Sunday, December 25, 2016

Gurulinga Swamigal - Tamil


தமிழ்நாட்டின் சென்னையை சுற்றி பல மஹான்கள் மற்றும் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலாக இருக்கலாம் என்கின்றார்கள். ஒவ்வொன்றும்  தனித்தன்மையுடன் கூடிய வரலாறு கொண்டதாக உள்ளது.  சாதாரணமாக அதீத சக்தி கொண்ட சமாதி ஆலயங்களில் நுழைந்ததும் நம்மை எதோ ஒரு உணர்வு அலை ஆக்ரமிப்பதைக் காணலாம். அந்த அதிர்வலைகள் எழுவது அந்தந்த சமாதிகளில் அடங்கி உள்ள மஹான்களின் அருளாசியாகும்.  நாங்கள் சென்னையில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயத்தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த சித்தரான குருலிங்க ஸ்வாமிகளுடைய சமாதி ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அந்த உணர்வலைகளை உணர முடிந்தது. 

சித்தர் குருலிங்க ஸ்வாமிகளுடைய இளமைக் கால வரலாறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார் என்ற உண்மையை மட்டும் பக்தர்கள் சிலர் மூலம் அறிய முடிந்ததாம். அவர் வரும் வழியில் பல மகிமைகளை  நிகழ்த்தி உள்ளதாகவும்,  தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட
பல மக்களுடைய வியாதிகளை மாய நிவாரணத்தினால் குணப்படுத்தி வந்ததாகவும், அதனால் அவருக்கு பல பக்தர்கள் ஏற்பட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.  இன்றளவும் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த காலத்தில் வசித்து வந்திருந்த பெரும் மகான்கள், மஹரிஷிகள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதி வைக்கப்படாமல் காலம் காலமாக செவி வழி செய்தியாகவே தொடர்ந்து வந்துள்ளது. அப்படிப்பட்ட மகான்களின் சமாதிகளை தரிசிக்கையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அங்கு வருகை தரும் பக்தர்கள் மூலம் அறிய முடிந்தது.

சித்தர் குருலிங்க ஸ்வாமிகளை பொறுத்தவரை அவர் தபஸ்ஸில் அமர்ந்து இருந்தபோது அவர் கையில் சிவலிங்கம் ஒன்று உருவாகி வெளி வந்ததாகவும், அந்த சிவலிங்கத்தை பல காலம் அவர் பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார் என்பதை நேரிலே பார்த்துள்ள பக்தர்களுடைய சந்ததியினர் மூலம் தெரிய வந்ததாம். அதனால்தான் அவருக்கு அத்தனை பக்தர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த சிவலிங்கத்தை அவர் எங்கு வைத்து விட்டு வந்துள்ளார் என்பதைக் குறித்த செய்தி யாருக்கும் தெரியவில்லை. அதை போல அவர் என்ன உணவு அருந்தினார், உடமைகள் எங்கு வைத்திருந்தார் என்பதையும் ஒருவரும் அறிந்திருக்கவில்லை என்பதின் காரணம் அவர்  எந்த உடைமையையும் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்பதே. வழி நெடுக எங்கெல்லாம் சிவபெருமானின் ஆலயம் இருந்ததோ அங்கு சென்று ஆலய வளாகத்தில் ஏதாவது ஒரு மூலையில் தங்கி இருந்தவாறு தபத்தில் அமர்ந்து இருந்திருக்கின்றார். அங்கெல்லாம் பூஜைகளையும் செய்து இருந்துள்ளார். முடிவாக அவர் சென்னைக்கு வந்தவுடன் காரணீஸ்வரர் ஆலயத்தில் வந்து அவர்  சமாதி ஆகும்வரை அங்கேயே தங்கி விட்டாராம். 


காரணீஸ்வரர் ஆலயத்துக்கு வந்தவர் அங்கு ஏதாவது ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டு தியானத்தில் இருந்தார். அவர் கண் விழித்திருக்கும் நேரங்களில் அங்கு வந்து அவரை  வணங்கிய மக்களின் குறைகளை தீர்த்தார். வீபூதி தந்து வியாதிகளை குணமாக்கினாராம். காரணீஸ்வரர் ஆலயத்துக்கு தவறாது சென்று வந்த பக்தர்கள்  பலரும் அந்த சித்த புருஷரை சந்தித்து ஆசி பெறாமல் வந்ததில்லை என்ற நிலை உருவாயிற்று. முடிவாக ஒருநாள் அவர்  தாம் சமாதி அடைய வேண்டிய நாள் வந்து விட்டதை உணர்ந்தார். அங்கிருந்த பண்டிதரிடம் அதற்கு அனுமதியையும் கேட்டார். ஆனால் அந்த பண்டிதரோ
ஆலயத்துக்குள் சமாதி அடைய அனுமதிக்க முடியாது எனக் கூறி விட்டார். அந்த காலங்களில் அனைத்து ஆலயங்களும் தனி நபர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதினால் பண்டிதரை அணுக வேண்டி இருந்தது. ஆகவே ஆலயத்துக்குள் சமாதி அடைய தனக்கு (சித்தர் குருலிங்க ஸ்வாமிகள்) அனுமதி மறுக்கப்பட்டதை கண்டவர் மனம் வருந்தி அங்கிருந்து கிளம்பிச் சென்று ஒரு ஆற்று ஓரத்தின் பக்கத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டார். 

அன்று இரவு அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுத்த பண்டிதருக்கு திடீர் என வயிற்றுக் கோளாறும் பேதியும் ஏற்பட தாங்க முடியாத அவதிப்பட்டார். எந்த மருத்துவமும் அவருக்கு குணத்தை தரவில்லை. என்ன செய்வது என அவதிப்பட்ட அவருக்கு பலருக்கும் நோய்நொடிகளை குணப்படுத்திய சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் நினைவு வந்தது.  அவரை தேடித் சென்று
  அவர் கால்களில் விழுந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். தனக்கு வந்துள்ள பொறுக்க முடியாத வயிற்று உபாதையைக் கூறி அதற்கு நிவாரணம் கேட்க கண்களைத் திறந்து பார்த்த ஸ்வாமிகள் தனது கமண்டலத்தில் சிறிது வீபுதியை போட்டுக் கலக்கி அந்த நீரை அவருக்கு குடிக்கக் கொடுத்தார். அந்த தண்ணீரைக் குடித்த பண்டிதரின் உபாதை, அங்கிருந்த அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் உடனடியாக நின்றது. வியாதிகள் ஒன்றுமே இல்லாதது போல பண்டிதரும் சாதாரண நிலையை அடைந்தார்.

அதன் பின் பண்டிதர் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளை ஆலயத்துக்கு வந்து சமாதி அடைய அழைப்பு விடுத்தார். ஆனால் ஸ்வாமிகளோ ஆலயத்துக்குள் சமாதி அடைய விரும்பாமல் ஆலயத்தின் அருகில் இருந்த வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்குதான் 13.04.1886 அன்று மதியம் 12 மணிக்கு தான் ஜீவ சமாதி அடைய விரும்புவதாகக் கூறினார்.  
 

