படுத்தபடி உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் உடல் அவ்வப்போது துள்ளிக் குதித்ததும் இல்லாமல் கனத்துக் கொண்டே போனது.
பகவான் மஹாவிஷ்ணுவின் உடல் அப்படியும் இப்படியுமாக அசைந்து கொண்டே இருந்தது தெய்வ நாகமான ஆதிசேஷனுக்கு வேதனையை தந்தது. அவரால் சரிவர மூச்சு கூட விட முடியாமல் இருந்தது. உண்மையில் அப்படி பகவான் விஷ்ணு ஆடிக்  கொண்டே இருந்ததின் காரணம் அவர் சிவபெருமானின் அற்புதமான நடனத்தை மனக்கண்ணில் கண்டு களித்தபடி இருக்க அந்த நடனத்தின் அசைவுகளுக்கு ஏற்ப அவர் உடலும் அசைந்தது. அந்த ஆனந்தத்தில் அவரது உடலின் எடையும் கூடியது. அதை அறிந்திடாத தெய்வ நாகமான ஆதிசேஷனும் 'சரி பகவான் விஷ்ணு கண் விழித்ததும் அவர் எடை எதனால் கூடிக்கொண்டே போயிற்று என்பதைக் கேட்கலாம்' என எண்ணியபடி அமர்ந்து இருந்தது. பகவான் விஷ்ணு கண் விழித்ததும் அதை பற்றி அவரிடம் கேட்க, அவரும் சிவபெருமானின் அற்புதமான நடனத்தை விவரித்து அந்த ஆனந்தத்தைக் கண்டு களித்தபடி இருந்ததினால்தான் அப்படி நடந்தது எனக் கூற, அவர் கூறிய விவரங்களை கேட்ட தெய்வ நாகமான ஆதிசேஷனும் அந்த நடனத்தை தானும் கண்டு களிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. அதற்கான அருளும் ஆசியும் தனக்குத் தர வேண்டும் என தெய்வ நாகமான ஆதிசேஷனும் பகவான் விஷ்ணுவிடம் கேட்க அவரும் கூடிய விரைவில் பகவான் சிவபெருமான் பூமியில் சிதம்பரத்தில் நடனம் ஆட உள்ளதாகவும், அதைக் கண்டு கழித்திட அந்த தெய்வ நாகமான ஆதிசேஷனும் மனித உருவில் பூமியில் பிறக்கட்டும்  என அருள் புரிந்தார்.

தெய்வீக நாகமான ஆதிசேஷன் விஷ்ணுவை சுமந்தபடியே இருந்தாலும் தனது குறிக்கோளை அடைய தவம் செய்தவண்ணம் இருந்தது. அதே நேரத்தில் பூமியிலே இன்னொரு சம்பவம் நடந்து கொண்டு இருந்தது.  பூமியிலே வாழ்ந்து கொண்டிருந்த பெரும் ஞானம் மற்றும் விவேக நிலையை எட்டி இருந்த கோனிகா என்றொரு தபஸ்வினி இருந்தாள். அவள் அற்புதமான பல தெய்வீக அனுபவங்களைக் கொண்டவள்.  ஆன்மீகத்தில் உன்னதமான நிலையை அடைந்திருந்தவள். அவளுடைய காலம் முடியும் தருமணம் வந்து விட்டதை உணர்ந்தவள் தன்னுடைய அனைத்து  ஞானங்களையும் மனித மேம்பாட்டின் நன்மைக்காக பூமியில் எவருக்காவது  தந்துவிட்டு செல்ல நினைத்தாள். அதற்காக நதியில் நின்று கொண்டு தினமும் சூரிய பகவானை பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கையில், தான் பூமியிலே மனிதப் பிறவி எடுக்க அதுவே நல்ல தருமணம் என்பதை பகவான் விஷ்ணுவின் செய்கை மூலம் உணர்ந்து கொண்ட தெய்வீக நாகமான ஆதிசேஷன் அவளிடம் தஞ்சம் அடைய முடிவு செய்தார். அவள் மூலம் பூமியிலே மனித உருவெடுத்து பகவான் சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டு களிக்கலாம் என எண்ணினார்.