ஸ்வாமிகள் கூறியதை போலவே சமாதி அடைவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பண்டிதர் செய்தார். அன்று காலை சித்தர் குருலிங்க ஸ்வாமிகள் தனது பக்தர்களுடன் நகரின் பல இடங்களுக்கும் ஊர்வலமாகச்  சென்று சமாதி ஆலயம் உள்ள இடத்தை அடைந்து சமாதிக்குள் சென்று அமர்ந்து கொள்ள ஏற்கனவே ஸ்வாமிகள் கூறி இருந்தது போலவே சமாதியின் மேல்பகுதி அடைக்கப்பட்டது. அதன் மீது சமாதியை எழுப்பி ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார்கள். தினமும் சமாதி ஆலயத்தில் ஆர்த்தியும் பூஜையும் நடைபெறுகின்றது. பிரதோஷ  தினங்களில் பல பக்தர்கள் அங்கு சென்று அவரை வணங்கி ஆசி பெறுகின்றார்கள். வருடாந்திர விழாக்களும் அங்கு நடைபெறுகின்றன.இன்றைக்கும் அந்த சமாதி ஆலயத்துக்குள் சென்று கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்களே தியானம் செய்தாலும் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் அருளாசி அவர்களுக்கு கிடைப்பதாக நம்புகின்றார்கள். அவர்களுடைய குறைகளும் விலகுகின்றனவாம்.  அடிக்கடி அங்கு சென்று ஸ்வாமிகளை வணங்கித் துதிக்கையில், மரத்தில் இருந்து விழுந்திடும் காய்ந்து போன இலைகளை போல மெல்ல மெல்ல பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கமும் குறைவதாக பக்தர்கள் கூறுகின்றார்கள். எது எப்படியோ அங்கு சென்று சில நிமிடங்களே கண்களை மூடி பிரார்த்திக்கும்போது கனத்திருக்கும் எண்ணங்கள் விலகிச் செல்வத்தையும் மனதில் இனம் தெரியாத ஒரு  அமைதி நிலவுவதையும் நிச்சயமாக உணர முடிகின்றது.  அதன் காரணம் அந்த மகான் சூட்சும வடிவில் சமாதியில் இருக்கின்றார் என்பதே. ஆலய விலாசம் இது:
  குருலிங்க ஸ்வாமிகள் சமாதி ஆலயம்,
10/92, காரணீஸ்வரர் கோவில் தெரு,
சைதாப்பேட்டை,
சென்னை.

Gurulinga Swamigal- English


Many Samadhi of Mahans and Siddha Purush are seen in some parts of Chennai city in Tamilnadu. According to a rough estimate there are over fifty Samadhis, with their own vibrant history behind each one of them. It is believed that when  devotees enter the Samadhi sthal of great Mahans, they surely feel the vibrations as they pray standing there. We too experienced unknown inner vibration when we visited Siddah Purush Gurulinga Swamigal Samadhi sthal in Saidapet in the heart of Chennai city. Siddah Purush Gurulinga Swamigal Samadhi sthal is 100 meters away from Karaneeswarar temple in a place called Saidapet.

Though the initial life history of the Swamigal including the year when he was born is not known, only one thing is clear from the circumstantial evidences that he had come from Virudhachalam, a small town in South India from where he travelled to Chennai by foot. On way he reportedly performed several miracles including miracle curing of the incurable diseases of people who sought his blessings. Miracle curing is generally attributed to cure of medically incurable diseases in just few days or instantly. This made many families turn into his devotees, though they have not been documented as such a need had never been felt during the period he lived. The greatness and miracles of many of widely known true Siddha Purushas, Mahans and Saints especially in Villages and rural areas in India are spread only by word of mouth messages or stories through generations. Some of the Samadhis are inside the temples built on them.

The devotees who visit the samadhi sthal of
Siddah Purush Gurulinga Swamigal say that some of their ancestors had seen a Shiva Ling developed in his left hand when he was sitting in tapas. The Swamigal used to perform puja for the Shiva ling for a very long time, but none knew where he had left it. His life style was very simple as he carried nothing with him. Therefore none knew what he ate, where he took bath, where were his clothes and other such details. All that the devotees have seen was that most of the time he was seen sitting in meditation in a corner of the temple precinct and whenever he was awake, devotees  went to him seeking his blessings to relieve them of their grievances. He used to simply give them only ash powder called Veeputhi in tamil  which the devotees took as Prasad. He was seen frequently visiting Lord Shiva temples wherever they were there and performed puja and meditated there. Finally he came to Karaneeswarar temple and stayed there till he attained Samadhi.

He spent most of his time sitting in meditation inside the temple precinct in some corner and gave ash powder as prasad and blessed those who went to him. Those who regularly visited Karaneeswarar temple invariably visited him seeking blessings and to get their problems solved. When the saintly person realized that his end had come, he expressed his desire to take Samadhi inside the temple precinct and approached the priest of the temple seeking permission. The temples in those days were autonomous and privately managed and were not under the control of the Govt agencies. When Siddah Purush Gurulinga Swamigal sought permission, the priest turned down his request to tell him that such a event cannot be allowed inside temple precinct. Saddened by the refusal,   Gurulinga Swamigal went away and sat in meditation near a river side in the city.

On the very same day, in the night the temple priest fell very sick with severe dysentery and acute stomach pain. No amount of medication could control the problem. Not knowing what to do, next day he suddenly remembered saint Gurulinga Swamigal who used to cure the diseases and other problems of the devotees. He ran to the riverside where Swamigal was sitting with closed eyes and fell at his feet and pleaded for pardon for his foolish act of refusal to allow the Swamigal to take Jeeva samadhi inside the temple. Seeking forgiveness he narrated his problem to Swamigal requesting blessings and miracle cure as his suffering was unbearable. Siddah Purush Gurulinga Swamigal, opened his eyes and put some ash powder (Veeputhi) in to the Kamandal (a water-vessel of a religious mendicant) filled with water and gave it to the priest asking him to drink. Once the Priest drank the water, alas, in few seconds much to the astonishment of the devotees present there the acute stomach pain and feeling of dysentery disappeared instantly and the priest was standing as if nothing had happened.

Thereafter the Priest requested the great Swamigal to come to the temple precincts and take Jeeva Samadhi wherever he liked. But Siddah Purush Gurulinga Swamigal turned down the request and  showed the priest a place in a small lane near the temple asking him to make necessary arrangements for his Jeeva samadhi on 13th April 1886 at 12 noon.

The priest made all the arrangements as desired by the Swamigal and in the morning on the auspicious day,  Gurulinga Swamigal went around the town in a long march blessings the devotees on way and exactly at 12 noon reached the samadhi sthal and entered into the pit. The devotees closed the lid above and installed the Shiva lingam on top of the Samadhi as per the directions already conveyed by the Swamigal to the priest. Daily Puja and arthi is performed. On the day of Pradhosha hundreds throng this temple to offer prayers in Samadhi. Every year the annual guru Pooja is also performed. 

Even today those who visit the samadhi sthal and meditate for few minutes feel inner peace and get invisible blessings of Siddah Purush Gurulinga Swamigal. The ardent devotees strongly believe that the sins and past karma drop like dead leaves from the tree, if they offer prayers regularly in the samadhi sthal. One thing is sure that when you enter the shrine and stay there for some time you feel your heart become lighter and and blissful joy engulfs you, may be because of the compassion and sheer grace of this great saintly person staying there eternally in invisible form. The Jeeva Samadhi sthal cum temple is in the following address near Karaneeswarar temple in Chennai.
Gurulinga Swamigal Jeeva Samadhi temple,
10/92, Karaneeswarar Kovil Street,
Saidapet,
Chennai.

Tuesday, December 20, 2016

Chettipunniyam Hayagriva (T)

குதிரை தலைக்  கொண்டு, அபய கரங்களைக் காட்டியபடி, லஷ்மி தேவி மடியில் அமர்ந்திராமல் தனிமையில் தியான நிலையில் அமர்ந்திருக்கும் பகவான் ஹயக்ரீவரை எந்த ஆலயத்திலும் காண முடியாது. அப்படிப்பட்ட அபூர்வமான காட்சியை  தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டிப் புண்ணியம் எனும் கிராமத்தில் உள்ள ஆலயத்தில் மட்டுமே காணலாம். ஆயிரத்துக்கும் முற்பட்ட வருடத்தை சேர்ந்த ஆலயம் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தில் பகவான் யோகஹயக்ரீவரை கல்வி ஞானம் பெற, தேர்வுகளில் வெற்றி பெற, தொழிலில் வெற்றி பெற, நாட்டியம், இசை, சங்கீத கலைகளில் புகழ் பெற என அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் வேண்டி வணங்குகின்றார்கள்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் பிரளய காலத்தில் ஒருமுறை பல அசுரர்களுடன் கடுமையான யுத்தம் செய்து அவர்களை அழித்த பின் அந்தக் களைப்பில் சமுத்திரத்திலே ஆயிலையில் யோக நித்திரையில் இருந்தார் பகவான் மகாவிஷ்ணு. அதற்கு முன்னர்தான் பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா, நான்கு வேதங்களையும் படைத்து அவற்றை உலகிற்கு தந்தப் பின் தனது படைப்புத் தொழிலையும் துவக்கி இருந்தார்.

பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்தபோது பகவான் விஷ்ணு படுத்து இருந்த ஆயிலையில் இருந்த இரண்டு நீர் திவலைகளில் இருந்து மது மற்றும் கைடபன் எனும் இரண்டு அசுரர்கள் வெளி வந்து பகவான் பிரும்மா செய்து வந்திருந்த படைப்புத் தொழிலை தாமே செய்ய ஆசை கொண்டு அவரிடம் இருந்த வேதங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். அந்த வேதங்களை திருடிக் கொண்டு சென்றவர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணி அதை கடலுக்கு அடியில் பாதாள உலகில் கொண்டு சென்று அங்கு ஒளித்து வைத்தப் பின் குதிரை வடிவ முகம் கொண்டு அதற்கு காவலாக அங்கேயே இருந்தார்கள்.

வேதங்களை திருடிச் சென்ற அசுரர்கள் கடலின் அடியில் பாதாள உலகில் அதை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு இருந்ததும் அல்லாமல் தமக்கு இறவாமை எனும் வரம் வேண்டும் என அங்கேயே கடுமையான தவம் செய்து அந்த வரத்தை பகவான் சிவபெருமானிடம் இருந்தும் பெற்றார்கள். அந்த வரத்தின்படி அவர்களை அழிக்க குதிரை தலைக் கொண்ட கடவுள் அவதரித்தால் மட்டுமே முடியும். அதை அறிந்து கொண்ட பகவான் மகாவிஷ்ணு வருத்தம் அடைந்தார். வேதங்களை மீட்டு அசுரர்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதற்காக பகவான் சிவபெருமானுடன் கலந்து ஆலோசனை செய்தபின் ஒரு நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தின் ஒரு காட்சியாக தனது தலை பகுதியில் வைத்து இருந்த ஒரு வில்லின் நாண் மூலம் தமது தலை அறுபட்டு விழுமாறு செய்து கொண்டார். பதறிப் போன தேவர்கள் பகவான் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி பகவான் விஷ்ணு மீண்டும் உயிர் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். அவரோ தொண்ணூறு  நாழிகைக்குள் அறுபட்ட தலையை எடுத்து வந்து பகவான் விஷ்ணுவின் தலை பகுதியில் வைத்தால் மட்டுமே அவர் உயிர் பெறுவார் எனக் கூறி விட அறுபட்ட தலையை அனைத்து இடங்களிலும் தேடினார்கள். தலை கிடைக்கவில்லை. என்ன செய்வது எனது தெரியாமல் தெய்வீக விஸ்வகர்மாவிடம் உடனடியாக சென்று ஏதாவது ஒரு தலையை எடுத்து வந்து தலை இல்லாமல் கிடந்த பகவான் விஷ்ணுவின் உடலில் பொருந்துமாறு வேண்டிக் கொள்ள, காலத்தைத் தாழ்த்தாமல் அவரும் தலை அறுபட்டுக் கிடந்த ஒரு குதிரையின் முகத்தை எடுத்து வந்து அதை பொருத்தினார். அடுத்த கணம் பகவான் விஷ்ணு குதிரை தலைக் கொண்ட புதிய அவதாரமாக உருமாறினார். எவருக்குமே நடந்த  அனைத்துமே பகவான் விஷ்ணு மற்றும் பகவான் சிவபெருமானின் லீலை என்பதோ, அந்த லீலையின் மூலமே குதிரை தலை கொண்ட புதிய அவதாரத்தைப் படைத்து அந்த இரண்டு அரக்கர்களையும் அழிக்க ஏற்பாடு செய்து இருக்கின்றார்கள் என்பது தெரியாது. ஹயம் என்றால் குதிரை என்பது அர்த்தம் என்பதினால் குதிரையின் தலை பொருத்தப்பட்ட   பகவான் விஷ்ணுவும் பகவான் ஹயக்ரீவர் என்ற பெயரை பெற்றார். அடுத்த கணம் அவர் குதிரை முகத்தோடு கடலுக்குள் புகுந்து சென்று அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை கொன்று வேதத்தை மீட்டு வந்தார். அசுரர்களுடன் போரிட்ட குதிரை தலையுடன் இருந்த பகவான் ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததினால் அவர் கோபத்தை தணிக்குமாறு தேவர்கள் அன்னை மகாலட்சுமி தேவியிடம் சென்று வேண்டிக் கொள்ள அவரும் பகவான் ஹயக்ரீவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரை சாந்தப்படுத்தினாள்.  அதன் பின்னர் பகவான் ஹயக்ரீவர் லட்சுமி தேவியை  தன் மடியில் இருந்து இறங்கச் சொல்லியபின் சற்றே கண்களை மோடிக்கு கொண்டு  காலை மடித்துக் கொண்டு யோக நிலையில் அமர்ந்தார். அவர் முகத்தில் சலனம் இல்லை, அமைதியே குடி கொண்டு இருந்தது.  ஆகவே அந்த நிலையில் காட்சி தந்த பகவானை அது முதல் யோக ஹயக்ரீவர், அதாவது அமைதியான (யோக) நிலையில் காட்சி தரும் பகவான்
ஹயக்ரீவர்என அழைத்தார்கள். 

இப்படியாக தசாவதார அவதாரங்கள் எடுக்க இருந்த காலத்துக்கு முன்னரே விஷ்ணு பகவான் எடுத்த முதல் அவதாரம் அது ஆகும். அதற்கும் பத்து அவதாரங்களை எடுத்த தசாவதாரத்துக்கும்  சம்மந்தம் இல்லை என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பின்னர் பகவான் ஹயக்ரீவர் மடியில் அன்னை லஷ்மி தேவி அமர்ந்திருந்த உருவமே அன்னை லட்சுமி ஹயக்ரீவர் எனும் வடிவம் ஆயிற்று. அந்த கோலத்தில் அவர்கள் இருந்தபோது அங்கு வந்த அன்னை சரஸ்வதி தேவி, வேதங்களை கையில் வைத்திருந்த பகவான் ஹயக்ரீவரிடம் தனக்கு ஞானத்தை உபதேசிக்குமாறு வேண்டிக் கொள்ள, அவரும் அன்னை சரஸ்வதிக்கு ஞானத்தை உபதேசித்து அவருக்கே குருவானார். ஆகவே பகவான் ஹயக்ரீவரை வணங்கித் துதித்தால் அன்னை சரஸ்வதியை வணங்கித் துதித்து பெற்ற அருளை விட பல மடங்கு அருள் கிட்டும் என்பார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல கல்வி அறிவு கிடைக்க அன்னை சரஸ்வதியை வணங்க வேண்டும் என்றாலும் அதன் பின்னர் அன்னை சரஸ்வதியின் குருவான பகவான் ஹயக்ரீவரையும் வணங்கித் துதித்தால்தான் அன்னை சரஸ்வதி தேவியிடம் இருந்து பெற்ற கல்வி ஞானம் முழுமை அடையும், இன்னும் அதிக கல்வி ஞானத்தை முழுமையாகப் பெற்று வெற்றி மேல் வெற்றியும் அடையலாம் என்பது ஐதீகம் ஆயிற்று. ஆனால் அங்கும் சின்ன நிபந்தனை இருந்தது. கல்விக்காக அன்னை சரஸ்வதியை வணங்காமல் பகவான் ஹயக்ரீவரை மட்டுமே வணங்கினால் முழுமையான பலன் கிட்டாது. அவருடைய சீடரான சரஸ்வதிக்கும் மரியாதை தர வேண்டும் என்பதினால் அன்னை சரஸ்வதியை வேண்டிய பின்னர்தான் பகவான் ஹயக்ரீவரின் அருளாசியைப் பெற வேண்டும் என்பதே பகவான் ஹயக்ரீவரின் தத்துவம் என்பார்கள். ஆனால் மற்ற வேண்டுதல்களுக்காக அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப பகவான் ஹயக்ரீவரை நேரடியாக துதிக்கலாம் .