நதியில் நின்று கொண்டு சூரியபகவானை தியானித்தபடி நின்று கொண்டு இருந்த யோகினி கோனிகாவின் நீட்டி இருந்த கரங்களில் ஒரு நாள் சிறிய பாம்பாக உருமாறி அமர்ந்து கொண்டார். தியானம் முடிந்து கண் விழித்த யோகினி தனது கையில் சிறு பாம்பு நெளிவதைக் கண்டு அதிசயித்தபடி இருக்கையில், அடுத்த வினாடி அது மனித உருவெடுத்தது. அவள் கால்களில் விழுந்து வணங்கி தன்னை அவளுடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அவள் தபஸ்வினி என்பதினால் அனைத்தும் மனதில் புரிந்தது.  ஆகவே அவளும் அதைக் கண்டு மிரளவில்லை. தனது ஞானம் அனைத்தையும் அந்த மனித உருவில் இருந்த தெய்வீக நாகமான ஆதிசேஷனுக்கு அளித்துவிட்டு மறைந்து விட்டாள். அவள் பாதத்தில் விழுந்து வணங்கி அதாவது பாதத்தில் விழுந்து அஞ்சலி (கும்பிடுவது) செய்து ஞானத்தை அடைந்ததினால் அவருக்கு பாதாஞ்சலி எனப் பெயர் ஏற்பட அதுவே நாளடைவில் பதஞ்சலி என மருவியது. இன்னொரு கதையின்படி அந்த யோகினி தன்னிடம் வேண்டுகோள் விடுத்த தெய்வீக நாகமான ஆதிசேஷனை தனது சிஷ்யராக ஏற்றுக் கொண்டு ஞானத்தை தந்ததாக கூறுகின்றது. 
அதன் பிறகு அவர் அனைவராலும் மகரிஷி பதஞ்சலி என அழைக்கப்படலானார். அவர் அதே உருவில் சிதம்பரத்துக்குச் சென்று பகவான் சிவபெருமானின் தெய்வீக நடனத்தைக் கண்டு மனா மகிழ்ச்சி அடைந்தார். அவர் மனிதப் பிறவி எடுத்ததில் குறிக்கோள் நிறைவேறியதும் மீண்டும் மேல் உலகுக்கு சென்று பகவான் விஷ்ணுவின் படுக்கையாக மாற முடிவு செய்தார். ஆனால் அதற்கு முன் ஞானத்தின் மூலம் அவர் கற்றிருந்த யோகக் கலையை மக்களுடைய மேம்பாட்டுக்கு பயனளிக்கும் தன்னிடம் இருந்த யோக சூத்திரங்களைக் கற்றறிய குறைந்தது ஆயிரம் சீடர்கள் தாம் கூறும் இடத்துக்கு வந்தால் அதை அவர்களுக்கு கற்றுத் தருவதாக செய்தியை பரப்ப அவர் குறிப்பிட்ட விந்திய மலையின் அடிவாரத்தில் அவர் கூறியது போலவே ஆயிரம் சீடர்கள் வந்து அமர்ந்தார்கள். 
வந்தவர்களிடம் இன்னொரு நிபந்தனை விதித்தார். அதன்படி தாம் யோக சூத்திரத்தைக் கற்றுத் தரும்போது யாரும் எழுந்து செல்லக் கூடாது. தமக்கும் சீடர்களுக்கும் இடையே துணியாலான ஒரு தடுப்பு இருக்கும். அதன் பின்னால் அவர் அமர்ந்து இருந்தவாறு அனைவருக்கும் போதனை செய்வார். யாரும் திரையை விலக்கி அவரை காண முயற்சிக்கக்  கூடாது.  மீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். போதனை துவங்கியது. எந்த சப்தமும் எழவில்லை. ஆனால் சீடர்கள் மனதில் போதனைகள் அனைத்தும் ஊடுருவிச் சென்றது.

போதனை தொடர்ந்து கொண்டு இருக்கையில் ஒரு சீடருக்கு அவசரமாக இயற்கை உபாதை எழ, திரை இருக்கின்றதே, யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று விட்டு வந்து விடலாம் என எண்ணி எழுந்து சென்றார். இன்னொருவனோ திரைக்குப் பின்னால் குரு எப்படி அமர்ந்திருக்கிறார், என்னதான் நடக்கின்றது என்பதைக் காணலாம் என எண்ணிக் கொண்டு மெதுவாகச் சென்று திரையை விலக்க அடுத்த கணம் அதன் எதிரில் இருந்த அனைத்து சீடர்களும் பஸ்பமாகி விட்டார்கள்.

அதே சமயம் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற சிஷ்யரும் திரும்பி வந்தார். அவராக கண்ட மகரிஷி பதாஞ்சலி கோபம் அடைந்தார். அவரை பிரும்ம ராக்ஷசனாக மாறி அங்கிருந்த மரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்குமாறு சாபம் இட்டார். உடனே அவனும் பிரும்ம ராக்ஷசனாகி மரத்தின் மீது ஒட்டிக் கொண்டான்.
மகரிஷி பதாஞ்சலி அதன் பின் மறைந்து விட்டார். அந்த ராக்ஷஸனும் பொழுதைக் கழிக்க தான் கற்ற கலையை அந்த மரத்தின் இலையில் எழுதி ஒவ்வொன்றாக    . அந்த மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த ஆடு ஒன்று அவன் போட்ட அத்தனை இலைகளையும் தின்று விட்டது.  இப்படியாக மகரிஷி பதஞ்சலி போதித்ததாக  கூறப்படும்  மூல போதனைகள் அடங்கிய சுவடிகள் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

இந்தக் கதையில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன. 