இத்தனை மகிமை வாய்ந்த பகவான் ஹயக்ரீவருக்கு தமிழ்நாட்டில் செட்டிப்புண்ணியம் எனும் கிராமத்தில் ஒரு ஆலயம் அமைந்தது. அவரை அங்கு சென்று  வணங்கித் துதித்தால் அளவற்ற ஞானத்தையும், கல்வி அறிவையும் தந்து அனைத்து தேர்வுகளிலும் வெற்றி அடைய வைப்பார் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலான ஐதீகம் ஆயிற்று. அத்தனை மேன்மை வாய்ந்த சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் எழுந்த வரலாறும், அந்த ஆலயத்தின் மேன்மையும் மகத்தானது.

ஒரு காலத்தில் தென் இந்தியாவின் பல பகுதிகளும் முகலாய மன்னர்களின் பிடியிலும், அவர்களைத் தொடர்ந்து போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர் பிடிகளிலும் இருந்தபோது அன்னியர்கள் பல இடங்களிலும் இருந்த இந்துக்களின் ஆலயங்களில் இருந்த நகைகளையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஆலய மூர்த்திகளையும் நாசப்படுத்தி வந்தார்கள். இந்துக்களின் ஆலயங்கள் குறிவைத்து நாசப்படுத்தப்பட்டதினால் பல இடங்களிலும் இருந்த பக்தர்கள் ஆலயங்களை மறைவிடத்தில் அமைத்து அதில் வழிபட்டு வந்திருந்தார்கள். அதுமட்டும் அல்லாமல் காலம் காலமாக வழிபடப்பட்டு வந்திருந்த ஆலயங்களில் இருந்த தெய்வீக மூர்த்திகளை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விக்ரகங்களை இடம் பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். முக்கியமாக எளிதில் கண்டு பிடிக்க முடியாத மற்றும் எளிதில் செல்ல முடியாத வனப்பிரதேசங்களில் வழிபாட்டு தலம் அமைத்து அங்கு அந்த விக்ரகங்களை வைத்து வழிபட்டு வந்திருந்தார்கள். ஆங்கிலேய, போர்த்துகீசிய மற்றும் முகலாய மன்னர்களினால் அந்த இடங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மீறிச் சென்றாலும் அவர்கள் படையினரை எதிரிகள் எளிதில் வழிமறித்துக் கொல்ல முடிந்தது என்பதினால் மலை முகட்டுக்களிலும், அடர்ந்த காடுகளிலும் மறைந்திருந்த ஆலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் அன்னியர்களினால் அழிக்க முடியவில்லை. 


இந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இருந்த திருவஹந்திபுரம் எனும் ஊரில் பக்தர்களினால் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த பகவான் தேவநாதப் பெருமாள் மற்றும் பகவான் ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அன்னியர்களினால் நாசம் அடையாமல் இருக்க 1848 ஆம் ஆண்டில் அன்றைய திவானாக இருந்த திரு ரங்காச்சார் என்பவரால் பரம ரகசியமாக செட்டிப் புண்ணியத்தில் உள்ள இந்த ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த காலத்தில் சரியான சாலைகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த மற்றும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்த செங்கல்பட்டு அருகே இருந்த இடமே செட்டிப்புண்ணியம் என்பது. அந்த இடமும் உயர்ந்திருந்த மலையின் உச்சியில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்தது என்பதினால் இந்த இடத்தில் விக்ரகங்களை வைப்பது பாதுகாப்பானது என்று கருதி அவற்றை இங்கு கொண்டு வந்தார்களாம். இங்கு அதிக அளவில் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே குடி இருந்ததாலும், அவர்களே ஆலய மூர்த்திகளை பாதுகாக்க அனைத்து விதங்களிலும் உதவி செய்ததினாலும் இந்த இடம் செட்டிப் புண்ணியம் என்ற பெயரைப் பெற்றது.

முதலில் பகவான் வரதராஜப் பெருமாளுக்காகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததாம். அதன் பின்னரே பகவான் தேவநாதப் பெருமாள் மற்றும் குதிரை தலையுடன்  யோக நித்திரையில் இருந்த பகவான் ஹயக்ரீவருடைய சிலை மற்றும் உற்சவ மூர்த்திகள் 1848 ஆம் ஆண்டுவாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டன. அதன் பின்னர் அதே போல தஞ்சாவூரில் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த உற்சவ மூர்த்திகளான தெய்வங்கள் சீதா-ராம-லஷ்மண-ஹனுமான் மூர்த்திகளும் 1868 ஆம் வாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படலாயின.

இந்த ஆலயம் தோன்றிய காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று பொதுவாக கூறப்பட்டாலும் பலரும் நம்புவதைப் போல சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் பழமையான இங்குள்ள ஆலயத்தில் பகவான் தேவநாத பெருமானை பகவான் வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் மூலவராக வழிபடப்படுகிறார். ஆலயம் உள்ள இடமும், அதற்குள் உள்ள மூர்த்திகளின் மகிமைகளும் பரவலாக வெளியில் தெரிந்தால் மீண்டும் அந்த ஆலயத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அந்த காலத்தில் இருந்த பக்தர்கள் அஞ்சியதினால் அந்த ஆலயம் குறித்த அனைத்து செய்திகளுமே செவி வழி வார்த்தைகளாகவே இருந்து விட்டதினால் வெகுகாலம்வரை பெருமளவிலான பொதுமக்களுக்கு செட்டிப் புண்ணியத்தில் மறைந்திருந்த தெய்வீக மகிமை மிக்க ஆலயத்தின் விவரமோ அல்லது மகிமையோ அதிகமாக தெரியாமலேயே இருந்தன.

ஆயினும் கூத்தனூரில் இருந்த அன்னை சரஸ்வதி ஆலய மகிமையைக் குறித்து மட்டுமே தெரிந்திருந்த மக்களுக்கு மெல்ல மெல்ல பகவான் ஹயக்ரீவரின் சக்தி மற்றும் மேன்மையும் வரலாறுகளும் தெரியவர கல்விச் செல்வத்தை அளவில்லாது வழங்கும் பகவான் யோக ஹயக்ரீவர் குடியேறி இருந்த ஆலயங்களை நோக்கிப் படையெடுக்கலாயினர். பல இடங்களிலும் பகவான் ஹயக்ரீவர் ஆலயமும் எழுந்தது. இந்த நிலையில்தான் மெல்ல மெல்ல செட்டிப் புண்ணியத்தின் பகவான் யோக ஹயக்ரீவர் ஆலய விவரங்களும் வெளித் தெரியவரத் துவங்கியதும் பக்தர்கள் அங்கு செல்லத் துவங்கினார்கள்.

அந்த காலத்தில் அதிக சாலை வசதிகளே இல்லாத, மலைப் பகுதியில் இருந்த இந்த ஆலயத்துக்கு சென்று பகவான் யோக ஹயக்ரீவரை தரிசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உண்மையான பக்தர்கள் மட்டும் தத்தம் குழந்தைகளுடன் செட்டிப் புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்திருந்ததாம்.

இந்த ஆலயத்தில் குதிரை தலை கொண்ட பகவான் ஹயக்ரீவர் யோக முத்திரை கொண்டு தனியாகவே காட்சி தருவது அபூர்வமான காட்சி ஆகும். அனைத்து ஆலயங்களிலும் பகவான் யோக ஹயக்ரீவர் மடியில் அன்னை லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு பகவான் ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்டு தனிமையில் யோக நிலையில் அபாய முத்திரைக் காட்டியபடி பகவான் தேவநாதன் எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேஷ காட்சி ஆகும்.  அவர் சன்னதியின் அருகில் உள்ள சன்னதியில் அன்னை ஹோமப்ஜவல்லி எனும் பெயரில் அன்னை லஷ்மி தேவி காட்சி தருகிறார். சன்னதிக்கு எதிர் புறத்தில் சற்றே தள்ளி அமைந்துள்ள தனி சன்னதியில் தெய்வங்கள் ராம-சீதா-லஷ்மண சமேதகர்கள் காட்சி தந்து கொண்டு இருக்க பகவான் ஹனுமார் அவர்கள் முன் மண்டி இட்டபடி காணப்படுகின்றார். இந்த சன்னதியில்தான் மதியம் 12.00 மணிக்கு உச்ச கால ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் அனைத்து சன்னதியிலும் சன்னதிக்குள்ளேயே உள்ள மூல மூர்த்திக்கு முன்பாக வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே ஏன் பூஜைகளை செய்கிறார்கள் என்பதற்கான காரணம் விளங்கவில்லை.

ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள அங்கோளம் அல்லது அழிஞ்சல் என்ற பெயருடைய தெய்வீக மரத்தில் தமது வேண்டுதலை நிறைவேற்றித் தர பக்தர்கள் தமது ஆடையில் இருந்து இரண்டு நூலை எடுத்துக் கட்டுகிறார்கள். சிலர் வீடு கட்ட அருள் வேண்டி அந்த மரத்தின் அடியிலேயே கல்லினால் ஆன சின்ன வீடு கட்டுகிறார்கள்.

பரிமுகன் என அழைக்கப்படும் பகவான் ஹயக்ரீவருடைய உருவ அம்சங்கள் என்னென்ன? சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாக இருக்க, குதிரை முகத்தில் உள்ள பிடரி மயிர்கள் சூரிய ஒளிக்கதிர்களால் அமைந்திருக்க, கங்கையும், அன்னை சரஸ்வதியும் அவரது புருவங்களாக அமர்ந்துள்ளார்கள். சந்திரனும் சூரியனும் அவரது கண்களாக அமர்ந்திருக்க அவருடைய பற்கள் பித்ரு தேவதைகள் ஆவர். பிரும்ம லோகம் இரண்டுமே மேலும் கீழுமாக அவர் வாயின் உதடுகளாக அமைந்தன என்பார்கள். அவருக்கு நான்கு கைகள். ஒரு கை கல்வி மற்றும் ஞானத்தைப் போதிக்கும் முத்திரை காட்டியபடி இருக்க, இன்னொரு கையோ சில புத்தகங்களை வைத்தபடி காணப்படும். அவை நான்கு வேதங்கள் ஆகும். ஆகவேதான் பகவான் ஹயக்ரீவர் கல்வி, ஞானம் மற்றும் விவேகத்தைக் கொடுப்பவர் என கருதப்படுகின்றார்.

கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள யோக ஹயக்ரீவர் ஆலயத்துக்கு வந்து  பகவான் யோக ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். ஸ்வாமிக்கு ஏலக்காய் மாலை போட்டு வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் என்பது நம்பிக்கை ஆகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் வழிபடும் முறையிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுடன் பகவான் ஹயக்ரீவர் ஆலயங்களுக்குச் சென்று  பகவான் யோக ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்து வரும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். அதன் காரணம் அவரே சரஸ்வதி தேவிக்கும் குருவானவர் என்ற உண்மைதான்.

 
சென்னையில் இருந்து செல்பவர்கள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து மகேந்திரா சிட்டியின் நேர் எதிரில் உள்ள சின்ன சாலையில் இறங்கி  ஆலயம் செல்லும் வழியைக் காட்டும்  பாதையிலேயே சென்றால் பகவான் தேவநாத ஸ்வாமி ஆலயத்தை அடையலாம். காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
ஆலய படங்கள்  


ஆலயம் செல்லும்  பாதையின் 
இருபுறக் காட்சி கீழே

Chettipunniyam Hayagriva (E)

One can not see Horse headed Lord Hayagriva without Goddess Lakshmi seated on his lap in any of the temples except in Chettipunniyam. He is seen in such a posture only in “Sri Devanatha Sri Yoga Hayagriva temple” in Kancheepuram district of Tamilnadu where the Lord is seen in Yogic posture without his consort Goddess Lakshmi. The Lord in this temple graces thousands of devotees who throng there seeking his grace for success in the field of education and other fine arts including that of music. This temple is believed to be thousand years old though some claim that the timeline could be 500-600 years only.

After the universe was born, at the end of Kalpa Kala, deluge struck the universe and Lord Vishnu after fighting ferocious battles with several Asura forces decided to take rest out of tiredness. He went to the ocean and slept on a banyan leaf floating on the cosmic ocean. Only some time prior to that, Lord Brahma rose from the navel of the Lord and began creation first creation being  four Vedas.

When Lord Brahma emerged from the navel of Lord Vishnu, two avaricious demons called Madhu and Kaitabha too emerged from two drops of water on the banyan leaf on which Lord Vishnu was asleep. Out of arrogance, the two asuras  wanted to take over the process of creation and therefore stole the Vedas from Lord Brahma and hid them deep inside the waters of the primeval ocean and sat guarding there in the form of horse faced demons.

The two demons not only stole the Vedas and kept them hidden in the nether world (deep inside the ocean) but also undertook arduous tapas seeking immortality which was unfortunately  granted by Lord Shiva, however with a rider that they would die only at the hands of divine which had horse head. When Lord Vishnu came to know of it, he was worried. He felt the need to destroy the demons to save the universe. Therefore in consultation with Lord Shiva he enacted a drama to retrieve not only the Vedas stolen by the demons, but also to prevent the demons from taking over the act of creation. According to the pre decided plan of action he got his head severed by the string of a bow which he had kept near his head before sleeping. On seeing the tragedy panic struck divine forces rushed to Lord Shiva and pleaded for revival of  Lord Vishnu’s head. He advised them that unless the severed head  is fixed on to the torso of Lord Vishnu’s lifeless body within ninety seconds, Lord Vishnu would not survive. Since Lord Vishnu’s slain face could not be quickly traced anywhere, Divine Viswakarma who was also present with the Celestials brought severed head of a horse and fixed it on the torso of Lord Vishnu within ninety seconds. None knew that the drama was deliberately enacted by Lord Shiva and Lord Vishnu to create a divine with the head of an horse so that the new avatar could kill  demons Madhu and Kaitabha. Thus Lord Vishnu who rose in new avatar with head of a horse came to be called Lord Hayagriva. 'Hayam' meant horse and 'Griva' means neck, thus Lord Vishnu took up the avatar of Hayagriva i.e one with the head of an horse. Once Lord Vishnu transformed himself into Lord Hayagriva, he immediately proceeded to the nether world, fought with the demons, killed them and brought back the Vedas stolen by them. Since Lord Hayagriva fought with the demons in height of fury, even after the demons were killed, his anger did not come down and therefore at the request of the celestial, Goddess Lakshmi went and sat on the lap of Lord Vishnu and to cool down his anger. Thereafter when the Lord calmed down he asked his consort to get down for few moments and sat with his eyes closed in relaxed posture with perfect physical and mental relaxation. Therefore the Lord in such a posture was adored as Yoga Nidra Hayagriva without his consort. 

Since Lord Vishnu had taken exclusive avatar as Lord Hayagriva even before he took ten avatars called Dasavathar, the incarnation of Lord Vishnu as Hayagriva was not included as one in the ten primary incarnations he took. Subsequently the posture of Goddess Lakshmi seated on the lap of Lord Yoga Hayagriva came to be accepted as Goddess Lakshmi Hayagriva for worship. Once Goddess Lakshmi sat on the lap of Lord Hayagriva and calmed him down, Goddess Saraswathi came there requesting Lord Yoga Hayagriva to initiate her the highest order of knowledge and enlightenment accepting him as her Guru.  Lord Hayagriva bestowed highest level of knowledge and wisdom to Goddess Saraswathi who was considered to be Goddess of education and knowledge. Thus it became norm to worship Lord Hayagriva too after offering prayers to Goddess Saraswathi since Lord Hayagriva was Guru of Goddess Saraswathi. However Lord Hayagriva clarified that if someone offer prayers only to him (Lord Hayagriva) and neglected Goddess Saraswathi who was his disciple, their prayers will not be fulfilled.

Now read the interesting story and history of Lord Yoga Hayagriva of this temple which is in Chettipunniyam where the Lord is reported to be granting highest order of wisdom.