 • அந்த ஆடும் சீடர்களும் யார்?  
 • தவறே செய்யாத அனைத்து சிஷ்யர்களும் ஏன் ஒட்டு மொத்தமாக எரிந்து போனார்கள்?
 • அதில் ஒருவர் மட்டும் ஏன் பிரும்ம ராக்ஷஸன் ஆனார்?   
 • அந்த தடுப்பு துணி எதனால் போடப்பட்டது ? 
 • கற்றதை மரத்தின் இலையில் எழுதுமாறு பிரும்ம ராக்ஷஸஷனுக்கு யார் கூறினார்கள்?
 • மகரிஷி பதஞ்சலி போதித்ததாக  கூறப்படும்  மூல போதனைகள் அடங்கிய, பிரும்ம ராக்ஷஸன் எழுதி  கீழே போட்ட அனைத்து இலைகளையும் அந்த ஆடு ஏன் தின்று  அழித்து விட்டது?  
 • குருவால் எப்படி வார்த்தைகளை உச்சரிக்காமல் தனது போதனைகள் அனைத்தையும் (1000) சிஷ்யர்களுக்கு போதிக்க முடிந்தது?  
இந்த மர்மங்களை தத்துவார்த்தமாக பல விதங்களிலும் அறிஞர்கள் விளக்கினாலும், அவை அனைத்தும் வெவேறான கருத்துக்களை கொண்டவர்களாகவே உள்ளன. எவரும் பொதுவான விளக்கத்தை அளிக்கவில்லை என்பதின் காரணம் எவருக்கும் உண்மையான காரணம் தெரியவில்லை என்பதேயாகும்.  இப்படியாக மகரிஷி பதஞ்சலியின் மறைவும்  வாழ்வும்   மர்மம் நிறைந்த ஒன்றாகி விட்டது.  

Maharishi Pathanjali (E)

Divine Snake Adishesha took birth as Maharishi Pathanjali on earth. Yes, the bed on sea for Lord Vishnu, Divine snake Adishesha took birth on earth to witness the grand dance of Lord Shiva. The vedic scholars are of the opinion that Maharishi Pathanjali, great Yoga adept and master in yoga epitomized the art of Yoga for the benefit of mankind on earth. He reportedly lived sometime between 500 and 200 B.C. Besides epitomizing the art of Yoga, he also composed treatises on Sanskrit grammar (soul and life thereafter) and Ayurveda medicine. When Divine Snake Adishesha took human form as Maharishi Pathanjali he felt that by infusing knowledge in the art of Yoga to select disciples, they can be spread the art far and wide for the benefit of mankind. The parental lineage of Maharishi Pathanjali is not known as no documentation is available to throw light on his parents or his early part of life and all that are told is  in the form of word of mouth stories floating over generations. One of the folklore which is widely accepted narrates that he fell from heaven in the hands of a Yogin and became a human. Otherwise the legends and stories on him are contradicting with  each other.

As per one of the legends, once when Lord Vishnu was sleeping on Divine snake Adi Shesha, the divine serpent noticed jerks now and then over the body of the Lord. Divine snake Adishesha did not realise that the Lord was in slumber cherishing the enchanting dance of Lord Shiva happening elsewhere. As Lord Vishnu got grossly absorbed in the dance of Lord Shiva, his body vibrated with rhythm in dance. As vibration of Lord Vishnu continued, his body began to become heavier and heavier out of ecstasy. The vibration made Divine snake Adishesha so uncomfortable that he was gasping for breath and reached the point of collapse. After some time, suddenly the weight of the Lord began to lesson and reached normal weight. Divine snake Adishesha was amazed, but could not guess the reason and therefore waited for the Lord to get up and after he woke up politely sought reason for the sudden changes in him gaining weight during his slumber. Lord Vishnu revealed that he was cherishing the majesty and grandeur of Lord Shiva’s dance and may be that was the reason why his body bloated and gained weight out of ecstasy. As the Lord continued to narrate the majesty and grandeur of the dance of Lord Shiva, Divine snake Adishesha overjoyed by the sequence expressed by his master desired to witness it  at the earliest and pleaded with Lord Vishnu to bless him for the same. Pleased Lord Vishnu acceded to his request and blessed that he would soon be born a human on earth to witnesses the cosmic dance of Lord Shiva in Chidambaram.