Once upon a time when several parts in India were under Dutch, Portuguese and Mogul rulers, the Hindu temples were systematically targeted and ornaments looted from them. Not only valuables were looted, but the structures were also destroyed. Therefore in order to save the idols, ornaments and other valuables of the temples, the devotees smuggled them away and hid them in secret places inside dense jungles or in remote places inaccessible to others and worshipped in groups secretly. Only the trusted devotees were aware of those places and the routes leading to those secret temple sites. This prevented the alien rulers from looting the valuables or destroying those idols. The places where the idols and valuables were kept hidden could not be reached easily as  pathways to them were narrow and huge force cannot travel through them. Even then if any of the alien forces attempted to force through them they were waylaid and killed by devotees who were waiting in hiding to attack them. Therefore the alien forces could not loot the valuables, nor destroy those Hindu temples which were secretly operated deep inside the jungles.

Against this background, the idols of Lord Devanatha Peruman and Lord Hayagriva which were secretly worshipped by devotees in a place called Tiruvanthipuram of Cuddalore district of Tamilnadu were shifted secretly to Chettipunniyam in 1848 by the then Divan Shri Rangacahari in order to save them from getting destroyed by the Mogul rulers. Chettipunniyam which is in the Chengleput district of Tamilnadu was in that period surrounded by dense forest on a hilltop. Since the inhabitants of that area  were predominately consisted of Chettiyar community, the place derived the name Chettipunniyam. The hilltop could not be easily climbed by forces and if someone desired to reach the secret site where the idols were worshipped, they have to walk through the dangerous narrow lanes and arduous path, which were under the watchful eyes of trusted devotees guarding the site. The entire path was also covered by thick bushes. The place thus remained highly protected by nature and the devotees.

Initially this temple in Chettipunniyam was constructed for Lord Varadaraja Peruman. However in the year 1848 the idols of Lord Devaraja Peruman and Lord Yoga nidra (in meditative posture) Hayagriva were secretly brought here and enshrined. In the year 1868 to prevent destruction of sacred idols like God Rama, God Lakhman, Goddess Sita and God Hanuman were also secretly smuggled out of a temple in Thanjavur in Tamilnadu and brought here for safety.

Though initially the temple was built in honour of Lord Devanatha Peruman, but God Varadaraja Peruman is mainly worshipped as presiding deity. For several hundred years the devotees were afraid that revelation of the temple site would endanger its safety and therefore the existence of the temple was kept closely guarded secret and the site details were spread to trusted devotees only by word of mouth. Perhaps this was the reason why the greatness of the temple remained unknown to the outer world for many years.

However as days passed, people who thronged Goddess Saraswathi temple in Koothanoor began to get feedback on the greatness of Lord Yoga nidra Hayagriva in Chettipunniyam and visited there to offer prayers as Lord Yoga nidra Hayagriva was Guru of Goddess Saraswathi. Slowly temples for Lord Hayagriva came up in several places as he was mainly considered to be Guru of wisdom. Even in those days only affluent could hire a horse or animal driver cart to visit Chettipunniyam temple as the roads were not easy to travel by foot.

The unique feature of the temple has been that Lord Vishnu in the avatar of Yoga nidra Hayagriva is seen without consort Goddess Lakshmi devi.  Lord Hayagriva with horse head, displaying Abaya mudran, is seen seated alone in Lord Devanatha sanctum. In this temple a separate sanctum exists for Goddess Lakshmi in the name of Goddess Homabjavalli.  In another separate sanctum  Lords Rama-Lakhman- Goddess Sita and Lord Hanuman are seen and the noon arthi and Pooja for the temple is performed only in this sanctum.  In other sanctums the puja and arthi are performed only to the urchava murthies and not to the presiding deities there. The reason for it is not known.

There is a divine tree inside the temple. The name of the tree is Angolam or Azhichchal. Devotees who desire to own a house pull out  some thread from their cloth and tie them on the tree praying Lord Hayagriva to grace them for success of their wish.

What are the aspects of Lord Yoga Hayagriva otherwise called Parimugan in Tamil ?  Pari in Tamil refers to horse. The nose holes on the face of Lord Hayagriva represent the Sandhya kala Devathas, the manes on face reflects the Sun and Moon rays, the eyebrows represent Goddess Ganges and Goddess Saraswathi while the two eyes represent Lord Sun and Lord Moon. The teeth in his mouth represents the Pithru Devathas and finally the lips represents the Brahma Loga. He has four hands out of which one bestow knowledge and the second is found holding Vedas indicating that he was the teacher of universe and therefore considered God of knowledge and intelligence.

The devotees, mainly students, come here and offer garland made of cardamom and pray to Lord Yoga Hayagriva to attain highest level of wisdom. In Koothanoor Goddess Saraswathi temple the students place their personal pens and pencils praying for success in examinations. Similar act is performed in the temples seeking the blessings
of Lord Hayagriva  since he was considered to be Guru of Goddess Saraswathi.

This temple is in the opposite side of a place called Mahendra City in between Chennai and Tambaram highway. Once you reach the point of Mahendra city entrance tower, you can see a narrow road leading to the hilltop exactly opposite to it. At the entrance of that narrow road, one can also see a display hoard that shows the way to reach the temple. This temple is open for public from 7.30 AM till 1.00 PM during morning hours and between 4.30 PM till 7.30 PM in the evening.

Photos from Temple Photos en route to temple (over the hilltop)- Below
 

Sunday, December 11, 2016

Pradosha (T)

பிரதோஷம் - சில முக்கியமான செய்திகள் 
பிரதோஷம் என்பது என்ன ? பிரதோஷம் என்பது பாவங்களை தொலைத்துக் கொண்டு மோட்ஷத்தை அடைய செய்யப்படும் வழிபாடு ஆகும்.  பிரதோஷம் அதாவது பிரதி + தோஷம் என இரு வார்த்தைகளைக் கொண்டது. பிரதி என்பது ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்பது பாபத்தையும் குறிக்கும். ஆகவே பிரதோஷம் என்பது ஒவ்வொரு பாபத்தையும் தொலைத்துக் கொள்ளும் வழிபாடு ஆகும். 

பிரதோஷம் என்பதை எப்போது செய்யலாம்? ஒவ்வொரு மாதமும் சுக்ல  மற்றும் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் திரியோதசியன்று சாயங்காலத்தில், சிவபெருமான் ஆனந்தநடனமாடும் நேரத்தில் அவரை வணங்கினால் நம் வேண்டுதல்களுக்கு பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த நேரத்தில்தான் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே உள்ள பகுதியில் சிவபெருமான் நடனம் ஆடுவதாக ஐதீகம் உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட காலத்தில் 13 ஆம் திதியன்று வருவது பிரதோஷ தினம். 

பிரதோஷ தினத்தன்று சாயங்கால வேளையில் ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்?  அன்று சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கித் துதித்தால் வாழ்வின் அனைத்து வளமும் பெருகுமாம். அதுமட்டும் அல்ல அன்றுதான் சாயங்காலத்தில் அனைத்து தேவர்களும், தெய்வங்களும் பூமிக்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதிக்கின்றார்களாம். அப்போது நாமும் ஆலயத்துக்கு சென்று சிவ வழிபாடு செய்யும்போது  அங்கு  கண்களுக்கு புலப்படாமல் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ள  தெய்வங்களின் ஆசிகளும் அங்கு செல்லும் ஒருவருக்கும் கிடைக்கின்றது.  தொடர்ந்து 120 பிரதோஷ தினங்கள் எவர் ஒருவர் சிவ வழிபாடு செய்வாரோ அவருக்கு மீண்டும் பிறவாமை எனும் பலன் கிட்டுமாம்.


பிரதோஷம் குறித்து ஒரு புராணக் கதை காலம் காலமாக கூறப்பட்டு வருகின்றது. அந்த கதையின்படி ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகத்தின் உடல் முழுவதும்  காயம் ஏற்பட, அந்த காயத்தின் வலியினால் அது கக்கிய கொடிய விஷத்தினால்  உலகமே அழிந்து விடும் அளவு வெப்பம் ஏற்பட தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் ஓடிச் சென்று அழிவில் இருந்து உலகைக் காக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். 

ஆகவே அந்த கொடிய விஷத்தின் தன்மையை  தணிக்க அந்த விஷம் பூமியில் விழுவதற்கு முன்பாகவே அதை தமது கையில் ஏந்திக் கொண்ட சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு அனைவரையும் காப்பாற்றினார். ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவரே உலகை படைத்தவர் என்றாலும் கூட  அந்த குறிப்பிட்ட விஷம் அவரது உடலுக்குள் சென்று இருந்தால் அவர் மரணம் அடைந்து இருப்பார். அது இயற்கையின் நியதியாகும். ஆனால் அந்த விஷத்தை சிவபெருமான் விழுங்கிய பின் அதை பற்றிக் கவலைப்படாத தேவர்கள் மீண்டும் தமது காரியத்திலேயே கண்ணாக இருந்து விட்டார்கள் (அமிர்தம் கடைதல்). அதைக் கண்ட பார்வதி தேவியானவள் தனது கணவருக்கு அந்த விஷத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக்   கூடாது என பதறிப்  போய் அவர் அருகில் சென்று அவர் தொண்டையை தடவிக் கொடுக்க அந்த விஷம் அப்படியே உறைந்து கட்டியாகி அங்கேயே தங்கி நிற்க, அதன் நச்சுத் தன்மையையும் இழந்தது. ஆனால் அந்த விஷத்தின் வெப்பத்தினால் சிவபெருமானின் தொண்டை  காய்ந்து போய் நீல நிறமாகி விட்டது. ஆகவேதான்  அவருக்கு நீலகண்டன் அதாவது நீல நிற தொண்டையைக் கொண்டவர் என்ற பெயர் ஏற்பட்டது.

அவை அனைத்துமே திரியோதசி அன்று சாயங்கால வேளையில் நடைபெற்றது. சற்றே நேரத்தில் தம் சுய நினைவுக்கு வந்த தேவர்களும் அசுரர்களும் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு  பதறிப்போய் தமக்காக விஷத்தை உண்ட சிவபெருமானின் நிலை என்ன ஆயிற்று என்பதை கவனிக்காமல் இருந்து விட்டோமே என வருந்தி அவரிடம் ஓடிச் சென்று தாம் அறியாமையினால் அவருக்கு நன்றி கூறாமல் இருந்து விட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்க சிவபெருமான் அவர்களை மன்னித்தார். அவர்களுக்கு அதனால் ஏற்பட்டு இருந்த அனைத்து பாபங்களையும்  விலக்கினார். அந்த ஆனந்தத்தில் அவர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே அற்புதமான நடனமான களி நடனம்  எனும் நடனத்தை ஆடினார். பார்வதி தேவியும் அவர் அருகில் நின்றவாறு அவர் ஆடிய நடனத்தை ஆனந்தமாக ரசித்துக் கொண்டு இருந்தார். அதனால்தான் சுக்ல  மற்றும் கிருஷ்ண பட்சத்தில் திரியோதசையின் சந்தியா காலம் பிரதோஷ காலம் என பெயர் பெற்றது. அன்றைக்கு அந்த நேரத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதியை நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே இருந்து பார்த்து வணங்கி பூஜை செய்தால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆயிற்று. 


பிரதோஷ காலத்தின்போது விரதம் இருந்தோ அல்லது சிவபெருமானின் புராணத்தை படித்தோ அல்லது பிரதோஷ  கால கதையை படித்தோ அல்லது 108 முறை மிருத்துஞ்ஜெய  மந்திரத்தை உச்சரித்தோ வழிபாடு செய்தால் பிள்ளை இல்லாதவர்களுக்கு  புத்திர பாக்கியம், செல்வம்  மற்றும் வாழ்வின் வளம் பெருகும் என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். முக்கியமாக மழலை செல்வம் அற்ற பெண்கள் இவற்றை எதையாவது ஒன்றை கடை பிடித்தால் நிச்சயம் பலன் கிட்டும் என்கின்றார்கள்.
 

பிரதோஷ பூஜையின் பயன் கிடைக்க சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தில் பயன்படுத்த வேண்டிய முக்கியமான சில பொருட்கள்:
 • நீண்ட ஆயுள்பெற பால் அபிஷேகம் செய்யலாம்
 • மோட்ஷம் கிடைக்க நெய் அபிஷேகம் செய்யலாம் 
 • பாடகர்கள் அற்புதமான குரல் வளம் பெற தேன் அபிஷேகம் செய்யலாம் 
 • கடன் தொல்லை விலக அரிசி மாவினால் அபிஷேகம் செய்யலாம் 
 • தீராத நோய் தீர கரும்புச் சாறைக்  கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
 •  நிறைவான செல்வம் பெற பஞ்சாமிருத அபிஷேகம் செய்யலாம் 
 • மரண பயம் விலக எலுமிச்சை சாறைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம் 
 • எதிரிகள் தொல்லை குறைய சக்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம் 
 • மன  நிறைவு கிடைக்க இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம் 
 • மேன்மையான வாழ்க்கை பெற சமைத்த சாதத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம் 
 • லட்சுமி தேவியின் கடாட்ஷம் பெற சந்தன அபிஷேகம் செய்யலாம் 
அனைத்து நாட்களிலும் பலவிதமான பழங்களை நெய்வித்தியமாகப் படைத்தும் மற்றும் மலர்களைக கொண்டு பூசிப்பதும் சந்தனக் காப்புப் அல்லது சந்தன அபிஷேகம் போன்றவை செய்வது வழக்கமானதுதான் என்றாலும் சில குறிப்பிட்ட திரவியங்களினால் அபிஷேகம் செய்து ஆராதிப்பதும் குறிப்பிட்ட தினங்களில் வரும் பிரதோஷ தினங்களில் ஆலயத்துக்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்வதும் அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.

திங்கள் கிழமை :- இந்த தினத்தில் வரும் பிரதோஷத்தை சோம பிரதோஷம் என்பார்கள்.  
திங்கள் கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதின் மூலம் மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல ஆரோக்கியம் கிட்டி வாழ்வில் வளம் கிடைக்கும்.

செவ்வாய் கிழமை :
இந்த தினத்தில் வரும் பிரதோஷத்தை பௌவ்ம பிரதோஷம் என்பார்கள்.  செவ்வாய் கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதின் மூலம் வருமானம் அதிகரிக்கும்.  இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து  பூஜிப்பவர்கள் பெரும் நன்மை பெறுவார்கள் என்பார்கள்.

புதன் கிழமை :-
இந்த தினத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும், ஆத்ம ஞானம் அதிகரிக்கும். இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும்.

வியாழன் கிழமை :-
குரு பிரதோஷம் எனப்படும் இந்த தினத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் பகைவர்கள் அழிவார்கள், எதிரிகள் வலு இழப்பார்கள்.

வெள்ளிக் கிழமை :- பகை விலகும். குடும்ப உறவு பலம் பெரும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இந்த தினத்தில் சக்கரையினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜிப்பதின் மூலம் அனைத்து எதிர்ப்புக்களும் குறையும்.

சனிக்கிழமை:- சனிப் பிரதோஷம் என்பது தனிப் பிரதோஷம் ஆகும். அன்று சிவபெருமானை வணங்குவதினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். சனிக்கிழமைதான் சிவபெருமான் வாசுகி கக்கிய விஷத்தை விழுங்கினார் நவக்கிரகத்தில் சனி பகவான்  மிகவும் முக்கியமானவர். அவர் யாரை தண்டிக்க விரும்புவாரோ அவர்களுக்கு அவர் தரும்  தொல்லைகளும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும்.  ஆகவே
ஜாதகத்தில் சனி தசை உள்ளவர்கள் அவரது கருணை கிடைக்க அவரை வேண்டிக் கொண்டு சனிக்கிழமைகளில் விரதம் இருப்பார்கள். அது மட்டும் அல்ல, சனி பகவானின் கடுமை விலக சனிப்பிரதோஷத்தின் அன்று சிவபெருமானை வணங்கி வருவதின் மூலம் சனி பகவானின் தொல்லைகள் குறையும் என்பது நம்பிக்கை.

ஞாயிற்றுக் கிழமை :-
வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். 