Divine snake Adishesha still remaining bed for Lord Vishnu on ocean began to meditate for getting his desire fulfilled at the earliest. Simultaneously on earth another event  was occurring connected to this story. A Yogin of high order in wisdom, namely Gonika desired that the knowledge and wisdom which she had gained over years on account of severe penance and tapas should not go waste and reach the mankind for their benefit before her earthly life came to an end. She was in search of a suitable disciple whom she can adapt and impart her knowledge and wisdom since her end was nearing. Taking hint from Lord Vishnu, the Divine snake Adishesha realized that it was the opportune time to reach her to become her adapted son or a disciple so that he can gain human form to witness the cosmic dance of Lord Shiva. 

Yogin Gonika too began to offer prayer to God of light- Sun seeking fulfilment of her desire by standing in the midst of river and meditating. One day as she was meditating keeping hands stretched, Adishesha went and sat in her palm in the form of a small snake. As she opened her eyes, she was amazed at the sight of a small snake sitting in her palm and before she could react he took the form of a human and fell at her feet seeking her grace to accept him as her son. She readily agreed because she as Yogin of high order could foresee events. Therefore she adapted him as her son and without wasting time she transferred the entire knowledge and wisdom which she possessed and disappeared in the river since her life cycle on earth ended there. Since the snake fell at the feet of a mother and offered Paathanjali (Paada Anjali in Sanskrit meaning Offering prayer by falling in feet - Paada meaning feet and Anjali meaning offering prayer) he derived the name Pathanjali so goes the folklore. Another lore mentions that she adapted the snake in human form as her disciple and transferred her knowledge and wisdom. Thereafter he came to be admired as  Maharishi Pathanjali, and in the form of Maharishi Pathanjali, the Divine snake Adishesha visited Chidambaram to witness the great cosmic dance of Lord Shiva on earth thereby getting his desire fulfilled. Desire fulfilled the divine serpent  decided to go back and serve his master Lord Vishnu as usual. 

The events leading to the disappearance of Divine snake Adishesha from the human form of Maharishi Pathanjali is also shouldered in mystery as narrated by another lore. When Maharishi Pathanjali realized that his mission on earth was over, he decided to disappear, but not before imparting the Yoga Sutra he had gained to deserving disciples who could spread them for the benefit of mankind on earth. So he declared that he wanted to impart the secrets of entire Yoga sutras to any disciples but put forth a condition that unless 1,000 people got together in a place which he would say, he would not impart the knowledge. Heeding to the call of the Maharishi more than 1,000 people desirous to learn the art gathered south of Vindhya Mountains to listen to him. 

Once everyone gathered, Maharishi Pathanjali put forth another condition. As per the second condition he would place a screen between him and the disciples while transmitting the Yoga Sutra and that till he completed the lecture nobody should attempt to lift the veil that separated them, nor would anyone leave the venue till the teaching session was completed. The session began and Maharishi Pathanjali stayed behind the curtain and transmitted his knowledge to the 1,000 gathered by his power. Each of those present behind the veil  absorbed the knowledge transmitted by the Maharishi. It was an amazing phenomenon and even amongst the disciples, they could not believe how they were able to absorb the knowledge by transmission since the Guru behind the screen ensured that not a word of sound emanated from his mouth, at the same time  the contents of the art intruded into their mind and heart.

As the session continued, one of the disciples in the gathering could not control natures call and therefore went out thinking that he could go quietly and return back quietly without anyone’s knowledge as a cloth veil separated the master and the disciples. In the meanwhile another disciple too became curious to know what the master was doing behind the curtain.  In a haste he ran near the screen and lifted it. Alas, nobody was found behind the veil and there occurred a terrible disaster. Entire fleet of disciples who were still seated there facing the curtain turned into ashes.

In the meantime the disciple who had gone to attend the natures call returned. Seeing him an angry Maharishi cursed him
to instantly become Brahma Rakshasa (Demon) and stuck to the tree top for disobeying the dictum of the master. With the curse, the disciple  instantly become Brahma Rakshasa (Demon) and stuck to the tree top and since he cannot move from the tree. Therefore to  pass his time, he began to write on the leaves all that he had learnt from Maharishi Pathanjali and threw them one by one below. As per the lore, a goat which was sitting below the tree began eating those leaves as they fell on ground without leaving even one to remain there. The Maharishi too disappeared.

In this mystery lore, several questions remained un answered. 

 • Who were those disciples who were turned to ashes? 
 • Why were they punished when they had committed no crime?
 • How did the master convey the knowledge to everybody without uttering a single word of sound?
 • What was the significance of the veil (Curtain)?
 • Why was only one disciple saved?
 • Why did he become a demon?
 • Why was he asked to write all that he learnt?
 • Why did the goat eat away all those leaves without leaving even one that fell ?
The pundits and scholars offers many explanations and float theories as an answer to those questions. Every theory floated has their own merits, but the real purpose for which those events happened remains a mystery in the life of Maharishi Pathanjali.