பல ஆலயங்களிலும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை  வழிபட கருவறையை முழுமையாக சுற்றி வந்து பிரதர்ஷணம் செய்வது போல, கருவறை இல்லாமல்  வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை  முழுமையாக சுற்றி வந்து பிரதர்ஷணம் செய்யக் கூடாது என்ற ஐதீகம் உண்டு. அதற்கு பல காரணங்களையும் பண்டிதர்கள் கூறுவார்கள்.

ஆவுடையாரின் கோமுகம் மூலம் சிவலிங்கத்தை அபிஷேகித்த  நீர் வெளியேறி  பூமியில் ஓடி அதற்குள் சென்று விடுவதினால்  கோமுகத்துக்கு எதிரில் உள்ள பகுதியின் மீது கால்களை வைத்து நடந்து செல்வதின் மூலம்  சிவபெருமானின் அபிஷேக நீரை  அவமதிக்கும் செயல் ஏற்படும்.   இதனால்தான் சிவபெருமானின் நீண்ட கோமுகம் போன்ற பகுதி  தாண்டிச் செல்ல இயலாத வகையில்  அதன் எதிரில் தடுப்பு போடப்பட்டு குறுகலாக அமைக்கப்பட்டு இருக்கும்.  எவராவது முழு சுற்று பிரதர்ஷணம் செய்ய விரும்பினால் அவர்கள் கோமுகத்தைத் தாண்டிச் செல்ல வேண்டி இருக்கும்.  எவருக்கும்  கோமுகத்தை தாண்டிச் செல்ல தைரியம் இருக்காது. ஆகவே அவர்கள் அரை வட்ட வடிவில்தான் பிரதர்ஷணம் செய்ய இயலும். 

 

மேலும் கங்கை நீரை பூமிக்கு  அனுப்ப வேண்டும் என்ற பகீரதனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானின் தலைப் பகுதியில் இருந்து பூமிக்கு கங்கை நதி பாய்ந்தோடிய தினம்  பிரதோஷ தினம் ஆகும்  என்ற நம்பிக்கை உள்ளது. சிவபெருமானின் தலையில் இருந்து வழிந்து ஓடி வரும் கங்கை நதியின் நீர்தான் கோமுகத்தில் இருந்து வெளிவந்து பூமி மீது சற்று ஓடி பூமிக்குள் புகுந்து மறைகின்றது.  கோமுகத்தில் இருந்து வெளியேறும் நீர் பூமியில் வழிந்து ஓடும்போது அதன் மீது நடந்து செல்வது மஹா பாவச்  செயல் ஆகும்.அது மட்டும் அல்ல, அன்று அனைத்து தேவ கணங்களும், தெய்வங்களும் சிவபெருமானை வணங்கித் துதித்தபடி  நிற்பதும் அதே கோமுகப் பகுதியில்தான். கோமுகத்தில் இருந்து வழிந்து வரும் அபிஷேக நீரை பிரசாதமாக பெற்றுக் கொள்ளும்  அனைத்து தேவ கணங்களும், தெய்வங்களும் கோமுகத்தின் எதிரில் சற்று தொலைவில் நின்று கொண்டு நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே நடைபெறும் சிவபெருமானின் நடனத்தை ரசிக்கிறார்கள்.  ஆகவே அந்த நேரத்தில் கோமுகத்தின் எதிரில் நடந்து செல்வத்தின் மூலம் பக்தர்கள் அவர்களது கவனத்தை திசை திரும்புவார்கள். ஆகவே அது தவறு என்பதும் இன்னொரு காரணமாக கூறப்படுகின்றது.

பிரதோஷ தினத்தன்று எந்த முறையில் சிவலிங்க வழிபாடு செய்ய வேண்டும்?  கீழே தரப்பட்டு உள்ள படத்தைப் பாருங்கள். பிரதோஷ பிரதர்
ம் செய்வதற்கு முன் சிவபெருமானின் சன்னதியில் நந்தியின் கொம்புகள் வழியே அவரை வணங்க வேண்டும். அதன் பின் முதலில் சன்னதியின் இடப்புறம் உள்ள கோமுகத்தின் அருகில் சென்று அதை தாண்டிச் செல்லாமல் அங்கிருந்தே சண்டிகேஸ்வரரை தரிசித்தப் பின் (கையினால் சப்தம் எழுப்பிய பின்), அப்படியே திரும்பி முதல் சுற்றை துவக்க வேண்டும். சுற்றிக் கொண்டு கோமுகத்தின் அந்த பக்கத்தின் அருகில் வந்த பின் அதை தாண்டி பிரதர்ஷம் செய்யாமல், மீண்டும் அப்படியே திரும்பி சன்னதிக்கு  முன்னால்  வந்து நந்தி தேவரின் கொம்பின் வழியே சிவ பெருமானை தரிசனம் செய்த பின், மீண்டும் சன்னதியின் இடப்புறம் உள்ள கோமுகத்தின் அருகில் சென்று அதை தாண்டிச் செல்லாமல் அங்கிருந்தே சண்டிகேஸ்வரரை தரிசித்தப் பின் (கையினால் சப்தம் எழுப்பிய பின்), அப்படியே திரும்பி இரண்டாம் முறை சன்னதியை சுற்றி வரவேண்டும். கோமுகத்தின் அந்த பக்கத்தின் அருகில் வந்த பின் அதை தாண்டி பிரதர்ஷம் செய்யாமல், மீண்டும் அப்படியே திரும்பி சன்னதிக்கு  முன்னால்  வந்து நந்தி தேவரின் கொம்பின் வழியே சிவபெருமானை இரண்டாம் முறை தரிசனம் செய்த பின், மீண்டும் சன்னதியின் இடப்புறம் உள்ள  கோமுகத்தின் அருகில் சென்று அதை தாண்டிச் செல்லாமல் அங்கிருந்தே சண்டிகேஸ்வரரை தரிசித்தப் பின் (கையினால் சப்தம் எழுப்பிய பின்), அப்படியே திரும்பி வந்து மூன்றாம்  முறை சன்னதியை சுற்றி வரவேண்டும். அதன் பின் கோமுகம் வரை சென்று திரும்பிய பின் சிவபெருமானை மூன்றாம் முறை வணங்கிய பின் திரும்பி வந்து விட வேண்டும். இப்படியாக பிரதர்ஷம் செய்வதை சோம சூத்திர பிரதர்ஷம் என்பார்கள்.  இப்படி சுற்றி வரும் பிரதர்ஷணத்தை  நன்கு கவனித்தால் அது அரைவட்ட வடிவிலான, அதாவது சந்திரனின் பிறை வடிவ தோற்றத்தில் இருப்பதைக் காணலாம். அதனால்தான் சந்திரனைக் குறிக்கும் இதை சோம  என்கின்றார்கள். 

சிவலிங்கத்தின் கோமுகத்தை தாதாண்டிச் செல்லக் கூடாது என்பதினால்தான் பண்டைய காலம் தொட்டு ஆலயங்களில் சிவலிங்கத்தை மூன்று பக்கமும் சுவர் உள்ள கருவறையில் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.  இப்படியாக கோமுகத்தை தொட்டபடி உள்ள பூமியின் பகுதியின் மீது நடக்க முடியாமல் சுவர் எழுப்பட்டு உள்ளதினால் அறைக்குள் உள்ள கோமுகத்தில் இருந்து வெளியேறும் அபிஷேக நீரும் வெளியேறும் வழி மூலம் பூமிக்குள்  சென்று விடும் வகையில் அமைந்து உள்ளது. அந்த நீரை  பக்தர்கள் மிதித்துக் கொண்டு செல்ல இயலாது என்பதினால் கருவறைக்குள் உள்ள சிவலிங்கத்தை முழு பிரதர்ஷணம் செய்ய முடிகின்றது. ஆனால் அதே சமயம் எங்கெல்லாம் கருவறையில் இல்லாமல் திறந்த வெளியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்குமோ அங்கு சிவலிங்கத்தை முழு பிரதர்ஷணம்  செய்யக் கூடாது. சோம சூத்திர முறையிலான பிரதர்ஷணமே  செய்ய வேண்டும்.

சோம சூத்ர
பிரதர்ஷணம் செய்யும் முறை

  சிவ லிங்கத்தை பிரதர்ஷணம்
செய்யும் பொதுவான முறை